உன் காதல் என் தேடல்

உன் காதல் என் தேடல்

தேடல் – 18

 

ரம்யா நிலா தனக்கு மருமகளாக வருவதற்குச் சம்மதித்தால்,

அபிநந்தன், மதிநிலா கல்யாணத்திற்கு அனைவரும் ஒத்துக் கொள்வதாக சொல்ல, தவித்துப் போன நிலா, மாப்பிள்ளை யாரென்று தெரியாமல் துருவ்வை தவிப்பாய் பார்க்க அவனோ சித்தி தனக்காகத் தான் நிலாவுக்கு இப்டி ஒரு செக் வைத்திருக்கிறார் என்று புரிந்து, அம்மாவுக்காக நிலா தன்னை வேண்டாம் என்று சொன்ன கோவத்தில் அவளை முறைத்துக் கொண்டு கல்லாக நிற்க, அவள் அபிநந்தனை துணைக்கு அழைக்க, அவரோ ரம்யாவிற்கு ஆதரவாகப் பேச நிலா ஏற்கனவே துருவ் தனக்கில்லை என்ற வருத்தத்தில் இருந்தவள்… இப்போது அபிநந்தனும் இப்படிச் சொல்ல தன் இயலாமையை நினைத்துக் கலங்கியவள் தன் மொத்தக் கோபத்தையும் நந்தன் மீது கொட்டி விட்டாள்.

 

தன் மாமாவை நிலா கண்டபடி பேசியதை பொறுக்க முடியாத துருவ், “யார பார்த்து என்னடி சொன்ன”? என்று நிலா கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டான்.

 

“உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, என் அபிய தப்பா பேசுவ? அவர பத்தி உனக்கு என்னடி தெரியும்? ஓகே நா ஒத்துக்குறேன், உங்க அம்மா கிரேட் தான். ஐ அக்செப்ட்… ஆனா, அதுக்காக நீ என் அபியோட காதலை அண்டர் எஸ்டிமேட் பண்ணாத. உனக்கு உங்கம்மா காதல் உசத்தின்னா எனக்கு என் அபியோட லவ் தான் பெரிசு. உங்கம்மா காதலுக்கு எந்த வகையிலும் என் மாமாவோட காதல் கொறஞ்சதில்லடி” என்று துருவ் ஆவேசத்தில் கத்த, அதுவரை துருவ் அடித்ததில் சிவந்திருந்த தன் கன்னத்தைக் கரம் அழுத்தி பிடித்தபடி விசும்பிக் கொண்டிருந்தவள்…

 

சட்டென திரும்பி துருவ்வை பார்த்து. அவன் சட்டையை பிடித்து தன் முகத்திற்கு நேராக கொண்டு வந்தவள்…

 

 

“ஏய்! ஏய்! நீ இப்ப நந்தன் சார நீ என்னன்னு சொன்ன? என்ன சொன்ன? நீ அவர மாமான்னு தானா சொன்ன? ஏன் நீ அப்பாவை மாமான்னு சொல்ற? ஏன் அப்டி சொன்ன? அவரு…அவரு… உனக்கு” என்றவள் திடீர் என்று ஏற்பட்ட அதிர்ச்சியில் வார்த்தைகளைக் கோர்வையாக பேச முடியாது தவித்துத் திக்கி திக்கி பேச.

 

அவள் தவித்துத் துடிக்கும் உதட்டையும், எதிர்பார்ப்போடு அவன் பதிலுக்காகக் காத்திருக்கும் கண்ணீர் நிறைந்திருந்த அவள் விழிகளையும் பார்த்த, துருவ்விற்கு அதுவரை அவள் மீதிருந்த மொத்தக் கோபமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. அவள் கன்னங்களை, தன் இரு கைகளால் பிடித்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை நிலைப்படுத்தியவன், “அவர நான் மாமா தான் கூப்டேன். நா அப்படித் தான்டி கூப்பிடனும். ஏன்னா? அவர் என்னோட தாய்மாமாடி. என்னோட அம்மா அகல்யாவோட கூடப் பொறந்த அண்ணன்” என்று அவள் நெற்றியில் துருவ் செல்லமாக முட்ட நிலா ஸ்லோ மோஷனில் இமைகளைத் திறந்து மூடி துருவ்வைப் பார்க்க அகல்யா நிலா தலையை அன்பாக வருடியவர், “ஆமா நிலா… துருவ் என் பையன் தான். நீ சொன்ன மாதிரி துருவ் அம்மா சாகலம்மா. இதோ உன் கண்ணு முன்னாடி குத்துக் கல்லாட்டம் நிக்குறேன் பாரு. நா தான் அவனைப் பெத்தவ” என்று சிரித்துக் கொண்டே சொல்ல. 

 

நிலா துருவ்வையும், அகல்யாவையும் மாறி மாறிப் பார்த்தவள் சட்டென் துருவ்வை விட்டு விலகி ரம்யாவிடம் சென்று, “ஆன்ட்டி நீங்க கேட்டதுக்கு எனக்கு ஓகே. நா உங்க வீட்டுக்கு மருமகளா வரேன். ஆனா, எனக்கு துருவ்வை கல்யாணம் கட்டி வைங்க ஆன்ட்டி. நா உங்களுக்கு மருமகளா இருந்தா என்ன? உங்க அக்காக்கு மருமகளா இருந்த என்ன? துருவ்வும் உங்க பையன் மாதிரி தான. யாழி ரொம்ப நல்ல பொண்ணு ஆன்ட்டி. கார்த்திக்கு நீங்க அவளக் கட்டி வைங்க ஆன்ட்டி. ப்ளீஸ் ஆன்ட்டி ப்ளீஸ்” என்று கண்ணைச் சுருக்கி உதட்டைக் குவித்துக் கெஞ்சும் நிலாவை அந்த நேரம் பார்க்க அப்படியே சாக்லேட்டுக்காக அம்மாவிடம் கெஞ்சும் குட்டி பாப்பா போன்று தான் அனைவர் கண்ணிற்கும் தெரிந்தாள்.

 

ரம்யா இடுப்பில் கைவைத்து நிலாவை முறைத்தபடியே இருக்க “ஏய் ரம்யா, போதும் வெளையாட்டு. பாவம் எம் பொண்ணு, ஏற்கனவே என்னால ரொம்ப அழுதுட்டா. நீயும் அழ வைக்காத” என்ற நந்தன் நிலாவின் கையை ஆதரவாகப் பிடித்தவர் “நிலாம்மா நீ பயப்படாத, உனக்கும் துருவ்வுக்கும் தான் கல்யாணம். உன்னோட துருவ் உனக்குத் தான். இது இந்த அப்பாவோட ப்ராமிஸ்” என்று அவள் தலைமுடியைக் கலைத்துச் சிரிக்க நிலா அவரையே உற்றுப் பார்த்தவள், “அப்ப உங்களுக்கு? நீங்களும் அம்மா மாதிரியே கல்யாணம்” என்றவள் அவரைக் கேள்வியாகப் பார்த்தாள்.

 

மதிநிலாவிடம் அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தையைத் தான் நந்தன் முகில்நிலாவிடம் சொன்னார். “தோணல டா. நிலாவைப் பார்த்து ரசித்த என் கண்களின் பார்வை மின்னி மறையும் நட்சத்திரங்களைப் பார்க்காது. என் மதி இருந்த இடத்துல இன்னொருத்தியா? ம்ஹூம் சான்சே இல்ல. எப்டி வானத்துக்கு ஒரு நிலவோ என் வாழ்க்கைகும் ஒரு நிலவு தான். அது என் மதிநிலா.”

 

“என் அப்பா, அதான் நீ சொன்ன அந்த வில்லன் மதிக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னத நா நம்பல தான். ஆனா, என் அப்பா முன்னாடி அதை நம்புன மாதிரி நடிச்சேன். அப்ப தான் அந்த ஆள்கிட்ட இருந்து என் மதியை காப்பாத்த முடியும்னு தான் அப்படிச் செஞ்சேன். எனக்கு நல்லா தெரியும் சேது ரொம்ப நல்லவர். அவர் மதியை ஒரு கொழந்த மாதிரி தான் பாத்துக்கிட்டாரு. அவரு போய் அவள கல்யாணம்… அதுக்கு வாய்ப்பே இல்ல. ஒரு வேளை சேது மதி கல்யாணம் செஞ்சிருந்தாலும் அது என் மதியை எங்கப்பன் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக தான் இருந்திருக்குமே தவிர சேது நெனப்புல கூடக் கலங்கம் இருக்காதுன்னு எனக்கு நிச்சயமா தெரியும். உன்னோட அப்பா அவ்வளவு நல்லா மனுஷன் நிலா. உனக்கு அப்படியே அவர் குணம்” என்று பெருமையாக நிலாவைப் பார்த்தவர், “அதுக்கு அப்றம் எப்படியோ என்னோட மதி எங்கயோ பாதுகாப்பா இருக்கான்ற அந்த ஒரு நிம்மதியில தான் இந்த நிமிஷம் வரை என் மூச்சை பிடிச்சு வச்சிருக்கேன்.”

 

“அதுக்கு அப்புறம் நீங்க அம்மாவ தேடவே இல்லையா?” என்ற நிலாவின் கேள்விக்கு “இல்லை” என்று தலையை ஆட்ட மட்டும் தான் முடிந்தது நந்தனால்.

 

“அன்னைக்கு அப்றம் மதி முகத்தை நா பார்க்கவே இல்லை நிலா. ஆனா, அவ நெனப்புல தான் என்னோட வாழ்க்கையே ஓடுது. மதி ஊர விட்டுப் போனதும் என்னால அங்க இருக்க முடியல. அடுத்த வாரமே நா சிங்கப்பூர் போய்ட்டேன். அங்கேயே படிப்ப முடிச்சி பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணேன். இந்தியா பக்கம் கூட நா எட்டிப் பாக்கல. அப்ப தான் அகல்யா, ரம்யா ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குன்னு அம்மா ஃபோன் பண்ணாங்க. அந்த ஆள் எனக்குப் பண்ண துரோகத்துக்கு என் தங்கச்சிங்க என்ன செய்வாங்க. அந்த ஆள் மேல இருக்க வெறுப்புல நா என் தங்கச்சிங்களுக்கு அண்ணன்றத மறந்துடா முடியாதே. அவங்களுக்காக இந்தியா வந்தேன். கல்யாணம் நல்லபடியா முஞ்சுது. அந்த நேரம் பார்த்து மிஸ்டர்.முத்துவேலுக்குக் கை, கால் இழுத்துக்கிச்சு” என்று நந்தன் சொல்ல, “ம்ம்ம் இழுக்காம என்ன ஆகும்? அந்தக் காட்டுபூனை எங்கம்மாக்கு செஞ்ச தப்புக்கு இன்னும் என்னென்னமோ இழுத்து இருக்கணும். இப்ப மட்டும் அந்த ஆள் உயிரோட இருந்திருந்தா சொத்தை வித்தாவது, காசு குடுத்து கொரோனா வைரஸ் ஒரு டப்பா வாங்கி அந்த ஆளு வாயாத் தொறந்து கொட்டி இருப்பேன். இம்சை எஸ்கேப் ஆகிடுச்சு” என்று முணுமுணுக்க அது நந்தன் காதில் விழுந்து அவர் சிரிக்க, “ஓய் என்ன இருந்தாலும் அவர் என்னோட தாத்தா. மருவாதி, மருவாதி” என்று துருவ் நிலா தலையில் செல்லமாகக் கொட்ட “அதெல்லாம் தர முடியாது போடா” என்றவள் சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டு அகல்யாவைப் பார்க்க அவள் விரலை நீட்டி மிரட்டுவது போல் பார்க்க மீண்டும் தன் குழந்தைத் தனமான கொஞ்சும் முகத்தைக் காட்டி அகல்யாவை ஆஃப் செய்த நிலா, “அப்றம் என்ன ஆச்சு சார்? உங்க அந்தக் கேடி… ச்சே டாடி என்ன செஞ்சாரு?”

 

“ம்ம்ம்” என்று பெருமூச்சு விட்ட நந்தன் “இன்னும் நா சார் தானா”? என்று ஏக்கமாக கேட்க, “சாரி சார் பழகிடுச்சு. சட்டுன்னு மாத்த முடியல. சீக்கிரமே அப்பான்னு கூப்ட பழகிக்குறேன். நீங்க ஸ்டோரிய சொல்லுங்க.”

 

“வேற என்ன அவருக்கு உடம்பு முடியாம போச்சு. சோ வீட்டுப் பொறுப்பு என் கைக்கு வந்துச்சு. ரகுவோட, அகல்யா, ரம்யா ரெண்டு பேர் வீட்டுக்காரங்களும் எனக்குத் துணையா இருந்தாங்க. அந்த வில்லன் எனக்கு கல்யாணம் செய்ய, தலைகீழா நின்னு டான்ஸ் ஆடிப் பாத்தாரு. ஆனா, நா ஒத்துக்கல. அதுக்கு அப்புறம் தான் அகல்யாக்கு துருவ் பொறந்தான். அவனை முதல் முதல்ல கையில் வாங்குன நிமிஷம் எனக்கு உள்ளுக்குள்ள அப்டி ஒரு சந்தோஷம். மதி எங்களுக்குப் பொறக்கப்போற பையனுக்கு வைக்க ஆசப்பட்ட துருவ்நந்தன் பேரயே இவனுக்கு வச்சேன். என்னோட வாரிசா இவனை ஆக்கிட்டேன். மிஸ்டர்.முத்துவேல் லேட் முத்துவேலா ஆனாரு. அவர் இறந்த கொஞ்ச நாள்ல அம்மாவும் போய்ட்டாங்க. அதுக்குப் பிறகு அந்த ஊர்ல இருந்த மொத்த சொத்தையும் வித்துட்டு இங்க வந்தோம். இங்க இருக்க எல்லாப் பொறுப்பையும் இவங்க கிட்ட கொடுத்துட்டு நா சிங்கப்பூர் போய்ட்டேன். எப்பவாது தான் இந்தியா வருவேன். அப்ப சொந்த ஊருக்கு போய் நானும் மதி சுத்தி திரிஞ்ச இடத்துல எல்லாம் கொஞ்ச நேரம் இருந்துட்டு வருவேன். அவள பத்தி விசாரிச்சுப் பார்த்தேன். ஆனா, ஒரு வெவரமும் தெரியல. அப்படியே வருஷமும் ஓடிப்போச்சு‌. இப்ப எம் பொண்ணு வந்து தான் என் மதி எனக்குத் திரும்பக் கெடைக்கணும்னு இருந்திருக்கு” என்றவரை இறுக்கி அணைத்த நிலா கதறி அழுது விட்டாள்.

 

“ஏன்ப்பா ஏன் இப்படி? ஏன் கடவுள் உங்கள பிரிச்சு வச்சாரு. உண்மையான காதலை ஏன் சாமி பிரிக்கணும். அந்த சாமி ரொம்ப பேட்ப்பா. அம்மா மாதிரியே நீங்களும் பாவம்ப்பா” என்று அவள் மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி குழந்தை போல் அழ “நிலாம்மா நீ என்ன அப்பான்னு கூப்ட்டுட்ட” என்று நந்தன் சந்தோஷமாகச் சொல்ல அவர் நெஞ்சில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த நிலா கண் துடைத்து நிமிர்ந்து அவரைப் பார்த்தவள் “ஆமா அப்படித் தான் கூப்டுவேன். அப்பாவ அப்பான்னு தான கூப்டணும். இது கூட தெரியலயேப்பா உங்களுக்கு” என்று அவள் சிரிக்க நந்தனும் வாய்விட்டுச் சிரித்தார். பல வருஷம் கழித்துத் தன் தமையன் முகத்தில் உண்மைச் சிரிப்பைப் பார்த்த மொத்தக் குடும்பத்தின் விழிகளும் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தது. அதற்குக் காரணமான நிலாவை தங்கள் வீட்டிற்குக் கிடைத்த தேவதையாகவே பார்த்தனர். யாழினிக்கு தன் தோழியின் மகிழ்ச்சி தவழும் முகத்தைப் பார்த்து மனது நிறைந்து விட்டது.

 

அதன் பின் மொத்தக் குடும்பமும் மதியை எப்படிக் கவுப்பது என்று சதி திட்டம் தீட்ட, மிஷன் மதிநிலா ஸ்டார்ட் ஆனது. “அண்ணா நம்ம முதல்ல நம்ம துருவ், நிலா கல்யாணத்தை முடிச்சிட்டுவோம். அதை சாக்கா வச்சு எப்படியாது அண்ணிய நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடுவோம். ஏன்னா இப்ப அவங்கிட்ட உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டா, தலைக்கு உசந்த பொண்ணை வச்சிட்டு என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்ல வாய்ப்பிருக்கு. சோ நம்ம இவங்க கல்யாணத்தை முதல்ல முடிச்சு அந்த ஓட்டய பூசி மொழிகிடுவோம். அப்றம் அவங்களை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டு நம்ம மத்த வேலைய பாப்போம். அதுல உன்னோட பார்ட் தான் ரொம்ப முக்கியம். அவங்களைப் பழைய உன்னோட மதியா மாத்த வேண்டியது உன் பொறுப்பு. மானே, தேனே, பொன்மானேன்னு ஏதாவது செஞ்சு அவங்கள கவுத்துடனும். என்ன எல்லாருக்கும் ப்ளான் ஓகேவா” என்று ரம்யா கேட்க “எங்க எல்லாருக்கும் ஒகே” என்று அனைவரும் கை தூக்க, “எனக்கு டபுள் ஓகே” என்று துருவ் கத்த அனைவரும் அவனை ஒரு மாதிரிப் பார்க்க, அசடு வழிந்த துருவ் முகத்தைப் பார்த்து எல்லாரும் வெடித்துச் சிரிக்க, சிரிக்கும் யாழினியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

 

யாழினியைக் கையைப் பிடித்து இழுத்து வந்த கார்த்திக் தன் அறையில் தள்ளிவிட்டு கதவை மூடிவிட, “டேய் என்ன பண்ற நீ? எதுக்கு இப்ப கதவ மூடுன? வெளிய இருக்கவங்க என்ன நெனப்பாங்க. முதல்ல கதவத் திற” என்றவள் கதவில் கையை வைக்க அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்த கார்த்திக், “நீ என்ன லவ் பண்றியா யாழ்”? என்று நேரடியாகக் கேட்க, அதுவரை விரைப்பாக நெஞ்சை நிமிர்த்தி நின்ற யாழினியை வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, கார்த்திக்கை நேராகப் பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் “ஆமாம்” என்று தலையை மேலும் கீழும் ஆட்ட, கார்த்திக்கு உள்ளுக்குள் சந்தோஷம் குற்றாலம் அருவி மாதிரி கொட்டினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், “அப்றம் ஏன்டி இத்தன நாள்ல இத என் கிட்ட சொல்லல” என்ற அவன் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது யாழினி தவிக்க, “நிலாக்காகத் தான என்னை வேணாம்னு சொன்ன”? என்று இறுக்கமான குரலில் கேட்க, யாழினிக்கு அவன் குரலில் இருந்த மாற்றம் பயத்தைத் தர மெதுவாக எச்சிலை விழுங்கியவள் “ஆமா” என்று தலையாட்ட, யாழினியை உதறிவிட்டு அவளை விட்டுத் தள்ளி வந்தவன் “இப்ப நா சொல்றேன் நீ எனக்கு வேணாம். இங்க இருந்து போ” என்று வாசலை நோக்கி கை காட்ட யாழினி அவனையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தவள் “நா சொல்றத ஒரு நிமிஷம் கேளு கார்த்தி” என்றவளை கை காட்டி “போதும் நிறுத்து யாழ். நிலாக்காக என்னை வேணாம்னு சொல்லி நீ என்னை மட்டும் இல்ல என்னோட காதலையும் கேவலப்படுத்திட்ட. இனி நீ எனக்கு வேணாம்.”

 

“கார்த்திக் நா சொல்றத ஒரு செகண்ட் கேளு”

 

“தேவை இல்லடி. நீ சொல்றத கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. நீ என்ன சொல்றது நா என்ன கேக்குறது”? என்றவன் கன்னத்தைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்க, யாழினி கார்த்திக்கைத் தீயாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

கார்த்திக், “இப்ப நீ என்ன அடிச்சயா?”

 

“ஏன் சரியாபடலயா?? வேணும்னா இன்னொரு அற விடவா” என்றவளை முறைத்த கார்த்திக், “இப்ப எதுக்குடி என்ன அடிச்ச”?

 

“ம்ம்ம் அடிக்காம பின்ன கொஞ்சுவாங்களாக்கும். நானும் அப்ப புடிச்சு நா சொல்றத கேளு, கேளுன்னு கத்திட்டிருக்கேன். நீ பாட்டுக்குத் தய்யதக்கா தய்யதக்கா குதிச்சுட்டு இருக்க” என்று அவனை வறுத்தெடுத்தவள், “இப்ப என்ன உனக்கு நா வேணாம் அவ்ளோ தான ஓகே விட்டுடு. அதுக்கு ஏன் கெடந்து கத்திட்டு இருக்க. உனக்கு நா வேணாம். சோ எனக்கு நீ வேணாம். அவ்ளோதான் முடிஞ்சு போச்சு. லெட் அஸ் பி ய குட் ப்ரண்ட்ஸ் மேன். எங்க வீட்ல எனக்குக் கல்யாணத்துக்கு மாப்புள்ள பாக்றாங்க. நா உனக்காகத் தான் எல்லாத்தைம் அவாய்ட் பண்ணேன். இப்ப தான் உனக்கு நா வேணாம்னு நீயே சொல்லிட்டியே. சோ வீட்ல பாக்குற பையனையே கட்டிக்குறேன் சிம்பிள். இன்விடேஷன் வைக்குறேன். மறக்காம கல்யாணத்துக்கு வந்து மெய் எழுதிட்டுப் போ” என்று கார்த்திக் கன்னத்தைச் செல்லமாகத் தட்டியவள், “வரட்டா டா, சின்னப் பையா” என்று அவன் ரூமை விட்டு வெளியே வந்தவள் “எங்க வந்து யார் கிட்ட சீன் போட்றடா நீ? இந்த யாழினிக்கே படம் காட்றயா? இருடி உன்னை எப்டி அலையவிடுறேன்னு மட்டும் பாரு. நா உனக்கு வேணாவா? என்னை விட்டு இன்னொருத்திய கட்டிக்குவியா நீ? இந்த ஜென்மத்தில் நீ எனக்கு மட்டும் தான். இந்த யாழினி கிட்ட இருந்து உன்னை யாரலயும் காப்பாத்த முடியாது” என்றவள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து செல்ல பாவம் கார்த்திக் தான் அவள் சொன்னதைக் கேட்டு கதிகலங்கி நின்றான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!