இரும்புக்கோர் பூ இதயம் -epilogue

இரும்புக்கோர் பூ இதயம் -epilogue


Epilogue

 

ஒருவருடம்‌ இனிதாய்‌ கடந்திருந்தது

 

எவ்வளவு முயற்சி செய்தாலும்‌ கவலைகளும்‌, கஷ்டங்களும்‌ இழப்புகளும்‌ நம்மை நெருங்காமல்‌ இருப்பதில்லை.அவை மனிதனை எவ்வகையிலும்‌ வந்தடைந்துக்‌ கொண்டு தான்‌ இருக்கும்‌. அதில்‌ இருந்து மீண்டு வாழக்‌ கற்றுக்கொள்வதிலேயே வாழ்வின்‌ வெற்றி அடங்கியுள்ளது …

 

அவ்வாறு ஒரு நிகழ்வில்‌ இன்று விஜயின்‌ இல்லத்தினர்‌ இருந்தனர்‌. வள்ளிப்பாட்டி நேற்று இவ்வுலகை விட்டும்‌ அன்பான குடும்பத்தை விட்டும்‌ பிரிந்து சென்றிருந்தார்‌. அவருடைய சடங்குகள்‌ முடிந்திருக்க வீட்டுக்கு துக்கம்‌

விசாரிக்க வந்திருந்த உறவினர்கள்‌ கலைந்து சென்றிருக்க, சிலர்‌ வந்து போக வீட்டினர்‌ மட்டுமே எஞ்சி இருந்தனர்‌. வீட்டில்‌ தளபாடங்கள்‌ ஒதுக்கப்பட்டு பெரிய விரிப்பொன்று ஒரு பக்கமாக விரிக்கப்பட்டிருக்க அதற்கு நேரெதிரே பாட்டியின்‌ படத்துக்கு மாலையிட்டு விளக்கேற்றப்பட்டிருந்தது. அந்த விரிப்பில்‌ விஜய்‌ சுவற்றில்‌ சாய்ந்தவாறு கால்‌ நீட்டி அமர்ந்திருக்க அவன்‌ மடியில்‌ தலை வைத்து படுத்திருந்தாள்‌ ஆறு மாத கர்ப்பிணியான நிவி. இருவரது முகமும்‌ சோகமா அப்படி இருக்க நிவியின்‌ முகமோ அழுது சிவந்திருக்க, விஜய்‌ அவள்‌ தலையில்‌ ஒரு கை வைத்தவாறு கண்முடியிருந்தான்‌. இரவும்‌ உறக்கமில்லை. இன்று மாலையும்‌ ஆகி விட்டது இன்னும்‌ ஓய்வு கிடைக்கவில்லை.கண்திறந்தவன்‌ தன்னவளை தேட அவளோ தன்‌ மாமியாருடன்‌ அமர்ந்து

அவர்‌ கைகளை ஆதரவாக பிடித்த வண்ணம்‌ அமர்ந்திருந்தாள்‌.

 

ஹரிணிக்கு உணவூட்டியவாறு ஹரியின்‌ மனைவி ஒரு பக்கம்‌, முன்‌ வாசலில்‌ தந்‌தைமார்கள்‌ அமர்ந்து பேசிக்கொண்டிருக்க தாராவின்‌ அன்னை மாதவி அவர்களது வீட்டாலாக அனைவருக்கும்‌ வேலையாள்‌

உதவியுடன்‌ உணவினை தாயாரித்து விட்டு அனைவருக்குமாக காபி எடுத்து வந்தவர்‌ கொடுக்க அனைவருக்கும்‌ அது தேவையாக இருக்கவும்‌ மறுக்காமல்‌ எடுத்துக்கொண்டனர்‌.

 

“சாரி மாதவி நம்மளால உனக்கு கஷ்டம்‌.” என அருணா கூறவும்‌,

“என்ன பேச்சு இது, நம்ம வீட்ல நா பார்க்கிறேன்‌. காபி குடிச்சிட்டு கொஞ்சம்‌ சாஞ்சிக்கோ கொஞ்சம்‌ லேட்டா சாப்பிடலாம்‌’ என்றவர்‌, தாராவை பார்த்து நிவியின்‌ அன்னை அறையில்‌ உறங்கி இருப்பதாக கூறி ‘ஸ்ரீ இந்த காபிய குடுடா எனவும்‌, “சரிம்மா” என அதனை எடுத்துச்சென்றாள்‌. போகும்‌ போது கண்முடி சாய்ந்தமர்த்தவனின்‌ முகம்‌ காண சோர்ந்து இருப்பது நன்றாக விளங்கியது. அவள்‌ அறையிலிருந்து

வெளி வர தருணும்‌ ஹரியும்‌ வெளியில்‌ தேவைக்காக சென்று வந்தனர்‌. விஜய்‌ அருகில்‌ வந்த மாதவி தருணை பார்த்து,

 “நிவியை எழுப்பிவிடுப்பா ரொம்ப நேரம்‌ கீழயே தூங்குரா இடுப்பு பிடிச்சிக்கும்‌. விஜயும்‌ ரொம்பநேரம்‌ அப்படியே உட்கார்ந்து இருக்கு… நேத்து நைட்ல இருந்து தூங்கல. ஸ்ரீ விஜயை எழுப்பி உள்ள கூட்டிப்போ.” என்றார்‌.

 

தருண்‌ கீழே அமர்ந்து நிவியை எழுப்பி அவலறைக்கு கூட்டிச்செல்ல விஜயும்‌ தாராவுடன்‌ மாடியேறினான்‌.

‘காபி தரட்டுமா? ‘ என மாதவி கேட்க வேணாம்மா நா கொடுக்குறேன்‌ என்று அறைக்கு வந்தவள்‌ விஜய்க்கு குளிக்க டவலினை எடுத்துக்கொடுத்தவள்‌ அவன்‌ குளித்து வர அவனுக்காக தயாரித்த தேநீரை கொடுத்தாள்‌. இப்போதெல்லாம்‌ அவர்கள்‌ அவர்களுக்கான காலை தேநீர்‌ மற்றும்‌ அவர்கள்‌ இருவரும்‌ தனிமையில்‌ இருக்கும்‌ பொழுதுகள்‌ தேவைக்கேற்ப அவர்களது அறையிலே அருந்துவர்‌.

 

“உனக்கு ” எனவும்‌, வேணாம்ப்பா காலையில இருந்து உடம்புக்கு முடில.பிவர்‌ வர மாதிரி இருக்குப்பா” எனவும்‌,

 

“என்னாச்சுடா?”  என அவளை அருகில்‌

அமர்த்திக்கொண்டவன்‌ அவள்‌ கழுத்தில்‌ கை வைத்து பார்க்க சூடெல்லாம்‌ இல்லையே. டாக்டர்‌ வர சொல்லட்டுமா? எனவும்‌,

“வேணாம்‌. நைட்ல இருந்து சரியா தூங்கலையா அதுதான்‌ போல.பாருங்க தலை கூட ஒழுங்கா துவட்டல என அவன்‌ தலையை துவட்டியவள்  கொஞ்சம்‌ தூங்கி எந்திரிங்க.”

‘ ஹ்ம்ம்‌’ என்றவன்‌ தூங்கினேன்னா திரும்ப காலையில தான்‌ எந்திரிப்பேன்‌ ” எனவும்‌

“அப்போ சாப்பிட்டுட்டே தூங்கலாம்‌ நா எதுவும்‌ எடுத்துட்டு வரேன்‌.” என கிழே செல்லப்பார்க்க,

 

“இங்க வா ஸ்ரீ… எனக்கெதுவும்‌ வேணாம்டா.” என அவளை கட்டிலில்‌ சாய்ந்து அமர வைத்தவன்‌ அவள்‌ மடியில்‌ தலை வைத்து இடையை கட்டிக்கொண்டான்‌. அவன்‌ தலை கோதியவள்‌, ‘ஸ்ரீப்பா… என அவன்‌ நெற்றியில்‌ இதழ்‌ பதித்தவள்‌ தொடர்ந்து அவன்‌ தலைகோத அப்படியே உறங்கியும்‌ விட்டான்‌. அவளும்‌ அவனுடனே உறங்கி விட இடையில்‌ வந்து மாதவி பார்க்க இருவரும்‌ நல்ல உறக்கத்தில்‌ இருந்தனர்‌.எழுப்பாது கதவை சாற்றி விட்டு சென்றார்‌.

 

காலை முதலில்‌ எழுந்தவன்‌ அவளுக்கான தேனீரை எடுத்துக்கொண்டு அவளை எழுப்ப எழுந்தவள்‌ முகம்‌ கழுவி வர தலை சுற்றுவது போல இருக்கவும்‌ அவனருகே வந்து அமர்ந்தவள்‌ அவன்‌ தோள்‌ சாய்ந்தவாரே தேநீரை பருகினாள்‌. பருகி முடிக்கவும்‌ வாந்தி வருவது போல இருக்க குளியலறைக்குள் ஓட இவனும்‌ என்னாச்சுடா என அவள்‌ பின்னே செல்ல வாந்தியெடுத்தவள்‌ அவன்‌ மேலே

மயங்கினாள்‌.

 

“ஹேய்‌ ஸ்ரீ ம்மா என்னாச்சு ? ‘என அவளை ஏந்தியவன்‌ கட்டிலில்‌ படுக்க வைத்து அவளை எழுப்ப நீர்‌ தெளித்தவன்‌ மயக்கம்‌ தெளியாது இருக்க தன்‌ அன்னையை அழைத்தான்‌. அவரோடு அனைவரும்‌ வந்து விட்டனர்‌.  டாக்டரை வரவழைத்தவர்கள்‌ இவளுக்கு பிவர்‌ வந்தாளே இப்படித்தான்‌ என மாதவி கூற,

 

“கொஞ்சம்‌ வெளில வெய்ட்‌ பண்ணுங்க: என்றவர்‌ அவளை பரிசோதித்துவிட்டு அவள்‌ இன்னும்‌ மயக்கத்தில்‌ இருக்க விஜயிடம்‌ “இவங்களுக்கு கடைசியா எப்போ பீரியட்ஸ்‌ வந்தது? ‘எனவும்‌ இந்த மந்த்‌ இன்னும்‌ வரலை டாக்டர்‌.

சரின்னா லாஸ்ட்‌ வீக்‌ வைத்திருக்கும்‌ என்றான்‌.’ஒஹ்‌ ஐ திங்க்‌ ஷி இஸ்‌ பிரேக்னன்ட்‌ ‘ என்று விட்டு,’அவங்க எந்திரிச்சதும்‌ இதை வெச்சு டெஸ்ட்‌ பண்ணிப்பாருங்க.’ என்று அவனிடம்‌ அதை தந்தவர்‌. ‘கான்போர்ம்‌ பண்ணிட்டா டாக்டரை பாருங்க.” என்றுவிட்டு விடைபெற்றார்‌. அவள்‌ எழுந்ததும்‌ அவளால்‌ ‘ஏழ முடியுமா’ என கேட்டவன்‌ அவளை செக்‌ செய்து பார்க்குமாறு பாத்ரூம்‌ அழைத்து சென்றவன்‌ அவள்‌ வெளி வர காத்திருந்து, வந்ததும்‌ அவள்‌

முகம்‌ பார்க்க,அவள்‌ அவன்‌ கழுத்தைக்‌ கட்டிக்கொள்ள அப்படியே அவளை தூக்கிக்கொண்டான்‌…

” என்‌ ஸ்ரீ அப்பா ஆகிட்டாங்க. ” என அவன்‌ நெற்றியில்‌ இதழ்‌ பதிக்க, அவனோ அவள்‌ இதழில்‌ இதழ்‌ பதித்தவன்‌, “தேங்ஸ்‌ டா.”

என அவளை இறக்கி விட்டவன்‌ இருவரும்‌ ஒருவரை ஒருவர்‌ அணைத்து அப்படியே சிறிது நேரம்‌ இருந்தனர்‌. பின்‌ அவளை உடை மாற்றி வருமாறு கூறி இருவருமாக கீழிறங்கி வர அருணா எழுந்து வந்து என்னாச்சுடா என

கேட்க தன்‌ அன்னையை அணைத்தவன்‌ நீங்க பாட்டியாக போறீங்க எனவும்‌ அனைவரும்‌ தங்கள்‌ மகிழ்வை பகிர்ந்துகொண்டனர்‌.

கடவுள்‌ ஓர்‌ துன்பத்தை தந்தால்‌ அதை விடை பல

மடங்கான சந்தோஷத்தை அதை தொடர்ந்து தந்துகொண்டுதான் இருப்பான் …

இனி இவர்கள் வாழ்வு சிறப்பாய் அமையும் என்றே வாழ்த்தி விடைப்பெறுகிறேன்…

 

முற்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!