என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 14
சீதாவை பெட்டில் படுக்க வைத்த அந்த நர்ஸ்… அவரது கையில் நரம்பைத் தேடி ஊசியினை குத்தி, டீர்ப்ஸை போட்டுவிட்டார்… ” சார் பார்த்துகோங்க ” என்று அவர் சென்று விட்டார்.
” டேய்… என்னாடா இது…?இப்படி வந்து என்னைய படுக்க போட்டுட்ட, கல்லு தானேடா, அந்தா இந்தான்னு எதாவது செய்து நானே சரி பண்ணிருப்பேன். இங்க கூட்டிட்டு வந்து என்ன என்னமோ கையில மாட்டி தேவையாடா இது…?”
” அதே தான் நானும் கேட்கிறேன் இது உனக்கு தேவையா… ?ஒழுங்க சாப்ட்டு நல்லா தண்ணீய குடிச்சு. யூரீன்போனா இந்த ப்ரச்சனை வந்திருக்காதுல… இப்ப இதெல்லாம் வந்ததேன்னு புலப்பினா என்ன பண்ண…? கொஞ்ச நேரத்துல சரியாகிடும்மா…. ” என்றவனின் எண்ணமெல்லாம் ஜானு,
அவனிடம் என்ன சொல்ல போகிறாள் என்றே இருந்தது. எப்படி தெரிந்து கொள்வது என்றுயோசித்தவன், நர்ஸைப் பார்த்துக்கச் சொல்லி விட்டு வெளியே வந்தவன், வேற நர்ஸிடம் விசாரிக்க அவளோ கேண்டீனுக்கு சென்றதை கூறினாள்.
நேராக அவனும் கேண்டீனுக்கு சென்றான். அங்கே அவள் காத்திருக்க, ஈஷ்வர் தனியாக போன் பேசி கொண்டிருந்தான். அவள் அமர்ந்திருக்க பின்னாடி டேபிளில் அமர்ந்து கொண்டான் ஆர்.ஜே… போன் பேசி முடித்து வந்தவன் அவள் முன்னே அமர்ந்தான்.
” சாரி ஜானவி…, முக்கியமான கால் அதான் டைம் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன்…”
” இட்ஸ் ஓ..கே… ” என மெல்லிதாய் முறுவலிட்டாள்.
‘ ஜானவி நைஸ் நேம்… ‘ தனக்குள்ளே கூறிக்கொண்டான் ஆர்.ஜே. ஒரு காபியை ஆடர் செய்து அதனைப் பருகிக்கொண்டே பேசுவதை கேட்க ஆரம்பித்தான்.
” சொல்லுங்க ஜானவி உங்க வொர்க் எல்லாம் எப்படி போகுது… ?” என்றவன் கொஞ்சம் நேரம் வேலைப் பத்தியே கேட்க அவளோ ஒரு வார்த்தையாக விடையளித்தாள்…
‘ அட வெள்ள பன்னியே! எதுக்கு வந்தியோ அத பேசுடா… எதை எதையோ கேட்டு அறுக்கிறானே! ஜானுமா இவனை கட்டிகாதே, பேசியே கழுத்தறுப்பான் உன்னை…’ அவளை செல்லமாய் அழைத்ததுமின்றி அறிவுரை வேற,
” என் ஓய்ப் இறந்து ஜஸ்ட் சிக்ஸ் மன்த் தான் ஆகுது… எங்க வீட்டுல ஒரே போர்ஸ் கெட்டது நடந்த இடத்தில ஒரு நல்லது நடக்கணும்மா..
நானும் யோசிச்சேன் போனவளை நினைச்சு எதுக்கு வாழ்க்கை வேஸ்ட் பண்ணனும் அதான் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டேன். ஸ்கேண்ட் மேரேஜ்க்காக மேட்ரீமோனியில் அப்ளை பண்ணிருந்தேன்..
ஜகதீஸ் தான் சொன்னான், உங்களை பத்தி, சோ சேட் ரொம்ப கஷ்டமா இருந்தது… இட்ஸ், ஓ.கே நாம மேரேஜ் பண்ணிக்கலாம்… நீங்களும் டாக்டர் நானும் டாக்டர்… நம்ம வாழ்க்கை ஃபினாஸ்பத்தி கவலை இல்லை.
ஆனா, உங்க பையன் தான்…, அவனை வேணா கான்வேன்ட் சேர்த்திடலாம் அவங்க பார்த்துப்பாங்க. அவனுக்காக நீங்க தாராளமா செலவு பண்ணுங்க நான் கேட்க மாட்டேன். நாம ஹாப்பீயா வாழலாம்… ” என்றதும் அவளுக்கு கோபம் வர சட்டென எழுந்தாள்.
” மிஷ்டர் ஈஷ்வர்… நீங்க தேடுற பொண்ணு நான் இல்லை… என் சித்துகாக தான் இந்த ஸ்கேண்ட் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டேன்… ஆனா, அவனை என்னிடம் பிரித்து உங்களுடன் என்னால் சந்தோசமா வாழ முடியாது. நீங்க எதிர்பார்க்கிற சந்தோசம் என்னால கொடுக்க முடியாது… நீங்க வேற பொண்ணை பார்த்துகோங்க…. ” என்றவள் அவன் அடுத்து கூறுவதை தடுத்தவள், வணக்கமே வைத்துவிட்டாள்… ” ஓ.கே தாங்ஸ் பை.., ” என்று சென்றுவிட்டான்.
அவன் செல்வதை கண்டு ஏக பெருமூச்சு விட்டவள் திரும்ப, ஆர்.ஜே நின்றிருந்தான்.
” செமங்க… என்ன மனுசன் இவன் குழந்தையை கான்வேன்ட் விடணுமாமே. போனவளை நினைச்சு வாழ்க்கை நான் ஏன் வேஷ்ட் பண்ணனுமா…? இந்த மாதிரி ஆளுங்க அதுக்காக தான் கல்யாணம் பண்ணுவாங்க போல.. ஆனா உங்க ஆன்ஸ்ர் சூப்பருங்க ” என்றவனை ஏற இறங்க பார்த்தவள்.
“என்ன ஒட்டு கேட்டீங்களா ? ” என கைகளை கட்டிக்கொண்டு கேட்கும் தோரனையில் மாட்டிக்கொண்ட மாணவனாகவும் ஆசிரியராய் இருவரும் நின்றனர். அவளை கண்டு திருட்டு முழி முழித்தவன்.
” நானா.. ஐயோ நான் அப்படியெல்லாம் இல்லங்க… காபி குடிக்க வந்தேன் நீங்க பேசினது கேட்டதுங்க. அதான் புல்லரிச்சுருச்சு பாராட்டீயே ஆகனும் வந்தேங்க…” என்றவனை சந்தேகமாய் பார்த்தாள்.
” அட ! என்னங்க சந்தேகமா பார்க்கிறீங்க… மீ டீசேன்ட் காய் யூ நோ. இங்க இருக்க உங்களை தவிர எல்லாருக்கும் என்னை பத்தி நல்லாவே தெரியும் வேணும்ன்னா கேட்டு பாருங்களேன்… ” என்றவன் ஒரு நர்ஸ்ஸை அழைத்தான்.
அவளும் அவன் அழைத்ததை கண்டு பரவசமாய் கொஞ்சம் வெட்கத்தோடு ஓடி வந்தாள்.. ” சொல்லுங்க சார்.. ” என்று குழைய. அவர்கள் இருவரும் அவளை ஏதோ போல் பார்த்தனர்.
” நான் யாருன்னு உங்க டாக்டருக்கு தெரியல கொஞ்சம் சொல்லுங்க சிஸ்டர்…. ” என்ற அழுத்தினான்.
” மேம்… இவங்க தான் ஆர்.ஜே, டான்ஸ்மாஸ்டர் சினிமா கோரீயோகிராபர்… ” என்றாள்.
எந்தவொரு ஆச்சரியமும் முகத்தில் அவள் காட்டிக்கொள்ளவில்லை.. அதனை எதிர்ப்பார்த்த அவனுக்கோ பெருத்த ஏமாற்றமே.. ” ஓ… எனக்கு தெரியாது. அப்புறம் ஐ ஹெட் டான்ஸ் ஆண்ட் டான்ஸ் மாஸ்டர் … ” என்றவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
‘ ஆர்.ஜே முதல் பந்துலையிலே உன்னை க்ளீன் போல்ட் ஆக்கிட்டாளே இந்த மிளகாய்.. ச்ச நம்ம ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே ! ‘ என நினைத்தவன் அருகில் இருந்த நர்ஸை மறந்தான். அவளோ அவனை கண்டு நிற்க,
” என்ன ? “
” உங்க ஆட்டோகிராப்… ” என இழுத்தாள்.
” சாரி… மூட் இல்லை ” என்றவன் தன்தாயை காணச் சென்றான்.
சாதாரண டீர்ப்ஸ்க்கு முகத்தை பாவமாக வைத்து படுத்திடுந்தார் சீதா…. ” டேய், என்ன தனியா விட்டு எங்க போன…?”
” எம்மா… டீரீப்ஸ் தானே ஏத்தினாங்க… என்னமோ ஆப்ரேசனே பண்ணதுபோல முனங்கிற அமைதியா இரும்மா” என்று சலித்துக் கொண்டான்.
” உனக்கென்னடா,… இன்னும் நான் மருமகள பார்க்கல, பேரனை பார்க்கல, அதுக்குள்ள என்னை ஆஸ்பத்திரி பெட்டுன்னு படுக்க வைச்சீட்டீயே டா. இன்னும் நான் பார்க்க வேண்டியது நிறையா இருக்கு பார்க்காம போயிருவேனோ… ” என விடாது முனங்கினார்.
” மா… ” என கத்த, ஜானு நுழைய சரியாக இருந்தது.. ” ஸ்ஸூ இது ஹாஸ்ப்பிட்டல் இப்படியா கத்துறது…? “
” அது… அது… அம்மா.. ” என்றவனிடம் இது ஹாஸ்பிட்டல் மெதுவா பேசுங்க, அப்புறம் அம்மாகிட்டையும் தான்… ” என்றவள் சீதாவிடம் வந்த அமர்ந்தாள்.
அவரை பரிசோதித்தாள். ” அம்மா.. உங்களுக்கு ஒன்னில்ல, யூரீன்ல கல்லும் அத்தோட வலியும் போயிடும்மா இதுக்கா கவலைப்படுறீங்க…”
” அதுக்கில்லம்மா இவன் என் கூட இருக்கான்.. என் வீட்டுகாரர் அங்க தனியா இருக்காருமா… என் கையால சாப்பிட்டாதான் இரண்டுபேரும் சாப்பிடுவாங்க… ஆனா நான் இங்க இப்படி கிடக்கிறேன் அவர் அங்க என்ன பண்றாரோ…?”
” ஏன்மா உங்க மருமகள் இல்லையா அவங்க செய்ய மாட்டாங்களா…?”
” எங்கம்மா… இவனுக்கும் வயசாகிட்டே போது காலகாலத்துல ஒரு கல்யாணம் பண்றான்னா இப்படி மரமா நிக்கிறான்மா…”
” ஏன்மா நீங்க பொண்ணு பார்க்கலையா அவருக்கு…?”
” எங்கம்மா பொண்ணே அமையலையே…”
” எது இவருக்கா… இவருக்கு தான் அவ்வளவு பேன்ஸ் இருக்காங்கலாமே.. பெரிய டான்ஸ் மாஸ்டர கோரீயோகிராப் ஆர்.ஜேவுக்கா பொண்ணுகிடைக்கலை… ” என அவனை வார.. ‘ நம்ம பிட்டை நமக்கே போட்டு வாரிட்டாளே…’ என நினைத்து தலைகுனிந்தான்.
” அதான் அதான்மா அதுனால தான் இவனுக்கு பொண்ணே கிடைக்கலை. சாதாரண வேலைக்கு போயிருந்தால் உன்னை போல ஒரு நல்ல பொண்ணா இவனுக்கு பொண்டாட்டியா வந்திருப்பா… எனக்கு பேரனோ பேத்தியோ இருந்திருப்பான்…”என்றதும் இருவரது பார்வை நேர்கோட்டில் சந்தித்து விலகியது.
” கவலை படாதீங்க.. கண்டிப்பா உங்க பையனுக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்மா… “
” அதான்… ஜோசியர் வேற,இவனுக்கு இந்த வருடம் கல்யாணம் கூடுமா. அதுவும் ஒன்னுக்கு இரண்டா வரும்மா ஒன்னுவந்தா போதுமா… “
” சரிம்மா.. நான் வரேன்.. ” என்று அங்கிருந்து செல்ல அவன்
ஏனோ வெறுமையை உணர்ந்தான்.
” ஏன்டா.. இந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்காளாடா…”
” ஆமாமா பார்க்க பார்க்க அழகா தான் இருக்கா… ” என உலறியவனை பார்த்தார் சீதா. ” என்னடா.. “
” அதும்மா அழகாதான் இருக்காங்கமா… ” என்றவனின் திருட்டு முழிக் காட்டிகொடுத்தது.
” நான் வேணா அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆச்சான்னு கேட்கவாடா… “
” எம்மா.. எங்க வந்து என்ன பேசுற நீ…? ஒழுங்கா அமைதியா இரும்மா.. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம்…”
” இல்லடா… கேட்போமே”
” அந்த பொண்ணுக்கு… ” என்றவன் நடந்ததை கூற… ” ச்ச பாவம்ல டா… இந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்… ஏன் தான் இப்படியும் மனுசங்க இருக்காங்களோ… கிடைக்காதோன்னு இருக்கிறவங்களுக்கு கிடைக்காது. கிடைச்சவனுங்க எல்லாம் பத்திரமா வச்சுக்க மாட்டிகிறாங்க என்னமோ போடா மாதவா…”
அதன் பின் அவரை பரிசோதித்து விட்டு அனுப்பிவைத்தாள்…. இருவரும் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றனர். அவளை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு சென்றான். ஏனோ வெறுமை உணர்ந்து, வெளியே வர மறுத்தது அவனது மனது எதையோ விட்டு வந்ததாய் உணர்ந்தான்..
அன்று இரவு ஓ.பி பார்த்து அலைந்து கலைத்தவள் ஈஷ்வரை மறந்தாள். ஆனால் ஈஸ்வர் அனைத்தும் கூற ஜகாவிற்கும் ரகுவிற்கும் கலக்கம் தான் தன் மகள் என்ன சொல்ல போகிறாளோ, கண்டிப்பாக திட்டு நிச்சயம் என எண்ணியவர் காலையில் அவள் வருமுன்னே பேரனை பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு, தன் மகன் வீட்டில் இருந்துவிட்டார்.
வீட்டிற்கு வராத தன் தந்தை நினைத்து தன்னுள் எழுந்த கோபமும் போக சிரிப்புதான் வந்தது.
மாலையில் தன் பேரனை அழைத்து வந்தவர் மகளை தேட, அவள் உறங்கி கொண்டிருக்க நிம்மதியடைந்தார்.
அவனுக்கு உணவு ஊட்டிவிட்டு ஆடை மாற்றிவிட்டவர்… அவனிடம் நான் வாக்கிங் போறதாக கூறி வெளியே செல்ல அவளோ வெளிய வந்தவள் அவரை அழைத்தாள்… ” அப்பா… “
” சொல்லும்மா சாப்பிடீயாமா ?…”
” சாப்பிட்டேன்ப்பா… நீ எங்க போனீங்க வீட்டுக்கு வராம…? “
” அது ஜகா வீட்டுல இருந்தேன் மா கொஞ்சநேரம்… நீ சித்துக்கு சொல்லிகொடும்மா, நான் காத்தாடா நடந்துட்டு வரேன்..”
” அப்பா.., எங்கையும் போக வேணா வீட்டுலே இருங்க அலையாதீங்க… ” என்றாள். ” சரிமா ” என்றவர் பேப்பரை வைத்து முகத்தை மறைத்தார்… அவனுக்கு சொல்லிகொடுக்கும் வரை அசையவே இல்லை அவர்.
” சித்… எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டீயா.. “
” எஸ் ஜானு… “
” நீ சிவாளி வீட்டுக்கு போ… ” என்றதும் ‘ ரகுவிற்கோ வயிற்றில் புளியை கரைத்தது.
” ரகு… மாட்டுனீயா.. இதுக்கு தான் நீ காலையிலிருந்து ஓடி ஒளியிறீயா… திருட்டுதனம் தானே நீ பண்ணிருக்க, ஜானு திட்ட போறா.. நான் எஸ்கேப்… ” என பேக் வைக்கும் சாக்கில் அவரது காதில் கூறி மேலும் கலக்கத்தை கொடுத்துவிட்டு கதவை அடைத்து விட்டு சென்றான்.
” சரிமா.. நான் போய் சாப்பாடு செய்றேன்… ” என எழ ” அப்பா….” என்றதும் நின்றார்.
” என்னப்பா… என்மேல கோபமா? ஏன் என்கூட பேச மாட்டிறீங்க… இங்க வீட்டுலையே இருக்க மாட்டிக்கிறீங்க நீங்க ஏன்பா…?”
” ஐயோ ! அப்படிலாம் இல்லமா அதுவந்து அதுவந்து… ” என இழுத்தவர்.
” அப்பா… எனக்கு உங்கமேல கோபம் இல்லை. நீங்க நினைச்சது ஒன்னு நடந்து ஒன்னு அதுக்காக உங்க மேல நான் ஏன்பா கோபப்பட போறேன்…?”
” இல்லம்மா,அந்த ஈஷ்வரோட எண்ணம் இதான் எனக்கு தெரியாதுமா… நாங்க எல்லாம் சொல்லிதான் அனுப்பினோம். ஆனா, அவன் தலையாட்டி அங்க வந்து மாத்தி பேசிட்டான் அதான் கஷ்டமாச்சும்மா. நீ வேற ரொம்ப நாள் கழிச்சு ஒத்துகிட்ட, அதுக்கு இப்படியா வரனும்… “
அவரை அணைத்தவள், ” பா.. ரீலாக்ஸ், விடுங்க.. அவரும் என்ன பண்ணுவார் வாழ வேண்டிய வயசு முதல் மனைவி போயிட்டா அவருக்கும் சுக துக்கம் இருக்கும்ல விடுங்க இதுக்காகவா ஓடி ஓளிஞ்சீங்க போங்கப்பா..” என செல்லம் கொஞ்சம் மகளை ஆதுரமாய் பார்த்து தலையை தடவியர்… ” உனக்கு கோபம் வந்திருக்கும் எனக்கும் தெரியும்மா. ஆனால் நீஇப்படி பேசுவது ஆச்சர்யம்தான்… “
” ஆமாவா… ஏன்பா நீங்க பயப்பிடுற அளவுக்கு நான் ட்ரெரரா… சொல்லுங்கப்பா”
” நான் பயப்பிடுற அளவுக்கு இல்லம்மா… அதுக்குமேலையே நீ ட்ரேரர்மா… நானும் சித்துவும் அவ்வளவு பயப்பிடுவோமா… ” என பயந்தது போலவே கூற
அவளுக்கு சிரிப்பு வர வாயில் கைவைத்து சிரித்துவிட்டாள்.
அதன்பின் சித் வர மூவரும் அமர்ந்து சாப்பிட்டு அவள் வேலைக்கு கிளம்பினாள்.
மறுநாள் சித்தும் பள்ளிக்கு செல்ல… அங்கே வழக்கம் போலவே வகுப்புகள் சென்றது. அந்த சைன்ஸ் டார்சரின் க்ளாஸில் அனைவரும் கப்சிப் என்று அமர்ந்து கவனித்து இருந்தனர்.
இங்கோ ***** சேனலில் இருந்து பள்ளிக்கு வந்திருந்தனர்.
” சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன வேணும் ” என பிரின்சிபால் திரு வைகுண்டம் அந்தசேனலிலிருந்து வந்த மேனேஜரிடம் பேசினார்
” சார்.. எங்க சேனலில் டான்ஸ் ஷோ நடக்க இருக்கு.. உங்க பள்ளியை எங்களுக்கு சனி, ஞாயிறு வாடகைக்கு கொடுக்க முடியுமா. அதுமட்டுமில்ல உங்க பள்ளில ஆறு முதல் பதிநான்கு வயது வரை உள்ள மாணவர்கள் யாருக்கு விருப்பம் இருந்தாலும் சேர சொல்லலாம் என்றதும் அவருக்கு சித் நியாபகம் வந்தது.
அவரும் சனி , ஞாயிறு என்பதால் ஒத்துக்கொண்டார்.. விருப்பம் இருக்கும் மாணவர்களிடம் தேதியை சொல்லி வர சொல்லுமாறு சொல்லிவிட்டு சென்றனர். தனது ப்யூனை அழைத்து சித்தையும் க்ரேஸியையும் அழைத்தார்.
டார்சரின் வகுப்பில் சிலர் தூங்கி விழுக, சிலர் சிலையாய் அமர மாணவர்களை நிஜமாகவே டார்சர் தான் செய்துகொண்டார்..
” மேம்… ” என ப்யூன் வாசலில் நின்று அழைக்க.. ” சொல்லுங்க..”
” மிஸ், சித்தை ப்ரின்சிபால் கூப்பிட்டு வர சொன்னார் மேம்…”
” என்ன சித் பண்ண…?அங்க கம்பளைண்ட் போற அளவுக்கு…, ” என்றதும் எழுந்து நின்றான்.
அவனுக்கு தான் எதுவுமே தெரியாதே, முழித்துக் கொண்டிருந்தான்.
” மேம் கம்பளைண்ட் இல்ல, இதுவேற விசயம் ” என்றதும் ” போ ” என்றாள்.
” இந்த டார்சர்காகவே நாம திருந்தக் கூடாது பட்டீ எவ்வளவு டார்சர் பண்றா…”சூர்யா முனங்க,
” எஸ் சூர்யா… கண்டிப்பா நாமலும் டார்சர் பண்ணலாம்…” இருவரும் கைமுட்டியை சேர்த்து இடித்து கொண்டனர்.
அங்கே க்ரேஸியும் அவரும் இருக்க சித்தும் வந்து சேர்ந்தான்.. ‘ என்ன சொல்ல போகிறார் ?’ என ஆர்வமாக இருந்தனர்.
சேனலில் இருந்து வந்ததை கூறியவர்… ” க்ரேஸி இந்த காம்பெடிசன்ல நம்ம சித் ஏன் சேர கூடாது…?நான் முடிவு பண்ணிடேன் கண்டிப்பா சித் டான்ஸ் நல்ல ஆடுவான்.. அவனோடா இந்த திறமையை வளர்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. இதுனால நம்ம ஸ்கூல் பெருமையா இருக்கும் பப்பளிசிட்டியும் கிடைக்கும் அதுனால சித்தை கண்டிப்பா இந்த காம்பெடிசன் சேர்க்கணும் ” என்றதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள… சித் தலையில் கைவைத்தே நின்றுவிட்டான்.
குறும்பு தொடரும்…