எங்கே எனது கவிதை – 27

2017-08-02-07-35-17-0d62b0e3

எங்கே எனது கவிதை – 27

27 

ஆதிராவை அழைத்துக் கொண்டு கார்த்திக்கும், சரவணனும் அவர்களது வீட்டிற்கு வந்தனர்.. இருவரையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவதற்காக சரவணன் காருடன் வந்திருந்தான்..

“மெல்ல இறங்கு ஆதிரா..” கார்த்திக் ஆதிராவிடம் சொல்லிக் கொண்டே, அவள் இறங்குவதற்காக கார்க் கதவைப் பிடித்துக் கொண்டு நிற்க,

“வாங்க அண்ணி.. முதல்முறை எங்க வீட்டுக்கு வரீங்க.. உங்கள் வரவு நல்வரவாகுக… வலது காலை எடுத்து வச்சு வாங்க..” இறங்கும் அவளைப் பார்த்து, சரவணன் கேலி செய்ய,

“எஸ். பி..” என்று சிரித்தவள்,

“நான் ஏற்கனவே உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்.. உங்க அண்ணா என்னைக் கூட்டிட்டு வந்திருக்கார்..” என்றபடி கீழே இறங்கியவள், அந்த இடத்தைப் புதிதாகப் பார்த்தாள்.    

அவள் அப்படி பார்த்துக் கொண்டிருக்கவும், “என்னவோ ஏற்கனவே வந்திருக்கேன்னு சொன்னா? இப்போ என்னவோ புதுசா பார்த்துட்டு இருக்க?” சரவணன் அவளை கேலி செய்துக் கொண்டிருக்க, கார்த்திக் அவனை அடித்தான்..

“சரி.. சரி.. அவளை ஒண்ணும் சொல்லல.. நீ அவளை மேல கூட்டிட்டு போடா அண்ணா.. நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்..” சரவணன் சொல்ல, கார்த்திக் தலையசைத்துவிட்டு, ஆதிராவின் கையைப் பற்றிக் கொண்டான்..

“வாடா கண்ணம்மா நாம மேல நம்ம வீட்டுக்குப் போகலாம்..” கார்த்திக் அழைக்க,

“கார்த்திக். இது நான் அன்னைக்கு வந்த வீடு இல்ல தானே.. இது புதுசா இருக்கு..” ஆதிரா கேட்க,

“இல்லடா.. அது நாங்க இருக்கற வீடு.. இது நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் சந்தோஷமா நாம வாழப் போற வீடு.” கார்த்திக் சொல்லிக் கொண்டே லிப்ட்டின் அருகே செல்ல, ஆதிரா அவனைத் திகைப்பாய் பார்த்தாள்..

“என்ன சொல்றீங்க? இல்ல.. எனக்குப் புரியல..” அவள் புரியாமல் கேட்க,

“ஹ்ம்ம்.. நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் நாம சந்தோஷமா வாழறதுக்காக நான் நமக்காக வாங்கி இருக்கற வீடு..” கார்த்திக் சொல்லிக் கொண்டே, லிஃப்ட்டில் மூன்றாவது தளத்தை அமுக்கிவிட்டு, ஆதிராவைப் பிடித்து தனக்கு முன்னால் நிறுத்திக் கொண்டவன், அவளது கன்னத்தைத் தனது கைகளில் தாங்கி,

“எங்க அம்மா உன்னை எந்த விதத்துலையும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு தான் இந்த ஏற்பாடு.. நம்ம கல்யாணம் முடிஞ்ச அப்பறம் உனக்கு சப்ரைசா காட்டலாம்ன்னு நினைச்சேன்.. இப்போ இந்த சூழல்ல உனக்கு காட்ட வேண்டியதாகிப் போச்சு…” என்று சொன்னவன், மூன்றாவது தளம் வரவும், அவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவை அழைத்துக் கொண்டு, தனது வீட்டின் முன்பு சென்று நின்றான்.

“கார்த்திக்.. என்ன இதெல்லாம்.. என்ன என்னவோ சொல்றீங்க?” ஆதிரா திகைப்புடன் கேட்க,

“நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம லைஃப் பீஸ்புலா இருக்கணும்.. நம்ம பசங்க ஒரு நல்ல குடும்பச் சூழல்ல வளரணும்.. எங்களை மாதிரி இருக்க கூடாது.. எனக்கு அவ்வளவு தான் வேணும். நம்ம வீடு முடியணும்ன்னு தான் நான் இத்தனை நாளா கல்யாணத்தைப் பத்தி பேச்சு எடுக்கலை.. இப்போ வேலை முடிஞ்சிருச்சு.. வீட்டுக்கு தேவையான எல்லாமுமே வாங்கிட்டேன்.. சோ நாம கல்யாணம் செய்துக்கலாம்..” என்றவன் வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு நிற்க, சதாசிவம் கதவைத் திறந்தார்..

“வாடா கார்த்திக்.. வாம்மா..” என்று இருவரையும் புன்னகையுடன் வரவேற்றவர்,

“கொஞ்சம் அங்கேயே நில்லும்மா.. முதல் முதலா வீட்டுக்கு வர.. அம்மாவை ஆரத்தி எடுக்கச் சொல்றேன்.. திருஷ்டி எல்லாம் கழியட்டும்..” என்று கூறியவர்,

“சம்மந்தியம்மா.. லக்ஷ்மி.. ரெண்டு பேரும் வந்தாச்சு.. சீக்கிரம் வந்து ஆரத்தி எடுங்க..” என்று சந்தோஷமாகச் சொல்லவும், கார்த்திக் திகைப்பாக அவரைப் பார்த்தான்..       

“என்னடா அப்படிப் பார்க்கற?” சதாசிவம் வம்பு வளர்க்க, 

“இல்ல அம்மா வந்து இருக்காங்களா? எப்படி? உலக அதிசயமா இல்ல இருக்கு?” கார்த்திக் கேட்ட நேரம், அதைக் கேட்டுக் கொண்டே வந்த சரவணன்,

“என்னது?” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவர்களுடன் நிற்க, இருவரையும் அடித்த ஆதிரா,

“உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கொழுப்பா போச்சு.. பேசாம நில்லுங்க.. இல்ல அடி பின்னிடுவேன்..” என்று மிரட்டவும், இருவரும் வாய் மீது விரலை வைத்துக் கொண்டு நிற்க, அப்பொழுது அங்கு வந்த சுதா, இருவரையும் கேள்வியாகப் பார்க்க, வரமஹாலக்ஷ்மியோ, அந்த அசதியிலும், அழுது வீங்கிய கண்களோடு இருந்தாலும், அழகே உருவாக, செப்புச் சிலை போல நின்றிருந்தவளைப் பார்த்து, விழிகளை விரித்தார்.

“கார்த்தி.. ஆதிராவாடா..” கண்களை விரித்து அதிசயமாக அவர் கேட்க,

ஆதிராவைத் திரும்பிப் பார்த்தவன், “இல்லம்மா.. அப்படியே இங்க மேல வரும்போது லிஃப்ட்ல ஒரு பொண்ணு வந்துச்சு.. பார்க்க நல்லா இருந்துச்சுன்னு பிடிச்சு இழுத்துட்டு வந்தேன்..” நக்கலாக அவன் சொல்லவும், ‘ஹான்’ என்று வரமஹலக்ஷ்மி பார்க்க, ஆதிரா அவனை முறைத்து, வாய் மீது விரலை வைக்கவும், கார்த்திக் பழிப்பு காட்டி விட்டு நிற்க,

“டேய் பொய் தானே சொல்ற. இது ஆதிரா தான்.. அவ பேசாம இருன்னு மிரட்டினா நீ கம்முன்னு நிக்கற பாரு..” என்று சொன்னவர், அவளது கன்னத்தை வழித்து நெட்டி முறித்து,

“சேர்ந்து நில்லுங்க..” என்று கூறிவிட்டு, சுதாவின் கையில் இருந்த ஆரத்தித் தட்டை பிடித்துக் கொண்டு சுற்ற, கார்த்திக் கேள்வியாக சதாசிவத்தைப் பார்த்தான்.

கண்சிமிட்டி அவர் கார்த்திக்கைப் பார்த்து நாக்கைத் துருத்தியவர், “வாடாம்மா.. வந்து நல்லா குளிச்சிட்டு வா.. அம்மா உனக்கு பிடிச்சதை சமைச்சு வச்சிருக்காங்க.. சாப்பிடலாம்..” ஆதிராவை அன்போடு அழைக்க, உள்ளே வந்தவள், வரமஹாலக்ஷ்மியின் கால்களைத் தொட்டு வணங்கினாள்..

“நல்லா சந்தோஷமா இருக்கணும் கண்ணு..” என்று அவளது கன்னத்தைத் தட்டி, அவளது கையைப் பிடித்து  அவளை வீட்டின் உள்ளே அழைக்க, பாலகிருஷ்ணன் தனது மகளை ஆசைப் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தார்..    

“வாங்க அண்ணி.. நீங்க வந்த நேரம் நல்ல நேரம் தான் போல.. பூமி எல்லாம் தல கீழா சுத்திட்டு இருக்கு..” சரவணன் கேலியோடு அழைக்க,

“நீயும் என்கிட்டே அடி வாங்க போற எஸ்.பி.. பேசாம வா..” என்று சரவணனையும் மிரட்டிவிட்டு, வரமஹாலக்ஷ்மியுடன் உள்ளே நுழைந்தவள், வீட்டைச் சுற்றி பார்வையை ஓட்டினாள்..

அவளது பார்வை வியப்பில் விரிய, “வீடு பிடிச்சிருக்கா?” அவளது அருகில் வந்த கார்த்திக் கேட்க,

“சூப்பரா இருக்கு கார்த்திக்.. எல்லா திங்க்சும் ஏற்கனவே வாங்கிட்டீங்களா?” ஆச்சரியமாக அவள் கேட்கவும்,

கார்த்திக் பதில் சொல்ல வாயெடுப்பதற்குள், “அதெல்லாம் சார் பார்த்து பார்த்து வாங்கி வச்சிருக்கார்.. உனக்கு தேவையான எல்லாமே இருக்கு.. உள்ள போய் பாரு.. சப்ரைஸ் ஆகிடுவ..” சரவணன் நக்கல் அடிக்க, கார்த்திக் அவனது முதுகில் ஒன்று வைத்தான்..

“அவன் கூட பேசாம நீ என்கூட வா.. காலையில அந்த சூப் குடிச்சது தான்.. சீக்கிரம் குளிச்சிட்டு வந்து சாப்பிடுவியாம் ” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குச் சென்றான்..

அதற்குள் அங்கு வந்த சுதா, “குட்டி.. நில்லு.. தலையில எண்ணெய் வச்சி விடறேன்.. நல்லா தலை முழிக்கிட்டு வா.. இதோட இந்த கெட்ட நேரம் எல்லாம் முடியட்டும்..” என்றவர், அவளது தலையில் எண்ணெயை வைத்து விட, கார்த்திக் அவளைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்..

கார்த்திக் இட்டுச் சென்ற அறையில் இருந்த குளியலறைக்குள் சென்றவள், “ஹையோ அம்மா என்னோட டிரஸ் எதுவுமே இங்க இல்லையே.. இப்போ நான் என்ன செய்யறது?” திகைப்புடன் கேட்க,

“அட ஆமாடி.. நான் அதைப் பத்தி யோசிக்கவே இல்லையே..” என்றபடி, தலையில் தட்டிக் கொண்டு விழித்துக் கொண்டிருந்த சுதாவைப் பார்த்தவன், புன்னகையுடன், அந்த அறையில் இருந்த அலமாரியைத் திறந்து விட்டு, ஆதிராவை பார்த்துவிட்டு,

“நான் போய் குளிச்சிட்டு வரேன்..” என்று அருகில் இருந்த தனது அறைக்குள் புகுந்துக் கொள்ள, ஆதிரா அந்த அலமாரியைப் பார்த்தாள்.. அதில் இருந்த சில புடவைகளையும், சுடிதார்களையும் பார்த்தவள், சுதாவைப் பார்க்க, அவளது கன்னத்தைத் தட்டியவர்,

“சீக்கிரம் குளிச்சிட்டு வா.. மாப்பிள்ளையும் ஒண்ணுமே சாப்பிடலை போல இருக்கு.. நீ முழிச்சதும் உன் கூட சாப்பிடறேன்னு சொல்லிட்டு இருந்தார்.” என்று சொல்லவும்,

“இதோ வரேன் மா..” என்றவள், வேகமாக உள்ளே செல்ல, அங்கு இருந்த பொருட்களைப் பார்த்த பிறகு தான் சரவணின் கேலி புரிந்தது.. அவள் பயன்படுத்தும் சோப்பு, சாம்பூ என்று அனைத்தும் அங்கு புத்தம் புதியதாக இருக்கவும், ஆதிராவின் கண்கள் மகிழ்ச்சியில் நிறைந்தது..

அவனது அன்பில் மீண்டும் தன்னைத் தொலைத்தவள், வயிற்றில் பசியை உணரவும், வேகமாக குளித்துவிட்டு வந்தாள்..

ஆதிராவும் கார்த்திக்கும் குளித்துவிட்டு வருவதற்குள், சுதா அவர்களுக்கு உணவை எடுத்து வைக்க, குளித்துவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டே, வெளியில் வந்த கார்த்திக், அங்கு அவனுக்காக காத்திருந்த தனது தந்தையைப் பார்த்து, “என்னப்பா.. அம்மா எப்படி அவங்க சீரியலை எல்லாம் விட்டுட்டு இங்க வந்தாங்க? அதுவும் ஆதிராவைப் பார்க்க?” அதிசயமாகக் கேட்க, அதே கேள்வியைத் தாங்கி சரவணன் அவன் அருகில் நிற்க,

“அதுவா.. அது வந்து மருமக கிடைச்ச விஷயத்தைச் சொல்லிட்டு.. ‘நான் இப்போ அவங்களுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்கப் போறேன்.. அங்க பையனோட வீட்ல சம்மந்தி எல்லாம் இருக்காங்க.. உனக்கு அந்தக் கல்யாணத்துல மரியாதை வேணும்ன்னா.. நீ அந்தக் கல்யாணத்துல முக்கியமானவளா இருக்கணும்ன்னா.. உனக்கு பையன் நல்ல பட்டுப்புடவை வாங்கித்தரணும்னா ஒழுங்கா நீ நடந்துக்கோ.. இல்லையா கல்யாணம் முடிஞ்சதும் உன்னை கிராமத்துல கொண்டு விட்டுட்டு, நான், என் பிள்ளைங்க, மருமக, பேரன் பேத்திங்கன்னு சந்தோஷமா இருக்கப் போறேன்..

நீ தான் தனியா சீரியல பார்த்துக்கிட்டு இருக்கணும்.. அதே போல அந்தப் பொண்ணை வேலை வாங்கி, படுத்தி எடுத்து கண்டபடி பேசிட்டு இருக்கலாம்ன்னு நினைச்ச, உன் பையன் அந்த வீட்டுக்குள்ள கூட உன்னை விட மாட்டான்.. இப்போ தனியா தான் போயிருக்கான்.. அப்பறம் மொத்தமா நம்மளை கண்டுக்காம போயிடுவான்.. உன்னோட சொகுசு எல்லாம் செல்லுபடி ஆகாது.. உனக்கு எது வேணும்ன்னு யோசிச்சிகோ’ன்னு மிரட்டிட்டு தான் கூட்டிட்டு வந்தேன்.. ஆனா.. உங்க அம்மா ஆதிராவோட அழகைப் பார்த்து கொஞ்சம் அசந்து தான் போயிட்டான்னு நினைக்கிறேன்..” என்றவர், அவனைத் தட்டிக் கொடுத்து,

“ரொம்ப அருமையான பொண்ணு.. நல்ல குடும்பம் கார்த்திக்.. மனசு நிறைவா இருக்கு..” மனம் நிறைந்து சொன்னவர்,

“சரி.. சீக்கிரம் வா.. சாப்பிடலாம்..” என்று அவனை அழைக்க,

“நீங்க போங்கப்பா நான் வரேன்..” என்றவன், தலையைத் துவட்டிக் கொண்டிருக்க, அப்பொழுது உள்ளே வந்த வரமஹாலக்ஷ்மி,

“கார்த்தி.. இவ்வளவு பெரிய டிவி வாங்கி வச்சிருக்க? இதுல எதுவுமே வராதா? இன்னும் கனக்ஷன் தரலையா? டிவியில ஒரு சேனலும் வரலையே.” என்று கேட்க, மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன்,

“அது சும்மா வாங்கி தான் வச்சிருக்கேன்.. இன்னும் அதுல எதுவும் கனக்க்ஷன் தரள.. அது சினிமா பார்க்கத் தான்..” அவனது பதிலில்,

“அப்போ இதுல சினிமா படம் எல்லாம் வருமா? அப்போ நான் அடிக்கடி இங்க வந்து படம் பார்க்கறேன் சரியா?” என்று கேட்கவும், கார்த்திக் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல்,

“ஹான்.. நல்லபடம் வந்தா சொல்றேன்..” என்றவன், தனது டவலை எடுத்துக் கொண்டு பால்கனிக்குச் செல்ல, சுதா அவனை உணவுண்ண அழைத்தார்..

“அவளும் வரட்டும் அத்தை..” என்றவன், ஆதிராவிற்காக காத்திருக்க, குளித்துவிட்டு அழகான ஒரு சுடிதாரை அணிந்துக் கொண்டு வந்தவளைப் பார்த்தவன், கண் சிமிட்டி புன்னகைத்தான்..

சுதா இருவருக்கும் உணவை பரிமாற, அவர்களுடன் மீண்டும் தானும் தட்டை வைத்துக் கொண்டு அமர்ந்த வரமஹாக்ஷ்மி, “ரொம்ப நல்லா சமைச்சு இருக்கீங்க சம்மந்தியம்மா.. உங்க கைமணம் நல்லா இருக்கு..” என்று உண்ணவும், கார்த்திக் ஏதாவது கோபமாக பேசி விடுவானோ என்று ஆதிரா கலவரமாகப் பார்க்க,

“சாப்பிடு..” என்றவன், பசியில் வேக வேகமாக உண்ண, ஒரு பெருமூச்சுடன் அவளும் உண்டு முடித்தாள்..

சதாசிவமும், பாலகிருஷ்ணனும் எங்கோ சென்றிருக்க, “எனக்கு இதுல ஏதாவது படம் போடேன்.. இதுல படம் வருமாமே.” வரமஹலக்ஷ்மி சரவணனிடம் கேட்கவும், அவன் நக்கலாக கார்த்திக்கைப் பார்க்க, கார்த்திக்கின் பார்வையோ ஆதிராவிடம் இருக்கவும், சரவணன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

சுதா கிச்சனில் ஏதோ செய்துக் கொண்டிருக்க, சரவணனைப் பார்த்து கண்ணடித்தவன், ஆதிராவிற்கு கண்ணைக் காட்டிவிட்டு தனது அறைக்குள் நுழைய, அங்கிருந்த சரவணனைப் பார்த்து, ஆதிரா எப்படி அவனுடன் செல்வது என்று பேந்த விழித்துக் கொண்டு நிற்க,

“நான் அந்த ரூம்ல போய் கொஞ்ச நேரம் தூங்கறேன்..” என்றவன், அங்கிருந்த மற்றொரு அறைக்குள் நுழையவும், வேகமாக கார்த்திக்கின் அறைக்குள் நுழைந்தவளை இழுத்து அணைத்தவன், அவளது முகமெங்கும் முத்தமிட,

“என்ன கார்த்திக் நீங்க.. சரவணன் இருக்கும்போது இப்படி கண்ணைக் காட்டிட்டு வந்தா நான் எப்படி உள்ள வரது?” என்று கேட்க,

“அதெல்லாம் அவனுக்கும் கண்ணு காட்டிட்டு தான் உன்னைக் கூப்பிட்டேன்.. இப்போ எதுக்கு அவன் பேச்சு?” என்றவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனது இதழ்களுக்குத் தோதாக முகத்தை கொடுத்து நின்றவள், அவனது இதழ்களின் அழுத்தத்தில் கரைந்தாள்..

அவளது கன்னத்தைத் தனது இரு கைகளிலும் தாங்கியவன், “உனக்கு இந்த வீடு பிடிச்சிருக்கா? த்ரீ பெட்ரூம் ப்ளாட்.. ஒரு ரூம் அத்தை மாமாவுக்கு.. இன்னொன்னு சரவணனுக்கு..” என்று சொல்ல,

அவனது இதழ்களில் அழுந்த இதழ் பதித்தவள், அவன் சந்தோஷமான அதிர்வில் நின்றுக் கொண்டிருக்கும் பொழுதே, “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இது எப்போ வாங்கினீங்க? எப்படி எனக்காக எல்லா திங்க்ஸ் பார்த்து பார்த்து வாங்கி வச்சிருக்கீங்க? ஐம் இம்ப்ரெஸ்ட் அப்பு குட்டி.. ஐ லவ் யூடா..” என்று சந்தோஷமாக அவனது மூக்கை உரசிக் கொண்டு பேச,

“என் செல்லம்மாவுக்கு நான் செய்யாம வேற யாரு செய்வா? நீ இந்த வீட்டுக்கு வரும்போது எந்த பொருளும் இல்லை.. மறந்துட்டேன்னு கஷ்டப்படக் கூடாது இல்ல.. அதுக்குத் தான்..” என்றவன், மெல்ல அவளது இதழ்களைத் தனது வசமாக்கிக் கொண்டான்..

கண்களை மூடி அவனது இதழ்களில் அவள் கரைந்துக் கொண்டிருக்க, இரண்டு நாள் பிரிவையும் அவளது இதழில் காட்டியவன், மூச்சுக்கு பிரிந்து, அவளது கழுத்தினில் முத்தமிட்டு முகம் புதைத்துக் கொண்டான்..

“அத்தை ரொம்ப இன்னசன்ட்டா இருக்காங்க.. நீங்க அப்படியே மாமா போலவே இருக்கீங்க..” அவனது இதழ்கள் கழுத்தினில் உரசிக் கொண்டிருக்க, கூச்சத்தில் நெளிந்தபடியே அவள் சொல்ல, அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்,

“அது.. இங்க வந்து டிவி பார்க்க அவங்க போடற பிளான்.. அதை எல்லாம் கண்டுக்காதே.. நான் பார்த்துக்கறேன்..” என்றவன், அவளது மூக்குடன் மூக்கை உரசிவிட்டு, மீண்டும் அவளது இதழ்களில் இதழ் பதித்தவன்,

“வா.. நாம வீட்டைச் சுத்தி பார்க்கலாம்.. இந்த வீடு வாங்கின விஷயத்துல தான் சரவணன் என்னை அப்படி சுயநலம் அது இதுன்னு திட்டினான்..” என்றபடி, அவளைத் தன்னுடன் இழுத்துக் கொண்டவன்,

“இது தான் நம்ம பெட்ரூம்..” என்றபடி அவளது முகத்தைக் குறும்பாகப் பார்க்க, முகம் சிவக்க, அவனது மார்பினில் சாய்ந்தவள், அதில் புதைந்துக் கொள்ள, சத்தமாக சிரித்துக் கொண்டே, அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டான்..

அவளுக்கு வீட்டைச் சுற்றிக் காட்டியவன், “நானும் சரவணனும் நாளைக்கு போய் உன்னோட வீட்டை காலி செய்துட்டு வந்துடறோம்.. வித்யாவும் அவங்க ஹஸ்பண்ட் கூட சிங்கப்பூருக்கே போறாங்களாம்..” என்ற விஷயத்தைச் சொன்னவன், அவளை அந்த பால்கனியில் இருந்த ஊஞ்சலில் அமர வைத்து,

“ஆபீஸ்க்கு கூட ஒரு ரெண்டு நாள் லீவ் சொல்லிட்டு, வீட்ல இருந்தே முடிஞ்சா வர்க் பண்ணு.. இல்லன்னா ஒரு மாசத்துக்கு முழுசா லீவ் சொல்லு.. நம்ம கல்யாணம் ஆன அப்பறம் போயிக்கலாம்..” என்றவன், அவளுக்கு எதிரே இருந்த சேரில் அமர்ந்துக் கொள்ள,

“மே ஐ கம் இன்..” சரவணனின் குரல் கேட்க,

“அதான் வந்துட்ட இல்ல.. அப்பறம் என்ன கேள்வி கேட்கற? தூங்கறது போல படுத்து இருந்த? தூங்கலையா?” என்ற கார்த்திக், தனக்கு அருகில் இருந்த இருக்கையைக் காட்டவும், சரவணன் வந்து அமர்ந்தான்..

“தூக்கம் வரல..” என்று கார்த்திக்கிற்கு பதில் சொன்னவன்,

“நீ ஒண்ணும் இப்போ வேலைக்கு போக வேண்டாம்.. தெய்வா கிட்ட லீவ் சொல்லிட்டு பேசாம சாப்பிட்டு தூங்கு.. அப்பறமும் அண்ணாவுக்கு வேலைனால உன்னை கூட்டிட்டு போயிட்டு வர முடியலைன்னா நான் உன்னை கூட்டிட்டு போயிட்டு வரேன்.. இனிமே எல்லாம் உன்னை எங்கயும் தனியா விடறது போல இல்ல.. போதும்டா சாமி.. ரெண்டு நாளுல நீ காணும்ங்கறது ஒரு பக்கம்.. பைத்தியக்காரன் மாதிரி இவன் சுத்தினது ஒரு பக்கம்.. திடீர்ன்னு நெஞ்சு வலிக்குதுன்னு இவன் கத்தின கத்தல்ல எல்லாருமே பதறிப் போயிட்டோம்..” சரவணன் சொல்லவும், ஆதிரா கார்த்திக்கை பதட்டத்துடன் பார்க்க,

“சரி.. போதும்டா. அது தான் அவ கிடைச்சிட்டாளே.. இனிமே அதைப் பத்தி பேச வேண்டாம்.. இப்போ இதுக்கு சம்மந்தப்பட்டபங்களுக்கு நான் தண்டனை வாங்கித் தரணும்.. அது மட்டும் தான் என் மைன்ட்ல இருக்கு..” என்ற கார்த்திக்கை சரவணன் தட்டிக் கொடுத்தான்..

“செய்டா.. செய். உன் டேலன்ட்ல எனக்கு நம்பிக்கை இருக்கு..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்த சதாசிவம், “கார்த்தி.. சரவணா.. ஆதிரா..” என்று குரல் கொடுக்க, மூவரும் அவரின் அருகில் சென்றனர்.

“நானும் சம்மந்தியும் இப்போ தான் ஜோசியர் பார்த்துட்டு வந்தோம்.. வர இருபத்தி ஆறாம் தேதி நல்ல முஹுர்த்தம் இருக்காம்.. அதுக்கு இன்னும் பதினேழு நாள் தான் இருந்தாலும் அது தான் உங்க ரெண்டு பேருக்கும் பொருந்தி இருக்கற முதல் முஹுர்த்தம்.. அதுலயே உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னு நாங்க முடிவு செய்திருக்கோம்.. என்ன சம்மந்தியம்மா உங்களுக்கு சம்மதம் தானே..” விஷயத்தைச் சொல்லிவிட்டு, சுதாவிடம் சதாசிவம் கேட்க,

“செஞ்சிடலாங்க.. துணிமணி பத்திரிக்கை மட்டும் தான் வேலை.. மத்தப்படி எல்லாமே தயாரா இருக்கு. அதோட நான் இவ பிறக்கறதுக்காக மருதமலை முருகனுக்கு வேண்டிக்கிட்ட  பொழுது, அவளோட நல்லது எல்லாம் உன் சன்னதியிலேயே செய்யறேன்னு வேண்டி இருக்கேன்.. அது போல இப்போ மருதமலைல அவளோட கல்யாணத்தை வச்சிக்கணும் சம்மந்தி.. அது ஒண்ணு தான் நான் உங்க கிட்ட கேட்டுக்கறது.. செய்யலாமா?” சுதாவின் கோரிக்கையில்,

“சம்மந்தி இதைப் பத்தி சொன்னார்..” என்றபடி கார்த்திக்கைப் பார்க்க, கார்த்திக் தலையசைக்கவும்,

“சரிங்க.. செஞ்சிடலாம்.. அடுத்து ஏற்பாடு எல்லாம் கவனிக்கலாம்.. இங்க அவங்களோட ஆபீஸ் ஆளுங்களுக்கு ஹோட்டல்ல ஒரு ரிசப்ஷன் போல வச்சிடலாம். ஒண்ணும் பிரச்சனை இல்ல.. துணி மணி எல்லாம் இங்கயே வாங்கிக்கிட்டு நாம ஊருக்கு போயிடலாம்..” அடுத்த கட்ட திட்டத்தைச் சொல்ல,

“ஹே.. கல்யாண சாப்பாடு சாப்பிடப் போறோம்.. நல்ல சாப்பாடு.. எங்க வீட்ல கல்யாணம்..” என்று சரவணன் குதூகலத்துடன் கார்த்திக்கைக் கட்டிக் கொள்ள, தங்கள் காதல் கைக் கூடப் போகும் மகிழ்ச்சியுடன் ஆதிராவும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

“அப்பறம் என்ன? அங்க ஊருல எப்படி என்ன ஏற்பாடு செய்யணும்ன்னு சொல்லுங்க.. நாம அங்க சேர்ந்தே போய் செஞ்சிடலாம்.. நீங்க தனியா ஒண்ணும் செய்ய வேண்டாம்..” பாலகிருஷ்ணனிடம் சொன்னவர்,

“டேய் சரவணா.. இங்க எந்த ஹோட்டல்ல ரிசப்ஷன் வைக்கலாம்ன்னு பாரு.. அதுக்கு ஒரு தேதி பார்த்து ஏற்பாடு எல்லாம் பண்ணிடு.. அவங்க கிட்ட இன்விடேஷன் எல்லாம் டிசைன் கேட்டுக்கோ..” என்று சதாசிவம் சொல்லவும்,

“சூப்பர்.. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.. ஜமாச்சிடலாம்..” சரவணன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க,

“யாரோ என்னை லவ் பண்ணக் கூடாதுன்னு வார்ன் எல்லாம் பன்னினாங்க.. உங்களுக்கு அவங்களைத் தெரியுமா கார்த்திக்..” ஆதிரா வம்பு வளர்க்கவும்,

“யாரு அந்த அறிவு கெட்டவன் ஆதிரா?” சரவணனின் கேள்வியில் அங்கிருந்த அனைவருமே சிரிக்க, அந்த இல்லத்தில் நெடுநாட்களுக்குப் பிறகு மகிழ்ச்சி நிறைந்தது..                   

Leave a Reply

error: Content is protected !!