என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 36
தினமும் விடியலை, ஆதவன் கொடுத்தாலும். புத்தம் புதிய நாளாய், புதுவிதமாகக் கொடுக்கின்றான். நேற்றையச் சோகங்களையும் கவலைகளையும் மறந்து. புதியொரு விடியலாய் அனைவருக்கும் வழங்கி. வாகாய் வானில், உலாவிக்கொண்டிருக்கிறான்..
அப்போது தான், மொட்டிலிருந்து இதழை விரித்து மலர்ந்தப் பூவை போல், அவள் முகத்தில் நாண ரேகைகள், படர்ந்து சிவந்து பூவைப்போல இருந்தாள். தன் மகளைக் காண, ரகுவிற்குத் தன் பழைய மகளைக் கண்ட உணர்வே வந்தது. அவள் முகத்தில் என்றுமிருக்கும் இறுக்கம் மறைந்து, சிரிப்பும் அழகும் கூடியிருந்தது.
இருவரது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்கிறது என்றுத் தன் மகளின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. நெடுநாள், வேண்டியிருந்தது இன்றே நிறைவேறியச் சந்தோசம் அவருக்கு. தன் மகளின் வாழ்க்கைச் சீரானதை எண்ணியே நிம்மதியானார்..
தன் பேரனை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார். சமையலறையைச் சுத்தம் செய்துவளுக்கு நேற்றை நினைவுகள் வெட்கத்தைத் தர்ற, தனியாகத் தலையில் அடித்துச் சிரித்துக்கொண்டாள்.
அவனோடு இருந்த நிமிடங்கள், அவளை இதுவரை, அனுபவித்திடாத இன்பலோகத்துக்கு அழைத்து சென்றது. அவனது தீண்டலும் முத்தமும் சுகமான இம்சையைக் கொடுத்தது.
அவனது வெற்றுமார்ப்பில் தன் தலையை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டாள். ” ஜானு.. ” அவளது நாடியைப் பிடித்து நிமிர்த்தினான்.
அவள், தன் நாணத்தை மறைக்கப் போராடி தோற்றவள், மீண்டும் அவன் நெஞ்சிலே அடைக்கலமானாள்.
” ஜானு… ஹாப்பி இருக்கீயா ? ”
என்றதும், அவனைப் பாராது, தலையை ஆட்டி வைத்தாள்.
” என்ன, பார்த்து சொல்லுடி, உனக்கு நான் முழுமையான சந்தோசத்தைக் கொடுத்தேனா ? ”
அவன் முகம் பார்த்தவள். இருக்கன்னத்திலும் அழுத்தி முத்தம் பதித்தாள்.
” எனக்கான நன்றி இது. ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஆர்.ஜே. நான் உங்களை அதிகமா, ஹர்ட் பண்ணிருக்கேன். ஆனாலும், என்னைவிட்டுப் போகாம, எனக்காகவும் சித்துக்காகவும் பொறுமையா இருந்தீங்க.. இதுக்கு முன்ன இதுபோலச் சந்தோசத்தை பார்க்கல ஆர்.ஜே. உங்க கண்ணுல இருக்கக் காதல், ஒவ்வொரு முறையும் அதிகமாகுதேத் தவிரக் குறையவே இல்லை.. எனக்கும் சேர்த்தே நீங்க, என்னைக் காதலிக்கிறீங்க. ஐ லவ் யூ ஆர்.ஜே. “
அவள் நெற்றியில் இதழ் பதித்து, கண்ணீரைத் துடைத்தவன். நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
” என் ஜானுமா, எதற்காகவும் அழுகக் கூடாது. அது ஆனந்தக் கண்ணீராகவே இருந்தாலும். ” என்று இறுக்கி அணைத்தான்.
” அப்ப, வெங்காயம் நறுக்கும் போது கண்ணு கலங்குமே ? என்னப் பண்ணுவீங்க ஆர்.ஜே. “
” ம்ம்… நானே நறுக்கி தர்றேன். நீ நறுக்கி அழுகவேண்டாம். ” அவன் நெஞ்சில் குத்தியவள். அவனை கட்டிக்கொண்டாள். இரவை, இருவரின் காதலால் கழித்தனர்.
அவள் உள்ளே வேலைச் செய்துகொண்டிருந்தாள். தனது காலைக் கடன்களை முடித்து, அவளை தேடி, சமையலறைக்குள் நுழைத்தவன். அவளைப் பின்னால் நின்று அணைத்து. தனது நாடியை அவள் தோளில் பதித்து, அவளது வாசனையை நுகர்ந்தான்.
” ஐ லவ் யூ ஜானு… ” இறுக்க அணைத்துக்கொண்டான்.
” குளிக்காமத் தொடாதீங்க ஆர்.ஜே ” அவனை விட்டு விலகிச் செல்ல, அவளால் முடிந்திடுவில்லை. கிடுக்குப்பிடியாக பிடித்து நிற்பவனிடம், அவள் முழு பலம் பயனற்று போனது.
” ஆர்.ஜே விடுங்க, என்ன இது ? ” வார்த்தைகள் குழைந்தது அவளுக்கு.
” என்னடி, என் பொண்டாட்டியை நான் கட்டிப்பிடிக்கக் கூடாதா ? “
” அதுக்குன்னு, குளிக்காமையா, கட்டிபிடிப்பீங்க. நான் குளிச்சிட்டேன் ஆர்.வே விடுங்க. “
” என்ன ரூல்ஸ் இது, குளிச்சுட்டு தான் கட்டிபிடிக்கனும், குளிக்காமக் கட்டிப்பிடிக்கக் கூடாதான்னு. நான் என் பொண்டாட்டியைக் கட்டிப் பிடிப்பேன். எவன் கேட்பான். ” என்றவன், வாகாய் அவள் கழுத்தில் முகம் புதைத்து நின்றான்.
அவளும் அவனது அணைப்பிலிருந்தே, அவனுக்காய் காஃபியைக் கலக்கினாள்.. பெரும் பாடுப்பட்டு அவனிடமிருந்து விலகியவள், தனது நேரத்தைச் சுட்டிக்காட்டினாள்.
அவனும் பெருமூச்சைவிட்டு காஃபியைக் குடிக்க ஆரம்பித்தான். அறைக்குள் விரைந்து, மருத்துவமனைக்கு தயாராகி வந்தாள்..
தனது விழிகளால், அவளைப் பருகியவன். அனுப்ப மனமின்றி அமர்ந்திருந்தான்.
” என்னாச்சு ஆர்.ஜே அப்படி பார்க்கிறீங்க ? தனது கையில் வாட்சைக் கட்டியவாறு கேட்டாள்.
” ஜானு, இன்னைக்கு நீ வேலைக்குப் போய்த் தான் ஆகனுமா ? என் கூடவே இரு ப்ளீஸ். “
” சார் , என்னமோ புதுசாக் கல்யாணம் ஆனா, பொண்டாட்டியைப் பிரிய முடியாமத் தவிக்கிறப் புருசனைப் போல, நடந்துகிறீங்க. இது ஓவர். நான் தான் நைட் வந்திடுவேனே. அப்புறம் என்ன ? ”
” அடியே ! புதுசா கல்யாணமானக் கணவன், மட்டும் தான், தன் பொண்டாட்டியைப் பிரிய முடியாமத் தவிப்பானா ? பொண்டாட்டி நேசிக்கிறவன் , எந்தப் புருசனும், பொண்டாட்டியைப் பிரிஞ்சாத் தவிப்பான் டி. அதிலும், எனக்கு வேற அழகான பொண்டாட்டியைக் கிடைத்திருக்கா, அவளைப் பிரிந்தால் தவிக்கத்தான் செய்வேன் ” என்று நெருக்கினான்.
” கிட்ட வர்றாதீங்க, ஆர்.ஜே. அப்புறம், உங்க பேச்சைக் கேட்டு இங்கயே இருக்கத் தோணும்.. நான் வேலைக்குப் போயே ஆகானும். சமத்தா பீல் பண்ணாம வேலையைப் பாருங்க. ” என்று பேக்கை மாட்டிச் செல்பவளைப் பிடித்து இழுத்து முத்தங்களை தந்தே விட்டான்.
பள்ளியில், காலாண்டுத் தேர்வு முடிந்திருந்த நிலையில். பள்ளியில், விளையாட்டு விழா, நடத்த இருந்தனர்..
முதலாம் வகுப்பு மாணவர்களிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டிப் போட்டிகள், மாணவ மாணவிகளின் அணிவகுப்புகள் என அன்றைய நாளில் நடக்க இருக்கும் நிகழ்வை, விளையாட்டு ஆசிரியரும்
மத்த ஆசிரியர்களும் முதல்வரும் கலந்தாய்வுச் செய்தனர்.
ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கு இருவிளையாட்டுகளைத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஒருவிளையாட்டைத் தனியாக வைத்து அதில் வெற்றுப் பெற்ற மாணவர்களை விளையாட்டு விழாவில் பரிசுகளைக் கொடுக்கவும், இன்னொரு விளையாட்டை, அன்றைய நாளில் நடத்தி, அதில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசு கொடுப்பதாக முடிவுச் செய்து இருந்தனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், விளையாட்டு போட்டிகள் வைத்துவிட்டு. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை, ட்ரில் என சொல்லப்படக்கூடிய எக்சர்ஸைஸ் டான்ஸ் வைத்திருந்தனர். பாட்டிற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிச் செய்வது தான் ட்ரீல். மாணவிகள் தனியாகவும் மாணவர்கள் தனியாகவும் ட்ரீல் செய்வதாகத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
அனைத்தையும் தேர்ந்தெடுத்த நிலையில் மாணவர்களிடம் கூறினர்கள்.. அதன் பின், பரீட்சை முடிந்திருந்திருப்பதால் பேரண்ட்ஸ் மீட்டிங்கையும் வைத்திருந்தனர். மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வருமாறு டையிரில் எழுதிவிட்டிருந்தனர்.
சித்துவிற்கோ, பெரும் ஆனந்தம். இதுவரை தனக்குப் பிடிக்காத நாளென்றால், அது இந்தப் பெற்றோர் ஆசிரியர் கழகம் தான். இதுவரை, அவன் ஜானுவோடு வருவான். சைன்ஸ் டார்சர் சாரி டீச்சர், அவனைப் பற்றி ஏதோ ஏதோ சொல்லிவிடும். அதையும் நம்பி, ஜானு, அவனைத் திட்டுவாள், வீட்டில் சண்டை வரும். எல்லாரும் தன் தந்தைத்தாயோடு வருவார்கள். ஆனால், இவன் மட்டும் ஜானுவோடு வருவதுக் கஷ்டமாகத் தான் இருக்கும். தனியாக ஏங்கிய நாட்களும் உண்டு. ஆனால் இன்றோ, அப்படியல்ல, தனக்கு தந்தைத்தாயென இருவரும் இருக்க, அவர்களை அழைத்து வரனும். அதுவும் தன்னைக் கேலிச் செய்த, ஸ்ரவனும், அவனது நண்பர்களுக்கு முன், தன் தந்தையோடு வரவேண்டும். தனது சைன்ஸ் டார்சர் சாரி டீச்சரிடமும் காட்டவேண்டும் ஆவலாக அந்த நாளிற்காகக் காத்திருந்தான்.
மாலையில், அனைவரும் வீட்டில் கூடியிருந்தனர்.. வழக்கம் போலவே அவனைப் படிக்க அமர்த்தினாள் ஜானு.. டைரியைப் பார்த்தவள், சித்தைப் பார்த்தாள்.
” சித். பி.டி. ஏ மீட்டீங் அப்புறம் ஸ்போர்ட்ஸ் டே வேறையா ? “
” எஸ் ஜானு… நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன். ” என்றான்.
” ஏன் சித், ரொம்ப ஹாப்பீயா இருக்க ? உனக்குத் தான் இந்த பேரண்ட்ஸ் மீட்டிங்கே பிடிக்காதே. இப்ப என்ன ஹாப்பீயா இருக்கேன் சொல்ற ”
” ஜானு, அது முன்னாடி. இப்ப, இல்லை. பேரண்ட்ஸ் டே, அன்னைக்கு, நீ , நான், ஆர்.ஜே. மூனு பேரும் போலாம் ஜானு. எனக்கும் அப்பா, இருக்கார்ன்னு, நான் எல்லாருக்கும் காட்டுவேன். சித்தார்த் ஜானவின்னு சொன்ன, சைன்ஸ் டார்சர் கிட்ட, நான் சித்தார்த் ஜானவிராஜேஷ்சொல்லுனும். அதான் நான் ரொம்ப ஹாப்பீயா இருக்கேன். ” என்றான்.
அவனது வலிகள்,ஜானுக்குப் புரியாமல் இல்லை. அவன் இப்படிச் சொன்னதும், அவளுக்கு அழுகையே வந்தது. இச்சிறு வயதிலும், எத்தனை வலிகளை இதயத்தில் சுமந்திருக்கிறான். அவனுக்காகத் தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்தால். இருப்பினும், அவன் தந்தைக்காக ஏங்கிருக்கிறான், என்று எண்ணும் போது தனது அறியாமையை எண்ணி,அவனை அணைத்துகொண்டு அழுதாள்.
” சாரி, சித். இந்த ஜானுவால, நீ ரொம்பக் கஷ்டபட்டிருக்கேல.. “
” ஜானு, என்ன இது அழுத்திட்டு, உன்னை அழுக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல. முடிந்ததைப் பற்றி ஏன் பேசிட்டு இருக்க. சித், எவ்வளவு ஹாப்பீயா இருக்கான் பாரு. நீ அழுது, அதை கெடுத்திடாத. ” என்றான் ஆர்.ஜே.
அவள் அவனை விலக்கினாள். ” ஜானு, நான் பீல் பண்ணாலும், உன்னைப்போல அம்மாக் கிடைக்க, ஐயம் ப்ளஸ்ட் ஜானு. என்னை வேணான்னுச் சொன்னப் போதுக் கூட, நீ எனக்காக, உன் ஹஸ்பண்ட்டை விட்டு வந்து. எனக்காக வாழ்ந்திட்டு இருக்க ஜானு. நீ நினைச்சா, என்னை ஆனாதை அசிரமத்தில போட்டிருக்கலாம், ஆனால் என்னை இவ்வளவு தூரம் வளர்த்திருக்க நீ. ஐ லவ் யூ ஜானு.. ” என்றதும் அதிர்ச்சியில் இருவருமே அமர்ந்துவிட்டனர்.
” உனக்கு, எப்படி சித். இது தெரியும். யாரு உனக்கு இதைச் சொன்னா ? “
” அன்னைக்கு நாங்க வைஷூ வீட்டுல இருந்தோம்ல, அப்ப நான் தண்ணீர் குடிக்கப்போகும் போது, அபி, அத்தை மாமாகிட்ட பேசிட்டு இருந்தாங்க.. ”
” இவமுதல் புருசன், சித்தை வேணான்னு சொன்னதுக்கே, ஜானு, அவனை ட்வோர்ஸ் பண்ணிட்டா, இப்ப, வந்த ஆர்.ஜே, சித்தை வேணாச் சொன்ன, மறுப்படியும் ட்வோர்ஸ்ஸா பண்ணுவாளா ? “
” ஏன் அபி, ஜானுமேலையும், சித்து மேலையும் உனக்கு இவ்வளவு கோபம். அவங்க உன்னையோ, என்னையோ எந்த விதத்திலும் தொந்தரவுத் தருவதே இல்லை. இருந்தம் ஏன் அவங்க மேல உனக்கு இவ்வளவு ஆதங்கம் சொல்லுடி.. “
” பிரசவக்காலத்தில புருசன் கூடத்தான்,
இருக்கன்னும் நினைப்பா எந்தப்பொண்ணும். ஆனால், எனக்கு அப்படியா, அம்மாவீட்டுல தானே கொண்டு போய் விட்டீங்க. நீங்களும் என்ன மாமியார் வீட்டுலையா இருந்தீங்க. வருவீங்க, ஒருமணி நேரம் கூட இருப்பீங்க, அப்புறம் போயிருவீங்க. நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா என் புருசன் என் கூட இருக்கனும். அந்த ஆசையெல்லாம் உடைந்து போனதுக்கு யாரு காரணம் அவளும் அவ புள்ளையும் தான் காரணம். அதான் எனக்கு அவங்கமேல கோபம்.அவ புருசன் சரியில்லாம போன, நானும் என் புருசனை பிரிந்து இருக்கனுமா.. ” என்றாள்.
“அதான், விஷ்ணு பிறக்கும் போது, உன் கூடத்தானே இருந்தேன். தேவையில்லாததை நினைச்சுட்டு, நீ ஒரு நல்ல உறவை இழந்துட்டு நிக்கப்போற. உன்னால அவ, ஒட்டும் உறவும் இல்லாமத் தனியா இருக்கா. “
“இனி, அப்படி இருக்காது. அவளுக்குத் தான் புருசன் வந்தாச்சே. இனி, அவ ஏன் தனியா இருக்கனும். உங்க குழந்தைக்கு, தாத்தா பாசம் கூட முழுசாக் கிடைக்காமப் பண்ணிட்டா அவ. விஷ்ணுத்தான், உங்க வீட்டு வாரிசு. அவனைத் தூக்கிக் 1கொஞ்சாம, அவன் கூட இருக்காம, உங்கப்பா, மகப்பிள்ளைக் கூட தான் இருக்கார். “
” நீ , அன்னைக்கு ஏன் தங்கச்சியையும், சித்தையும் அக்சப்ட் பண்ணி, ஒன்னா, ஒரே வீட்டில இருந்திருந்தால். இந்நேரம். அவர் பாசம் விஷ்ணுவுக்கும் கிடைச்சிருக்கும். நான் வேணும். அவர் வேணும். அவர் பெத்த பொண்ணு வேணாம். அப்படித்தானே ! நான் நல்லாருக்கேன். என்னைப்பத்தி அவருக்கு கவலையில்லை, ஆனால், ஜானு ஒரு பொண்ணு. அவளை எப்படி தனியா விடச்சொல்லுற அதுவும் பிள்ளையை வச்சிட்டு தனியாக இருக்கிறவளை. நான் குடும்பம் சிதறி போகக்கூடாதுன்னு அமைதியா இருக்கேன். இதுக்குமேல பேசாத ” என்று சென்றுவிட்டான்.
இருவரும் பேசியதைக் கேட்ட சித்து, ரகுவிடம் வந்து. அவர்கள் பேசுவதைக் கூறினான். அவனை அணைத்துக்கொண்டு, அவனிடம், அணைத்தையும் கூறிப் புரியவைத்தார்.
சித்தை இறுக்கி அணைத்துகொண்டாள் ஜானு. இருவரையும் அணைத்துகொண்டான் ஆர்.ஜே. “இனி, உங்களுக்காக நான் இருப்பேன். ஜானுக்குப் புருசனாவும் சித்துக்கு அப்பாவாகவும் எப்பையும் நான் இருப்பேன். உங்களைவிட்டு நான் போகமாட்டேன். ” இருவரும் அவனது நெஞ்சில் தஞ்சமானார்கள்.
மறுநாள் பள்ளிக்கு மூவருமாகச் சென்றனர். சிவப்பு கம்பளத்தில் நடப்பது போலவே,சித். இருவரின் கைகளை பற்றி நடந்தான். க்ளாஸ் மிஸ்ஸூம் க்ரேஸியாக இருக்க. சித்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டாள். ஜானுவிற்கும் பெருமையாக இருந்தது.
ஸ்ரவனைக் கடக்கையில், சித். தனது தந்தையின் கையைப்பற்றி, அவனை காட்டிச் சென்றான். ஸ்ரவன் தலைகுனிந்தான். மூவருமாக வெளியேச் சென்று வந்தனர்.
அடுத்த வந்த நாட்கள், விளையாட்டு விழாவிற்காக, பள்ளியில் அனைத்தும் மாணவர்களும் பிசியாக இருந்தனர்.
அன்றைய நாளில் அணிவகுப்பில் கலந்துகொண்ட, அனைத்து மாணவர்களை ரேஸ்கோர்ஸ்க்கு அழைத்து சென்றனர்.சித்துவும் சூர்யாவும் கலந்திருப்பதால். அவர்களும் சென்றனர்.
அங்கே, சந்தோசஷ், தனது நண்பர்களை வரவழைத்து சித்துவை அடிக்கச் சொல்லிருந்தான். தனியாக வந்த சித்.. அவர்களிடம் மாட்டிக்கொண்டான். அவனிடம் அத்தனை ஆத்திரத்தை காமித்துவிட்டுச் சென்றனர்.. வலியில் எழமுடியாமல் மயங்கி சரிந்தான் சித்.
குறும்பு தொடரும்