உள்ளத்தின் காதல் நீங்காதடி-5

உள்ளத்தின் காதல் நீங்காதடி-5

காதல் – மெல்லிய உணர்வு. வெட்கம் அதில் ஒரு அங்கம். ஒரு மனிதனைப் புதிதாகப் பிறக்க வைக்கவும் அதனால் முடியும்! காதல் எதற்கும் துணியும். 

 

காதல்-5 

 

அவன் கேட்ட பொருளால் அதிர்ந்து நின்றவளுக்கோ, பயத்தில் பேச்சு வரவில்லை. அடுத்து என்ன சொல்லிச் சமாளிக்கலாம் என்பதை யோசிக்கலாம் என்றால், அவள் மூலையோ வேலை நிறுத்தம் அல்லவா செய்திருந்தது! 

 

மறுபடியும் அவன் அதைக் கேட்டான், “உங்க ஐடி கார்டைக் காட்டிட்டு போங்க மிஸ் ஆர் மிஸஸ் வாட் எவர்.” 

 

“அது… அது… என்ன கேட்டிங்க?” 

 

“ஏன் காது எதுவும் கேக்காதா? எனி பிராப்ளம்? உங்க ஐடிய காட்டிட்டு போங்க!” 

 

“அது வந்து… நான் ஐடி எடுத்திட்டு வரல!” 

 

“என்ன? ஒரு பொறுப்பான மருத்துவம் படிச்சுட்டு இருக்குற பட்டதாரி பெண், ஐடி இல்லாம காலேஜ் போறிங்களா? ஐடி இல்லாம உங்கள உள்ளதான் விடுவாங்களா?” 

 

“வி…டு…வாங்…க” 

 

“மிஸ்… வாட் எவர்? ஐ எம் நாட் அட் ஆல் எ பூல். ஹியர் டூ டிரஸ்ட் யூ, பெட்டர் ஜஸ்ட் கிவ் மீ யுவர் ஐடி” இவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. 

 

எனினும், ஐடிய எடுத்துக் கொடுத்து விட்டாள், அவள் மீரா இல்லையே! 

 

“இங்க பாருங்க மிஸ்டர்… வாட் எவர்(அவனைப் போலவே சொல்றாளாம்) 

 

“நீங்க யாரு என்னைக் கேட்க? டோன்ட் சே மீ தட் யூ ஆர் எ போலீஸ் ஆபிசர்”

 

 “தென்?” அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த டிராபிக் இன்ஸ்பெக்டரிடம், 

 

“சார் நீங்கத்தான் சரியான ஆளு, நீங்களே என்ன போகச் சொல்லிடீங்க? உங்க ஜூனியர் என்னைக் கேள்வி கேக்குறாரு பாத்துட்டு நிக்குறீங்க?” 

 

“எதேய் ஜுனியரா? நீ வேற ஏன்மா கொஞ்சம் சும்மா இரேன்” 

 

“ஓ ஜுனியர் இல்லையா ? அப்போ கான்ஸ்டபிளா?” 

 

“என்னாது? கான்ஸ்டபிளாவா?” 

 

“அட, நீங்க என்ன சார் இப்படி பயந்த சுபாவமா இருக்கீங்க? ம், கேளுங்க சார்? நீங்களே நான் போக அனுமதி கொடுத்துடீங்க, கண்ட…(கண்டவங்க என்று சொல்லபோனவள் இவன் உனக்குக் கண்டவனா? என்று அவளது மனம் கேட்ட கேள்வியில், அதை விடுத்து) இவரு ஏன் ஐடி லாம் கேக்குறாரு?” 

 

“இங்க பாருங்க, ரொம்ப ஓவராவே பேசிடீங்க? காவல் அதிகாரியா பொருத்த வர, இந்தத் துறைய சேர்ந்தவங்க, அந்தத் துறையோட வேலையை மட்டும்தான் பண்ணனும், அத பண்ணக் கூடாது, இத பண்ணக்கூடாதுனுலாம் கிடையாது. தேவையான இடத்துல தேவையான ஆட்கள் குறையும்போது இறங்கி வேலை பார்ப்போம்! பசி, பட்டினி, தூக்கம், இமோசன், சென்டிமெண்டுனு எங்களுக்கு எதுவும் அந்தத் தேவையா இருந்தாளும், அந்த இடத்துல அதை மறந்திட்டு வேலை செய்வோம். அது சரி இதுலாம் எதுக்கு நான் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன்? இங்க பாருங்க, ஒன்னு ஐடிய கொடுங்க இல்ல லைசன்ஸ கொடுங்க? எங்களுக்கு வேற வேலை வெட்டி இல்லனு நினச்சீங்களா? இவ்ளோ நேரம் உங்ககிட்ட நான் மரியாதையாதானே பேசிட்டு இருக்கேன். நான் ஒரு ஏ.சி.பி. பட் அதுக்கான ரெஸ்பெக்ட் நீங்க எனக்குக் கொடுக்கிற மாறித் தெரியல” 

 

பக்கத்தில் உள்ள டிராபிக் அதிகாரியிடம்,”ஜே.சி.பி தெரியும், அது என்ன சார் ஏ.சி.பி என்று வேறு கேட்டுவிட” 

 

அது அவனுக்குமே கேட்கத்தான் செய்தது. அவனுக்கோ, பெண்களே இப்படிதான் போல, வாயாடத்தான் லாயிக்கு, காலங்காத்தாலே இப்படி கடுப்படித்து கொண்டிருக்கிறாள் என்று அவளை முடிந்த மட்டும் முறைத்து பார்க்க, 

 

“உடனே அவரு அஸ்ஸிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலிஸ் மா” என்றிட, 

 

‘ஆத்தாடி, அடியே பக்கி, பன்னாட’ என்று தன்னைதானே மனதில் வருத்துக்கொண்டவள், ‘இவ்ளோ பெரிய ஆபிசர் கிட்டயா வம்பிழுத்தோம், செத்தோம், அடியேய் மீரா வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்து தொலைக்க வேண்டியதுதானே!’ என்று கடிந்துக்கொண்டாள். 

 

“இங்க பாருங்க மிஸ், உங்க ஐடி உங்க பேக்லதான் இருக்குனு எனக்கு நல்லாவே தெரியும். நீங்களே எடுத்துக் கொடுத்திடுங்க, அதை எடுக்க எனக்கு ஒரு செகண்ட் போதும். பட், அதை நான் பண்றது உங்க கையிலதான் இருக்கு!” 

 

இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவளோ, ஐடியை எடுத்துக் கொடுத்துவிட்டாள். அதை வாங்கி பார்த்தவனோ,(‘ஒரு நிமிடம் அதிர்ந்தான்,அப்படி இருக்குமோ என்று ஒரு நிமிடம் மனது கேள்வி கேட்டது,எதையும் உரிதியாய் தெரியாமல் எந்த முடிவு எடுக்க கூடாது என்பது நான் கத்துக்கொண்ட பாடம்’அதை ஒதிக்கியவன்,முதலில் தன் கடமைக்கு வந்தான்.) மிகவும் அழுத்தமான பார்வையோடும், கண்டிப்பான குரலோடும்,

 

“சோ, எல்லாமே பொய். ஆர்ட்ஸ் காலேஜ் எப்போ மெடிக்கல் காலேஜ் ஆச்சுனு சொல்றீங்களா? மிஸ்!” அவளிடம் பதில் இல்லை. அவன்மேல் இருந்த கோபத்தோடு இதுவும் சேர்ந்துக்கொள்ள வார்த்தையை விட்டாள். 

 

“எதுக்கு இப்போ இப்படி பேசிட்டு இருக்கீங்க, பைன் எவ்ளோனு சொல்லுங்க? கொடுத்திட்டு கிளம்பறேன்”. 

 

“ம், வெல் இதை நீங்க முதல்ல சொல்லி இருந்தா அத நான் யோசிச்சிருப்பேன்! இப்போ வேற வழி இல்ல.” 

 

“புரியல?” 

 

“நீங்க இப்போ போய் உங்க லைசன்ஸ எடுத்திட்டு வாங்க. நடந்தே போய்ட்டு வரனும்” என்றவனோ அவள் வண்டியின் சாவியையும் எடுத்து விட்டான். 

 

“என்னாது? என்ன விளையாடுறீங்களா? இங்க இருந்து என் வீட்டிற்கு இரண்டு கிலோ மீட்டர். அதோட நீங்கப் பேசுறத கேக்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை” என்றாள். 

 

“ஓ, வெல் உங்க வண்டி சாவியை உங்க கிட்ட கொடுகிற ஐடியா எனக்குமே இல்ல” என்றான். 

 

‘ஐயோ இவனை!படுத்துறானே, என்ன பண்ணுவேன் சரி அந்தப் பக்கமா போய் ஆட்டோ பிடித்து வீட்டிற்கு போய்க்கலாம்’ என மனதில் திட்டம் வகுத்தவள், 

 

“சரிங்க, நான் போய் லைசென்ஸ எடுத்திட்டு வந்துரேன்” என்றாள். 

 

‘திடீர்னு இவ இப்படி ஒத்துக்கிட்டா?’ என யோசித்த உதய்க்கும் அவளின் திட்டம் புரிந்து விட்டது. 

 

அவள் கிளம்ப நினைக்கையில் “உங்க பர்ஸ கொடுங்க” என்றான்!

 

 “எதுக்கு உங்களுக்கு அது?”என்றாள். 

 

“அந்தப் பக்கமா போய் நீங்க ஆட்டோ பிடிச்சு போய்டா?” 

 

‘அடப்பாவி, இதையும் கண்டு பிடிச்சுட்டான்’ என்று மனதில் நினைத்தவளோ,”இதுலாம் டூ மச், ரொம்ப ஓவரா போறீங்க மிஸ்டர்” என்றாள். 

 

“இங்க பாருங்க, நீங்கப் பர்ஸை கொடுக்காட்டி, உங்க வண்டிய மறந்திடுங்க” என்றான். 

 

அதில் இன்னமும் கொஞ்சம் கடுப்பானவள், ‘வண்டியே வேண்டாம்’ என்று செல்லாப்போனவளின் மனக்கண்ணில் அவளின் அன்னை மற்றும் அண்ணண் கோபமான முகம் தோன்ற, அமைதியாகப் பர்ஸையும் எடுத்துக் கொடுத்தவள், அப்படியே கிளம்பி இருக்கலாம். 

ஆனால், சும்மா போனால் அது மீரா அல்லவே. “அதுல இருக்கிற அமௌன்ட் நான் திரும்பி வர வரைக்கும் இருக்குமா? இல்ல…”என்று இழுக்க.

 

 “கவலையே படாதீங்க மிஸ். நான் உங்கள (அந்த உங்களல கொஞ்சம் அழுத்தம் கொடுக்க) மாறிக் கிடையாது” என்றிட. 

 

இவளுக்குத் தான் ‘இது தேவையா?’ என்று இருந்தது. இருந்தாலும் அதே வீராப்போடு “இருந்தா சரிதான். அப்போ நான் போய் எடுத்திட்டு வரேன்” என்று கிளம்பிவிட்டாள். 

 

உதய்யின் நினைவுகள் பின்நோக்கி சென்றன மிகவும் பின்நோக்கி… அதை நினைக்கையில் அவனிற்கு இதழோரம் சிறு கீற்றாகப் புன்னகை மலர்ந்தது. அழகான நினைவுகள் மனதில் தோன்றியாதால் இருந்ததாலோ என்னவோ? கூடவே அவனிற்கு மீராவின் பிம்பம் மனதில் தோன்றியது. 

 

‘இல்லை என் பட்டு இப்படி ரௌடியா இருக்க மாட்டாள். அவள் அமைதியான பெண். அவளை இவளோட கம்பேர் பண்றேன் ச்சேய்’ தன்னையே கடிந்து கொண்டவன், நினைவுகளுக்கு முற்று வைத்தாலும், முடிவில் மீராவிடம் வந்து நின்றான். ஆனால் அதை ஒத்துக்கொள்ளத்தான் முடியவில்லை அவனால். 

 

இந்த மடையனிடம் யார் சென்று கூறுவது மாற்றங்கள் ஒன்றுதான் மாறாதது என்று! 

 

********* 

 

அவனின் பார்வையை விட்டு மறையும் வரை நடந்து வந்தவள், ஒரு ஆட்டோவைப் பிடித்துத் தன் வீட்டு முகவரியைச் சொல்லி அதில் ஏறிக் கொண்டாள். 

 

ஏறியதும், அம்மாவிற்கு அழைத்தவளை, அவர் திட்ட ஆரம்பிக்கும் முன்னே,”அம்மா ஒரு நூறு ரூபாய் ஓட வீட்டு வாசல்ல வெய்ட் பண்ணு”என்றுவிட்டு கட் செய்துவிட்டாள். 

 

“என்னாச்சு?ஏன் நூறு ரூபாய் கேக்குறா, எருமை தலையும் புரியாம வாளும் புரியாமதான் ஏதாச்சும் சொல்லுவா, வரட்டும் இன்னைக்கு இருக்கு அவளுக்கு”என்று அவள் சொன்னது போலவே காத்திருந்தார். 

 

அவளின் நிலையோ, அடுப்பில் வைத்த பாலைப் போல் பொங்கிக் கொண்டிருந்தாள். ‘ராட்சசன், குரங்கு, எருமை, பக்கி…’ இன்னும் பிற நல்ல வார்த்தைகளால் அவனுக்கு அர்ச்சனை நடத்தியவள் அவனைத் திட்டிக்கொண்டே வீட்டை அடைந்தாள். 

 

இறங்கியதும் அவளின் தாயின் கண்டன பார்வையைத் தூசி போலத் தட்டிவிட்டவள், அவர் கையில் இருந்த நூறு ரூபாயைப் பிடிங்கி, ஆட்டோவிற்கு கொடுத்துவிட்டு திரும்ப. 

 

பத்ரகாளியாய் அவள் தாய் நிற்க, “மம்மி, நான் உன் பிராப்பர்டி என்னை டேமேஜ் செய்ய உனக்கு முழு உரிமை இருக்கு. ஆனா எதுவானாலும் உள்ளே போய்டுவோம் ப்ளீஸ்” என்று கெஞ்ச. 

 

சிறிது மலை இறங்கிய அனுராதா,”உள்ள வா, உனக்கு இருக்கு” என்று சென்றிட. 

 

“ஹிஹி, போ மா இதோ வந்துட்டேன். பிரியாணியை எடுத்து வை” என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டியிடம், பில்டப் கொடுக்க, 

 

அந்த ஆன்ட்டியும்,”என்ன மீரா, நீ இன்னைக்குதான் காலேஜ் போனதா உங்க அம்மா சொல்லீட்டு இருந்தாங்க. அதுக்குள்ள வந்துட்ட!” என்று கேட்டிட, 

 

“அதுவாங்க ஆன்டிங். அது வந்துங்க், நான் காலேஜ் போனேனா, அங்க ஒரு விஜய் தேவர்க்கொண்டா மாறி ப்ரோப்பசர் வந்து கிளாஸ் எடுத்தா பரவாயில்லை, உங்கள மாறியே ஒரு மொக்கை ப்ரோப்பசர், அதைவிட மொக்கயா கிளாஸ் எடுத்திட்டு இருக்காங்க. அதான் வந்துட்டேனுங்க்” என்று அவரை வாற. 

 

“ஓ, என்னை மாறி மொக்கை ப்ரோப்பசர்ரா? பின்னாடி இருக்கிற ப்ரோப்பசர் ஓகே வானு பாரு என்று”அவர் கூறிட. 

 

திரும்பிப் பார்த்தவள், அவளின் தாய் அங்கே நிற்பதை பார்த்து அதிர்ந்தாலும், அதை வெளியே காட்டாது “அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா” என்று பாட்டு படிக்க. 

 

அவளின் தாயோ அவளின் காதைப் பிடித்துத் திருகி, அவளை அழைத்துச் சென்றார், அவர்களின் இல்லம் நோக்கி. 

 

அந்த ஆன்ட்டியும், “போ, போ விஜய் தேவர்க்கொண்டாவா கேக்குற” என்று சென்றுவிட்டார். 

 

வீட்டிற்குள் வந்ததும்,”தாயில்லாமல் நான் இல்லை” என்று மறுபடியும் பாட ஆரம்பிக்க, 

 

“செறுப்பு பிய்யும் ஓசை, அதைக் கேக்கதானோ ஆசை” என்று அவள் தாய் எசப்பாட்டு பாட… 

 

வாயைக் கப்சிப் என்று மூடிக்கொண்டவள். நேராகச் சென்று சோபாவிலும் அமர்ந்துக் கொண்டாள். 

 

சிறிது நேரம் அவளை முறைத்தவரும், உள்ளே சென்றிட… ‘இவளுக்குத்தான் என்ன இன்னும் பஞ்சாயத்து ஆரம்பிக்கல’ என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, ‘ஒரு வேலை புயலுக்கு முன் அமைதியோ’ என்று எண்ணிக்கொண்டிருந்தாள். 

 

‘அந்தப் பக்கி உதய் வேற அங்கே வெய்ட் பண்ணிட்டு இருப்பான். என்ன பண்ணலாம்?’ என்று பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்க, ஒரு செம்பு ஒன்று கிட்சனிலிருந்து பறந்து வந்தது. 

 

அதைச் சரியாகக் கேட்ச் பிடித்தவள்,”அவுட் சாட்” என்று கத்திவிட. மறுமுறை பூரிகட்டை வந்தது. 

 

பிடித்துவிடுவாளா? 

 

******* 

 

இரு வேறு மனநிலைகளில் இருவர். 

 

இருவரும் முன்னே சந்தித்துக் கொண்டுள்ளனரா? 

 

இல்லை இதுவே முதல் சந்திப்பா? 

 

இல்லை இருவரும் நடிக்கின்றனரா? 

 

மீராவின் உதய் என்ற அழைப்பு உரிமையான அழைப்புதானா? 

 

இயல்பாக மீராதான் காத்துக்கொண்டிருப்பாள். 

 

இங்கே உதய் காத்துக்கொண்டிருக்கிறான். 

 

காத்திருப்பு பயன் தருமா?

 

பொறுத்திருங்கள் வந்துவிடுவேன். 

 

😉தொடரும்… 

 

*******

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!