இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 21

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 21
Epi 21
இரவு பத்து மணி இருக்கும், விஜயின் வீட்டினர் அப்போது தான் உறங்கச் சென்றிருந்தனர். வீட்டுக்கு வந்தவனோ காவலாளியிடம் உளேன் அறிவிக்க வேண்டாம் என்றவன் கேட்டின் அருகே தான் வந்த வண்டியை நிறுத்தி விட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின்னர் தன் வீட்டினுள் நுழைந்தான்.
வீடு மங்கிய விளக்கொளியில் இருக்க தனது பைகளை வாசலில் அப்படியே வைத்தவன் பாட்டியின் அறைக்கு செல்ல கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இன்னும் உறங்கியிருக்க வில்லை.
இவன் கதவருகே போய் நிற்கவும் இவனை பார்த்தவர் பேசாமல் திரும்பிக்கொள்ள.’என்னடா நம்மளை பார்த்தும் பேசல’ என நினைத்தவன் சிறிதுநேரம் அப்படியே நின்றிருக்க,” டேய் என்னடா தினமும் அழகா ஆபிஸ் போக தயாராய்த்தானே வந்து நிப்ப. இன்னக்கி என்ன இப்படி வந்து நிக்கிற? பொண்ணுன்னு நினச்சியா என்னை, இப்படி வந்ததும் மயங்கி பேசிருவேன்னு. நான் உன் பாட்டிடா. அப்படியெல்லாம் மயங்கமாட்டேன் போடா அங்கிட்டு, மனுஷனை தூங்க விடு “என்றவர், திரும்பி படுக்க சிறிது நேரத்தில் அவர் விசும்பும் சத்தம் கேட்டது. “பாட்டி…” என இவன் அருகே செல்லப்பார்க்க மீண்டும், “இப்படி நிழாக சரி வந்து என்னை பார்க்குறியே.தாத்தா போனதுக் கப்புறம் உன்கூட தானே அதிக நேரம். செலவிட்டிருக்கேன். பிழை செஞ்சது நீ மன்னிப்பு கேட்க மாட்டியா என்கிட்டே. என்னை சமாதானம் பண்ண வேணாம், அப்படியே விட்டுட்டு போய்ட்ட படுவா. என்னமோ நாளன்னைக்கி வரியாமே. வா வா இந்த பாட்டி யாருன்னு காட்டுறேன்..” என அவர் பாட்டுக்கு பேசிக்கொண்டு இருக்க,
” பாட்டிம்மா…” என்றவாறு அவர் தலை கோதினான்… அப்படியே எழுத்தமர்ந்தவர், ” டேய் ஸ்ரீ…’என அவன் கன்னம் தொட்டு பார்த்தவர், ‘ஏன்டா என்ன விட்டு போன?” என அந்த முரட்டு கன்னத்திலே பட்டென அடித்தார்.
“பாட்டிம்மா சாரி…’ என அவர் நடுங்கும் இரு கைகளையும் எடுத்து அவன் கன்னத்தில் வைத்தவாறு ‘சாரி பாட்டிம்மா.இப்படி என்னை தேடுவீங்கன்னு எனக்கு தெரியாது. அப்டின்னா நான் போயி இருக்க மாட்டேன் மன்னிச்சிருங்க.” என அவர் பாதம் தொட்டவன் கைக்கு மீண்டும் ஒரு அடி கொடுத்தவர்.
” நீயில்லாம இது வீடாகவே இல்லை.ஏன் நிவியை வேண்டாம்ன? சரி விடு. எப்படியோ பரவால்ல. ஆனா உன்னை போலவே ஒருத்தனையே தேடி கொடுத்துட்ட அவளுக்கு. அவளும் இப்போ சந்தோசமா தான்
இருக்காள்…” என்றார் பெருமூச்சோடு.
“பாட்டிம்மா தருண் தான் என்னை விட அவளை நல்லா பார்த்துப்பான். அதான் கடவுள் என்னை அவள வேண்டாம்னு சொல்ல வச்சுட்டான் போல. அதுல அவளுக்கு தானே நல்லது நடந்திருக்கு ” என்றான். “
“என்னமோ போடா. நீ இங்கயே இருந்திருக்கலாம்.
‘”கோபமா பாட்டிம்மா ? ” விஜய் கேட்க,
“அதெப்படி இல்லாம போகும்.என்னை விட்டு போனல்ல என்கூடவே இருப்பேன் சொல்லு அதுக்கப்றம் கோவத்துக்கான தண்டனை யெல்லாம் தரேன்.” என்றார்..
“இனி எல்லோருமா சேர்ந்து என்னை விரட்டினாலும் நா எங்கயும் போறதா இல்லை… ” என்றான்.
” இதென்ன இப்படி வந்திருக்க. அங்க
முடிவெட்றவனெல்லாம் இல்லையா? ” என்றார். அவன் முரட்டு கன்னங்களை மூடிய தாடியையும் தலையில். அடர்த்தியாக வளர்ந்திருந்த கேசத்தையும் கோதியவாறு.
“வை பாட்டிம்மா? நல்ல இல்லையா? அழகத்தானே இருக்கேன்.” என்றான்.
“அழகத்தான் இருக்க. அதான் பயமா இருக்கு உன் பின்னாடியே ஜேர்மன் பொண்ணு யாராச்சும் அடுத்த பிளைட்ல வந்துருவாளோன்னு…”
” அச்சோ பாட்டிம்மா நான் அவ்வளவெல்லாம் மோசமில்லை.’ என சிரித்தவன் ‘ஒகே பாட்டி நீங்க தூங்குங்க நா அம்மாவை இன்னும் பார்க்கல. காலையில பேசலாம்.” என்றான்.
“பேசலாம் இல்ல, சண்டை பிடிக்கலாம்.” என்றார்.
“ஓகே. சண்டை பிடிக்கலாம். குட் நைட்.” என்றவன் அவள் அன்னை அறைக்கு செல்ல அவர் நல்ல உறக்கத்தில் இருந்தார். மெதுவாக அவனறைக்கு சென்று குளித்து வந்தவன் அருணா அருகேயே உறங்கி விட்டான்.காலை எழுந்தவர் பக்கத்து தலையணையில் அடர்ந்த தாடியுடன் கேசம் கலைந்து உறங்குபவனை பார்த்து ஒரு
நொடி திகைத்தவர், அவன் முகம் ககூர்ந்து நோக்க, அவர் செல்ல மகன். கண்கள் இரண்டும் நீர் படர்ந்து பார்வையை மறைக்க கண்ணை துடைத்துக்கொண்டவர் அவன் சிகை கோத உறக்கம் கலைந்தவன்,” குட் மோனிங் மா.” என்று அவர் மடியில் தன் தலை வைத்துக்கொண்டான்.
“டேய் ஸ்ரீ… எப்போ வந்த? நாளைக்கு தானே வாரதா இருந்த, சொல்லிருந் தேன்னா எழும்பி இருப்பேன்ல. “
” அது சும்மாம்மா… டைம் முன்ன பின்ன ஆகலாம் அதான்… அப்பா எப்போ வருவாங்க? ” என்றான்.
“இன்னக்கி காலையில ஆபிஸ் மீட்டிங் இருக்காம். நேர அங்கேயே போய்ட்டு அது முடிச்சிட்டு அப்படியே வாரதா சொன்னாங்க.” என்றார்.
“ஹ்ம்ம் நல்ல வேளை, இல்லன்னா எனக்கு இப்படி தூங்க கிடைச்சிருக்காது. படவா என அவன் கன்னம் வருடியவாறு அவன் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தார்.
“மிஸ் யூமா” என அவரை அணைத்துக் கொண்டான்.
“என்னடா இது கோலம்?”
“நல்லா இல்லையா? ” என்றான்.
“நல்லா தான் இருக்கு… ஆனாலும் ரவ்டி பையனாட்டம் இருக்கு என்றார். ஹ்ம்ம் இதொட இன்னக்கி ஒருத்தங்களை மீட் பண்ண இருக்கு அதுக்கப்புறம் உங்க சமத்து பையனாட்டம் மாறிருவேன் மா…”
“அது யாரு ஒருத்தங்க?”
“அது யாருன்னு கண்டிப்பா அவங்களை பார்த்துட்டு வந்ததுக்கப் புறம் சொல்வேனாம். இப்போ சுடச்சுட எனக்கு டீ போட்டு தருவீங்க லாம்.”
“ஓகே டா எந்திரிச்சி போய் பிரஷ் பண்ணு அப்போதான் டீ. “
“அசோ ம்மா பெட் டீ குடும்மா.”
“டேய், நா இன்னக்கி குடுப்பேண்டா பொண்டாட்டி வந்ததுக்கப்புறம் கிடைக்காதுடா அதெல்லாம். அதுனால பழகிக்கோ.”எனவும்,
“அது தெரிஞ்சு தான் என் அறையிலேயே நா கிட்சேன் வெச்சிருக்கேன். நா என் பொண்டாட்டிக்கு பெட் டீ குடுத்து பழக்கிருவேன் மா…”
“பார்க்கலாம் பார்க்கலாம். யாரு யாருக்கு டீ போட்றான்னு.எந்திரிச்சு வா பாட்டிகிட்ட அடி வாங்க தயாரா.” என அறை விட்டு வெளியே சென்றார்.
இவனும் குளித்து தயாராகி வர மேசையில் பாட்டியும் அன்னையும் அமர்ந்திருக்க “எங்கம்மா அத்தை, மாமா, நிவியெலாம் காணோம்?” என கேட்டுக்கொண்டே பாட்டி அருகே அமர “மாமாவோட அக்கா வீட்டுக்கு போனாங்கடா. நாளைக்குத்தான் வருவாங்க.”
“ஹரிண்ணா எங்க?” எனவும் அவனும் அவங்க மாமியார் வீட்டுக்கு போயிருக் காங்க. நாளைக்குத்தான் எல்லோரும் வருவாங்க…”
“சரி இப்போ எங்க கிளம்பிட்ட?” அருணா கேட்டுக்கொண்டே அவனுக்கு உணவு பரிமாற, “நீயும் உட்காரும்மா சேர்த்தே சாப்பிடலாம்.’ என்றவன், ‘ரெடியாகிட்டேன் தான் ஆனா
இப்போவே போகல கொஞ்சம் லேட்டாதான் போகணும்.ஆபிஸ் போய்ட்டு அப்படியே நம்ம ஷோரூம் பார்க்க போகணும் மா.யாருக்கும் நான் வந்தது தெரியாது சோ யார்கிட்டயும் சொல்லவேணாம்.” என்றான்.
“பாட்டிம்மா என்ன இது ஒரு இட்லியை வச்சுட்டுவிளையாடுற.சாப்பிட முடியலைன்னா வேறெதுவும் செய்ய சொல்லலாம் இல்ல.”
“உங்க பாட்டி இப்போ அப்டித்தான் டா சாப்பிடறாங்க…” அருணாவும் கவலையாக கூற,
“என்னாச்சு பாட்டிம்மா உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா? டாக்டரை ஒருதரம் பார்க்கலாமா? ” என கேட்க வேணாம் டா.இனி சரியாகிடும்… நீ போனதுல இருந்து உங்க தாத்தா நினைவாவே இருக்கு, எல்லாருமா இருந்தாலும் தனியா இருக்க மாதிரியே ஒரு நினைப்பு. வீட்ல உள்ளவர்களுக்கும் பேச்சு ரொம்ப குறைஞ்சி போச்சு…”
“சாரி பாட்டி.உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.”என அவரை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன்.
“இதையும் டெய்லி காலைல எதிர் பார்பேன்டா.” எனக்கூற அவர் கண்களில் நீர் வர அவனுக்குமே அவனது கண்களில் நீர் நிரம்பிவிட்ட நிலை. இவ்வாறு இவர்கள் பேசி நிவியின் கல்யாண விடயங்கள் பற்றி பேசிக்கொண்டு நேரத்தை கழித்தனர்.
எதுவும் நடவாதது போல அவனும் நடக்க இவர்களும் அது பற்றி பேசவில்லை. அருணாவும் மனதில், ‘மற்றவர்கள் வந்ததும் இவனை எதுவும் கேட்டு மனம் நோகச்
செய்யக்கூடாது’ என நினைத்துக் கொண்டார். பாட்டியும் அதுபற்றியே வீட்டினரிடம் பேச வேண்டும் என்று நினைத்தார்.
“ம்மா அப்பா லெவனுக்கு தானே மீட்டிங் நாங்க. நான் ஆபிஸ் போய்ட்டு வெளில கொஞ்சம் வேலை இருக்கு நைட் ஆகுமா வர்ரத்துக்கு. டின்னெர் உங்க கூடத்தான்.” வரேன் என்றவன் வீட்டிலிருந்து புறப்பட்டான்.
நீண்ட நாட்களின் பின்னர் அவன் வண்டியில்…
காலை ஏழு மணி என காட்ட, எழுந்த புன்யா ரமேஷிடம் இருந்து வந்த அழைப்பை பார்க்க அவனுக்கு அழைத்தாள்.எடுத்ததும்,
” என்ன மேடம் ரெண்டு பேருமா லேட்டா வாரதா மெயில் பண்ணிருக்க இன்னக்கி மீட்டிங் இருக்கு பாஸ் வேறு டைம்க்கு தான் வருவார். நான் தனியா எப்படி மேனேஜ் பண்றது.ஒருதராவது இருந்தா கொஞ்சமாச்சும் நான் மேனேஜ் பண்ணிக்குவேன்.” என கத்த “சாரி மாம்ஸ். நான் வரேன். தாரா கொஞ்சம் லேட்டா வரட்டும்.” என போனை வைத்தவள். ஆபிசுக்கு கிளம்பி தாராவுக்கு டீ ஊற்றி பிளாஸ்கில் வைத்தவள் அவளை எழுப்பி, ” என்னை வரச்சொல்லி ரமேஷ் கோள் பண்ணினார். நான் கிளம்புறேன். நீ மெதுவா எழுந்து லெவனுக்கு தான் மீட்டிங் அதை அடன் பண்ண வந்தா போதும் ஓகே. நான் போய் அவனுக்கு சேர்ந்து ஒரு வழி பண்ணி வக்கிறேன். நீ ஒன்னும் யோசிக்காம கிளம்பி வா.” என புன்யா கூற,
“ஹ்ம்ம் நான் வரேன் நீ கிளம்பு” என்றாள் தாரா. “ஓகே பேபி பாய். டோரை வெளில லாக் பண்ணிட்டு போறேன்.”
” ஹ்ம்ம் சரி என்றவள். “மீண்டும் திரும்பி படுத்தாள்.வெளியே வந்தவள் பிரபா இருப்பதை பார்த்து அவனருகே வர ,அவளை பார்த்தவன் என்ன இன்னக்கி நேரமாவே கிளம்பிட்ட, தாரா எங்க? ” எனவும்,
” அவ கொஞ்சம்லேட்டா தான் வருவா முடியும்னா கொஞ்சம் அவளை ட்ரோப் பண்ண முடியுமா? ” எனக்கேட்டாள்.
‘ஆஹ் ஒகே ‘ என்றவன் ‘நீ எப்படி போகப்போற? “நான் கேப் புக் பண்ணிருக்கேன். டெய்லி போறது தான் என்றாள்.”
“தனியா போய்க்குவியா எனவும் ஹ்ம்ம் என்றாள். அதோடு வண்டி ஹார்ன் அடிக்கவும் ‘வரட்டுமா? ‘ என்றாள். ஹ்ம்ம் ஓகே பாய்’ என்றான்.
“சரியான தயிர்சாதம்” என முணு முணுத்துக்கொண்டே செல்ல “என்ன? ” என்றான்.
“ஆஹ் போடா தயிர் சாதம்னேன்.” என்றவள் வண்டி ஏறி சென்று விட்டாள்…
‘என்ன இவ ஒரே தயிர்சாதம்ன்னு சொல்றா. என்ன மீன் பண்ரா… தருண்கிட்ட கேட்கணும்’ என நினைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
பத்து மணியளவில் எழுந்த தாராவுக்கு உடல் சற்ற சூடாகவும் தலைவலியா கவும் இருக்க குளித்தால் சரியாகும் என நினைத்து குளித்தவள், ஆபிசுக்கு தயாராகி இருக்க தலைவலி இன்னும் அப்படியே இருந்தது. ‘மாத்திரை இரண்டை போட்டுக் கொண்டே கிளம்ப வேண்டும்’ என நினைத்த படியே டீயுடன் சில பிஸ்கட்களை சாப்பிட்டாள். பிரபா அழைப்பது கேட்க,’இதோண்ணா வந்துட்டேன்.’என அவசரமாக கிளம்பி வீட்டை பூட்டிக் கொண்டு இறங்கியவளுக்கு மாத்திரை மறந்திருக்க ‘ஆபிஸ் போய் போட்டுக்கலாம் ‘ என்றுவிட்டு பிரபாவுடன் கம்பனிக்கு சென்றாள்…
வண்டி ஏசி, குளித்ததன் பலன். மாத்திரை சாப்பிடாதது என தலைவலி அதிகமாவது போல இருக்க , சீட்டில் தலை சாய்ந்து கொண்டாள். “என்னாச்சும்மா உடம்புக்கு ஏதும் முடியலையா? நேற்றிலிருந்து ஏதோ போல இருக்க என்னாச்சு இன்னக்கி லீவு போட்டிருக்கலாம் தானே. ஏதும்
ப்ரோப்லம்ன்னா, சொல்லலாம்னா சொல்லு ” என்றான் பிரபா.
“அச்சோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.கொஞ்சம் தலை வலி.”
” சரிம்மா. ஈவினிங் தருண் வருவான். உன்னை பார்க்க வர சொல்றேன்.”
‘சரிண்ணா’ என்றவளுக்கு மீண்டும் அந்த வினோத் கூறியவை நினைவு வர தலைவலிக்கு சொல்லவும் வேண்டுமா கூடிக்கொண்டே போக,கம்பெனி முன்னே வண்டியை நிறுத்தினான் பிரபாகர். அவள் இறங்கிக்கொள்ளவும் அவனும் கூறிக்கொண்டு கிளம்ப அவளும் உள்ளே சென்றாள்.
இருவருமே பார்க்கிங்கில் நின்ற விஜயின் வண்டியை கவனிக்க வில்லை.