உள்ளத்தின் காதல் நீங்காதடி-13

உள்ளத்தின் காதல் நீங்காதடி-13

காதல்-13

காதல் என்ற வார்த்தையின் புனிதம் கெடுவதற்கு யார் காரணம்? காதலால் கொலை செய்யப்பட்டவர்களா? ஆம், காதலித்து வாழாமல் செத்து அதன் மீது பழி அல்லவா போட்டு விட்டனர்.

 

#####

 

அந்த பக்கம் சொல்லப்பட்ட தகவல் இவனைக் கொதி நிலைக்கு தள்ளியது. ஃபோனை ஏக கடுப்பில் அணைத்தவன் அதை காருக்குள் எறிந்துவிட, இதை கண்ட மீராவிற்கு ஒன்றும் புரியாத நிலை.

 

“என்னாச்சு?”என்று கேட்டவளுக்கு முறைப்பை இவன் பதிலிளிக்க, கடுப்பானவள்…

 

“இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?”என்றாள்.

 

“கொஞ்சம் நேரம் மூடிக்கிட்டு இருடி ” என்றான் உதய்.

 

“வாட்? டி யா? இது நீ சொல்ற ரெண்டாவது டி. அவுங்க முன்னாடி நானே காட்டிக்க வேணாம்னுதான் சும்மா இருந்தேன். இனிமே டின்னு சொன்ன பல்லைப் பேத்து கையில கொடுத்திடுவேன்” என்றாள் உக்கிரமாக.

 

“இதோடா. அது வரை என் கை என்ன உன் காலையா அமிக்கி கிட்டு இருக்கும்? நானும் பசக்குனு ஒன்னு கொடுத்திடுவேன் சொல்லிட்டேன்” என்றான் அவனும் காரமாக.

 

‘பயபுள்ள எதை சொல்லுது’ – சத்தியமா இது மீராவின் டவுட் தான். 

 

இவள் அவனை விநோதமாக பார்க்க, “என்ன லுக் விடுற, நீ விட்ட லுக் போதும். இப்போ உடனடியா இந்த இடத்தை நாம காலி பண்ணனும்” என்றான்.

 

“காலி பண்ணனும்னா? உங்க தாத்தாவா காட்டுக்குள்ள பெட்ரோல் பாங்க் வச்சு உக்காந்திருக்காரு” என்று மெல்ல முனங்கினாள்.

 

அது அவனைத் தப்பாமல்,வார்த்தை பிசறாமல் சென்றடைய “எங்க தாத்தா சைக்கிள்தான் வச்சிருந்தாரு. அவருக்கு பெட்ரோல் பத்திலாம் தெரியாது. வேணும்னா உங்க தாத்தா கிட்ட கேட்போமா?” என்று அவன் கேட்டு வைக்க, கடுப்பானவள் காரை விட்டு இறங்கி விறு விறுவென நடக்க துவங்க,

 

‘அச்சசோ… அவளைக் கோபப்படுத்திட்டேனே! எங்க போறாளோ தெரிலையே?’ என்று புலம்பியப்படி அவசரமாய் காரை மூடிவிட்டு அவள் பின்னால் ஓடினான்.

 

“ஹே மீரா,நில்லு,நில்லு” என்று இவன் கத்திக்கொண்டு செல்ல, அவனை மனிதனாக கூட மதிக்காமல் அவள் வேக நடை பழகிக்கொண்டிருக்க…

 

காரிலிருந்த அவளது வேலட் மற்றும் ஃபோன்,உதய்யின் ஃபோன் ஆகியன பரிதாபமாக கிடந்தது.

 

ஒரு நிமிடம் தயங்கி அவள் கை பிடித்து நிறுத்தினான் உதய். அவன் தன் கையைப் பிடித்ததும் அக்னியாய் மாறியவள் “கையை எடு”என்று கிட்டதட்ட கத்தினாள்.

 

அவன் கையை எடுத்து விட, அவனை முறைத்தவள் “இனிமே இப்படி பண்ணாத” என்றாள் உள்ளம் வலிக்க.

 

அதே வலி அவனுக்கும் ட்ரான்ஸ்ஃபராகி அவனையும் வலிக்க செய்ய, அந்த வலியைச் சடுதியில் மறைத்தவன் “சரி,இப்போ நீ எங்க போற?” என்றான்.

 

“எங்கையோ போய் தொலையுறேன்” என்றாள்.

 

“குட்,நான் உன்னை உன் வீட்டுல விட்டுறேன். அப்றம் தொலஞ்சு போய்க்க” என்றான் அசால்ட்டாக.

 

அவள் அவனை ‘இவனை’ என்று பல்லைக் கடிக்க “பின்ன என்ன நீ போய்ட்டா என்னைய தான் பிடிப்பாங்க” என்றான்.

 

“உன்னை எதுக்கு பிடிக்கப்போறாங்க” மீரா கடுப்பில்,

 

“லாஸ்ட்டா தேவி என்னோடல வந்தீங்க. என்கூடல இருக்கீங்க” என்றவன் பின் “தங்களைத் தேடி , துப்பு துலக்கி கடைசியா இன்னைக்கு காலையில புடவைல போனதா உங்க அம்மா சொல்ல, அவங்க அப்டியே ரெஜிஸ்டர் ஆபிஸ் வர, பின் கதிர் அண்ட் சுபி கிட்ட விசாரிச்சு இவன் கூடதான் இருந்தான்னு அவுங்க சொல்லி…” என்று இடைவெளி விட்டவன்.

 

“அவுங்க வந்து ஏன்டா அந்த புள்ளய ரேப் பண்ணி கொன்னுட்டியான்னு கேட்டு…” என்று அவன் அடிக்கிக்கொண்டே போக…

 

“நிறுத்துங்க…” என்று கத்தியவள் “சும்மா கொலைன்னு சொல்ல வேண்டிதானே. அது என்ன ரேப்?” என்றாள் மூக்கு விடைக்க.

 

“எவன் மா நம்புறான் இந்த காலத்துல நீ வேற சுமார் பிகரு, கம்மி வயசு, அதுனால அப்படித்தான் கேட்பாங்க” என்று அவன் அதற்கு நியாயம் வேறு கொடுக்க,

 

தன் பல்லை நறநற வென்று கடித்தவள் “போதும்,போதும். நிறுத்துயா… நான் உன் கூடவே வந்து தொலைக்குறேன். தயவு செஞ்சு இதுக்கு மேல எதுவும் பேசி நீ இந்த உலகத்த விட்டு காணாம போய்டாத” என்றாள் மீரா.

 

உடனே அவனது கண்களில் மின்னல் வெட்ட “சோ,நீ என்ன கொல்ல போற” என்றான் உல்லாசமாக.

 

“அவள் ஆமாம்,எதுக்கு இப்போ அதுக்கு இவ்ளோ சந்தோஷம்” என்றாள் மீரா.

 

“அப்போ ஓகே சீக்கிரம் கொலை பண்ணு” என்றானே பார்க்கணும்.

 

“ஏதே…லூசா நீ” என்றாள் மீரா.

 

“இது என்னடா அநியாயமா இருக்குது. நீ காணாம போன இந்த உலகம் என் மேல போடும் பழி, நான் காணாம போனா உன்மேல் போடுதான்னு நான் செக் செய்ய போறேன். ஏன்னா ஆண்கள் ஏமாந்த பிறவிகள்” என்றான் போலி வருத்ததுடன்.

 

“உனக்கு நட்டு கலண்டு தான் போச்சு,பைத்தியமே” என்று அவள் அவனைக் கடிய.

 

“ஆமாம் முன்ன நல்லாத்தான் இருந்தேன். ரொம்பபப பிடிச்சவங்க ஒருத்தவங்க என்னை விட்டுட்டு போனதால இப்படி பைத்தியம் ஆகிட்டேன்” என்று அவன் கூற.

 

அந்த உண்மை அவளைச் சுட, கண்களில் குலம் கட்ட கண்ணீரை அடக்கியவள் இருந்தும் தோல்வியை ஏற்க மனமில்லாதவள் “நம்பிக்கை உடைந்தால் யாரும் கூட இருக்கமாட்டாங்க. அதை எப்பவும் மறந்துடாதீங்க” என்றாள் மீரா.

 

கோபம் வந்துவிட்டது உதய்யிற்கு. அவளை நெருங்கியவன் அவளது இரு தோள்களையும் பற்றியவன்,”என்னடி பெரிய நம்பிக்கை? அப்படி என்ன உன் நம்பிக்கையை நான் உடைச்சுட்டேன். நானும் பார்த்துட்டே இருக்கேன் ஓவரா பண்ற? எதுக்குடி என்ன பார்த்து ஓடி ஓடி போற? அன்னைக்கு மதுரைல என்னை பார்த்தப்போ உன் கண்ணுல வந்த உணர்ச்சியை நான் பார்த்தேன்” என்றான் உதய்.

 

மீரா அமைதியாய் இருந்தாள். 

 

“பேசுடி,என்னை தெரியாதுன்னு மட்டும் கதை விடாத மீரா. அதை நம்ப நான் ஒன்னும் இளிச்சவாயன் கிடையாது” என்றான் ரௌத்திரமாக.

 

அவனின் பிடி அவளுக்கு வலியைக் கொடுக்க, அதை முகத்தில் வெளிப்படுத்த, சற்றே தன் அழுத்தத்தைக் குறைத்துக் கொண்டவன்.

 

“நான் ஒத்துக்கிறேன் நான் பண்ணுனது தப்புத்தான். உனக்கு துணையா நான் இருந்திருக்கணும் அன்னைக்கு நான் அதை நினைச்சு ஃபீல் பண்ணாத நாளே இல்லை” என்றான் வருத்ததுடன்.

 

அந்த சம்பவம் அவளுக்கு பழைய நிகழ்வைக் கண் முன் இன்னொரு முறை வர “வேண்டாம் அதை சொல்லாதீங்க. ப்ளீஸ்,வேண்டாம்” என்று கத்தகயவள் அவனின் கைகளை விலக்கிவிட்டு அந்த காட்டிற்குள் ஓடினாள்.

 

அவளின் இந்த நிலை உதய்யிற்கு ஸ்சம்பிக்க வைக்க ஒரு நிமிடம் தாமதித்தவன் அவள் பின் ஓடினான்.

 

************

 

மீராவின் வீடு 

 

அனுராதா கவலையுடன் அமர்ந்திருந்தார் மணி ஆறு, இன்னும் இந்த பெண்ணை காணவில்லை,எங்கே போனால் வழக்கமாக நாலு, நாலறைக்கே வந்துவிடுபவள் இன்று காணவில்லை,ஏதோ பார்ட்டி என்றாளே சற்று தாமதமாகலாம் என்று இவர் பார்த்துக்கொண்டிருக்க அவள் வரவேயில்லை.

 

சரி அவளது அழைப்பேசிக்கு அழைக்கலாம் என்று முடிவெடுத்து அவர் அழைக்க அங்கோ 

 

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் நெட் வர்க் கவரேஜிற்கு வெளியே உள்ளார்”என்ற செய்த கிடைக்க ஏனோ மனம் பதறியது.

 

புதிதாய் சேர்ந்த கல்லூரி தோழிகள் நம்பர் எதுவும் இவரிடம் இல்லை ‘வாங்கி வைத்திருக்கணுமோ’என்று தன்னையே நொந்துக்கொண்டவர்.

 

ஒரு வேலை மித்ரனிடம் இருக்கலாம் என்று அவனுக்கு அழைத்தார்.

 

“அம்மா…”என்றான் மித்ரன்.

 

“எங்கப்பா இருக்கே”என்றார் ராதா.

 

“வந்துட்டே இருக்கேன்ம்மா,அறை மணி நேரத்தில் வந்திடுவேன்”என்றான்.

 

“சரிப்பா…அது வந்து…”ராதா 

 

“என்னம்மா,என்னாச்சு?”என்றான் அவன் பதறி போய்.

 

“இருப்பா பதறாத மீரா இன்னும் வரல,அதான்”என்றார் ராதா

 

“ப்ரெண்ட்ஸோட இருப்பா மா”என்றான்.

 

“ம் காலையிலே ஏதோ பார்ட்டின்னு சொல்லிட்டுத்தான் போனா”ராதா

 

“அப்போ வந்திடுவா கவலை படாதீங்க”என்றான் மித்ரன்.

 

“இல்லப்பா,எனக்கு ஏதோ மாறி இருக்கு அவ ஃபோன் வேற நாட் ரீச்சபில்ன்னு வருது”என்றார்.

 

இப்பொழுது மித்ரனுக்கும் பிசிறி தட்டியது “இருங்கம்மா,என்கிட்ட அவளோட ஒரு ப்ரெண்ட் நம்பர் இருக்கு நான் கூப்பிடுறேன்,கவலை படாதீங்க நான் வந்துட்டே இருக்கேன்”என்றான்.

 

“சரிப்பா”என்று வைத்துவிட்டார்.

 

அதன் பின் மீராவின் தோழி ஒருத்திக்கு அழைத்தவன் அங்கே சொல்லப்பட்ட தகவலில் ஆடி போய்விட்டான்.

 

************

 

கோவைக்கு சென்றவருக்கு இந்த விடயம் தெரியவந்ததும் ஆடிவிட்டவர்  

உடனே கல்லூரிக்கு ஆட்களை அனுப்பி பிடிக்க சொன்னார் அவர்கள் சொதப்பி விடவே,அடுத்ததாக தனது பலத்தை உபயோகப்படுத்தி இந்த திருமணத்திற்கு பின் உதவியாக இருந்தவர்கள் யார் என்று கண்டறிந்தவருக்கு.

 

ஒரு ஏசிபி தன்னை எதிர்ப்பதா? எனில் நிச்சயம் நம்மள பத்தி தெரிஞ்சு தான் இதை பண்ணியிருப்பான்,எவ்ளோ திமிர் என்று கொதித்து போனவருக்கு தனது மகளுக்கு திருமணம் முடிந்த செய்தி ஆத்திரத்தை கிளப்ப அந்த ரெஜிஸ்டர் அலுவலகத்திற்கு சென்றவர் நால்வரின் ஃபோட்டோவை அனுப்பி அனைவரையும் தேட சொன்னவர்.

 

ரெஜிஸ்ட்ராரை மிரட்டி அந்த புத்தகத்திலிருந்து தன் மகளின் திருமணத்தையே அழிக்க முனைந்தார்.

 

“அவங்ககிட்ட ஒரு காப்பி இருக்கு சார்”என்று அவர் மறுக்க.

 

“அதை என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்,நீ இதை அளி,இல்லை உன்னை அளிக்க வேண்டி வரும்”என்று மிரட்ட அவரும் பயந்து அவர் சொன்னதை செய்ய.

“விடமாட்டேன்,யாரையும் விடமாட்டேன்”என்று பொருமியவர் அவர்கள் கையில் சிக்க காத்திருந்தார்.

 

அவர்களும் நால்வரும் தப்பித்ததும் அவர்களின் நம்பரை வைத்து ட்ரேஸ் செய்ய ஆரம்பித்தவருக்கு பாதியிலே சிக்னல் இல்லாது கட் ஆகி விட அங்கிருந்து தேட சொல்லியிருந்தார்.

 

சரியாக ஐந்து கிலோ மீட்டருக்கு முன் சிக்னல் தடை பட்டதால் அவர்கள் இவர்களை நெறுங்க வாய்ப்பிருந்தது இந்த தகவல் தான் உதய்யிற்கு தெரிவிக்கப்பட்டது.

 

அவர்கள் தங்களை நெறுங்க வாய்புள்ளது என்று யோசித்தே அழைப்பேசியை காரில் எறிந்தான் அவன் காரை இங்கேயே விட்டுவிட்டு செல்லத்தான் திட்டமிட்டான்.

 

அதற்குள் ஒரு சண்டை வந்துவிட்டது.

 

*************

வேகமாய் ஓடியவள் கால் இடறி கீழே விழுந்துவிட அவளை தொடர்ந்து வந்தவனும் “மீரா,எதுக்கு இந்த அவசரம்” என்று அவளை கடிந்துவிட்டு தூக்கிவிட்டவன்.

 

அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் கண்களை கண்டவனுக்கு அவளது கலக்கம் புரிய “மீரா,என்னை பார்”என்றான் மென்மையான மிரட்டலோடு.

 

அவள் அவனை காண தயங்க “அது சரி,என்னை பார்க்க அவ்ளோ வெக்கமா?”என்று அவன் அவளை வம்பிழுக்க விழுக்கென்று நிமிர்ந்து அவனை அவள் நோக்க.

 

அவளின் கண்ணிண் மணியை கண்ணாடியாய் உள்வாங்கியவன் அவளின் அழகிய உள்ளத்திற்க்குள் நுளைய முற்ப்பட்டான்.

 

“ஏன் இந்த பயம்,யாரை கண்டு பயம்?என் மீரா தைரியசாலி,புத்திசாலி,கேள்வியால ஒவ்வொருத்தரையும் துரத்தி துரத்தி ஓடவைப்பவள்,துறு துறு சேட்டைக்காரி”என்றான் அந்த வாக்கித்தை அவளது நெஞ்சத்திலும் எழுதி வைத்தானோ.

 

உனக்கு நியாபகம் இருக்கா,உன்னுடைய சேட்டைகள்,நீ அடித்த லூட்டிகள்,எப்படி நியாபகம் இருக்கும் ? லிஸ்ட்டு ரொம்ப பெருசாச்சே”என்றான் குறும்பாக.

 

இம்முறை அவளின் கண்களும்,உதடுகளும் மில்லி மீட்டர் அளவை சரியாக அளந்து சிரிக்க.

 

அதை ரசித்தவனின் பார்வை காதலாக மாற துவங்கியது, அவளின் உச்சி முதல் பாதம் வரை ரசித்தவன் புடவையோ இன்று நடந்த களோபரத்தில் கசங்கி இருக்க,முன்னுச்சி முடிகள் அவளது நெற்றியில் சரசம் பண்ணிக்கொண்டிருக்க அதன் மேல் கோபம் கொண்டவன் ‘இரு இரு உன்னை பாத்துக்கிறேன்’ன்று மனதோட நினைத்தான்.

 

முடியின் மீது கோபமா?காதோடு உரசும் கம்மல் மீது கோபமா?காலோடும் உறவாடும் கொலுசின் மீது கோபமா?கையோடு குலுங்கும் வளையல் மீது கோபமா? மேனியை தழுவியிருக்கும் சேலையோடு கோபமா? எதனால் கோபம்? என் உடமை அது நீ எப்படி தழுவலாம் என்கிற கோபம்.

 

இந்த காதல் பொல்லாதது,உயிரும்,உணர்வும் உள்ள ஒருவனை உயிரற்ற மற்றும் உணர்வற்ற பொருளோடு அல்லவா கோபம் கொள்கிறான்,இந்த காதலின் பைத்தியம் அன்றோ?

 

தன் பார்வையை கீழே எடுத்து சென்றவனின் விழிகளின் மொழி அறியா குழந்தை அல்லவே அவள்.

 

அவனின் பார்வை பாவையையும் மயக்கவே செய்தது.சுற்றும்,முற்றும்,உள்ளும்,புறமும் அனைத்தும் மறந்து போனால் மீரா அவளின் நினைவுகளில் இப்பொழுது அழகிய நிகழ்வுகள் மட்டுமே,சிறு வயதில் அவள் அடித்த கூத்தும்,லூட்டிகளும் உதய்யின் மேல் அவள் வைத்திருந்த அன்பும், இவை மட்டுமே.

 

 அவளை பொறுமையாக ரசித்தவன் “ஏன்டி ஜிலேபி”என்றான் கிரக்கமாக.

 

“ம்…”மீரா.

 

“பேசமாட்டியா”

 

“ம்கூம்”

 

“பேசாட்டி பரவால என் டவுட் க்ளியர் பண்ணு”உதய்.

 

அவள் அவனை விழி உயர்த்தி நோக்க 

 

“உண்மையிலே நீ இவ்ளோ அழகா?”என்றானே பார்க்கணும்.

 

அவனை அவள் கடுப்பில் முறைக்க.

 

“இல்ல,நீ குழந்தைல ரொம்ப சப்ப ஃபிகாரா இருப்ப,அதான் எப்படி இப்படி ஆனன்னு”என்று கூறியவனை இவள் துரத்த,ஓடியவன் கடைசியாக அவனே அவளிடம் சிக்கியவன் அவளின் முன்னுச்சி முடிகளை மேன்மையாக அவனது உதடுகளால் ஊதி தள்ளினான், உடலின் சூடு இருவருக்கும் அதிகரிக்க, அவளது நெற்றியில் ஈரமுத்தம் ஒன்றை வைத்தவனின் உதட்டின் மொழி அவளை கிறங்க செய்தது, அந்த முத்தம் அவளுக்கு சிலிர்ப்பை தர கண்களை மூடி அணுபவித்தவளுக்கு,மனம் இலகுவாகி வானத்தில் பறக்கவைக்க, அவள் கண்களின் நிலையை கண்டவன் அவளை தன் உயிர் பாதியில் சேமிக்க தன்னோடும்,இதயத்தோடும் இணைத்தான்.

 

அவனின் அணைப்பில் அழகாய் அடங்கியவள், அவனின் உள்ளத்தோடு தன் உள்ளத்தை பொறுத்திக்கொண்டவள் நிம்மதியாய் கண் மூட.

 

இன்று இந்த நிமிடம் ஏனோ ரசனையாய் இருந்தது மீராவிற்கு,ரசனை உண்மையில் யாருக்கு ரசனை அதிகம்,ஆண்களுக்கா? பெண்களுக்கா?

 

ரசனை வாழ்வின் ஒரு அங்கம் பெண் ஒவ்வொரு விடயத்திலும் தன் ரசனையின் ஆதிக்கத்தை செலுத்த விரும்புவாள் என்பது உண்மை,அதிலும் அவர்களுக்கு சுயநலம் கிடையாது தனக்காக,பிறருக்காக என்றெல்லாம் அவள் பிரித்தெடுப்பது கிடையாது.

 

ஆண்களின் ரசனை என்பது தன்னவளிடத்தில் தன் ஆதிக்கத்தை செலுத்த விரும்பும்,அவளுக்காக அவன் எடுக்கும் ஒவ்வொரு பொருளும் காதல் நிறைந்தது, ரசனை நிறைந்தது தன்னவளுக்காக அவர்கள் எடுக்கும் பொருளை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாதே.

 

இவர்களை ஏகாந்தத்தை கலைக்கவென்றே வந்தது அந்த கூட்டம்.

 

_தொடரும்_

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!