கனலிடம் காற்றுக்கென்ன நேசம் -24

received_831487837460704-49fb64e9

கனலிடம் காற்றுக்கென்ன நேசம் -24

  • Arumbu
  • November 5, 2021
  • 0 comments

கனலிடம் காற்ருக்கென்ன நேசம் 24

ஆதுவின் அருகே அமர்ந்திருந்த திவியை அழைத்த தேவா “திவி வா, நாம போய் அத்தைக்கு காபியாவது வாங்கிட்டு வந்து கொடுக்கலாம்.. மாமாக்கு இப்படின்னு தெரிஞ்சதுல இருந்து ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க. வா நாம போய்ட்டு வரலாம்” என்று அழைக்க, 

திவியோ “ப்ச்.. வேண்டாங்க.. அம்மாவும் மதுவும் டிபன் எடுத்துட்டு வரதான போயிறுக்காங்க.. இப்போ காபி குடிச்சா அப்புறம் சாப்பிட முடியாது.. சாப்பிட்ட பின்னாடி வேணும்னா வாங்கிக்கலாம்” என்று சொல்ல,

தேவா திவியை முறைத்தான். திவி கண்களிலே ‘என்ன? முறைப்பு?” என்று கேட்க, தேவா ஆது மற்றும் தமிழை கண்களாலே சுட்டி காட்டி “வாடி” என்று உதட்டு அசைவில் அழைக்க, தேவாவின் “வாடி” என்ற உதட்டசைவை கண்டு அவனை முறைத்துக் கொண்டே தேவாவுடன் சென்றாள்.

தேவா திவியுடன் சென்றதும் ஆதுவின் அருகில் வந்து அமர்ந்த தமிழ் ஆதுவின் கையை அவளின் மடியில் இருந்து எடுத்து தன் இருகைகளுக்குள்ளும் வைத்துக் கொண்டு “டோண்ட் வொர்ரி ஆது. மாமாக்கு ஒன்னும் ஆகாது. நீயே இப்படி இருந்தின்னா அத்தை இன்னும் மனசுவிட்டுறுவாங்க.. சோ கொஞ்சமாவது தைரியமா இரு” என்று கனிவாக சொன்னான்.

தமிழ் தன் கையை எடுத்ததுமே அவன் கைகளிலிருந்து தன் கையை விடுவிக்க போராடியவாறே அவன் சொல்லியதை கேட்டவள் தமிழின் முகத்தை மட்டும் ஒரு நொடி கூர்ந்து பார்த்துவிட்டு தன் கையை அவன் கைச்சிறையில் இருந்து வெடுக்கென்று உருவிக் கொண்டு அங்கிருந்து சென்று தள்ளி உட்கார்ந்து கொண்டாள்.

அரசி இவர்களின் ஊடலை கவனிக்காமல் அவரின் உலகில் சஞ்சரிக்க, தமிழோ ஆதுவின் இந்த நடவடிக்கை அவனை கவலையில் ஆழ்த்தியது.

தள்ளி வந்த ஆதுவின் மனமோ கொதித்து கொண்டிருந்தது. இருந்தும் இந்த நிலையில் தான் மனதில் இருப்பதை கொட்டினால் எளிதாக தமிழ் தன் ஏமாற்று வேலையை மறைத்து தப்பிக்க வாய்ப்பிருப்பதால் தன் மனதை அமைதியாக வைக்க போராடிக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் கலாவும் மதுவும் வந்துவிட, அனைவருக்கும் சாப்பிட உணவை கொடுத்தாள். ஆதுவும் அரசியும் உணவை மறுக்க, கடினப்பட்டே இருவரையும் உணவு உண்ண வைத்தனர். சரியாக அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் மாறனையும் கே.கே மருத்துவமனை மாற்ற ஏற்பாடு செய்ய ஆரம்பிக்க, பதினோருமணிபோல் மாறன் கே.கே. மருத்துவமனை கொண்டுவரப்பட்டார். 

 

அங்கு அட்மிட் செய்யபிட்டபின் கார்த்தியிடம் ஆது “அண்ணா நீ அம்மாவையும் மத்த எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பு. நான் இங்க இருந்துக்கிறேன். அம்மாவை பார்த்து கூட்டிட்டு போ. இன்னைக்கு அம்மாவை உங்க வீட்டுலையே தங்கவச்சிரு. அங்க தனியா விடாதே” என்று சொல்லிவிட்டு நிற்காமல் தன் அறையை நோக்கி சென்றுவிட்டாள்.

ஆதுவின் கூற்றை கேட்டு கார்த்தி மறுத்து சொல்ல வருவதற்குள் அவள் சென்றுவிட கார்த்தி மதுவிடம் “நீ அம்மாங்களை கூட்டிட்டு வீட்டுக்கு போ மது. இன்னைக்கு நானும் இங்கதான் இருக்க போறேன்” என்று சொல்ல அதற்குள் தமிழ் “வேண்டாம் கார்த்தி. நீங்க எல்லாருமே கிளம்புங்க. நான் இங்க ஆதுகூட இருக்கேன்.” என்று சொல்ல கார்த்தி மறுக்க, தமிழ் “நான் பார்த்துக்குறேன் கார்த்தி.. எல்லாரையும் கூட்டிட்டு கிளம்பு” என்று கொஞ்சம் கடினமாகவே சொல்ல அவ்வார்த்தையை மீற முடியாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான் கார்த்தி.

தன்னறைக்குள் வந்த ஆதுவோ தன் மேஜைமீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள். அவளின் அறை சவுண்ட் ப்ரூவ் அறையானதால் அவளின் கதறல் வெளியில் கேட்காமல் போனது.  

வெளியில் இருந்த தமிழின் மனமோ ஆதுவை பற்றி சிந்தித்து கொண்டிருந்தது. கலையில் வரை தன்னுடன் சிரித்து பேசிய ஆத்விகா இப்பொழுது கண்ணெடுத்தும் பார்க்காமல் இருப்பது அவன் காதல் கொண்ட மனதை துவள செய்தது. மதியம் முதல் எங்கு சென்றாள்? எப்படி அவளுக்கு மாறனின் உடல்நிலை பற்றி தெரிந்து வந்தாள்? எதும் தெரியாமல் தன்னை தவிக்க விடுபவளை நினைத்து  அமைதியாக ஐசியூவின் வெளியே அமர்ந்திருந்தான்.

சரியாக அந்நேரம் ஐசியூவின் வாயிற்கதவை திறந்து நர்ஸ் வெளியே வந்து அத்தளத்தில் இருக்கும் அவசரகால மருத்துவரை நோக்கி ஓட, தமிழும் பரபரப்பாக எழுந்து நின்றான். 

பின் அந்த நர்ஸை தொடர்ந்து மருத்துவரும் ஐசியூவில் நுழைய தமிழ் வேகமாக ஆதுவின் அறை செல்ல படிகளில் இறங்கினான். அவன் மனமோ ‘மாமாக்கு எதும் ஆக்கூடாது. அப்படி ஆச்சுனா என் மனசாட்சியே என்னை கொன்னுரும்’ என்று உருப்போட்டபடியே இருந்தது.

ஆதுவின் அறைக்கதவை பட்டென்று திறக்க, அழுது சிவந்த விழிகளுடன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை மறைக்க தன் சுழல் நாற்காலியில் திரும்பினாள் வருபவருக்கு தன் முகமதை மறைக்க. இருந்தும் அந்த ஒரு நொடியில் தமிழின் கண்கள் ஆதுவின் கண்ணீரை கண்டு கொண்டது. சடுதியில் தன்னை மீட்டுக்கொண்ட ஆத்விகா கதவை நோக்கி திரும்பினாள். திரும்பியவள் தமிழை பார்த்து நெற்றி சுருக்கி பார்க்க, தமிழும் ‘இவகிட்ட இப்போதைக்கு பேசவேண்டாம்’ என முடிவெடுத்து  “ஐசியூல மாமா இருக்கிற பகுதிக்கு டாக்டர் போயிருக்காங்க.. சீக்கிரம் வா” என்றவன் ஆதுவின் முகமதையே கூர்ந்து பார்த்தான். தமிழின் பார்வையை தவிர்க்க ஆது வேகமாக ஐசியூவை நோக்கி சென்றாள். ஆது சென்றதும் அங்கையே நின்ற தமிழ் தேவாவிற்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற தேவா “சொல்லு தமிழ்.. எல்லாம் ஓகே தான?” என்று கேட்க, தமிழ் “எவ்ரிந்திங் இஸ் ஓகே தேவா. பட் நான் இப்போ கால் பண்ணினதுக்கு வேற காரணம். எனக்கு இன்னைக்கு முழுக்க ஆது என்ன பண்ணினா? எங்க போனா? யாரை எல்லாம் சந்திச்சாங்கிற டிடைல்ஸ் வேணும்” என்று சொல்ல,

தேவாவும் “நீ கேட்டாலே ஆது சொல்லுவாங்களே தமிழ்? பின்ன ஏன்?”  என்று மறு கேள்வி எழுப்ப, தமிழ் “தேவா.. நான் கேட்டது எனக்கு மார்னிங் கையில இருக்கனும். தட்ஸ் இட்” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க, அந்த பக்கம் தேவாவோ தமிழ் சொன்னவற்றை செயலாற்ற துவங்கினான்.

இங்கு ஐசியூவில் ஆது நுழைய, மற்ற மருத்துவர் ஒருவர் மாறனை பரிசோதித்துக் கொண்டிருந்தார். வந்த ஆது அம்மருத்துவர் செய்வதை பார்த்தவள் “டாக்டர் கான்ஸீயஸ் வருதா?” என்று சந்தோசமாக கேட்க, அவரும் “எஸ் டாக்டர்.. மோஸ்ட்லி மார்னிங் கண்ணு முழிச்சுருவாரு” என்று சொல்லி அவரை கண்காணிக்க இருக்கும் நர்ஸிடம் சொல்லிவிட்டு செல்ல, ஆதுவும் மாறனின் தலைக்கட்டை வருடிவிட்டு அந்த நர்ஸிடம் தலை அசைப்புடன் வெளியேறினாள்.

வெளியில் வந்த ஆதுவை பார்த்த தமிழ் “என்ன ஆது? மாமா எப்படி இருக்காரு? ஓகே தான?” என்று கேட்க, ஆதுவோ “நீங்க நினைக்கிற மாதிரி அவ்ளோ சீக்கிரம் என் அப்பாவை சாகவிட மாட்டேன்” என்று சொல்ல, தமிழோ அவள் கூற்றில் அதிர்ந்து அவளை பார்த்தான்.

“ஆது நீ என்னமோ தப்பா புரிஞ்சுருக்க, நான் போய் அப்படி நினைப்பேனா?” என்று கேட்க, ஆதுவோ அவனை துச்சமாக பார்த்து சென்றாள். ஆதுவின் வார்த்தைகள் தமிழை பாதிக்க, கவலையுடன் அமர்ந்தான். அப்பொழுது தமிழின் கைப்பேசி புது எண்ணை தாங்கி இசைத்தது. தமிழும் யோசனையுடனே அவ்வழைப்பை ஏற்க, அப்பக்கம் இருந்து “என்ன அருந்தமிழன்? ரொம்ப அரும்பாடு படறீங்க போல? என்று நக்கல் குரலில் ஒருவன் கேட்க, தமிழோ “யாரு நீ?” என்றான்.

அதற்கு அந்த பக்கமோ “உன்னை கொல்லப் போறவன். உன் நிம்மதியை அழிக்கப் போறவன்” என்று சொல்ல, தமிழோ “போன் பண்ணி விளையாட்டு காட்டுறதுக்கு உனக்கு என் நம்பர் தான் கிடைச்சுதா? மனுசன் என்ன நிலமையில இருக்கான்னு தெரியாம இரிட்டேட் பண்ணாம வை” என்று சொல்ல, அந்த குரலோ “இது தான் ஆரம்பம். இனி உனக்கு இருக்கு தமிழ். ஆமா உன் மனைவி இன்னுமா உன்னை கொல்லாம இருக்கா? அவளை பத்தி நான் கேள்விபட்டது வரைக்கும் தப்பை தட்டி கேக்கிற வீரமங்கைன்னு சொன்னாங்களே? அப்புறம் எப்படி அமைதியா இருக்கா?” என்று சொல்ல, ஆதுவை பற்றி பேசியதும் “என் மனைவியைப் பத்தி இனி ஒரு வார்த்தை நீ பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன் சக்தி” என்று சொல்ல, அக்குரலோ “அட கண்டுபிடிச்சுட்டீங்க போல… இனி நான் நேரடியாவே பேசலாம். மரியாதையா அந்த மாறான் குரூப்பை விட்டுட்டு நீ உன் கம்பெனியை மட்டும் பாரு. இல்லைனா உனக்கு தான் நஷ்டம். இப்போ நான் பண்ணியிருக்கிறது வெறும் சின்ன வேலை. ஆனா இனியும் நீ மாறன் குரூப்பில மூக்கை நுழைச்சேன்னா உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். உன் பொண்டாட்டி அந்த லூசு உயிரோட இருக்கமாட்டா.. நான் சொல்றது உனக்கும் புரியும்னு நினைக்கிறேன்” என்று மிரட்ட,

தமிழோ கூலாக “எது? நீ ஆதுவை கொல்லுவியா? என்னை சின்ன குழந்தைன்னு நினைச்சு சிரிப்பு மூட்டிட்டு இருக்க நீ” என்று சொன்னவன் பின் கொஞ்சம் தன் குரலை கடினமாக மாற்றி “உன்னால முடிஞ்சா ஆது மேல கை வச்சு பாருடா.. என் பொண்டாட்டி மேல சின்னதா நகக்கண் பட்டாலும் உன் உயிர் உன் உடம்புல இருக்காது. என்ன சொன்ன? மாறன் குரூப்பை நான் விடனுமா? டேய் அது என் சொத்து. அதை எப்படி காப்பத்தனும்னு எனக்கு தெரியும். அதுக்காக நான் எந்த அளவுக்கு வேணுனாலும் போவேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அப்பக்கம் இருந்த சக்தியோ “அதுக்கு நீ முதல்ல உயிரோட இருக்கணும்டா” என்று வன்மமாக நினைத்துக் கொண்டான்.  அவனுடன் இருந்த  ரமேஸைப் பார்த்து (ஆதுவிடம் அடி வாங்கிய இன்ஸ்பெக்டர்) அடுத்த வாரத்துல நடக்கிற அசோசியேசன் தேர்தலில் அவன் கலந்துக்க கூடாது. நேரம் பார்த்து அவனை போட்டுறுங்க. ஆனா நம்ம பேரு இது எதுலையும் வரக்கூடாது.” என்று சொல்ல,

ரமேஸோ “சக்தி எனக்கு அவன் முக்கியம் இல்லை. அந்த ஆது தான் என் டார்கெட். என்னை அத்தணை பேரு பார்க்க அடிச்சவளை நானும் எல்லார் முன்னாடியும் கூனி குருகி நிற்க வைக்கனும். அதுக்கு எதாவது சொல்லுவன்னு பார்த்தா இவனை போட சொல்ற?” என்று கேட்க,

சக்தியோ “நான் பிளான் பண்ணின மாதிரி தான் இப்போ அந்த ஆது ரியாக்ட் பண்ணிட்டு இருக்கா.. நீ பர்ஸ்ட் தமிழை போடு. அதுக்கு அப்புறம் அந்த சாவுக்கு காரணம் ஆதுனு சொல்லி அவளை தூக்கி உன் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் செய்.. அதுக்கு அப்புறம் அந்த மாறன் குரூப் யாரும் இல்லாம என் கைக்கு வந்துரும்” என்று சொன்னான். ரமேஸும் தமிழை எதில் சிக்க வைக்கலாம் என்று சக்தியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினான். 

இங்கு மாறன் கண்விழித்ததும் அவரை நார்மல் வார்டுக்கு மாற்ற அனைவரும் அவரை சந்தித்து வந்தனர். ஆது மாறனை சந்தித்து “சாரிப்பா.. உங்க கிட்ட கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியலை. ஆனா இனியும் நான் அப்படி நடக்காம பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, மாறன் அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்து கொண்டு “இல்லை ஆதுமா. நீ உன் வாக்கை காப்பாத்திட்டு தான் இருக்க. கவலைப்படாம இனி என்ன செய்யணும்னு பாரு” என்று சொன்னார்.

 பின் இரண்டு நாளில் அவரிற்கு மற்ற டெஸ்டுல்கள் எடுக்க, வீட்டிற்கு அழைத்து வர என பறந்திருந்தது. அந்த இரண்டு நாளும் தமிழிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை ஆது. தமிழும் அவள் மனதில் என்ன உள்ளது என கண்டு கொண்டிருந்ததால் ஆதுவை கண்டு கொள்ளாமல் இருந்தான். அவனுக்கும் தன் மீது சிறு நம்பிக்கையும் இல்லாமல் இருக்கும் ஆதுவின் மீது கோவமே.

ஒரு வாரம் யாருக்கும் காத்திராமல் சென்றிருந்தது. அன்று கட்டுமான சங்கத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்தது. அப்போட்டியில் ஆதுவும் தமிழும் கலந்து கொண்டிருக்க, அனைவரும் ஒரு மனதாக தமிழிற்கு ஓட் செய்து அவனை தலைவராக தேர்வு செய்திருந்தனர். முதலில் அதை பெரியதாக எடுத்திருக்காத ஆது அவளின் போனிற்கு வந்திருந்த ஆடியோ கிளிப்பை கேட்டு தமிழின் மீது இருந்த மீதி நல்லெண்ணத்தையும் முற்றிலுமாக விட்டாள். தமிழின் மீது அளவு கடந்து கோவம் இருந்தாலும் தன் தந்தையிடம் அதை நிரூபித்து தமிழின் உண்மை முகம் வெளியில் வர செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.

மாறன் குரூப்பிற்கு பழைய படி வெற்றி முழுதாக பொருப்பெடுத்துக் கொள்ள, ஏன் என்று கேள்வி கேட்ட மாறனிடம் “தமிழ் கொஞ்சம் பிஸிப்பா.. வெற்றி பார்த்துக்கட்டும். ஏன் நான் மாறன் குரூப்புல எதும் முடிவெடுக்க கூடாதா?” என்று கேள்வி கேட்டிருக்க, மாறன் அமைதியாகிவிட்டிருந்தார்.

இதை எல்லாம் பார்த்திருந்த தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் இறுகிக் கொண்டிருந்தான். தன் காதல் ஆதுவை கொஞ்சமும் மாற்றவில்லை என்ற எண்ணமே அவனை துவள செய்திருந்தது. 

 

 மேலும்  அவனை

ஆதுவிடம் இருந்து முற்றிலும் ஒதுக்கும் வண்ணம் மேலும் சம்பவங்கள் நடேந்தேறின அவன் திருமண வாழ்வில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!