காதல் சாமுராய்-2

காதல் சாமுராய்-2

சாமுராய்-2 

 

வ.உ.சி பூங்காவில் மிகவும் பிரபலம் என்பது அங்கு கிடைக்கும் பானி பூரி, சுண்டல்,வேர்கடலை,மாங்காய்,பொறி, மீன் வறுவல் போன்றவைகளே.

 

பூங்காவை அடைவதற்கு சிறிது முன்னரே துவங்கிவிடும் மசாலா மனமானது வயிற்றை சுண்டி இழுப்பதை எவறாலும் நடக்கவே முடியாத ஒரு விஷயம், குழந்தைகளை கவரவென்றே சோப் பபுல்,லைட் டாய்ஸ்,  டிராயிங் புக்ஸ், பார்பி டால்ஸ், பஞ்சுமிட்டாயுடன் அந்த இடமே அத்தனை இதத்தை தரும்.

 

நாலரை முதல் ஐந்து மணிக்கே துவங்கும் பானி பூரி ஸ்டால்சில் கூட்டம் அலைமோதும் திரும்பிய பக்கமெல்லாம் பானிபூரி ஸ்டால்சே தென்ப்படும், அதன் வாசனையும் காற்றில் பறந்து நம்மை அதனுள் வாரிக்கொள்ளும்.

 

அங்கு விற்கும் பானிபூரிக்கு நம் மகிழினி அடிமை, நேராய் அவள் சரியாக நாற்பத்தி எட்டாவது கடையை அடைந்ததும் “ண்ணா எல்லாம் ரெடியா” என்றாள்.

 

ஏன் நாற்பத்தி எட்டு? ஒவ்வொரு முறை அவர்கள் இங்கு வரும்போதும் ஒவ்வொரு கடையில் சாப்பிடுவார்கள், எல்லாத்தையும் டேஸ்ட் பாக்கணுமாம் அதான். 

 

மணி சரியாக நான்கை தொட்டிருக்கவே, அவள் ரெடியா என்று கேட்டிருந்தாள். முதல் போனியாச்சே அந்த கடையின் ஒனரும் “உக்காரும்மா, என்னம்மா வேணும்?” என்றார்.

 

“மீன் இருக்கா?” அவள் வம்பை வளர்க்க.தலையிலே அடித்துக்கொண்ட வானதியோ “ஏதோ அவரு போனபோகுதுன்னு எதாவது நமக்கு கொடுக்குறதயும் கெடுத்துடாதடி எருமை” வானதி அவள் காதை கடிக்க.

 

“நீ இரு பேபிம்மா” மகிழ் 

வானதியிடம் கண்ணடித்து கூற.

 

கடைக்காரர் சிரித்தவராக “இப்போதைக்கு இல்லம்மா, வேணும்னா ஒரு மணி நேரம் வெய்ட் பண்ணு செஞ்சு தரேன்” அவர் புன்னகை மாறாமலே கூற.

 

“வெரி குட் ண்ணே நீங்க, இது தான் ஒரு நல்ல தொழிலாளருக்கு அழகு,அதுவும் நம்ம வளர்ந்து வரும் நேரத்துல இது முடியாதுன்னு சொல்லிடேவே  கூடாது, நம்மால முடியும்னு நினச்சு முயற்சி செஞ்சு பாக்கணும் அது நல்லா வந்தா நல்லது தானே?நீங்க வேற லெவலு” அவள் சிலாகித்து கூற.

 

“அடியேய் நிறுத்து என்ன வேண்மோ அதை மட்டும் சொல்லுடி நீ நல்லா இருப்ப” வானதி கும்பிட.

 

“ரெண்டு பானி பூரி” அவள் ஒருவழியாக ஆர்டர் செய்தாள்.

 

ரௌவுண்டாக இருந்த பானிபூரி யின் நடுவில் கட்டைவிரல் கொண்டு ஓட்டையிட்டு அதனுள் நறுக்கிய வெங்காயத்தையும், கேரெட்டையும் போட்டு, அதன் மேல் பட்டாணி குர்மா ஊற்றி மொத்தம் ஏழு பூரியை அவர் கொடுக்க.( இங்கு பெரும்பான்மையான கடைகளில் இப்படித்தான் பானிபூரி வழங்குவர், அசல் பானியும் பூரியும்  அவ்வளவாக விற்கபடுவதில்லை) அதை பெற்றுக்கொண்டதும் ஆழ்ந்து ஸ்வாசித்தாள் அதன் வாசனையை.

 

பின் ஒவ்வொன்றாய் அவள் தன் வாயிலிட்டு மென்று முழுங்க அவளது சங்கு கழுத்தின் வழி அழகாய் அது உள்ளே இறங்கியது.

 

அவள் பானிபூரி சாப்பிடும் அழகை அவன் ரசித்துக்கொண்டிருக்க, மகிழினிக்கு ஒரு உந்துதல் யாரோ தன்னை கவனிப்பது போன்ற பிரம்மை அவள் சுற்று முற்றி தேட உசாரானவன் கிளம்பிவிட்டான்.

 

காரில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தவனின் மனதில் அவள் மட்டுமே. மனது லேசாகியிருந்தது. அப்பொழுது அவனது பி.ஏ விஜயிடமிருந்து அழைப்புவர, ப்ளூடூத்தை காதில் வைத்து “சொல்லு விஜய்” என்றான் முறுவளுடன்.

 

மீட்டிங்கிலிருந்து அவன் செல்கையில் அவனது குரலில் இல்லாத உற்சாகம் இப்போது வந்துவிட்டதை கவனித்தாவனாக “சார்…” என்று தயங்கினான்.

 

“ஓ.கே சொல்லிடு விஜய்” என்றான் அவனது தயக்கம் புரிந்தவனாக.

 

“சார்…ஆர் யூ ஷ்யூர்,இஸ் இட் பாசிபில்”விஜய் உறுதிபடித்துக்கொள்ள வினவ,

 

“வொய் நாட், இவ்ளோ நாள் கன்ஸ்ட்ரக்ஷன் மட்டும் பண்ணிணோம் இனி சேல்சும் ஆரம்பிப்போம்,இப்போல்லாம் அப்பார்ட்மென்ட்ஸூக்கு நல்ல டிமாண்ட்ஸ் இருக்கு லெட்ஸ் ட்ரை” என்றான் புன்னகையுடன். அவன் அந்த வார்த்தையை உதிர்க்கையில் அவளது முகமே மின்னி மறைந்தது.தன் மனதை படித்தவனுக்கு அந்த தந்தது ஏகாந்தம்.

 

“ஓகே சார்” என்றான் விஜய்யும் புன்னகையுடன்.

 

அவன் அழைப்பை துண்டிக்கவுமே, ப்ளூடூத்தில் அவன் பாடலை கனெக்ட் செய்தான் .அதில் வெடி படத்திலிருந்து,

 விஜய் ஆன்டனி இசையில்,கபிலன் வரிகளில், ஆன்ட்ரியா மற்றும் நரேஷ் ஐயர் இணைந்த பாடிய பாடல் ஒளிக்க

 

காதலிக்க பெண்ணொருத்தி பார்த்து விட்டேனே

என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே

யாரு இந்த யாரு இந்த ஆராவாரப் பூ

என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜாப்பூ

 

மன்மதனின் தாய்மொழி நான்

மீசையில்லா மின்மினி நான்

தித்திடும் நனனா தீக்குச்சி நான் நான்னா

தென்றலுக்கு தங்கச்சி நான்

 

முதல் முறையாக இந்த பாட்டின் அர்த்தத்தை உணர்ந்து ரசித்துக்கேட்டான் எழில்.

 

அவன் மனதில் அவளது இது தான் ஒரு நல்ல தொழிலாலிக்கு அழகு என்ற வசனமே ஓடிக்கொண்டிருந்தது. எதனால்?

 

அவனது வருங்காலத்திற்கு இன்று ஒரு சிறு தீனி போட்டிருக்கிறாள் மகிழினி, ஆம் அவளால் தான் இவனது தொழிலில் அடுத்தகட்டமும் அடையவிருக்கிறான். மொத்தத்தில் அவனது வாழ்வின் மகிழ்வை கொண்டு வரப்போகிறாள் இந்த மகிழினி.

 

***

 

மணி ஐந்தை நெருங்கியது.

 

பார்க்கில் மரபெஞ்சில் அமைதியாய் மகிழினி அமர்ந்திருக்க அவளுக்கு அடுத்து உக்காந்திருந்த வானதியே (‘அப்பாடி இப்போவாச்சும் அமைதியா இருக்காளே’) என்ற ரீதியில் சற்று நேரம் ஓய்வெடுத்தாள்.

 

அப்போது அவளது மொபைல் அலறியது “அப்பாங்” என்ற புகழின் சத்தத்தை தொடர்ந்து தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்… பாடல் ஒளி எழுப்ப அப்போதே கனித்துவிட்டாள் அது தந்தையென்று ” அப்பாங்” என்ற சத்தம் வந்ததுமே அலறி விழித்துவிட்டாள் வானதி.

 

அவளின் அலறலை கண்டவள் “அப்பா தான்டி” என்று இழித்து வைக்க.

 

“கருமம் எனக்குனு வந்திருக்கு பாரு” என்று தலையிலே அடித்துக்கொண்டாள். அவளது நிலைமையை காண மகிழினி இங்கில்லை சற்று தள்ளி போயிருந்தாள் ஏனென்றால் அடுத்த வானதி போனை பிடிங்கி இவளது தந்தையிடம் குற்றப்பத்திரிக்கை வாசித்துவிடுவாளே.

 

“ப்பா…” அவள் உற்சாகமாய் ஆரம்பிக்க.

 

“பாப்பா எங்கடா இருக்க?” அவர் அன்பை தேக்கிவைத்து கேட்க.

 

“வ.உ.சி ல ப்பா”தந்தையிடம் அவள் எதையும் மறைப்பதில்லை.

 

“ஏன்டா லாஸ்ட் ஹவர்ஸ் statistics ஆ?” அவர் மகளை அறிந்து கேட்க.

 

“அதே அதே” என்றாள் அவளும்.

 

“சரி, ரெண்டு பேரும் எப்போ கிளம்புவீங்க?” வானதியின்றி அவள் எங்கும் செல்லமாட்டாள் என்பதை அறிந்து அவர் கேட்க.தந்தையின் அன்பில் நெகிழ்ந்தவள்‌.

 

“இதோப்பா கிளம்பபோறோம்” என்றாள் அவளும்.

 

“சரிடாம்மா, வண்டியை பாத்து ஓடிட்டு வரணும் டிராபிக் இருக்கும் இந்த டைம்க்கு” அவர் அன்பாய் உரைக்க.

 

“ஓகே ப்பா வந்திடுறோம்” என்று போனை வைத்தவள் வானதியிடம் விரைய.

 

அவளோ இவள் வந்ததும் வாயிலே ஒன்று போட்டவள் “என்னடி புதுசா ரிங்க் டோன்லாம் வச்சிருக்க” வானதி கேட்க.

 

“நேத்து சீக்கிரம் நெட்டை முடிச்சுட்டேன் டி அதான் போர் அடிக்குதேன்னு எல்லாதுக்கு ரிங்க் டோன் வச்சேன்” அவள் அசால்ட்டாய் உரைக்க.

 

“அதுசரி நீ மட்டும் ஏன்டி வித்தியாசமா இருக்க?” 

 

” எனக்கு பிடிச்சதை மட்டும்த்தான் நான் செய்வேன் அது சிலருக்கு வித்தியாசமா தெரியும், சிலருக்கு கிறுக்கு தனம்மா தெரியலாம். அதுபத்தி எனக்கு கவலையில்ல நான் என் லைஃப்ப வாழுறேன் தட்ஸ் ஆல்”என்றாள்.

 

“ம்க்கும்” என்று நொடிந்தவள் பின் ஞாபகம் வந்தவளாக “எனக்கு என்னடி போட்டு வச்சிருக்க” என்று ஆரம்பிக்க.

 

“சொல்லமாட்டேனே” என்று அவளுக்கு பலிப்பு காட்டினாள்.

 

“அடியேன் மரியாதையா சொல்லு, ” வானதி மிரட்ட.

 

“முடியாது போடி” இவளும் விடுவதாயில்லை‌

 

“சரிந்தான் போடி இரு நானே கால் பண்றேன், அப்போ தெரியும்,” அவள் அழைப்பு விடுக்க அவளது போனை எடுத்தாள்.

 

அவள் டயல் செய்து காதில் வைக்க அவளுக்கு பிஸி என்று வந்தது அதற்க்குள் மகிழினி போன் அலறியது.

 

“பெத்து எடுத்தாவத்தான் என்னயும் தத்துக்கொடுத்துபுட்டா…” அவளது அன்னை அழைத்துக்கொண்டிருந்தார்‌.

 

அவள் கையிலிருந்த அழைப்பேசியை பிடிங்கி அட்டன்ட் செய்தாள் வானதி.

 

“ம்மா”

 

“எங்கடி இருக்கீங்க ரெண்டு வாணரமும்”அவர் கண்டிக்கும் குரலில்.

 

“ம்மா பார்க் வந்தோம்”

 

“சரி, நேரம் காலத்துல வீடு திரும்புறதில்லையா?” அவர் பொறிய துவங்க.

 

“இருக்கும்மா, அதுக்கு முன்ன நான் சொல்ல வேண்டியத சொல்லிடுறேன் அப்றம் நீங்க திட்டுங்க வாங்கிக்கிறேன்” அவள் சரண்டராக.

 

“சரி சொல்லு” அவர் பெரிய மனது செய்து கேட்க.

 

“உங்களுக்கு இவ என்ன காலர் டோன் வச்சிருக்கா தெரியுமா?” வானதி கேட்க

 

“என்ன வச்சிருக்கா?” அவருக்கு தன் மகளை பற்றி தெரியுமே இருந்தும் கேட்டார்.

 

“பெத்து எடுத்தவத்தான் என்னையும் தத்து கொடுத்துபுட்டா” இவள் பாடிக்காட்ட.

 

“அவ அப்படி வைக்கிலன்னாத்தானே அதிசியம் நீ விடு ” அவரின் குரலில் அத்தனை கோபம் எதுவுமில்லை.

 

அவளிடமிருந்து தன் பேசியை பிடிக்கிய மகிழினி ” போட்டு கொடுத்து முடிச்சுட்டியா? பல்பு பெருசோ” அவள் வானதி தலையில் கொட்ட.

 

அதை தேய்த்துக்கொண்டு நகர்ந்து விட்டாள் பெண். 

 

மகிழினி தன் தாயிடம் பேச தொலைப்பேசியை காதில் வைத்தாள் “சொல்லு மா”

 

“என்னத்தடி சொல்ல? எதுக்கு இப்போ நீ பார்க் போன? காலேஜ் அனுப்ச்சா முடிச்சுட்டு வீட்டுக்கு வர்றது தானே”

 

“ஸ்…நிறுத்து மா, நான் என்ன லவ்வரோட கூத்தடிக்கவா வந்திருக்கேன்” அவளும் பாய‌.

 

“அப்படி போயிருந்த கூட பரவாலையே”

 

“ஏதே? என்னமா தலையில எதுவும் அடிபட்டுருச்சு அதுக்கு நான் வரையில நல்ல டாக்டர்ரா கூடிட்டு வரேன் சரியா.”

 

“நான் பெத்த மாடே, ஏன்டி உசுரவாங்குற உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை, உனக்கு எதாவது பிரச்சனை வந்துட்டா நான் என்னடி பண்ணுவேன்.

 

“அதுல எதுவும் வராதும்மா “

 

“ஆமா இவ பாத்தா, ஏன்டி இப்படி பண்ற எப்படி என்ன உனக்கு இந்த சமூகத்து மேல் அக்கறை, ஒவ்வொரு தடவ நீ பார்க் போகும்போது எனக்கு பயமா இருக்குடி”

 

“ஐய்யோ, நான் பாட்டுக்கு ஜாலியா சுத்திட்டு இருந்தேன் ஒரு ஒரு தடவை உன் பிரண்டு நீலா ஆன்ட்டி கண்ணுல பட்டுட்டேன் அதுல இருந்து என்னால முடியலம்மா” அவள் முடிக்க.

 

“கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடி”

 

“என்னம்மா சேவை அப்படிங்கிறது செய்யனும் அப்படினு மனசு இருக்குற யாரு வேணும்னா செய்யலாம், யாருமே செய்யாட்டி என்னதான் ஆகும்”

 

“இந்த வியாக்கியானம்லாம் பேசாதடி, எனக்கு கோபம் வந்திடும்”

 

“உனக்கு எதுக்கு கோபம் வரணும் நான் நல்லது தானே பண்றேன்”

 

“உன் நல்லதை உன் அப்பாகிட்ட சொல்றேன் அப்ப தெரியும்”

 

“தேவையில்லாத பேச்சு எதுக்கு , இபப்ஓ என்ன பண்ணனும்”

 

“அந்த பயம் இருக்கும், மரியாதையா வீடு வந்து சேரு உனக்கிருக்கு”

 

“எதுனாலும் சாப்பிடுற மாதிரி செஞ்சு வை மா, ரொம்ப பசிக்குது”

 

“ஏன் இதுவரை கொட்டிக்கிட்டது பத்தலையாக்கும், இந்நேரம் குறைஞச்து நாலுசெட்டாவது சாப்டுருப்பியே”

 

“எப்படி மா கூட இருந்த மாதிரியே சொல்ற “

 

” எனக்கு தேரியாதா டி”

 

“அடேங்கப்பா ரொம்பத்தான்”

 

“நீ வீட்டுக்கு வா உன் மேல நான் கோபமா இருக்கேன்”

 

“சரி”

 

“வண்டியை பாத்து ஓடிட்டு வாங்க டி” அவர் அக்கறை காட்டவும் மறக்கவில்லை.

 

“ஓகே மம்மி”

 

“அப்பா இது ஒன்னுக்குத்தான்டி நான் சொன்னதும் ஓகே சொல்லியிருக்க” அவர் குறைப்பட.

 

“நீயும் இதுமட்டும் சொல்லு நான் ஓகே சொல்றேன்‌”

 

“உன்னலாம் நீ வீட்டுக்கு வா” எனறு அவர் கட் செய்துவிடவே.

 

வானதியிடம் விரைந்தவள் ” வாடி கிளம்புவோம்” என்றாள்.

 

“அப்பாடி தெய்வமே வாங்க போவோம்”

 

” எல்லாரும் ரொம்பத்தான் பண்றீங்க” 

 

” உன்ன விடவா? வாடி போகலாம் லேட் ஆச்சு” 

 

“ம்…ம்…” அவள் சலித்துக்கொணடே செனறாள்.

மகிழினியின் தாய் கண்டிப்பானவர் , தந்தையிடம் அதிகமாய் செல்லம் கொஞ்சுவதால் அவரே தன்னை கண்டிப்பானவராக மாற்றிக்கொண்டார்.

மகிழினி தாய் தந்தையிற்கு ஒரே மகள் அவளது சிறு வயது முதலே அவளுக்கு நல்ல தோழியாய் கிடைத்தவள் வானதி இருவரும் ஒருவரின்றி ஒருவர் எங்கேயும் செல்வதில்லை.

 

வானதிக்கு தந்தை கிடையாது தாய் மட்டுமே, இருவரின் வீடும் பக்கம் பக்கம் உள்ளதால் இருவரின் நட்பிலும் விரிசல் என்பது இதுவரை வரவேயில்லை.

 

ஒன்றாகவே பள்ளி படிப்பை முடித்து, கல்லூரி படிப்பையும் தொடர்கின்றனர்.

 

இருவரும் பெற்றோருக்கு ஒற்றை பெண்கள் என்பதால் இருவரின் நட்பின் ஆழமும் பெற்றோர்களுக்கு நிம்மதியை வழங்கியது.

 

வானதியின் அம்மாவும், மகிழினியின் அம்மாவும் சந்தித்துக் கொண்டால் இருவரையும் ஒரே வீட்டில் கட்டிக்கொடுக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பர்‌.

 

ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டாள் விதி எதுக்கு? இறைவன் எதுக்கு?

 

இதுவரை பிரிவையே அறியதோர் பிரிவை சந்திக்க நேரும்போது அதை ஏற்பரா?

 

_தொடரும்_3

error: Content is protected !!