கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 29

 

தேனுவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை? நிலாவையே உற்று பார்த்துக் கொண்டிருக்க. 

 

தனம்மா “என்ன அண்ணா? நிலா தான் சின்னபுள்ளன்னா நீங்களும் அவ கூட சேர்ந்து எங்களை இந்த படுபடுத்திடிங்களோ?” என்று குறைபட்டுக் கொள்ள…

 

 “விடு தனம், நிலா தேனுக்காக எங்க கிட்ட வந்து பேசி, தேனு அப்பா கிட்ட சண்ட போட்டு அவரையும் ஒத்துக்க வச்சு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சிருக்க தெரியுமா? அதுக்கு தான் அவ இப்டி ஒரு ப்ளான் பண்ணி எல்லாரையும் சர்ப்ரைஸ் பண்ணலன்னு சொன்னதுக்கு நாங்க ஒத்துக்கிடோம்” என்று சிரிக்க. 

 

“அட கடவுளே” என்று தலையில் அடித்துக் கொண்ட தனம், “சரி சரி ஐயர் வர நேரமாச்சு வாங்க எல்லாரும்” என்று சொல்ல பெருசுகள் அங்கிருந்து சென்றுவிட. சிறுசுகள் மட்டும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தது.

 

நிலா தேனு அருகில் சென்றவள் “எப்புடி??” என்று ஒற்றை புருவத்தை தூக்கி காட்ட. தேனு நிலாவை இருக்கி அணைத்தவள், கதறி அழுதுவிட்டாள். “சாரி நிலா… ரொம்ப சாரி” என்று சாரி என்ற வார்த்தையை கூட ஒழுங்காக சொல்ல முடியாமல் கோவி கோவி அழ. அவளை தன்னிடமிருந்து விலகிய நிலா, அவள் கண்களை துடைத்து விட்டவள். “சாரியும் வேணாம், லவுக்கையும் வேணாம் கொஞ்சம் சிரி அது போதும்” என்று கிச்சுகிச்சு மூட்ட… தேனு முகத்தில் இளநகை பூத்தது.

 

“அது சரி நிலா… தேனு லவ் மேட்டர் உனக்கு எப்டி தெரிஞ்சது?’ என்று தேவி கேட்க. 

 

“ம்ம்ம்ம் உனக்கு எப்போ தெரிஞ்சுதோ அப்பதான் எனக்கும் புரிஞ்சுது” என்று சொல்ல. அனைவரும் புரியாமல் விழிக்க. “ரொம்ப முழிக்காதீங்க… அன்னைக்கு எனக்கு கல்யாண புடவை எடுக்க போனோமே அப்ப இவங்க ரெண்டு பேரும் போட்டாங்களோ ஒரு சண்டை… அப்பதான் எனக்கு லேசா டவுட் வந்தது. அப்பவே தேனு மனசு எனக்கு ஓரளவு புரிஞ்சுது… ஆனா. இந்த மரவேதாளம் மனசுலயும், அப்படி எதும் இருக்கான்னு தெரியல. ஒருவேளை இவர் மனசுல அப்டி ஒன்னும் இல்லாட்டி தேனு ஹர்ட் ஆகிடுவா, அதான் அப்ப நா எதுவும் பேசல. அதுக்கு பிறகு என் கல்யாணம் அன்னைக்கு தேனு இவர் கூட ஆட மாட்டேன்னு சொன்னப்பா, சார் மூஞ்சி போன போக்கை பாத்தே எனக்கு புரிஞ்சு போச்சு இவரும் தேனுகிட்ட சிக்கிடர்னு. சந்தியா இவரை மாம்ஸ்னும், நீ அரவிந்த் அண்ணான்னு கூப்பிடவும் இந்த லவ் மேட்டர் உங்க ரெண்டு பேருக்கும் தெரியும்னு கன்ஃபார்ம் ஆகிடுச்சு. அதுக்கு பிறகு தான் நா ஶ்ரீதரன் அங்கில் கிட்ட பேசுனேன். அதோட சித்துகிட்ட பேசி கெஞ்சி கெதறி இவங்க லவ்வுக்கு கிரீன் சிக்னல் வாங்கினேன்” என்று சொல்லி தோழிகள் மூவரும் கட்டிக்கொள்ள… இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த பெரியவர்கள் இவர்கள் நட்பின் ஆழத்தை நினைத்து கண்கலங்க. நிலாவை பார்த்த சூர்யாவின் உள்ளம் இவள் என் மனைவி என்ற நினைப்பு அவனை கர்வம் கொள்ள செய்தது.. 

 

“நிலா நா ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா. எங்க நீ என்மேல இருக்க கோவத்துல என்னை பழிவாங்கிடுவியோன்னு பயந்துட்டேன்..?? என்ற அரவிந்தை பார்த்து வில்லி போல் சிரித்த நிலா, “ஹலோ மிஸ்டர் மர வேதாளம். ரொம்ப சந்தோஷப்படாதீங்க. நா உங்களை பழிவாங்க தான் இந்த கல்யாணமே… தேனுக்கும் உங்களுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கிறத விட உங்களுக்கு என்ன பெரிய தண்டனை என்னால தந்துட முடியும். நானாது பிசாசு தான். ஆனா, அவ கொள்ளிவாய் பிசாசு… இனி ஆயுசுக்கும் உங்களை யாராலயும் அவகிட்ட இருந்து காப்பாத்த முடியாது” என்று கைகொட்டி சிரிக்க. “ஏய் நிலா? என்னடி நீயே என்னை இப்டி டேமேஜ் பண்ற‌? என்று தேனு செல்லமாக கோபப்பட்டு சினுங்க. 

 

“நிலானி எனக்கு ஒரு டவுட்டு?” என்ற சூர்யாவை, நிலா என்ன என்பதுபோல் பார்க்க, “இல்லடி நேத்து நீ சொன்னீயே? தேனு எனக்கு சத்தியம் செஞ்ச பிறகு யாரையும் லவ் பண்ணியிருக்க மாட்டான்னு?? இப்ப என்ன சொல்ற?” என்று குறும்பாக கேட்க. 

 

“டேய் நாரதா… ஏன்டா? ஒய் திஸ் கொலவெறி? எதுக்கு இந்த வேலை?” என்று அரவிந்த் பாவமாக கேட்க. நிலா சூர்யாவை பார்த்து சிரித்தவள். “தேனு எனக்கு சத்தியம் பண்றதுக்கு முன்னயே தான் இந்த மர வேதாளத்த லவ் பண்ண ஆரம்பிச்சுட்டாளே… ஆனா, அந்த லவ் அவளுக்கே அப்ப புரியல போல, அதான் சத்தியம் பண்ணிட்ட. அப்ப அந்த சத்தியம் கணக்குல வாரது தானே? என்ன தேனு நா சொல்றது சரியா?” என்று தேனுவின் முகம் பார்த்து கிண்டலாக கேட்க. தேனு மேலும் கீழும் அழகாக தலையாட்ட.ன. எல்லோருக்கும் மனதில் மகிழ்ச்சி நிறைய, பூஜை தொடங்கி, அரவிந்த் தேனு நிச்சயம் மற்றும் கல்யாணத்திற்கு நாள் குறித்ததோடு அன்றைய நாள் அழகாக முடிந்தது. நிலா முகம் முழுவதும் புன்னகை நிறைந்திருக்க. அதை இல்லாமல் செய்ய காத்திருந்தது அவளின் அடுத்த நாள் பொழுது.

 

அடுத்த நிமிடம் நமக்கு வைத்திருக்கு ஆச்சரியம் தான் இவ்வுலகின் பெரிய அதிசயம். 

 

நிலாவின் காதல் மொட்டு பூவாய் மலர்ந்து குலுங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்க. அவள் மனதை புயலாய் புரட்டி போட விடிந்தது அன்றைய பொழுது.

 

சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக நிலா தானே டிசைன் செய்து SN என்று பொறிக்கப்பட்ட இதயா வடிவ தங்க பென்டென்ட் ரெடி ஆகிவிட்டது என்று நகை கடையில் இருந்து ஃபோன் வர. சூர்யா ஆபீஸ்க்கு சென்றதும் கடைக்கு போகலாம் என்று சூர்யா எப்போதும் கிளம்புவன் என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. அவளுக்கு தானே தன் ஆசை கணவனுக்கு டிசைன் செய்து, முதல் முதலில் கொடுக்கப்போகும் பரிசை பார்க்க பயங்கர ஆர்வம். அது அவளின் அழகு வதனத்தில் அப்பட்டமாக தெரிய.. சூர்யாவும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். “என்ன ஆச்சு இவளுக்கு? ரொம்ப எக்ஸ்சைட்டா இருக்க. காலையில் இருந்து எப்ப ஆபீஸ் கிளம்புறீங்க ன்னு பத்துவாட்டியது கேட்டுட்டா. என்னவா இருக்கும்… ஏதும் புதுசா ப்ளான் போட்டிருப்பாளோ? அய்யோ கடவுளே மறுபடியும் சமையல் எதுவும் செய்றாத, ஏதும் விபரீத முடிவு எடுத்திருக்க கூடாதுடா சாமி. என் உசுரை காப்பாத்துங்க கடவுளே…‌ இன்னும் நா புள்ள குட்டி, பேரன், பேத்தின்னு பாக்க வேண்டியது நிறைய இருக்கு கடவுளே!” என்று அவசர வேண்டுதல் ஒன்றை வைத்து விட்டு, நிலா அருகில் வந்தவன். “ஏய் நிலானி என்னச்சுடி உனக்கு காலைல இருந்து ரொம்ப எக்ஸ்சைட்டா இருக்க..??, அடியேய் அம்மா ஊர்ல இல்லைன்னு நீ எதும் சமையல் பண்றேன்னு விஷ பரிட்சை ஒன்னும் ப்ளான் பண்ணலயே? அப்படி எதும் இருந்த சொல்லுடி.. உனக்கும் சேர்த்து நானே சமைச்சு வச்சிடுறேன்” என்று படு சிரியஸ்சாக சொல்ல… நிலா அவனை கண்கள் இடுக்கி ஒரு பார்வை பார்த்தவள். “ஹலோ… என்ன பெரிய ஜோக் அடிச்சாத நெனப்பா… அப்றமா நியாபகப்படுத்துங்க, முடிஞ்ச சிரிக்கிறேன்” என்றவள். “சரி சரி நீங்க எப்ப ஆபீஸ் கிளம்புறீங்க?” என்று கேட்க.

 

சூர்யா அவளை சந்தேகமாக பார்த்தவன். “ம்ம்ம் என்ன இது.?? இன்னைக்கு இவ சரியில்லயே? கண்டிப்பா இவ என்னை ஆபீஸ் விரட்டுறதுல ஏதோ ப்ளான் இருக்கு?? என்னவா இருக்கும்?” என்று யோசித்த படியே நிற்க. 

 

“சூர்யா, சூர்யா?? என்ன ஆச்சு?? இப்படி செலை மாதிரி நிக்கிறீங்க” என்று நிலா உலுக்கவும் நினைவுக்கு வந்தவன். அவளை மேலும் கீழும் பார்த்தவன். “முதல்ல உனக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுடி. நானும் காலைல இருந்து பாக்குறேன். முகத்துல பளிச்சுன்னு பல்பு எரியுது. என்ன வேற எப்ப ஆபீஸ் போறீங்க, போறீங்கன்னு கேட்டுட்டே இருக்க.? உனக்கு என்ன தான்டி ஆச்சு?” என்று எதுவும் புரியாமல் கேட்க. 

 

“ஸ்ஸ்ஸ்ஸ்” என்று நாக்கை கடித்த நிலா. “அய்யோ அய்யோ கடைக்குப்போகனுன்ற ஆர்வத்துல எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நானே என் சர்ப்பிரைஸ் ஒடச்சுடுவேன் போலிருக்கே. அதுசரி என் மூஞ்சில நா நினைக்கிறது அவ்ளோ அப்பட்டமாவா தெரியுது” என்று மனதில் நினைக்க. “ஆமாடி நீ மனசு நினைக்கிறது. உன் மூஞ்சில அப்டியே சப் டைட்டில்லோட ஓடுது” என்றவனை விழிவிரிய பார்த்தவள். 

 

“அட கிராகமே… இது என்ன இந்த மனுஷன் என்னோட மைண்ட் வாய்ஸை கூட கேட்ச் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. இது நல்லதுக்கு இல்லயே. அப்படி நடக்க விட கூடாதே” என்று மீண்டும் மைண்ட் வாய்ஸ் போட. அவள் கன்னத்தை பிடித்து தன் புறம் திருப்பி சூர்யா. அவள் தோள்களில் தன் கைகளை வைத்து அவள் தோளில் தன் முகத்தை வைத்தவன். “அதுக்கு வாய்ப்பே இல்லடி என் அருமை லூசு பொண்டாட்டி. உன் மனசு முழுசும் நான் தானாடி இருக்கேன். அப்டி இருக்க நீ மனசல என்ன நெனக்குறேன்னு எனக்கு தெரியாம போய்டுமா என்ன?” என்று அவளை பார்த்து ரசனையாய் கண்ணடிக்க… 

 

நிலாவிற்கு தன் கன்னச்சிவப்பை அவன் கண்களில் இருந்து மறைப்பது பெரும்பாடாக போனது. மென்மையான சிரிப்பு அவள் இதழில் இழையோட தலை குனிந்து நின்றவளை ரசித்தவன். எப்ப டி என்கிட்ட உன் லவ்வ சொல்ல போற” என்று வந்த சூர்யாவின் கிறங்கடிக்கும் குரலில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், அதில் தெரிந்த காதலில் உருகி நின்றாவள். தன்னை நிலை படுத்திக்கொள்ளவே வெகு நேரம் பிடித்தது. பின்பு “ப்ளிஸ் சூர்யா என… எனக்… எனக்கு கொஞ்சம் வெளிய போகணும்” என்று திக்கி திணறி சொல்ல.

 

சூர்யாவின் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அது நிலாவையும் வருந்த செய்ய, “சாரிடா புருஷா. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு. உன் பெத்டே அன்னைக்கு நீ ஆசைப்பட்ட மாதிரி உன்னோட நிலானி உன்கிட்ட அவ லவ்வை சொல்லி.. உன்னோட பொண்டாட்டியா முழுசா உன்கிட்ட வந்துடுவேன்” என்று மனதிலே சொல்லிக்கொள்ள. 

 

காதலை காதலிக்க வைத்த, என் அன்பு காதலனே! 

என் காதலை உன்னிடம் சேர்த்து, பின் நாம் காதலை அணு அணுவாய் ரசித்து வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்?

அன்நாள் வரும் வரை காத்திரு என் காதலுக்கு உயிர் கொடுத்த என் அன்பு காதலனே!

 

நிலாவின் முகமோ அவள் எண்ணத்தை சொல்ல தலையாட்டி சிரித்தவன். “சரிடி… எங்கயே வெளிய போகணும்னு சொன்னீயே… வா நா உன்னை டிராப் பண்றேன்” என்றது நிலாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. “அய்யோ இவர் கூட வந்த? நம்ம சர்ப்ரைஸ் ப்ளான் எல்லாம் சொதப்பிடுமே. என்ன சொல்லி இவரா கழட்டி விட்டு எஸ்ஸ்ஸ் ஆகுறது?” என்று யோசிக்க, “அடியேய்… நீ என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது. மரியாதைய என் கூட கிளம்பு” என்று சொல்ல.

 

“ம்க்கும்… எல்லாம் போச்சு” என்றவள் வேறு வழி இல்லாமல் சூர்யாவுடன்‌ கிளாம்பினாள். அவளின் மனதின் மகிழ்ச்சியை தொலைக்கும் தருணத்தை நோக்கி…

 

“எங்கடி போகணும்?” என்று சூர்யா கேட்க.?? அருகில் இருந்த மால்க்கு என்று சொல்ல. சூர்யா வண்டியை எடுத்தான். மாலுக்கு சென்றதும் சூர்யாவை எப்படி கழட்டி விட்டு தனியே கடைக்கு செல்வது என்று யோசித்துக்கொண்டே நிலா வர, இருவரும் மாலுக்கு வந்து சேர்த்தனர். சூர்யா காரை பார்க் செய்துவிட்டு வர. நிலாவிற்கு யோசிக்கும் வேலை வைக்காமல் அங்கு சூர்யாவின் நண்பன் ஒருவன் வர. சூர்யா நிலானியை தன் மனைவி என்று நண்பனுக்கு அறிமுகம் செய்து வைக்க. அவன் நண்பன் அந்த மாலில் இருக்கும் தன் கடை சூர்யாவை அழைக்க…  

 

“நீங்க போங்க சூர்யா, நா போய் என்ன வாங்கணுமோ, அதை வாங்கிட்டு இவர் கடைக்கு வந்து ஒரு விசிட் குடுக்குறேன்” என்றவளை மேலும் கீழும் பார்த்த சூர்யா, “எஸ்கேப்பு? நடத்து நடத்து” என்றா அவளை செல்லமாக முறைத்து விட்டு செல்ல. நிலாவிற்கு “அப்பாடா” என்றிருந்தது.

 

நிலா நகை கடைக்கு சென்றவள். அவள் ஆர்டர் கொடுத்த.. பென்டென்ட் டை வாங்கிப் பார்த்தவள், அதன் அழகிலும், அதை காதல் பரிசாக தன்னவனுக்கு கொடுக்க போகும் நாளையும் நினைத்து பூரித்தவள். பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தவள், அங்கு எதை கண்டாலோ விரிந்த கண்கள் விரிந்த படி அப்படியே இருக்க. கால்கள் தரையை பற்ற மறுத்து பிடிவாதம் பிடிக்க… அப்படியே மயங்கி சரிந்தாள்.

 

அந்த நேரம் நண்பனுடன் பேசிவிட்டு அங்கு வந்த சூர்யா அவளை தாங்கி பிடித்தவன். உணர்வின்றி உதிர்ந்த சறுகாக கிடந்தவளை கண்ட நொடி உயிரே நின்று விட. “நிலானி… ஏய் நிலானி கண்ண தொறடி. கண்ண தொற” என்று அவள் கன்னத்தை தட்டி பார்த்தவன். அதற்கு அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் போக,

“நிலானி ப்ளிஸ்டா எந்திரிடா… எனக்கு பயமா இருக்குமா. எந்திரிச்சு வாடா” என்று கத்த. அவன் அருகில் வந்த அவன் நண்பன், “டேய் பேசிட்டு இருக்காம முதல்ல அவங்களை ஹாஸ்பிடல் கூட்டி போடா” என்று அவசர படுத்த. வெட்டிய வாழை மரமாக தன் மடி மீது கிடந்தவளை, குழந்தை போல் தான் கையில் ஏந்திய வந்தவன். அவளை காரில் படுக்க வைத்தான். தன் பேம்லி டாக்டரை அழைத்து விவரத்தை கூறி வீட்டிற்கு வர சொன்னவன்.. நிலாவுடன் தன் வீட்டிற்கு விரைந்தான்.

 

நிலாவை டெஸ்ட் பண்ணி விட்டு டாக்டர் வெளியே வர. “சூர்யா என்ன ஆச்சு டாக்டர்..?? ஏன் தீடீர்னு மயங்கி விழுந்த. அவளுக்கு ஒன்னு இல்லயே?” என்று உச்ச கட்ட பயத்தில் வார்த்தைகள் வெளியே வராமல் தவித்து டாக்டரை பயத்துடன் பார்க்க…

 

“ரிலாக்ஸ் சூர்யா. நிலாக்கு ஒன்னு இல்ல. தீடீர்னு ஏற்பட்ட அதிர்ச்சியில் தான் மயங்கி விழுந்திருக்கா. வேறொன்னும் இல்ல. தூங்க ஊசி போட்டு இருக்கேன். நல்லா தூங்கி எந்திரிக்கட்டு, எல்லாம் சரியாகிடும்” என்றவர் அங்கிருந்து சென்றுவிட… 

 

அவள் அருகில் அமர்ந்த சூர்யா அவளின் கைகளை தான் கைகளில் பிடித்தவன். “ப்ளிஸ்டி சீக்கிரம் கண்ணு முழுச்சுக்கடி. உன்னை என்னால இப்டி பாக்கமுடியலடி.. சீக்கிரம் எந்திரிடி” என்று உறங்கும் அவளிடம் புலம்பிக் கொண்டிருக்க. இது எதையும் அறியாது அழந்த உறக்கத்தில் இருந்தாள் நிலா. நிலாவின் அருகில் அமர்ந்திருந்தவன் அவள் அருகிலேயே உறங்கி விட.. நேரம் மாலையை நெருங்க. நிலா தூக்கத்தில் எதை எதையோ உளறா ஆரம்பிக்க. தூக்கம் கலைந்த சூர்யா நிலாவை பார்க்க தூக்கத்திலும் அவளின் முகம் பயந்திருப்பது அவனுக்கு நன்றாக தெரிந்தது. “நிலானி என்னாச்சு மா? என்னாச்சு உனக்கு? என்று மனம் பதைபதைக்க நிலாவை அனைத்து கொண்டவன். 

அவள் கன்னங்களை தட்டி அவளை எழுப்ப முயல. நிலா இன்னும் கண்களை இறுக்கி மூடி இருந்தவள். “என்ன காப்பாத்துங்க.?? என்ன யாராது காப்பாத்துங்க” என்று சத்தம் போட்டவள். “ஆஆஆஆஆவென்று” கத்திகொண்டே கண்விழிக்க. அவள் அருகில் இருந்த சூர்யாவின் சட்டை பிடித்து உலுக்கியவள். “ஏன்டா இப்டி பண்ண..?? ஏன் இப்டி பண்ண..?? உன்னை விட மாட்டேன். உன்னை சும்மா விடமாட்டேன்” என்று சூர்யாவின் மார்பில் குத்தியவள். அவனை சரமாரியாக அடிக்க, சூர்யா ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தவன். பின் சுதாரித்து “நிலாம்மா என்னடா ஆச்சு. நா சூர்யாடா.. நல்லா பாருடா. நீ சேஃப் பா தான்டா இருக்க. நல்லா கண்ண தொறந்து பாருடா. நீ நம்ம ரூம்ல தான் இருக்க” என்று அவளை உலுக்க. சூர்யாவின் குரலில் தன்னிலை அடைந்த நிலா. சுற்று முற்றும் பார்த்து தான் இருக்கும் இடம் உணர்ந்தவள். திரும்பி சூர்யாவை பார்க்க… அவள் கண்களில் மிகுந்த வலியை பார்த்தவன். அவள் கன்னங்களை கையில் ஏந்தி, அவள் நெற்றியில் ஆறுதலாக தன் முத்தத்தை பதித்து, “என்ன ஆச்சுமா உனக்கு?” என்று வந்த அவளின் தாய்மை கலந்த குரலில் தாயை பார்த்த கன்று போல் அவன் மார்பில் முகம் புதைத்து கதறி அழுதவள். “என்…என்னை… விட்டு போ… போய்டாதீங்க” என்று முழுதாக வார்த்தை வராமல் போக மேலும் அவள் கோவி கோவி அழ., 

 

“இல்லடா… இல்ல. நா உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன். உன் கூட தான்டாமா இருப்பேன்” என்று வந்த சூர்யாவின் வார்த்தையில் நிம்மதியை உணர்ந்தவள். அவன் மார்பில் முகம் புதைத்தபடி உறங்கி விட. அவள் நன்றாக உறங்கி விட்டதை உறுதி படுத்திய சூர்யா. அவளை தலையனையில் கிடத்தி விட்டு வெளியே சென்றவன், மனம் முழுவதும் வேதனையில் வெந்தது. அரவிந்திற்கு ஃபோன் செய்து சிறிது நேரம் பேசிவிட்டு. “இன்னும் 24 மணி நேரம் தான் உனக்கு டைம் புரியுத?” என்றவன். தேனுவுக்கு ஃபோன் பண்ணி நிலாவின் நிலையை சொல்லி, தேவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வர சொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் நிலா அருகில் இருந்தனர் தோழிகள் இருவரும். கூடவே அரவிந்தும் வந்து விட. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலாவை பார்த்து நிம்மதி கொண்டவர்கள். ரூமை விட்டு வெளியே வர. “நிலாவுக்கு என்ன ஆச்சு சூர்யாண்ணா?” என்று கண்ணீர் வழிய தேவி கேட்க. 

 

“எனக்கு தெரியலமா. மாலுக்கு போய் இருந்தோம். தீடீர்னு மயங்கி விழுந்துட்டா. டாக்டர் ஏதோ அதிர்ச்சி அதான் மயங்கிட்ட, தூங்கின சரியாகிடும்னு சொன்னாங்க” என்று நடந்த அனைத்தையும் சொல்ல. 

 

அரவிந்த் எதையே நினைத்தவன். “டேய் சூர்யா… நிலா தூக்கத்துல கத்துற ன்னு சொன்னா இல்ல. ஒருவேளை அவளை கடத்திட்டு போனாங்களே? அந்த சம்பவத்தை நெனச்சு பயந்து தான் இப்டி ஆகி இருக்குமோ..??”

 

“நானும் அதை தான்டா நெனச்சேன். ஆனா, அவ பயந்தெல்லாம் இருக்க மாட்ட. அவளை பத்தி எனக்கு நல்ல தெரியும். இது ஏதாவது அதிர்ச்சியா வேணுன்னா இருக்கும். எதுவோ அவ கண்ணு முழிக்கட்டும் கேட்போம்” 

 

அன்றைய நாள் முடிந்து அடுத்த நாள் காலைப்பொழுது விடிய… 

 

நிலா உறக்கம் கலைந்து கண் விழிக்க.. கண்களை இறுக்கி மூடி பின் திறந்து சுற்றி பார்த்தவளுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வர. மனதில் பழைய கசப்புகள் அவள் மனக்கண்முன் நிழல் ஆடியது. தன் விதியை நினைத்து நொந்தவள், தலையை திருப்ப, அங்கு தேனுவும் தேவியும் நிலாவின் கட்டில் ஓரம் அமர்ந்த படியே உறங்குவதை கண்டவள். தனக்கு துணையாக சூர்யா தான் தோழிகளை இங்கு வர வைத்து இருக்கிறான் என்று உணர்ந்து அவனின் அந்த அன்பில் மனம் நெகிழ்ந்தவள் கண்களில் கண்ணீர் திரையிட. அவள் உள்ள மனமே.‌ இப்படி பட்ட அன்பு கணவனிடம். தன்னை பற்றி கசப்பான உண்மையை இத்தனை நாள் மறைத்து வைத்ததை நினைத்து அவளுக்கே அவள் மேல் வெறுப்பு வந்தது. இன்று வரை தன்னிடம் உண்மையாக இருக்கும் கணவனுக்கு தான் அப்படி இல்லையே? என்ற எண்ணம் அவளுக்கு உறுத்தலை ஏற்படுத்த, தன் காதலை சொல்லும் முன் தன்னை பற்றிய உண்மைகளை சொல்லிவிட முடிவு செய்தாள். ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன் செய்தவள். தேனு, தேவியை எழுப்ப தோழிகள் இருவரும் பதறியடித்து நிலா அருகில் வந்தவர், “என்ன ஆச்சுடி?? என்ன ஆச்சு உனக்கு?? இப்ப எப்டி இருக்கு?” என்று பதறி துடிக்க.

 

மென்மையாக சிரித்தவள், “எனக்கு ஒன்னு இல்லடி.. நா நல்ல தான் இருக்கேன். ஐ ஆம் ஒகே” என்றதில் நிம்மதி அடைந்த தோழிகள், “ஆமா… நீ ஏன்டி மயங்கி விழுந்த?” என்று கேட்ட தேவி என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நிலா தலைகுனிய. “ஏய் அவ கேட்டது காதுல விழுதா இல்லையா? பதில் சொல்லுடி?” என்று தேனு முறைக்க 

 

“……”

 

“ஒன்பது வருஷத்துக்கு முந்தி என்னை கடத்தி வைச்சிருந்தவாங்களா, நேத்து மாலில் திரும்ப பார்த்தேன்” என்று தலை குனிந்த படியே சொல்ல… தேவிக்கும் தேனுக்கும் அடுத்து என்ன கேட்பது என்று புரியவில்லை.

 

“ஏய் நிலா நீ அவனுங்களை பாத்து பயந்து தான் மயங்கி விழுந்தியா??” என்று தேனு கோபமாக கேட்க… 

 

“ச்சே. ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவனுங்கள பாத்து அப்ப இருந்த நிலானி வேணுன்னா பயந்திருக்கலாம். ஆனா, இப்ப இருக்க நிலா எதுக்கும் பயப்பட மாட்டா… திடீர்னு அந்த நாய்களை பாத்தும் பழசெல்லாம் ஞாபகம் வந்து கொஞ்சம் டென்ஷன் ஆயிடுச்சு. அதான்” என்று நிலா சொல்லி முடிக்க. இதை எல்லாம் வெளியே நின்று கேட்டு கொண்டிருந்த சூர்யாவின் கண்களில் கொலைவெறி வந்தது. அரவிந்தே ஒரு நிமிடம் அவனை பார்த்து பயந்துவிட. “டே… டேய்… சூர்யா” என்று உலுக்க.. நிகழ்வுக்கு வந்தவன். கோபமாக வெளியே சென்று விட. 

 

நிலா தன்னை பற்றி சில உண்மைகளை சூர்யாவிடம் சொல்ல போவதை தேனு, தேவியிடம் சொல்ல முதலில் யோசித்தார்கள், பின் உனக்கு என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியாது நிலா. சோ இதுல நாங்க சொல்ல ஒன்னும் இல்ல. இதுல நீதான் முடிவு எடுக்கணும். எதுக்கும் ஒன்னுக்கு ரெண்டு முறை யோசிச்சிகே” என்று தேனு சொல்ல. 

 

“இல்லடி. இத நா முன்னையே அவர்கிட்ட சொல்லி இருக்கணும். அப்ப அவருக்கு என் மனசுல என்ன இடம்னு எனக்கு தெரியல. அதான் அவர்கிட்ட எதையும் சொல்லல, சொல்ல தோணல. ஆனா‌, இப்ப அவர் தாங என்னோட வாழ்க்கை. இதுக்கு மேலயும் அவர்கிட்ட எதையும் மறைக்க நா விரும்பலடி. அவருக்கு என் மேலிருந்த நம்பிக்கையில இதுவரை அவர் என்னோட பழைய லைப் பத்தி எதுவும் கேக்கல. எப்படியும் அரவிந்த் நான் என்னை பத்தி அவர்கிட்ட சொன்னதை சூர்யா கிட்ட சொல்லியிருப்பாரு. அப்படியிருந்தும் இதுவரை அத பத்தி அவர் ஒரு வார்த்தை கூட என்கிட்ட கேக்கல, அப்படி பட்ட புருஷன் கிட்ட எதையும் மறைக்க நா விரும்பலடி. கணவன் மனைவி இடையே காதல் குறைச்ச கூட அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்திட முடியும். ஆனா, நம்பிக்கை போன வாழவே முடியாதுடி. ரொம்ப நாள் பழகுனவங்க கூட ஒரு வார்த்தையில, ஒரு நாள்ல, ஏன் வெறும் ஒரு நொடில பல வருஷா நம்பிக்கையை இழந்திருக்காங்க… அப்டி சூர்யா நம்பிக்கைய நா இழக்க விரும்பலடி” என்றவள் தன் முடிவில் உறுதியாக இருக்க தோழிகள் அமைதியாக விட்டனர்.

 

பாவம் நிலாவிற்கு தெரியவில்லை இன்றைப்பொழுது அவளுக்கு இன்னும் ஒரு பெரிய அதிர்ச்சியை தர காத்திருப்பது.

 

இன்றைய பொழுது விதி என்ன கலகம் செய்ய காத்திருக்கிறதோ ம்ம்ம் சென்று பார்ப்போம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!