கனவு 21

கனவு 21

அத்தியாயம்-21

அறையின் கோலத்தைக் கண்ட இருவருமே உறைந்து நின்றனர். விக்னேஷிற்கு தாயின் ப்ளான் புரிந்தது.
அதற்கு யார் உதவி இருக்கிறார்கள் என்றும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. எல்லோரையும் நினைத்துப் பல்லைக் கடித்தவன் கௌசியின் நியாபகம் வந்தவனாக அவளிடம் திரும்பினான். அவள் நின்ற கோலத்தைக் கண்டு அவன் அதிர்ந்து விட்டான்.

அறையின் கோலத்தைக் கண்ட கௌசிக்கு பழைய நியாபகம் எழுந்தது. பழைய கோர நினைவுகள் எல்லாம்
போட்டி போட்டுக் கொண்டு கோரமாக எழ கௌசி நடுங்கி விட்டாள். ஏனோ அந்த அறை கண் முன் வந்து நின்று அவளை மூச்சடைக்க வைத்தது. அவளை ஏதோ
மரண வாசலுக்கு அழைத்துப் போவதைப் போல உணர்ந்தாள். விக்னேஷின்
உருவமும் அவளுக்கு குருவின் உருவம் போலத் தெரிய அவள் மூன்றரை வருடத்திற்குப் பின்னால் சென்றாள்.

அவளின் வியர்த்த முகத்தைப் பார்த்து விக்னேஷ் அருகில் செல்ல “வேண்டாம் குரு.. ப்ளீஸ் என்னை விட்டிடு…” என்று பின்னால் நகர்ந்தவள் நிலவுப்படித் தட்டிவிட்டு கீழே விழப் பார்த்தாள்.

“கௌசி” என்று ஓடி வந்தவன் அவளை பிடிக்க.. கௌசி அலற… நைட் நேரம் அவள் சத்தம் போட.. அவளை உள்ளே
இழுத்து கதவை அடைத்தான்.

கதவை அடைத்ததில் கௌசி இன்னும் பயந்து “வேண்டாம் குரு.. என்னை விட்டிடு.. நான் என் அப்பா.. என் விக்கா
கிட்டையே போறேன்” என்று கதறியவள் விக்னேஷின் காலில் விழ விக்னேஷ்
பயந்துவிட்டான்.

அவளை எழுப்ப “ப்ளீஸ்.. என்னைத் தொடாதே” என்று பின்னால் நகர்ந்தாள் கௌசி. பின் அவளைத் தோளைப் பிடித்து உலுக்கிய விக்னேஷ் “கௌசி.. நான் குரு இல்லை.. விக்னேஷ்.. நல்லாப் பாரு..
நான் விக்னேஷ்” என்று கத்தி உலுக்க கௌசிகா நினைவிற்கு வந்தாள்.

சுயநினைவிற்கு வந்தவளால் எதையுமே யூகிக்க முடியவில்லை. விக்னேஷ்
அருகில் இருப்பதை உணர்ந்தவள் தன்னை அறியாமல் அவனைக் கட்டிப்
பிடித்து விட்டாள். “விக்கா.. விக்கா..” என்றுத் திக்கித் திக்கி கௌசி அழ.. அவன் அவளைச் சமாதானம் செய்தான்.

“கௌசி அழாதே.. அழாதே..” என்று சொன்னவன் அவளை இறுக அணைத்தான். அவனது அணைப்பில் கொஞ்சம் சமாதானம் ஆனவள் நிதானம்
பெற்று அவனிடம் இருந்து விலகினாள்.

“சா… சாரி டா” என்றாள் தலைக் குனிந்து.

“அதெல்லாம் ஒன்னு இல்லை விடு…” என்றவன் “சரி எந்திரி மேல உட்கார்” என்று சொல்ல கௌசியும் மேலே ஏறி
உட்கார்ந்தாள்.

பின் அறை அலங்காரங்கள்
ஒவ்வொன்றாக கலைய ஆரம்பித்தான். அதுவே கௌசி பயந்திற்கு காரணம் என்று நினைத்தவன் முதலில் அதை
எடுக்க வேண்டும் என்று நினைத்து அதை
எல்லாவற்றையும் நீக்கினான்.

பின் கௌசியின் அருகில் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தவன் “கௌசி..” என்று அழைத்தான்.

“சொல்லுடா” – கௌசிகா.

“குரு கூட நீ..” என்று ஆரம்பித்தவன் “குரு உன்ன சந்தோஷமா வச்சிருந்தானா
கௌசி” என்று நேரிடையாகக்
கேட்டுவிட்டான்.

கௌசியால் பதில் சொல்லவே
முடியவில்லை. என்ன என்று சொல்லுவது என்றுத் தெரியமால் உட்கார்ந்திருந்தாள். “சொல்லுடி.. குரு உன்ன சந்தோஷமா வச்சிருந்தானா?” என்றுக் கேட்டான்.

கௌசியின் தலை இல்லை என்பது போல வலமும் இடமும் ஆடியது. பழைய நினைவுகளில் கண்ணீர் கோர்த்தது. “என்ன ஆச்சு டி.. புடிச்சு தானே கல்யாணம் பண்ண.. அவன் கிட்ட
பேசிட்டு தானே இருந்த” என்றுக் கேட்டான். (டேய் விக்னேஷ் முட்டாள்.. அவ
உன்கிட்ட சொன்னாளா..).

அதற்கும் இல்லை என்பது போலத் தலை ஆட்ட அவளின் தாடையை கன்னத்தோடு
புடித்தவன் “என்னதான் டி ஆச்சு.. சொல்லு” என்று கோபமாகக் கேட்டான். “நீ அழுததுலையே ஏதோ தப்பா எனக்கு புரியுது கௌசி.. என்னதான் ஆச்சு டி..
சொன்னாதானே தெரியும்” என்றுக் கேட்டான்.

அவன் கண்களில் தெரிந்த பாசத்தையும் வேதனையையும் கண்டவள் அவன் மார்பில் சாய்ந்து (அதாவது கணவனாக
நினைத்து இல்லை.. ஏனோ பழைய விக்காவின் உரிமை அவளுக்கு வந்தது) அழுக ஆரம்பித்தாள்.

அவளது தலையை விக்னேஷ் வருட அவளது அழுகை அவனின் செயலில் இன்னும் அதிகம் ஆகியது.. “விக்கா..
அவன் ஒன்னும் ஜீவா கல்யாணத்துல பாத்துட்டு அப்பாகிட்ட பொண்ணு
கேக்கல.. அவன் என்னோட 22nd பர்த்டே அன்னிக்கு வெளிய போனோம் நியாபகம்
இருக்கா? அங்கேதான் என்னைப் பார்த்து
இருக்கிறான்”

“அங்கேயா?” என்று சற்று அதிர்ந்தான் விக்னேஷ்.

“ஆமாடா.. அவனுக்கு ஸ்கூல்லயே என்னத் தெரியுமாம்” என்றவள்
கௌசியின் பிகேவியர்ஸை அவன் திமிராக எண்ணியது.. மேலும் நான்சியிடம் பேசியதை கேட்டுக் கொண்டு அவனாக ஒன்றை நினைத்தது என எல்லாவற்றையும் சொன்னாள்.

“இதுக்கும் உன்னைக் கல்யாணம் செய்ததிற்கும் என்ன சம்மந்தம்” என்று
குழம்பினான்.

“என் திமிரை அடக்கவாம் டா” என்றவள் அவனிடம் இருந்த விலகி “என்னைப் பாத்தா அப்படித் தெரியுதா விக்கா” என்று 26 வயதுக் குழந்தையாய் அழுதாள்.

அவளை அணைத்தவன் “ஏய் அப்படி எல்லாம் இல்லை .. அப்படியே இருந்தாலும் என்னடி தப்பு.. திமிரா
இருக்கிறதெல்லாம் தப்பில்லை டி” என்று தட்டிக் கொடுத்து விலகினான்.

“இதுக்கா டி இப்படி அழறே” என்று கேட்டான். இல்லை என்பது போலத் தலை
ஆட்டியவள் “அவன் என்னை…” என்றவள் அப்படியே வாயை மூடினாள் சொல்ல முடியாமல்.

“சொல்லுடி… என்ன? என்று பதட்டமான இதயத்தோடு கேட்டவனுக்கு அப்போது
தான் நியாபகம் வந்தது கௌசியை கல்யாணத்திற்கு சம்மதிக்க அவளோடு நடந்த பேச்சு வார்த்தையில் அவள்
அவனிடம் விர்ஜிட்டி பத்திப் பேசியது. ஒரு நிமிடம் உறைந்தவன் கௌசியைப்
பார்க்க அவளது உதடுகள் அழுகையில் துடித்துக் கொண்டு இருந்தது

“அவன்…” என்று ஆரம்பிக்க “வேண்டாம் டி. விடு” என்றான் வேதனைக் குரலில்.

“இல்லாடா… அவன் என்னை… ஹீ ஃபோர்ஸ்ட் மீ டா.. என்ன இஷ்டம் இல்லாமல் என்னை” என்று ஆரம்பித்தவள் தாங்க முடியாமல் விக்னேஷின் மடியில் படித்து கதறினாள்.
“ஒரு பொண்ண எப்படி எல்லாம் கொடுமை படுத்தக் கூடாதோ அதெல்லாம் பண்ணான் டா.. என்னால
அதை வெளில சொல்லக் கூட
முடியாதுடா.. என் உடம்புல இன்னும் சிலதெல்லாம் தழும்பா இருக்குடா” என்று
அவன் வயிற்றைக் கட்டிக் கொண்டு கதறி வாய்விட்டு அழுதவளைக் கண்டு விக்னேஷிற்கு மனம் வலித்தது.

ஏன்டா கேட்டோம் என்று இருந்தது விக்னேஷிற்கு. அவள் சொல்லி அழுவதை சகிக்கவும் முடியவில்லை. குரு
அவளைப் பண்ணியக் கொடுமையை
நினைத்தவனுக்கு தானும் இதில் தவறு செய்துவிட்டோம் என்று தோன்றி அவன்
மனசாட்சி அவனைக் குத்தியது. அவன் யோசிக்குப் போதே கௌசி மேலே
தொடர்ந்தாள்.

“எனக்கு அடுத்த நாள் தான் தெரிஞ்சது அவன் சைக்கோ-ன்னு” என்று கௌசி சொல்ல விக்னேஷிற்கு தலையே
சுற்றியது. ஏதோ சினிமா பார்ப்பது போல இருந்தது அவனிற்கு.

“ஏன்டி.. இவ்வளவு நடந்திருக்கு.. எங்ககிட்ட சொல்லிற்கலாம்ல.. நான்
எல்லாம் உன்ன வந்து கூட்டிட்டு
வந்திருப்போமேடி” என்றவனுக்கு கண்களில் நீர் கோர்த்தது.

“இல்லடா.. அப்பாக்கு ஏற்கனவே சுகர்.. நீயும் கனடால இருந்து வந்திருவே..
அப்பறம் அத்தை மாமா அவ்வளவு சந்தோஷமா என்னை அனுப்பி வச்சாங்க
டா.. எல்லாதுலையும மண் அள்ளி போட நான் விரும்பலை. ஆனா அந்த நாலு நாள் எனக்கு நரகம் விக்கா.. கொஞ்ச நாள் இருந்திருந்தா நானே தானாக செத்துப்
போயிருப்பேன் டா” என்று அவள் பேச அவளைத் தன் மடியில் இருந்து எழுப்பியவன் அவளை அணைத்தான்.

“ப்ளீஸ் கௌசி” என்று கெஞ்சியவன் “இதுக்கு மேல எதுவும் சொல்லாதே டி..” என்று அவளை மேலும் தன்னோடு
இறுக்கினான்.

“கௌசி… இதெல்லாம் தெரியாம உன்ன அடிச்சிட்டே டி.. அப்புறம் நீ ஹர்ட் ஆகற
மாதிரியும் பேசிட்டேன்.. ரொம்ப சாரி டி.. அந்த குருவை மற.. அப்படி இப்படி ன்னு லூசு மாதிரி பேசிட்டேன்.. தயவு செய்து என்ன மன்னிச்சிரு டி..” என்று தன் மன்னிப்பை அவளிடம் யாசித்தான்.

“என்னடி பதிலே பேச மாட்டிறே?” – விக்னேஷ்.

வேற ஒரு பெண்ணாக இருந்திருந்தால் அவன் கேட்ட மன்னிப்பிற்கு அவனை
மன்னித்திருப்பாள்.. ஆனால் இது கௌசிகா அல்லவா.. விக்னேஷ் அவளைப் பார்க்க இடது கன்னத்தில் அறைந்தவள் “இது குருவை கல்யாணம் பண்ண சொல்லி என்ன கேட்டியே அதுக்கு” என்றாள்.

பின் வலது கன்னத்தில் அறைந்தவள் “இது என்னை ஜீவா வீட்டில் அறைந்ததிற்கு” என்றாள் சிறுபிள்ளை போல முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு.

“கௌசி..” என்றான் விக்னேஷ் அவளை அணைத்தபடியே. ஏதோ அவள் அறைந்தது கூட அவனுக்கு சுகமாக இருந்தது.

“சொல்லு” – கௌசி.

“ஐ லவ் யூ டா கௌசிக்” – என்று அவளை அணைத்து அவளின் கழுத்தில் புதைந்தான். பல வருடங்களுக்குப் பிறகு
விக்னேஷிற்கு பழைய குறும்பு எட்டிப் பார்த்தது. கௌசியுமே விக்கா என்று ஆரம்பித்திருந்தாள்.

அவன் சொன்ன வார்த்தையில்
கௌசியின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்தது. அவனிடம் இருந்து விலக எண்ணி கௌசி
விலகப் பார்க்க “ப்ளீஸ்.. டூ மினிட்ஸ்” என்றான்.

தானாக அவளை விக்னேஷ் விட “எதுக்கு இப்போ இந்த ஐ லவ் யூ” என்று கேட்டாள்.

“ஐ லவ் யூ எதுக்கு சொல்லுவாங்க.. எனக்கு உன்னப் புடிச்சிருக்கு” என்று
தோளைக் குலுக்கி பதிலளித்தான்.

“ப்ளீஸ் டா.. நீ ஒன்னு பாவப்பட்டு சொல்ல
வேண்டாம்” என்று கூறினாள் கௌசிகா கூம்பிய முகத்துடன்.

“இல்லை டி.. சத்தியமா ஐ லவ் யூ” என்றான் அவள் தலை மேல் தன் கையை வைத்தபடி. கௌசி குழப்பமாகவும் சந்தேகமாகவும் அவனைப் பார்க்க அவளின் இரு
கன்னத்தைப் பிடித்துத் தாங்கியவன் “சீரியஸ்லி டி.. ஐ லவ் யூ..” என்றவன் அவளின் நெற்றியில் முத்தத்தைத்
தந்தான்.

பிறகு நகர்ந்து உட்கார்ந்தவன் “கௌசி.. இப்போதைக்கு உனக்கு இதுல எல்லாம்
விருப்பம் இல்லைன்னு தெரியும்.. நானும் உன்ன கம்பெல் பண்ணல.. காலம்
தன்னால எல்லத்தையும் மாத்தும்-ன்னு எனக்கு நம்பிக்கை இருக்குடி..” என்றவன் “பழசு எல்லாத்தையும் மறந்திடு கௌசி.. எதையும் நினைக்காம படுத்துத் தூங்கு.. இனி எல்லாம் நன்மைக்கே” என்று
பேசியவன் பெட்டின் ஒரு பக்கம் தலையணையைப் போட கௌசி அப்படியே உட்கார்ந்து அவனைப்
பார்ப்பதைக் கண்டான்..

“ஏன்டி.. இப்படிப் பாக்கறே..” என்று கௌசியிடம் கேட்டான்.

“இல்ல.. மூணு நாளைக்கு முன்னாடி என்கிட்ட கம்பத்துல எப்படி பேசுனே.. இப்போ எப்படி பேசறே” என்று கௌசிக்க
யோசித்தபடியே அவனிடம் கேட்க “எதையும் குழப்பிக்காம தூங்குடி..” என்று அவன் சொல்ல அவள் பெட்டின் ஒரு
பக்கம் வந்து படுத்தாள். (அப்போதே விக்னேஷ் பேசி இருக்கலாம் அவளைக்
காதலித்ததைப் பற்றி). பின் விக்னேஷும் லைட்டை அணைத்து விட்டு வந்து ஒரு
பக்கம் படுக்க அன்றைய அலுப்பில் கௌசிக்கு சீக்கிரமே கண்களைக்
கட்டியது. ஆனால் ஜீவாவின் வீட்டில் தூங்கியதாளோ என்னவோ விக்னேஷிற்குத் தூக்கம் வரவில்லை.

மனதில் கௌசி சொன்னதே அவன் கண்ணில் வந்து வாட்டியது. அவளிடம்
அவன் காட்டாவிட்டாலும் மனதில் சொல்ல முடியாத வேதனை எழுந்தது. குருவின் வீட்டில் அவனால் அவள் பட்ட
நரக வேதனையை நினைக்கவே இவனிற்கு நெஞ்சமெல்லாம்  அதிர்வாக
இருந்தது. அதுவும் கௌசி “இன்னும் சிலது என் உடம்பில் தழும்பாக இருக்கு” என்று சொன்னது அவனை நடுங்கச்
செயத்து. தழும்பு விழும் அளவு என்றால் எந்த அளவிற்கு இவளை அவன் கஷ்டப்படுத்தி இருப்பான். செத்தவனை
மறுபடியும் தோண்டி எடுத்து கூறு போட விக்னேஷின் மனம் கொதித்தது. எவ்வளவு தைரியமாக இருப்பவளை
அவன் மணந்து ஆட்டி.. மிரட்டி தன்னுடன் இருக்க வைத்திருக்கிறான் என்று
நினைத்தவனுக்குத் தன் தலை நரம்புகள் எல்லாம் கோபத்தில் புடைத்தது. காதில் கேட்கக் கூட முடியாத கெட்ட வார்த்தைகளால் குருவைத் திட்டிக் கொண்டு இருந்தான் விக்னேஷ். பின் அவனும் அன்றைய நாளை இன்னொரு
முறை யோசித்துப் பார்த்தபடியே கண்களை மூடினான்.

அடுத்த நாள் காலை விக்னேஷ் எழ கௌசி அருகில் இல்லை.. வெளியே வந்தவனின் முகத்தில் வெயில் நன்றாகவே அடித்தது. அவன் கீழே செல்ல
குடும்பமே கூடி இருந்தது கௌசி உட்பட. (ஹாஸ்பிடலில் இருக்கும் ஜெயா
வரதராஜனைத் தவிர). தன்
அன்னையையும் ஜீவாவையும்
முறைத்தவன் “ஜீ ஒரு நிமிடம் உள்ள வாயேன். ஒரு பேப்பர்ஸ் பாக்கணும்” என்றுவிட்டு அவன் அறைக்குள் நுழைய
ஜீவா அவன் பின்னே சென்றான்.

ஜீவா வந்தவுடன் கதவை சாத்திய விக்னேஷ் அவனின் மீது போர்வையை போட்டு மூடி நேற்று அவன் செய்த அறை
அலங்காரத்திற்கு விக்னேஷ் பூஜை நடத்தினான். “டேய் டேய் வலிக்குது டா விக்கி” என்று கூற அவனை விட்டான்
விக்னேஷ்.

“நேத்து ஏன்டா அப்படி பண்ணே” – விக்னேஷ்.

“டேய் எல்லாம் சித்தி தாண்டா.. நானாக எதுவும பண்ணல புரிஞ்சுக்க..” – ஜீவா என்றான் விகனேஷ் பதம் பார்த்த தன்
முதுகைத் தேய்த்த படி.

“என்கிட்ட முதலே சொல்லி இருக்கலாம்ல ஜீ” – விக்னேஷ் இரண்டு கைகளையும்
இடுப்பில் வைத்தபடி.

“இல்லடா.. சம்பிரதாயம் கரெக்டா நடக்கணும்னு சொன்னாங்க சித்தி..
எனக்கு தெரியும்.. உனக்கு கௌசிக்கும் தெரிஞ்சா இப்ப இருக்க சூழ்நிலைல ஒத்துக்க மாட்டிங்கன்னு.. பட் என்னால
சித்திய சமாளிக்க முடியல டா.. சரி நீ எப்படியும் சமாளிச்சுருவே ன்னு நினைச்சு தான் பண்ணேன்” என்றவன் “கௌசி எதுவும் உன்ன தப்பா நினைக்கல-ல”
என்று வினவினான்.

“அதெல்லாம் இல்ல டா.. ஆனா கொஞ்சம் பயந்துட்டா.. அப்புறம் எப்படியோ சமாதானம் செஞ்சு தூங்க வச்சேன்” என்றான் விக்னேஷ்

“எவ்வளவு வயசாச்சு.. ஆனா இன்னும் நம்ம வியாஹா மாதிரி தான் டா விக்கி அவ” – ஜீவா.

“ஆமா டா” – என்ற விக்னேஷின் உதட்டில் நிறைந்த புன்னகையை ஜீவா கவனிக்கத் தவறவில்லை.

பின் விக்னேஷ் கிளம்பி வெளியே வர அனைவரும் அமர்ந்து உண்டனர். “வரது
தாத்தா எப்போ வருவாங்க?” என்று வியாஹா தன் அன்னை ஊட்டி விட்ட பணியாரத்தை முழுங்கியபடியே கேட்டாள்.

“ஆமாம் விக்கி.. எப்போ டிஸ்சார்ஜ்?” என்று ஜீவா.

“இன்னும் ஒரு ஆறு நாள் தான்.. அப்புறம் வரது தாத்தா வந்திருவார்” என்று
வியாஹாவைப் பார்த்துச் சொன்ன விக்னேஷ் ஜீவாவைப் பார்த்து சிரித்தான்.
“இவன் என்ன ஏதோ வித்தியாசமாத் திரியறான்” என்று ஜீவா யோசிக்க பின்
பேச்சுக்கள் மாறி வேறு திசையில் சென்றது.

“கௌசி கிளம்பு” என்றான் விக்னேஷ்.

“எங்கே?” என்று சாப்பிட்டு முடித்து வந்த கௌசி கையைத் துடைத்த படியே கேட்டாள்.

“அதான்.. நம்ம ஸ்டியோக்கு.. நீதான ஏதாச்சும் வேலைக்கு போகணும்ன்னு சொன்ன..” என்றான்.

“ம்ம் சரி இரு.. ஒரு பத்து நிமிஷம்.. ரெடி ஆகிட்டு வரேன்” என்ற கௌசி உள்ளே
சென்றுவிட்டாள். சுமதியோ மதியம் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போக வேண்டிய சாப்பாட்டை செய்ய சமையல்
அறைக்குள் புகுந்தார்.

கௌசி அறைக்குள் நுழைந்த இரண்டு நிமிடத்தில் விக்னேஷும் அறைக்குள்
நுழைந்தான். (அப்போதே
நுழைந்திருப்பான்.. ஆனால் ஜீவா.. மதி.. எதாவது நினைப்பார்கள் என்றுதான்
இரண்டு நிமிடம் கழித்து சென்றான்.. இப்போ மட்டும் நினைக்க மாட்டாங்களா
டா விக்கி… ). பின் ஜீவா விக்னேஷ் சென்ற திசையைப் பார்த்து விட்டுச் சிரிக்க மதியோ ஜீவாவின் காதைப்
பிடித்துத் திருகி “அங்க என்ன பார்வை.. எதோ நீங்க பண்ணாததை விக்னேஷ்
பண்ணப் போற மாதிரி.. அவங்களே என்ன நிலைமைல இருக்காங்களோ” என்று ஜீவாவின் மணையாள் காதைத் திருக வியாஹாவும் சேர்ந்து கொண்டாள்
அன்னையுடன் காதைத் திருக.

“அய்யோ…. மை டூ பாப்பூஸ்.. விடுங்க” என்று விலகியவன் மதியின் அருகில் குனிந்து “நல்ல நிலைமை தான் மதி..
சர்வீஸ் பண்ணி ஸ்டார்ட் பண்ணனும்னு நினைச்சேன்.. ஆனா தானா விக்னேஷ்
ஸ்டார்ட் பண்ணிருவான் பாரு” என்று சொல்ல.. மகிழ்ச்சியில் அப்படியா ஒரு கண்களை விரித்த மதியின் அழகில்
ஜீவாவின் மதி அவளை ரசித்தது. கணவனின் பார்வையை உணர்ந்தவள்
கணவனின் தலையில் நறுக்கெனக் கொட்டிவிட்டுப் போனாள்.

உள்ளே விக்னேஷோ கௌசியுடன் வாதாடிக் கொண்டு இருந்தான். “நான்
கிளம்பிட்டேன்” என்று நின்றவளைப் பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.

“ஏய் என்னடி இது..?” – விக்னேஷ் எரிச்சலாக.

“ஏன்டா.. இந்த சேரி நல்லா இல்லையா?” என்று தன்னைத் தானே கண்ணாடியில்
பார்த்தபடிக் கேட்டாள்.

“அதில்லை.. என்ன முகத்துல எதுமே இல்ல.. அந்த டின் டின்னா போடுவள அது எங்க?” என்று வினவினான்.

“அது…” என்று கௌசி இழுக்க “நீ உட்கார்” என்றவன்.. அனைத்தையும் எடுத்து வந்து
அவள் முன் வைத்தான். முதலில் லிப்ஸ்டிக்-ஐ எடுத்தவன் அவள் இதழ்
நோக்கிக் குனிந்து லிப்ஸ்டிக்-ஐ பொறுமையாக அப்ளை செய்தான்.

கௌசி அவனையே கண்களைக் கூர்மையாக்கிப் பார்க்க “ஏதோ கேக்கனும்ன்னு தோணுதுல்ல.. கேளு”
என்றான் விக்னேஷ்.

“இல்ல.. இதெல்லாம் பண்ணி விடறையே.. என்ன புருசன் ஆகிட்டன்னு காட்றியா?”என்று கேட்டாள் உதடு வளைந்து
நக்கலுடன்.

லிப்ஸ்டிக்-ஐ அவள் உதட்டில் இருந்து எடுத்து அவளைப் பார்த்தவன் “ஆமா.. ஆனா இன்னொன்னு சேத்திக்கோ.. நான் உன்னோட பழைய விக்காவா.. நீ என்னோட பழைய கௌசிக்-ஆ முழுதாக
மாறுவதற்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றான் பொறுமையாக அவள் கண்களைப் பார்த்து.

அவனது பதிலில் உறைந்து அவனையே சில நொடிகள் பார்த்தவள் “போதும் போதும்.. நீ இவ்வளவு ஸ்பீடா லிப்ஸ்டிக்
போட்டு விட்டா.. நாளைக்கு தான் நம்ம ஸ்டியோ போவோம்.. நான் எல்லாம்
பண்ணிக்கறேன்” என்றாள் கௌசி. பின் அவன் ரூமின் ஓரத்தில் நின்று கொண்டான்.

கௌசி ரெடி ஆகிக் “ஓகே வா” என்றுத் திரும்பிக் கேட்க.. விக்னேஷ் முறைத்தான். “ஹம்ம்.. இன்னும் என்ன அதான் எல்லாம் போட்டாச்சே” என்று கௌசி சொல்ல விக்னேஷ் இடுங்கிய விழிகளுடன் கௌசியைப் பார்த்தான்.

திரும்பிக் கண்ணாடியைப் பார்த்தவள் மறுபடியும் திரும்பி விக்னேஷைப் பார்த்தாள். அவன் பார்வை பதிந்த இடத்தை உணர்ந்தவள் அந்த ட்ரெஸிங் டேபிள் முன்னாள் இருந்த குங்குமச் சிமிலைத் திறந்து குங்குமத்தை எடுத்து
வகிடிட்டாள். ஏனோ கௌசிக்கு மனம் லேசாய் இருப்பதைப் போல இருந்தது. திரும்பி விக்னேஷைப் பார்க்க “போலாம்” என்று புன்னகை சிந்தியவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த கௌசியைப் பார்த்த அனைவரும் தானாய் வாயைப் பிளந்தனர். வியாஹாவோ சித்தியின்
அழகில் மயங்கி அவளிடம் ஓடினாள். “சித்தி.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இன்னிக்கு” என்றவள் தூக்கு என்பது
போல கைகளைத் தூக்கிக் காட்ட கௌசி வியா குட்டியைத் தூக்கினாள்.

“கண்டிப்பா தானா ஸ்டார்ட் ஆகிடும் ஜீவா” என்று மதி தன் கணவன் ஜீவாவின் காதில் கிசுகிசத்தாள். பின் அனைவரும் கிளம்ப அவரவர் வேலையைப் பார்க்கக்
கிளம்பினர்.

Leave a Reply

error: Content is protected !!