என்னுயிர் குறும்பா 38

என்னுயிர் குறும்பா 38

குறும்பா 38

ஆங்காங்கே ஒளிகள் வீசிக்கொண்டிருந்தது…. வண்ண வண்ண விளக்குள், அம்மேடை முழுதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது…லேசர் விளக்குகளும் அந்த மேடையை நிறைந்திருந்தது. வலது புறத்தில் மூன்று நபர்கள் நடுவர்களாக அமர்ந்திருந்தனர்.

இடதுபுறத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்.. முதலில் தொகுப்பாளர்கள் பேசி ஆரம்பிக்க, வரிசையாக குழந்தைகள், ஆடி தன் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர்..

குழந்தைகள் ஆடி முடிக்கவே, நடுவர்கள், அவர்களது ஆட்டத்தை பற்றி விளக்கமாக கருத்துகளை கூறினார்கள்…

அன்றைப் போட்டித்தேர்வு இருபது குழந்தைகளிலிருந்துப் பத்து குழந்தைகளைத் தேர்ந்துத்தெடுக்கும் நிலைக்கு வந்தது.. அதற்காக அத்தனை குழந்தைகளும் பயிற்சி எடுத்திருந்தனர்.

ஒவ்வொரு குழந்தைகளாக ஆடிச்சென்று தங்களின் இடத்திற்கு சென்று அமர்ந்துக்கொண்டனர்.

குழந்தைகள் ஆடி முடித்த பின்னரே அந்த பத்து குழந்தைகள் யாரென அறிவிக்கப்படும்.

குழந்தைகள் ஆடி முடிக்க, தொகுப்பாளர்கள் ஷோவின் பெயரையும், அதற்குரிய ஸ்பான்சர்களின் பெயர்களையும் கூறிவிட்டு’ ப்ரேக் ‘ என்று சொல்லிச்சொல்வார்கள்.

ஐந்து குழந்தைகள் ஆடி முடித்ததும் ஆறாவது குழந்தையாக சித் களமிறங்கினான்..

அவனுக்கு ஏற்கனவே பாட்டையும் அதற்கான ஸ்டேப்ஸை பயிற்சி கொடுத்திருந்தான் ஆர்.ஜே. இருந்தும் நடுவில் சித்துக்கு அடிப்பட்டிருந்த நிலையில்.. அவனுக்கேற்றார் போல், எளிய முறையில் ஸ்டேப்ஸ் சொல்லிக்கொடுத்திருந்தான்..

காலில்,அத்தனை வலிகள் இல்லாததனால் அவனால் ஆட முடிந்திருந்தது…

அவனதுப் பெயரைச் சொல்லும் போது, வந்திருந்தப் பார்வையாளர்கள் சத்தம் போட்டுக் கூச்சலிட்டு ஆர்பறித்தனர்..

அவனும் தன் ஆட்டத்தை தொடர்ந்தான். நேர்த்தியாக, அந்த பாடலுக்கு ஏற்றவாறு, அழகாய் ஆடி முடித்தான். நடுவர்கள் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்..

மூவரின் பாராட்டு மழையில் நனைந்தான் சித்.. சிலர் திறமையை கற்றுக்கொண்டு வளர்ப்பார்கள். ஆனால் சிலருக்கோ, பிறவியிலேயே இருக்கும் என்பார்கள்.அதுபோலவே, கற்றுக்கொண்டு வளர்க்காத இத்திறமை, சித்திற்கு பிறவியிலேயே இந்த ஆடல் திறமை இருந்தது போலும்..

தன்னால் இயலாத பட்சத்திலும், ஆடல் மீது இருந்திருந்த, ஆசை, அன்பு. வெறி, பற்று, அனைத்துமே அவனை அங்கு ஆடவைத்து..

பார்வையாளராக அமர்ந்திருந்த ஜானுவிற்கோ, ஒருபக்கம் பயமும், மறுபக்கம் சந்தோசமும் போட்டிப்போட்டு கொண்டு இதயத்தில் ஊற்றெடுத்தது..

எங்கே ஆடமுடியாமல், நின்றிடுவானோ, விழுந்திடுவானோ, வழியில் துடித்திடுவானோ, பெத்த மனம் கவலைக்கொள்ள, அவன் சிரித்த முகமாய்,அனைவரின் கைகத்தட்டலில் உற்சாகமாய் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு சந்தோசமென, ஆனந்தக் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தோடியது அவளது கண்களில்.

” சித்… சித்.. ” என்று சிவாளி, வைஷூ, விஷ்ணுவின் ஊக்கம் வேறு, அவனுக்கு கேட்டதோ இல்லையோ அவளுக்கு கேட்டு ஊக்கம் அளித்துக்கொண்டிருந்தது..

அவன் ஆடவேண்டாம் என்று மறுத்து பேசி, ஆர். ஜேவிடம் சண்டைபோட்டவள், இன்று சித்தின் ஆடத்தைகண்டு வாயடைத்துப் போனாள்.

மருத்துவமனையிலிருந்து சித்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இரண்டு நாள் பெட் ரெஸ்டில் இருந்தான்.. பள்ளியில் விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருப்பதால், அவனை பள்ளிக்கு வரவேண்டாம் என்று பள்ளி ப்ரின்சிபால் கூறிவிட்டார்.

வீட்டிலே இருக்க,அவனுக்கு போர் அடித்தது. மாலையில் சிவாளி, வருவாள். பள்ளியில் நடந்தை கூறி, அவனோடு,பொழுதைக் கழித்துவிட்டுச் செல்வாள். ஆர்.ஜே , ஜானு , ரகு ஏன,மாறி மாறி பார்த்துக்கொண்டனர்..

இதற்கிடையில் , சித்திற்கு அடிப்பட்டச் செய்தியைக் கேட்ட, டான்ஸ் ஷோ மேனேஜர் அவனை பார்த்துவிட்டு, போட்டியில் அடுத்த லெவலைப் பற்றிக் கூறிச்சென்றார். அவனுக்கு கால் வலிக் குறைந்திருந்தால், ஆர்.ஜே அவனை, ப்ராக்டிஸ் அழைத்தான்.

ஆனால்,ஜானுவே மறுத்தாள்.. அவனால் வலிதாங்க முடியாது என்றும் ,  அவனுக்கு  இன்னும் சரியாகிடவில்லை என்று வாதிட்டாள்.

சித்தும்,தான் ஆடச்செல்வதாக ஜானுவிடம் கூறினாலும். மறுத்தவள் ஆர்.ஜேவிடம் சண்டை போட்டாள். அவனும் நிலைமை புரியவைக்க முயன்றான். ஆனால், அவளோ  வீம்பாக மறுத்துநின்றாள். இப்படியே வாதம் பெருசாக, ஜானு வார்த்தையை விட்டாள். அதனால் கோபம் கொண்ட ஆர்.ஜே, சித்தை தூக்கிக்கொண்டுச் சென்றுவிட்டான்..

இரவு வர,கொஞ்சம் களைப்பாக இருந்தான் சித். அதிகமாக அவனை ஆடவைக்க வில்லையென்றாலும், அவனால் முடிந்தளவுக்கு ஆடவைத்தான். அவனாக முடியவில்லை என்னும் பட்சத்தில் விட்டான்..

அவனுக்கு உணவை ஊட்டியவன், மாத்திரையும் கொடுத்துப் பக்கத்திலே போட்டு உறங்கவைத்தான்.

ஆர்.ஜேவை சாப்பிட அழைந்ததும், அவளுடன் பேசாது உறங்கிப்போனான்.

கட்டிலில் இருவர் படுக்கும் படியே இருக்க,ஜானு கீழே படுத்தாள். அதன் வந்த நாட்களில் எவ்வளவு முயன்றும் ஆர்.ஜேவிடம் பேச முடியவில்லை.. அவனும் பேசவே இல்லை. அப்படியே பேசும் சூழ்நிலை வந்தாலும் முகத்தை காட்டாது எங்கோ பார்த்து பேசிவிட்டு செல்வான். இப்படியே அந்த வாரம் கடந்து சென்றது…

சித்துவிடம் பல அறிவுரைக் கூறியவன் வழக்கம் போல் அவன் ஷோவிற்கு வராமல் போனான். அங்கே சிவாளி,வைஷு,விஷ்ணு, ஜகதிஸ், ரகு என சென்றிருந்தனர்..

பாடல் சத்தத்தில் நினைவுப்பெற்றவளுக்கு மனதில் கனம் கூடியது, இன்றாவது பேசமாட்டானா ? ஒவ்வொரு நாளும் ஏங்கித்தவித்தாள். கோபத்தில் விட்ட வார்த்தை, அவனையும், அவன் பேசாது   அவளை தவிர்ப்பது, இருவரையும் அந்த வார்த்தைகள் காயப்படுத்திக்கொண்டிருக்கின்றன..

நடுவர் அடுத்த போட்டி லெவலுக்கான பத்துக்குழந்தைகளின் பெயரை வாசிக்கத் தயாரானர்கள்.. அதில் முதலில் இடம் பெற்றது சித்து தான். சித்தின் பெயரை சொன்னதும், அரங்கத்தில் பாப்பர்ஸ் வெடித்து பேப்பர் மழைத்தூவியது, அவன் மேடைக்கு வந்தான். அதன் பின் ஒன்பது குழந்தைகளும் வந்து சேர்ந்தனர்..

இனி போட்டிகள் அந்த பத்து குழந்தைகளுக்கு மட்டுமே, வெளியேறின குழந்தைகள் மீண்டும் வொயில்கார்ட்டில் சந்திக்கலாம் என்று கூறி அந்த ஷோவை முடித்தனர்.

அவன் தேர்வான சந்தோசத்தில் அவனை தூக்கிச் சுத்தினாள் ஜானு..

” சாரி சித். அன்னைக்கு, நான் உனக்கு வலிக்கும்ன்னு ஆடவேணாம் சொன்னேன். ஆனால் அது எவ்வளவு பெரியத் தப்புன்னு இன்னைக்கு தான் புரிந்தது… உன் அப்பா ரியலி க்ரேட் சித். ” என்றாள்.

” என் அப்பா, க்ரேட் தான் ஜானு. ஆனால் நீ ஏன் அன்னைக்கு, அவரை அப்படிச் சொல்லி ஹர்ட் பண்ண… “

” தப்பு தான், நான் கோபத்தில,  ஆர்.ஜேவை ஹர்ட் பண்ணிட்டேன் புருஞ்சது சித்… உங்க அப்பாகிட்ட சாரி கேட்கனும் நினைக்கிறேன். என்கிட்ட முகத்தைக் கூட காட்டாம திரும்பி போறார். நான் என்னதான் சித் பண்ண.. “

” ஜானு… நான் சொல்லுறேன் ஆர்.ஜேகிட்ட, நீ சாரி கேளு. கண்டிப்பா, ஆர்.ஜே உன் சாரியை அக்சப்ட் பண்ணுவார் ஜானு… “

” ஓ.கேங்க பெரிய மனுசா… ” என்று அவன் குண்டு கன்னத்தில் இதழ்பதித்தாள்.

” என் பேரனால, முடியாதது ஒன்னுமே இல்லை… அருமையா ஆடின சித்து கண்ணா… “

” சித்… எனக்கு பார்க்க, உங்கப்பன போல தான்டா, தெரிஞ்ச சின்ன வயசுல ஸ்டேஜ்ல இப்படிதான் உங்கப்பன்னும் ஆடுவான்.. ” என்றான்.

” மாமா… அப்ப, ஆர்.ஜேவோட சின்ன வயசு போட்டோ இருக்கா ? உங்க கிட்ட “

” ம்ம்… இயர் எண்ட் எடுத்த க்ரூப் போட்டோஸ் தான் சித் இருக்கு.. ஏன் கேட்கிற ?   “

” இல்லை, அவரைப் போல ஆடுனேன் சொன்னீங்கள, அப்ப நான் அவரை போல இருக்கேன்னா பார்க்க ? ” என்றதும் மூவருக்கும் தர்மசங்கடமா போனது.. சித்து தான் அவன்பெத்த பிள்ளை இல்லையே,எப்படி அவனை போல இருப்பான்… தான் தவறாக கூறிவிட்டோமோ என்று  ஜகா வருந்தினான்.

” மாமா… எனக்கு ஆர்.ஜே வோட சின்ன வயசு போட்டோ வேணும். ஆர்.ஜே ப்ர்த்டேவுக்கு கிப்ட் பண்ண  ” என்றான். அது அவர்களை இயல்பாக்கியது..

வீட்டிற்கு வந்தனர் அனைவரும். ஆர்.ஜே இருக்க,ஓடிவந்து கட்டிபிடித்து முத்தமிழைத்தான்.

” ஆர்.ஜே நானும்  டாப் டென்ல ஒரு ஆளா, ஸ்லேக்ட் ஆகிட்டேன். எல்லாம் உன்னால தான் ஆர்.ஜே ” என்று மீண்டும் வைத்தான்.

” சித், இதெல்லாம் உன்னோட முயற்சியால தான். எவ்வளவு நான் சொல்லிக்கொடுத்தாலும், உன்னுடைய எப்ஃபோரட் இல்லைன்னா முடியாது… நாம கண்டிப்பா பைனல் போய் ஜெய்போம் டா மகனே ! ” என முத்தம் வைத்தான்…

” ஓ.கே   சித்து, இன்னைக்கு நாம வெளிய போலாமா ? நீங்க ஜெயிச்சுருக்கீங்க, அதை செலபிரேட்,பண்ண வேணாமா ? இன்னைக்கு நாம டின்னர் வெளிய சாப்பிடலாம்.. ” என்றவன், ஜகாவையும்   ரகுவையும் அழைக்க அவர்கள் மறுத்தனர். அதனால் இருவர் மட்டுமே செல்ல, ரகுவும் ஜகாவும் ஜானுவைப் பார்த்தனர்..

அவளோ, இருவரும் செல்வதை,ஏக்கமாகப் பார்த்தாள்.

” உனக்கு, ஆர்.ஜேவுக்கும் என்னப் பிரச்சினை ஜானு.. எங்களை கூப்பிட்டவன். உன்னையே ஏன் கூப்பிடாம போறான். என்னாச்சு ஜானுமா ? ”

” ஜகா, எல்லாம் ஏன் தப்புத்தான் நான் அவர் கிட்ட அப்படிப் பேசிருக்க கூடாது. ” என்று அனைத்தும் கூறினாள்.

ஜானு,மாப்பிள்ளையை எந்தளவு அந்த வார்த்தை பாதித்திருக்குன்னு, அவர் உன்கிட்ட பேசாம இருக்கிறதுலே தெரியுது… நீ தான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்கனும். இதுக்குமே என்ன சொல்ல, உங்களுக்குள்ள நாங்க வர முடியாது பார்த்துக்கோமா  ” என்றவர். ஜகதிஸ் அழைக்க அவனோடு சென்றுவிட்டார். அவன் தனிமையில் தவித்தாள்.

அங்கே இருவரும் பீச்சிற்குச் சென்று விளையாடிவிட்டு, அந்த மாலையில் சூரியன் மறைவதை ரசித்துவிட்டு, கடல் காற்றை அனுப்பவித்து நிறைய பேசி, அங்கே விளையாட்டுகளை விளையாடிக்  கால் வலிக்கவே அந்த மணலில் அமர்ந்தனர்.

இருவரும் கடலை வெறித்தனர். ” ஆர்.ஜே… “

” சொல்லு சித் எதாவது வேணுமா  உனக்கு ? “

” ஆமா, வேணும் “

” என்ன வேணும் சொல்லு சித் வாங்கித்தரேன்… “

” நீ, ஜானுவோட பேசணும் ஆர்.ஜே. ” என்றதும் அவனை பார்க்க அவனோ அடிக்கண்ணில் அவனை பார்த்து, ” ஜானு  பேசினது தப்பு தான். ஆனால் ஜானு வேணும்னே சொல்லை தானே. ஏன் இன்னும் அவ மேல கோபமா இருக்க ஆர்.ஜே “

” சார், அவங்களுக்கு தூதா ? மேடம் எதுவும் சொல்லி என்கிட்ட பேச சொல்லி அனுப்பினாங்களா ? “

”  இல்லை ” என்று தலையாட்டியவன், ஜானு தன்னுடைய தப்பை உணர்ந்துட்டா ஆர்.ஜே, இதுக்குமேலையும்  பனிஷ் பண்ணனுமா ? “

” உங்க ஜானு, இன்னும் என்கிட்ட சாரி கேட்கலை சித்… “

  ” ஆர்.ஜே, ஜானு பேசு வரும் போதெல்லாம் நீ தான் பேசாம போன,அப்புறம் எப்படி சாரி சொல்லுவரது உனக்கு எப்படி தெரியும்… “

” சரிங்க சார்… இப்ப நான் என்ன பண்ணணும்.. “

” ஜானு பேச வந்தா,  சாரி கேட்டா. அவளோட சாரியை அக்சப்ட் பண்ணணும். அவ கிட்ட பேசணும் ஆர்.ஜே, ப்ளீஸ் ” என்றான்.

” சரி சித், பேசுறேன் ஒ.கேவா. ” என்றான். அதன் பின் அவனுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து சாப்பிட சொன்னான்.ஆனால் அவன் சாப்பிடவில்லை..

இருவரும் வீட்டிற்குவர, சித் காரிலே தூங்கிவிட்டான். அவனைத் தூக்கிக்கொண்டு, வாங்கிய பார்சலையும் எடுத்துக்கொண்டு வந்தான்.

ஹாலிங் பெல் அழுத்த, அவர்களுக்காக காத்திருந்தவள் வேகமாக கதவைத்திறந்தாள்.

அந்த பார்சலை டேபிளில் வைத்துவிட்டு மெத்தையில் சித்தை, கிடத்தினான்.. தன் உடையை மாற்றி அறையை விட்டு வெளியே வந்தான். ஓரக்கண்ணால் அவளை தழுவிட்டு, தண்ணீர் பருகச் சென்றான். அவன் தண்ணீரைக் குடிக்க, அவனை பின்னின்று அணைத்தாள் ஜானு..

” ஆர்.ஜே, நான் சொன்ன வார்த்தை மனசில இருந்து சொல்ல, கோபத்தில தான் சொன்னேன். நான் அப்படி பேசினது தப்பு தான்… அதுக்கு நாலு அடிக்கூட அடிங்க, பேசாம இருந்து கொல்லாதீங்க ஆர்.ஜே. இதுக்கு முன்ன கூட நான் தனியாதான் இருந்திருக்கேன். அப்ப எனக்கு எதுவுமே தோணலை, ஆனால் இந்த ஒருவாரம், நீங்க பிரிஞ்சு, எனக்கு கிடைத்த இந்த தனிமை என்னைக் கொன்றுச்சு… இப்ப கூட,உங்களுக்கு என்மேல கோபமிருந்தா என்னை அடிங்க ஆர்.ஜே பேசாம இருக்காதீங்க..    முடியல ஆர்.ஜே. அந்த வார்த்தை உங்களை எந்த அளவுக்கு காயப்படுத்திருக்குன்னு , நான் அனுப்பவிக்கிறேன். ப்ளீஸ் பேசுங்க. ” தன் கண்ணீரால் அவனது முதுகை நனைத்தால், அவளது கைகளிலிருந்து தன்னை பிரித்தான்.. அவன் முன்னே கைகூப்பி,மன்னிப்பு கேட்டாள்.

அவளது கைப்பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டு, கட்டுபடித்த முடியாமல் அழுதுத் தீர்த்தாள்.

” எனக்கு தெரியும் ஜானு. நீ மனுசல இருந்து சொல்லிருக்க மாட்டேன்னு. இருந்தாலும் நீ சொன்னது சுருக்குன்னு வலித்தது.. அதான் கோபம், பேசாம இருக்க வைச்சது.. சாரி ஜானு, நானும் நீ பேச வரும் போது  கேட்டிருக்கணும். ஒருவாரம் உன்னையும் என்னையும் கஷ்டபடுத்திட்டேன்ல.. “

” ஆமாடா… கஷ்டபடுத்திட்ட ” என்றாள்.

” என்னாது “டா ” வா.. “

” ஆமாடா, டா தான்… உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும். நான் சொன்னப்பையே, என்னை அடிச்சிருக்கலாம். என்கிட்ட சண்ட போட்டிருக்கலாம், நானும் உன்கிட்ட சாரி கேட்டிருப்பேன். அப்பையே இந்த பிரச்சினை முடிஞ்சிருக்கும். ஆனால் நீ அப்படி பண்ணல, பேசாம தானே போன.. ஒருவாரம் ஒருவாரம், ஏன்டா பேசாம போன… உனக்கு உன் பிள்ளைத்தானே முக்கியம் நானில்லேல ? போடா.. ” என அவனை சரமாரியாக அடித்தழுத்தாள்.

” அடிப்பாவி ! இதான் சாக்குன்னு டா வா சொல்லுற…. அடியே அடிக்காதடி வலிக்கிது டி.. “

” அப்படி தான்டா அடிப்பேன்.உன்னை டான்னு சொல்லுவேன். என்னடா பண்ணுவ அடிப்பீயா அடிச்சுக்கோ. எனக்கு கவலையில்ல, நான் உன்னை டா சொல்லுவேன் டா.. ” என்றாள், அவளது ஒருமை அழைப்பும், செல்ல அடிகளும் புதுசாகவும் தன்மேல் அவள் வைத்திருக்கும் காதலும் வெளிப்பட, தன்னை ஏற்றுக்கொள்வாளா ? என்று எண்ணியவனுக்கு, தன்னை முழுதாய் ஏற்று தனக்காக வாடி, தன்மேல் காதல் பொழியும் தன்னைவளை பார்க்க திகட்டவே இல்லை.முற்றிலும் கோபம் வடிய, அவள் மேல் காதல், தாபமே நிறைந்தது.

” என்ன பண்ணுவேணா உன்னை ? ” என்று அவளை இழுத்து இதழை சிறைச்செய்தான்… ஒருவாரம் பெறாத கணக்கையெல்லாம். ஒற்றை முத்தத்தில் பெற்றுக்கொண்டான். மென்மையான இதழை வன்மையாய் பற்றியதில் இரத்தம் கசிந்தது.

அதற்கும் நான்கு ஜந்து அடிகளை பெற்றுகொண்டான். அவளை அமரவைத்து வாங்கிவந்த உணவை ஊட்டிவிட்டான். அவனுக்கும் அவள் ஊட்டிவிட்டான்.வேலைகள் முடியவும், ஜானுவைத் தூக்கிகொண்டு தங்களது அறைக்கு விரைந்தவன், சித்துமேலே உறங்கிகொண்டிருக்க, இருவரும் கீழே பாயை விரித்து அதில் படுத்துகொண்டனர்.. இருவரும் பேசி அந்த இரவு பொழுதை கூடல் பொழுதுகளாகினர்…

மறுநாள் அழகிய காலை விடியவே. அவனை தன்னிடமிருந்து பிரிந்தவள், தன்னை சரிசெய்துக்கொண்டு, ஏக்கி சித்தை பார்க்க, அவனோ மாத்திரையின் வீரியத்தில் உறங்க்கொண்டிருந்தான்.

வழக்கம் போல் குளித்து முடித்து தன் வேலைகளில் லயித்திருந்தாள். ஆர்.ஜேவும் காலைகடன்களை முடித்து, அவளை சீண்டும் வேலையிலே இருந்தான்..

அதன்பின் சித்தை எழுப்பி, அவனை குளிப்பாட்டி சாப்பாட்டும் ஊட்டிவிட்டு மூவருமாக விளையாடிக்கொண்டிருந்தனர். காலை நேரமாக அவர்கள் வீட்டு காலிங் பெல்லை அடிக்க. ரகு என்று எண்ணி கதவை திறந்தவளுக்கு ஆச்சரியம், அங்கே சீதாவும் ராமனும் நின்றிருந்தனர்.

அவர்களை மரியாதையின் நிமித்தம் அழைத்தாள்.,உள்ளே கோபமாக வந்தவர். தன் மகனைப் பலரென்று அறைந்தார். சீதாவை தவிர அங்குள்ள அனைவரும் அதிர்ந்து நின்றனர். ஆர்.ஜேவுக்கு கரெண்ட் சாக் தான்.

குறும்பு தொடரும்.ஆங்காங்கே ஒளிகள் வீசிக்கொண்டிருந்தது…. வண்ண வண்ண விளக்குள், அம்மேடை முழுதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது…லேசர் விளக்குகளும் அந்த மேடையை நிறைந்திருந்தது. வலது புறத்தில் மூன்று நபர்கள் நடுவர்களாக அமர்ந்திருந்தனர்.

குறும்பு தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!