என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா

வீதியெங்கும் விளக்குகள் அவ்விரவில் ஜொலித்து விண்ணை போலவே இருக்க, அவ்வீதியை வெறித்துகொண்டே வந்தவன், அப்பாவியாக வாயில் விரலை வைத்து வர, பீட்டர்தான் கடுங்கோபத்தில் அவனை முறைத்து கொண்டே காரை செலுத்திக்கொண்டிருந்தான்.

” டேய், பீட்டர் ஏன் இப்படி என்னை முறைச்சுட்டே வர…? அப்படியென்ன செஞ்சுட்டேன்”

” என்ன செஞ்சீங்களாவா… பாஸ் உங்களுக்கு தெரியாதா என்ன செஞ்சீங்கன்னு…?”

” அவ கத்தினாடா அதான் அப்படி
செய்தேன்…”

” பாஸ்… கத்துன்னா வாய கையால பொத்தனும் நீங்க என்ன பண்ணிட்டு வந்தீங்க…? “

” ஆங்… வாயை தான் பொத்துனேன். என்ன வாயால பொத்திட்டேன்”

” கிஸ்… பண்ணிருக்கீங்க பாஸ் நீங்க. இந்த வயசுலை இதெல்லாம் தேவைதானா உங்களுக்கு…?”

” ஏன் ஏன்… நான் காதலிக்கிற பொண்ண கிஸ் பண்ண கூடாதா…? “

” கொடுக்கலாம் பாஸ்… அவங்க பெர்மிச்னோட, வித் ரொமான்டிக்கா.. ஆனா, நீங்க கொடுத்தது வக்கிரபுத்தியோட கொடுத்திருக்கீங்க திஸ் இஸ் டூமச்…” என்றான்.

“என்னடா வக்கிர புத்தியெல்லாம் சொல்லுற… நான் அவளை கிஸ் பண்றதுக்கு ஒரு நிமசம் முன்னாடிகூட எனக்கு அவளை கிஸ் பண்ணனும் எண்ணமே இல்லைடா. இதில எங்கடா அந்த புத்தி வர போகுது…”

“இருந்தாலும் நீங்க பண்ணதும் தப்பு பாஸ்,.. இதுனால நடக்க போற விபரீதத்தை நினைச்சாலே.. ” என பீட்டர் மேலும் அவனை பயம் காட்ட,

” ஏன்டா… நான் கிஸ் பண்ணிருக்கேனே, அவளுக்கு குழந்தை பிறக்குமாடா.. ” அதி பயங்கர கேள்வியை கேட்டு வைக்க, சடன் ப்ரேக்கை போட்டு காரை நிறுத்தியவன், ஸ்டேரிங்கிலே தன்னை மூன்றுமுறை
முட்டிக்கொண்டான.

” பாஸ்… நீங்க நைன்டிகிட்ஸ் அப்பாவியா இருக்கீங்களே.. கிஸ் பண்ண எந்த ஊருல குழந்தை பிறந்துச்சு… கர்த்தரே, இவரை கட்டிட்டு என்னை போல அண்ணியும் ரொம்ப கஷ்டபட போறாங்களே காப்பாத்துங்க அவங்களை.. ” என்றவன் வேண்டுதலை போல பின் வந்த வண்டியின் ஆரன் சத்தம் கேட்கவே வண்டியை எடுத்தான்… மீண்டும் அப்பாவியாக தன் முகத்தை வைத்துகொண்டவன்.. வீதியை வெறிக்க சற்றுமுன் நடந்தது காட்சியாக தோன்றியது.

நர்ஸை வெளியே அனுப்பியவன் தானும் வெளியே சென்று அவ்விருவர்களுக்கு தனிமை கொடுத்தான் பீட்டர்.

” ஜானு,.. உன் கிட்ட கொஞ்சம் பேசனும்… ” என்ற போதுதான் தன்னறையில் யாருமில்லை என்பதை உணர்ந்தவள். அவனுக்கு ட்ரசிங் செய்துவிட்டு விலகி நின்றாள்..

” சொல்லுங்க… என்ன பேசனும் ? “

” ஜானு.. நீ ஏன் சித்தார்த்தை டான்ஸ் காம்பெடிசன்ல கலந்துக்க வேணான்னு சொல்லுற? ப்ளீஸ் மா ஒத்துக்கோ, அவன் நல்ல டான்ஸ் ஆடுவான்.அவனுக்கு அந்த திறமை இருக்க., ஆஸ் ஸ ஒரு டான்ஸ் மாஸ்டரா நானே பார்த்து வியந்திருக்கேன்… ப்ளீஸ் அவன் திறமைக்கு ஒரு நல்ல வாய்ப்பு, ஒரு அம்மாவா நீ எங்கிரேஜ் பண்ணனும்.. இப்படி முட்டுகட்டையா இருக்காத ஜானு “

” என் பையன் டான்ஸ் ஆடுவான் உங்களுக்கு யாருங்க சொன்னது…? அவன் ஆடுனதை நீங்க எப்போ பார்த்தீங்க…?”

” பச்…. உங்க அண்ணனும் நானும் ப்ரண்ட்ஸ், அவன் பொண்ணு பேர்த்டே பார்ட்டில தான் சித்தார்த்தையும் அவன் டான்ஸையும் பார்த்தேன். இப்ப இது முக்கியம் இல்ல.. நீ அவன் டான்ஸ் ஆட மட்டும் ஒத்துகோ நான் அவனுக்கு சொல்லித்தருவேன்நான் அவனை கையிட் பண்றேன்..” என்றான்.

“என் பேமிலி விசயத்தை பேச.. உங்களுக்கு யாருங்க அனுமதி கொடுத்தா…? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. “

” எனக்கு உரிமை இல்லதான், அனுமதிகொடுக்கலைதான். அதுக்காக ஒரு குழந்தையோட கனவு அழிய என்னால பார்த்துட்டு இருக்க முடியாது. ப்ளீஸ் ஜானு கொஞ்சம் யோசி.. ஒரே புள்ளையோட ஆசை நிறைவேத்தாத நீயேல்லாம் என்ன அம்மா… ?”

” வாய மூடுங்க… நல்ல அம்மாவா இல்லாம இருந்துட்டு போறேன்.. அத சொல்ல நீங்க யாருங்க எங்களுக்கு…? தேவையில்லாம பேசிட்டு இருக்காதீங்க… “

” ஜானு… உனக்கு சொன்னா புரியாதா ? ஏன் ஜானு அடம்பிடிக்கிற.., ஒத்துக்கடி, சிலருக்கெல்லம் இதெல்லாம் கிடைக்காத வாய்ப்பு, இன்னும்  இது போல வாய்ப்பு தவற விட்டவங்க ஏங்கிட்டு இருக்காங்க.. அது போல சித்தார்த்தையும் ஏங்க விட்டுறாத அது குழந்தைடி…”

” போதும் நிறுத்துங்க.. இதுக்கு மேல பேச ஏதுமில்லை… நீங்க வந்த வேலை முடிந்தது கிளம்புங்க” என்றவள் எத்தனிக்க.. அவளது கைப்பற்றி போகாமல் தடுத்தான்.

” கைவிடுங்க ஆர்.ஜே… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… விடுங்க… “

” ப்ளீஸ் ஜானுமா…. நான் சொல்லுறத கேட்டுட்டு,போடி ” விடாமல்,பிடித்திருக்க,  ” நீ யாரு எனக்கு நான் ஏன் உன் பேச்சை கேட்கணும்… “

” ஏன்னா நான் உன் புருசன். என் பேச்சை கேட்கணும்.” விட்டெரியாக கூற.. ” வாட்… புருசனா ? என்ன பேசிட்டு இருக்கீங்க ஆர்.ஜே கைவிடுங்க… “

” விட முடியாதுடி, இந்த கையை நான் எப்பையும் பிடிச்சிருக்கணும்.. நான் இங்க ப்ரோபஸ் பண்ணணும் வரலடி… ஆனா, வேற வழி இல்ல, ஐ லவ் யூ ஜானு… நாம கல்யாணம் பண்ணிக்கலாம்… நீ,  நான், சித்தார்த்ன்னு சந்தோசமா வாழலாம். சித்தார்த்துக்கு ஓரு நல்ல அப்பாவா நான் இருப்பேன்டி, உனக்கு  நல்ல புருசனா இருப்பேன்டி… ” என்றதும்.

” ஆர்.. ஜே ஸ்டாபிட் என்ன பேசுறீங்க.. கைவிடுங்க நான்.. நர்ஸ்… நர்ஸ் ” என அவன் கையில் இருந்து அவள் கையை பிரிக்க முயற்சிக்க முடியாமல் போக.. மேலும் தன் சத்தத்தை அதிக படுத்தினாள். எங்கே கூட்டமாக வந்தால் தன்னை அடித்துவிடுவார்களோ என பயந்தவன் அவளை அமைதிபடுத்த எடுத்த ஆயுதமே முத்தம்… அவனுக்கு இது முதல் முத்தமாக போக, இதுவரை அவ்வெண்ணத்திலே இல்லாமல் கொடுக்கும் அதிர்ச்சி முத்தம் முதல் முறையாக பிணைத்தது இருவரையும்.

அவளோ பயத்தின் உச்சிக்கே செல்ல, அருகில் இருந்த கத்தியை எடுத்து அவன் மருந்திட்ட கையிலே கீறினாள், இரத்தபீரிட்டது…

” ஆ…ஆ….. கொலகாரி… என்ன கொல்ல பார்க்கிறீயே.. என்னடி பண்ணிடேன் கொல்ல பார்க்கிற..? எங்கம்மாக்கு ஒரே பையன் டி நான்.. ஐயோ அம்மா வலிக்கிதே.., இவ இப்பையே கொல்ல பார்க்கிறாளே ! கல்யாணம் ஆனா… ” என்றவன் கத்தியை காட்டியவள்… ” வாய மூடு.. ” என்றவள் மீண்டும் கட்டை பிரித்து சேர்த்து மருந்து இட்டாள்.

இருவரும் கண்ணும் கலங்கிருந்தது.. ஏனோ கண்ணீர் வடிய துடைக்க எண்ணிய  கைகளை அடக்கினான்.

” சாரிடி… நான் உன்னை கிஸ் பண்ற எண்ணத்திலோ ப்ரோபஸ் பண்ற எண்ணத்தில வரலைடி.. சித்தார்த்தாக பேச போய் இதெல்லாம் நடந்திருச்சு.. எங்க நீ கத்தி ஊர கூட்டினீனா என் பெயருக்கு டேமேஜ் ஆகிடும் தான் வாயடைக்க.. ” என்றதும் அவளின் முறைப்பில் அமைதி யானான்.

” அந்த வெள்ளை பன்னி போல நீ மட்டும் போதும் சித்தை ஹாஸ்ட்டல் சேர்கிறேன் சொல்லுறவன் நான் இல்லடி… உன்னை விரும்பினது போல உனக்கு சொந்தமான அனைத்தையும் எனக்கு பிடிக்கும் அதுல சித்தும் உங்க அப்பாவும் தான். சித்தோட சேர்ந்து சந்தோசமா வாழலாம். நீ இத கூட லேட்டா யோசி ஆனால் முதல் சித் டான்ஸ் பத்தி யோசிமா… ” என்றவன் அவள் கைகளிலிருந்து தன்னை பிரித்து சென்றவன் மீண்டும் அவள் அருகில் வந்து லவ் யூ ஜானுமா.. ” என்று கூறிச்செல்ல அங்கே அமர்ந்தாள்.

இவனோ தனது நெஞ்சிலிருந்த பாரத்தை இறக்கி வைத்த சந்தோசத்தோடு முத்தம் கொடுத்து இரட்டிப்பு சந்தோசத்தை வார்த்தையின்றி தன்னுள்ளே மகிழ்ந்துகொண்டே வந்தவனை கொலைவேறியாய் எதிர்கொண்டான் பீட்டர்.

வீட்டுவந்து சேர, ஏதோ ஒரு பாட்டை விசலடித்தவாறே தன் அறைக்கு செல்பவனை தடுத்து நிறுத்தினார் ராமன்…

” மவனே ! ஹாஸ்பீட்டல் தானே போயிட்டு வர ரொம்ப சந்தோசமா இருக்க என்னடா என்ன விசயம்…?”

” நைனா.. நைனா,. நான் ரொம்ப சந்தோசமா இருக்கே  நைனா… “

” அதான் தெரியுதே ஏன்டா இம்முட்டு சந்தோசம்…? “

” நைனா.. உன் மருமகளை பார்த்து என் காதலை சொல்லிட்டேன்… அதான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்..”

” நினைச்சேன்.. இந்த திருட்டு பூனை திருட்டு முழியோட அடுப்புங்கறை சுத்தும்போதே இதுக்குதான்.. “

” புரியல நைனா… “

” டேய் மவனே ! நீ சும்மா சும்மா ஆஸ்பத்திரிக்கு போகனும் சொன்ன போதேயே நினைச்சேன் இது காதோல்ன்னு அந்த டாக்டர் பொண்ணுதானா…? “

” ஈஈஈஈ…. ஆமா நைனா.. ” என வெட்கம் கொல்ல…. ” அடேய்.., இந்த காதோல் உன் அம்மா காதுக்கு போச்சுன்னா.. கசாப்பு கடக்காரன்கிட்ட சிக்கிற ஆடா உன்னை துண்டு துண்டுடா வெட்டி போட்டுவா…. “

” நைனா.. நீயே இப்படி சொல்லாம உன் பொண்டாட்டிய எப்படி கவுகனுமோ அப்படி கவுத்து எனக்காக பேசி எனக்கு அந்த புள்ளைய கட்டிவை நைனா,..”

” ஆனா, அந்த புள்ளைக்கு… ” என இழுக்க.. ” ம்ம்…. தெரியும், எனக்கு பிடிச்சிருக்கு, நைனா.. ஜோசியர் கூட ஒன்னுக்கு இரண்டா வர போகுது சொன்னது உண்மை ஆகிடுச்சுல, எனக்கு ஜானுவும் சித்தார்த்தும் வேணும் நைனா…”

” சித்தார்த் யாரு ? “

” உங்க பேரன் நைனா…”

” நடத்துடா நடத்து… அன்னைக்கு உன் சட்டையில சைன் போட்டானே அவன் தானா…? “

” அவனே தான்.. யாருன்னே தெரியாம அவன் மேல பாசம் வந்தது.. அவனை பார்த்தும், இப்ப ரொம்ப… இரண்டு பேரும் வேணும் நைனா எனக்கு… ப்ளீஸ் நீ தான் பேசனும் அம்மாகிட்ட… “

” என்ன பண்ண உனக்கும் வயசாகிட்டே போது… லேட்டானாலும் புடிச்ச பொண்ண கட்டிவைச்ச திரும்பித்தில நாங்க இருப்போம்.. உங்க அம்மாகிட்ட நான்பேசுறேன்.. ஆனா, அந்தபொண்ணு சம்மதிச்சுட்டாளா…”

” இல்ல… நைனா.. இன்னைக்கு தான் சொல்லிருக்கேன்… வெய்ட் பண்றேன். அவ பதிலுக்காக காத்திருக்கேன்.. சரி நைனா தூக்கம் வருது… ” என சந்தோசமாக மாடியெறும் தன் மகனை காண சந்தோசம் ஒருபக்கமென்றால்.. சீதாவை எண்ணி கவலை ஒரு பக்கம்…
காதலை சொன்ன களைப்பில் நிம்மதியாக அவனுறங்க..

அவள் உறக்கமோ பறி போனது… முழிந்து கொண்டே அவ்விரவை கழித்தாள்.. அவன் முத்தம் ஒவ்வொரு முறையும் நினைக்கும் போது  சிலிர்த்தது உடலெங்கும் கண்ணீர் ஏனோ விடாமல் கொட்ட பெண்ணவள் தவித்து போனாள்.

மறுநாள் தாமதமாக வந்த மகளை எதிர்கொள்ள, அவளைகாண வித்தியாசமாகவே தெரிந்தாள்.

” என்னடாமா… உடம்பு சரியில்லையா.. ” என நெற்றியில் வைக்க ஜுரமில்லை சில்லென்று இருக்க.. ” தூங்கலப்பா அதான் டயர்டா இருக்கு.. நான்போய் தூங்கிறேன்… ” என்றவள் என்ன நினைத்தாளோ  ” அப்பா.. உங்க மடியில் படுத்துக்கட்டுமா…?” என கேட்க. “என்னமா நீ… வா ” அழைக்க அவர் மடியில் தஞ்சமானாள்.

அவ்வப்போது உடல் நடுக்கம் கொள்ள செய்தது…. அவரும் அதை உணர்ந்தார், உறங்கத்தில் இருக்கும் தன் மகளை பார்த்தவாறே அமர்ந்துவிட்டார்.

அவரே மதியத்திற்கும் சமைத்து..  நேரம் செல்ல தன் மகளை விழிக்கச்செய்தவர். அவளுக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டார்.

” ஜானுமா… என்னாச்சுடா, எதுவும் பிரச்சினையா ? ஏன்டா சோகமா இருக்க, அப்பா கிட்ட சொல்லு.”

” ஒன்னில்லப்பா… நைட் முழுக்க முழிச்சதுனால அப்படி தெரியுதுப்பா…”

” சரிடாமா.. நீ இரு நான் போய் சித்தை கூட்டிட்டு வரேன்… “

” இல்லப்பா… இன்னைக்கு நான் போய் கூட்டிட்டு வரேன்… நீங்க ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு நான் உங்கள் வேலை பார்க்க விட்டுடேன். சாரிப்பா… நானே போய் சித்தை கூட்டிட்டு வரேன்  ” என்றவள் நடந்தே சென்றாள்.

க்ரேஸி மிஸ்ஸிடம் பேசிக்கொண்டே இருக்க, ஜானுவை கண்டதும் மகிழ்ச்சியோடு ஓடினாள்.

” ஜானு… சப்ரைஸ் ஆ இருக்கு. நீ வந்திருக்க.. ரகுக்கு என்னாச்சு ? “

” ஏன் நான் வர கூடாதா சித்…? தாத்தாவ இருக்க சொல்லிட்டு நான் வந்தேன். போலாமா… “

” போலாம் ஜானு.. பாய் மிஸ்.. ” என்றான்,. சினேகித சிரிப்பை உதிர்த்துகொண்டு இருவரும் சென்றனர்.

” ஜானுமா,. ஹாப்பீயா இருக்கு நீ வந்தது ” என குதித்துகொண்டே வந்தான்.

” சித்.. நாம பார்க் போவோமா ? ” என கேட்டவளை புதிதாய் பார்க்க.. ” என்னாச்சு சித் ஏன் அப்படி பார்க்கிற…?”

” ஜானு.. நீயா பேசுற.. நான் கூப்பிட்டா கூட வர மாட்ட… அதான் ஜானு லிட்டில் டவுட். என் கூட டைம் ஸ்பேன்ட் மாட்டீயே என்னாச்சு ஜானு…? “

அவன் அவ்வாறு கேட்க, அமைதியானவள், உள்ளே அழைத்து இருவருமாக கதிரையில் அமர்ந்தனர்.

” ஜானு சாரி… நான் உன்னை ஹேர்ட் பண்ணிட்டேனா ? “

” இல்ல சித்.. நான் தான் உன்னை ஹேர்ட் பண்றேன்… உனக்கு நான் ஒரு நல்ல அம்மாவ இல்லை சித்.. உன் ஆசையை அம்மா நிறைவேத்த முடியாம இருக்கேன். உன் கூட டைம் ஸ்பேன்ட் பண்ற தில்லை. நான் உனக்கு நல்ல அம்மா இல்லை சித்…? ” என அழுதாள்..

” ஜானு… அழதா… நீ தான் எல்லாரையும் விட
பெஸ்ட் அம்மா… என் நல்லதுக்கு மட்டும் தான் சொல்லுவ, நினைப்ப, நீ எனக்கு கூட டைம் ஸ்பேன்ட் பண்ணலைன்னாலும் எனக்காக தானே வொர்க் பண்ற… வீட்டுல இருக்கும் போது நீ என்கூட தானே இருக்க.,  சண்டே கூட உன்னால ரெஸ்ட் எடுக்க முடியாம வொர்க் பண்ற… இதெல்லாம் எனக்காக மட்டும் தானே ஜானு… நீ எப்படி எனக்கு சரியான அம்மா இல்லைன்னு சொல்லுற.. ” என பெரிய மனுசனாய் பேசும் தன் மகனை பார்க்க..

” ஜானு… நான் உன்னை வாட்ச் பண்ணதான் செய்றேன்.. நீ உனக்காக எதையும் செய்றதும் இல்ல வாங்கிறதுமில்லை.எனக்காகவும் தாத்தாக்காகவும் தான் எல்லாம் செய்ற.. நான் கேட்கிறதெல்லாம் வாங்கிகொடுக்கிற.. என்னை அப்ப அப்ப திட்டினாலும் எனக்காக தான் திட்டுவ… நீ எனக்கு ஒரு பெஸ்ட் மதர் தான் ஜானு… எனக்கு டான்ஸ் வேணாம். நீ போதும் ” என்றவன்.. அந்த கதிரையில் எழுந்து நின்று அவள் கண்ணீரை துடைக்க வாரி முத்தமிட்டாள்…

” சித்… நான் ஏன் டான்ஸ் வேணாம் சொல்லுறேன் தெரியுமா… அம்மாக்கும் டான்ஸ்ன்னா உயிர்.. பரதநாட்டியத்தில அம்மா ஆடி நிறைய பரிசு வாங்கிருகேன். உன்னை போல  அரங்கேற்றம் பண்ணும் ஆசை… ஆனா… ” என இழுத்தவள் தன் கடந்த காலத்தை யோசித்து அமைதியாக அமர்ந்தாள்…

குறும்பு தொடரும்…வீதியெங்கும் விளக்குகள் அவ்விரவில் ஜொலித்து விண்ணை போலவே இருக்க, அவ்வீதியை வெறித்துகொண்டே வந்தவன், அப்பாவியாக வாயில் விரலை வைத்து வர, பீட்டர்தான் கடுங்கோபத்தில் அவனை முறைத்து கொண்டே காரை செலுத்திக்கொண்டிருந்தான்.

குறும்பு தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!