கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 8

 

இங்கு நடந்ததை யோசித்து கொண்டு சென்ற நிலா போய் நின்ற இடம் தேனு,தேவி வீடு. வாசலில் நின்று அழைப்பு மணியை அடிக்க… கதவை திறந்தாள் தேனு. அங்கு நிலா நிற்க “ஏய் நிலா நீ இங்க என்ன பண்ற.? இன்னைக்கு உனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு இல்ல.? அங்க இல்லாம இங்க வந்திருக்க..??

 

“மீட்டிங்கும் முடிஞ்சுது.. கூடவே என் கல்யாணமும் முடிஞ்சுது” என்று நிலா அமைதியாக சொல்ல…

 

“என்னது கல்யாணமா?” என்று அலறினாள் அங்கு வந்த தேவி. நிலா தேனு, தேவி இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.

 

“ஏய் தேனு… இவ முகமே சரியில்ல எனக்கு பயமா இருக்கு, நா பக்கத்தில் இருக்க கோயிலுக்கு போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்ற தேவியை நிறுத்திய தேன்மொழி, “ஏய் எரும என்ன மட்டும் இவ கிட்ட தனியா விட்டு போறியா.? அதுதான் நடக்காது மகளே,?! வா போய் இரண்டு பேரும் சேர்த்து சமாளிப்போம்” என்று தேவியை இழுத்துக்கொண்டு போனாள் தேனு…

 

தேனு தேவியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவள், நிலா பக்கத்தில் அமர்ந்தாள்.

 

“என்ன ஆச்சு நிலா திடீர்னு வந்து கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொல்ற? என்னடி இதெல்லாம். எங்க? எப்ப நடந்தது உன் கல்யாணம்? என்று தேனு கேட்க..?? 

 

தேனுவை நிமிர்ந்து பார்த்த நிலா. எங்க எப்படி நடந்துச்சுன்னு மட்டும் கேட்குற.? ஆனா, யார் கூட நடந்ததுன்னு கேட்கவே இல்லையே.? ஏன் தேனு..?? அப்போ உனக்கு அது யாருன்னு முன்னமே தெரியுமா என்ன..??” 

 

தேனு ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பின் தன்னை சமன் செய்து கொண்டு.. “என்ன நிலா இப்படி கேக்குற எனக்கு எப்படி தெரியும். நீ திடீர்னு இப்படி சொல்லவே, எனக்கு என்ன கேக்குறதுன்னு தெரியல, அதனாலதான் நான் அப்படி கேட்டுட்டேன்” என்று திக்கி தினறி பதில் வர நிலா அவளை ஆழமாக பார்க்க..

 

“என்ன ஆச்சு நிலா? காலையில மீட்டிங் போனவா!? திடீர்னு கல்யாணம் ஆச்சுன்னு சொல்ற? ஒன்னும் புரியல கொஞ்சம் தெளிவா சொல்லு நிலா?” என்று தேனு கேட்க.. நிலா காலையில் இருந்து, நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க… தேனுவும் தேவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதை கவனித்த நிலா எதுவும் பேசாது அமைதியாக இருவரையும் பார்த்து கொண்டு இருந்தாள்.

 

இதை கவனித்த தேனு உடனே. “என்னடி இப்படி ஆகிப்போச்சு? நீ எப்படி இதுக்கு சம்மதிச்ச. யாருன்னு கூட தெரியாத ஒருத்தனை எப்படி டி நீ.? இந்த கல்யாணம் வேணாம்னு சொல்ல வேண்டியது தானா நிலா… ஏன் இதுக்கு ஒத்துக்கிட்ட.?”

 

“வேற என்ன பண்றது.. அந்த மாப்பிள்ளையை எனக்கு மட்டும் தான் தெரியாது. ஆனா, வீட்டுல எல்லாருக்கும் அவனை நல்லா தெரிஞ்சிருக்கு, அவங்க பேசுற விதத்திலயே அது புரியுது. நா நினைக்குறது சரின்னா, அவன் என் வீட்டுக்கு நா இல்லாத நேரத்தில் அடிக்கடி வந்து இருக்கணும்” என்று நிலா சொல்ல தேவி தேனுவை அர்த்தத்துடன் பார்க்க தேனு அவளை கண்களால் அடக்கினாள்.

 

“நீ சொல்றது ஓகே நிலா. அந்த பையனை உங்க வீட்டுல இருக்கவங்களுக்கு தெரிஞ்சு இருக்கலாம், ஆனா, உனக்கு தெரியாதே. அப்புறம் நீ எப்படி அப்பா சொன்னா ஒரே காரணத்துக்காக இதுக்கு சம்மதிச்ச?” என்று தேவி கேட்க.. அலட்சியமாக சிரித்த நிலா “அவர் கேட்ட நா என் உசுரையே கொடுப்பேன் டி.. கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா என்ன..!!” என்றாள் சாதாரணமாக. “அதுமட்டும் இல்ல தேவி, அவர் இதுவரை எனக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயத்தையும் என் மேல திணிச்சது இல்ல. அப்படி இருக்க, இவ்வளவு தூரம் அவர் போய் இருக்காருன்னா, அவருக்கு இந்த கல்யாணம் சரின்னு பட்டிருக்கு… அதனால தான் அவர் ரிஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் வந்து இருக்காரு. அங்க கூட, கடைசி நேரத்தில் உனக்கு பிடிக்கலைன்னா, இந்த கல்யாணம் வேணாம் நிலா, நம்ம போலாம்னு சொன்னாரு பாரு. அந்த நிமிஷம் முடிவு பண்ணிட்டேன் இந்த கல்யாணம் நடக்கனுன்னு.!” என்று நிலா சொல்ல.

 

“அப்ப உன்னோட காதல்? அத மறக்கமுடியுமா உன்னால?” என்று கேட்க தேவியை பார்த்து விரக்தி சிரிப்பு ஒன்றை சிரித்த நிலா, “எதுக்கு மறக்கணும்?” என்ற நிலாவின் கேள்வியில் தோழிகள் இருவரும் ஆடி தான் போனார்கள். 

 

“ஏய் என்னடி சொல்ற? அப்படி அவனை மறக்க முடியலன்னா, எதுக்கு இந்த கல்யாணம். நிறுத்தி இருக்லாம் இல்ல. கல்யாணத்தை பண்ணிட்டு இன்னொருத்தனை நினைச்சுட்டு இருப்போன்னு சொல்ற… இதென்ன விளையாட்டு நிலா? என்றாள் தேனு கோபாமாக.

 

“கல்யாணம் ஆகிட்ட? நம்ம நம்மோட அம்மாவை மறந்திடுவோமா தேனு..??” என்ற நிலாவை முறைத்த தேனு, “ஏய் நா என்ன கேக்குறேன்? நீ என்ன ஒளர்ரா.. நா அந்த பையனை பத்தி பேசுறதுக்கும்? நீ அம்மா பத்தி பேசுறதுக்கும் என்னடி சம்மந்தம்?”   

 

“சம்பந்தம் இருக்கு தேனு. எனக்கு இந்த ரெண்டும் ஒன்னு தான்” என்ற நிலாவின் வார்த்தையில் தேனு, தேவி குழப்பமாக நிலவை பார்க்க..

 

“ஏய் என்னடி நீ இப்டி குழப்புற.? நீ அவனை காதலிக்குற தானே அப்புறம் அம்மான்னு சொல்ற? என்னடி உன் கதை?” என்று தேவி தலையில் கை வைக்க. 

 

“நீ சொல்றது உண்மைதான் தேவி. இன்னைக்கு நா கல்யாணத்துக்கு கையெழுத்து போடுறதுக்கு ஒரு நிமிஷம் முன் அவனை பார்த்திருந்த கூட என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவன் கிட்ட கேட்டிருப்பேன். ஏன்னா? எனக்கு அவன் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கு.. இந்த உலகத்தில நா நம்புற ஆண்கள் ரெண்டே பேர் தான். ஒன்னு குமார் இன்னொன்னு அவன். அப்படி இருக்க இன்னொரு ஆம்பளய என்னால் என் வாழ்க்கையில் கொண்டு வர முடியாது. அதனால தான் நா கல்யாணம் வேணாம்னு சொன்னேன். அன்னைக்கு அந்த நெலமயில அவன் நெனச்சிருந்த, என்னை என்ன வேணாலும் பண்ணி இருக்கலாம். அதற்கான வாய்ப்பு நிறையவே இருந்துது. ஆனா, அவன் பார்வையில கூட தப்பு இல்லடி. அது தான் என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அவன் கிட்ட அந்த ஒரு நாள்ல அன்பு, நம்பிக்கை,பாதுகாப்புன்னு எல்லாத்தையும் நா முழுசா உணர்ந்தேன். அப்படி பட்ட ஒருத்தன் என் வாழ்க்கை முழுசும் வரணுன்னு ஏதிர்பார்த்தேன். ஆனா, அது நடக்கல… நீ கேட்டியே தேவி அவனை தான் நீ காதலிச்சியே? எப்படி அவனை அம்மான்னு சொல்றேன்னு.? உனக்கு ஞாபகம் இருக்க தேவி, நாம காலேஜ் படிக்கும் போது நா அவனை பத்தியும், அவன் கிட்ட நா ஐ லவ் யூ சொன்னத, பத்தி உங்க கிட்ட சொன்னப்போ, நீதான் என்னடி கண்டதும் காதலன்னு கேட்ட.? அப்ப கூட நா அதுக்கு ஆமான்னு சொல்லல, ஏன்னா எனக்கு அவன் மேல இருந்தது காதல் தானானு எனக்கே தெரியல… அது ஒருவித நம்பிக்கை. அவன் கூட இருக்கும் போது நா என் அம்மா கூட இருக்கிற மாதிரி பாதுகாப்பா உணர்ந்தேன். என் வாழ்க்கையில அவனோட இடம் என் அம்மாவுக்கு இணையான இடம் தேவி. அது எனக்கு கல்யாணமாகிடுச்சுன்னு மாறிடாது. அவன் கிட்ட நா சொன்ன ஐ லவ் யூ க்கு அர்த்தம் என்னோட நம்பிக்கை, அன்பின் வெளிப்பாடு தானே தவிர அதுல வேற எதுவும் கிடையாது. இதுக்கு முன்ன எத்தனையே முறை தேனு, ஏன்டி யாருன்னே தெரியாத ஒருத்தனுக்காக இப்படி காத்திருக்கேனு பல முறை திட்டி இருக்க… நா அவனுக்காக காத்து இருக்கேன் சொன்னது உண்மைதான். ஆனா, அது பாதி உண்மை தான். மீதி உண்மை… எனக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை… அதுக்கு ஒரே காரணம் என்னால எந்த ஆம்ளயயும் நம்ப முடியாம போனது தான். அதனால் தான் நா கல்யாணமே பண்ணிக் கூடாதுன்னு முடிவு பண்ணி இருந்தேன். ஆனா, விதி வேற மாதிரி கைவரிசையை காட்டிடுச்சு… ம்ம்ம்ம்” என்று கண்களை மூடி அமைதியாக இருந்தாள்.

 

நிலா சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த தோழிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க. தேனு நிலாவிடம் “அப்ப அந்த அரவிந்த் சொன்னது உண்மைதானா நிலா? என்று கேட்க… 

 

“நீ எதை பத்தி சொல்ற தேனு?”

 

“உனக்கு நெனவு இருக்க தேவி? அந்த அரவிந்த் இவகிட்ட பேசினப்போ? நீ கல்யாணம் வேணாம்னு சொல்ல இந்த காதல் மட்டும் தான் காரணமா? இல்ல வேற ஏதாவது ரீசன் இருக்கான்னு கேட்டானே? ஞாபகம் இருக்க??”

 

“ஆமாடி ரைட்டு தான். இப்ப இவ சொல்றத பாக்கும் போது அவர் சொன்னது உண்மைதான்னு தோணுது” என்றாள் தேவி.

 

இருவரும் நிலாவை பார்க்க அவள் தலை குணிந்து இருந்தாள். “அப்ப அவர் சொன்னது உண்மையா நிலா?” என்று தேனு கேட்க நிலா “ஆமாம்” என்று தலை ஆட்டினாள்.

 

“அப்படி என்னடி நடந்தது? மொத்த ஆம்புளையையும் நம்பாத அளவுக்கு?” என்று தேவி கேட்க…

 

“ப்ளீஸ் தேவி… அதை பத்தி எதுவும் கேக்காத. நா என் நெனப்புல கூட இருக்க கூடாதுன்னு நினைக்கிற கசப்பான உண்மை அது. அதை என்னால் சொல்ல முடியாது” என்று அவள் கதறி அழ தேனுவும், தேவியும் அவளை கட்டி அணைத்துக் கொண்டார்.

 

தேனு அவளை திசை திருப்பும் விதமாக, “சரி அதைவிட, இப்ப உன் கிட்ட சிக்கி இருக்கே, ஒரு ஆடு அது பேர் என்ன?” என்று யோசித்தவள் “ஆஆஆ சூர்யா அதை என்ன பண்ண போற?” என்று கேட்க…

 

நிலா சின்னதாய் சிரித்தவள், “குழம்பா இல்ல கொத்து கறியான்னு இன்னும் முடிவு பண்ணல” என்று கண்களை துடைத்து கொண்டே சொல்ல… “பாவம்டி அந்த சூர்யா?! உன் கிட்ட மாட்டி என்ன பாடு பட போறனோ?” என்று தேவி புலம்ப மூவரும் சிரித்து விட்டனர்.

 

“ஜோக்ஸ் அப்பர்ட் நிலா… இப்ப சீரியஸா கேக்கறேன். நீ இப்ப என்ன பண்ண போற? நடந்த கல்யாணத்தை பத்தி நீ என்ன முடிவு பண்ணி இருக்க?” என்று தேனு கேட்க. 

 

“தெரியல தேனு. இப்ப வரை நா அதை பத்தி எதுவும் யோசிக்கல… ஆனா, நடந்த இந்த கல்யாணம் பத்தி எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு அதுக்கு எனக்கு பதில் கிடைச்சே ஆகணும்” என்றாள் நிலா.

 

“எனக்கு ஒன்னும் புரியல நிலா? கொஞ்சம் தெளிவ சொல்லு மண்ட காயுது. அப்படி நீ என்ன பதில் தெரிஞ்சுக்கணும்? என்றாள் தேவி.

 

“முதல்ல இந்த அரவிந்த் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு, அப்புறம் எதுக்கு என் வீட்டுக்கு வந்து உண்மையை சொன்னான். என் வீட்டுல இருக்கிறவங்க கல்யாணத்திற்கு சம்மதிச்ச பிறகு, அவனே என்னை கல்யாணம் பண்ணிக்காம, அவனோட ப்ரெண்ட்டுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சான்?” என்றவளை நிறுத்திய தேனு. 

 

“அந்த அரவிந்துக்கு உன்ன கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லாம இருந்திருக்கும் நிலா… அதான் வேணாம்னு போயிருப்பாரு”

 

“இல்லடி, அப்படி இருக்க வாய்ப்பில்ல. ஏன்னா? நா அவன் கூட தனியா பேசப் போனப்ப… அவன் கண்ணுலய தெரிஞ்சுது, அவனுக்கு என்னை புடிச்சிருக்குன்னு. அப்படி இருக்கும் போது, நா வேற எந்த காரணம் சொன்னாலும் அவன் ஒத்துக்க மாட்டான்னு தான், நா அவன் கிட்ட உண்மையை சொன்னேன். அப்படி இருக்க அவன் ஏன் அவன் ஃப்ரெண்ட் டை மாப்பிள்ளை ஆக்கணும். அடுத்து அந்த சூர்யா அவனை பாத்த அழகுக்கு மயங்குற ஆள் மாதிரி தெரியல, கண்டதும் என் மேல காதல் வந்துடுச்சு அதனால என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டானு சொல்ல. கண்டிப்பா இதுக்கு பின்னால ஏதோ பெரிய காரணம் இருக்கணும். நெக்ஸ்ட் என்னோட குடும்பம். அரவிந்த் உண்மையை சொன்ன பிறகு அவங்க கண்டிப்பா நா எங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டேனோன்னு பயந்து அரவிந்த் பிளானுக்கு ஒத்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, அந்த சூர்யா பத்தி எதுவும் தெரியாம எப்படி இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ற அளவுக்கு போனாங்க? அரவிந்தோட வரன் வந்தப்போ, குமார் அவன் ஆபீஸ், வீடுன்னு ஒரு இடம் விடாம, எல்லா இடத்திலும் விசாரிச்சாரு. அப்படி இருக்க,! சூர்யா பத்தி ஏதும் தெரியாம இவ்வளவு ஷர்ட் பீரியட்ல எப்படி கல்யாணம் வரைக்கும் போனாங்க.? அப்ப சூர்யா பத்தி விசாரிச்சது யாரு..?? குமார், அம்மா, சந்தியா அரவிந்துக்கு கூட்டு, அது தெளிவ தெரியுது… ஆனா,?” என்று தோழிகள் முகம் பார்த்தவள். “இதுல சூர்யாவையும் சேர்த்து இதுங்க ஐஞ்சும் கூட்டணி..!! ஆனா,?? இதுல இன்னும் வேற யாரும் சம்பந்தப்பட்டு இருப்பாங்கன்னு எனக்கு தோணுது? என்று நிலா நிறுத்த… தேனுவும்,தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்து திருட்டு முழி முழித்துக்கொள்ள… 

நிலா அவர்களை கவனித்தவள். “அந்த கூட்டு களவாணிங்க மட்டும் யாருன்னு தெரியட்டும். அப்புறம் இருக்கு கச்சேரி” என்று கையை முறுக்க… தேவி முட்டை கண்னை முழித்து பார்த்து எச்சிலை விழுங்கிய படி தேனை பார்க்க அவளும் அதோ நிலையில் தான் இருந்தாள்.

 

தோழிகளை பார்த்த நிலா, “ஏன்டி நீங்க ரெண்டு பேரும், இதுல ஏதும் சம்பந்தப்படால தானே? என்று கேட்க..!! தேவிக்கு தூக்கி வறி போட்டாது.. 

 

“ஏய் நிலா என்ன பேசுற நீ.? நாங்களாவது உனக்கு போய் இப்டி எல்லாம். ச்சே என்ன நிலா நீ எங்களை போய் இப்படி சந்தேகப்படுறீயே?” என்று தேவி வார்த்தைகளை கடித்து துப்ப. 

 

“ம்ம்ம்… நா உங்களை நம்புறேன். ஆனா, நாளைக்கு மட்டும் நீங்க சொல்றது பொய்யின்னு தெரிஞ்சது அப்புறம் இருக்குடி மகளே உங்களுக்கு..!!” என்று நிலா முறைக்க.

 

“ஏய் என்னடி திரும்பவும் இப்படி பேசுற?” என்று தேனு வருத்தப்பட… 

 

“இல்ல தேனு மத்ததெல்லாம் ஓகே. ஆனா, ரிஜிஸ்டர் மேரேஜ் அப்ளிகேஷன்ல என்னோட கையெழுத்து எப்படி வந்தது. கண்டிப்பா அந்த வேலையை அம்மாவோ, இல்ல அந்த சூன்ய பொம்மையோ பாக்கல. அப்போ என்னோட கையெழுத்தை, எனக்கே தெரியாம வாங்கினது யாரு?” என்று கேட்க தேவிக்கு புரையேறியது. 

 

“ஏய் பரதேசி நாயே… நீயே பயந்து காட்டிக்கொடுத்துடுவ போல? கொஞ்சம் சும்மா இருந்து தொலடி பன்னி…” என்று தேனு தேவி காதை கடிக்க…

 

நிலா இருவரையும் ஒரு முறை முறைத்து விட்டு, “சரிடி… நா கெளம்புறேன். வீட்டுக்கு போய் ரெண்டு பேரை மந்திரிக்க வேண்டி இருக்கு. நா கிளம்புறேன்” என்றவள் வண்டியில் புறப்பட்ட.

 

இங்கு தேவி, “அப்பாடி, அவளுக்கு நம்ம மேல சந்தேகம் இல்ல” என்று பெருமூச்சு விட.. தேனு கோபமாக தேவி தலையில் கொட்டியவள், “மண்ணாங்கட்டி அவளுக்கு நம்ம மேல தான் முழு சந்தேகம். அதை கன்பார்ம் பண்ண தான் இப்ப வந்துட்டு போற. அவளுக்கு முழு உண்மையும் தெரிஞ்சது. நம்ம ரெண்டு பேரும் கொத்து கறி தான்” என்று சொல்ல தேவி நெஞ்சை பிடித்துக்கொண்டு, “அய்யோ கடவுளே நா என்ற அத்தா, அப்பனுக்கு ஒத்த பிள்ளைடி” என்று புலம்ப… 

 

“அதுக்கு இப்ப ஒன்னும் பண்ண முடியாது தேவி” என்று தேனு கிண்டலாக சொல்ல…

 

“அடிங்கு… இங்கன ஒருத்தி பயந்து கிடக்க, நீங்க நகைச்சுவை பண்றீங்களோ? மூஞ்ச பாரு. போடி அந்த பக்கம்.” என்றவள் எதையோ யோசித்து, “ஏன்டி தேனு சந்தேகப்பட்டதுகே, நமக்கு இந்த கதின்னா, அப்ப கலை அம்மா, சந்து நிலைமை என்னடி?” என்று கேட்க.. 

 

“நாளைய பொழுது விடிஞ்ச தான்டி தெரியும்” என்று சோகமாக சொல்ல இருவரும் அப்படியே உட்கார்ந்து விட்டார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!