இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 18

Screenshot_2021-06-21-17-30-01-1-298188d8

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 18

Epi18

வார இறுதி, அத்தோடு இரவு நேரம்‌ சென்று

தூங்கியிருந்ததாலும்‌ தாரா எழுந்திடவே ஒன்பது மணி எனக் காட்டியது.புன்யா நேரத்தோடு எழும்பி பக்கத்தில்‌ தாராவை காணாமல்‌ எழுந்து வந்து பார்க்க சோபாவில்‌ சுருண்டு சுகமாய்‌ படுத்திருந்தாள்‌. அவளை எழுப்பாது அறையை சுத்தம்‌ செய்தவள்‌ வெளியே வர தாரா எழுநது அமர்ந்திருந்தாள்‌. அவள்‌ முகத்தில்‌ ஓர்‌ ஒளிர்‌.  இதழ்களில்‌ உறைந்த மெலிதான சிரிப்பு அத்தோடு அவளை பார்க்கவே ஓவியமென இருந்தாள்‌. அவளை பார்த்த புன்யா “என்ன பேபி இங்க வந்து தூங்கிட்ட அதுவும்‌ என்ன முகமெல்லாம்‌ பிரகாசமா இருக்கு.காலைலயே போனை உத்து உத்து பார்க்குற ஹ்ம்ம்‌ என்ன நடக்குது. ” என்றாள்‌.

 முகத்தை கோபம்‌ போல வைய்துகொண்டவள்‌,

 “நீதான்‌ நேற்று ஆபிஸ்‌ விட்டு வந்ததுமே என்கூட பேசவும்‌ இல்லை அப்படியே தூங்கிட்ட. எனக்கு துக்கமும்‌ இல்ல. அதான்‌ இங்க வந்து  உட்கார்ந்துட்டு அப்படியே இங்கயே தூங்கிட்டேன்‌.”

 

“ஓஹ்‌ சாரிடா உண்மையா நேத்து எனக்கு டைர்ட்‌ அதான்‌ தூங்கிட்டேன்‌. அது சரி உங்க முக பொலிவுக்கு என்ன காரணமோ அதை சொல்லு?” என தாராவை கேட்க,

“அப்டில்லாம்‌ ஒன்னும் இல்லையே. எப்பவும்‌ போலத்தான்‌… “

“இல்லையே என்னவோ இருக்கே பேபி. சொல்லு சொல்லு.” எனவும்‌,

“அது வந்து…’ என இழுக்க,

“அப்போ ஏதோ இருக்கா?” என அவள்‌ அருகே அமர்ந்தவள்‌ ‘சொல்லு’ என்பது போல பார்க்க,

“நைட்‌ ஸ்ரீ என்கூட பேசினாங்க ” என்றாள்‌.

“யூ மீன்ன்… ஹீரோ ? “எனவும்‌, ‘ஆம்‌’ என தலை ஆட்டினாள்‌.

“அச்சோ சூப்பர்‌,சூப்பர்‌. அப்புறம்‌ என்ன?”

“அப்புறம்‌ ஒன்னுமில்லை. பேசிட்டு அப்படியே இங்கயே தூங்கிட்டேன்‌.” என்றாள்‌.

“அதெனக்கு புரியுது.என்ன பேசினங்குறேன்‌?…”

“அது வந்து சும்மா… அப்படியே பேசிட்டு இருந்தோம்‌ என்றாள்‌.”

“ஹ்ம்ம்‌ ஸ்வீட்நொதிங்ஸ்‌ அப்புறம்‌ சம்திங்‌.. சம்திங்‌.. ” என புன்யா கண்‌ சிமிட்ட, தாரா முகம்‌ சிவக்க அருகே இருந்த தலையணையை அவள்‌ மீது வீசி விட்டு அறையில்‌ புகுந்து விட்டாள்‌….

“ஓகே ஓகே ஆகட்டும்‌ ஆகட்டும்‌.’

‘இன்னக்கி என்னை வெளில கூட்டி போய்‌ ட்ரீட்‌ வாங்கி குடுக்குற டாட்‌.” என இவள்‌ ஹாலில்‌ இருந்து கத்த,

” ஓகே… ” என்றாள்‌..

“சீக்கிரம்‌ வா வீட்டை கிளீன்‌ பண்ணிட்டு லஞ்ச்கு வெளில போலாம்‌.” என்றாள்‌ புன்யா.

பிரபா மற்றும்‌ தருண்‌ நேரம்‌ சென்றே எழுந்திருந்தனர்‌. தருண்‌ கீழிருந்து உள்மாடிப்படி வழியே தாராவை அழைக்க,

“அண்ணா தாரா பாத்ரூம்ல இருக்கா…”

“சரிம்மா நான்‌ ப்றேக்பச்ட்‌ வாங்கிட்டு வரேன்‌, நீங்க ஒன்னும்‌ பண்ண வேணாம்‌…”

 

“ஓகே ண்ணா…”. என்றவள்‌ வீடை கிளீன்‌ பண்ண கையில் துடைத்துக்கொண்டு இருந்த பூச்சாடியொன்று தவறி கையிலிருந்து விழுந்து, படி வழியே உருண்டோட

” அச்சோ! என புன்யாவும்‌ அதன்‌ பின்னே படி வழி இறங்க அதனை குனிந்து எடுத்து நிமிர அவள்‌ முன்னே ஷார்ட்ஸ்‌ ஸ்லீவ்லெஸ்‌ டீ ஷர்ட்‌ சகிதம்‌ பிரபா நின்றிருந்தான்‌.

 

“சாரி கை தவறி கீழ வந்துருச்சு.”

 

“ஓஹ்‌ அதுக்கு பரவாயில்லை. ஆனா கீழ வந்தா அந்த பொருள்‌ அதற்கு பிறகு கீழுள்ளவங்களுக்கு தான்‌ சொந்தம்‌.” என்றான்‌.

 

“ஒஹ்‌! அப்டிங்களா பரவாயில்லை. நீங்களே

வச்சுக்கோங்க என்றவள்‌ அதை அருகே இருந்த மேசை மீது வைத்தவள்‌ திரும்பி மாடிப்படியேற அவளை சீண்ட நினைத்தவன்‌,

 

“ஹலோ உங்க தலை முடியை கொஞ்சம்‌ வாரிக்கோங்க. குருவிங்க அவங்க கூடுன்னு வந்து உட்கார்ந்துக்க போறாங்க.” என்றான்‌..

 

அவளது முடி சுருண்ட அடர்த்தியான கூந்தல்‌. வீடை கிளீன்‌ பண்ணவென உயர்த்தி கொண்டை போட்டிருக்க அதனை பார்த்தே இந்த பேச்சு.

 

“குருவி வந்தா நான்‌ பார்த்துகிறேன்‌.நீங்க உங்க வேலையை பாருங்க.” என்றவள்‌ படியேற,

“ஹலோ மேல்‌ இருக்க எதுவும்‌ கீழ வந்தா அது கீழுள்ளவங்களுக்கு சொந்தம்னு சொன்னனே.” தருண்‌ மீண்டும்‌ கூற,

“அது தானேங்க தந்துட்டேனே. நீங்களே வச்சுக்கோங்க. நான்‌ திரும்ப கேட்க மாட்டேன்‌.” என புன்யா சொல்லவும்‌.

“அச்சோ அதை சொலலல்ல.”

“அப்புறம்‌…?”என்றாள்‌,

“நீங்களும்‌ மேலிருந்து தானே கீழ வந்திங்க. அப்போ நீங்களும்‌ கீழ இருக்கவங்களுக்கு தானே சொந்தம்‌.” என்றான்‌. இவன்‌ என்ன சொல்கிறான்‌ என முதலில்‌ புரிந்து கொள்ளாதவள்‌ புரிந்ததும்‌ அவனை முறைத்துப்பார்க்க,

“ஆச்சோ அம்மா அனல்‌ இங்க அடிக்குது. ” எனவும்,

“என்னடா?’ என காலை உணவை வாங்கி வந்த தருண்‌ கேட்க,

“அதுவா காலங்காத்தால பெருச்சாலிங்க தொல்லை தாங்க முடியலடா என்று மாடிப்படியை பார்த்தவாறே கூற அதனைக்‌ கண்டு கொண்ட தருண்‌,

” டேய்‌ அவகிட்ட நீ அடிவாங்க போற. சேதாரத்துக்கு நாம பொறுப்பில்லை.’ என்றவன் 

அவளை பார்த்து,

“புன்யா பிரேக்‌ பாஸ்ட்‌ கொண்டு வந்திருக்கேன்,ஸ்ரீய பேசுடா சாப்பிடுவோம்‌.”

“சரிண்ணா.’ என மேலே சென்றவள்‌ தாராவிடம்‌ முகத்தை கோபமாக வைத்துக்கொண்டு,

” தருண்‌ அண்ணா சாப்பிட வரவாம்‌ என்றாள்‌. “

“நீயும்‌ வா போய்‌ சாப்பிட்டு வந்து கிளீன்‌ பண்ணலாம்‌.” என்றாள்‌

“அச்சோ என்னால முடியாது. அந்த பக்கி கூட சாப்பிட.நீ சாப்பிட்டு எனக்கு கொண்டு வா… “

“என்னாச்சு திடிர்னு? “

” ஒன்னும்‌ ஆகல.”

“சரி விடு,’என, தாரா மேல்‌ படிகளில்‌ இருந்தவாரே ‘அண்ணா எங்களுக்கு இங்கயே குடு.நாம சாப்பிட்டுக்குறோம்‌.” என்றாள்.

 

கொடுத்தவன்‌ கீழே வந்து, “பாரு அந்த பொண்ணு சாப்புட வரமாட்டேங்குது. இப்படித்தான்‌ தினமும்‌ உன்‌ சேட்டையை காட்டுறியா ? “எனவும்‌,

“இன்னிக்குதான்‌ அவளை பார்த்ததே. சரி விடுடா கீழ தானே வரமாட்டேன்னா சாப்பாடு வேணாம்னு சொல்லல்லயே. “

 

இவ்வாறு இவர்கள்‌ காலை நேரம்‌ சென்றுகொண்டு இருந்தது.அதன்‌ பின்னர்‌ புன்யா கீழே வருவதையே விட்டு விட்டாள்‌. அவ்விடம்‌ சிலவேளை அவன்‌ கண்களுக்கு தெறிப்படுகின்றானா என பார்ப்பாள்‌. அதுதான் ஏன்‌ என்று புரியவில்லை.

 

தாராவும்‌ விஜயும்‌ அவர்கள்‌ காதலை தொலை பேசி வழியே வளர்க்க அது செடியாகி, செடி மரமாகி, மரமோ பூத்துகுலுங்கிய வண்ணம்‌ இருந்தது. விஜய்‌ ஹரியுடன்‌ கதைத்திருந்தான்‌. “அண்ணா நம்ம நிவிக்கு தருணை கேட்கலாமா. எனக்கு அவங்க நல்ல பொருத்தமா இருக்கும்னு தோணுது. ஜஸ்ட்‌ என்‌ ஒப்பீனியன்‌ தான்‌ உங்களுக்கு அப்புறம் வீட்ல பிடிச்சிருந்தா எனக்கு அவங்க வீட்ல பேசலாம்‌.” எனவும்‌

“எனக்குமே அவன்‌ நல்ல சாய்ஸ்‌ தாண்டா. இப்போ இருக்க நிலைமைல நல்லவனை போய்‌ எங்கே தேட.நா அப்பா, மாமாகிட்டப்‌ பேசிட்டு சொல்றேண்டா. உனக்கு இதுல ஒரு கஷ்டமும்‌

இல்லையே.” எனவும்‌,

“அண்ணா ரொம்ப ஹாப்பியா தான்‌ நான்‌ சொல்றேன்‌. நீ பேசிட்டு சொல்லு.”

எனவும்‌ ஓகே என்றான்‌…

தருணும்‌ அவனது தந்தையோடு பேசியிருந்தான்‌

“எனக்கு விஜயுடைய அத்தை பொண்ணை பிடிச்சிருக்கு ப்பா.’  உங்களுக்கு ஓகேன்னா அம்மாகிட்ட பேசிட்டு சொல்லுங்கப்பா பிடிச்சிருந்தா பேசலாம்‌.”

 

மாதவியோ, “டேய்‌ மத்த வீட்ல எல்லாம்‌ பசங்க

அவங்க அம்மாகிட்ட பேசித்தான்‌ அப்பாவை கரெக்ட்‌ பண்ணுவாங்க. நீ என்ன டான்னா அப்பாகிட்டயே சொல்ற,நா வேணாம்னா என்ன பண்ணுவ? ‘அவர்‌ தருணை பார்த்து கேட்க,’ம்மா’ என்று அவரருகே வந்தமர்த்தவன்‌,

‘நிவிதாவை உனக்கு பிடிக்கலையாம்மா? அப்டின்னா உனக்கு பிடிச்சதுக்கு அப்புறம்‌ பண்ணிக்குறேன்‌.”என்றான்‌.

 

“படவா.’ என அவன்‌ தலை கோதியவாறு,’உங்க

சந்தோஷம்‌ தான்பா எனக்கும்‌ உங்கப்பாகும்‌ வேணும்‌. அதை மட்டுமே நீங்க ரெண்டு பேரும்‌ நமக்கு தந்திங்கன்னா போதும்‌. நாம பொண்ணு பார்த்தாலுமே பிரச்சினைகள்‌, மனக்கஷ்டங்கள்‌ வரலாம்‌. அது அமைதியான, நிறைவான, சந்தோஷமான வாழ்வா அமைவது நீங்க வாழ்கின்ற வாழ்க்கைல தான்‌ இருக்கு. நல்ல படியா பேசி முடிக்கலாம்‌. சந்தோஷமா இரு.” என்றார்‌.

 

“தேங்ஸ்‌ மா.” என அவரை அணைத்துக்கொண்டான்‌. “

“டேய்‌ நானும்‌ தான்‌ ஓகே சொன்னேன்‌. ” என குமாரும்‌ கூற,

“உங்களுக்கும்‌ தான்‌ பா தேங்க்ஸ்‌.”என இருவரையும்‌ ஒன்றாக அணைத்துக் கொண்டான்‌.

 

வாழ்வினில்‌ இறந்த கால பக்கங்கள்‌ புரட்டும்‌ போதும்‌ இனிமையான தருணங்களில்‌ இதுவும் ஒன்று.

 

ஹரியும்‌ விஜயின்‌ வீட்டில்‌ பேச அவர்களுக்கும்‌ மனதில்‌ சந்தோஷம்‌ தான்‌. வீட்டில்‌ அனைவரது விருப்பத்தை கேட்டுக்‌ கொண்டவர்கள்‌ நிவியிடம்‌ கேட்க,’உங்கள்‌ விருப்பம்‌. ‘எனக்கூறுமாறு தருண்‌ மூலம்‌ விஜய்‌ கூறியிருக்க, அதையே அவளும்‌ கூறினாள்‌.

“அவங்க எப்ப வராங்கன்னு கேட்டு சொல்லுமாறு ராஜ்‌ கூறிவிட, ஹரி விஜயிடம்‌

விருப்பத்தை சொன்னான்‌.

 

“ஓகே ண்ணா நான்‌ அவங்க அப்பாகிட்ட பேசிட்டு

சொல்றேன்‌ என்றிருந்தான்‌.”

 

மாலைநேரம்‌, இரவின்‌ தொடக்கத்தில்‌ புன்யா

குளித்துக்கொண்டிருக்க, தாரா வீட்டின்‌ வெளி

இருக்கையில்‌ அமர்ந்திருந்தாள்‌.

 

“பேசட்டுமா? ” என விஜய்‌ அனுப்பிய மெசேஜ்‌ பார்த்தவள்‌ முகம்‌ சிவக்க மகிழ்வில்‌

அவனை அழைத்தாள்‌. எப்போதும்‌ அவன்‌ அழைக்க முன்னர்‌ இவ்வாறானதொரு மெசேஜ்‌ அனுப்பிய பின்னர் தான்‌ அழைப்பான்.

 

“ஸ்ரீ என்ன பண்ற?”

வெளில உட்கார்ந்து இருக்கேன்‌. நீங்க என்ன பண்றீங்க? ” எனவும்‌,

 “கொஞ்சம்‌ வெளில இருக்கேன்‌ டா கொஞ்சம்‌ வேலையா வந்தேன்‌.” என்றான்‌.

 

” அப்போ என்ன இந்தநேரம்‌ கால் பண்ணிருக்கீங்க? “

 

“அது எங்க வீட்ல எப்போ உங்க அப்பாவெல்லாம்‌ வராங்கன்னு கேட்டு சொல்ல சொல்ராங்க. அதான்‌ அப்பாக்கு பேச முன்னாடி உன்கிட்ட சொல்லணும்னு தோணிச்சி.” என்றான்‌.

 

“அண்ணாக்கூட அப்பாகிட்ட பேசினதா சொன்னாங்க. அம்மாவும்‌ பேசுறப்ப சொன்னாங்க. நைட்‌ சொல்லலாம்னு

இருந்தேன்‌. அதுக்குள்ள நீங்க எடுத்துடீங்க என்றாள்‌.”

 

அப்போ சீக்கிரமே நிச்சயம்‌ வச்சிரலாம்‌. ” என்றான்‌.

“நீங்கள்‌ எப்போ வருவீங்க? தேதி முடிவானதுக்கு அப்புறமா?” எனக் கேட்க, “ஸ்ரீம்மா என்னால வர முடியாதுடா. இந்த டைம்‌ ரொம்ப கஷ்டம்‌ டா.”

 

“ஓஹ்‌!’ என்றவள்‌ அமைதியாகி விட்டாள்‌.

“ஸ்ரீ… நான் இப்போ வந்தேன்னா அப்றம்‌ ஆறு மாசத்துல வரவேண்டியது இன்னும்‌ ஒரு வருடம்‌ அகலாம்டா. எனக்கும்‌ எப்போ வருவோம்னு தான்‌ இருக்கு. உன்‌ பக்கத்துல இருந்து உன்னை லவ்‌ பண்ணனும்‌ எனக்கு. இப்போ வர கஷ்டம்‌டா. முடியும்னாதான்‌ நான் எப்பவோ வந்துருவனே.”

 

“ஹ்ம்ம்‌.” என்றாள். 

 

“என்ன ஹ்ம்ம்‌? அப்போ நா வரட்டுமா? வந்துட்ட ஒரு மாசத்துல திரும்பப்போய்‌ ஒருவருஷம்‌ ஆகும்‌.ஓகேவா உனக்கு?”என்றான்.

“வேணாம்‌ வேணாம்‌ ஒரேடியா வந்துருங்க அப்றம்‌ நான் பாஸ்போர்ட்‌லாம்‌ ஒழிச்சு வச்சிருவேன்‌. உங்களால எங்கயும்‌ போக முடியாது.” என்று விட்டாள்‌.

 

“ஓகே மேடம்‌ அப்போ ஒரு முடிவுலதான்‌ இருக்கீங்க. ஹ்ம்ம்‌ எனக்கும்‌ அதுதான்‌  வேணும்‌.’

‘மிஸ்‌ யூ லோட்‌ ஸ்ரீம்மா.நான் வச்சிரட்டுமா?முடியும்னா நைட்‌ பேசுறேன்‌.

“டேக்‌ கேர்‌…” என்று வைத்தாள்‌.

 

 

Leave a Reply

error: Content is protected !!