கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 5

 

அன்று மாலை வீடு திரும்பி நிலாவை பார்த்தவுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்த கலையும், ராம்குமாரும் பேச்சை நிறுத்தி விட..

 

“என்ன என்னை பார்த்ததும் டாக்குன்னு பேச்ச நிறுத்திட்டிங்க.. வாட் ஸ் த மேட்டர்? என்ன பேசுனீங்க சொல்லுங்க? என்று நிலா வம்பு இழுக்க.

 

“நாங்க பேசுனது இருக்கட்டும்டி! நேத்து அந்த அரவிந்த் தம்பி கிட்ட நீ என்ன பேசின? அத சொல்லு முதல்ல…”

 

“நா என்னம்மா பேசுனேன். அந்த மர வேதாளம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் அவ்ளோ தான்மா…” என்று நிலா அண்டபுழு புழுக…

 

கலை “அப்டி என்னடி பதில் சொன்னா நீ? அந்த பதில தான் கேக்குறேன் சொல்லு?” என்று கலையும் விடப் பிடியாக நிற்க…

 

“ம்ம்ம்ம்.. உண்மையா சொன்னேன்.” என்று திமிராக சொல்லிய நிலாவின் காதை பிடித்து திருகிய கலை, “அடி செருப்பால… என்ன ஆச்சுன்னு கேட்ட பாட்ஷா பட டைலாக்க விடுற நீ… மரியாதைய சொல்லு டி.”

 

“இப்ப எதுக்கும்மா? நீ இப்படி குதிக்கிற? என்ன ஆச்சு?” அத சொல்லு முதல்ல…?”

 

“அந்த பையன் அரவிந்த் இன்னிக்கு காலையில போன் பண்ணி இருந்தான்” என்றதும் நிலா முகம் சட்டென மாறிவிட, “என்னவாம்..?? என்ன சொல்லுச்சு அந்த மரவேதாளம்?” 

 

“ம்ம்ம்… அன்னைக்கு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு போன புள்ள. இன்னிக்கி என்னடான்ன? ஃபோன் பண்ணி உங்க பொண்ணுக்கும் எனக்கும் செட்டாகாது. இந்த கல்யாணத்தில் எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டான்டி.

அன்னிக்கு புடிச்சிருக்குனு சொல்லிட்டு போனான். இப்ப இப்டி மாத்தி பேசுறான். அதுக்கு என்னடி அர்த்தம். நேத்து நீ அந்த பையன் கிட்ட தனிய பேச போனீயே என்னடி பேசி தொலச்ச? சொல்லுடி?…”

 

“நா எதுவும் தப்ப பேசலமா.! அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன் அவ்ளோதான். அவனுக்கென்ன பிடிக்கலன்னா? நான் என்னம்மா பண்ண முடியும்.” என்று முகத்தை பாவம் போல் வைத்துக்கொள்ள…

 

“நடிக்காதடி… ஏற்கனவே பொண்ணு பாக்க வரங்கன்னு சொல்லி உன்னை சம்மதிக்க வைக்கவே எங்களுக்கு அவ்ளோ கஷ்டமாக பேச்சு. இப்ப அந்த பையன் கல்யாணம் வேணாம்னு சொன்ன என்னடி அர்த்தம். நீ ஏதோ அந்த பையனை பயமுறுத்தி இருக்க. பாவம் அந்த பையன் பாக்கவே அப்பாவிய தெரியுது… என்ன சொல்லி அந்த பையான மிரட்டுன சொல்லுடி..??

 

“ம்மா… உன் பெண்ணை நீயே சந்தேகப்பட்ட எப்டிமா. நா எவ்வளவு அமைதியான பொண்ணுன்னு உனக்கு தெரியாது. என்ன பாத்து இப்படி ஒரு வார்த்தை கேட்டியேமா.? நீ என்ன‌ தெரிஞ்சு வச்சிரேக்குறது இவ்ளோ தானம்மா” என்று சோக டைலாக் விட…

 

“அடியேய்… உன்ன பத்தி நல்லா தெரிஞ்சு தான்டி கேக்குறேன். கண்டிப்பா நீ தான் ஏதோ பண்ணி இருக்க.? உன் முழியே சரியில்ல. உண்மைய சொல்லு…”

 

“அம்மா.!! கடுப்பை கிளப்பாத. நா வேண்டாம்னு சொல்லியும். நீங்க தான் அவங்களை வர வச்சீங்க. அந்த பையன் அப்ப புடிச்சு இருக்குன்னு சொல்லிட்டு, இப்ப மாத்தி பேசுறான். நீ என்னடான்ன என்ன குத்தம் சொல்ற? போமா…” என்று கண்னை கசக்கி விட்டு தன் அறைக்கு சென்று கதவை இழுத்து அடைத்துவிட்டு, மரமாஸ் பாட்டு போட்டு, கட்டில் மேல் ஏறி குதித்து குத்து ஆட்டம் போட்டு, தன் வாயை மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தபடி கட்டிலில் விழுந்தவள், “அப்பாடா தப்பிச்சேன்டா சாமி. நல்லவேளை அந்த மர வேதாளம் என் தோளில விட்டு இறங்கிடுச்சு. அது மட்டும் ஓகே சொல்லி இருந்த? நா ஏதும் கிரிமினல்ல யோசிக்க வேண்டி வந்து இருக்கும். நம்ம கிரைம் ரேட் கூடி இருக்கும். தேங்க் காட்” என்றவள் தோழிகளுக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொன்னாள்.

 

இங்கு வெளியே ராம்குமார் ” ஏன் டி புள்ளைய போட்டு இப்டி படுத்துற.? அந்த பையன் கல்யாணம் வேணாம்னு சொன்ன? அதுக்கு பாவம் குழந்தை என்னடி பண்ணுவ.? நீ சும்மா அவளை போட்டு திட்டிட்டு இருக்க.. பாவம் புள்ள கண்ண கசக்கிட்டு போகுது.”

 

கலை ராம்குமாரை மூக்கு முட்ட முறைத்தவர், “யாரு!! உங்க பொண்ணு? குழந்தை.! அட எங்க நீங்க வேற, அவ சும்மா பர்ஃபாமென்ஸ் பண்ணிட்டு போற, அத போய் நம்பிட்டு, இன்னேரம் உள்ள நல்ல குத்து பாட்டு போட்டுட்டு நல்லா ஆடிட்டு இருப்ப. அது தெரியுமா? நீங்க வேற பீல் பண்ணிட்டு… கடவுளே. எனக்கு வந்தது சரியில்ல, வச்சதும் சரி இல்ல” என்றவர் சமையல் அறைக்குள் நுழைந்தார்.

 

 

மறுநாள் அரவிந்த் அலுவலகம் வந்த சூர்யா, “டேய் ஏன் டா இப்படி பண்ண.? அந்த பொண்ண வேணாம்னு சொல்லிட்டியாம். அம்மா ஃபோன் பண்ணி சொல்லும்போது எனக்கு செம்ம ஷாக். ஏன்டா? ஏன் அப்டி பண்ண..??”

 

“எனக்கு அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல சூர்யா. அவளுக்கு எவ்ளோ நம்பிக்கை இருந்திருந்த, முன்ன பின்ன தெரியாத என் கிட்ட அவளை பத்தி எல்லாம் சொல்லி இருப்பா? அவ நம்பிக்கைய, நா உடைக்க விரும்பலடா.”

 

“ஆனா, உனக்கு அந்த பெண்ண ரொம்ப பிடிச்சு இருந்துது இல்ல அரவிந்த்?”

 

“ஆமாடா, இப்ப கூட எனக்கு அவளை ரொம்ப புடிச்சு இருக்கு. கூடவே அவ காதலையும் எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சு இருக்கு. எப்டியது அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்ச அதுவே எனக்கு போதும் சூர்யா.”

 

“டேய்? நா உன்ன சின்ன வயசுல இருந்து பாக்குறேன். நீ ஆசப்பட்ட பொருள் கிடைக்கலன்ன, நீ எவ்வளவு மனசு கஷ்டப்படுவன்னு எனக்கு நல்ல தெரியும். சில சமயம் நீ டிப்ரஷன் வரைக்கும் கூட போய் இருக்க.. அதுல இருந்து உன்ன மீட்டு கொண்டு வர நாங்க பட்டபாடு, எங்களுக்கு தான் தெரியும். அப்படி இருக்க நீ இப்டி ஒரு முடிவு எடுத்து இருக்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு அரவிந்த். அப்ப உன் வாழ்க்கையில நிலா வேண்டாம்னு முடிவே பண்ணிட்டிய நீ?.”

 

“நா எப்ப டா என் வாழ்க்கையில அவ வேண்டாம்னு சொன்னேன்.? இன் பேக்ட் என்னோட வாழ்க்கை முழுசும் அவ இருக்கனுன்னு நான் ஆசை படுறேன்டா.” என்ற அரவிந்தை சூர்யா வித்தியாசமாக பார்க்க… அரவிந்த் கிண்டலாய் சிரித்து விட்டு, “ஆனா, எனக்கு பொண்டாட்டிய இல்ல. ஒரு நல்ல தோழிய, ஒரு நல்ல வெல்விஷாரா அவ என் வாழ்கையில இருந்த போதுடா…” என்றவனை சூர்யா ஏதோ போல் பார்க்க. 

 

“டேய் நீ பாக்கும் பார்வையோட அர்த்தம் புரியுது. அவள முதல்ல பார்த்தப்பே அவ மேல வந்தது அவ கல்யாணம் பண்ணிக்கணும்ற ஆசை. இப்ப அவ மேல இருக்குறது, சுத்தமாக அன்பு. அப்பவும் சரி இப்பவும் சரி எனக்கு அவ மேல காதல் இல்லடா. காதல் தான்டா பிடிவாதம் பிடிக்கும். அன்பு எப்பவும் எல்லாரும் நல்ல இருக்கனும்னு தான் நினைக்கும். சோ எனக்கு அவ நல்ல இருந்தா போதும்.”

 

 “மச்சி இப்ப நீ சொன்னது தத்துவம் தானே.. என்று சூழ்நிலையை மற்ற சூர்யா முயல.

 

“ஆமா டா நல்லா இருந்துது இல்ல? என்றான் அரவிந்த் கேவலமாக ‌லுக்கு விட்ட சூர்யா, “அட த்த்துது… என்டா நாதாரி. எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்ச, அந்த நிலா உன்னை தூக்கி போட்டு மீதிப்பாளோனு பயந்து ஓடி வந்துட்டு. இங்க வந்து கலர் கலரா சீன போடுற ராஸ்கல்…”

 

“டேய்…! உண்மையாவே இருந்தாலும் இப்டிய பப்ளிக்க போட்டா உடைக்கிறது.? என்னோட குக்கர் என்னடா ஆகுறது.?”

 

“எது குக்கர்ரா அப்டின்ன..??

 

“பிரிஸ்டிஜ் ன்னு அர்த்தம் டா என் வெண்ணெ” என்று சொல்ல இருவரும் சிரிக்க நிலைமை சகஜம் ஆகியது.

 

இங்கு நிலா சந்தோஷமாய் ஆபீஸ் கிளம்பியவள் வெளியே வர. அங்கு கலையும், ராம்குமாரும் பேசிக்கொண்டு இருந்தது அவள் காதில் விழ அப்படியே நின்றுவிட்டாள். 

 

கலை “என்ன சார் ரொம்ப நேரமா ஏதோ யோசிச்சுட்டு இருக்கீங்க? என்ன விஷயம்.? எந்த கோட்டைய பிடிக்க இந்த யோசனை?” என்று கேட்டவர் அவர் அருகில் உட்கார. அவர் முகம் வாடி இருப்பதை கண்டவர்., “என்னங்க என்ன ஆச்சு ஏன் முகம் வாடி இருக்கு.? நெஞ்சு ஏதும் வலிக்குதா என்ன…? மாத்திர சாப்டீங்களா? இல்லையா?” என்று பதற…

 

ராம்குமார் “அதெல்லாம் ஒன்னு இல்ல கலை. நிலா கல்யாணத்தை பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்… அந்த பையன் அரவிந்தை எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. ஆனா, அவன் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டான்.. அது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்று வருந்த…

 

“அட நீங்க வேற. உங்க அருமை பொண்ண பத்தி தெரிஞ்சும் அந்த பையான சொல்றீங்களோ. இந்த சூர்ப்பனகை தான் ஏதாவது பண்ணி அந்த தம்பிய பயமுறுத்தி அப்டி சொல்ல வச்சு இருப்பா…” 

 

“ஏன்டி எப்ப பாரு புள்ளைய கரிச்சு கொட்ற” என்று ராம் குமார் அலுத்து கொள்ள.

 

 “ஆமா இவரு புள்ளைய நாங்க அப்படியே திட்டி, கொட்டிடாலும்… வர மாப்பிள்ளை எல்லாம் ஏதோ பண்ணி விரட்டிட்டு இருக்க அவ. நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணுங்க, முதல்ல உங்களை சொல்லணும்.”

 

“நா என்ன டி செஞ்சேன்.??”

 

“ம்ம்ம்ம்… நீங்க ஒன்னும் செய்யல? அது நான் இப்ப பிரச்சினை” என்றார் கலை…

 

“ஏன்டி இப்ப என்னை என்ன பண்ண சொல்ற நீ..??”

 

“அப்டி கேளுங்க. உங்க அரும பொண்ணு தான் நீங்க என்ன சொன்னாலும் கேப்பா இல்ல. பேசாம ஒரு நல்ல பையான பத்து இவனை தான் நீ கட்டிகனுன்னு சொன்ன அவ கண்டிப்பா மாட்டேன்னு சொல்ல மாட்டா. அப்டி இருக்க நீங்க ஏன் அதை பண்ண மாட்டேங்கிறீங்க?” என்று கலை புலம்ப..

 

“நீ சொல்றது சரி தான் கலை. நா சொன்னா அவ கேப்பா தான். அது அவ என் மேல வச்சிருக்க நம்பிக்கை. நம்ம அப்பா நமக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டாருன்னு அவ நம்புற. அதுக்காக நா என்னோட ஆசையை அவ மேல திணிக்க முடியாது இல்ல கலை.”

 

“நீங்க சொல்றது சரிதான். ஆனா, அவ வர எல்லா வரனையும் இப்டி வேண்டாம்னு சொல்லிட்டு இருந்த எப்டிங்க?” என்று கலை வருந்த

 

“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு கலை. ஆனா, அவ ஏன் கல்யாணம் வேண்டான்னு சொல்றன்னு எனக்கு புரியல. ஒருவேளை அவளுக்கு காதல் ஏதும் இருந்த கூட அதை மறைக்க அவ ஒன்னும் கோழை இல்ல. அதோட நம்ம காதலுக்கு ஏதிரி இல்லன்னு அவளுக்கு நல்லா தெரியும். அப்டி இருந்தும் அவ அமைதியா இருக்கன்ன? அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய காரணம் இருக்கும். ஏன்னு தெரியல நிலாவுக்கு அதை நம்ம கிட்ட சொல்ல முடியல. அது தான் இப்ப பிரச்சினையே…”

 

 “நீங்க சொல்றது சரிங்க. ஆனா, இப்டியே போன இதுக்கு முடிவு தான் என்ன.??”

 

“தெரியல மா. பாப்போம்” என்ற ராம்குமார் அங்கிருந்து செல்ல.

 

வெளியே நின்று இதையெல்லாம் கேட்டு கொண்டு இருந்த நிலா கண்கள் கலங்கி இருந்தவள், வண்டியை எடுத்து கொண்டு ஆபீஸ்க்கு புறப்பட்டாள்.

 

ஆபீசில் நிலாவுக்கு வேலையே ஓடவில்லை. காலை அப்பா, அம்மா பேசியதையே நினைத்து கொண்டு இருந்தவள். அதற்கு மேல் முடியாமல் எழுந்து கேண்டீன் வந்தவள் தலையை பிடித்து கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

 

நிலா செல்வதை பார்த்த தேனும், தேவியும். அவள் முகம் சரியில்லாததை கண்டு அவள் பின்னால் வந்தனர்.

 

“என்ன நிலா? ஏன் இப்டி உம்முன்னு இருக்க.? நியாயமா நீ இப்ப சந்தோஷமா இல்ல இருக்கணும். அந்த அரவிந்த் தான் உனக்கு தொல்ல இல்லாம ஒதுங்கி போட்டனே. அப்றம் ஏன் நீ இப்டி வயலில் வசிக்குற…?”

 

தோழிகளை நிமிர்ந்து பார்த்த நிலாவின் கண்கள் கலங்கி இருக்க. அதை பார்த்த தேவி “ஏய் ஏன்டி? இப்ப எதுக்கு அழுவுற? என்ன ஆச்சு? புதுசா எதுவும் பிரச்சனைய என்ன.?”

 

“எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு தேவி. என்ன செய்யறதுனே புரியல?” என்று மீண்டும் அழ.

 

“ஏய் என்ன ஆச்சுன்னு சொல்லிட்டு அழுது தொலடி” என்று தேனு அதட்ட.

 

நிலா காலையில் கலையும், ராம்குமார் பேசியதை சொன்னவள். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி. குமாருக்கு நல்ல தெரியும் அவர் சொன்ன, நா என்ன வேணும்னாலும் செய்வேன்னு. ஆனாலும் என்னோட உணர்வுக்கு மரியாதை கொடுத்து அவர் ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்காரு. ஆனா, நா அவங்கள பத்தி கவலைப் படாம இப்டி இருக்கேனே…” என்று தலைகுனிய.

 

“நீ ஏன் டி கவலைபடுற? அப்பா தான் உனக்கு காதல் ஏதும் இருந்த அவருக்கு ஓகேன்னு சொல்றாரே. நீ பேசமா உன்னோட காதல் கதையை அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே” என்று தேனு கத்த.

 

தேவி “ஏய் தேனு அவ நிலைமை தெரிஞ்சும் எதுக்கு இப்டி பேசுற நீ..?”

 

“பின்ன வேற எப்டி பேச சொல்ற தேவி? பாவம்டி அப்பா. ஏற்கனவே ஒரு தடவ அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு அதுவும் இவளால. காலேஜில இவளுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு கேட்டதுமே அந்த மனுஷன் அப்டியே நெஞ்சை புடிச்சிட்டு விழுந்துட்டர். அவ்ளோ பாசம் இவ மேல. ஆனா, இவ என்னடான்ன பேரு கூட தெரியாத ஒருத்தனுக்கு காத்து கெடக்க. இவளா எல்லாம் என்னடி பண்றது.” என்று தேனு கெதிக்க…

 

நிலா கண்கள் கலங்கிபடி அப்படியே அமர்ந்து இருக்க, தேனு கோபாமாய் நிலாவை நோக்கி, “போடி போ… போய் அப்பா கிட்ட ஊரு, பேரு தெரியாத ஒருத்தன லவ் பண்றேன். அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லு. அப்டியே உச்சி குளிர்ந்து போவாரு” என்றவள் அங்கிருந்து கோபமாய் எழுந்து செல்ல.. தேவி அழும் நிலாவை பார்த்தவள் தோழிகள் இருவரையும் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் முழித்தாள். 

 

நாட்கள் அதன் போக்கில் ரெக்கை கட்டி பறக்க. ஒரு மாதம் உருண்டு ஓடி விட்டது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீடு வந்த நிலா வீட்டிற்குள் நுழைய அதுவரை எதையே தீவிரமாக பேசிக்கொண்டு இருந்த கலை, ராம், சந்தியா சட்டென்று பேச்சை மாற்ற, “நிலா என்ன ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தீங்க? நா வந்ததும் டப்புன்னு நிறுத்திட்டீங்க. என்ன விஷயம்? என்று கேட்க.  

 

மூன்று பேரும் கோரஸ்சாக, “சும்மா பேசிட்டு இருந்தோம்மா” என்று வடிவேலு ஸ்டைலில் சொல்ல. நிலா அவர்களை ஒரு சந்தேக பார்வை பார்த்து விட்டு சென்றவள், “இதுங்க முழியே சரியில்லயே? ஏதோ கோல்மால் பண்றாங்க போல இருக்கே? என்னவா இருக்கும்? கொஞ்ச நாளாக இந்த மூனும் ஏதோ திட்டம் போடுதுங்க. ஆனா, என்னன்னு தான் தெரியல. இந்த சூனிய பொம்மை சந்தியாவ நம்பவே கூடாது. எனக்கு வேட்டு வைக்க எப்பவும் ரெடியா இருக்கும். நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்” என்று நினைத்தவள் மறுநாள் நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் நிம்மதியா உறங்க சென்றாள்.

 

காலையில் நிலா அவசரமாக வேலைக்கு கிளம்பி கொண்டு இருக்க. “ஏய் நிலா. எங்கடி கிளம்பிட்டு இருக்க.?? என்று கேட்ட கலையை ஒரு லூக்குவிட்ட நிலா.

 

“அய்யோ அம்மா!! என்னாச்சுமா உனக்கு? தலையில அடி எதும் பட்டு பழசு மறந்து போச்ச என்ன.??”

 

“ஏன்டி சூர்ப்பனக இப்ப எதுக்கு டி எனக்கு தலையில அடி படனும், நா பழசு மறக்கனும். நல்ல நாளும் அதுவுமா பேச்ச பாரு. போய் வாய கழுவுடி முதல்ல.” என்ற கலையின் தோளில் கைபோட்டு அணைத்த நிலா, “பின்ன என்னம்மா, காலையில நா எங்க கிளம்புவேன். ஆபீசுக்கு தான. தெரிஞ்சும் எங்க போறன்னு கேட்ட நா வேற என்ன சொல்றது?” 

 

“அதில்ல நிலா. நேத்து தேனும், தேவியும் ஆபீஸ் லீவுன்னு தான சொன்னாங்க. இப்ப நீ கிளம்புறியா… அதன் கேட்டேன்.”

 

“ஓஓஓ.. அதுவா மா. இன்னைக்கு மேனேஜ்மென்ட் மீட்டிங் இருக்கு அதான் நா போறேன்.. அவங்க இரண்டு போரும் லீவ்.. அவங்க ரெண்டு பேருக்கும் அடுத்த வாரம் மீட்டிங் இருக்கு. அன்னைக்கு நா லீவ் புரிஞ்சுதே” என்று கிளம்பியவள். திடீரென ஏதோ ஞாபகம் வர “ஆமா நடுவுல ஏதோ நல்ல நாளுன்னு சொன்னியே. இன்னைக்கு என்ன விஷேசம்..?

 

“அய்யோ வாய் தவறி உலறிட்டேமே? இப்ப என்ன பண்றதுனு தெரியலயே.? அய்யோ பாக்குறளே!! சரி சரி சமாளிப்போம்.” என்று மனதிற்குள் முனுமுனத்தவர். “நா எப்டி நல்லா நாளுன்னு சொன்னேன்.?”

 

“ப்ச்ச… ம்மா நீ சொன்ன.. நா என் ரெண்டு காதல கேட்டேன்.”

 

“நீ கேட்ட? நான் சொன்னேன்னு ஆகிடுமா என்ன.? அதெல்லாம் நா ஒன்னும் சொல்லல. போடி…”

 

“இந்த டைலாக் எங்கயே கேட்ட மாதிரி இருக்கே…! ஆமா.!! இது நம்மது தான். நமக்கே ரிப்பீட் ஆகுது. ம்ஹீம்… ஏதோ சரியில்லயே? என்னமே நடக்குது கண்டுபிடிப்போம்.” என்று நினைத்தவள் அப்டியே நிக்க.

 

“ஏய்! அங்க என்னடி மைன்ட் வாய்சு.? இங்க என்னை கவனி. இன்னைக்கு நீ ஆபீசுக்கு போகாத. லீவ் போட்டு வீட்டுலயே இரு” என்ற அம்மாவை சந்தேகமாக பார்த்தவள், “எதுக்கு மா இப்ப லீவ் போடணும்.? இன்னைக்கு எதுவும் நல்ல நாள் இல்லன்னு இப்ப தான சொன்ன.? அப்றம் எதுக்கு நா வீட்டுல இருக்கணும். அதோட இன்னைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு. நீ திடீர்ன்னு லீவ் போட சொல்ற.? அப்டி என்ன விஷயம்.?”

 

“ஏன்? மகாராணி காரணம் சொன்ன தான் லீவ் போடுவீங்களோ.? வீட்டுல இருன்னு சொன்ன இருக்க வேண்டியது தானடி.”

 

“ம்மா வர வர உன் போக்கே சரியில்ல… என்னமோ பிளான் பண்ற மாதிரியே இருக்கு. மரியாதையா சொல்லு. எனக்கு தெரியாம யாரையாவது பொண்ணு பாக்க வர சொல்லி இருக்கிய என்ன.? அப்டி இருந்த இப்பவே அவங்களுக்கு ஃபோன் பண்ணி வர வேண்டான்னு சொல்லிடு சொல்லிட்டேன்.”

 

“அடிபோடி நா எதுக்கு அப்டி எல்லாம் பண்ண போறேன். நா வர வைப்பேன். நீ ஏதாவது பண்ணி ஓட வைப்ப எதுக்கு வீண் வம்பு. இனி உன் பொண்ணுபாக்க ஒரு பய இந்த வீட்டு வாசப்படி மீதிக்க மாட்டாங்க போதுமா…”

 

“அப்ப பின்வாசல் வழிய உள்ள கூட்டிவர போறீயா ம்மா..??”

 

“ஏய் காலங்காத்தால, என வாய கிளராத சொல்லிட்டேன். இப்ப நீ ஆபீஸ் போக வேண்டாம் அவ்ளோதான். வீட்ல இருக்க முடியுமா, முடியாத…?? என்ற கலையை அன்பாக பார்த்த நிலா, “என்னம்மா இப்டி கேட்டுட்ட… நீ உன் பொண்ணை பத்தி புரிஞ்சுகிட்டது இவ்ளோ தானா…”என்று செண்டிமெண்ட் டாக பேசிய மகளின் பேச்சில் ஒரு நிமிஷம் உருகி விட்ட கலை, “என் செல்லம்” என்று அவர் நெட்டி முறிக்க.

 

உடனே நிலா, “நா என்னைக்கு ம்மா உன் பேச்ச கேட்டு இருக்கேன்? இன்னைக்கு கேக்க. அது தெரிஞ்சும் முடியுமா? முடியாத? நடக்குமா? நடக்காதான்னு காமெடி பண்ணிட்டு. என்னால முடியவே முடியாது. நா கிளம்புறேன்” என்றவளை பார்த்த கலை, “ச்சே ஒரு நிமிஷம் நான் கூட இவ பாசமா தான் பேசுறன்னு நம்பிட்டேனே.! பிசாசு கொஞ்சமாது மதிக்குத பாரு.” என்று புலம்பியவர், “இப்ப என்ன தான்டி சொல்ற நீ?”

 

“அம்மா… முக்கியமான மீட்டிங் மா.. நா போய் தான் ஆகணும்..

 நீ ஏன் இப்டி என்ன வீட்ல உக்கார வைக்கிறதுலயே இருக்க.? எங்க அதுக்கு ஒரு உருப்படியான காரணம் சொல்லு நா வீட்ல இருக்கேன்.?”

 

“அது… அது வந்து… அய்யோ!! காரணம் கேக்குறளே, டக்குன்னு எந்த பொய்யும் வரமாட்டேங்குதே. இந்த நேரம் பார்த்து இந்த ரெண்டாவது பிடாரி எங்க போய் தொலஞ்சன்னு தெரியலயே.? அவ இருந்த டக்குன்னு ஏதாவது பிட்டு போட்டு சமாளிப்ப. இப்ப நா இவ கிட்ட தனிய மாட்டிக்கிட்டேனே…”

 

நிலா கலையை சந்தேகமாக பார்க்க… அய்யய்யே!! முறைக்குறளே, இப்ப என்ன பண்றது.??” என்று கலை முழிக்க.

 

“அம்மா நா உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு..?” 

 

“அதுடி உங்க அப்பா இல்ல. அவரு இன்னைக்கு எல்லாரும் ஒன்ன வெளிய போலான்னு சொன்னாரு. அதான் நீ வீட்டுல இருந்த நல்லா இருக்கும்னு” என்று எதையே உளறி வைக்க,அவரை சந்தேகமாக பார்த்த நிலா “ஓஓஓஓ குமார் வெளிய போலன்னு சொன்னதுக்கு தான் நீ என்ன இப்ப வீட்ல இருக்க சொல்றே?? இல்லலல மா… ம்ம்ம் நம்பிட்டேன் மா. நம்பிட்டேன். எனக்கு மீட்டிங் 11 மணிக்கு முடிஞ்சுடும். நா சீக்கிரம் வந்துர்றேன். அபறம் போலாம். ஓகே வா. இப்ப நா கிளம்புறேன். பை பை” என்றவள் கிளம்ப…

 

“ஏய் நிலா நா இவ்ளோ சொல்றேன். நீ கேக்க மாட்ட இல்ல?” என்று கலை ஆரம்பிக்கும் போது அங்கு வந்த சந்தியா.

 

“ஏம்மா அக்காவ தொல்ல பண்ற? அக்கா தான் சீக்கிரம் வரேன்னு சொல்லுது இல்ல, போகட்டும் விடுமா என்க… 

 

நிலா சந்தியவையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தவள். “என்னடா இது புலி புல்ல தின்னுது.! இவ நமக்கு சப்போர்ட் பண்றது, உலக அதிசயம் ஆச்சே. இதுல அக்கான்னு வேற கூப்பிடுற! வாய்ப்பில்லயே.!! நான் கலை தான் ஏதோ பிளான் போட்டு இருக்குன்னு நெனச்சேன். இப்ப பாத்த குடும்பமே ஏதோ செய்ய காத்து இருக்க மாதிரி இல்ல இருக்கு? என்று யோசிக்க… அவள் சிந்தனையை கலைத்தது சந்தியாவின் குரல்.

 

“நிலா நீ கிளம்பும். மீட்டிங் முடிஞ்சது வந்துடு என்ன..!” என்றவளை சந்தேகமாக பார்த்த நிலா. கலையையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தன் வண்டியை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.

 

இங்கு சந்தியா, “ஏம்மா அவளே நமக்கு சாதகம ஆபீஸ் போறேன்னு சொல்ற. நீ என்னடான்ன அவ கூட சண்ட செஞ்சுட்டு இருக்க. உன்ன என்ன தான் செய்றது?” 

 

“இல்லடி அவ வீட்ல இருந்த நல்ல இருக்குமேன்னு தான்.” என்று கலை இழுக்க.

 

அய்யோ!! என்று தலையில் அடித்து கொண்ட சந்தியா, “என்னம்மா நீங்க, இப்டி பண்றிங்களே மா. தானே போறன்னு சொல்ற. பிசாச யூ டார்ன் போட்டு வர சொல்றீயே.. உன்னை என்ன தான் பண்றது… நம்ம பண்ண போற வேலைக்கு அவ மட்டும் வீட்ல இருந்த கண்டிப்பா நம்ம பிளான மோப்பம் பிடிச்சுடுவா. அப்றம் நம்ம நெலமை மிக்ஸியில் மாட்டுன தேங்காய் பத்தை தான்.

பேசாம நீ போய் கிளம்புற வழிய பாரு. அவள சரியான நேரத்திற்கு வர வச்சுடலாம். நீ போய் மத்த வேலையை பாரு” என்று சொல்ல இருவரும் அடுத்த வேலையை கவனிக்க சென்றனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!