சில்லென்ற தீப்பொறி – 8

சில்லென்ற தீப்பொறி – 8

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து

மனைஞ்சான் ஆகல் இனிது.

விளக்கம்.

குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.

சில்லென்ற தீப்பொறி – 8

விடிந்தும் விடியாத நான்கு மணியளவில் வீட்டின் கதவு தட்டப்பட, பொறுப்பானவனாய் சென்று கதவை திறந்தான் அமிர்தசாகர். முன்தினம் மாலையில் இவன் பிரகனபடுத்திய சட்ட சாசனத்தில் முழி பிதுங்கி அடித்து பிடித்துக் கொண்டு அண்ணன் மகனை பார்க்க வந்திருந்தார் நடேசன்.

ரெங்கேஸ்வரனிடம் எவ்வாறு எடுத்துச் சொல்வதென்று தெரியாமல், மகனின் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடவும் மனம் வராமல், நடந்ததை தெளிவாக கூறி புரிய வைப்பதற்காகவே அமிரை தேடி வந்திறங்கினார் சித்தப்பா நடேசன்.  

‘எதிர்பாத்த வருகைதான்’ என்கிற தோரணையில் “ரூம்ல ரெஸ்ட் எடுங்க சித்தப்பா… காலையில பேசிக்கலாம்.” என்றபடி அடுத்த அறையை தயார் செய்து கொடுத்து விட்டு, தனதறைக்குள் வந்த அமிருக்கு, லக்கியின் உறங்கிய நிலை கிளர்ச்சியை கொடுத்தது.

தன்னை மறந்து துயில்பவளின் மலர்முகம் அவனை வா வாவென வஞ்சனையில்லாமல் அழைக்க, அதன் பின்பு சண்டையாவது, வீம்பாவது? 

முன்தினம் கணவனது பேச்சில் அரண்டு விழித்த லக்கி, பலமுறை தந்தை மற்றும் தனது நிலையை தன்மையாக எடுத்துக் கூறியும் தன் பிடிவாதத்தில் நிலையாக நின்றவனை மடைமாற்றும் வழியறியாது உறங்கிப் போயிருந்தாள்.

இவனுமே அனைவரின் மேலுள்ள கோபத்தில் இவளை கண்டுகொள்ளாமல் உறங்கி விட்டான். இப்பொழுது அந்த கோபமும் சற்றே வற்றிய நிலையில் மனைவியின் மதிமுகம் அவனுக்குள் உல்லாச அலையை உற்பத்தி செய்தது.

தன்பக்கம் வலுக்கட்டாயமாய் திருப்பிய மனைவியின் தேகத்தில் அவன் கரங்கள் அலைப்புருதலாய் வருடிச் செல்ல, அவள் விரல்கள் அவனது உதட்டுக்குள் மென்மையாய் கடிபடத் தொடங்கியது.

“தூக்கம் வருது, விடுங்க!” கண்களை மூடிக்கொண்டு அவளும் விடுபட முயற்சிக்க, அது முடியவில்லை.

அவளது இதயத்தில் தனது உரிமையை இவன் அழுத்திப் பதிக்க, பெண்ணின் தூக்கத்தோடு தேகமும் வேட்டையாடப்பட்டது.

இந்த பெண்ணுக்கு பூவுடல் தேகமோ என எண்ணி மீண்டும் தீண்டி பரிசோதிக்க, “இன்னும் என்ன? ஆளை விடுடா!” கடுப்பாக கூறி உறங்க முயற்சித்தாள் லக்கி,

“இன்னைக்கு நல்ல பொண்ணா சீக்கிரமா எந்திரிச்சு டீ மட்டும் வை மின்னி, டிஃபன் ஆர்டர் பண்ணிக்கலாம்.” கூறியவனை, ‘அடுத்த தொந்திரவா இது?’ பார்வையால் மனைவி கேட்க,

“சித்தப்பா வந்திருக்காரு… அதான், உன்னை கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க சொன்னேன்.” கண்சிமிட்டலுடன் விளக்கியவனின் முதுகில் மனைவியின் பரிசு பதிந்தது.

“சொல்றதுக்கு என்ன சாச்சு? வாங்கன்னு ஒரு வார்த்தை கூட கூப்பிடல நான்.” லக்கி பெரிதாய் கவலை கொள்ள,

“நோ பார்மாலிட்டீஸ்டா! அவர் புதுசா உனக்கு?”

“அப்படியில்லைங்க… நம்ம வீட்டுக்கு வந்தவரை எந்த நேரமா இருந்தாலும் இன்வைட் பண்றதுல என்ன கஷ்டம் வந்திடப் போகுது?” 

“ஒஹ்… அப்படி சொல்ல வர்றியா? டிஸ்டர்ப் பண்ண வேணாமேன்னு உன்னை எழுப்பல…” தன் பேச்சு தனக்கே அபத்தமாக பட, வந்த சிரிப்பினை அடக்கிக் கொண்டான் அமிர்.

“அடப்பாவி! இப்ப நீ பண்ணின வேலைக்கு என்ன அர்த்தமாம்? உனக்கு கோபம்னா முகத்தை தூக்கி வச்சுக்கற… உனக்கு தேவைன்னா மட்டும் வந்து உரசிப் பார்ப்பியா?”

தன் விருப்பமின்றி நடந்த செயலையும், தூக்கம் பறிபோனதையும் அவளால் அத்தனை எளிதாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் முன்தின பேச்சுக்கள் எல்லாம் அப்படியே இருக்க அந்த கொதிப்பு மாறாமல் சூடாக கேள்வியை கேட்க, இவனுக்குள்ளும் சடுதியில் கோபம் மையம் கொண்டது.

“மரியாதை காத்துல பறக்குது மின்னி… வாய்க்கு ஜிப் போட்டு விட்ருவேன் பார்த்துக்கோ!” 

“இல்லன்னா மட்டும் என் பேச்சை கேக்கிறவரா நீங்க… இல்ல என்னை பேசத்தான் விடுறீங்களா? இப்ப மட்டும் உங்க தேவைக்கு என்னை கட்டாயபடுத்தினது என்ன நியாயம்?” அவசரகோலத்தில் இவள் வாயை விட, அதுவே அன்றைய சண்டைக்கு ஆரம்ப புள்ளியாகிப் போனது. 

“கட்டாயப்படுத்தினேனா…  நீ என்ன அர்த்தத்துல சொல்ற? உன்னை யாரும் கடத்திட்டு வந்து குடும்பம் நடத்தல. நீயும் விருப்பபட்டு சம்மதம் சொன்ன பிறகுதான் நம்ம கல்யாணமே நடந்தது.” என்றவன் கட்டிலைக் காட்டி,

“நம்ம ரிலேஷனோட நெக்ஸ்ட் மூவ் கூட, நீ ஓகே சொன்ன பிறகுதான்னு மறந்துட்டியா? நல்ல யோசி… ஹோப் யூ கேன் அண்டர்ஸ்டான்ட்.” வெறுப்பாக கூறியவன் மறுபுறம் திரும்பி உறங்க ஆரம்பிக்க, மனதளவில் காயப்பட்டவளாய் அவனை உற்றுப் பார்த்தாள் லக்கி.

“உங்க முடிவு எல்லாத்துக்கும் நான் சரின்னு தலையாட்டியே ஆகணுமா? எனக்கான ஸ்பேஸ், விருப்பம் எல்லாத்தையும் நான் மறந்திடணுமா?” அடிபட்ட குரலில் லக்கி கேட்க, திகைத்து பார்த்தான்

“ஐ டிட் நாட் மீன் டூ ஹர்ட் யூ… நேத்து நடந்ததை பத்தி என்கிட்டே பேசவேண்டாம்னு சொல்றேன். பிடிவாதம் பிடிக்காதே மின்னி!”

“நான் உங்களுக்கு மனைவியா நடந்துக்கணுமே தவிர அடிமையா இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் பிடிவாதம் பிடிக்கத் தெரியும்” அவளும் கடுமையாக சொல்ல,

“இனி உன்கிட்ட பேசி பிரயோஜனமில்ல… என்னோட முடிவுலயும் மாற்றமில்ல…” உறுதியாக கூறி போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான்.

“ஹூம், எல்லாம் எனக்கு தேவைதான்.” சீற்றத்தோடு முறைத்தவள், ‘கிராதகா’ என்ற செல்லப்பெயரை கணவனுக்கு சூட்டிக் கொண்டே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

உனக்குள் இருக்கும் பிடிவாதம் எனக்கும் இருக்கும் என்கிற ஈகோ போர் தொடங்க, முதல் கசப்பு அங்கே உருவானது. அந்த கசப்போடு காலைவேளை ஆரம்பமாக, தனக்கு தெரிந்த வரையில் வீட்டை சுத்தபடுத்தி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் லக்கி.

உள்ளுக்குள் இருக்கும் பொருமலை அடக்குவது அத்தனை கடினமாக இருந்தது அவளுக்கு. கணவனை பார்த்த நேரத்தில் இருந்து இவளுக்குள் ஆர்பரிக்கும் அத்தனை உணர்வுகளும் முற்றிலும் புதிய அனுபவமாகவே இருக்க, மூச்சுமூட்டி போய் விடுகிறாள் லக்கி.

நீலு ஆன்ட்டியிடம் முன்தினமே தோசைக்கான மாவை வாங்கி ஃபிரிட்ஜூக்குள் வைத்திருந்தாள். இரண்டு நாட்களாக இதற்கான செயல்முறையை கண்டும் கேட்டும் அறிந்து கொண்டவளுக்கு, தன்போக்கில் சமைத்து பார்க்கும் ஆவல் எட்டிப் பார்த்திருந்தது. இன்று அதை நடைமுறைபடுத்த எண்ணி செயலிலும் இறங்கி விட்டாள் லக்கி.

தோசைமாவினை வெளியே எடுத்து வைத்தவள், சட்னிக்காக தேங்காயை உடைக்க மேலும் கீழுமாக விளங்காது பார்த்து கொண்டிருந்தாள். மிக எளிய சமையல்தான். அதுவே இவளுக்கு மலைப்பை கொடுத்தது.

கோவில் பிரசாத தேங்காயை கூட துருவி வெல்லம் போட்டு தருவார் கமலாம்மா. அப்படி சுகமாய் உண்டவளுக்கு தேங்காய் உடைப்பதில் நூறு சந்தேகங்களும் ஆயிரம் விளக்கங்களும் தேவைப்பட்டன.

‘இவ்ளோ ஹார்டா இருக்கு, எப்படி உடைக்கிறது?’

‘தரையில உடைச்சா டையில்ஸ் உடையுமே?’

‘கையில வச்சு உடைச்சா எலும்பு நொறுங்கி போகுமா? கை பெண்டாகுமா?’

‘உடைச்ச பிறகு எப்படி தேங்காயை எடுக்குறது? இங்கே தேங்கா துருவி இருக்கா?’ பல சிந்தனைகளில் உழன்ற நேரத்தில், அவளது காட்டன் சல்வார் தழுவிய இடையில் நச்சென பதிந்தது கணவனது கரம்.

‘அறையில் நடந்த தர்க்கத்தை மறந்துவிட்டு சமாதானம் செய்ய வந்திருக்கிறானா அல்லது ரெமோ அவதாரத்தில்தான் இன்னமும் இருக்கின்றானா’ என்ற வேகமான சிந்தனையை கூட செய்யவிடாமல் முன்னேறிக் கொண்டிருந்தான் அமிர்.

“சேலைன்னு ஒன்னு இருக்கே, கட்ட மாட்டியா மின்னி?” அவள் இடையினில் அழுத்தமாய் கரம்பதித்தபடி குறும்போடு அவன் கேட்க,

“மாட்டேன், தெரியாதுன்னு சொன்னா உடனே எங்கப்பா வீட்டுக்கு என்னை பேக் பண்ணிடுவீங்களா?” சுருக்கென்று கேட்டாள்.

உள்ளுக்குள் இருக்கும் ஆயிரம் குழப்பத்தில் கணவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் இவளுக்கு புரியவே இல்லை.

“எதுக்கு, எதை லிங்க் பண்ற நீ? பாரு… எவ்வளவு அழுத்தமா பிடிச்சாலும் உனக்கும் எனக்கும் ஏதாவது பீல் வருதா?” என்றவன் வேண்டுமென்றே அவளது மெல்லிய இடையை மேடையாக்கி விரல் வித்தை காண்பிக்க, உண்மைக்குமே உணர்வுகள் வெடித்து சிதறி தடுமாறிப் போனாள்.

தடுமாறியவளை மார்பில் தாங்கிக் கொண்டே, “ஸ்வீட் மார்னிங் பேபி… ஆக்சுவலி ரோமாண்டிக் மார்னிங் சொல்ல ஆசை எனக்கு. பட்…” உதட்டை பிதுக்கியவனாய் நடேசன் உறங்கும் அறையை கண்களால் சுட்டிக் காட்ட,

“கொழுப்புதான் உங்களுக்கு…” கணவனின் குறும்பு பேச்சில் கோபத்தை தூர எரிந்து விட்டு, “அங்கிளுக்கும் சேர்த்தே டீ வைக்கவா?” வீட்டு மனுஷியாய் காரியத்தில் இறங்கப் பார்த்தாள்.

“இன்னைக்கு காஃபி ட்ரை பண்ணுவோம்டா!”

“எனக்கு பழக்கமில்ல… அங்கிளும் இருக்கறப்போ விஷப்பரிட்சை வேணாமே!” கெஞ்சலாக மனைவி கூறிய பாவனையை வெகுவாக ரசித்தான் அமிர்.

“சில் மின்னி! அவரோட சேஃப்டிக்கு நான் கியாரண்டி, யாமிருக்க பயமேன்!” என்றவன் அவளை பதுமையாக தூக்கி சமையல் மேடை மீது அமரவைக்க, தன்னை உரசி நெருக்கமாய் நின்றவனை மலர்ச்சியுடன் பார்த்தாள்.

அவனுள்ளில் இருந்து வந்த சோப்பின் வாடை அவள் நாசியை நிறைக்க அதை உள்ளிழுத்தபடி,

“இவ்வளவு சீக்கிரம் குளிச்சுட்டீங்களா?” கேட்டபடி மெல்ல தன் விரல்களை அவன் சிகையில் நுழைத்தாள். மனைவியின் செய்கையை கண்களை மூடி அனுபவித்துக் கொண்டே,

“கொஞ்சம் வெளியே போற வேலை இருக்குடா!” உரைத்தவனின் உதடுகள் அதற்கு மேல் அடங்கமாட்டேன் என அடம்பிடித்து மனைவியின் முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தியது.

“காஃபிக்கு லேட் ஆகுது சாச்சு!” கடமையை ஞாபகபடுத்தியவாறு வலுக்கட்டாயமாக கணவனை தள்ளி நிறுத்த,

“உன்னை பார்த்தாலே மனுசனோட மூட் மாறுது!” ரகசியமாக கூறியவன், அவள் இடையினில் தனது நர்த்தனத்தை தொடர, இவளுக்குதான் அவஸ்தையாகிப் போனது.  

மேடையில் இருந்து இறங்கவும் முடியாமல், அவனை விலக்கவும் முடியாமல் மனைவி தவிப்பதை ரசித்து சிரித்தான் அமிர்.

“அடக்கமா சிரிங்க… அங்கிள் வந்துடப் போறார்!” அதே ரகசியகுரலில் கூறியபடி இறங்கப் பார்த்தவளை அணைபோட்டு தடுத்தான்.

“உஷ்… நான் ஃபில்டர் போட்டு முடிக்கிற வரைக்கும் பார்த்துட்டே இரு. நாளைக்கு நீதான் போடணும். கான்சன்ட்ரேட்… கான்சன்ட்ரேட்!” பொய்யாய் முறுக்கி கொண்டு சொல்ல, வெடித்து சிரித்தாள் லக்கி.

“இப்படி என்னை உக்கார வச்சு, நீங்க பண்ற சேட்டை இருக்கே… சத்தியமா முடியல சாச்சு! நான் யூ டியூப்ல பார்த்துக்கறேன், லீவ் மீ ப்ளீஸ்!”

“நோ வே!” உறுதியாக கூறிவிட்டு காரியத்தில் இறங்கி விட, கணவனின் அருகாமை தந்த கிளர்ச்சியில் இவள் தேங்காய் உடைப்பதை மறந்து போனாள்.

“ஃபில்டர் ரெடி… பாலை காய்ச்சுவோமா?” அமிர் நகர, சற்றே ஆசுவாசமானாள் லக்கி.

“நீங்க எத்தனை மணிக்கு வெளியே போகணும்? என்னை இப்படியே உக்கார வச்சா மார்னிங் டிபன் லேட் ஆகிடும்.” தனது முதல்நாள் சமையலை கணவன் எடுத்துக் கொள்ள வேண்டுமே என்ற ஆவலில் லக்கி கேட்க, குதர்க்கமாய் பதில் அளித்தான்.

“கிச்சன்ல வந்து டிஸ்டர்ப் பண்ணாதே, வேலை பார்க்க விடுன்னு சொல்றியா? பெட்ரூம் வேலைய அங்கே மட்டுமே செய்யணும்னு அட்வைஸ் பண்றியா டார்லிங்?” கண்சிமிட்டி கேட்டவன் ஏற்றிய அதே ஸ்டைலில் மேடையிலிருந்து அவளை இறக்கி விட, அவளோடு பில்டரும் சேர்ந்து இழுபட்டு கீழே கொட்டியது.

அவளை தூக்கியபடி அமிர் தள்ளி வந்திருக்க, பில்டர் கீழே விழ்ந்த  சத்தத்தில் அதிர்ந்து, கொட்டிய இடத்திலேயே சட்டென்று லக்கியும் காலை வைத்து விட, சூடான பில்டர் அவளின் பாதத்தை பதம் பார்த்தது.

கீழே கால் வைத்தவள் சூடு தாங்காமல் வேகமாய் கணவனின் மேல் தாவினாள்.

“என்னடி அவசரம் உனக்கு? கொஞ்சம் நிதானிக்க மாட்டியா?” அவளை தாங்கிக் கொண்டவாறே கடிந்து கொள்ள, அந்த சத்தத்தில் நடேசனும் வெளியே வந்தார்.

நடந்ததை வேகமாக கூறிய அமிர், அவரின் பதிலை எதிர்பாராமல் தங்களின் அறைக்குள் மனைவியை தூக்கிச் செல்ல, பெரியவர் அன்னியமாக அங்கேயே நின்று விட்டார்.

மனைவிக்காக இத்தனை துடிப்பவன் அவளின் ஆசைக்காக மாமனார் வீட்டிற்கு வந்து வாழாமல் போய் விடுவானா என்ற சந்தேகம் எழுந்த வேகத்தில் அமிழ்ந்தும் போனது.

நிதர்சனத்தை கூறி வலியுறுத்தினால் போதும் என மனதோடு எண்ணிக் கொண்டவர் வந்த காரியம் சுலபமாய் முடிந்து விடுமென்றே நினைத்தார்.

மனைவியின் பாதத்திற்கு ஐஸ் கியூப் வைத்து, மருந்தினை தடவிவிட்டு அவளை அறையிலேயே தங்க வைத்த அமிர், வீட்டு வேலையை தனதாக்கிக் கொண்டான்.

காலை காஃபியும் டிபனும் ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட, உண்டு முடித்ததும் லக்கியை கட்டாயபடுத்தியே உறங்க வைத்தான் அமிர்.

“ரெஸ்ட் எடுத்துக்கோ மின்னி! ஈவ்னிங் டாக்டர்கிட்ட போய் டிடி போட்டுக்கலாம்.”

“இப்ப சரியாகிடுச்சு சாச்சு… ஊசியெல்லாம் வேணாம்.” கலக்கத்துடன் லக்கி கூற,

“பதில் பேசாம, நான் சொல்றதுக்கு சரின்னு தலையாட்ட பழகிக்கோ மின்னி!” அன்பான மிரட்டலில் மனைவியின் வாயடைத்தவன், “சொல்லுங்க சித்தப்பா!” என நடேசனிடம் பேச்சினை தொடர்ந்தான்.

“என்ன சொல்லச் சொல்ற? எல்லாம் நேத்து பேசின சங்கதிதான். வீம்பு பிடிக்காதே அமிர். அவர் காலம் முழுக்க பொண்ணுகூட இருக்கணும்னு ஆசைபடுறாரு” ரெங்கேஸ்வரனின் விருப்பத்தை நடேசன் கூற,

“அப்போ, அவரை இங்கே வந்து நம்மோட இருக்க சொல்லுங்க சித்தப்பா!” ஒற்றை பதிலில் முடித்தான் அமிர்.

“அதெப்படி முடியும் அமிர்? அவர் தொழிலை பார்க்க வேணாமா? அவரோடது எங்கேனாலும் உக்காந்து செய்ற தொழில் இல்லப்பா. உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டையாகிப் போகும் அமிர். அது எந்த பெரிய தொழிலா இருந்தாலும் சரி! எப்படியும் எதிர்காலத்துல நீதானே பொறுப்பெடுத்து பார்த்துக்கணும். அதை இப்ப இருந்தே ஆரம்பிக்கலாமே?” நடேசன் தன்மையாக எடுத்துக் கூற அமிருக்கு பொறுமை உடைந்து போனது.

“யாரும் யோசனை சொல்லி கேட்கற நிலையில நான் இல்ல. அவர் வயசுக்கு அவரோட தொழில் முக்கியமா இருந்தா, என் வயசுக்கு என்னோட கேரியர் எனக்கு முக்கியம்.

அவர் பியூச்சர்ல குடுக்கப்போற சொத்து சுகத்துக்காக என்னோட மொத்த வாழ்க்கையை அடகு வைக்க நான் விரும்பல. என் குடும்பம், என் மனைவி, என்னை சார்ந்து இருந்தாலே போதும். இதை தவிர வேற பேசுங்க சித்தப்பா, ஓயாம இதையே பேசி கடுப்பேத்தாதீங்க!” பல்லிடுக்கில் வார்த்தைகளை கட்டிவைத்தே கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் அமிர்.

“விதண்டாவாதம் பேசாதே அமிர். சொல்றதை புரிஞ்சுக்கோ! மாசத்துல நீ இருபது நாளுக்கு மேல ஊருக்கு போயிடுவ… அந்த நேரத்துல லக்கி மட்டும் தனியா இங்கே இருப்பாளா? அவளுக்கு அப்படி இருந்தும் பழக்கமில்ல…” நடப்பினை நடேசன் எடுத்துக் கூற, அதற்கும் இடையிட்டான் அமிர்.

“பழகிக்கட்டும் சித்தப்பா. நான் எதையும் மறைச்சு கல்யாணம் பண்ணிக்கல. எல்லாரும் வாழுற சாதாரண வாழ்க்கையே எனக்கு போதும். ஆயிரத்துல ஒரு அதிசயமா  வீட்டோட மாப்பிள்ளை வாழ்க்கை எனக்கு வேண்டாம்.”

எவ்வளவு தான் வலியுருத்தி கூறினாலும் அமிர், தன் முடிவினில் நிலையாய் நிற்க, நடேசன் பேசிப்பேசியே சோர்ந்து போனார்.

அறைக்குள் இருந்தபடியே இவர்களின் பேச்சினை கேட்டுக் கொண்டிருந்த லக்கியும் மெதுவாய் நடந்து வந்து கணவனின் அருகில் அமர, “அறிவிருக்கா உனக்கு… கூப்பிட்டா நான் வர மாட்டேனா?” அமிர் கடிந்து கொள்ள,

“ம்க்கும்… இந்த கவனிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ஆனா பொண்டாட்டி ஆசைபட்டது மட்டும் செய்ய மாட்டீங்க அப்படிதானே?” தன் பங்கிற்கு அவளும் ஆரம்பிக்க, அமிருக்கு தலைவேதனையாகிப் போனது. 

“நீயும் ஆரம்பிக்காதே மின்னி! படிச்ச பொண்ணுதானே நீ… உனக்கே இந்த யோசனை அபத்தமா தெரியலையா?” என்றதும்,

“எங்கப்பாவுக்கு என்னை விட்ட யாரும் இல்ல சாகர்!” ஆதங்கமாய் தன் நிலையை லக்கி விளக்க,

“எனக்கும் உன்னை விட்டா யாருமில்லடி” பதிலுக்கு இவனுமே தவிப்பாய் கூறினான்.

“அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு? பொண்டாட்டி உங்களுக்கு அடங்கியே இருக்கணும்ங்கிற மேல் சாவனிசத்தை(male chauvinism) எப்போதான் விடப்போறீங்க சாகர்? உங்க ஒருத்தரோட மனத்திருப்திக்காக எல்லாரையும் கஷ்டபடுத்தப் போறீங்களா?” காட்டமும் இயலாமையும் கலந்து கேட்டவளின் குரலும் கரகரக்கத் தொடங்கியது.

அதை பார்த்த நடேசனுக்கும் மனம் தாளவில்லை. ‘என்ன ஜென்மமோ இவன்’ என வெறுப்பாய் அமிரை பார்த்தவர், அவனின் வழிக்கு சென்றே அவனை சரிகட்ட நினைத்தார்.

“நீ சொல்றபடியே வீட்டோட மாப்பிள்ளையா இருக்க வேணாம் அமிர். ஆனா, நீ ஊருல இல்லாத நாட்கள்ல லக்கி அவ அப்பா கூட தங்கட்டும்.” புதிய யோசனயை கூற

“அது என்ன தேவைக்கு? அவளுக்கு வேண்டிய வசதியை செஞ்சு கொடுக்க நான் ரெடியா இருக்கேன். இன்னும் அவளுக்கு என்ன வேணுமோ அதையும் வாங்கிப் போட எனக்கு தெரியும். இங்கேயே இருந்து இவளுக்கு என்ன தேவையோ அதை பார்த்துக்க கூட இவளால முடியாதா?” சிடுசிடுவென்று எரிந்து விழுந்தான் அமிர்.

“பொண்ணுங்களுக்கு நினைச்சதும் இப்படியெல்லாம் தனியா இருக்க முடியாது அமிர். கொஞ்ச நாளைக்கு நீ ஊருக்கு போற சமயத்துல அவ கோயம்புத்தூர்ல, அவ அப்பா கூட இருக்கட்டும்.” நடேசன் கூறியதற்கு அமிரின் பார்வை லக்கியை நோக்க, அவளுமே ஆமாம் என்பதை போல தலையசைத்தாள்.

“உங்கப்பன் பண்ணின குளறுபடிக்கு, ஏன்டி என் தலையில எல்லாரும் சேர்ந்து மாவாட்டுறீங்க? கல்யாணத்துக்கு முன்னாடி என்னை பார்க்க வந்தியே, அப்பவாவது இந்த விஷயத்தை சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதானே? இந்த கல்யாணமே வேணாம்னு உன்னை தலை முழுகி இருப்பேன்.” தணலாய் வார்த்தைகளை கொட்ட, துடித்துப் போனாள் லக்கி.

“ரொம்ப தப்பு அமிர். இத்தனை பேச்சு அவகிட்ட பேச வேண்டிய அவசியமே இல்ல. பெரியவங்க நல்லதுன்னு பண்ணின காரியத்துக்கு நீ, அவளை பழி வாங்காதே! கொஞ்சநாள் பொறுமையா இரு. அதுக்குள்ள அவளுக்கும் ஒரு பக்குவம் வந்துடும்.

பொண்ணோட வாழ்க்கையை பார்க்கும் போது எந்த அப்பாவும் தன்னோட நிலையில இருந்து இறங்கி வரத்தான் செய்வாங்க. கொஞ்சநாள் நீ ஊருல இல்லாத நேரத்துல, லக்கி, அவ அப்பா கூட இருக்கட்டும். இதுக்கு மட்டும் ஒத்துக்கோ!” மிக நிதானமாக வார்த்தை தடம் புரளாமல், வெகுண்டு பேசாமல் நிலைமையை நடேசன் விளக்க, அமிரின் முகம் கல்லாக சமைந்து இருந்தது.

“கொஞ்சநாள்… கொஞ்சநாள்னா அது எப்போ வரைக்கும்?” தன்னிலையிலிருந்து இறங்கி வந்து கேட்டான் அமிர்.  

“எப்போ வரைக்கும்ன்னா…” எனத் தடுமாறியவர், “ஒரு குழந்தை பிறக்கிற வரைக்குமாவது அவ தனியா இருக்க வேணாமே!” தானாக மனதிற்குள் எழுந்த யோசனையை கூறினார் நடேசன்.

“தன்னை பார்த்துக்கவே தெரியாதவ, தனியா இருக்க தைரியம் இல்லாதவளுக்கு, குழந்தை பிறந்தப்புறம் மட்டும் அந்த குழந்தய கவனிச்சுட்டு, தனியா இருந்துக்க முடியுமா? என்னதான் பக்குவம் வந்தாலும் அவளுக்கு தைரியம் வந்திடுமான்னு யோசிச்சு பாருங்க… அந்த நேரம் இவ மைண்ட் ஃப்ரீயா இருக்கணும்னு நினைச்சுதான் இப்ப இருந்தே இவளை தனியா இருந்து பழகிக்க சொல்றேன். அது உங்க யாருக்கும் புரியலையா?”

எந்த பக்கம் போனாலும் கேட்(gate) போடுவதாய் அமிரின் வாதம் இருக்க, மனதிற்குள் நொந்து நூடுல்ஸ் ஆனவர்களாய் லக்கியும் நடேசனும் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டனர்.

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற

வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே

மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை

மதமுழக்கங் கேட்டல் இனிது.

விளக்கம்

பிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!