இளைப்பாற இதயம் தா!-11ஆ
இளைப்பாற இதயம் தா!-11ஆ
இளைப்பாற இதயம் தா!-11B
இடைவெளி விட்டு நின்றபடியே அவளிடம் பேசுவதும், உண்ண அழைப்பதும், உண்டு முடித்ததும், “நீ போயித் தூங்கு ஹனி” என்றதோடு டிவியின் முன்னே ஆஜரானவனை தனித்துவிடும் எண்ணமில்லாமல், அவன் அருகே சென்று அமர்ந்துவிட்டாள் ஐடா.
தன்னை எப்போதையும் விட அதிகம் ஒட்டிக்கொண்டு அமர்ந்தவளைப் பார்த்தவன், “என்ன ஹனி… உனக்குத் தூக்கம் வரலையா?” ரீகன் கேட்டதும்,
“நீங்க நேத்து நைட் ஃபுல்லா தூங்காமத்தான டிராவல்ல இருந்தீங்க. இப்பவும் படுக்க வராம எதுக்கு டிவியப் பாத்துட்டு உக்காந்துருக்கீங்க?” ரீகனது ஒதுக்கம் எதனால் என்பது புரியாதவள் குழப்ப மனதை தனக்குள் புதைத்தபடியே கேட்டாள்.
“தூக்கம் இன்னும் வரலை ஹனி. அதான் உறக்கம் வரவரை பார்க்கலாம்னு உக்காந்தேன்” என்றவன், மனைவியின் ஓய்ந்த தோற்றத்தைக் கண்டு வருத்தம் மேலிட, “ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாம ஜாப்கு போ. முடியலைன்னா இன்னும் ஒன் மந்த் லீவ் எக்ஸ்டெண்ட் பண்ணு” ஐடாவின் முகத்திற்கு முன் ஆடிய முடிக்கற்றைய ஒதுக்கிவிட்டபடியே கூறினான் ரீகன்.
“ம்ஹ்ம்” என்று கணவனது பேச்சைக் கேட்டு ஆமோதித்தவள், அவனது தோள்பட்டையில் தலையைச் சாய்த்தபடியே ரீகனின் கரத்தை தனது இரண்டு கரங்களுக்குள் இறுக பற்றியபடி, “நீங்க இங்க எந்த ஆபீஸ்ல வர்க் பண்ணீங்க?” ஐடாவின் கேள்வியில் அவளைத் திரும்பிப் பார்த்தவன் மனைவிக்கு தான் பணிபுரிந்த இடத்தின் பெயரைக் கூறிவிட்டு அவளையே பார்த்தான்.
“அவங்களும் உங்களோட வர்க் பண்ணாங்களா?” அடுத்த கேள்வியை மனைவி கேட்டதும், அவளது தலையின் மேல் தனது தலையைச் சாய்த்தபடியே, “இல்லை!” என்றான்.
ரீகனது தலை தன் தலையின் மேல் இருந்ததைப் பொருட்படுத்தாமல் தலையை வெளியே இழுத்து கணவனது முகத்தை நிமிர்ந்து பார்த்து, “அப்ப… அவங்களை எப்டித் தெரியும்?”
“யாரு… அந்த ஆராதனாவைக் கேக்கறீயா?”
“ம்ம்ம்…” என்றவள், ‘வேற யாரைப் பத்தி இப்பக் கேப்பேன்’ என்பதுபோல கணவனைப் பார்த்தாள் ஐடா.
மனைவி இத்தோடு விடமாட்டாள் என்பது விளங்க, “எங்க ஆபீஸ்ல இருந்த சில லேடி ஸ்டாப்கூட ஒரே ஹாஸ்டல்ல இவ.. ங்களும் இருந்ததால தெரியும்” ரீகன்.
ஆராதனாவை ரீகன் இவ என்று சொல்ல வந்துவிட்டு சற்று சுதாரித்து ங்களும் என்பதைச் சேர்த்துச் சொன்னதைக் கேட்டதும் ஐடா சட்டென ரீகனது முகத்தையே பார்த்தாள். அதில் ஒரு அசூயை உணர்வு தோன்றி மறைந்ததையும் ரீகன் கவனித்தான்.
வேற்றுப் பெண்களை அவ, இவ என்று எப்படிப் பேச முடியும் எனும் ஒவ்வாத நிலை ஐடாவிற்கு.
இதுவரை தனது அலுவலகப் பெண்கள் தான் தங்கியிருந்த அதே விடுதியில் இருந்தாலும், அவர்களின் காதலனோ, அல்லது தோழனோ யார் அங்கு தேடி வந்தாலும் அவர்களிடம் சென்று பேசிய அனுபவம் ஐடாவிற்கு கிடையாது. அது அவசியமில்லை எனும் ரீதியில் வளர்ந்தவள் ஐடா. ஆனால் சில ஆண்கள் தனது தோழி அல்லது காதலிக் காண வந்த நேரங்களில் ஐடாவோடு பேச முன்வந்தாலும், அவர்களிடம், “என்ன டவுட்னாலும் அங்க கேளுங்க” என விடுதி நிர்வாக அலுவலர்களைக் கைகாட்டிவிட்டு நகர்ந்து போய் விடுவாள் ஐடா.
ஐடாவைப்போல மற்ற பெண்கள் இருந்ததில்லை என்பதையும் அவளறிந்தே இருந்தாள். சில பெண்கள் தன் தோழியின் காதலரிடம் காதலியைவிட நெருங்கி நின்று பேசுவதைப் பார்த்துவிட்டு, “அவளைப் பாக்க வந்திருக்கான்னு தெரிஞ்சும் இவளுக்கு இவங்கிட்ட என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு” மனதிற்குள் திட்டியபடியே கடந்து போயிருக்கிறாள்தான்.
ரீகன் தன்னை கண்டுகொள்ளாதவளிடம்கூட தானாகவே சென்று பேசும் கேட்டகரி ஆண் எனத் தோன்றியதுமே, ஐடாவிற்கு கசப்பான உணர்வு. அதுதான் அவளின் முகத்தில் தெரிந்தது. அத்தோடு விடாமல், “உங்க ஆபிஸ்ல இருந்த லேடி கொலீக்ஸ்ஸோட ஹாஸ்டல்ல உங்களுக்கு என்ன வேலை?” ரீகன் தன்னைப்போல உண்மையைப் பேசிவிடுவான் என்றெண்ணித்தான் ஐடா கேட்டது.
ரீகன் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டு பாவமன்னிப்பிற்கு மனைவியிடம் கை கட்டி நிற்கும் ரகமல்ல என்பது ஐடாவிற்கு தெரியவில்லை. தெளிந்தவன் அவள் நம்பும்படி கதை கட்டத் துவங்கி, “வெகிகிள் பிரச்சனையானா எப்பவாவது ஹெல்ப்புக்கு கூப்பிடுவாங்க. அப்டி விடப் போகும்போது ஆராதனாவைப் பாத்திருக்கேன்.” ரீகன்.
“ஆஹான்” என்றவள்,
“அப்டி யாரை யாரையெல்லாம் அங்க கொண்டு போயி விட்டீங்க?” என்று அடுத்த கேள்வியை முன்வைத்தவளிடம், ரெண்டு பெண்களின் பெயர்களை அடித்து விட்டான். ஆனால் ஐடாவிடம் தெரோபலின் பெயரை ரீகன் கூறியிருக்கவில்லை.
“அவங்க ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்டலா?” ஐடா
ஆம் என்று தலையாட்டியவனிடம், “எத்தனை தடவை கொண்டு போயி விட்ருப்பீங்க?” என்றாள்.
“ரெண்டு தடவை போயிருப்பேன்னு நினைக்கிறேன்” அலுப்பாக பதிலளித்தான் ரீகன்.
“ரெண்டு பேரையும் ரெண்டு தடவை கொண்டு போயி விட்டீங்களா?” என்றாள் அடுத்தபடியாக.
ரீகன் அமைதியாக ஐடாவைப் பார்த்த பார்வையில் என்னை நீ சந்தேகிக்கிறாயா என்பது போன்ற பார்வை. ஆனால் ஐடா சளைக்காது அடுத்த கேள்வியாக, “அப்டி ரெண்டு தடவை பாத்ததுக்கே ரொம்ப நாள் பழகினபோல பேசிக்கறீங்க?” ஐடா அப்படியே விட்டுவிடாமல் மேலும் தொண தொணத்தாள்.
ரீகனுக்குள் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. ஆனாலும் ஐடாவின் தற்போது நிலையை எண்ணி, “நான் இன்ட்ரோவர்ட் கிடையாதுன்னு உனக்கே தெரியாதா ஹனி?”
உன்னைப் புரியும் என்பதுபோல, “ம்ஹ்ம்” ஐடா என தலையை அசைத்தபடியே கணவனது முகத்தைப் பார்த்தபடியே, “அவங்க ஃபேஸ் பாத்தா நார்மலா இல்ல. ஏன்?” தான் கேட்க நினைத்ததை சுற்றி வளைத்து கேட்டுவிட்டு கணவனது முகத்தில் தெரிந்த உணர்வுகளை ஆராய்ச்சிக் கண்ணோடு நோட்டம் விட்டாள் ஐடா.
ரீகன் எதையும் அலட்டாமல், “அப்டி எதுவும் எனக்குத் தெரியலையே ஹனி” என்றவன், “அவங்க ஏன் அப்டி இருந்தாங்கனு நீ அவங்கட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்”
கணவனது பதிலைக் கேட்டு அமைதியாக கணவனையே பார்த்தாள் ஐடா.
கணவனது பேச்சை அவள் ரசிக்கவில்லை என்பது அவனுக்குப் புரியவர, “அப்பா டெத்துக்குபின்ன யாரோடையும் காண்டாக்ட் இல்ல எனக்குனு சொல்லிட்டு இருந்தேன். அதத்தான் நம்பாம பாத்திருப்பா…ங்ங்களா இருக்கும்” என்றான்.
“உங்க ஃபிரண்ட்ஸ் யாரோடையும் நீங்க இப்ப காண்டாக்ட்ல இல்லையா?” கணவனிடம் ஆச்சர்யமாகக் கேட்டாள் ஐடா.
“வெளிய எங்காவது பாத்தா ரெண்டு வார்த்தை பேசிக்கறதோட சரி. முன்ன மாதிரி சேந்து சுத்தறதெல்லாம் விட்டு நாளாச்சு” தாடையைத் தடவியபடியே கூறினான் ரீகன்.
ரீகனுக்கே சிரிப்பு வந்தது. எப்படி தான் இத்தனை சரளமாகப் பொய் பேசுகிறோம் என்று. ஆனாலும் ஐடாவைச் சமாளிக்க அவனுக்கு தற்போது வேறு வழியில்லை.
பொண்ணுங்களோடதான் பெரும்பாலும் சுத்திட்டு தெரிஞ்சேன். ஒரு தடவை பேசுனதுக்கே இந்த அளவு என்கொயரின்னா… நான் செஞ்ச பழசெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான்போல என மனதிற்குள் நினைத்தபடியே மனைவியின் காது மடலில் மெதுவாக முத்தமிட்டான் ரீகன்.
இது மனைவியைத் திசை மாற்ற ரீகன் எடுக்கும் சின்ன முயற்சி. இதுபோல அவள் பேசும்போதெல்லாம் நல்ல மனநிலையில் தன் அருகாமையில் அவன் தந்திருந்த முத்தங்கள் அவளுக்குள் உண்டாக்கிடும் உருகிக் கரைந்திடும் அவன் உணர்வோடு தன் உணர்வை கலந்திடும் வேட்கை தற்போதைய ரீகனது முத்தம் ஏனோ அவளுக்கு உண்டாக்கவில்லை.
மாறாக எரிச்சல் எழ உச்சு கொட்டிய ஐடா, அவனது முகத்தை தனது கைகொண்டு தடுத்தாள். சுதாரித்தவன், “டயர்டா இருக்கு ஹனி. படுக்கலாமே” என்று கேட்டதும், “தூங்கலாம் ரீகன்” என்றவள், கடுமையான தொனியில், “ஏன் உங்க ஃபிரண்ட்ஸ் யாரையும் இப்பலாம் நீங்க மீட் பண்ணறதில்ல?”
“அதுக்கெல்லாம் நேரம் எங்க இருக்கு?” என்று கேட்டவன், இதற்கு மேல் இவளைப் பேசவிட்டால் தனது அத்தியாயம் இன்றோடு முடிவுக்கு வரக்கூடும் என்று தோன்றியதோ என்னவோ, அருகே இருந்தவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.
“இப்ப எதுக்கு என்னைத் தூக்கிட்டு வரீங்க” என்றவளை மெதுவாக படுக்கையில் படுக்க வைத்தவன் தானும் அவளருகே சென்று படுத்துக்கொண்டு இறுக அணைத்தான்.
“வயிட் குறைஞ்ச மாதிரி இருந்தியா… அதான் தூக்கிப் பார்த்தேன்” என்றபடியே மனைவியின் இதழை முற்றுகையிட்டான்.
அவனது அணைப்போடு நிற்காமல் அடுத்த கட்டத்திற்கு முயன்ற ரீகனது செயல் ஐடாவிற்குள் விழிப்பை உண்டாக்கிட, “டாக்டர் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்னு சொல்லிருக்காங்களே” வெளிவராத சத்தத்தில் முனங்கினாள்.
“ரொம்ப… ரொம்ப… கேர்ஃபுல்லாவே இருக்கலாம்” ஆறுதல் சொன்னவன் அத்தோடு அவளை விடாமல், கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளின் மனதிற்குள் ஓடிய ஆராதனா பற்றிய சிந்தனையை துளித் துளியாக துண்டித்தான்.
அத்தோடும் விடாமல் ஆடைகளுக்குள் நுழைந்த ஊர்ந்து செல்லும் வகை ஜந்தைப்போல விரலால் மேனியெங்கும் ஊடுருவினான். மெய்சிலிர்க்க படுத்திருந்தவளின் மெய்யெங்கும் இதழால் ஒத்தடம் குடுக்கத் துவங்கியிருந்தான்.
ரீகனை உதறிவிட்டு அவளால் ஆராதனா பற்றி யோசிக்க முடியாத அளவிற்கு கணவனது கையில் சிறிது சிறிதாக இளகிக் கரைந்து கொண்டிருந்தாள் ஐடா. அவளையும், குழந்தையையும் சங்கடப்படுத்திடாத வகையில் மென்மையோடு புதுவிதமாகத் தன்னை அணுகியவனின் அருகாமையில் எதையும் அவளால் சிந்தித்து விலக முடியவில்லை.
ஹனி ஹனி எனும் காதல் மந்திரத்தை முணுமுணுத்தபடியே ஐடாவின் அடி வயிற்றில் மென்மையாக முத்தமிட்டவனின் முயற்சியில் உடலெங்கும் கூசிச் சிலிர்த்திட அவனது சிரத்திலிருந்த உச்சி முடியை கரத்தால் கொத்தாகப் பற்றி தனது முகம் நோக்கி அவனை மேலிழுத்தாள் ஐடா.
“என்னாச்சு ரீகனுக்கு இன்னைக்கு!” அந்த மயக்கத்திலும் ஐடா வினவ,
“ஹனி” என்றபடியே அவளின் இதழ்களை கவ்விச் சுவைக்கத் துவங்கியிருந்தான். அவனது இழுப்பிற்கு இசைந்தவள், அவன் விடுவிக்கும்வரை பொறுமையோடு உடன்பட்டாள்.
நீண்ட நேர புற நுகர்வு கூடலில் களைத்தவள், தன்னை விட்டு நீங்கியவனை நெருங்கிப் படுத்து அணைத்தவளின் அணைப்பில் இருந்த வேற்றுமையை முதன் முறையாக உணர்ந்தான் ரீகன்.
அருகே ஒட்டிப் படுத்தால் உறக்கம் வராது என்பவள் இன்று தன்னை நெருங்கி அவளாகவே அவனைக் கட்டிக்கொண்டது ஆச்சர்யம் அவனுக்கு. ஆனால் எதையும் அவளிடம் கேட்காமல் அவனும் அவளை அணைத்தபடியே உறங்க முனைந்தான்.
ஐடாவிற்குள்ளும் அவளறியாமலேயே நிறைய மாறுதல்கள். அதில் தனது விளையாட்டு பொம்மையை யாரும் அபகரித்துக்கொள்வார்களோ எனும் சிறுவயதுக் குழந்தையின் மனநிலையில் இருந்தாள் ஐடா.
விளையாட்டு பொம்மையாக கணவனை உருவகப்படுத்திக் கொண்டவள், ரீகனை தனது கரங்களுக்குள் வைத்துக்கொள்ள எண்ணினாள்.
ஐடாவிற்கு கணவன் உறங்கி நீண்ட நேரம் கடந்தும் உறக்கம் வரவில்லை. கொட்டக் கொட்ட விழித்திருந்தவளுக்குள் ஆராதனா பற்றிய நிறைய கேள்விகள் உதித்தபடியே இருந்தது. அவள் சந்தேகிக்க அவசியமே இல்லாதவளிடம் சந்தேகம் தீப்பொறிபோல பற்றிக் கொண்டு வளரத் துவங்கிட சட்டென ஒரு முடிவெடுத்தாள் ஐடா.
மறுநாள் காலையில் அதனைச் செயல்படுத்த எண்ணி ரீகன் எழும் முன்பே தனது அலுவலக நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் ஐடா.
எழுந்தவன் மனைவியின் தோற்றம் கண்டு புரியாமல் அவளை நோக்க, ஐடாவின் பேச்சைக் கேட்டு முதலில் புரியாமல் விழித்தான். அனுமானித்திராததால் சற்று ஆச்சர்யமாக மனைவியைப் பார்த்தான்.
ஐடாவின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என கணிக்க முடியாதவனாக ரீகனும், நாமும்!
***