உனக்காக ஏதும் செய்வேன்

1662455813139-8e9c65f6

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 9

 

“அந்த காலேஜ்ஜே தான் கெடச்சதா? வேற காலேஜுக்கு போகவே முடியாதோ?”

“சொல்ற பேச்ச கேட்கறதே இல்லை. பொறந்துச்சு பாரு எனக்குனு.”

“உங்க அப்பாட்ட சொல்லி மரியாதையா வேற காலேஜ் போய் சேரு.”

என அவள் அம்மா கற்பகம் காட்டு கத்து கத்திக்கொண்டிருக்க, அவளோ அதைக் கண்டுக்காது, சிப்ஸை சாப்பிட்டபடி டிவியில் படையப்பா படம் ஓடிக் கொண்டிருந்ததை உற்சாகமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்போதும் திட்டுவதுதான். இன்று சற்றே ஜாஸ்தியாக திட்டுகிறார்.

காரணம்… அங்கு சூர்யா வேலை செய்கிறான் என தெரிந்துவிட்டது.

யாராவது திட்டினால் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுவது  வழக்கம் என சிலர் கூறலாம். ஆனால் ப்ரீத்திக்கு இந்த காதுக்குள் வாங்குவதே வழக்கம் அல்ல.

‘நீங்க என்னவோ பேசுங்க. என் காது கேக்காது.’ என்பது போல அவள் பாட்டிற்கு பாடம் பார்க்க…

அப்போது,

சூர்யா பிரகாஷ் வாழ்க

(வட்ட செயலாளர்)

அண்ணன் சூர்யா பிரகாஷ் வாழ்க

(மாவட்ட செயலாளர்)

தலைவர் சூர்யா பிரகாஷ் வாழ்க

(சட்டமன்ற உறுப்பினர்)

மாண்புமிகு அமைச்சர் சூர்யா பிரகாஷ் வாழ்க

(உள்துறை அமைச்சர்)

என படையப்பா படத்தில் வந்த காட்சியைக் கண்டவளுக்கு, பழைய நினைவுகளால் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது.

இந்த சீன் வரும்போது ஒருமுறைக் கூட அவன் அருகில் இருந்தால் கிண்டல் செய்யாமல் விட்டதில்லை.

ஆனால் இப்போது?

பெருமூச்சுவிட்டவளின் சிரிப்பு மட்டுப்பட, அவள் தலையில் நங்கென கொட்டினார் அவள் அன்னை.

“ஸ்…” என முனகியவள், “ஏன் ம்மா?” என கடுப்பாக தலையை தேய்த்துக் கொண்டே கேட்க,

“என்னடி ஏன் ம்மா…? நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ டிவிய பார்த்து சிரிச்சிட்டு இருக்க.” என கோபமாக கேட்டார்.

“ப்ச்…” என்றவள், “என்னதான் ம்மா உன் பிரச்னை ?” என சலிப்பாக வினவினாள்.

“நீ அந்த காலேஜ் போறது நல்லா இல்லை. வேற காலேஜ் போ.”

“ம்மா… சும்மா சும்மா காலேஜ் மாத்திட்டு இருக்க முடியாது. படிப்பு கெட்டு போகும்.” ப்ரீத்தி அப்பாவி போல முகத்தை வைத்துக் கூற,

“ஆமா நீ படிச்சு கிழிச்ச… நீ எதுக்கு அந்த காலேஜ் போறனு எனக்கு தெரியாது பாரு.”

‘தெரியுது இல்லை அப்பறோம் எதுக்கு கேக்கறீங்க.’ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

” தப்பு பண்ணவங்க தனியா இருக்காங்க. அவங்களா தேடிகிட்டது. அங்க நீ போய் சேர்ந்ததால மட்டும் எதும் மாறாது.”

‘அதுலாம் எப்படி உங்களுக்கு தெரியும்?’ என்று அவள் யோசித்தாலும் பதில் பேசாமல் இருக்க,

அவளை அமைதியாக இருப்பதைக் கண்டு இன்னும் முறைத்து பார்த்தவர்,

“தேவையில்லாத வேலை பண்ணாத. இதுலாம் அவங்களுக்கு தெரிஞ்சா எதும் நெனச்சிக்க போறாங்க.” என வேறு விதமாக பேசினார்.

உடனே சுதாரித்தவள், “நான் அங்க படிக்க போறேன். யார் என்ன நெனச்சா எனக்கு என்ன?”

“என்ன ப்ரீத்தி இப்படி பேசற?”

“வேற எப்படி ம்மா பேச?”

“…”

“ம்மா நான் அங்க ஹாஸ்டல் புடிக்கலனுதான் இங்க சேர்ந்தேன். நீயா எதும் கற்பனை பண்ணாத.” என்றாள் சிடுசிடுப்பாக.

“…”

அவள் சொல்வது உண்மையோ என நினைக்கும் அளவு அவள் முகத்தை சீரியஸ்ஸாக வைத்துக்கொண்டு பேசவும்,

‘என்னவோ போ.’ என அரை மனதாக தலையாட்டியவர், அன்று நடந்ததையும், அவன் அப்படி பேசியதையும், நினைத்து பார்த்து அவள் குணம் அறிந்ததால் மேலும் எதும் கூறாமல் சென்றுவிட்டார்.

அவர் அந்த பக்கம் சென்றதும் அப்பாடா என மூச்சுவிட்டவள், ‘நம்ம ஆக்ட்டிங்ல அம்மாவே குழம்பிட்டாங்க.’ என சிரித்துவிட்டு படம் பார்ப்பதை தொடர்ந்தாள்.

 

»»»»

“ஏங்க…” என்று அவள் கூப்பிட இல்லை… கத்த,

“ஏன் மகா இப்படி? காது வலிக்குது.” என காதை பொத்தியவன்,

“கரண்ட் வேற இல்லை… கத்தாத எல்லாருக்கும் கேட்கும் ” என கூறினான்.

“சரி சரி… கத்தல…” என வாய்மேல் கையை வைத்துக்கொண்டு தலையை ஆட்டியபடி ஹஸ்கி வாய்ஸில் அவள் கூறவும் அதைக் கண்டு சிரித்தான்.

“எப்போ ங்க கரண்ட் வரும்?”  என்றாள் கையில் உள்ள ஒரு நோட் அட்டையை விசிறியாக்கி வீசியவாரு,

அந்த கேள்வியில் லைட்டாக கண்டனான். கரண்ட் போனதிலிருந்து இதே கேள்விதான் கேட்கிறாள்.

“ம்ம்…” என இழுத்தவன், “நான் என்ன கரண்ட் ஆபீஸ்லயா வேலை பார்க்கறேன்? என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்.” என்றுவிட்டான்.

அவன் கையிலும் அதே போல ஒரு நோட் அட்டை விசிறியாக அவன் புழுக்கத்தை குறைக்க முயற்சி செய்தது.

அந்த பதிலில் அவனை கொஞ்சம் முறைத்துப் பார்க்க, “இதுக்கு மேல முடியாது. வா மாடிக்கு போவோம்.” என எழ, அவளும் அவனுடன் எழுந்தாள்.

ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு அவர்கள் வாடகை இருந்த வீட்டின் மாடிக்கு சென்றனர்.

போன் லைட் அடித்தவாரு மெதுவாக வந்தவர்கள், தினமும் கூட்டுவதால் தூய்மையாக இருந்த அந்த மாடி தரையில் போர்வையை விரித்து அமர்ந்தனர்.

“மகா… நல்லாருக்குல… இப்படி வந்து வெளிய உட்காந்துட்டு இருக்கறது. கரண்ட் போனாதான் இப்படிலாம் வெளியவே வர தோணுது.” என்றான்.

ஏழு மணி இருள்… வானத்தில் மின்னும் நட்சத்திரம்… அழகான நிலவு… மெல்லிய காற்று என சூழலை ரசித்தவாறு. அவளும் புன்னகையுடன் ஆமோதித்தாள்.

“இப்ப பாட்டு கேட்ட நல்லாருக்கும்ல?” அவன் ரசனையோடு கூற,

உடனே, “ஆமா ங்க.” என்றாள்.

“நீதான் பாடேன்.” அவன் சிரிப்பை அடக்கியவாறே கேட்க,

“எதுக்கு இப்போ சிரிப்பு?” முகத்தை சுருக்கி கடுப்பாக வினவ,

“இல்ல… நீ பாடனா எப்படி இருக்கும்னு நெனச்சேன்… சிரிச்சேன்.” என கூறிவிட்டு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான்.

கணவன் காமெடியில் கடுப்பானவள் அவன் தோளில் இடித்து, “ஆமா… நான் பாடனா நல்லாருக்காது. நீங்க பாடனா அப்டியே யுவன் வாய்ஸ் மாதிரி கேட்டுட்டு மெஸ்மரைஸ் ஆகிருவோம் பாருங்க.” அவனை பதிலுக்கு வார சிரிப்பதை விடுத்தவன்,

“சரி சரி விடு… நான் உன்ன கலாய்ச்சேன். நீ என்ன கலாய்ச்சிட்ட சரியா போகிருச்சு.” என கையை தூக்கி சரண்டர் ஆனான்.

“அது…” என்று விரல் காட்டி கூறியவள் அமைதியாக,

“ஏன் மகா பொதுவா இந்த இடத்துல நம்ம ரெண்டு பேருல ஒருத்தருக்கு வாய்ஸ் நல்லாருந்து பாடுற மாதிரி ஒரு ரொமான்டிக் சீன் வந்துருக்கனும். நல்லாருந்துருக்கும். இந்த கதை எழுதற பொண்ணுக்கு அறிவே இல்லை.” என,

“நம்ம ஆத்தர்ஜீய திட்டாதீங்க. அவங்க இந்த மாதிரி சீன் யோசிச்சாங்கலாம்.”

“இப்போ உங்களுக்கு சாங் கேட்கணும் அவ்ளோதான. ஒரு சிட்டுவேஷன் சொல்வோம் அதுக்கு எனக்கு நீங்க ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுங்க. நான் உங்களுக்கு பாட்டு டெடிகேட் பண்றேன்.” ஐடியா சொல்ல…

அதை கேட்டு, “ஐ… இது நல்லாருக்கே.” என்றுவிட்டு போனை எடுக்க, அவளும் எடுத்துக் கொண்டாள்.

»»»»

லவ்னு புரிஞ்ச அப்பறோம் பாக்குறப்போ…

அவன்…

 

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது

எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது

 

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்

இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்

இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்

அடி எனக்காக நீயும் வந்தாய்

 

வெட்க சிரிப்புடன் அதை ஏற்றவள் அவனுக்கான பாடலை போட்டாள்.

அவள்…

 

என்னை உனக்குள்ளே

தொலைத்தேன் ஏனோ தெரியல

உன்னை கண்ட நொடி ஏனோ

இன்னும் நகரல உந்தன் ரசிகை

நானும் உனக்கேன் புரியவில்லை

 

எத்தனை ஆண்கள்

கடந்து வந்தேன் எவனையும்

பிடிக்கவில்லை இருபது வருடம்

உன்னைப்போல் எவனும்

என்னையும் மயக்கவில்லை

 

என்ற பாட்டை கேட்டவன், “ஆஹான்…” என்றுவிட்டு அவனவளை பார்த்து கண்ணடிக்க, வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டாள்.

லவ் பண்ணுமோது பார்க்க முடியாம  இருந்தப்போ…

 

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்

நீ என்னை நீங்கிச் சென்றாலே

வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்

நீ எந்தன் பக்கம் நின்றாலே

 

என்ற பாட்டை கேட்டவள் அழகான புன்னகையை சிந்திவிட்டு, அவனுக்கான பாடலை போட்டாள்,

 

ஓர்நாள் உன்னை

நானும் காணாவிட்டால்

என் வாழ்வில் அந்த நாளே

இல்லை.

 

ஓ… ஓர்நாள் உன்னை

நானும் பார்த்தே விட்டால்

அந்நாளின் நீளம் போதவில்லை.

 

அதை கேட்டு அவனும் ஒரு வசீகரமான புன்னகையை வெளிப்படுத்தினான்.

இந்த பாட்ட நமக்குன்னே எழுதிருக்காங்கன்ற மாதிரி இருக்குனு தோணுற சாங்…

 

உன் மனசுல

உன் மனசுல எத்தன

பேருன்னு கேட்டா

நான் ஒருத்தி தான்னு

சொல்லனுன்டா

 

அடி உன்

மனசுக்கும் என்

மனசுக்கும் எத்தன

தூரமுன்னு பார்த்தா

நூலளவு கூட இல்லையடி

 

நீ என்னத்தான்

விட்டுப்போகாதே ஏய்

போனாத்தான் உயிரு

வாழாதே

 

அதை கேட்டு, “போஸசீவ் குயின்.” என அவள் கன்னம் பிடித்து கொஞ்சியவன், அவளுக்கான பாட்டை போட்டான்.

 

ஏதோ மாறுதே

போதை ஏறுதே

உன்ன பார்கையில

 

ஏதோ ஆகுதே

எல்லாம் சேருதே

கொஞ்சம் சிரிக்கையில

 

என்ன தாண்டி போனா

கண்ண காட்டி போனா

என்ன தாண்டி போனா…ஆ 

கண்ண காட்டி போகும்போதே

என்ன அவ கொண்டு போனா

சண்டகாரி நீதான்

என் சண்டகோழி நீதான்

சத்தியமா இனிமேல்

என் சொந்தமெல்லாம் நீதான்

 

என பாட்டு வர அதை ரசித்தாலும், “நான் சண்டக்காரியா?” என அவனை அடிக்கவும் அவன் எழுந்து ஓட, அவள் துரத்த ஆரம்பித்தாள்.

“பாத்தியா உண்மைய தானடி சொன்னேன்.” என கூறியவன், ஓட்டத்தை நிறுத்தி லாவகமாக அவள் பின் சென்று மென்மையாக அணைத்துக் கொண்டான்.

அதில் அவள் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து நாணம் ஒட்டிக்கொள்ள,

“ப்ச்… சூர்யா… நாம மாடியில இருக்கோம்.” என்றாள் தவிப்பாக,

‘அப்டியே கீழ ரூம்ல இருந்துட்டா மட்டும்.’ பெருமூச்சுவிட்டவன், அவளை மேலும் தவிக்கவிடாமல் அங்கிருந்த சுவரில் அமர வைத்து அவனும் உட்கார்ந்தான்.

“சரி இப்போ கல்யாணம் பண்ண அப்புறம் நம்ம லவ்வுக்கு ஒரு பாட்டு. ரெண்டு பேரும் ஒட்டுகா போடணும். நீ என்ன நெனைக்கிற, நான் என்ன நெனைக்கிறேன்னு பார்க்கலாம்.” என்றுவிட்டு பாடலை போட்டனர்.

 

மலை கோவில் விளக்காக

ஒளியா வந்தவளே

மனசோடு தொலைபோட்டு

என்னையே கண்டவளே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

………

அடகாத்து உன்னை நானும்

சுகமா வெச்சுகிறேன்

ஒண்ணாய் சேர பொறந்தேன்னு

என்ன நான் மெச்சிகிறேன்

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

 

என இருவரும் ஒரே பாடலைப் போட அதை கேட்டவர்களுக்கு அத்தனை ஆச்சர்யமும் பூரிப்பும்.

சுற்றம் மறந்தவள் கணவன் தோளில் உரிமையாய் சாய்ந்து கொள்ள, அவளை அன்பாக அணைத்துக்கொண்டான். என்றைக்குமான அணைப்பு!

 

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!