உள்ளத்தின் காதல் நீங்காதடி-12

உள்ளத்தின் காதல் நீங்காதடி-12

காதல்-12 

காதல் பல விடை தெரியா கேள்விகளின் பிறப்பிடம். காதலுக்கு தாயில்லை ,தந்தையுமில்லை ,ஜாதயில்லை,மதமில்லை,ஏன் பாலிணமில்லை. காதல் வேறுபாடு பார்க்காது. காதல் பிரிவினை பார்க்காது. காதலே அனைவரையும் காதலிக்கும்!

#######

உதயிற்கு ஏதோ தவறாக பட்டது. ஏதோ வித்தியசமாக பட்டதின் விளைவே அவன் “வேண்டாம் ஜிலேபி” என்றிருந்தான்.

அவனின் அவளுக்கான அழைப்பு, எந்த ஒரு ஆண்மகனையும் தன் நிழலைக் கூட நெருங்க  விடாது வாழ்பவள், இவனின் ஜிலேபி என்ற அழைப்பிற்காக தவமிருந்தாள் என்றுதான் கூற வேண்டும்.

கண்ணீர் இறைவன் படைத்த அழகான அம்சத்தில் ஒன்று. இன்ப துன்பமே ஒரு மனிதனின் இரு முக்கிய உணர்ச்சிகள். அதில் இரண்டனுக்குமே கண்ணீர் ஒரு கூடுதல் அழகு.இதில் கண்ணீர் இன்பத்தில் தான் வரும் துன்பத்தில்தான் வரும் என்கிற வாக்குவாதம் ஏன்?

கண்கள் கலங்கியது நம் கதையின் சேட்டைகாரிக்கு. அதில் என்ன உணர்ச்சி என்று அவளுக்கு தெரியாத ஒரு நிலையில் இருந்தாள். அதாவது இது துன்பமா? இன்பமா? என்று. பின் எதற்கு இதில் போய் நேரத்தை வீண்ணடிக்க கண்ணீர் தோன்றும் போது வரும் என்று முடித்துக்கொள்வோமே!

உதய் அந்த சூழலை ஆராய முற்பட.ஏதோ வித்தியாசமாக பட , அப்பொழுது அந்த சத்தம்.

பெண்கள் இருவரும் வாய்விட்டே கத்திவிட்டனர்.ஒரு கூரிய கல் உதய்யின் ஃபிரென்ட் கண்ணாடியைப்  பதம்பார்க்க கல் பட்ட வேகத்தில் சிறு சிறு துகல்களாக கண்ணாடி துண்டுகள் உடைந்து அவனை நோக்கி வர.

“தரண்” என்று கத்தியவள், அவன் தலையைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.

உதய்யே தன்னை பாதுகாத்திருப்பான்தான். ஆனால் நீண்ட நாட்களுக்கு பின்னான அவனின் உயிரானவளின் அழைப்பு,அவனை ஸ்தம்பிக்க வைத்திருந்தது. சில துண்டுகள் அவளின் கையைப் பதம் பார்த்திருக்க அதை கண்டு உதய் துடிக்க.

“சீக்கிரம் வண்டியை எடுங்க,இப்படியே இருந்தா?” என்று அவள் உதய்யிற்கு நியாபகப்படுத்தி துரிதமாக செயல்படுத்த முனைந்தாள். லாவகமாக வண்டியை அவன் வெளியில் எடுக்க முயற்சிக்க அதை கண்டவர்கள் மேலும் மேலும் கற்களால் அவர்களை தாக்க முற்பட, காரின் அனைத்து கண்ணாடிகளிலும் அந்த கற்கள் உரசியதில் கண்ணாடி துண்டுகளாக உடைக்கப்பட்டது.

பெரிய முயற்சிக்கு பின் ஒரு மறைவான இடத்தில் தஞ்சம் புகுந்தவர்கள், சிறிது மூச்சு வாங்கினர். பின் உதய் திட்டம் வகுத்தவனாக.

“நீங்க மொத்தல்ல இங்க இருந்து கிளம்புங்க” என்று சுபியிடமும் கதிரிடமும் கூறினான்.சுபி அழுதே விட்டாள்.

“அண்ணா,சாரிண்ணா என்னால தானே இவ்ளோ கஷ்டம். உங்க ரெண்டு பேரையும் நான் சிரம்மபடுத்துறேன் சாரி மீரா” என்றாள்.

“அதுலாம் இல்ல எங்களு…எனக்கு எந்த பிரச்சனையும் இல்லம்மா” என்றான்.

எங்களுக்கு என்று கூறவந்தவன் எனக்கு என்று மாற்றியதை குறித்து வைத்துக்கொண்டவள், மீரா.

“எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல,மொத்தல்ல நீ தண்ணீ குடி ” என்று நீரை பருகவைத்தாள் மீரா.

மீராவைக் கண்டுக்கொள்ளாதவன் போல் “நீங்க ஃபலைட்ல போறது சேப் இல்ல,உங்க பாஸ்போர்ட்ட வச்சு நீங்க எங்கனு ட்ரேஸ் பண்ணிடுவாங்க ” என்றான் யோசனையாக.

அப்பொழுது மீராவோ “ஏன் நம்ம ஃபாரின் போக ,அவங்கள பாஸ்போர்ட் தேவைப்படாத ஊருக்கு இவங்கள் ஃப்ளைட் டிக்கெட் போட்டு அனுப்பிடலாம்”என்றாள் மீரா.

“ஆனால்,பேசண்ஜர்ஸ் இன்பரமேஷன் எல்லாம் வந்திடுமே. இதுலாம் சதாரண டேடிக்கு ஓகே,இவங்க டேடி ஒரு கேடி”என்று அவன் முடிக்க.

பெண்கள் இருவரும் அவனை முறைக்க “உண்மையை தானேப்பா சொன்னேன்” என்று அவன் கூற அவனை நெருங்கிய மீரா “சிரீயஸான நேரத்துல காமெடி பன்றீங்க”என்றாள்  கடுப்பாக.

அவனும் பதிலுக்கு “நீங்களா பேசுனீங்க இது உண்மைதானா” என்று அவளை கொலைகாரியாக மாற்ற முனைந்தான்.

அவள் அவனை முறைக்க, (அடேய் என்னடா பண்ணீகிட்டு இருக்கீங்க உங்கள நம்பி ரெண்டு பீஸூ வேற வெய்டிங் நீங்க இங்க முறைஃபோபியா பண்ணீட்டு இருக்கீங்க ப்ளடி பிஸ்கெட்ஸ்)

தற்சமயம் தங்களது நிலையை நினைத்து “சரி மதுரைக்கு அனுப்பிடலாம்”என்றாள் மீரா.

“கொத்தமல்லி கொழுந்தே கொஞ்ச நேரம் சும்மா இரு மா”என்றான் உதய்.

அவனை முறைத்தவள் “என்ன எது சொன்னாலும் வேணாம் வேணாம்னா அப்போ நீங்களாவது சொல்லுங்க” என்றாள்.

“சொல்றேன் சொல்றேன்,அதுக்கு முன்ன ஒரு நிமிஷம்” என்றவன் தனது தொலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து ஏதேதோ பேசினான். பின்,” முதல்ல நம்ம கார்லையே சிட்டிக்கு அவுட்டர்ல போய் எப்படியாவது பெங்களூர் பஸ்ல ஏத்தி விட்டிடுறேன். அங்க இருந்து என் ஃப்ரண்டோட ஹெல்ப்ல மும்பை போய்டுங்க”என்றான்.

சுபி கலவரத்தோடு “எதுக்கு அவ்ளோ தூரம்”என்று  யோசிக்க.

“காரணம் இருக்குமா. உங்க அப்பாவிற்கு தமிழ்நாட்டுல உள்ள செல்வாக்கை வச்சு உங்கள கண்டுப்பிடிக்குறது ரொம்ப ஈசி. ஆனால் நார்த் சைட்ல கொஞ்சம் கஷ்டம். நம்ம பப்லிக் டிரான்ஸ்போர்ட் யூஸ் பண்றது அதை விட டேன்ஜர். அதே மாதிரி நம்ம முதலில் இந்த இடத்தை காலி பண்ணி சிட்டி அவுட்டருக்கு போகனும்”என்று சிறிது இடைவெளி விட்டவன்.

“அவுட்டர்லையுமே நம்ம ஜாக்கிரதையா தான் போகனும் அதை நான் பார்த்துக்கொள்வேன். எங்க எங்க போலீஸ் தேடுறாங்கனு நான் முன்னரே தெரிஞ்சுப்பேன்” என்றான்.

அவனது இந்த பேச்சிற்கு பின் சற்றே தெளிவான கதிர் “ஓகே மச்சான்”என்றான். அவனை கலக்கமாக பார்த்த சுபியின் தோள்களை வளைத்துக் கொண்டவன் “நான் இருக்கிறேன்” என்றான் ஆறுதலாக.

“சரி போகலாமா?”என்று உதய் கேட்க, மீராவிற்கு கோபம் வந்தது இம்முறை ‘தன்னை அவன் கேட்கவேயில்லை’ என்ற கடுப்பில்.

“என்ன போலாமா? நான் எப்படி அவ்ளோ தூரம் வர்றது? என்னால முடியாது” என்றாள் அவசரமாக.

அவளை புருவ முடிச்சுடன் பார்த்த உதய்யின் மனதிலோ ‘என்ன வரமாட்டேன்னு சொல்றா? இந்த ட்ரிப்ல இவளை இம்ப்ரஸ் பண்ணி எதாவது பண்ணலாம்னு பாக்குறேன்,ஓவரா பண்றாளே’ என்று யோசித்தவன் ஒரு முடிவு எடுத்தவனாக.

“சரி,நீங்க கிளம்புங்க மிஸ்…சாரி உங்க பேரு என்ன?” என்று வேறு கேட்க.

பத்ரகாளி அவதாரம் எடுத்தவள் “என்னாது பேரு தெரியாதா? அப்போ என்ன வெண்ணைக்குடா ஜிலேபி…ன்னு சொன்ன” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கடித்து துப்பியவள், “என் பேரு தானே அது எதுக்கு உங்களுக்கு நீங்க எப்பவும்போல மிஸ்னே கூப்பிடுங்க” என்று அந்த மிஸ்ஸை அழுத்தி கூறியவள்,”கேட்க நல்லா இருக்கு”எனறாள்.

“அப்படியா சரிங்க மிஸ். நீங்க இப்டியே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்டுங்க. அப்றம் முக்கியமான விஷயம்,நீங்க போறதுக்கு முன்னாடியே அந்த கேடி…( அவளின் முறைப்பு பார்த்தவுடன்)அதாவது இவங்க டேடியோட ஆளுங்க உங்க வீட்டுல தஞ்சம் புகுந்திருப்பாங்க நீங்க நல்லா கவனிச்சு அனுப்புங்க” என்று கூறி வைக்க.

பயந்து போனவள் “ஏதே…”என்று அலறிவிட்டாள். அதில் மெல்லிதாய் அவன் சிரிக்க அவளோ “அப்போ என் அம்மா அவுங்க தனியா வேற இருக்காங்க” என்று அழுக ஆரம்பித்து விட.

உள்ளம் பதறியவன் “நான் அவங்களுக்கு ஃப்ரோடெக்ஷன் கொடுக்கிறேன். நீங்க பயப்படாதீங்க. மோர் ஓவர் நீங்க உங்க வீட்டை ரீச் ஆகுற வரை அவுங்க யாரும் உங்க அம்மாவை ஒன்னும் பண்ணமாட்டாங்க.

எனக்கு தெரிஞ்சு அவுங்க வாட்ச் பண்ணத்தான் செய்வாங்க. இவங்கள பஸ் ஏத்திவிட்டுட்டு நானே உங்களை வீட்டுல விட்டிடுறேன். அதுவரை அம்மாவை ஒரு டீம் கண் காணிக்கும்படி செஞ்சிடலாம். இதற்கு இடையில இந்த பிரச்சனையை சரி பண்ண பார்க்கலாம்” என்றான்.

சற்றே தெளிந்தவள் “சரி” என்றாள் அரை மனதுடன் மீரா.

அனைவரும் அவசரமாய் காரில் ஏறி உதய்யின் உதவியால் எங்கெல்லாம் போலீஸ் இல்லையென்று தெரிந்துக்கொண்டு சென்றனர். போகும் வழியிலே வண்டியை நிறுத்தியவனை அனைவரும் புரியாது பார்க்க  அது ஒரு சிறிய துணிக்கடை “சுபி,கதிர் சீக்கிரமா போய் ட்ரெஸ் ஜேன்ஜ் பண்ணிக்கோங்க” என்றான். அவர்கள் புரியாது பார்க்க “காரணம் இருக்கு போங்க சீக்கிரம் பஸ்ஸிற்கு போகனும்”என்றான்.

 (பஸ் ஸ்டாப்பில் அல்லாது ஒரு காட்டிற்கு இடையில் பஸ்ஸை நிறுத்தி வைத்திருந்தான்)

அவர்கள் வந்ததும் காரிலிருந்து சில பொருட்களை எடுத்தான். அதில் சில பொருட்கள் இருந்தது , கலர் விக்ஸ்,மேக் அப் காஸ்மெட்டிக்ஸ் இருக்க, அவர்களை பார்த்தவன் “சீக்கிரம் உங்க பேஸோட இமேஜை சேன்ஜ் பண்ணிக்கோங்க” என்றான்.

அவர்கள் முழிக்க “டேய் கதிர் உனக்கு உள்ளே தாடி, மீசையெல்லாம் இருக்கு நீ எடுத்து அதை ஒட்டு முதலில்” என்றான். அவன் அவ்வாறே செய்ய.

“நீ கொஞ்சம் டார்க்கா மேக் அப் போடுக்கோ மா,அப்றம் அந்த ஹேர் ஸ்டைலை மாத்து உனக்கு ஹெல்ப் வேணும்னா உன் ஃப்ரெண்டை கேளு “என்று அவளை வேறு வம்பிழுக்க.

அவள் இவனை முறைக்க “இப்போ எதுக்கு என்ன கண்ணு வைக்குறீங்க” என்று வேறு அவன் கேட்டு வைக்க.

“எனக்கு மேக் அப் போட தெரியும்னு உங்க கிட்ட சொன்னேனா?”என்றாள் கடுப்பில் .

“தெரியாமாலா? நிப்பான் பெயின்டுக்கே டப் கொடுக்கிற அளவு இவ்ளோ கோட்டிங் போட்டிட்டு வந்தீங்க”என்றான் அவன்.

ரூத்ர தாணடவம் ஆட அவள் ரெடி ஆக பயந்தவன் “இப்போ உங்க கூட விளையாட நோ டைம்,எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”என்றவன் சுபியிடம் திரும்பி,

“உங்க அப்பா எப்படியும் உங்க போட்டோவை காட்டித்தான் தேட சொல்லியிருப்பாரு. காலையிலே அவனுக உங்கள பார்த்த ட்ரஸ்ஸை மாத்தியாச்சு பிகாஸ் இதுல பாதி பேரு ட்ரஸ்ஸை வெச்சுத்தான் தேடுவாங்க. நெக்ஸ்ட் போட்டோ உங்களோட இந்த கெட் அப்பை நெறுங்கியவங்களால மட்டுமே கண்டுபிடிக்க முடியும் ,சோ இதுல எந்த பிரச்சணையும் வராது அவங்கள பார்த்து பயப்படாம நீங்க போகலாம். எதுக்கும் பயப்படாதீங்க,ஃபேஸை தைரியமா வெச்சுக்கோங்க” என்றான்.

அவனின்திட்டத்தை கேட்டு வாயை பிளந்த மீராவே ‘செம்ம கேடியா இருக்கான்,’என்று நினைத்தவள் மனதிலோ ‘எப்பவும் ஒரே மாதிரி’ அவளது மைண்ட் வாய்ஸை படித்துவிட்டவன்.

“ப்ராடை,ப்ராட் தனத்தால்த்தானே அழிக்க முடியும்” என்றான். அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவளைப் பார்த்து கண்ணடித்தவன், காரை இயக்கி சரியாக அந்த இடத்தை அடைந்து ஆயிரம் பத்திரம் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்களை அனுப்பிவிட்டு வந்ததும் உதய் மீராவை பார்க்க, அவளோ தன் அன்னையை நினைத்து பயந்தப்படி இருக்க, அவளின் வேதனையை அறிந்தவனாக “அவுங்க சேஃப்பா தான் இருக்காங்க. நோ வொரீஸ். கொஞ்ச நேரத்துல வீட்டிற்கு போய்டலாம் ” என்று ஆறுதல் சொல்ல,

மென்மையாக சிரித்தவள் காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள். தோள்களை குலுக்கிக்கொண்டவன் மறுபுறம் சென்று காரை ஸ்டார்ட் செய்ய.

ஸ்டார் ஆகாமல் போகவே பயந்தவள் “என்னாச்சு?”என்றாள் கலக்கத்தோடு.

புருவத்தை நீவி கொண்டவன் “ஐ திங்க்…”

“யூ திங்க்?”-மீரா

“ஐ திங்க் பெட்ரோல் காலி”என்றானே பார்க்கணும்.

“வாஆஆஆஆஆஆட் தி ஹெல்” என்று கத்தி விட்டாள்.

“எதுக்கு இப்போ கத்துற” என்றான் அவன்.

“கத்துறேனா?ஏன் சொல்ல மாட்டீங்க. நீங்க பெட்ரோல் காலி ஆக போகுதுனு உங்களுக்கு இவ்ளோ நேரம் தெரியலையா?”என்றாள்.

“லூசா நீ. எப்படிப்பட்ட நிலையில் இருக்கோம் இதெல்லாம் பாத்திட்டு இருக்க முடியுமா?”என்றான் அவன்.

“பொய் சொல்லாதீங்க. எல்லாத்தையும் தெளிவா யோசிச்சு பண்றவர் நீங்க. இதுவும் உங்களுக்கு தெரிஞ்சேதான் நடந்திருக்கு.வேணுனே இப்டி பண்றீங்க”என்றாள் மூக்கு சிவக்க.

“ஆமா,உன்ன கடத்திட்டு போய் நான் என்ன பண்ணப்போறேன்” என்றான் அவன் இகழ்ச்சியாக.

“ஓ அப்போ கடத்துறது தான் பிளானா? இது தெரியாம உங்க கூட வந்தேனே என்ன சொல்லணும்” என்றாள் அவள்.

“ப்ளானா? என்ன ப்ளான் பெரிய ஐநூறு கோடி பிராஜெக்ட் நீ. முதல்ல நீ வர்றதே எனக்கு தெரியாது, அப்படியே தெரிஞ்சாலும் உன்னை ஏன்டி நான் கடத்தனும்? ஓரமா போவியா கடுப்புகளை கிளப்பிகிட்டு” என்றான் உதய்.

அவனது வாதம் சற்று நியாயமாய் பட,அமைதியானவள் பின் “எல்லாத்தையும் யோசிச்சு பண்ணணும். உங்களை எல்லாம் யாரு போலீஸ் வேலைக்கு எடுத்தா? முன்ன, பின்ன என்ன வரும்னு யோசிச்சு பண்ண வேணாம்?” என்று அவள் ஆதங்கப்பட,

“எப்டி ,எப்டி? முன்ன பின்ன யோசிக்கணுங்களா? ஏன் மேடம் யோசிச்சிங்களா?” என்றான் அவன் காரமாக.

“ம்ப்ச்,என்ன யோசிக்கல நான்” என்றாள் அவள் சற்றே இறங்கி.

“இவ்ளோ பெரிய விஷயத்துக்கு,வீட்டுல யாருகிட்டையும் சொல்லாம தனியா வந்திருக்க?எவ்ளோ தைரியம்? அந்த ஆளு எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா உனக்கு? பெரிய ஜான்சி ராணி மாதிரி கிளம்பி வந்துட்ட,நீ யோசிச்சியா?”என்று அவன் கடித்து துப்ப,

உண்மையில் உதய்யிற்கு கோபம். இவளை முதலில் கண்டதும் அத்தனை இன்பம் அவனுக்கு, ஆனால் இந்த நிலையில் சந்தித்தது பெரும் கலக்கத்தை கொடுத்தது. கோபம்,அக்கறை,அன்பு இப்படி கலவையான உணர்வில் தவித்தான். அவள் இங்கு வந்ததில் துளியும் விருப்பம் இல்லை அவனிற்கு.

அவனின் கேள்வி மனதை சுட்டாலும் அவனிடம் தோல்வியை தழுவ விருப்பம் இல்லாது “என்ன என்ன? ஏன் நான் வர கூடாது? நான் வர்றதும் வராததும் என் தனிப்பட்ட முடிவு. அதை நீங்க விமர்சிக்க தேவையில்லை. இன்னொன்னு என் மேல் நீங்க அக்கறை காட்ட ஒன்னும் தேவையில்லை”என்றாள் வெறுப்புடன்.

அவளது இறுதி வாக்கியம் சரியாக அவனது உள்ளத்தைக் கிழிக்க உடனடியாக அதை தைக்க ஆள் தேடியவனுக்கு கிடைத்த பதில் மீரா 

‘என் வலியும் அவள் என் மருந்தும் அவளே’ 

அவளது மனதை திசை திருப்ப எண்ணி “உங்க மேல அன்பு,காதல்,நேசம் கொண்டு எல்லாம் நான் அக்கறை காட்டலைங்க. நான் ஒரு காவல் அதிகாரி, அதுவும் பொது மக்கள் பாதுக்காப்பு துறை. அதுனால தான் இந்த அக்கறை.நீங்க பாடுக்கு எதுவும் கற்பனை பண்ணிக்காதீங்க” என்று அவன் சரியாக ராங் டயலாக்கை சொல்லி விட.

இத்தனை நேரம் அதை மறந்திருந்தவளின் நினைவுகளில் அந்த உண்மை சாட்டையாய் இறங்கி அவளது மனதில் உயிர் வலியை கொடுக்க, அதன் பாரம் அந்த வலியை தாங்கிக்கொள்ள இயலாதவளின் இதயம் பல கூறுகளாக கிழிய அமைதியாகி விட்டாள்.

அவளின் திடீர் அமைதி அவனை தாக்க, அதை தாங்கிக்கொள்ள முடியாதவன் “மீரா, ஆர் யூ ஆல் ரைட்?”என்றான்.

வார்த்தைகளே கூரிய ஆயுதம். மனிதனைச் சாவிற்கு மேல் ஒரு பயங்கரமான தண்டனையை இது தரவல்லது. பேசிவிட்ட வார்த்தைகள் திரும்ப எடுக்கப்பட மாட்டாதே. உள்ளத்திற்கு உரியவர்களிடமிருந்து வரும் சிறு வார்த்தை நம் ஐம்புலன்களையும் உடைக்கவல்லது. சுக்கு நூறாய் கிழித்தெரிய கூடிய ஆயூதம். அப்படித்தான் உதய்யின் வார்த்தை இங்கு மீராவை உடைய செய்தது.

கண்களின் கண்ணீர் நேர் கோடாய் அவளின் முகத்தின் மேடு பள்ளத்தில் பயணத்தை துவங்கி பூமியை அடைய, பதறிவிட்டான் உதய்.

அவளின் வலது கையை மென்மையாக பற்றியவன் “என்னடா?”என்றான் பரிவாக.

அவனது கையைத் தட்டிவிட்டவள் “அம்மா,அம்மா கிட்ட போகணும்” என்றாள் விசும்பலுடன்.

அவள் கையைத் தட்டிவிட்டது இவனுக்கு வலியை கொடுக்க இருந்தும் “சரி சரி அழாதே. நான் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ,அவ்ளோ சீக்கிரம் கூட்டிட்டு போறேன்” என்றான் மென்மையாக.

குழந்தையைப் போல அவள் ‘சரி’ என்று தலையாட்ட அவளது இந்த திடீர் மாற்றத்தில் தலையைப் பிய்த்துக்கொள்ள தோன்றியது உதயிற்கு.

சரியாக அந்நேரம் அவனது தொலைப்பேசி அடிக்க எடுத்தவன் அந்த பக்கம் சொன்ன செய்தியில் கதிகலங்கி விட்டான்.

என்ன சொல்லப்பட்டது?

காதல் பயணம் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!