கனலியின் கானல் அவன்(ள்)-18

கனலியின் கானல் அவன்(ள்)-18

பிரமாண்டமான கடை மக்கள் நிரம்பி வழிந்தது.குடும்பங்களாக,ஜோடிகளாக, நண்பர்கள் என தளங்கள் ஒவ்வொன்றிலும் விதவிதமாய் உடைகளை தெரிந்துக்கொண்டிருந்தனர். 

 

அதில் பட்டுப்புடவை பகுதியில் அமர்ந்திருந்தாள் கயல்விழி அவளருகே மீனாட்சி அமர்ந்திருக்க அவர்களுக்கு பின்னே நின்றிருந்தார் தேனரசன். 

 

“கயல் நான் அண்ணியோட நேற்று நிறைய  புடவை வாங்கிருக்கேன்டா.எதுக்கிப்போ  இவ்வளோ வாங்குற…” 

 

“மீனு… மாப்பிள்ளை வீட்ல செய்யுரதுன்னு ஒரு முறை இருக்கில்லயா.அதை நாம  செய்யனுமே.வாங்குறது உங்களுக்கு பிடிச்சதா இருக்கணும்னு நினைக்குறேன். அதனாலத் தான் உங்களையும் அழைச்சிட்டு வந்தேன். “

 

என்றவள் மீனாட்சிக்கு பிடித்த நிறத்தில் முகுர்த்த புடவை,மற்றும் சில புடவைகள்  வாங்கி விட்டு நகையும் வாங்கிக்கொண்டே வீடு திரும்பினர். கடை விட்டு வெளியில் வந்தவள்,

 

“ஹனி எனக்கொரு வேலை இருக்கு. நீங்க மீனாம்மா கூட போயிருங்க.நான் வந்துர்றேன் “

என்றவள், பைகள் அனைத்தையும் அரசுவின் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றாள். 

 

அரசுவுக்கு கோபம், அதோடு மீனாட்சி  அவரை பார்த்து சிரிக்க அவரையும் முறைத்து வைத்தவர் வண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டார். மீனாட்சியும் சிரித்துக்கொண்டே வண்டியில் அமர்ந்து வண்டியை செலுத்த ஆரம்பிக்க, 

 

“எதுக்கிப்போ சிரிக்கிற? “

அரசு கோபமாய் மீனாட்சியின் புறம் திரும்பி அமர்ந்து கேட்க மீனாட்சியோ, 

 

“எதுக்கிப்போ இவ்வளவு கோவம்னு  சொல்லுங்களேன்… “

 

“மீனா நாம என்ன சின்னப்பசங்களா.அவ  சேட்டை ரொம்ப அதிகம் இப்போ, நீயும் அவகூட சேர்ந்துக்கிட்ட… “

 

“ஓஹ் அதான் பிரச்சனையா? 

அவ முகத்துல எவ்வளவு சந்தோஷம்… இதுக்கு முன்ன அவ முகத்துல எப்பவும் ஒரு சிரிப்பு இருக்கும்தான், ஆனால் ஏதோ ஒரு  யோசனையோடான சிரிப்பு தான்.இப்போ இந்த ரெண்டு வாரமா தான் உண்மையா சந்தோஷமா இருக்கா.அதை எதுக்கு கெடுக்கணும். சந்தோஷமா  இருக்கட்டுமேங்க.”

 

அரசு பதில் எதுவுமே கூறவில்லை. பின் சிறிது தூரம் செல்லவும், 

 

” ருத்ரா என்கூட பேசினார் உங்க வீட்ல நம்ம வீட்டுக்கு வர முன்னாடி… 

 

“அதென்ன பேசினார்.அவன் இவன்னே  பேசலாம்.என் பையன் அவன்.”மீனாட்சி  கூற, 

 “ச்சே ச்சே நல்லா இருக்காது அப்படி. “

 

“சரி உங்க இஷ்டம்.”

 

 தொடர்ந்த அரசு, 

“கண்ணம்மாவை விரும்புறதா சொன்னார். அதோட  கண்ணம்மாக்கு கூட விருப்பம் இருக்கும் போல.நானும் அதை  உணர்த்திருக்கேன். ஆனா எப்பவும் என்கூட எல்லாம் பகிர்ந்துகிறவ இதை இன்னைக்கு  வரைக்கும் சொல்லல்ல.அதுக்கு நாமதான் காரணம் அப்டின்னு ருத்ரா சொல்லவும் தான் அப்படியும் இருக்குமான்னு நானும்  யோசிச்சேன்.அதுக்காகத்தான் இந்தக்கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.” 

 

‘டேய் வரு என்னமா பிளான் பண்ணி  இருக்க.என்னை சாக்கா வச்சு உன் மாமாகிட்ட பொண்ணு கேட்டிருக்க.அதுவும் என்கிட்ட சொல்லாம.இரு இரு என்கிட்டத்தானே வருவ.வச்சிக்கிறேன்.’

 

இது மீனாட்சியின் மனம். வெளியில், 

 

“ஹ்ம்ம்…என்கிட்டயும் சொன்னான்.பசங்க  வாழ்க்கை தானே நமக்கு முக்கியம். நமக்குத்தான் கொடுத்துவைக்கல.பசங்க சந்தோஷமா இருக்கட்டுமே அரசு.”

 

“அன்னைக்கு ருத்ரா அப்படி என்கிட்ட பேசுறப்ப எனக்கு அருண் நினைவுதான்  வந்தது. இப்படித்தான் எங்கப்பாகிட்ட கேட்டாங்க.அதோட கலையரசியை கல்யாணம் பண்ணிட்டு ரொம்ப  சந்தோஷமா இருந்தாங்க.கைவிட்டு எண்ணக்கூடிய நாட்கள் தான்.

அரசியோட வாழ்க்கையையும் சேர்த்து அவ பொண்ணு வாழனுங்குறதுதான் எனக்கு இருக்க ஒரே ஆசை.அதுவும் அவளுக்கு பிடிச்சதா அமைச்சு கொடுக்கணும்னு  நினைக்குறேன். “

 

“கண்டிப்பாங்க.நம்ம பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கலாம். சந்தோஷம் அவங்க வாழ்கிற வாழ்க்கைல தானா அமையும். “

 

“என்னவோ நினச்சு இங்க வந்தேன் ஆனா   இப்போ…”

அரசு கூற,அரசுவின் வீட்டின்முன்னே வண்டியை நிறுத்தினார் மீனாட்சி.அவர் வண்டி விட்டு இறங்க முன்னர் அவரை பார்த்த மீனாட்சி, 

 

“ரொம்ப மாறிட்டிங்க அரசு.வரு பேசினதை சொன்னிங்கத்தான்.அப்போ அதுக்காக மட்டுமே தானா என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னிங்க? நான் கயலுக்காக மட்டுமே பண்ணிக்கல.உங்களுக்காகவும் தான்.சாரி உங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்…” என்றவர், 

 

அரசு இறங்கும் வரை அவர் பக்கம் திரும்பவே இல்லை.அரசு எதுவோ கூற வர,  

 

“மூன்று நாள் தான் இருக்கு அதுக்குள்ள  மனசு கஷ்டப்படறமாதிரி பேசிறாதிங்க. நீங்கள் எப்பவும் உங்க உணர்ச்சிகளை கட்டிக்கல.இப்பவும் அப்படியே தான்  இருக்கீங்க.அதுலமட்டும் மாறவே இல்லை.  

நானும் முன்,முகத்துல எதையுமே  கட்டிக்காம இருந்துப்பேன்.அப்படித்தான்  இருந்தேன்.இப்போ யேனோ தெரில,என்னால முடில.”

 

கூறி முடிக்கவும் மீனாட்சியின் கண்கள் கலங்கி இருந்தது போல.அரசு எதுவுமே பேசாது இறங்கி சென்றுவிட்டார். 

 

பெருமூச்சொன்றை வெளியிட்ட மீனாட்சி அவர் வீட்டை நோக்கி வண்டியை  கிளப்பினார்.  

 

 

இன்னும் மூன்று நாட்களில் திருமணம்,தன் திருமணத்திற்கு தயாராக வேண்டுயவள்  தன் தந்தையின் திருமணத்திற்காக அவளால் முடிந்த வேலைகளை செய்துக்கொண்டு அவரை படித்தியெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

கல்யாணம் முடிந்து மீனாட்சி வீட்டிலிருந்து மாலை வீடு திரும்புவதால் வீட்டில் விருந்து  வைக்கப்போவதில்லை.இரவுணவுக்கு முன்னமே அவர்கள் திரும்பிடுவார்கள். எனவே,எவ்வித மெனக்கிடலும் அரசுவிடம்  இருக்கவில்லை.

 

‘பொண்ண வெச்சுகிட்டு தேவையா இவனுக்கு?’

 

யாரும் இந்த வார்த்தையை உதிர்த்து விடக்கூடாது எனும் எண்ணமே இதற்கு  கரணமாய்.

 

விடுவாளா கயல்,வீட்டில் எவ்வித அலங்காரங்களும் தேவை இல்லை என அரசு கூறியிருக்க,சரியென்றவள் வெளியில் எதுவுமே செய்யாது வீட்டினுள் சிறு சிறு மாற்றங்களுடன் அலங்கரிக்க வெட்டிங் பிளானர்ஸ் இன் உதவியை நாடியிருந்தாள்.

 

மாலை வீட்டினுள் சிறு வரவேற்பு ஒன்றை போலவே இருக்குமாறு ஏற்பாடு பண்ணியிருந்தாள்,இவர்கள் காலை கோவிலுக்கு கிளம்பவும் பிளேனர்ஸ்  வீட்டை அதற்காக அலங்காரம் பண்ணுவதாக ஏற்பாடு.அரசுவை அறியாது.

 

அத்தோடு அவர்களுக்காய்  கொடுக்கவிருக்கும் பரிசுக்கு ருத்ராவிடம் உதவி கேட்க வேண்டிய சூழ்நிலை. செய்யாதிருக்க மாட்டான்,ஆனால் அவனுடன் பேசும் நேரங்களில் அவளை அவன் முன் காட்டிக்கொடுத்து விடுவாளோ’ எனும் எண்ணமே அவளை யோசிக்க வைத்தது.பிறகு சமாளித்துக்கொள்ளலாம்  என்றெண்ணியவள், 

 

இதோ அவனுக்கு அழைக்கிறாள்… 

 

“ஹலோ… “

 

“ஹாய் கவி ஷோபிங் முடிஞ்சதா? “

 

“ஹ்ம்ம் முடிஞ்சது இப்போ தான் ரிட்டர்ன்  போய்ட்டிருக்கேன். “

 

“தனியாவா? “

 

“ஹ்ம்ம்  மீனாம்மா கூட ஹனியை   அனுப்பிட்டேன்.”

 

“ஓஹ்… அப்றம் “

 

“எங்க இருக்கீங்க இப்போ? “

 

“கொஞ்சம் வெளில இருக்கேன்டா.என்ன கவி?” 

தனக்கு அழைப்பெடுத்த மகிழ்வில் பேச, 

 

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணுமே அதான் முடியுமான்னு… “

 

“ஓஹ் அதுக்காகத்தான் பேசினியா?

 

‘அவன் குரலில் ஆரம்பத்தில் இருந்த துள்ளல் சற்று குறைந்ததுவோ ‘

 

“என்ன பண்ணனும்? “

 

“இல்ல எனக்கு…”

என ஆரம்பித்தவள் அவளது தேவையை  கூற, 

 

“இன்னும் மூனுநாள் தான் இருக்கு  அதுக்குள்ள முடியுமான்னு தெரிலயே..கொஞ்சம் முன்னாடியே  கேக்குறதுக்கென்ன”

 

அவனிடம் உதவி கேட்பதற்காக மட்டுமே அழைத்தாள் என மனம் கோவம் கொள்ள சற்று கோபமாக பேசி விட்டான்.

 

“இல்ல இப்போ திடீர்னு தோனவும் தான்  உங்ககிட்ட கேட்கலாம்னு சாரி,முடிலன்னா  வேணாம்.வேறேதாவது பண்ணலாம்.. “

 

“சரி,எதாவது பண்ணலாமான்னு பார்க்குறேன்.வெட்டிங் அன்னைக்கு இருந்தா போதுமா? “

 

“பகல் குடுத்தீங்கன்னாலுமே அரேன்ஜ் பண்ணிக்குவேன். “

 

“ஹ்ம்ம் ஓகே “

 

“தேங்க்ஸ் “

 

“இதுக்காகவாவது என்னை பேசணும்னு  தோணிருக்கே. “

 

அவளிடம் மௌனம்…மௌனம்… மட்டுமே. அவன் குரலை அவளுள் இழுத்துக்கொள்ள அவள் மனமோ அவனிடம்  செல் செல் என்று கூச்சலிட்டது.மனதோடு அவளோ போராடிக்கொண்டிருக்க இவனோ, 

 

“உன் தேவை முடிஞ்சதில்ல,என்கிட்ட பேச  வெறெதுவும் இருக்காதே வெச்சுரு… “

பட்டென கூறியவன் அழைப்பையும்  துண்டித்துவிட்டான்.

 

‘சந்தோஷமா ரெண்டு வார்த்த பேசினாதான்  என்னவாம்.அவளுடன் தன் காதலை பகிர்ந்துகொள்ளவில்லை,எனினும் இருவரும் ஒருவரை ஒருவர்  உணர்ந்துக் கொண்டு தானே இருக்கோம்.எதுக்காக இப்டி இருக்கான்னே தெரில.கல்யாணம் முடியட்டும் இருக்குனுக்கு.’

 

மனதில் தன் காதல் தேவதையை திட்ட, 

மறுபக்கமோ வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவள் அதனை ஓரமாய்  நிறுத்திவிட்டு அலைபேசித்திரையில் ஒளிர்ந்த அவன் முகத்தையே  பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

‘என்னால எல்லோரும் அவங்க  சந்தோஷசத்தை இழந்தது தான் அதிகம்  வரு.இப்போ உங்களுக்கும் அதே கஷ்டத்தை தர்றேன்னு நினைக்குறப்ப,ஐ  ஹேட் மை செல்ப்.உங்களை பார்த்திருக்கவே கூடாது.என் மனசு உங்கள ஆசைப்பட்டிருக்கவே கூடாது.நீங்க ஏன்  வெறொரு குடும்பத்துல பிறக்கல வரு.’ 

 

புலம்பிக்கொண்டே  கண்ணீர் வடித்தவள்,   சிறிது நேரம் அப்படியே இருந்தாள்,   பின்னர் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வீடு திரும்பினாள்.  

 

உறவுகள் இன்றி தனியாக வளர்ந்தவள்  உறவுகளை,உறவுகளோடு ஒன்றி வாழ்பவர்களை கண்ட போது ஏக்கப்பட்டவள்,அவை தனக்கு கிடைக்காவிட்டாலும் தனக்காய் தன் அனைத்து சந்தோஷங்களையும் இழந்த தன்னை வளர்த்த தந்தைக்காக தன்  காதலை இழக்க துணிந்தாள் மனம் முழுதும் காதல்கொண்ட மங்கை.

 

 

இரவு படுக்கைக்கு வந்த அரசுவுக்கு கலங்கிய கண்களுடன் சென்ற  மீனாட்சியின் நினைவாகவே இருந்தது.

 

‘எப்படியும் திருமணம்  நடக்கத்தான் போகிறது.இதற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளத்தானே வேண்டும். மீனாட்சியை நினைக்கும் போதே அவர்களின் கல்லூரி நாட்கள் தான் அவர்  நினைவுகளில்.அந்த வாழ்க்கை சிறப்பாக நல்லபடியாக அமைந்திருந்தால் இன்று எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும். என் பொண்ணு அம்மா,அப்பா குடும்பம் என்று சந்தோஷமா இருந்திருப்பாளே. இப்படித்தான் அமையனும்னு இருக்கு ‘

அவர் மனதில்  நினைத்துக்கொண்டிருக்க, 

 

“என்ன ஹனி எந்த கோட்டையை பிடிக்க  போறதா உத்தேசம் ? ‘

 

அரசு சாய்ந்தமர்ந்திருக்க அவரருகே வந்தமர்ந்தவள்,

 

‘மீனம்மாவை ஹர்ட்  பண்ணிட்டியா ஹனி? “

 

கயல் கேட்க அவள் முகத்தை பார்த்தவர், 

 

“அப்டில்லாம் ஒன்னில்ல.”

எனும் அவர் பதிலே அப்படித்தான் எனக்கூறியது. 

 

“ஹனி நான் ஹாப்பியா இருக்கணும்னு  நினச்சா,அது நீ ஹாப்பியா இருந்ததால் தான் இருப்பேன்.எனக்காகன்னு தானே  இவ்வளவு நாளும் இப்படி இருந்த. இப்போவும் எனக்காக மட்டுமே இதை பண்ணுறன்னு புரியுது.ஆனா உனக்கு பிடிக்காததை பண்ணலையே.சோ ப்ளீஸ் இப்படி இருக்க வேணாமே.சந்தோஷமா ஏதுக்கோ.அவங்களை ஹர்ட்  பண்ணாத.ஜஸ்ட் த்ரீ டேஸ் தான் இருக்கு. அவங்ககூட பேசுப்பா. தனியா இருப்ப்பாங்க.உன்கூட இவ்வளவு நாளும் நானிருன்தேன்.பட் அவங்க தனியவேதான் இருக்காங்க…”

 

கூறி முடித்தவள் அவர் கன்னத்தில் இதழ்  பதித்து உறங்கச்சென்றாள்.

 

இனிதாக பொழுதும் புலர்ந்தது. ஜனார்த்தனன் வீடு என்றுமில்லாது ஒளிமயமாய் காட்சிதந்தது அவருக்கு… 

ஆம் இவ்வளவு நாளும் மனதில் ஏறியிருந்த  பாரம் இறங்கும் நேரம் வந்திருக்க மனதில்  சந்தோஷம் நிறைந்திருந்தது.தனது மூத்த மகளின் கல்யாண நேரம் கூட இப்படி  சந்தோஷமாக நடமாடியிருக்க மாட்டார். அதை அவர் மகளுமே கேட்டும் வைத்தாள். 

 

“என்னப்பா என் கல்யாணத்தப்ப கூட நீங்க  இப்படி சந்தோஷமா நடமாடி பார்க்கல. எல்லோரும் ரொம்பதான் அவங்களை  தலைல வெச்சு ஆடறீங்க 

இதெல்லாம் நல்லதுக்கில்லை  சொல்லிட்டேன்.”

 

ரித்திகா பேச அவளைப்பார்த்தவர்,எதுவோ சொல்ல வர இடைபுகுந்த பார்வதி அவரை யாரோ சந்திக்க வந்திருப்பதாக கூறி அனுப்பி விட்டு, 

 

“ரித்தி,புண்ணியமா போகும் கல்யாணம்  முடியிற வரை உன்வாயை வெச்சுட்டு சும்மாயிரு.அப்பா யாரும் இருக்காங்கன்னு  பார்க்க மாட்டார்.எல்லார் முன்னாடியும் வாங்கிக்கட்டிக்காத”

 

அவரை முறைத்து பார்த்தவள்  அவளறைக்குள் புகுந்துக்கொண்டாள். படிகளில் ஓடிக்கொண்டு வந்த மதுமிதா, 

 

“ம்மா கயல் கூட பார்லர் போறேன் அங்கேயே ரெடியாகிட்டு வந்துருவேன்.” 

எனக்கூற,

” பார்த்துப் போ.அந்தப்பொண்ணுக்கு ஏதும்  ஹெல்ப் வேணுமான்னு கேட்டுக்கோ, தனியா என்ன பண்ணாலோ தெரில.”

 

“சரிமா.” என்றவள் மாதவனோடு கிளம்பினாள். 

 

இந்த மூன்று வாரத்தில் மது,மாதவன், மற்றும் பார்வதியோடு நன்றாக ஒட்டிக்கொண்டாள் கயல். இருவருக்கிடையே ஒரு வருட வித்தியாசமே இருக்க இருவரும் நன்றாக பழகினர்.அதிலும் மாதவனின் அண்ணி என்ற விளிப்பு அவளை நெகிழவைத்தது.

 

 பத்திலிருந்து நண்பகல் சூரிய உச்சம்  வரை நேரம் குறித்திருக்க, இவர்கள் பதினொன்று  முப்பது மணிக்கு கோவிலை சென்றடைய திட்டமிட்டு வேலைகள் செய்துகொண்டுருந்தனர். 

 

மது மாதவனுடன் கயல் வீட்டின் முன்னிருந்து ஹார்ன் அடிக்க வெளியே வந்த கயல் இதோ ரெண்டு நிமிஷம் எனக்  கைகாட்டி உள்ளே சென்றாள். 

 

“மாதவா,வீட்ல யாருமே இல்லை. நாமலாவது இங்க வந்திருக்கலாம் டா.பீல்  பண்ணிருப்பாங்களோ என்னவோ. “

 

“ஹ்ம்ம்  ‘என்றவன், 

‘அண்ணி வந்ததும்  கேட்காத அப்பதான் ரொம்ப பீல் பண்ணப்போறாங்க… “

 

இவர்கள் பேச வண்டியில் வந்து ஏறினாள்  கயல். அரசு இவர்களை உள்ளே அழைக்க,  

 

“டைமில்ல மாம்ஸ்,இதுங்க முகத்துக்கு பவுடர் போடப் போனா எத்தனை  மணியாகுமோ தெரியாது.சோ கோவில்ல பார்க்கலாம் என்றவன்,மதுவிடம் சில பல அடிகளை வாங்கிக்கொண்டு  கிளம்பினான். 

 

“மாதவா இப்போ எய்ட்டாச்சு.எங்களை நைன் தர்ட்டிக்கு பிக்கப் பண்ண வந்திங்கன்னா ஓகே.”என்று கயல் கூற,  

 

“ஓகே அண்ணி வேறேதும் வேலை  இருக்கா?ஏதும் பண்ணனும்னா சொல்லுங்க” என்றான்.

 

“எல்லாம் ஓகே மாதவா…ரெடியாகிட்டா இனி கோயிலுக்கு போறதுதான் பாக்கி. “

 

“அப்போ ரெடியாகிட்டு கால் பண்ணுங்க”  வந்துர்றேன் என்றவன் அவர்களை விட்டுவிட்டு கிளம்பினான். 

வீட்டில்,குளித்து முடித்து அறையினுள் வந்த  அரசுவுக்காக தயாராக வைத்திருந்த வெள்ளை வேட்டி, சட்டையை பார்த்தவருக்கு மனதில் எதுவோ ஓர் இதம். 

 

உடுத்திக்கொண்டு அவருக்காக தேநீர் தயாரித்துக்கொண்டவர் அதனை பருக  நாளை இந்த கப்புக்கு பங்குபோட கூடவே ஒருத்தி பக்கத்தில் அமர்ந்திருப்பாள். நினைவுகள் நிஜமாய் நிகழப்போவதை  நினைக்கும் பொழுது… இதழ்களில் மெலிதான ஒரு புன்னகை. 

 

யாரோடும் பகிரப்படாத அவர் மன  உணர்வுகள் வெளிவர ஆரம்பித்தன. 

 

மூன்று நாட்களுக்கு முன்னதாக கயல்  உறங்கச்சென்று விட மனதுக்கு ஏதோ உறுத்தல். மீனாட்சியை அழைத்தவர்  அவரை அடுத்தநாள் மாலை சந்திப்பதாக கூறியிருந்தார். 

 

சந்தித்தவரோ அவள் மற்றைய நாட்களை  போல பேசாமல் இருக்கவும், மேசை மேல்  இருந்த அவர் கையை பற்றிக்கொண்டவர், “என்ன மீனா ஒன்னுமே பேசாம இருந்தா  என்ன அர்த்தம்? ” எனக்கேட்க, 

 

“நீங்க தான் பேசணும் சொல்லி  வரசொன்னிங்க.பேசிடீங்கன்னா கிளம்பிருவேன்.அண்ணி தனியா வெளில  போக வேணாம்னாங்க.அதுனால வரு கூடத்தான் வந்தேன்,வெளில வெய்ட் பன்றான். “

 

“ஓஹ்… அப்போ கிளம்பு ” என்றார் எதுவுமே கூறாது. 

 

“கையை பிடிச்சுக்கிட்டு போன்னா,கையை விடுங்க போறேன்.”

என எழுந்துகொண்டு அவர் கையை இழுதுக்கொண்டே அரசுவின் முகம்  பார்க்க,அவர் முகத்தில் என்ன கண்டாரோ அப்படியே அமர்ந்துவிட்டார்.

 

“உன்ன ஹர்ட் பண்ணனும்னு  நினைக்கல.சாரி “

 

“கயல் போய் சமாதானம் பண்ண  சொன்னாலா ” மீனாட்சி கேட்க, 

 

“அதுவும் தான் ஆனா…’ என்றவர்,அவர்  முகத்தை பார்க்க மீனாட்சியும் அவரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.  

 

‘கோயில்ல உன்னை பார்க்க முன்னாடி ஒரு  தடவ பார்க்கணும்னு தோணிச்சு. “

 

‘உண்மையா? எனும் விதமாய் மீனாட்சி பார்க்க சிரித்தவர், 

 

“உண்மையா தான்.அதுவும் இதுக்கப்றம் கயலோட அப்பாவா மட்டுமே என்னால இருக்கமுடுயுமான்னு தோணல.அதான்  உன்னை அதுக்காக தயார் படுத்திக்கோன்னு சொல்லலாம்னு வந்தேன்”.என்றார். 

 

என்ன பேசினார், அதன் அர்த்தம் சில  நொடிகள் சென்றே பிடிபட மீனாட்சியின்  முகம் அந்திமாலை வானோடு ஒப்பிட செம்மையானது. 

 

“நான் கிளம்புறேன்” என மீனாட்சி  எழுந்துக்கொள்ள, 

 

 “ஹாப்பியா இரு” என்று அவள் கைகளை  அழுத்தி விடுவித்தார். 

 

சந்தோஷமாக விடைபெற்று சென்றவர்  வண்டி அருகே செல்ல ருத்ரா எதுவோ கேலி பண்ணவும் மீனாட்சி அவர் பையினால் அவனை அடித்தவாறு ஏறுவதைக்கண்டவர் உள்ளத்திலும் பழைய தேனரசன் மீண்டிருந்தார்… 

 

தேநீர் கப்பினை வாயில் வைக்க வாய்க்குள் எதுவும் போகாதிருக்க கப்பினை எடுத்து பார்த்தவர்,தேநீர் தீர்ந்ததும் அறியாது நினைவுகளில்  இருந்த தன்னைத்தானே நினைத்து சிரித்துக்கொண்டார்… 

 

கயல்விழி ஆசைக்கொண்ட தேனரசன்  திரும்பி விட்டார்…

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!