என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 35

நாட்கள் மட்டும் தொய்வின்றி 
நடைபோட்டுக் கொண்டிருந்தது.
செடியொன்றில் ஆங்காங்கே மலராத 
மொட்டுகளும்,  பூக்களுமாக, செடிகளை அழகாக்குவது போல. அந்தக் குடும்பமும், அவ்வாறு 
மகிழ்ச்சியில் மலர்ந்த பூக்களுமாய், 
மலர காத்திருக்கும் மொட்டாய், 
அவர்களின் காதலும், ஒரே குடும்பமாய் 
அன்பு , பாசம் யாவும் அழகாய் 
அக்குடும்பத்தை வழிநடத்திச்செல்கிறது.

எந்தவொரு விசயங்களை ஓரளவுக்குத் தான் கொண்டாடப்படும். அதுபோலவே ஜானுவை முதலில் ஆச்சரியமாகப் 
பார்த்தவர்கள், விசாரிக்கச் செய்தவர்கள் 
எல்லாரும், இப்போது சகசஜமாகப் 
பார்த்து வந்தனர் மருத்துவமணையில். அவளும் கல்யாணம் ஆனதிலிருந்து 
மருத்துவமனைக்கு வர முதலில் 
தயங்கியவள், இப்போது வழக்கம் 
போலானது. அவளும், அவளது வேலை என்றே இருந்தாள்.

ஆர்.ஜேவை தான் அவர்களது நண்பர்கள், டரேக்டர்கள், நடிகர்,நடிகைகள், கோ கோரீயோகிராப்பர்களை அனைவரும் 
அவனது கல்யாணத்தைப் பத்தி விசாரித்துவிட்டு, ட்ரீட் கேட்டு நச்சரித்து விட்டனர். இவனுக்குத் திருமணம் ஆனதை கேட்டு எந்தவொரு அலட்டலும் இல்லாமல் இருந்தால் ஜெர்ஸி. அன்று, அவனது அன்னை பேச்சை கேட்டதிலிருந்து அந்தப் பக்கம் 
தலைவைக்காதவள், வளர்ந்து வரும் தொழிலதிபரை கரைட் செய்து, 
கல்யாணம், காதல் என்று தனது ரசிகர்களைச் சோசியல் மீடியாவில் போஸ்டாகப் போட்டு குழப்பி விட்டுகொண்டிருக்கிறாள்..

காலாண்டு பரீட்சை நடைபெற்று 
கொண்டிருப்பதால். நமது நாயகன், 
படிப்பில் பிசியாகிவிட்டான். ஒரு பக்கம், காம்பெடிசனும் இன்னொரு பக்கம் 
படிப்பும் என்று அவனது நாட்கள், 
அவனை இவ்வாறே, கடத்திச்சென்று கொண்டு இருக்கிறது. பள்ளியில் க்ரேஸி மிஸ் உதவியாலும் வீட்டில் ஜானு 
உதவியாலும், ஸ்ரவனிடம் போட்ட 
சவாலுக்காக, முட்டிமோதி 
படித்துக்கொண்டிருந்தான் சித். 
அப்ப அப்ப ! சிறு மனம் தளர்வு 
வந்தாலும், சிவாளியின் ஊக்கம் 
அவனுக்கும் அவனது மனதிற்கும் 
உத்வேகம் தர மீண்டும் படிக்க முயற்சி செய்தான். வைஷூவிற்கும் 
சூர்யாவிற்கும் கொஞ்சம் 
கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்து சிவாளி அவர்களை விடுவதாக இல்லை.. கூட்டு முயற்சி பலனின்றிப் போகுமா ? 
பரீட்சை முடிந்தாலும், தேர்வு முடிவுகளை எண்ணி, இதயத்தில் சிறு ஓரத்தில் பயம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அன்றைய நாள் பள்ளியில் விடைத்தாள், கொடுக்கப்பட்டிருந்தது. சிவாளி வழக்கம் போலவே, அதிக மதிப்பெண்களை எடுத்திருந்தாள். ஸ்ரவனும் அவ்வாறே எடுத்திருந்தான். சித்துவினுடைய விடைதாளும் கொடுக்கப்பட்டது. அவனது சைன்ஸ் டார்சர் சாரி டீச்சர், சித்துவின் மதிப்பெண்ணை பார்த்து வாயை பிளந்தார்.

” சித்… நீயா இது. இவ்வளவு மார்க், அதுவும் சைன்ஸ்ல, வெரிக்குட் பாய். அப்ப, உன்னாலையும் படிக்க முடியும். ஆனா, படிக்காம, டான்ஸ், அது இதுன்னு வேற எதுலையாவது கான்சன்டெரசனை வைக்கிறது. இனி வர போற, பரீட்சையிலும் இதே போல மார்க் எடுக்கனும் புரியுதா ! ” என்று அவனிடம் பேப்பரை கொடுத்து அனுப்பினார்.

அதன் பின் சூர்யாவிற்கும் வைஷுவிற்கும் கொடுக்க, அவர்களும் ஓரளவுக்கு தேறி இருந்தனர்.

வெறும் பார்டரில் பாஸ், பண்ணிக்கொண்டிருந்தவன், இன்று எழுபதும் என்பதும் என எடுத்திருப்பது ஆச்சரியம் தான்.

ஒரு செயலை எடுக்கும் குழந்தை அதை முழுச்சாக முடித்துவிட்டு தான், மற்றவைகளில் கவனம் செலுத்துவார்கள். தனக்கு ஒரு விசயம் பிடித்தால், அதைக் கண்ணும் கருத்துமாகச் செய்து முடித்து, அதை ஆசிரியரிடம் காட்டி பாராட்டு, பெருவதில், அவர்களுக்கு அது அலாதி ஆனந்தம். அவ்வாறு, குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுத்தாலே, குழந்தைகள் ஆர்வமும் வளரும், அவர்களின் திறமைகளும் வளரக்கூடும்.

க்ரேஸி, சித்தை கொண்டாடி விட்டாள். ஆனாலும், ஸ்ரவனது கேலிபேச்சுகள் நின்ற பாடு இல்லை.

” சித்து, என்னமோ நீ ரேங்க் ஹோல்டர் வருவேன் சொன்ன, இன்னும் நீ அப்படியே தானே இருக்க, உன்னால, இதெல்லாம் முடியாது சித். போ போய் ஆடு. அதுக்கு தான் லாயிக்கு  ” என்று தன் நண்பர்களோடு நின்று கேலி செய்தான்.

“ஏய் !! ஸ்ரவன். இனி வர போற, எக்ஸாம்ல சித் கண்டிப்பா ரேங்க் ஹோல்டரா வருவான். அவன் பெயர் இருக்கும். வெய் அண்ட் சீ மேன்  ”

” தாங்கியூ சிவாளி. ஸரவன், உனக்கும் நான் நன்றி சொல்லனும். உன்னால தான், நான் இன்னைக்கு படிச்சு இவ்வளவு மார்க் வாங்கிருக்கேன். நீ எனக்கு எதிரியா இருந்தும், உன்னால எனக்கு கிடைச்சது என்னவோ அதிகம் தான். என் கூட போட்டி போட்டு, நீ ஜெயிச்சாலும். எனக்கு கவலை இல்ல. நீ எனக்கு போட்டியா இருக்கிறது தான் எனக்கு பெருமையா இருக்கிறது. நானும் ரேங்க் ஹோல்டரா வருவேன் ஸரவன், அதுக்கு இப்படியே என் கூட சண்டை போட்டுட்டே இரு. ” என்று சென்றுவிட்டான்.

மாலையானது, ரகு அவனை அழைக்க வந்திருந்தார். சித், முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. அவனை புரியாமல் பார்த்தவர். அழைத்து கொண்டு பள்ளியை கடந்தார்.

” என்ன சித், ரொம்ப ஹாப்பீயா இருக்க போல, இன்னைக்கு என்ன நடந்தது க்ளாஸ்ல…”

” ரகு, இன்னைக்கு எனக்கு எக்ஜாம் பேப்பர் கொடுத்திருக்காங்க “

” என்ன  எக்ஜாம் பேப்பர் கொடுத்துட்டாங்களா ? ஐயோ ! கொஞ்ச நாள் நல்லாதானே போச்சு. இப்ப, மறுபடியும் பிரச்சனையா ! கடவுளே உனக்கு கருனை இல்லையா ? இப்படி மாறி மாறி பிரச்சனை கொடுக்கிறீயே !.
சித்  கண்ணா!  பேசாம போன முறை போட்ட ட்ராமாவையே இன்னைக்கு போட்றாலமா “

”  ரகு ! அவ்வளவு சீன் இல்லை, ஜானு என்னை திட்ட மாட்டா!… “

”  ஏன், அவ கிட்ட பேப்பரை காட்ட மாட்டீயா பேரா “

” ஏன் ரகு, உனக்கு என் மேல நம்பிக்கையே  இல்லையா ?. நான் ஜானு திட்ட மாட்டான்னு சொல்லுறேன். நீ பேப்பரை காட்ட மாட்டீயான்னு கேட்கிற. நல்ல மார்க் வாங்கிட்டியான்னு கேட்க மாட்டியா ரகு ? “

”  ஓ… அப்ப நீ நல்ல மார்க் எடுத்துட்டீயா சித் ! “

” டூ லேட் போ ! ” என்று டான்ஸ் க்ளாஸ்ஸிற்குள் நுழைந்தான். ஆர்.ஜேவுடன் ஆடி முடித்தவன். மூவருமாக வீடு வந்தனர்..

சித்து, தனது வீட்டு பாடத்தை செய்துக்கொண்டிருந்தான். ஆர்.ஜே, தனது  போனை பார்த்தவாறு இருந்தான். ரகு, தான். காலில், சுடுதண்ணியை கொட்டியது போல இருந்தார்.

” ஏன் மாமா இவ்வளவு டென்சனா இருக்கீங்க ? “

” அது ஒன்னுமில்ல மாப்பிள்ளை, இன்னைக்கு சித்துக்கு எக்ஜாம் பேப்பர் கொடுத்திருக்காங்களாம். இவன் பேப்பரை பார்த்து, ஜானு கண்டிப்பா, ஒரு ஆட்டம் ஆட போறா. அதான் கொஞ்சம் பயமா இருக்கு. “

” ரகு…. நீ என்னை நம்பவே இல்லையா ?
நான் நல்ல மார்க் தான் வாங்கிருக்கேன். ஜானு திட்ற மாதிரி, நான் மார்க் எடுக்கல, ப்ராமிஸ் ! ” என்று தனது பேப்பரை காட்டவே நம்பினார்.

” பேரா! இது உன் பேப்பர் தானா ? இல்லை மாத்தி எடுத்துட்டு வந்துட்டீயா ? “

” யோவ் ! கிழவா. என்ன நக்கலா ! . அந்த பேப்பர்ல பெயரை பார். என் பெயர் தானே போட்டிருக்கு. “

” நீங்க இவ்வளவு பயப்பிடுற அளவுக்காக சித் மார்க் கம்மியா வாங்குவான். “

” நீங்க வேற மாப்பிள்ளை !. இந்த எக்ஜாம், பேப்பர்ன்னு வந்தா மட்டும். ஜானுவும் இவனும் சேர்ந்து ஒருவழி ஆக்கிடுவாங்க, நடுவுல நான் தான் கிடந்து அல்லாடனும் மாப்பிள்ளை.” என்று போன முறை நடந்ததை கூற, ஆர்.ஜே சிரித்தே விட்டான்.

” ஆர்.ஜே ! நீ எவ்வளவு மார்க் எடுப்ப ? “

” சித், நானும் உன் கேஸ் தான்.. ஜஸ்ட் பாஸ் ஆகிறதே, பெருசு. நமக்கெல்லாம் டான்ஸ் தான் சித். “

” அப்ப! சீதா, உன்னை திட்டாதா ஆர்.ஜே ? “

” சீதாவா, நான் நிறையா மார்க் எடுத்துட்டேன்னு, எனக்கு ஸ்வீட் செஞ்சு கொடுக்கும்.. ” என்றதும், ” அப்ப, ஜானுவ சீதா கிட்ட, கத்துக்க சொல்லி அனுப்பிருவோமா ஆர்.ஜே. என்னை எப்ப பாரு திட்டிட்டே இருக்கும்..”

” நாம, சீதா, வீட்டுக்கு மட்டும் போயிட்டோம் வை. அங்க, சீதா, உன்னை திட்டவே விடமாட்டாங்க. ” என்றான். ” நிஜமாவா ! நாம எப்போ சீதா வீட்டுக்கு போவோம். “

” சீக்கிரமா சித்  ” என்றான்.

அப்போது தான் உள்ளே நுழைந்தாள் ஜானு. ” எங்க போகனும் சித்துக்கு ? ” என்றவாறே வந்தாள்.

” அவங்க பாட்டி வீட்டுக்கு போகனுமா.அதான் சொன்னேன், சீக்கிரமா போகலாம். ” என்றான்.

தன்னறைக்கு வந்தவள், உடைமாற்றி, முகம் அலம்பிக்கொண்டு வந்தாள். அவளுக்கு, ரகு டீ கொண்டு வந்து கொடுத்தார். அதை பருகியவாறே, சித்தின் ஹோம்வொர்கை பார்த்தவள், அவன் நீட்டிய பேப்பரை பார்த்தாள்.

“சித், பேப்பர் கொடுத்துடாங்களா ? கொடு பார்ப்போம். ” என்று வாங்கி பார்த்தவளுக்கு ஆச்சரியம் தான். ” சித் ! இது உன் பேப்பர் தானா ? ”
ரகு, சிரிக்க, ” ஜானு, நீயுமா ? “

” சாரி சித்.. கூஸ்பம்பஸ் தான் மகனே! உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல, ஆனா, உன்னால முடியும் தானே சித். நீ ஃபுல் மார்க், எடுக்க வேணாம். இப்படி நீ எடுத்தாலே போதும் குட்டி ” என்று உச்சிமுகர்ந்தாள்.” ஜானு , நான் ஸ்ரவன் கிட்ட சவால் விட்டிருக்கேன். நானும் ரேங்க்ஹோல்டரா வருவேன்னு. “

” சித், அந்த சவாலுக்கு தான். நீ இப்படி முட்டி படிச்சீயா ? “

” எஸ் ரகு, இந்த மார்க்குகே, என்னை பார்த்து சிரிச்சான். அவனை போல, நானும் ரேங்க்ஹோல்டரா வருவேன்.”

அவனை தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் ஆர்.ஜே.” சித், இப்படி போட்டி போட்டு படிக்கிறது தப்பில்லை, போட்டி இருக்கனும், ஆனா, அந்த போட்டி கூட உனக்காக, தான் இருக்கும். நீ அவனை போல ரேங்க்ஹோல்டரா வர்றணும் ஆசை படுறது  தப்பில்லை. ஆனால், அவன் உன் ரோல்மாடல் இல்லை. அவனை போல ஆகனும் யோசிக்காம,நாம வித்தியாசமா இருக்கனும். அவனை போல அவன் இருக்கட்டும். நீ அவனாக கூடாது. அவன் ரேங்க் ஹோல்டராக இருக்கட்டும். நீ ரேங்க் ஹோல்டராக வர்றணும் நாங்க ஆசைபடல, நீ நல்ல படிக்கனும் தான் எங்க ஆசை. நீ உனக்காக படி, உன்னை இன்னும் எப்படி மாத்தலாம், யோசி. நீ ஸரவன் இல்லை. நீ சித். ஓ.கேவா  ” என்றான்.

” கண்டிப்பா, ஆர்.ஜே. நான் எனக்காக மட்டுமே படிப்பேன். ஸரவன்க்காக இல்லை. ” என்றான்.

” தெட்ஸ் குட், மை சன். ” என்று அணைத்தான். அதன் இரவு உணவை முடித்து கொண்டு உறங்கச்சென்றனர்.

ஜானுவை தன்கைவளைவுக்குள், வைத்துக்கொண்டான். இருவரும் பேசியவாறே இருந்தனர். ” ஜானு நாளைக்கு ஈவினிங் மூவி சக்சஸ் பார்ட்டி இருக்கு., கண்டிப்பா ஓய்ப்பை கூட்டிட்டு வர சொல்லிருக்கார் டரெக்டர். நீ வர்றீயா, நாம போலாமா  ? “

” ம்ம்… போலாம் ஆர்.ஜே. சித், வரனும் அவசியம் இல்லையே ? நாம, மட்டும் போனா போதும் தானே ! “

” சித், வேணாம் ஜானு. நாம மட்டும் போலாம்… “

” நாளைக்கு ஓர்க் முடிச்சிட்டு, பெர்மிசன் கேட்டு வரேன். நாம போலாம் ஆர்.ஜே ” என்றான். அவள் கன்னத்தில் இதழ் பதித்து தன் நன்றியை சொன்னான். அவன் நெஞ்சில் தலைவைத்து உறங்கினாள்.

மறுநாள் வழக்கம் போலவே, சித்து பள்ளிக்கு கிளம்பிட, ஆர்.ஜே, ஜான சூட்டிங்   சென்றனர்.. ரகு மட்டும் வீட்டில் இருந்தார். மாலையில், பார்ட்டிக்கு செல்ல இருப்பதால்.டான்ஸ் கிளாக்ஸ் செல்ல வில்லை.. வீட்டில்,தயாராகி கொண்டிருந்தான்.

மருத்துவமனையில், சொல்லிக்கொண்டு, ஜானுவும் வர, அவளும் கிளம்ப  தன்னறைக்கு விரைந்தாள்.  வெள்ளை  நிற டிசைனர்  புடவை அணிந்து அதற்கேற்றார் போல, சிவப்பு நிற ரவிக்கை அணிந்து, சேலையை ப்ளோட்டிங் விட்டிருந்தாள். தலை முடியை பின்னாமல்  மேலே காதோரம் முடிகளை மட்டும் எடுத்துகுத்திக்கொண்டு, மீதத்தை பின்னாமல் விட்டிருந்தாள்..

” ஆர்.ஜே போலாமா ? ” என்று தன் புடவை சரிசெய்து கொண்டே வந்தவளை காண, இமைகளும் இதயமும் துடிக்க மறக்க, சிலையாய் வந்தவளை கண்டு சிலையாகித்தான் போனான்.

” ஆர்.ஜே போலாமா ? ” அவளை உலுக்கினாள்… ” ஆங்… ஜானு! போலாம் ” என்று பேய் முழித்தான்.

” ஜானு, நீ ரொம்ப அழகா  இருக்க! லவ் யூ ஜானு.. ” என்றான். அவனை தூக்கி முத்தமிட்டாள். அவனும் முத்தமிட்டான். இவர்களை பார்க்க, ஏக பெருமூச்சை விட்டான். தன்னால் முடியாத ஏக்கம் கொண்டு முன்னே செல்ல, ஜானு சொல்லிக்கொண்டு பின்னே நடந்தாள்.

அமைதியாக காரை ஓட்டி வந்தான். ” என்ன ஆர்.ஜே அமைதியாவே வர்றீங்க. என்னாச்சு ? ”

” ஒன்னில்லை ஜானு… “

” இல்ல, நீங்க அமைதியாவே இருக்கீங்க. என்ன பார்த்து, எதுவுமே சொல்லலை, என்மேல கோபமா எதுவும். ஏன் இப்படி பேசாம வர்றீங்க.. “

” ஜானுமா ! இதெல்லாம் ஆண்களோட பீலீங்க்ஸ், சொல்ல முடியாது. “

” அப்படியே என்ன ஆண்களோட பீலீங்க்ஸ் சொல்லுங்க தெரிஞ்சுப்போம்.. நான் ஒரு ஹைனகாலஜிஸ்ட் எனக்கு புரியும் சொல்லுங்க.. ” என்றதும் சரியாக பார்ட்டியும் நடக்கும் இடமும் வந்தது..

இருவருமாக உள்ளே சென்றனர். ஆட்கள் அதிகம் இருக்க, அங்கே வந்த, நடிகர், நடிகை, டரெக்டர், கோ ஆர்ட்டிஸ், ப்ரோடியூசர், படித்தில் வேலை செய்த அனைவரும் வர, அவர்களுக்கு தன் மனைவியை அறிமுகம்செய்து வைத்தான். சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பித்தது..

அங்கே ட்ரீங்ஸ் வழங்கப்பட்டது, டான்ஸ், என எல்லா கொண்டாட்டமும் இருந்தது. ட்ரேக்டர், அவர்கள் இருவரையும் அழைத்து ஆடுமாறு மைக்கில் அழைக்க, முதலில் தயங்கியவர்கள், பின் ஆட ஆரம்பித்தனர்..

அந்த படத்தில் வரும் மெலோடி பாட்டை போட்டனர்.. அவன் கைநீட்ட தனது மென்கரங்களை, அவனது கைகளில் வைத்தாள். மென்விரல்களை பற்றிக்கொண்டு அப்பாடலுக்கேற்றவாறு ஆடினார்கள். அவன் விரல்கள் சென்ற, இடமும் அழுத்தமும். அவளை காதல் மயக்கத்தில் ஆழ்த்தினான்.

பார்ட்டியும் முடிய இருவரும் வீடு திரும்பினர். அவனோடு ஆடிடும் போது, அவனது கண்களில் வழிந்த காதலும், அவன் விரல் கொடுத்த அழுத்தமும் பெண்ணவள் இதுவரை அனுபவித்திடாத உணர்வாக இருந்தது.

இதற்குமுன் வாழ்ந்த வாழ்க்கை,அவன் திண்டல் எல்லாம் கடனுக்கே, என பொறுத்தாள், அதில் காதல் இல்லை, அவன் தீண்டும் பொழுதெல்லாம், தன் மேல் தீயள்ளி கொட்டியது போலத்தான் இருந்தது. ஆனால், ஆர்.ஜே தீண்டலில் காதலை மட்டுமே உணர்ந்தாள்.  மீண்டும் மீண்டும் வேண்டி நின்றது, அவளது மனது. அவனது திண்டலை நினைத்தவாறு வீடு வந்தாள்.

இருவரும் உள்ளே நுழைய, ரகுவும் சித்துவும் உறங்கி போயிருந்தனர். இன்னொரு சாவியை வைத்தே திறந்து வந்தனர்.

அவன் வேகமாக உள்ளே நுழைந்தவன் ஆடைமாற்றி வந்தான். ஜானு, டைனிங் டேபிளில் நின்று தண்ணீர் பருகினாள். அவள் பருக நீர்  கழுத்துவழியே செல்வதை கண்டவனுக்கு உள்ளுணர்ச்சிகள் எழுந்தது.

அவளருகே வந்தான். ” ஜானு… “

” சொல்லுங்க ஆர்.ஜே… “

” அது… அது…. சாரி, ஜானு. என்னால முடியலைடி.  இன்னைக்கு  நீ ரொம்ப அழகா இருக்க. ஐ நீட் யூ. எனக்கு நீ வேணும். ” என்று அவளை தன்னோடு இழுத்து தூக்கி டைனிங் டேபிளில் அமர்த்தி, அவளது  இதழை சிறையெடுத்தான். அவனது திடிர் தாக்குதலை தாங்க முடியாமல்  தண்ணீர் மக்கை தட்டிவிட கீழே விழுந்தது..

அவனது நெஞ்சில் கை வைத்து தடுத்தாள். அதனை தவறாக எண்ணிக்கொண்டு அவளை விட்டு விலகியவன். பால்கனிக்கு சென்று நின்றுகொண்டான்.

இவளோ தண்ணி மக்கை எடுத்து வைத்தவள். தன்னறைக்கு விரைந்து கதவை தாழிட்டவள், அவனை தேடி விரைந்தாள். அவன் திரும்பிக்கொண்டு நின்றிருந்தான்.

அவனை பின்னாலில் நின்று, அணைத்து கொண்டாள்.

” சத்தம் கேட்டு அப்பா வந்திடுவாரோன்னு தான்  தடுத்தேன் ஆர்.ஜே. ஆனால் வேணான்னு தடுக்கலை, எனக்கும் நீங்க வேணும். ஐ லவ் யூ ஆர்.ஜே.” என்று அவனது முதுகில்  முத்தமிட்டு, முகத்தை புதைத்துக்கொண்டாள்.

” ஜானு… ” அவன் முகம் காண,கண்ணாலே சம்மதத்தை தர, அவளை தூக்கி கொண்டு மஞ்சத்தில் கிடத்தி தானும் படுத்துகொண்டு, கண்களால் ரசித்தவை எல்லாம் இன்று முழுதாய் ஆளத்தொடங்கினான்.

இனிமையான இரவில், இன்பமாய் தன் இல்லற வாழ்க்கை ஆரம்பித்தனர்.

குறும்பு தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!