கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 15

 

அரவிந்த் தனியாக புலம்பிக் கொண்டிருந்த பார்த்த சூர்யா.

 

“டேய் மச்சி, என்ன ஆச்சு உனக்கு லூசு மாதிரி தனியா உளறிட்டு இருக்க..??”

 

“அதென்னும் இல்ல மச்சி நிலாவை எந்த கோவிலுக்கு கூட்டி போய் மந்திரிக்காலன்னு யோச்சிட்டு இருக்கேன்.?? என்ற அரவிந்தை முறைத்த சூர்யா “டேய் லூசு அவளுக்கு எதுக்குடா மந்திரிக்கணும், இப்ப அவளுக்கு என்ன ஆச்சு..??”

 

“டேய் உனக்கு தெரியலயா?” என்று அரவிந்த் கேட்க??

 

“என்ன தெரியல எனக்கு.?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லி தொலையேன்டா.. எதுக்கு இப்படி டிவி சீரியல் மாதிரி இழுக்குற.??”

 

“டேய் மச்சி நா தேனு கூட சண்டை போடும்போது நிலாவை பிசாசுன்னு சொன்னேன். ஆனா, அவ அதுக்கு ஒன்னுமே சொல்லல. அவ மட்டும் நார்மலா இருந்து இருந்தா இந்நேரம் என்ன ஓட ஓட விரட்டி விரட்டியில்ல அடிச்சிருப்பா?? அப்ப இதுக்கு என்ன அர்த்தம்..?? என்று படு சீரியஸாக கேட்க 

 

சூர்யா ‘ஊப்ப்புபு’ என்று பெரு மூச்சு விட்டவன், “என்னடா அர்த்தம்?” என்று சலிப்பாக கேட்க.

 

“என்ன அர்த்தமா..?? டேய்! ரெண்டே அர்த்தம் தான்டா, ஒன்னு அவ திருந்தி இருக்கணும். ஆனா, அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல.. அப்ப? அப்ப?…” என்று நிருத்த,

 

“டேய் சும்மா அப்ப அப்பன்னிட்டு?? என்னன்னு சீக்கிரம் சொல்லி தொலடா என்று தேனு கத்த.

 

 அதற்கு அரவிந்த் மிகவும் மெதுவாக “நம்ம நிலாக்கு பேய் புடிச்சு இருக்கு” என்று சொல்ல.. அரவிந்தை தவிர மற்ற அனைவரும் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க.

 

தேவி சிரித்துக்கொண்டே, “ஆமா அரவிந்த்… நீங்க சொல்றது உண்மை தான். கொஞ்ச நேரம் முந்தி தான் டிரையல் ரூம் பக்கத்துல நம்ம நிலாவை பேய் நல்லா இறுக்கி நெஞ்சோடு சேர்த்து புடிச்சிட்டு இருந்துது.” என்று சொல்லி சூர்யாவை பார்த்து சிரிக்க. அவனோ அசடு வழிய, “என்னடா நடக்குது இங்க??” என்று அரவிந்த் முழிக்க.

தேவி நடந்ததை சொன்னாள்..?? 

 

“அடபாவி சந்துல சிந்து பாடிட்டியே டா… உன்னை நா பச்ச மண்ணுன்னு இல்லடா நெனச்சிட்டு இருந்தேன். நீ என்னடான்னா இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கியே… ஈலோகத்தில் யாரையும் நம்ப முடியவில்லை பாகவனே, இந்த அறியா பாலகன் என் செய்வேன்?’ என்று செந்தமிழில் உளாற, ‘அடச்சீ ஷாக்க குறை. அண்ணா அவர் பொண்டாட்டிய தானே கட்டி புடிச்சாரு, நீ என்னமோ அடுத்தவன் பொண்டாட்டியை கட்டி பிடிச்ச மாதிரி எபெக்ட் குடுக்குற. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி” என்று தேன்மொழி நக்கலாக சொல்ல. அரவிந்துக்கு வந்ததே கோவம். 

 

“அடியேய் யாரா பாத்து தம்பி ன்னு சொன்னா? உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்த அப்டி சொல்லுவா?” என்று ஆரம்பிக்க, “அட கடவுளே மறுபடியும் முதல்ல இருந்த” என்று அனைவரும் “அய்யோ” என்று தலையில் கை வைக்க, அப்போது அங்கு தனமும், கலையும் வர இருவரும் சண்டையை நிருத்திவிட்டு ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே அமைதி ஆகினார்.

 

“சூர்யா உனக்கு வேண்டிய எல்லாத்தையும் நிலாவை வச்சு செலக்ட் பண்ண சொல்லி எடுத்துட்டேன். அவ செலக்சன் அவ்ளோ சூப்பரா இருக்கு என்று தனம் பெருமையாக சொல்ல.

சூர்யா நிலாவை பார்க்க அவள் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டாள். 

 

“சரி சூர்யா அடுத்து நகை கடைக்கு போயிடலாம்” என்று தனலட்சுமி சொல்ல. அனைவரும் வெளியே வந்தனர். 

 

சூர்யா அரவிந்திடம், “ஏன்டா மச்சி நீ எதுக்கு தேனு கிட்ட இப்டி சண்டை போட்டுட்டு இருக்க?” 

 

“பின்ன அவ பண்றதுக்கு அவளை கொஞ்சுவாங்களாக்கும்? எப்பபாரு என்னை கத்திட்டும் முறச்சிட்டு இருக்க…” என்று அரவிந்த் முகத்தை கடுகடுவென வைத்துக்கொள்ள.

 

“அது சரிடா, அவ அவ்ளோ கேவலமா திட்டும் போது, சும்மா இருந்தா நீ?? அவ உன்னை தம்பின்னு சொன்னதும் அப்டியே கோவத்துல கொந்தளிச்சுட்ட? அது ஏன்டா மச்சி?” என்று விஷமமாய் கேட்க. சூர்யாவின் முகத்தை பார்த்த அரவிந்த், “தெரியலடா?? சட்டுன்னு கோவம் வந்துருச்சு, அவ்ளோதான் வேற எதுவும் இல்ல…”

 

“ஓஓஓ வேற எதுவும் இல்லயா!! ஓகே ஓகே” என்று சிரித்தபடி சூர்யா நகர, அரவிந்த் குழப்பத்தோடு தன் காருக்கு சென்றான்.

 

இங்கு சந்தியா, “அம்மா நா மாம்ஸ் கூட அவர் கார்ல வரேன்” என்று சொல்ல கலை, “நீ ஏதோ பண்ணி தொல, நாங்க கிளம்புறோம்” என்று கிளம்பிவிட, சந்தியா, “அக்கா மாமா கார்ல நிறைய இடம் இருக்கு நீயும் வாக்கா” என்று நிலாவை அழைக்க. 

 

“அடியேய் வந்தேன்னு வை அந்த ரெண்டு கன்னத்தையும் பிச்சி நாய்க்கு போட்ருவேன். மரியாதைய மூடிட்டு போடி” என்றவள், கலை, தனலட்சுமியுடன் காரில் ஏறிக் கொள்ள, சந்தியா, “தேனக்கா,தேவிக்கா வாங்க, நம்ம மாமா கூட ஜாலியா பேசிட்டு போலாம்” என்று சொல்ல. அவர்களும் சூர்யாவின் காரில் ஏறிக்கொண்டனர்.

 

தேனு, “போகும் வழியில் சூர்யாண்ணா எனக்கு ஒரு டவுட்டு?”

 

” என்னமா, என்ன டவுட்?” என்று சூர்யா கேட்க… அந்த நேரம் பார்த்து நிலா தேனுவிடம் எதையே கேட்க ஃபோன் செய்ய, தேனு அவளுக்கே தெரியாமல் ஃபோனை ஆன் செய்து விட, அவர்கள் பேசுவது நிலாவிற்கு தெளிவாக கேட்டது. இது தெரியாத தேன்மொழி, “அது ஒன்னும் இல்லண்ணா… நாங்க நிலா வீட்ல இருந்து கிளம்பும் போது தனம் ஆன்ட்டி நீங்க இன்னைக்கு புடவை எடுக்க வரலன்னு சொன்னாங்க… அப்றம் இப்ப எப்டி வந்தீங்க?’ என்று கேட்க, “ஆமா மாமா நானும் கேக்கணுன்னு நினைச்சேன். நீங்க எப்டி திடீர்ன்னு அங்க வந்தீங்க.?? என்று சந்தியாவும் கேட்க,

 

சூர்யா அழகாய் சிரித்தவன், “எல்லாம் ஒரு முன் எச்சரிக்கை தாம்மா..!!” என்றவனை மூவரும் “என்ன” என்று பார்க்க?? சூர்யா மீண்டும் சிரித்து விட்டு, “அட லூசுகளா… நா வரேன்னு தெரிஞ்ச, என் பொண்டாட்டி கடைக்கு வராம இருக்க ஏதாவது பிளான் போட்டிருப்பா?? அப்றம் நா அவளை எப்படி பாக்குறதாம்..?? அதனால தான் அம்மா கிட்ட நா வரலனு சொல்ல சொன்னேன். அவளும் நா வரமாட்டேன்னு நெனச்சு கடைக்கு வந்துட்டா சிம்பிள்” என்று சிரிக்க…

தேவி, “அண்ணோவ்…! செம்ம பிளானிங்” என்று புகழ, சந்தியா, “மாம்ஸ் சான்சே இல்ல..!! நீங்க சொன்னது உண்மைதான். நிலா காலையில அம்மாகிட்ட புடவை கடைக்கு நா வரலன்னு சொன்னாளாம்.” என்று சொல்ல.

 

சூர்யா, ”பாத்தீங்களா? நா சொன்னது சரியபோச்சு” என்று சட்டை காலரை தூக்கிவிட, இத எல்லாம் ஃபோனில் கேட்டுக்கொண்டு இருந்த நிலா அப்டியே இமைக்காமல் ஃபோனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். 

 

கலை “ஏய் நிலா… ஏய் என்னடி ஆச்சு?” என்று அவளை உலுக்க சுயஉணர்வுக்கு வந்தவள், ஃபோனை கட் செய்துவிட்டு, கலையிடம், “ஒன்னும் இல்லம்மா” என்று சொல்லிட்டு வெளியே வேடிக்கை பார்ப்பது போல் நடித்தவள் எண்ணம் முழுவதும் சூர்யா மேலேயே இருந்தது, “எவ்ளோ கரெக்டா என்னை புரிஞ்சிருக்கான்..??” என்ற யோசனையே அவள் சிந்தனை முழுவதும் நிறைந்திருக்க. கார் நகைக்கடையை அடைந்து. அங்கு நிலாவுக்கு தேவையான அனைத்து நகைகளையும், நான் தான் வாங்குவேன் என்று தனம் அடம்பிடிக்க, கலையால் ஒன்று சொல்ல முடியாமல் போனது. 

தனம் நிலாவிற்கு தேவையான நகை, தாலி கொடி எல்லாம் எடுத்துக்கொண்டிருக்க.

 

 “தேனு, தேவி , சந்தியா உங்களுக்கு ஆளுக்கு பத்து நிமிஷம் டைம் அதுக்குள்ள சூப்பரா மூனு நகை செலக்ட் பண்ணிட்டு வாங்க” என்று சூர்யா சொல்ல. 

 

தேனுவும் தேவியும், ”என்ன அண்ணா நிலாக்கு சர்ப்ரைஸ்சா” என்று கிண்டல் செய்து விட்டு சந்தியாவுடன் நகையை பார்க்க சென்றனர்.  

 

கொஞ்ச நேரம் கழித்து மூவரும் ஆளுக்கு ஒரு நகையை எடுத்துக் கொண்டு வந்தனர். தேனு அழகிய ஒரு ஜோடி வளையல்களை எடுத்திருக்க..!! தேவி மயில் டிசைன் கொண்ட அழகிய நெக்லஸ் எடுத்து இருந்தாள். சந்தியா காசு மாலை எடுத்து வந்தாள். 

 

சூர்யா, “வாவ் சூப்பர்..!! உங்க மூனு பேருக்கும் இதெல்லாம் சூப்பரா இருக்கும்” என்று சொல்ல, 

 

தேனும், தேவியும் சூர்யா வார்த்தையில் அதிர்ந்தவர்கள் “அண்ணா என்ன சொல்றீங்க?” என்று கேட்க. அந்தநேரம் அங்கு நிலாவும் வர. 

 

சூர்யா, “இது என்னோட தங்கச்சிகளுக்கு என்னோட கல்யாண பரிசு” என்க, தேவி உடனே, “அண்ணா ஆன்டி ஏற்கனவே எங்களுக்கு கல்யாணத்துக்கு பட்டு புடவை வாங்கி தந்துட்டாங்க. நகையெல்லாம்‌ வேணாம்ணா” என்று சொல்ல.

 

“அது அவங்க பொண்ணுகளுக்கு அவங்க வாங்கி தந்ததுமா, இது நா என் தங்கச்சிகளுக்கு வாங்கி தர்றது” என்று சொல்ல… அவர்கள் மூவரோடு சேர்ந்து நிலாவும் கண்கலங்கி நின்றாள். 

 

ஒரு வழியாக எல்லாம் முடிந்து கடையை விட்டு வெளியே வர. சூர்யா, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நா கிளம்புறேன். டேய் அரவிந்த் நீ தேனு, தேவிய வீட்ல விட்ரு” என்றதும் அனைவரும் கிளம்பினார்.

 

போகும் வழி எல்லாம் அரவிந்த் அமைதியாகவே வர, தேனு, தேவியிடம், “என்னடி இது அதிசயமா இருக்கு? இந்த லூசு எதுவும் பேசாம, அதுவும் என்கிட்ட சண்டை போடாம வர்ரத பாத்த, இன்னைக்கு மழை வரும் போல இருக்கே..??”

 

” ஏன்டி, அவரு பேசுனாலும் திட்ர, அமைதியா இருந்தாலும் திட்ர, என்னடி உன் பிரச்சனை??” என்று தேவி கத்த.

 

“ஏய் ஏய்? நீ எதுக்கு இப்ப எமோஷ்னல் ஆகுற? நா அவனை ஒன்னும் சொல்ல தாயே நீ விடு, ஆனாலும், இப்ப எல்லாம் நீ இவனுக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்ற, இது ஒன்னும் எனக்கு சரியப்படல” என்றவள் தேவியன் அனல் பார்வையில் வாயை மூடிக்கொள்ள. மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

தேன்மொழியை அவர்கள் வீட்டு ஓனர் அழைத்ததாக சொல்ல, அவள் சென்றுவிட, தேவி, அரவிந்தை வீட்டிற்குள் அழைத்தாள். 

 

தேவி அரவிந்த் முகத்தையே பார்த்து கொண்டிருக்க..?? அரவிந்துக்கு ஏதோ போல் இருந்தது, “என்ன தேவி? என்கிட்ட எதுவும் சொல்லனுமா?’ என்று கேட்க. அவள் “ஆமாம்” என்று தலையாட்ட, “சொல்லு தேவி” என்ற அரவிந்தை ஒரு தயக்கத்தோடு பார்த்த தேவி, “அது.. அது வந்து” என்று இழுக்க. அரவிந்த் அவள் தடுமாற்றத்தில் குழம்பித்தான் போனான். 

 

தேவி சொன்னதை கேட்ட அரவிந்திற்கு அதிர்ச்சி, சந்தோஷம் என்று அனைத்து விதமான உணர்வுகளும் தாக்கியதில், கண்களை ஸ்லோமோஷனில் மூடி மூடி திறக்க, தேவி அவனை உலுக்கியவள், “என்ன ஆச்சு.?? நா கேட்டதுக்கு பதிலயே காணும். ஏன் உங்களுக்கு பிடிக்கலயா?” என்று தவிப்பாக கேட்க. 

 

அரவிந்த் எதையோ யோசித்தவன் முகம் பின் முழுவதும் மகிழ்ச்சியில் மின்ன, “எனக்கும் பிடிச்சு இருக்கு தேவி, இன் ஃபேக்ட் ரொம்ப புடிச்சிருக்கு… ஆனா,” என்று அவன் ஏதோ பேச ஆரம்பிக்க.. அந்தநேரம் அந்த அறைக்குள் நுழைந்த தேன்மொழி காதிலும் இது விழுந்தது. 

 

தேன்மொழி வந்ததை பார்த்த அரவிந்த், “சரி தேவி நா கிளம்புறேன்” என்று நகர.. தேவி சந்தோஷமாய் சிரித்துக்கொண்டே, ஓகே டாடா, பை” என்று உற்சாகமாக அவனை வழி அனுப்பினாள். 

 

எனோ தேனுவிற்கு அரவிந்த், அவளிடம் சொல்லாமல் சென்றது மனதிற்கு வருத்தமாக இருக்க, வாசலயே பார்த்திருந்தவள், பிறகு தன்னிலை அடைந்து, தேவியிடம் என்னடி பேசுனீங்க ரெண்டு பேரும்? அந்த கொரங்கு என்னை பத்தி எதுவும் கம்ப்ளைன்ட் பண்ணுச்சா?” என்று கேட்க.

 

“அது எங்க பர்சனல், உனக்கு எதுக்கு சொல்லணும்” என்றவள் சிரித்துக்கொண்டே செல்ல.. தேன்மொழிக்கு கோவம் தலைக்கேற தன் அறைக்கு சென்று கதவை அடித்து சத்தம் சத்தம் காதை அடுத்த வீட்டுக்காரன் காதையும் சேர்த்து கிழித்தது.

 

இங்கு வீட்டுக்கு வந்த நிலா ரொம்பஅமைதியாக இருக்க, 

கலை, “ஏன்டி சந்தியா என்ன ஆச்சு இவளுக்கு? ஒரு மாதிரியா இருக்க?” 

 

“அது ஒன்னும் இல்லம்மா..!! கடையில இவ தடுக்கி விழப்போக, அந்த நேரம் மாம்ஸ் வந்து இவளை கீழ விழுகாம புடிச்சிட்டாரு. அதை நாங்க பாத்துட்டோம். எங்க அத வச்சு நாங்க இவளை ஓட்ட போறோம்னு பயந்து, இப்டி அமைதியா இருக்க மாதிரி ஆக்டிங் குடுக்குற, இவ அப்செட் ஆன மாதிரி சீன் போட்ட நாங்க இவளை கலாய்க்காம விட்ருவோம்னு ஐடியா பண்ற போல. பிராடு..??”

 

“இல்லடி சந்தியா, அவ முகமே சரியில்ல. அதோட நீங்க கலாய்க்குறதுக்கு எல்லாம் பயப்படுறவளா அவ? வேற ஏதோ இருக்கேடி, நீ அவளை தொந்தரவு பண்ணாத. அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்” என்ற அம்மாவையும் நிலாவையும் திரும்பி பார்த்த சந்தியா, நிலா முகம் குழப்பத்தில் இருப்பது புரிய… சரிம்மா” என்று சொன்னவள். வாங்கி வந்த புடவை , நகைகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

 

நிலாவின் மனம் ஒரு நிலையில் 

இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் அடிமனதில் சூர்யாவின் முகம் தான் வந்து வந்து சென்றது, “எப்டி?? எப்டி?? இவன் என்னை இந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கான். நா புடவையெடுக்க வரமாட்டேன்னு எதுக்கு சொன்னேன்னு சரிய கண்டு புடிச்சுட்டான். அப்டியே என் மனசுக்குள்ள புந்து படிச்ச மாதிரி சொல்லிட்டானே?? எப்டி? எப்படி இது சாத்தியம். என் கூட பேசாம, பழகாம இந்த அளவுக்கு என்ன புரிஞ்சு வச்சிருக்கான். சில சமயம் தேனு, தேவியால கூட. நா நினைக்கிறத புரிஞ்சுக்க முடியாது. அப்டி இருக்க இந்த சூர்யா கொஞ்ச நாள்ல இந்த அளவு என்ன பத்தி தெரிஞ்சு, புரிஞ்சு வச்சிருக்கான்… அதோட?? என் குடும்பத்தை தான் குடும்பமா பார்க்குறான். என்னோட ஃப்ரண்ட்ஸயும் மதிச்சு நடந்துக்குறான். எப்டி இவனால இப்டி இருக்க முடியுது..??” என்று யோசித்தவள். அதற்கு பதில் கிடைக்காமல் அவள் மனம் தவித்துக் கொண்டிருந்தது.. இப்படியே யோசித்துக் கொண்டிருந்தவள் அவளை மறந்து உறங்கிவிட. மாலை ஐந்து மணிக்கு தான் விழிப்பு வந்தது‌… தேனு, தேவியின் கெட்ட நேரமும் தொடங்கியது.

(ரெடி மக்களே.. நீங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சண்டைக் காட்சிகள் நிறைந்த சம்பவம் இதோ..!! உண்மை தெரிந்த நிலாவின் கொலைவெறி ஆட்டம். தப்பித்தார்களா தேனுவும், தேவியும். தேனு, தேவி வீட்டில் இருந்து நேரடி ஒளிபரப்பு. நீங்கள் அடி வாங்காமல் தப்பிக்க கிடைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். சேதாரம் ஏற்படின் ஆஸ்பத்திரி செலவை கம்பெனி ஏற்காது.. சொல்லிட்டேன் ஆமா.)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!