ஜிகிரி தோஸ்து

ஜிகிரி தோஸ்து
ஜிகிரி தோஸ்து
சென்னையின் பிரபலமான பள்ளி, வசதி வாய்ந்தவர்களின் பிள்ளைகள் இங்கு பயின்றாலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளே அதிகம்.
“மச்சி தியா இங்க வாடி” என்று அழைத்தான் விக்ரம். அவனை சற்றி நான்கு மாணவர்கள். அனைவரும் பன்னிரெண்டாம் மாணவர்கள்.
“என்னடா விக்ரம் சீக்கிரம் சொல்லு மேம் கூப்பிட்டாங்க” என்றதும் விக்ரம் “மச்சி அப்பறம் போகலாம் இப்ப வா வர பொண்ணுக்கு எல்லாம் மார்க் போடலாம்” என
கீரன் “ஆமா மச்சி நீ இல்லாமல் சைட் கூட அடிக்க முடியலை” என பாவமாக சொல்ல
தியா “என்ன மூஞ்சி டா மாத்து மாத்து வாங்க டா நம்ம வேலையை பார்க்கலாம்” என ஐவரும் பள்ளி மைதானத்தில் வரும் பெண்களுக்கு மார்க் போட நம்ம அவங்களை பற்றி பார்க்கலாம்.
தியா விக்ரம் கிரன் ராகுல் டேவிட் ஐவரும் பன்னிரெண்டாம் மாணவர்கள். தியாவை தவிர மற்ற நால்வரும் சென்னை தான் பூர்வீகம். தியா செங்கல்பட்டு அருகில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவள். பத்தாவது வரை அங்கே பயின்றவள் பின் தந்தையிடம் சொல்லி தற்போது ஹாஸ்டலில் தங்கி இங்கே படிக்கிறாள்.
அவர்கள் ஐவரும் சற்று சத்தமாக பேசிக்கொண்டு இருக்க தன் மகளை விட வந்த கோகுல், பாரதியின் தந்தை ‘ச்சை பெண்ணா இது… எப்ப பார்த்தாலும் பசங்களோட இருக்கா வீட்டில் எல்லாம் கேட்க மாட்டாங்க போல’ என மனதில் நினைத்து கொண்டே தன் மகளிடம் “பாரதி பசங்க கூட எல்லாம் ரொம்ப பேசாத நேரத்தோடு வீட்டுக்கு வந்திரு. உன் கிளாஸ் தானே அந்த பொண்ணு அவ இருக்கிற பக்கம் கூட போகாத புரியுதா” என்று கூறி விட்டு சென்றார்.
கிரண் “மச்சி சாதனாவை கரெக்ட் பண்ண ஐடியா தரேன்னு சொன்ன சொல்லு டி அவ என்னை கண்டுக்கவே மாட்டேன்றா” என இதை கேட்ட ராகுல் “இவ கிட்ட வா ஐடியா கேட்ட அப்ப போச்சு உன்னோட காதல் அதுக்கு சமாதி தான்” என்று கிண்டல் செய்ய
தியா “அவன் கிடக்கிறான் நான் சேத்து வைக்கிறேன் மச்சான் நீ கவலை படாத” என ராகுல் ‘ஆமா அப்படியே சேர்த்து வெச்சிட்டு தான் மறுவேலை பார்ப்ப’ என்று முணுமுணுக்க
தியா “என்னடா அங்க சத்தம்” என்றதும் “ஒன்னும் இல்லை ஒண்ணுமே இல்லையே” என்றதை பார்த்து சிரித்தனர்.
பாரதி அவர்களையே ஏக்கமாக பார்த்து கொண்டு வகுப்புக்கு சென்றாள். பாரதி, கோகுல் மீரா தம்பதியின் ஒற்றை பிள்ளை. பெற்ற பிள்ளையை கவனிக்க கூட நேரம் இல்லாமல் பணத்தை நோக்கி செல்லும் வர்க்கம். கண்டிப்பான தந்தை அன்பான தாய் ஆனால் அவர் வீட்டில் இருப்பது தான் அதிசயம். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.
ஒரு நாள் இரவு பாரதியின் இல்லம்,
கோகுல், “பாரதி….இந்த மார்க் எல்லாம் பத்தாது” என்று அவள் எடுத்த தொண்ணூறு சதவீதை புகழாமல் மேலும், “இங்க பார் நமக்கு இருக்கிற வசதிக்கு உன்னை தனியார் கல்லுரியில் டாக்டர் படிக்க வைக்க முடியாது. நல்ல மார்க் எடுக்கனும் புரிஞ்சுதா நாளையில் இருந்து ஈவினிங் 6-9 உனக்கு நீட் கிளாஸ் இருக்கு அதுக்கு தாயாரா இரு” என அவளின் கனவை பற்றி எதுவும் கேட்காமல் முடிந்தது பேச்சு என்று உள்ளே செல்லும் தந்தையை கவலையுடன் பார்த்தாள்.
அதே நேரம் ஹாஸ்டலில், “அப்பா…. நான் பாஸ் பண்ணிட்டேன்” என முதல் மதிப்பெண் எடுத்ததை போல் சந்தோஷமாக சொல்ல அவரோ ” அட என் ராசாத்தி.. அவங்க எல்லாம்” என்று இழுக்க,
“ம்ம்ம்… ராகுலை தவிர நாங்க நாலு பேரும் பாஸ் தான். பாவம் ராகுல் தான் பீல் பண்ணான்” என கவலையாக சொல்ல,
“அட இது வெறும் மார்க் தான் உங்க திறமையை மார்க் ஒன்னும் குறைச்சிடாது. கடைசி பரிட்சையில் பார்த்துக்கலாம் அவனை இதுக்கு எல்லாம் கவலை பட வேண்டாம்னு சொல்லு தங்கம்” என
“அப்பானா அப்பா தான்… அப்பறம் டேவிட் அம்மா கோச்சிங் கிளாஸ் போக சொல்றாங்க என்ன செய்ய” என ” உன் இஷ்டம் மா உனக்கு போகனும்னு இருந்தா போ இல்ல வேண்டாம் ” என்றார்.
“சரிப்பா நான் அப்பறம் பேசறேன் பாய்” என போனை வைத்தார்.
ஆறு மாதம் வேகமாக ஓடியது. ஓர் இரவு,
கோகுல் “மீரா பாரதி இப்ப எப்படி படிக்கிறா” என “அட போங்க பொண்ணு பாவம்ங்க காலையில் ஏழு மணிக்கே ஸ்பெஷல் கிளாஸ்னு போய்டுறா சாயங்காலம் ஆறு மணிக்கு ஸ்கூலில் இருந்து வந்ததும் வராததுமா நீட் கிளாஸ் போய்ட்டு நைட்டு ஒன்பதரைக்கு தான் வரா வந்ததும் ரூமிற்குள்ள போய்டுவா அத்தோட வெளியே வரமாட்டரா ரொம்ப படிக்கிறா போல நீங்க தான் வேலை விசயமா வெளியூர்லே இருந்தா அவளை பத்தி என்ன தெரியும்” என மகளை பற்றி தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல,
“நல்லா படிக்கட்டும் என் பொண்ணு டாக்டர்னு நானு எல்லார் கிட்டவும் பெருமையா சொல்லனும்” என்று தன் ஆசையை சொல்லி விட்டு அவர் வேலையை பார்க்க சென்றார்.
மறுநாள் பள்ளி சனிக்கிழமை என்பதால் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே வந்திருக்க,
தியா பதட்டத்துடன் “மச்சி நேத்து அந்த பொறுக்கி பிரபா என் கையை பிடிச்சி இழுத்தான் அவனை அடிச்சிட்டேன் டா” என தன் நண்பர்களிடம் சொல்ல
“ஏய் லூசு என் கிட்ட சொல்றது தானே அவன் கையை ஓடச்சி இருப்பேன்” என கோபமாக ராகுல் சொல்ல
விக்ரம் “மச்சா அவன் கிட்ட எல்லாம் அவசரப்பட கூடாது டா தியா நீ பண்ணது கூட தப்பு தான் நீ சைலன்டா வர வேண்டியது தானே இப்ப அவன் என்ன பண்ண போறானோ ஏற்கனவே அப்பா கட்சிகாரர்னு ரொம்ப அடாவடி பண்ணுவான் இப்ப மட்டும் சும்மா இருப்பானா” என அவனை புரிந்து சரியாக சொல்ல
அதே நேரம் பிரபா யாரோ ஒரு தடியன்னிடம் எதோ சொல்லி கொண்டு இருந்தான். பின் பிரபாவை யாரோ பார்த்து எதோ கேட்க அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இன்னும் பப்ளிக் எக்ஸாமிற்கு ஒருசில மாதமே இருக்க அடுத்த வாரம் அதிசயமாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை. அதற்கு அடுத்த வாரம் பப்ளிக் பிராட்டிகல் எக்ஸாம்.
மதியம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கவனிக்க முடியாத மேத்ஸ் கிளாஸ் வழக்கம் போல் தியா கூட்டம் வாட்சை பார்த்து ‘வகுப்பு எப்போ முடியும்’ என புலம்ப அதே நிலையில் தான் இருந்தனர் மற்றவரும்.
அதுவரை அமைதியாக இருந்த தளம் தீடிரென பரபரப்பாக, காரணம் பள்ளியின் அனைத்து பெரிய தலையும் அதாங்க பிரின்சிபால் வைஸ் பிரின்சிபால் கோபத்துடன் அந்த தளத்தில் இருக்கும் ஒரு வகுப்புக்கு வந்தனர்.
அவர்களை பார்த்து அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க அந்த வகுப்பு ஆசிரியர் “எதாவது பிரச்சனையா சார்” என
“உங்க கிளாஸ்ல இருந்து இப்படி ஒரு நிகழ்வை நான் எதிர்பார்க்காலை ஒரு சிலரோட ஒழுங்கின செயலால் இப்ப மொத்த ஸ்கூலுக்கும் கெட்ட பெயர்” என கோபத்தில் இறுகிய முகத்துடன் அழுத்தமாக முதல்வர் பார்த்திபன் சொல்ல,
“என்ன ஆச்சு சார் யார் என்ன பண்ணாங்க” பதற்றமாக கேட்க அவரோ வைஸ் பிரின்சிபாலை பார்க்க,
வைஸ் பிரின்சிபால் சுதா “சார் உங்க கிளாஸ் பொண்ணு நேற்று எதே ஒரு பப்பில் போதை பொருளை யூஸ் பண்ணி மாட்டியிருக்கா அதுவும் ஸ்கூல் யூனிஃபார்ம்யோடு கூட ஒரு பையன் வேற இருந்து இருக்கான் அவளால் நம்ம ஸ்கூலுக்கு எவ்வளவு கெட்ட பெயர் தெரியுமா வயசு பொண்ணுனு அவ போட்டோவை போடாமல் நம்ம ஸ்கூல் பொன்னுனு மட்டும் சொல்லி எல்லா நியூஸ் சேனலும் நம்மை கிழிக்கிறாங்க” என மானவர்கள் மத்தியில் சலசலப்பு யாராக இருக்கும் என்று.
முதல்வர் “நீங்களா வெளியே வந்தா நல்லது நானா சொன்னால் பிரச்சனை உங்களுக்கு தான்” என ஒரு ஜோடி விழிகள் பயத்தில் நடுங்க,
பார்த்திபன் “சொல்ல மாட்டிங்க அப்படி தானே” என சிறு இடைவெளி விட்டு “தியா!!!! ” என அந்த கட்டிடமே அதிர தியாவை அழைத்தார்.
அதுவரை அங்கு நடப்பதற்கும் தமக்கும் சமந்தமில்லாமல் ஐவரும் நோட்டில் கிறுக்கி விளையாடி கொண்டு இருக்க தீடிரென அழைத்ததால் அதிர்ந்து திரும்பினால் தியா மற்றும் அவளது சகாக்கள்.
சுதா “நீ எந்நேரமும் ஆம்பள பசங்க கூடவே இருக்கும் போதே நினைத்தேன் ஒரு நாள் இப்படி தான் வந்து நிக்க போறனு அது என்ன இந்த வயசிலே ஆம்பளை துணை கேட்குது” என அவர் சொல்றது யாரை நம்பலையா என்று குழப்பத்துடன் தியா நிற்க,
ராகுலோ “மேம் போதும் வாய் இருக்குனு நீங்க பாட்டுக்கு பேசாதிங்க. அவ தான் நீங்க சொல்ற பொண்ணு என்றதுக்கு என்ன ஆதாரம்” என முகம் கோபத்தில் சிவக்க கேட்க,
விக்ரம் அவன் காதில் ‘மச்சா பொறுமையா இருடா எதோ தப்பா இருக்கு டா’ என
சுதா “நேத்து நைட் நீ எங்க இருந்த தியா” என ஹாஸ்.. என்று சொல்லும் போதே “ஹாஸ்டல்னு மட்டும் சொல்லாத நான் அங்கையும் கிராஸ் செக் பண்ணிட்டேன் நீ நேத்து நைட் ஒன்பது மணிக்கு மேல தான் வந்து இருக்க அது வரை எங்க போய் இருந்த” என்று கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருக்க அவள் நண்பர்களோ, எங்க டி போன என்ற ரீதியில் பார்க்க
பார்த்திபன் “உன்னோட அமைதியை நாங்க நீ தான் தப்பு பண்ணணு எடுக்கவா” எண்றதுக்கும் அமைதியாக இருக்க அவரே “நெஸ்ட் மண்டே உன்னோட அப்பாவோட தான் நீ ஸ்கூல்க்கு வர” என்று அவர் கிளம்ப
ராகுல் “தியா எங்க போனனு சொல்ல வேண்டாம் பட் அது நீ இல்லனு சொல்லலாம்ல பாரு கிளாஸ் முழுக்க உன்னை தப்பா பார்க்கிறாங்க” என்று கவலையாக சொல்ல
மற்றவரும் அவன் சொன்னதையே சொல்ல தியாவோ “மச்சி கூல் டா அவங்க சொன்ன நான் தப்பான பொண்ண ஆகிடுவேனா நீங்க நம்பறீங்களா” என்றது
அவர்கள் “இல்லை” என “அப்புறம் எதுக்கு கவலை வாங்க எனக்கு ரொம்ப பசிக்குது கான்டீன் போகலாம்” என்று நால்வரையும் அழைத்து செல்ல அவர் வகுப்பு ஆசிரியர் ‘இதுங்க எல்லாம் எங்க திருந்த போகுதுங்க’ என்ற ரீதியில் விட்ட வகுப்பை எடுக்க தொடங்கினார்.
கேன்டீனில் ஐவரும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்க தியாவின் ஐஸ் கீழே விழுந்து விட அதை பார்த்த டேவிட் “அடி குரங்கே ஒரு ஐஸ் அதை கூடவா ஒழுங்கா சாப்பிட தெரியாது நான் திரும்பவும் போய் வாங்க மாட்டேன்” என
தியாவோ “எதுக்கு வேற வாங்கணும்” என பக்கத்தில் இருந்த ராகுல் கையில் இருந்த ஐஸ்யை பிடிங்கி சுவைக்க தொடங்கினாள். அவள் சாப்பிடுவதை ராகுல் ரசித்து பார்க்க மற்ற மூவரும் அவர்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு தங்கள் ஐஸ்சை கவனிக்க,
அப்பொழுது அங்கே வந்த பிரபா இதை பார்த்து “வாவ்… நம்ப ஸ்கூல் வோட ஹாட் நியூஸ் இங்க கோல்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டு இருக்கு” என
“டேய் அவன் பிரச்சனை பண்ண தான் வந்து இருப்பான் சோ அவன் என்ன சொன்னாலும் அமைதியா இருங்க” என்று விக்ரம் நண்பர்களை எச்சரிக்க,
பிரபா “என்னடா அதிசயம் ரொம்ப அமைதியா இருக்கீங்க உங்க தியா நேத்து அங்க என்ன பண்ணணு கேட்க மாட்டிங்களா” என
கிரண் “அந்த நியூஸ் பொய் னு எங்களுக்கு தெரியும்” என “எது பொய் அந்த நியூஸ் ல வர ஒவ்வொரு விசயம்னும் உண்மை தான் கரெக்ட் தானே தியா மேடம்” என
அது வரை அமைதியாக இருந்த தியா “ஒழுங்கா போய்ட்டு பிரபா நீ எல்லாம் என்ன மனுஷன் எனக்கு வர கோபத்துக்கு உன்னை சும்மாவே விட மாட்டேன் பட் என்ன பண்றதுனு தெரியாமல் தான் அமைதியா இருக்கேன் அதை உனக்கு சாதகமா மாற்ற நினைக்காத” என
“பாருடா மேடம் கு கோபம் எல்லாம் வருது பரவலை அதுவும் நல்லா தான் இருக்கு உன் முகம் எல்லாம் ரெட் ஆஹ் க்யூட்” என அவளை ரசித்து கொண்டே சொல்ல அது வரை அமைதியா இருந்த ராகுல் அவனை அடிக்க தொடங்கினான்.
எதிர்ச்சியாக அந்த பக்கம் வந்த பார்த்திபன் இதை பார்த்து “இங்க என்ன நடக்குது” என்று கத்த அனைவரும் அவரை பார்த்து அமைதியாக இருக்க அவரோ “நெஸ்ட் மண்டே உங்க எல்லாரோட பெற்றோரும் என்னை வந்து பார்த்தால் தான் உங்களை உள்ளே விடுவேன் அண்ட் யூ டூ பாரதி உன்னோட அப்பாவை கண்டிப்பா வர சொல்லு” என
அப்பொழுது தான் எல்லாரும் அங்கே ஓரமாக இருந்த பாரதியை பார்க்க, அவளோ என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தலையை எல்லா பக்கமும் ஆடினாள். அதை பார்த்து ஐவரும் சிரிக்க பிரபா மட்டும் அவளை முறைத்தான்.
ராகுல் இல்லம்
ராகுல் “இப்ப யாரு என் கூட ஸ்கூல் வரீங்க” என தன் தாய் தந்தையை பார்த்து கேட்க,
“டேய் இதை விடு தியா கிட்ட ப்ரோபோஸ் பண்ண போறனு சொன்னியே என்ன ஆச்சு” என்று ஆர்வமாக கேட்டார் அவனின் தந்தை வைத்தி என்ற வைதீஸ்வரன்.
“ஆமா நான் கூட நீ வந்ததும் கேட்கணும் னு இருந்தேன் பாரேன் மறந்தே போய்ட்டேன் சொல்லுடா என்ன சொன்ன தியா” என்று அவனது தாயும் அவர் பங்குக்கு கேட்க
அவனது அக்கா “நல்ல அப்பா சூப்பர் அம்மா அட ச்சை அவன் யாரையோ அடிச்சிட்டு வந்து இருக்கான் அது என்னனு கேட்கறதை விட்டு தியா என்ன சொன்னானு கேட்கிறீங்க” என்றால் லாவண்யா ராகுலின் தமக்கை.
“நீ சும்மா இரு டி நீ சொல்லு டா என்ன சொன்ன” என்று மூவரும் ஆர்வமாக அவன் முகத்தை பார்க்க அவனோ அங்கு நடந்ததை சொன்னான்.
ராகுல் “தியா உன் கிட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லணும்னு வெயிட் பண்றேன்” என மேல சொல்ல தயங்கி நிற்க,
தியா “மச்சி அந்த நாளை என்னும் கொஞ்சம் எஸ்ட்டெண்ட் பண்ணிக்கோ எக்ஸாம் முடிஞ்சதும் சொல்லு பட் இப்ப நீ எதுவும் சொல்ல வேண்டாம் போ டா போய் படிக்கிற வழியை பாரு நான் உனக்கு ஒரு சப்ரைஸ் வெச்சி இருக்கேன் நம்ம லாஸ்ட் எக்ஸாம் அப்ப சொல்றேன் இப்ப எதுவும் சொல்ல கூடாது” என்று கூறி விட்டு மற்ற வேலை பார்க்க சென்று விட்டாள்.
“இது தான் மா நடந்துச்சு நான் என்னும் என் லவ்வை சொல்லவே இல்லை. சோ சாட் அவளுக்கு என்னை பிடிக்கும் தானே மா” என்று தவிப்புடன் கேட்க,
அவனின் தந்தை “டேய் மக்கு மகனே அவ எக்ஸாம் முடிச்சதும் ப்ரொபோஸ் பண்ண சொல்ற டா இது கூட தெரியாமல் நீ எல்லாம் எப்படி தான் குப்பை கொட்ட போறியா. சரி இப்ப சொல்ல எதுக்கு சண்டை போட்ட” என
தன் தந்தை கூறியதை கேட்டு சந்தோஷத்தில் காற்றில் மிதந்து கொண்டு இருந்தவன் பின் அவர் சண்டையின் காரணத்தை கேட்க அங்கே நடந்ததை கூறினான்.
விக்ரம் இல்லம்
“அண்ணா நீ தான் வர ப்ளீஸ் எனக்காக வாடா” என்று தன் தமயனிடம் கெஞ்சி கொண்டு இருந்தான் விக்ரம்.
“டேய் அன்றைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு டா என்னால வர முடியாது உன்னை யாரு சண்டை போடா சொன்ன ஒழுங்கா அப்பாவை கூப்பிட்டு போ ” என்று கூறியவனிடம் அங்கே நடந்ததை கூற
“என்ன தியா வை தப்ப பேசினங்களா எவ அவ நாம தான் முதலில் போறோம் டா அந்த பொறுக்கியை அடிச்சு கையை உடைக்காமல் எனக்கு தூக்கம் வராது” என்றவனிடம் மேலும் சில விசயங்களை விக்ரம் கூற,
“ஓ.. பிரச்சனை கொஞ்சம் சீரியஸ் தான் போல என் கிட்ட சொல்லிட ல நான் பாத்துக்கிறேன்” என்று அந்த நாளை எதிர் பார்த்து இருந்தான்.
டேவிட் இல்லம்
எஸ்தர், டேவிடின் தாய் “உன்னை படிக்க சொன்ன அதை தவிர எல்லா வேலையும் நல்லா பார்க்கிற டேய் தம்பி உன்னோட அப்பா க்கு மட்டும் ஸ்கூலில் நடந்தது தெரிந்தது அவ்வளவு தான். நம்ம என்ன பண்ணலாம் அவருக்கு தெரியாமல் ஸ்கூல் போயிட்டு வந்துடலாம் சரியா” என
டேவிட் “என்ன மம்மி இப்ப கூட டாடியை பார்த்து பயப்படுறீங்க அவர் என்னோட கூல் டாடி” என கெத்தாக சொல்ல
“அப்படியா அப்ப அவரையே கூப்பிட்டு போடா நான் எல்லாம் வர மாட்டேன்” என்று முகத்தை திருப்பி கொள்ள,
“ஹ ஹா ஹா சும்மா மம்மி நீ தான் என்னோட செல்லக்குட்டி சோ மண்டே மறக்காமல் ஸ்கூல் வந்துடு” என்று தன் அறைக்கு சென்று விட்டான்.
கிரண் அவனது தந்தையிடம் விசயத்தை கூறி பள்ளிக்கு வர சொல்லி விட்டான்.
பாரதி இல்லம்
பாரதி “அப்பா உங்களை ஸ்கூல்க்கு வர சொன்னாங்க” என்று பயந்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்த கோகுலிடம் கூற,
“எதுக்கு” என்று கேட்டவரிடம் பள்ளியில் நடந்த சிலவற்றை மறைத்து மற்ற அனைத்தையும் கூற,
மீரா “நீ ஏன்டா அங்க போன” அவள் கான்டீன் சென்றதால் தான் பெற்றோரை அழைக்க காரணம் என்று யூகித்து கேட்க,
“அ.. அது தலை வலிச்சுது மா அதான் டீ குடிக்கலாம் னு போனேன் ஆனால் அவங்க அங்க சண்ட போடுவாங்கனு நான் நினைக்கலை மா அப்புறம் தியா ……” என்று பதட்டத்துடன் ஏதோ சொல்ல வர அதற்குள்,
“சரி நான் வரேன் அந்த பொண்ணு அப்பா வருவாங்க தானே அவர் கிட்ட கேட்கணும் என்ன லட்சணமா பொண்ணு வளர்த்து இருக்காருன்னு நாக்கை பிடுங்கிறா மாதிரி கேட்டா தான் என் மனசு ஆறும். சரி இதை பற்றி நினைக்காமல் நீ போய் படிக்கிற வேலையை பாரு மார்க் எடுக்கணும் அது மட்டும் தான் உன் மனசுல இருக்கணும்” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டார். மீராவும் கணவன் பின்னே சென்று விட ஹாலில் தனியாக நின்ற பாரதி,
“நான் சொல்றதை கேட்கவே மாட்டிங்களா அப்பா என் கூட ஜாலி ஆ பேசவே மாட்டிங்களா” என்று கண்ணில் வழியும் கண்ணீரோ தன் அறைக்கு சென்றாள்.
ஹாஸ்டல்
தியா “அப்பா ஒரு சின்ன பிரச்சனை நீங்க அடுத்த திங்கள் இங்க வரிங்களா” என்று என்றும் இல்லாத அமைதியுடன் கூற,
பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் தன் மகளின் அமைதி அவரை கலங்க வைக்க “என் குட்டிக்கு என்ன ஆச்சு என்ன பிரச்சனை வந்தாலும் தனியா எதிர்த்து நிக்கிறவ என்னோட பாப்பு குட்டி அதை விட்டு இப்படி அமைதியா இருக்க மாட்டாள்” என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல் அவளுக்கு தைரியம் சொல்ல,
“அப்பா அது வந்து என்ன நடந்ததுனா” என்று நடந்ததை சொல்ல அவரோ “அட லூசு பொன்னே இங்க நான் என்னோட பொண்ணு சிங்கம் அப்படினு எல்லார் கிட்டவும் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடா என்றால் சின்ன விசயத்துக்கே பயந்துட்ட” என
“அப்பா உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது ஒழுங்கா இங்க வந்து அந்த சொட்ட மண்டையன் கிட்ட இருந்து என்னை இல்ல இல்ல என் கிட்ட இருந்து அவரை காப்பது” என்று திமிராக சொல்ல
“எதோ இந்த திமிர் தான் என் குட்டிக்கு அழகு வரேன் டா ஆனால் திங்கள் காலையில் தான் வருவேன் இங்க அறுவடை நடக்குது மா நான் நேர ஸ்கூலுக்கே வந்துறேன்” என “ஓகே அப்பா நான் வெயிட் பண்றேன் பை ஒழுங்கா உங்க உடம்பை பார்த்துக்கோங்க” என்று மேலும் சில நிமிடம் பேசி விட்டு அழைப்பை வைத்தாள்.
திங்கள் கிழமை,
காலை பாரதியின் தந்தை “ச்சை.. உன்னால நான் இன்றைக்கு ஆபீஸ் போக முடியாது போல உன்னை யாரு அங்க எல்லாம் போக சொன்னது” என்று பெர்மிஸ்ஸின் கேட்க மேனேஜர் க்கு கால் செய்ய அவரோ அதை மறுத்து திட்டி விட அந்த கோபத்தை பாரதியின் மேல் காட்டி கொண்டு இருந்தார். “சாரி அப்பா” என்று விட்டு அவருடன் ஸ்கூல் செல்ல தயாரானாள்.
பள்ளி மைதானம் ஒரு ஓரத்தில் பாரதி அவள் தந்தையுடன் நிற்க, மறுபக்கம் ராகுல் அவன் தாய் தந்தை, விக்ரம் அவனது அண்ணன், கிரண் அவனின் தந்தை, டேவிட் மற்றும் அவனின் தாய். அனைவரும் இருக்க தியா மட்டும் மிஸ்ஸிங்.
கிரண் “மச்சி தியா என்னடா என்னும் வரல” என்று கவலையோடு சொல்ல விக்ரம் “அவ சீக்கிரம் வந்தால் தான் அதிசயம்” என்று கூறும் போதே தியா அங்கே வந்து விட, வந்தவள் நேராக ராகுலிடம் சென்று “மச்சி!!!!! காங்ரத்ஸ் டா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று அவனை கட்டி கொள்ள, அவளின் செய்கையை புரியாமல் மற்றவர் பார்க்க,
கோகுல் “பாரு இத்தனை பேரு முன்னாடியே ஒருத்தனை கட்டி பிடிச்சி வேடிக்கை காட்டுகிற” என்று மேலும் அவள் மேல் கோபம் கொள்ள,
விக்ரம் “ஏ.. குட்டி பிசாசு என்ன டி ஆச்சு” என “ப்ச்… அதுவா நம்ம ராகுல் தமிழ்நாடு புட்பால் டீம் ல செலக்ட் ஆகிட்டான் அதை இப்ப தான் சொன்னாங்க அதை கேட்டு வர தான் லேட் ஆகிடுச்சு” என மற்ற மூவரும் அவர்களை கட்டி கொள்ள அவர்கள் ஐவரும் ஒன்றாக கட்டி கொண்டு தங்கள் சந்தோசத்தை பகிர அவர்களது பெற்றோர் அதை சந்தோசத்துடன் பார்த்து கொண்டு இருக்கும் நேரம் அந்த இடத்துக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வெட்டி சட்டையில் ஒருவர் உள்ளே நுழைந்தார்.
வந்ததும் அவர் கண்ணில் பட்டது ஐவரும் ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு நிற்பது தான். யார் இவர் என்று அனைவரும் கேள்வியாக பார்க்க அப்பொழுது தான் நண்பர்களை விட்டு விலகிய தியா அவரை பார்த்து “அப்பா” என்று ஓடி சென்று அவரை கட்டி கொண்டாள்.
“அடடே என் தியா குட்டி முன்ன விட இப்ப கொஞ்சம் ஹயிட் ஆகிட்டா பா என்ன ஒரு சாதனை” என்று கிண்டல் செய்ய மற்ற அனைவரும் அதை கேட்டு சிரிக்க தியா “போ பா வந்ததும் என்னை கிண்டல் பண்ற போ நான் உன் கூட பேச மாட்டேன்” என
“சரி நீ பேசாத நான் ராகுல் கிட்டவும் மத்தவங்க கிட்டவும் பேசிக்கிறேன்” என அவளோ அதே கோபத்துடன் “உனக்கு என்னை விட ராகுல் தான் முக்கியமா” என
அவரோ “ஆமா டா என்ன இருந்தாலும் வருங்கால ” என்று சொல்லும் போதே அவர் சொல்ல வருவதை புரிந்து கொண்ட தியா “அப்பா ஷ்……” என்று விடு அனைவரிடமும் தன் தந்தையை அறிமுகம் படுத்தினாள்.
விக்ரம் “மச்சி அந்த குட்டி பிசாசு உன்னை லவ் பண்றதை உன் கிட்ட தான் சொல்லல போல அவங்க அப்பாக்கு கூட தெரிந்து இருக்கு உனக்கு ஏங்கவோ மச்சம் இருக்கு மச்சான் அதான் இது மாதிரி ஒரு ஜாலியான மாமனார்” என்று காதில் ரகசியம் பேச
அவர்களிடம் வந்த தியா “ராகுல் மீட் மை பாதர் மாணிக்கம் அப்பா இது ராகுல் இவன் விக்ரம் டேவிட் கிரண்” என அறிமுகம் செய்ய ராகுல் மட்டும் அவரது காலில் விழுந்து எழுந்தான்.
அதை பார்த்த ராகுலின் தந்தை “பாத்தியா டி ஒரு நாள் ஆச்சும் நம்ப காலில் விழுந்து இருக்கானா இப்ப பாரு வருங்கால மாமனாரை கரெக்ட் பண்ண என்ன எல்லாம் செய்றான்” என அவர் மனைவி “உங்க மகன் உங்களை மாதிரி தான் இருப்பான்” என்றதும் இளித்து கொண்டே வேறு பக்கம் திரும்பி கொண்டார்.
சரியாக அந்த நேரம் பிரின்சிபால் வர சிறிது நேரத்தில் அனைவரும் பிரின்சிபால் அறையில் இருந்தனர்.
பார்த்திபன் “நான் சொன்னதும் எல்லாரும் வந்ததுக்கு முதலில் நன்றி. அப்புறம் தியா அப்பா நீங்க தானே” என்று ஓரத்தில் இருந்த மாணிக்கத்தை பார்த்து கேட்க,
“ஆமாங்க ஐயா. எதோ பிரச்சனை னு குட்டி சொன்ன என்ன ஆச்சு ஐயா” என்று பணிவாக கேட்க
“பிரச்சனையா உங்க பொண்ணால எங்க ஸ்கூல் மானமே போச்சு என்ன வளர்த்து இருக்கீங்க இந்த வயசிலே போதை மருந்து யூஸ் பண்ற எப்ப பார்த்தாலும் ஆம்பள பசங்க கூட தான் இருக்க இவ ஒரு பொண்ணு கூட பேசி இங்க யாருமே பார்த்தது இல்ல படிப்பு அதுவும் ஆவெரேஜ் தான் எல்லாத்தலையும் பாஸ் பண்ணிடுற அதை தவிர ஒண்ணுமே இல்ல இவ மட்டும் இல்ல இதோ இங்க நிக்கிறாங்களே இவ கேங் இவங்களும் அதே மாதிரி தான்” என்று கோபமாக குற்றம் சாட்ட கோகுல் அதை நிம்மதியாக பார்த்தான் மனதில் ‘என் பொண்ணை நான் எப்படி வளர்த்து இருக்கேன் கிராமத்தானுக்கு ஒண்ணுமே தெரியல’
மாணிக்கம் “வேற எதாவது இருக்கா ஐயா” என்று பொறுமையாக கேட்க கோகுல் “வேற ஏதாவதா உங்க பொண்ணு போதை மருந்து யூஸ் பன்றாளாம் அதை விட பெரிய விசயம் இருக்கவா போது” என்று கிண்டலாக சொல்ல
மாணிக்கம் பொறுமையாக தியாவின் நண்பர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை பார்த்து “உங்களுக்கு என் தியா குட்டி தப்பு பண்ணி இருப்பானு தோணுதா” என அனைவரும் இல்லை என்று தலை ஆட்டினர்.
விக்ரமின் அண்ணா “சார் நான் விக்ரம் பிரதர் அண்ட் இந்த சிட்டியோட dcp மாறன்” என்று பேச வரும் போது மாணிக்கம் “தம்பி நான் கொஞ்சம் பேசிக்கவா” என மாறன் அவருக்கு வழி விட்டான்.
“ஐயா நீங்க சொல்றது உண்மை தான்.என் பொண்ணு படிப்பா ஆனா ரொம்ப நல்லா எல்லாம் படிக்க மாட்டா. அப்புறம் என்ன சொன்னிங்க ஆங்… ஆம்பள பசங்க கூடவே இருக்காளா இருக்கட்டுமே ஐயா அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை என் பொண்ணை என்னை விட இதோ இங்க இருக்கிற பசங்க நல்லா தான் பார்த்துப்பாங்க” என்று அவர்கள் சுட்டி சொல்ல பின் கோகுலிடம் “நீங்க சார் என்ன சொன்னிங்க கிராமத்தான் சரியாவே பொண்ணை வளர்க்கலை அதானே அதை சொல்ற தகுதி உனக்கு இல்லைங்க. உங்க பொண்ணு என்ன பண்ற னு உங்களுக்கு தெரியுமா” என்று கேட்க தியா “வேண்டாம் பா விட்டுடுங்க” என
“ஐயா என் பொண்ணு அது மாதிரி எல்லாம் பண்ண மாட்ட” என
பார்த்திபன் “உங்க பொண்ணு அங்க இருந்ததுக்கு எங்க கிட்ட சாட்சி இருக்கு அதே மாதிரி அன்றைக்கு அங்க எங்க ஸ்கூல் பொண்ணு போதை மருந்து கேஸ் ல மாட்டி இருக்காங்க. இதுல இருந்தே தெரியலையா உங்க பொண்ணோட அழகு” என
“சரி ஐயா நீங்க நினைக்கிறதை சொன்ன அதே உண்மை னு ஆகிடாது என் பொண்ணை பற்றி எனக்கு தெரியும் இப்ப என்ன பண்ணலாம் ஐயா” என்றதும்
“கண்டிப்பா இதுக்கு ஆக்ஷன் எடுக்கணும் தான் பட் உங்களுக்காக விடுறேன் இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அது வரை எந்த பிரச்சனைக்கும் என் பொண்ணு போக னு சைன் பண்ணிடுங்க” தியா வின் மற்ற நண்பர்களின் பெற்றோரை பார்த்து “நீங்களும் சைன் பண்ணுங்க அதையும் மீறி பிரச்சனை வந்தால் கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பேன்” என்றதும் அனைவரும் கையெழுத்து இட்டனர்.
இதை பார்த்த கேட்ட கோகுல் “சார் எதுக்கு என்னை வர சொன்னிங்க” என
இதை கேட்ட பார்த்திபன் “ஆமா சார் இன்றைக்கு உங்கள வர சொன்னதுக்கு காரணம் முதல எல்லாம் நல்ல படிச்ச பிள்ளை ஸ்கூல் பாஸ்ட் வரும்னு நினைச்ச பிள்ளை கொஞ்ச நாளா சரியாவே படிக்கறது இல்ல இவ இப்படியே இருந்த கண்டிப்பா பாஸ் பண்ண முடியாது அப்பா வை வர சொல்ல சொன்னால் நீங்க ஊரில் இல்லனு சொல்ற என்ன பிரச்சனை னு பாருங்க” என்று மீண்டும் எல்லாரிடமும் “இப்ப எல்லாரும் கிளம்பலாம்” என்றதும் அனைவரும் மைதானம் வந்தனர்.
மாணிக்கம் “சார் என் பொண்ணை பற்றி பேசறதுக்கு முன்னாடி உங்க வீட்டில் என்ன நடக்கிறது னு பாருங்க பணத்தை எப்ப வேண்டுமானாலும் சேர்த்துக்கலாம் ஆனா நேரத்தில் கிடைக்காத பாசத்துக்கு பின்னாடி மதிப்பு இல்ல சார்” என்று கோகுலை பார்த்து சொல்ல தியா “அப்பா ப்ளீஸ் வேண்டாமே நானே சொல்லிட்டேன் இனி அவ அப்படி பண்ண மாட்டா” என
“எப்படி குட்டி விட முடியும் என் செல்லத்துக்கு அம்மா நினைப்பு வர கூடாதுனு தான் அவ அத்தா செத்த அடுத்த மாசமே இங்க அவளை கொண்டு வந்து சேர்த்தேன். கூட பொறந்த பொறப்புன்னு என் பொண்ணுக்கு யாருமே இல்ல அந்த குறை தெரிய கூடாதுனு தான் நானும் என் பொஞ்சாதியும் இவ கூட சகஜமா நண்பர்கள் மாதிரி பழகுவோம் என் பொஞ்சாதி செத்ததும் இவ தனி மரமா நிக்கிற மாதிரி இருக்கவே தான் இங்க இவளை சேர்த்தேன். என் பொண்ணோட அதிஷ்டம் அவ நண்பர்கள் அவளுக்கு கிடைத்தது. சும்மா சொல்ல கூடாது அவளுக்கு தனிமை னு ஒரு உணர்வை தராமல் பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் போதை மருந்தா அதை என் பொண்ணு யூஸ் பண்ற அதை நீங்க பார்த்திங்களா” என்று கோகுலை பார்த்து கேட்க
“கரெக்ட் தான் என் பொண்ணு அங்க தான் இருந்தா ஆனா போதை மருந்து யூஸ் பண்ண அங்க போகல யூஸ் பண்ண பொண்ணை காப்பாத்த போனா” என அனைவரும் புரியாமல் அவரை பார்க்க அவரோ மாறனை பார்த்து “தம்பி நீங்களே சொல்லுங்க” என
மாறன் “சார் அன்றைக்கு இந்த ஸ்கூல் பொண்ணு அங்க இருக்கவே தான் உடனே நான் தியா க்கு போன் பண்ணி விசயத்தை சொன்னேன் அவளும் அங்க வந்த அவ வந்ததா இல்லைனா ” என்று கோகுலை பார்த்து “உங்க பொண்ணோட போட்டோ எல்லா நியூஸ்லையும் வந்து இருக்கும். உங்க பொண்ணுக்கு ரொம்ப நாளாவே அந்த பழக்கம் இருக்கு போல பட் நாங்க அன்றைக்கு ரெய்டுக்கு போனதுனால தான் உங்க பொண்ணு இன்னும் உங்க பொண்ணாவே இருக்க என்ன சார் புரியலையா இதே ஸ்கூல் ஸ்டுடென்ட் பிரபா உங்க பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான். நாங்க சரியான நேரத்துக்கு அங்க போய்ட்டோம் அண்ட் பிரபாக்கும் வார்னிங் கொடுத்து இருக்கோம் ” என்றதும் அதை முதலில் அதிர்ச்சியாக கேட்டு கொண்டு இருந்தவர் இறுதில் கோபம் கொண்டு பாரதியை அழுத்தமாக அறைந்து விட்டார்.
மாணிக்கம் “என்ன சார் இது படிச்சவங்க தானே வயசு பொண்ணை கை நீட்டி அடிக்கிறீங்க. எல்லா தப்பும் உங்க மேல வெச்சிக்கிட்டு அந்த பொண்ணை தப்பு சொல்லாதீங்க” என்று கோபமாக கேட்க, அவர் வாக்கியத்தில் இருக்கும் உண்மை உணர்ந்து அனைவரும் அமைதியாக இருக்க
கோகுல் “தப்பு அதை நான் பண்ணேனா நல்லா இருக்கு நீங்க சொல்றது நானும் என் மனைவியும் இவளுக்காக தான் மாடு மாதிரி உழைக்கிறோம் இவ கஷ்ட பட கூடாதுனு தான் இவ கேக்கிறதுக்கு முன்னாடியே எல்லாமே வாங்கி கொடுத்து இருக்கோம்” என
“உங்களுக்கு ஒரு விசயம் புரியலை சார். உங்க பொண்ணு நல்லா இருக்கும்னு நினைச்ச நீங்க ஏன் சார் சந்தோசமா இருக்கிறாளா னு பார்க்க மறந்துட்டீங்க. நீங்களும் உங்க மனைவியும் காசு பின்னாடி ஓடி போனீங்க சரி அதை நான் தப்பா எல்லாம் சொல்ல மாட்டேன் ஏன்னா விலைவாசி ஏறி போச்சு. ஆனா உங்க பொண்ணு கூட நீங்க பேசினா தானே அவ மனசில் இருக்கிறது தெரியும் நீங்களும் பேச மாட்டீங்க ஒத்த பொண்ணு பேசவும் கூட வீட்டில் யாரும் இல்ல நண்பர்கள் சுத்தம் அவங்க கூட பேசாத இவங்க கூட பேசாத அவ படிக்கிறவ அவ கூட தான் பேசணும் னு நீங்க சொல்லி சொல்லி பாவம் ங்க உங்க பொண்ணு நீங்க சொல்றவங்க கிட்ட பேசவும் முடியாமல் அவ பேச நினைக்கிற ஆளு கிட்டவும் பேச முடியாமல் தனி மரமா தான் நிக்கிறா.
டாக்டர் அவ டாக்டர் ஆகணும் தானே உங்க ஆசை ஒரு நாள் ஆவது உன் ஆசை என்ன என்று நீங்க அவ கிட்ட கேட்டு இருக்கீங்களா. கேட்ட தானே சொல்லுவா உயிர் கொடுத்தோம் தான் அதுக்காக அந்த உயிரா நீங்க நினைச்ச மாதிரி வாழ வைக்காதிங்க. அவ வாழ்க்கையை நீங்களே வாழ அவ எதுக்குங்க பிறந்தா.
உங்களை பொறுத்த வரை மார்க் தான் வாழ்க்கை அதனால தானே கம்மியா படிக்கிற என் பொண்ணு அவளோட நண்பர்களை உங்களுக்கு பிடிக்கல. மார்க் தான் வாழ்க்கைனா இங்க எல்லாருமே தோத்து தான் போவோம். எல்லார் கிட்டவும் ஒரு திறமை இருக்கும். எதோ நிக்கிறான் ராகுல் அவனுக்கு படிப்பு சுத்தமா வரலை தான் ஆனா அவங்க அம்மா அப்பா அவனோட திறமையை தான் பார்த்தாங்க அதோட விளைவு ஏதோ இவ்வளவு சின்ன வயசுலே ஸ்டேட் காகா புட் பால் விளையாட போறான் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு அவன் திறமைக்கு கிடைத்து இருக்கு. அப்புறம் இங்க நிக்கிறான் டேவிட் அவனுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டார்ட் பண்ணி அதில் பெரிய ஆளா ஆகணும் னு ஆசை. விக்ரம் அவனுக்கு அவன் அண்ணா மாதிரி பெரிய போலீஸ் ஆகணும் இந்த கிரண்னுக்கும் என் பொண்ணுக்கும் பாஷின் டிசைனிங் படிக்கணும் ஆசை கனவு.
அதே மாதிரி உங்க பொண்ணோட கனவு என்ன. நான் என் பொண்ணு கனவோடு அவ நண்பர்கள் கனவையும் சொல்லிட்டேன் நீங்க உங்க பொண்ணோட கனவு மட்டும் சொல்லுங்க” என பல கிலோ மீட்டர் தொலைவு இருந்து கொண்டு இங்கே நடந்த அனைத்தையும் புள்ளி விவசமாக சொல்ல அதே சொன்னது அவர் மகளிடம் எவ்வளவு ஜாலி யாக பழகுவதை.
அவர் பேசியதை கேட்ட கோகுல் வாழ்வில் முதல் முறையாக தவறு செய்ததை உணர அது அவரை குத்தியது.
தியா “அங்கிள் உங்களுக்கு என்னை பிடிக்காது ஆனா எனக்கு பாரதியை ரொம்ப பிடிக்கும் எப்ப பார்த்தாலும் அமைதியா இருக்கிற பொண்ணு யாருக்கு தான் பிடிக்காது அங்கிள். அவ கொஞ்ச நாளா ரொம்ப டேப்ரெசனில் இருக்கிற மாதிரியே எனக்கு தோணுச்சு அதன் அவளை பாலோ பண்ணேன். அப்ப தான் தெரிந்தது அவளோட இந்த நிலைமையை பிரபா அவனுக்கு சாதகமா பயன் படுத்தி இவளுக்கு ட்ரிக்ஸ் யூஸ் பண்ண வெச்சி இருக்கான்.
உங்களுக்கு பயந்து அவ மனசை மறைக்க ஆரம்பித்து பொய் சொல்ல ஸ்டார்ட் பண்ணிட்டா. தப்பு எப்ப தெரியுமா பண்ணுவாங்க ஒரு விசயத்தை மறைக்கும் போது தான் ஒருத்தர் தப்பு பண்றங்க. எதோ இங்க நிக்கிறானே ராகுல் இவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் மத்த யார் கிட்டவும் வராத ஒரு பீல் இவன் கிட்ட வந்துச்சு. அது என்னனு கேட்க எனக்கு தான் அம்மா இல்லையே எங்க அப்பா கிட்ட தான் சொன்னேன். அவர் தான் சொன்னார் இதுக்கு பெயர் தான் லவ். லவ் பண்றது தப்பு இல்ல அதுனால உன்னோட லைப் மேலே போகணுமே தவிர ஒரு போதும் கிழ போக கூடாதுனு சொன்னாங்க. அதான் இப்ப வரை நான் இதை ராகுல் கிட்ட கூட சொல்லல. எனக்கு கிடைத்த அப்பா யாருக்கும் இல்லனு நான் பெருமையா சொல்லுவேன். எனக்கு என்னோட ஜிகிரி தோஸ்து என்னோட அப்பா அதே மாதிரி பாரதிக்கு நீங்க இருக்கணும் னு நான் நினைக்கிறேன்.
உங்க பொண்ணுக்கு பெரிய பத்திரிகையாரலாக ஆகணும் னு ஆசை அங்கிள் ப்ளீஸ் அவளோட ட்ரீம். அவ வைரம் மாதிரி அங்கிள் அவளோட கனவு ஆசையை எல்லாம் பொதைச்சி வெச்சு இருக்கா. தோண்டி எடுத்தா தான் அந்த வைரத்துக்கு மரியாதை இல்ல மண்ணுக்கடியில் இருந்த வெறும் கரி தான் அங்கிள் இனிமே ஆவது அவ கிட்ட பேசுங்க அவளை பேச விடுங்க. எனக்கு வேற எதுவும் சொல்ல தெரியலை அப்புறம் அங்கிள் அவளை கான்சுலிங் போக சொல்லுங்க நான் அப்பவே சொல்லிட்டேன் இனி யூஸ் பண்ண மாட்டேன் னு தான் சொல்ற பட் அவ அதில் இருந்து முழுசா வெளிய வரணும் னா கண்டிப்பா அங்க கூப்பிட்டு போங்க . மனசு விட்டு அவ கிட்ட பேசுங்க” என்று பாரதி யிடம் சென்று
“உனக்கு என்ன வேண்டும் னு நீயே கேட்ட தான் மத்தவங்க எல்லாருக்கும் தெரியும் பேசு தப்பா சரியாய் எல்லாம் பார்க்காத மனசில் என்ன தோணுதோ அதை பேசு நீ தான் பேசணும் உனக்காக யாரும் பேச மாட்டாங்க உனக்கு யார் இருக்காங்க னு எனக்கு தெரியாது பட் கண்டிப்பா நான் உன் கூடவே இருப்பேன் கடைசி வரை” என்று அவர்கள் கிளம்பி விட
கோகுல் “சாரி பாரதி என்னோட ஆசையை நிறைவேத்த பார்த்தேனே தவிர உன்னை பற்றி நான் யோசிக்கவே இல்லை. உன்னோட ஆசை ஜர்னலிசம் தானே படிமா நான் உன்னை படிக்க வைக்கிறேன் இந்த அப்பாவை மன்னிச்சுடு மா” என
“சாரி அப்பா நான் என்ன பண்றதுனு தெரியாம டிராக்ஸ் யூஸ் பண்ணிட்டேன் இனிமே அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” என அவரை அனைத்து கொண்டாள்.
ஐந்து வருடங்கள் பிறகு,
விக்ரம் “டேய் என்னோட செல்லக்குட்டி அவளே வந்துடா எங்கடா உன்னோட மச்சி” என்று ராகுலை பார்த்து கேட்டான்.
“ஏஹ் பாரதி உன்னை யாரு எவ்வளவு சீக்கிரம் வர சொன்னது உன்னால என்னோட மச்சி க்கு தான் கெட்ட பெயர்” என்றான். விக்ரம் பாரதியிடம் தன் காதலை சொல்ல முதலில் மறுத்தவள் பின் அவனின் உண்மையான அன்பை கண்டு தன் காதலை சொல்லிவிட்டாள் அதுவும் அவள் அப்பா சம்மதத்தோடு. விக்ரம் போலீஸ் அவனின் காதலியோ நேர்மையான பத்திரிக்கையாளர். பாவம் இருவரும் அடிக்கடி முட்டிக்க அதை தீர்க்கவே நண்பர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்.
டேவிட் நினைத்ததை போலவே சென்னை நகரின் முக்கிய ஹோட்டல் blue moon க்கு சொந்த காரன்.
ராகுல் இந்தியா புட் பால் டீமின் கேப்டன். கிரண் மற்றும் தியா திரை உலக அனைவரும் பாராட்டும் முக்கிய டிசைனர்.
இப்பொழுது அனைவரும் டூர் செல்ல உள்ளனர் அதுவும் பாரிஸ்.
“ஹாய் ஹாய் ஹாய் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சா” என்று கத்தி கொண்டே வர ராகுல் அவளை பார்த்து சிரித்து கொண்டே “இல்ல மச்சி நீ கரெக்டா வந்துட வா நம்ம ஹனிமூன் செலிப்ரட் பண்ணலாம்” என
டேவிட் “அடங்கு டா உங்க கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு அதுக்கு முன்னாடி தியா மேல கையை வெச்ச முதல் டெட் பாடி நீ தான்” என அனைவரும் சிரித்து கொண்டே பாரிஸ் செல்ல விமான நிலையம் சென்றனர். என்றும் வசந்தம் அவர்கள் வாழ்வில் வீசட்டும்.
சுபம்
அன்புடன்
நிலா