தாரகை – 19

தாரகை – 19

போதை!

அது மனதின் நிதானத்தை இழக்க செய்யும் வஸ்து, முக்காலத்தையும் மறக்க வைக்கும் சோம பானம் அது.

அதன் வீரியத்தால் தன் நிலையை முற்றிலும் இழந்திருந்தான் காவ்ய நந்தன்.

போதையின் வீரியத்தால் தன்னிலை இழந்து எழில்மதியின் அருகே வேக நடை எடுத்து வைத்து வந்தான்.

சுவற்றோடு ஒட்டிக் கிடந்த எழில்மதி விழிகள் பட்டாம்பூச்சியாய் பயத்தில் படபடத்து கொண்டது.  தன் மீது அழுத்தமாய் படர்ந்திருந்த காவ்ய நந்தனை தள்ள முயன்றாள்.

“விடுங்க மாமா ப்ளீஸ்…” என்று கெஞ்சலாக சொன்னவள் அவனின் மார்பின் மீது கைவைத்து தள்ளிவிட முனைய, அந்த கட்டுமஸ்தான உடலோ அவள் வெண்டைப் பிஞ்சு விரல்கள், பட்டு ஒரு இன்ச் கூட நகரவில்லை.

வலது கையை எடுத்து அவள் பிறை நெற்றியிலிருந்து கோடு இழுத்தவனின் கைகள் உதடு பாலத்தைக் கடக்கும் போது மேலும் செல்ல முடியாமல் தடுமாறி நின்றது.

இரண்டு விரல்களாலும் அவள் இதழை குவித்துப் பிடித்தவனின் இடது கை அவளது முக வடிவை விழியகலாமல் அளந்து கொண்டிருந்தது.

இதுநாள் வரை தன் கண்களை கூட நிமிர்ந்து பாராமல் முகத்தைத் திருப்பி கொண்டு செல்லும் மாமன், முதல் முறை தன்னை விழியகலாமல் ரசித்து பார்த்து கொண்டிருக்கவும் எழில்மதியின் உடலெங்கும் சிலிர்ப்பு படர்ந்தது.

ஆனாலும் இது தவறு என மூளை மணியடிக்க, “மாமா ப்ளீஸ்… இது தப்பு” என்றவளின் குரலோ குறை பிரசவத்தில் வந்த சிசுவைப் போல குட்டியாக வந்தது, காவ்யனின் சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்து வளைவில் சுட்டதால்…

மெல்ல அவன் உதடுகளால் கோலம் போட ஆரம்பிக்க, எழில்மதியின் உடலெங்கும் நடுங்கியது.

“ப்ளீஸ் மாமா இப்படி பண்ணாதே…  உனக்கு நிதானம் வந்த அப்புறம் உன்னை நீயே காயப்படுத்திக்குவே மாமா. உன்னை நீயே வெறுத்துக்குவே… வேண்டாம்” என அவள் தடுக்கப் பார்க்க காவ்யநந்தனோ அவள் கழுத்து சரிவிலிருந்து தலையை எடுக்கவே இல்லை. மீசை முடியால் அவளை சிலிர்க்க வைத்து கொண்டிருந்தான்.

அவன் இதழ்களும் கைகளும் அத்துமீற துவங்க தன் உயிர்க் காதலனின் தொடுகைப் பட்டு காதலியாக அவள் உடல் சிலிர்த்தாலும், பெண்ணாக அவள் தேகம் பயத்தில் நடுங்கியது.

இதே வேறொரு ஆளாக இருந்திருந்தால் காளி அவதாரம் எடுத்து அவனை அப்போதே வதம் செய்திருப்பாள். ஆனால் அவள் தேகம் தீண்டியதோ சிறு வயதிலிருந்தே அவள் காதல் கொண்ட உயிரானவனின் கரம்.

விலக்கவும் முடியவில்லை. விலகவும் முடியவில்லை. ஒருவித அவஸ்தையாய் இருந்தது.

அவன் கரங்களுக்குள் பெண்டுலமாய் ஆடினாள்.

“மாமா…” என்றவாறே அவன் கைகளுக்குளிலிருந்து விலக எத்தனித்த பொழுது அவன் ஐவிரல்களும் ஆழமாய் அவள் இடையில் பதிந்தது.

“நோ” என்று முணுமுணுத்தவளின் கண்களில் தன்னையும் மீறி கண்ணீர்.

அவன் அந்த போதையிலும் அவளின் கண்ணீரை உணர்ந்து வேகமாய் கைகளை இடையிலிருந்து எடுத்தான்.

“நான் பண்றது தப்புலே” என்றவனின் குரல் குழறிப் போய் ஒலித்தது. 

“இந்த காவ்யநந்தன் ஒழுக்கமானவன்டி… இப்படிலாம் பொண்ணோட அனுமதி இல்லாம தொட மாட்டேன்” அவன் அப்போதும் மார்தட்டிக் கொண்டு கற்புக்கரசனாய் நிற்க அவள் விழிகளில் கீற்று மின்னல். முகமெங்கும் அவனை நினைத்து பெருமை.

அதுவரை பயத்தில் நடுநடுங்கி கொண்டிருந்த அவள் உடலில் காதல் வெள்ளம் கரை புரண்டு ஓட வேகமாய் அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

“இந்த ஒழுக்கம் தான் மாமா… நீ என்னை எவ்வளவு தான் நாயை துரத்தற மாதிரி துரத்தி அடிச்சாலும் உன் பின்னாடி என்னை திரும்ப திரும்ப வர வைக்குது… லவ் யூ மாமா” என்றவள் நெற்றியில் முட்டிக் கொண்டு செல்லவும் தள்ளாட்டத்திலிருந்தவன், கட்டிலின் காலில் இடித்து தடுமாறி விழப் போக, அவனைப் பிடிக்க போன இவளும் அவன் மீது தடுமாறி விழுந்தாள்.

கட்டிலில் காவ்ய நந்தன் கீழே, அவன் மேலே இலவம் பஞ்சு பொதியாய் எழில்மதி. அவளின் கோழிக் குண்டு கண்களையே விழியகலாது பார்த்தான்.

அதுவரை தன்னை கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்த அவனுக்குள் பெரும் பிரளயம் நிகழ துவங்க அவன் கைகள் மீண்டும் அவள் உடலின் மீது ஊர்வலம் செல்ல துவங்கியது.

“நானும் கட்டுப்பாடோடே இருக்கணும்னு தான் பார்க்கிறேன். ஆனால் முடியலைடி” என்றவனின் பார்வை அவளது பழுப்பு நிற கண்களின் மீதே படிந்திருந்தது.

“இந்த இரண்டும் என்னை ரொம்ப தடுமாற வைக்குதுடி…” என்றான் அவள் கண்களில் முத்து முத்தாய் இரண்டு முத்தங்களை பதித்தவாறே.

அவன் அவளுக்கு கொடுத்த முதல் முத்தம் கண்களுக்கு கிடைத்ததில் எழிலுக்குள் ஆக திருப்தி. உடல் இச்சை கொண்டிருக்கும் எவனும் பெண்ணின் கண்களில் கவனம் செலுத்த மாட்டான். அவனது தேடல் தேவை வேறாக இருந்திருக்கும்.

அவன் தன் உடலின் வளைவு நெளிவுகளில் தடுமாறாமல் கண்களில் தடுக்கி விழுந்தது எழிலுக்குள் புன்முறுவலை ஏற்படுத்தியது.

“தடுமாறிக்கட்டுமா டி?” அத்தனை போதையிலும் தன் சம்மதத்தை எதிர்பார்த்து காத்திருந்த மாமனைக் கண்டு அவள் கண்களில் காதல் டஜன் டஜனாக வழிந்தது.

“ஏன்டி என்னை இப்படி பார்த்து வைக்கிற?” என்றவன் மீண்டும் அவள் இரு விழிகளுக்கும் முத்தம் கொடுக்க சட்டென்று எழில் எழும்பி அவனின் இதழில் தன் உதடுகளை கலக்கவிட்டாள்.

அதன் பின்பு உதடுகள் மட்டுமல்ல உயிர்களும் கலக்க துவங்க, அந்த ஒரே இரவில் எண்ணற்ற முறை எழில்மதியை நாடினான்.

சோர்ந்துப் போய் விழுந்தவனை எழில்மதி தாய்மையோடு தாங்க, அவளுக்குள் ஆழப் புதைந்தவனின் விழிநீர் அவள் மார்புகளை சுட்டது.

வேகமாய் குனிந்து அவனைப் பார்க்க, “நான் தப்பு பண்ணிட்டேன்… என் கற்பு போயிடுச்சு” அவன் உதடுகள் விடாமல் அந்த ஒரே வார்த்தையை சொல்லி புலம்ப ஷாக்கடித்தாற் போல விலகிய, எழில்மதி அவன் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தாள்.

அவனுக்கு நிதானம் இல்லை. ஆனாலும் அத்தனை போதையிலும் இத்தனை நாள் கட்டி காத்து போற்றிப் பாதுகாத்த ஒன்று கை நழுவிப் போனதை உணர்ந்து அவன் விழிகளில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது.

போதையிலேயே தன் கற்பை எண்ணி இப்படி வருந்துபவன், போதை தெளிந்து நிதானம் வந்த பிறகு என்ன செய்வான்,என்பதை நினைக்க எழில்மதிக்குள் கலங்கியது.

அவன் முகத்தையே ஊடுருவிப் பார்த்தவள், ஒரு முடிவோடு எழுந்தாள்.

கீழ சிதறி கிடந்த தன் ஆடைகளை எடுத்து அணிந்தவள், அவனின் உடைகளையும் எடுத்து அணிவித்துவிட்டு அவன் முடியை ஆழமாய் கோதிவிட்டாள்.

அவள் மடியில் சுருண்டுப் படுத்துக் கொண்ட காவ்யன், விடாமல் கற்பு போய்விட்டது என்று புலம்பவும் அவன் சிகையை வருடிவிட்டவாறே, “உன் கற்பு உன் கிட்டே தான் இருக்கு மாமா… நீ அதை இழக்கல. இழக்கவும் மாட்டே” என திரும்ப திரும்ப சொல்லவும் அதுவரை உணர்ச்சிகளின் அலையில் தடுமாறி கொண்டிருந்தவன் முகத்தில் மெல்லியதாய் நிம்மதி கீற்று.

அவன் விழிகளை ஆதூரமாய் கோதிவிட்டவள், “இது எல்லாமே கனவு… இங்கே எதுவும் நடக்கலை… நீ தூங்கு மாமா” என்றவள் அவனை தட்டிக் கொடுக்கவும் மெதுவாக அவன் கண்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றது.

தூங்கும் அவனின் விழிகளையே இமை சிட்டாது பார்த்த எழில்மதி உடம்பிற்குள் கலக்கத்தின் துளிகள் வழிந்தது.

பதற்றமாய் துடைத்துக் கொண்டவளுக்கோ மனது பாரமாய் இருந்தது.

காவ்ய நந்தனின் அருகில் தான் இருப்பதை காலையில் எழுந்து கண்டால் என்ன ஆகும் என்பதை மனசித்திரத்தில் ஓட்டிப் பார்த்தாள்.

சுயநினைவற்று ஒரு பெண்ணை தொட்டதை எண்ணி குற்றவுணர்வில் தவிப்பான். அவன் தன்னால் வேதனைப்படுவதை கற்பனையில் கூட காண முடியாது விழிநீர் சிந்தினாள்.

இன்னொன்று நீ ஏன் உன் கற்பை காப்பாற்றி கொள்ள என் மீது கல்லை தூக்கிப் போட்டு ஓடப் பார்க்கவில்லை என்று கேட்பான். வேறு யாராவதாக இருந்திருந்தால் கண்டிப்பாக கல் என்ன? கல்லணையையே பேர்த்து எடுத்து வந்து தலையில் போட்டிருப்பாள்.

ஆனால் அவளை தொட்டதோ உயிருக்கு உயிரான மாமன், எப்படி அந்த காரியத்தை செய்திருப்பாள். ஆனால் இதை சொன்னால் அவன் ஏற்றுக் கொள்வானா?

அவனை அடைய தான் கீழ்த்தரமாக நடந்துவிட்டதாக நினைத்துவிடுவானோ!

அவள் முகமெங்கும் வேதனை கோடுகள் படர்ந்தது.

அது மட்டுமல்லாமல் இன்னும் கொஞ்ச நேரத்தில் காவ்யன் அசிங்கப்படுவதை காண காத்திருக்கும், தன் அண்ணனின் ஆசை நிறைவேறுவதா!

“கூடாது கூடாது” என  மனம் கூச்சலிட அந்த வீட்டிலிருந்து வெளியே செல்லுவதற்கு மார்க்கம் இருக்கிறதா என சுற்றி சுற்றிப் பார்த்தாள்.

பின்னறையில் பெரிய அறையின் ஜன்னல் ஒன்று திறந்து கிடக்க, எழில்மதி நுழையும் அளவிற்கு அது இருந்தது. நிம்மதி பெருமூச்சு ஒன்று விட்டவள், வேகமாய் வந்து தூங்கும் காவ்ய நந்தனையே  விழயகலாது பார்த்தாள்.

இவன் முகத்தை இனி இது போல் அருகில் பார்க்க முடியாதே!

எனவே நெருங்கி அவன் முக வடிவை கைகளால் அளந்தவள், “இதெல்லாம் கனவா இருக்கிறது தான் உனக்கு நல்லது மாமா… ஆனால் நீ எனக்கு கனவு மட்டும்  இல்லை மாமா…  நிஜம்! மாற்ற முடியாத, மறக்க முடியாத நிஜம்” அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவளுக்கு எவ்வளவு அடக்கியும் கேவல் வெடித்துவிட, அழுதபடியே ஜன்னலில் ஏறி வெளியே குதித்தாள்.

கண்ணீரோடு பின்பக்கமாய் வெளியே வந்த எழில்மதியை, எஸ்டேட்டின் பக்கமாய் வந்த லட்சுமி கண்டு புருவம் வளைத்தார்.

‘எதற்கு இந்த பெண் நம் எஸ்டேட் வீட்டிற்குள்ளிருந்து அழுது கொண்டே வருகிறாள்… காவ்யநந்தன் திட்டிவிட்டானோ!’ என்று நினைத்தவரால் அதன் மேல் வேறு எதுவும் பெரியதாக யோசிக்க முடியவில்லை.

தன் மகன் மேல் அத்தனை நம்பிக்கை அவருக்கு.

ஆனால் அன்று திருமண தினத்தன்று எழில்மதி கண்ணீரோடு வந்து நின்ற போது லட்சுமியின் உள்ளம் அன்று பார்த்த காட்சிப் புள்ளியையும் இன்று நடக்கும் சம்பவ புள்ளியையும் இணைத்துப் பார்க்க நேர்க்கோடு ஒன்று உருவானது. அந்த கோடு சென்ற திசையை கண்டு லட்சுமியின் உள்ளம் கலக்கம் கொண்டது.

எழில் மதி நிர்க்கதியாய் மணவறையில் நின்று கொண்டிருக்கும் காவ்ய நந்தனையே விழியகலாது பார்த்தாள்.

அவன் ஊர் முன்னால் தலை குனிந்துவிடக் கூடாது என்பதற்காக தானே, அத்தனை உண்மையையும் தனக்குள் மூடி மறைத்தாள். ஆனால் எல்லாவற்றையும் மறைத்த அவளால் தன்னையும் மீறி வளரும் அந்த வயிற்றை தடுக்க முடியவில்லை.

எழில்மதியின் வயிற்றில் வளரும் சிசு, திலக் வர்மாவின் கண்களிலும் பட்டுவிட துடித்துப் போனான்.

எழில்மதியை எவ்வளவு அடித்தும் அந்த குழந்தைக்கு காரணமானவனின் பெயரை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அவள் வாயை திறப்பதற்காக, குழந்தையை கொன்றுவிடுவேன் என்ற மிரட்டலை கையில் எடுத்தான்.

அதுவரை, மௌனம் காக்க முடிந்த எழில்மதியால் அதன் பின்னும் மௌனமாய் இருக்க முடியவில்லை. உண்மையே சொல்லவில்லை என்றால் குழந்தையை கொன்றுவிடுவான் என்ற அச்சம் அவள் வாயை திறக்க வைத்தது.

மெதுவாக அந்த குழந்தையின் தகப்பன் பெயரை எழில்மதி சொல்ல இடிந்து போய் தரையில் அமர்ந்தான்.

வாழ்க்கை வட்டம் என்பது அவனுக்கு காலம் கடந்தே புரிந்திருந்தது. தான் வைத்த கன்னி வெடியில் தங்கையின் கால் பட்டதை எண்ணி இயலாமையோடு தலையில் அடித்து கொண்டவனின் காதுகளில் ஒலித்தது நாதஸ்வர சப்தமும் மேள சப்தமும்.

வேகமாய் தன் காதுகளை மூடிக் கொண்டான்.  காவ்ய நந்தனின் திருமணத்தை ஊரே ஆர்ப்பார்ட்டமாய் கொண்டாடி கொண்டிருந்தது.

ஆனால் இன்று அவன் திருமணம் நடந்துவிட்டால், தன் தங்கையின் வாழ்க்கை?

வினா எழுந்த அடுத்த கணமே அவன் முகம் வேதனையானது.

ஒரு முடிவோடு எழுந்தவன், தன் தங்கையை இழுத்துக் கொண்டு திருமண மண்டபத்திற்கு வந்தான்.

தான் பேசுவதற்கு மறுத்து வாய் பேசினால் குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி கூப்பிட்டு கொண்டு வந்திருக்க, எழில்மதியால் எதுவும் பேச முடியவில்லை.

ஊராரின் முன்பு தலை குனிந்து நிற்கும் தன் மாமனின் தலையை நிமிர செய்யவும் முடியவில்லை. நிர்கதியாய் அவனையே வெறித்தபடி நின்றிருந்தாள்.

காவ்யன் தன் குழந்தை இல்லை என்று சொல் என எழில்மதியிடம் அன்று கெஞ்சியதை பொறுக்க முடியாமல் திரும்பி தன் அண்ணனைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கவும், வேறு வழியில்லாமல் அவன் குழந்தை என்ற உண்மையை சொல்லிவிட்டாள்.

ஏற்கெனவே சந்தேகத்திலிருந்த லட்சுமி, எழில்மதியின் பொய் பூசாத வதனம் கண்டு தெளிவுற்றவர், அதற்கு மேல் காவ்ய நந்தன் மறுத்து பேசவிட முடியாதபடி சத்தியத்தால் அணை போடவும் வேறு வழியற்று தாலியை கட்டிவிட்டான்.

ஆனால் அதற்கு அடுத்த நாளே லட்சுமியும் பாட்டியும் எழில்மதியை அழைத்து தனியாய் விசாரிக்கவும், அவர்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது.

அதே உண்மையை காவ்ய நந்தனிடம் சொல்ல போக, எழில்மதியோ தடுத்துவிட்டாள்.

“அவர் கஷ்டப்பட்டுடக்கூடாதுனு தான் இவ்வளவு நாள்  அவருக்கு தெரியாம உண்மையை மறைச்சேன் அத்தை அவர் காயப்படக்கூடாது” என்றவளின் உள்ளம் காவ்ய நந்தன் திரும்ப திரும்ப தன் வயிற்றில் வளரும் குழந்தை வேறொருவனுடையது என சொல்லியதை எண்ணி ஊமையாக அழுதது.

அவன் வார்த்தையில் ஆற்றாமையில் அரற்றிய அவள்  மனம், “குழந்தையே இல்லை போதுமா” என்று கோபத்தில் கத்திவிட்டாள்.

அவனும் அதை உண்மை என நம்பி அவளை மேலும் வார்த்தை முள்ளால் குத்து துவங்கிவிட்டான்.

எழில்மதியால் இருக்கு என்றும் சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துப் போனாள்.

அவன் அத்தனை வார்த்தைகளை கோபத்தில் விட்ட பிறகு, இப்போது சென்று உண்மையை சொன்னால் காவ்ய நந்தன் உடைந்துப் போவான் என உணர்ந்தவள் மௌனமாய் நிமிர்ந்து எதிரிலிருக்கும் பெரியவர்களைப் பார்த்தாள்.

“இந்த உண்மையை அவருக்கு தெரியாம மறைச்சுடலாம்னு நினைச்சேன் அத்தை  ஆனால் இப்போ விதி வசத்தாலே நான் அவர் மனைவி ஆகிட்டேன். இப்போ நான் போய் உண்மையை சொன்னா, தான் பேசுன வார்த்தைக்கு இன்னும் கஷ்டப்பட்டு நொடிஞ்சு போயிடுவாரு” என்றாள் எழில்மதி கண்ணில் வழியும் கண்ணீரோடு.

“அவர் உடைஞ்சு போறதை நான் பார்க்க விரும்பலை அத்தை… அப்படி அவர் உடைஞ்சு போனாலும் பக்கத்துலே இருந்து அவரை தேத்துற உரிமையிலே நான் இருக்கணும். அவர் என்னை காதலிச்ச அப்புறம் தான் நான் உண்மையை சொல்லுவேன் என் மடியிலே வெச்சு அவரை ஆறுதல் படுத்துவேன்… என் மாமாவை தனியா கலங்கவிடமாட்டேன்” என்று சொல்லிவிட்டு போனவளை பிரம்மித்து பார்த்து நின்றனர் லட்சுமியும் பாட்டியும்.

இந்தளவு தன் மாமனின் மீது நேசம் வைத்து இருக்கிறாளா!

அவர்களுக்குள் எழில்மதியை எண்ணி பெருமையும் காவ்ய நந்தனை எண்ணி கலக்கமும் ஏற்பட்டது.

காவ்யன் அத்தனை எளிதில் முடிவை மாற்றிக் கொள்பவன் அல்ல. ஆதலால் எழில்மதியை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவளை அவன் அருகில் நெருங்க வைக்கவும் முடியவில்லை.

ஆனால் அவன் அசையும் இடங்கள் இரண்டு இருக்கிறது. ஒன்று குடும்பம் மற்றொன்று கற்பு.

அதை நன்கு உணர்ந்த பாட்டி, குறிப் பார்த்து அவன் மடங்கும் இடங்களையும் கல்லால் அடித்தார். விளைவு காவ்ய நந்தன், எழில்மதியை பிடிக்காவிட்டாலும் அருகிலேயே இருக்கும்படி ஆக்கிவிட்டது.

அந்த எரிச்சலை வஞ்சனையில்லாமல் எழிலின் மீது காட்டினான். ஆனால் அவள் சிரித்த வதனத்தோட எல்லாவற்றையும் கடந்து சென்றுவிடுவாள்.

ஆனால் அன்று தன்னை மீறி, கற்பு இழந்ததை எண்ணியும் ஊராரின் முன்னார் அசிங்கப்பட்டு நிற்பதையும் வருந்தி காவ்ய நந்தன் அழுவதை கண்டு எழில்மதியின் உள்ளம் உடைந்து போனது.

முதல் முறை தன்னால் தலை குனிந்து நின்ற மாமன்.

தன்னால் ஊராரின் கேலி குத்தல் பேச்சுக்கு ஆளாகிய மாமன்.

கற்புக்காக கண்ணீர் வடித்த அவள் மாமன்.

என்னை மிருகமாக மாற்றாதே என கெஞ்சிய மாமன். என வரிசையாய் அவள் மாமனின் வருத்தங்களும் வேதனையும் அடுக்கடுக்காய் தோன்றி மறைய, எழில்மதி நிலை குலைந்துப் போனாள்.

தான் அருகில் இருந்தால் காவ்யனின் நிம்மதி இன்னமும் கெடும் என உணர்ந்தவள் அவனை பிரிய முடிவெடுத்துவிட்டு, அதை பாட்டி அத்தையிடம் சொல்லியும் விட்டாள்.

ஆனால் அவனோடு இருக்க காலம் மேலும் ஒரு நாள் வாய்ப்பளிக்கவும் சந்தோஷமாக கிளம்பிய எழில்மதியோ, திரும்பி வரும் போது மொத்த மகிழ்ச்சியையும் இழந்திருந்தாள்.

அவள் சந்தோஷத்தை பறித்தவன் தான் தான் என்ற உண்மை புரிய காவ்ய நந்தன் குனிந்து தன் விரல்களைப் பார்த்தான். அதில் அவளை கீழே தள்ளிவிட்ட ரேகைகள் இருக்க அந்த ஆறடி ஆண்மகனோ தன்னை மீறி தலையில் அடித்துக் கொண்டு கதற ஆரம்பித்தான்.

“எனக்கு உண்மை தெரியாதேடி. தெரிஞ்சு இருந்தா உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக விட்டு இருக்க மாட்டேனே” என தலையில் அடித்துக் கொண்டு அழுதவனை தேற்ற வழியற்று நின்றிருந்தனர் குடும்பத்தினர்.

Leave a Reply

error: Content is protected !!