உள்ளத்தின் காதல் நீங்காதடி-14

உள்ளத்தின் காதல் நீங்காதடி-14

காதல்-14

காதலில் காமம் உண்டு. ஆனால் காமத்தில் காதல் இல்லை. காமம் கலக்காத காதலும் இங்கே உண்டு. காதல் கலக்காத காமம் இங்கே உண்டு. கிளர்ச்சி,ஈர்ப்பு இவை காதலுக்கு சொந்தம். காமத்தில் சேராது.

####

சிலரது காலடி ஓசைகள் உதய்யைத் தாக்கியது. அதில் தன்நிலை மீண்டவன் “மீரா”என்றான் அவசரமாக.

அவள் அவனின் மார்பு சூட்டில் இளைப்பாறிக்கொண்டிருந்த ஏகாந்தத்தை விலக்க விரும்பாது அவனோடு ஒன்றியே இருந்தாள்.

“மீரா நாம கிளம்பனும்” என்று இம்முறை அவன் அழுத்தத்தை கூட்ட, தன்னை சுதாரித்தவள் அவனிடமிருந்து பிரிந்து அவன் முகம் காண வெட்கி,பின் தன்னையே கடிந்துக்கொண்டாள்.

அவள் முகத்தில் தோன்றி மறைந்த கலவையான உணர்வுகளை உள்வாங்கியவனின் மனமும் உள்ளாசமாய் சிரிக்க அந்த சிரிப்பை உதட்டோடு மறைத்தவன்.

“கிளம்பலாம்” என்று அவளது தளிர் விரல்களைப் பற்றினான். இம்முறை அவள் அதிர, சிரித்துவிட்டவன்…

“கட்டி பிடிச்சு,எக்ஸ்ட்ராலாம் போயாச்சு. இப்போ கைய பிடிச்சதுக்கே இப்படியா?”என்று அவளை அந்த இருளிலும் சிவக்க வைத்தவன் கேள்வியை ரசித்தவள் .

“என்ன எக்ஸ்ட்ரா பண்ணினோமாம்?” என்று வேறு கேட்டுவிட.

“அது வாயால எல்லாம் சொல்ல முடியாது.கொஞ்ச நேரம் கழிச்சு மாமா பண்ணிக் காட்டுறேன். பாப்பாக்கு புரியுற வரை சொல்லிதரேன்” என்று கூறி அவளை இம்சித்தவன் , “இப்போ லெட்ஸ் ரன்” என்றான்.

என்ன ஏது புரியாது வேறு உலகத்தில் சஞ்சரித்தவள் அவனின் கைகளுக்குள் தன்னை முழுமையாக அடக்கி அவனோடு பயணித்தாள்.

சிறிது தூரம் ஓடியவர்கள்,”மீரா… இது காடு. இன்னும் உள்ள போக முடியாது. இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. இனி சென்னை போறது சாத்தியமில்லாத விஷயம். நம்மல அந்த ஆளு வேற ட்ரேஸ் பண்ணிகிட்டு இருக்காரு. இன்னைக்கு எப்படியாவது சமாளிக்கணும்” என்றான்.

அவளுக்கு இப்பொழுது தான் இந்த விஷயத்தின் சீரியஸ்னஸ் புரிந்தது. தன் மடதனத்தை நொந்தவள் “அம்மா…அம்மா கிட்ட சொல்லனும்” என்றாள் .உடனே தனது அழைப்பேசியை தேடியவள் அது கிடைக்காது போகவே,கடைசியாக காரில் விட்டது நியாபகம் வந்தது.

“ஐயோ”என்று கத்தியவள் காரை நோக்கி ஓட போக,இரண்டு முறை அவள் ஓடுவதை கண்டவன் இம்முறை அவளைப் பிடித்து விட்டான்.

“மேடம்,எங்க போறீங்க?”என்றான்.

“காருக்கு,போன் வேணும்”என்றாள்.

“போங்க,போங்க. அப்படியே அங்க கொஞ்சம் ரௌடி பசங்க இருப்பாங்க அவுங்க கூட உக்காந்து கொலை செய்வது எப்படின்னு கத்துகிட்டு,திரும்ப வரும்போது சில யானைகள் இருக்கும். அது கூட செல்பி எடுத்துட்டு வாங்க”என்று அவன் முடிக்க.

அவனைத் தாறுமாறாய் முறைத்தவள் “என்ன நக்கலா?”என்றாள்.

“பின்ன என்ன விளையாடுறியா? இப்போ அங்க போறது வெரி டேஞ்சர்‌ அசால்ட்டா போன் எடுக்க போறேன்னு சொல்ற? அதோட காடுக்குள்ள என் தாத்தாவும் சரி உன் தாத்தாவும் சரி யாரும் டவர் நட்டு வைக்கல” என்றான் கோபமாக.

“இப்போ எதுக்கு என் தாத்தாவை இழுக்கிற” என்றாள் உக்கிரமாக.

“நீ மட்டும் என் தாத்தாவை அப்போ இழுத்த. பழிக்கு பழி”என்றான்.

(மீன் வைல்…  டூ தாத்தாஸ் இன் ஸ்கை- இதுங்க ஓயமா எங்களை எதுக்கு கூப்பிடுதுங்க? பைத்தியங்க!)

தலையிலே அடித்துக்கொண்டவள் “என்னோடது ஏர்டெல் காட்டுகுள்ளயும் டவர் இருக்கும்”என்றாள் பெருமையாக.

“விளங்கிடும்”என்று தலையில் உண்மையாகவே அடித்துக் கொண்டவன். “இங்க பாரு மீரா பீ சீரீயஸ். விளையாட டைம் இல்ல”என்றான்.

“விளையாடுறேனா?”என்று அதிர்ந்தவள்.  “இங்க பாருங்க நானும் சீரீயசாகத்தான் சொல்றேன். நீங்கதானே சொன்னீங்க. இன்னைக்கு நம்ம சென்னை போறது பாஸீபில் இல்லன்னு. அப்பறம் என் வீட்டுக்கு சொல்ல வேணாமா? ஒரு சிலர் மாதிரி என் மேல அக்கறை இல்லாதவங்க கிடையாது அவங்க. என் மேல உயிரையே வச்சிருக்காங்க. இந்நேரப் துடிச்சுட்டு இருப்பாங்க” என்றாள் குத்தலாக.

இம்முறை உதய்யிற்கு கோபம் வந்துவிட்டது. அவளைத் தன்னை நோக்கி திருப்பியவன், “என்ன நக்கல் உனக்கு? எப்படியெல்லாம் குத்தலா பேசுற? கொஞ்சமாவது அடுத்தவங்க நிலைமையையும் யோசிக்கனும். உன்னை பத்தி மட்டுமே,உன்னோட இடத்துல இருந்து மட்டுமே யோசிக்கிற. அதுதான் உன் பிரச்சனை. நீ சரி அப்டிங்கிறதுக்காக மத்தவங்கலாம் தவறுன்னு நீயே ஏன் முடிவு பண்ணிக்கிற” என்றான் கோபத்தோடு.

அவளிடம் பதில் இல்லை. அந்த கேள்வி அவளை சாட்டையாய் சுழற்றியது. ‘உண்மைதானே சுயநலமாக இருந்துவிட்டேனோ?’ ‘என்று யோசித்தவளுக்கு நிறைய கேள்விகள் தோன்றி மறைந்தது.

அவளின் புருவ முடிச்சுகள் அவனை இலக வைக்க “யோசி, நல்லா யோசி”என்றான்.

தன்னை அவனிடமிருந்து விடுவித்துக் கொண்டவள் “ஃபோன் வேணும்” என்றாள்.

“உனக்கு எதுவுமே ஒரு தடவை சொன்னா புரியாதா? ஏழு தடவை சொல்லனுமா? அப்படி சொல்லி புரிய வைக்க நீ என்ன குழந்தையா?” என்றான் உதய் கடுப்பில்.

“நான் உங்க போனைக் கேட்டேன்”என்றாள் மீரா.

“என் போனும் காரில் தான் இருக்கு”என்றான்.

“ம்ப்ச்,வேற வழி இல்ல நான் போறேன் எடுக்க”என்று அவள் முடிப்பதற்க்குள்.

“அறஞ்சேனா பாரு. லூசாடி நீ. வாய் கொஞ்ச நேரம் தான் பேசும் அடுத்து கை தான் பேசும். அறிவேயில்லையா உனக்கு?”என்றான் கடுங்கோபத்தில்.

“போதும் ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்காதீங்க. என்ன பத்தி உங்களுக்கு எந்த கவலையும் தேவையில்லை. நான் போகத்தான் பேறேன்” என்றாள் மீரா பிடிவாதமாக.

“மீரா… எப்போ பிடிவாதம் பிடிக்குறதுன்னு வேணாம். புரிஞ்சுதான் பேசுறியா?”என்றான்.

“ஆமா… இப்போ எனக்கு எப்படி தெரியுமா இருக்கு? என் குடும்பம் எனக்காக எவ்ளவோ பண்ணியிருக்கு? நான் அவங்களுக்காக எதுவுமே பண்ணினதில்லை. எப்பவுமே அவங்களுக்கு வேதனைத்தான் என்னால” என்றாள் அழுகையுடன்.

அவளுடைய அழுகை அவனை அசைத்து பார்த்தது. அவளின் இடது தோளில் கை வைத்தான் உதய்.

“உங்களுக்கு தெரியாது. நான் ஒரு பத்து நிமிஷம் லேட்டா வந்தாலே என் அம்மா துடிச்சுப்போய்டுவாங்க. வாசல்லையே உக்கார்ந்து ரோட்டை பார்த்துட்டு இருப்பாங்க. இன்னைக்கு அவுங்க எப்படி எல்லாம் துடிக்குறாங்களோ” என்றாள் தேம்பளுடன்.

அவளது அழுகையை பார்க்க சகிக்காதவன் “மீரா,ரிலாக்ஸ்… ப்ளீஸ்” என்றான்.

“ப்ளீஸ்,போனை மட்டும் எடுத்திட்டு வந்திடலாம். பை சான்ஸ் டவர் கிடைச்சா நான் அவங்களுக்கு ஏதாவது சொல்லி சமாளிச்சிடுவேன்” என்றாள் தேம்பலுடனே.

சற்று யோசித்தான் உதய் “சரி,போகலாம் வா”என்றான்.

*****************

மித்ரனுக்கு கோபம் வந்தது. தன் தங்கை மேல் கடும்கோபத்தில் இருந்தவன் அவளைத் தேடிக் கொண்டிருந்தான்.

அவளது அன்னையோ உணவு ஆகாரம் இன்றி அழுது கரைந்துக் கொண்டிருந்தார்.

மித்ரனுக்கு மனம் குமறியது ‘தன் தங்கையா இப்படி செய்தது? தன்னிடம் ஏதும் சொல்லாமல் எப்படி இப்படி தைரியம் வந்தது அவளுக்கு?’ என்று.

அவளது கல்லூரி தோழி ஒருத்திக்கு அழைத்து மீராவைப் பற்றி கேட்டவனுக்கு அவள் இன்று கல்லூரிக்கு வரவில்லை என்ற செய்தியே தூக்கி வாரி போட, அதிர்ந்து கலங்கிவிட்டான்.

அவளிடம் சற்று நேரம் துருவி துருவி விசாரித்ததின் பலனாக அவள் நேற்று கடைசியாக சுபியிடம் பேசினதாக தகவல் கிடைக்கவே, அவளிடமிருந்து சுபியின் எண்ணை வாங்கியவன், அவளுக்கும் அழைத்து பார்க்க, அதுவும் அனைத்து வைக்கப்பட்டிருக்க தலை வலித்தது மித்ரனுக்கு.

மறுபடியும் அதே தோழிக்கு அழைத்து அவன் சற்று கெஞ்சி கேட்கவும், இன்று கல்லூரியில் நடந்த கலவரத்தைக் கூறியவள் சுபியையும்,மீராவையும் சேர்த்துதான் அவர்கள் தேடினார்கள் என்ற தகவல் உள்ளத்தில் அதிர்வைக் கொடுத்தது.

சில கேள்விகளைக் கேட்க அவள் நேற்று தங்கள் அனைவரிடமும் திருமணத்தைப் பற்றி கேட்டது இவர்கள் நிராகரித்தது அனைத்தையும் கூறி சுபியின் தந்தை யார் என்பதையும் கூறி வைத்துவிட்டாள்.

பயந்து போனான் மித்ரன். அவனுக்கு நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருந்தது. தன் தங்கைக்கு ஏதும் நேரக்கூடாது என்று கலங்கி நின்றான் அந்த அண்ணண்.

பின் அவள் மேல் கோபம் வந்தது. இவளுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று.

அம்மாவிடமும் கூறாது, “நான் அவளைக் கூடிட்டு வரேன்மா பயப்படாதே” என்று மட்டும் கூறியவன் அவளை தெரு தெருவாக தேடிக் கொண்டிருக்கிறான்.

நேரமாக ஆக பயமும் கலக்கமும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு ஏற, சரியாக அந்நேரம் ஒரு அழைப்பு.

மீராவாகவும் இருக்கலாம் என்று வண்டியை ஓரம் கட்டி எடுத்து பார்த்தவனிற்கு புது எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பு பீதியையே கொடுத்தது.

பயத்தை மறைத்து போனை காதிற்கு கொடுத்தவன் “ஹலோ”என்றான்.

“என்ன தம்பி,உன் தங்கச்சியை தேடுறியா?”என்ற ஒரு குரல்.

அவனுக்கு பயம் பிடித்துக் கொண்டது.  இருந்தும் அதை மறைத்தவன் இந்த நேரத்தில்தான் நாம தெளிவா இருக்கணும்னு முடிவெடுத்து பேசினான்.

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை ராங் நம்பர் வைங்க”என்றான் கடுப்பில்.

“ஹா…ஹா…இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த ராங் நம்பருக்கு நீயே கூப்டுவ” என்ற குரல் ஒரு பீப் சத்தத்தோடு ஓய்ந்தது.

ஓய்ந்து போனான் மித்ரனும்.

*************

மெது மெதுவாக பூனை நடை பயின்ற உதய்யின் பின் பொறுமையை மிகவும் சிரமப்பட்டு அடக்கியபடி நடந்து வந்தாள் மீரா.

ஒரு கட்டத்தில் கடுப்பானவள் அவனைத் தள்ளிவிட்டு முன்னேறினாள். சில அடிகள் எடுத்து வைத்ததும் ஒரு சத்தம் “ஸ்…ஸ்…”சல சல வென ஏதோ ஊறும் சத்தம்.

ஏனோ மனம் பதைபதைத்தது மீராவிற்கு. திரும்பி அவள் உதய்யை பார்க்க அவனோ ‘நீ யார்?’என்ற ரீதியில் அவளை கடக்க, அவனை பின் தொடர்ந்தவள்.

“அ…து என்…ன சத்…தம்?”என்றாள் ஹஸ்கி வாய்ஸில்.

“ம்…பாம்பு”என்றான் மித்ரனும் ஹஸ்கியில்.

“பாம்பா??”என்று அவள் கத்த அவசரமாய் அவள் வாயைப் பொத்தியவன், “கத்தி நீயே ஒரே ஒரு பாம்பு மட்டும் இருக்கிற இடத்துக்கு பல மிருகத்தை வரவச்சிடாத”என்று அலுங்காமல் ஒரு குண்டை வேறு போட்டு வைக்க.

“என்னாது அணிமல்ஸ் வருமா?”என்று அலறினாள்.

“பின்ன, காடுக்குள்ள வேற என்ன இருக்கும்னு நினைக்குறீங்க மேடம்”.

இவ்வளவு நேரம் சாதரண காடு என்ற ரீதியில் இருந்தவளுக்கு பயம் வேறு முகத்தைக் கருக்க வைத்தது.

சுற்றி பார்த்தாள், கரும் இருட்டு. கண்ணுக்கு தெரிந்த வரை இருட்டு மட்டுமே. சில விநோதமான சத்தங்களும். ‘ஸ்..ஸ்…’ ‘க்வாக் க்வாக்…’  இத்தோடு சில நேரங்களில் காட்டில் உள்ள மரங்கள் வேறு அசைந்து தன் இருப்பைக் காட்ட சலசலத்தது.

இதை தவிர இவர்கள் நடக்கும்போது வரும் சத்தம் அந்த காடு ஏதோ பேய் படத்தை அவளுக்கு நினைவு படுத்த இம்முறை உதய்யின் தோள்களை ஒட்டிக்கொண்டாள்.

சிறிது தூரம் சென்றதும் அவன் நிற்க, அவன் மேல் மோதி நின்றாள் மீரா. அவனை அவள் முறைக்க.

அவன் சற்று தள்ளி எதையோ காண்பிக்க, அந்த இருட்டில் அவளுக்கு எதுவும் சரியாக தெரியவில்லை. சற்று கூர்ந்து கவனிக்க ஏதோ ஊர்வது தெரிய “அம்மா”என்று அலற போனவளைத் தடுத்தவன்,

அவள் உதட்டில் தன் ஆள்காட்டி விரலால் மூடி “உஸ்…”என்றான்.

ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு “வா” என்றான்.

மீராவோ, “இல்ல பயமா இருக்கு”என்றாள் அழும் குரலில்.

“நீ தானே போன் கேட்ட,வா”என்றான் உதய்.

“இ…ல்ல ப்ளீஸ்”என்றாள் மீரா.

“அப்போ நீ இங்கையே இரு. நான் போய் போன் எடுத்திட்டு வரேன்”என்று அவன் நகர போக.

“ஏதேய்,” என்று அழுதே விட்டாள் மீரா.

அதில் அசையாத உதய்யோ “என்ன எதுக்கும் ஒத்துக்காட்டி என்னதான் பண்ணணும்ங்கிற”என்றான்.

“நீங்க,என்ன தூக்கிட்டு போங்க பீளீஸ்”என்றாள்.

“ஏதேய்,விளையாடுறியா? உன்ன தூக்கனுமா? நீ என்ன குழந்தையா?”என்று உதய் கடிய.

கண்களில் கண்ணீர் வற்றாமல் வடிய மனம் இலகியவன் “சரி சரி டேன்ஞ்சர் ஜோன் தாண்டுற வற தூக்குறேன்,கண்ணை துடை”என்றான்.

சற்றே அவள் தெளிவடைய அவளை நெறுங்கியவன் “அது எப்படி டி பொண்ணுங்க இவ்ளோ தெளிவா இருக்கீங்க எனக்கு என்ன ஆனாலும் பரலால நீ சேப்பா இருக்கனும், அதானே உன் ப்ளானு”என்று அவளை அவன் இருகைகளில் ஏந்திக்கொள்ள போகையில்.

“ஹே,இரு இரு ,உன்னை நான் தூக்கிட்டு போனா எனக்கு நீ என்ன தருவ?”என்று அவன் அதி முக்கியமாக ஒரு கேள்வியை கேட்க.

திரு திருவென அவள் முழிக்க தலையில் அடித்துக்கொண்டவன்,”எனக்கு என்ன வேணுமா நான் எடுத்துக்குறேன்,டீலா”என்றான்.

‘இவனை நம்பலாமா?’என்று அவள் மனதில் பட்டிமன்றம் நடத்த.அவள் யோசிப்பதை கண்டவன்.

“என்ன,டைம் ஆகுது,அப்றம் உன் இஷ்டம்”என்று அவன் முன்னேற போக.

“ஹே,இரு இரு,அது வந்து டீல்”என்றாள்.

உள்ளாசமாக சிரித்துக்கொண்டான் உதய். அதில் அவளுக்கு பக்கென்று இருக்க. இருகரங்களில் அவளை ஏந்திக்கொண்டவனின் மனது குளிர்ந்தது.

பிற்காலத்தில் அவன் கேட்கும்போது கொடுக்கும் நிலைமையில் அவள் இருப்பாளா?

பிறகு வாங்கு கொள்கிறேன் என்று சொல்லும் வரம்,என்றுமே சாபம் அன்றோ?அது தான் இதிகாசத்திலும் கூறப்பட்டது.

தவறிலைத்தாளோ மீரா?

“கையில் மிதக்கும் கனவா நீ,

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கணக்கவில்லையே.

நுறையால் செய்த சிலையா”

மனதோட உதய் பாட,அவனின் முகத்தில் தோன்றிய உணர்வோடு ஒன்றினாள் மீரா.

-தொடரும்-

 

Leave a Reply

error: Content is protected !!