தேன் பாண்டி தென்றல் _ 16

தேன் பாண்டி தென்றல் _ 16

16

மறுநாள் மேமிடம் கையில் காலில் விழுந்து அடுத்த பேட்ச்சுடன் இணைந்து கொண்டாள். அதுதான் கடைசி பேட்ச் வேறு.

“ இதுக்கு மேல உங்களை கட்டி மேய்க்க எங்களால ஆகாது. இதோட முடிச்சிக்குவோம்” என்று புலம்பிவிட்டார்கள் வார்டன்கள் இருவரும்.

‘ நாம போறது வாரதுலாம் எப்டி தெரிஞ்சிருக்கும் இந்த ஏஎம் க்கு?அசிஸ்டன்ட் மேனஜரை இந்த மேனிக்கு சுருக்கி இருந்தாள் அவள்.

‘ வாட்ச்மேன் கிட்ட இல்ல ஆயாம்மா கிட்ட கேட்டா சொல்லிட்டு போறாங்க. இவரு ஒன்னும் வெளி ஆள் இல்லையே? என்னமோ இந்த காலேஜ் பிரின்சிபலே இவருதான்ற மாதிரி பில்ட் அப் குடுக்கிறவருதானே?

‘வைக்கப்பில்ல கண்ணுல காட்டுனா ஆடுங்க தானா வாய திறந்துட்டு போகுது ‘ என்று வாட்ச் மேன் மற்றும் ஆயம்மாவை திட்டவும் மறக்கவில்லை இவள்.

சர்க்கசிர்க்கு போய் தானே முன்வந்து அவரவர் காசில் எல்லோருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு ஒரு பாக்கெட் பாப் கார்னையும் கையில் வைத்தவள் ‘ என்ன ஏ எம் இன்னும் வரல போல?’ என்று கண்களால் துழாவினாள்.

அன்று சரவணன் சாரிடம் சர்க்கஸ் மிகவும் பிடித்திருப்பது மீண்டும் ஒருமுறை பார்க்கப் பௌதாகச் சொல்லிவிட்டு கிளம்பினான் பூதப்பாண்டியன்.

“ நேத்து உன்னை பாத்தப்போ அப்படி தெரியலியே?” என்று அவர் தாடையை சொறிய _

“ நேத்து நீங்க எங்க பாத்திங்க சார்? அதான் போனதும் தூங்கிட்டிங்கல்ல?” என்று முடித்துவிட்டு கிளம்பி இருந்தான்.

தூரமாக நின்று பார்த்ததில் அவள் கையில் பாப்கார்னுடன் இவனை தேடுவது கண்டு நெஞ்சம் துள்ளி விட்டது பூதப்பாண்டியனுக்கு.

அவனை அலுவலக காரணங்களுக்காக பலர் தேடுவார்கள்தான். சரவணன் சாருக்கும் இவனை பிடிக்கும்தான்.ஆனால் தன் குடும்பம் என்று வரும்போது இவனை தள்ளிதான் நிறுத்தி இருப்பார் என்றே இவனுக்குத் தோன்றும்.

இவன் அம்மாவிற்கு இவன் மீது பாசந்தான். அதைவிட சொந்த மண் மீது அதிக பாசம் என்பது இவன் நினைப்பு. அதுதான் இவனுடன் இல்லாமல் சொந்த ஊருக்கு போய் விட்டார் என்று அங்கே போகும் போதெல்லாம் புலம்பி விட்டு வருவான்
என்ன செய்ய? சென்னை ஒத்துக் கொள்ளவில்லை இவன் அன்னைக்கு.
ஆனால் இவனுக்கு மதுரையிலேயே பெண்ணை பார்த்து அங்கேயே இவனையும் இருத்தி வைக்க அவருக்கும் ஆசைதான்.

அது அவ்வப்போது அவர் பேச்சில் வெளிப்படத்தான் செய்யும். இவன் அதை கண்டு கொள்ள மாட்டான்.

ஆனால் இங்கே இவனை ஏக்கமாக ஒருத்தி விழிகளால் தேட அவள் எவ்வளவு நேரம் தேடுகிறாள் எனப் பார்க்கும் ஆவல் அவனையும் மீறி வந்தது அவனுக்கு.

சர்க்கசிற்கு பெல் அடித்து நிகழ்ச்சி ஆரம்பித்ததும் விட்டது. அவன் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் ‘ ஒருவேளை இந்த ஏஎம் வரலியோ? கரெக்ட்டு! நம்மளை வச்சு காமெடி பண்ணிருக்கு. அது தெரியாம நாமளும் நல்ல பிள்ளையா வாங்கினது திருப்பி குடுக்க வந்திட்டோம்.

என்னமோ இவரு பேங்க்ல பத்து லட்சம் லோன் வாங்கிட்டு ஏமாத்துன மாதிரி நமக்கு நினப்பு கழுத வேற!’

அவள் இவனை தேடுவதை நிறுத்தவும் அவளது வாட்சப்புக்கு குறுந்தகவல் ஒன்று வந்த நோட்டிபிகேஷன் ‘ வெறும் பொய்யா சொல்லிகிட்டு இருக்கான் ‘ என்று சத்தம் கொடுத்தது.

 

‘ என்னாவாம்?’ என்று எடுத்து பார்க்கப் போனவள் பக்கத்தில் இருந்த மேமைக் கண்டு தயங்க அவரோ இவளை குறுகுறு என்று பார்த்துக் கொண்டு இருந்தார்.

‘நம்ம வச்சிருக்கிற நோட்டிபிகேஷன் டோன் அம்புட்டு நல்லாவா இருக்கு ‘ என்று பெருமைதான் அவளுக்கு.

“ மேம். ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்திர்றேன் “ என்று வாயில் வந்த பொய்யை சொல்லி கிளம்பினாள்.

உண்மையில் அவள் பொய் சொல்லி இருக்க மெஸேஜில் அவளை அப்படி சொல்லிவிட்டு வெளியே வர சொல்லி இருந்தான் பூத்தப்பாண்டியன்.

‘இவன் வேற’ என்று சலித்துக் கொண்டு திரும்பினாள் தென்றல்.

அங்கே ஆஜர் ஆகி இருந்தான் அவன்.

“ படிக்கிற புள்ளய ஏன் பொய் பேச வைகிங்க? இதுலாம் தப்பு தெரியுமா ?என் நம்பர் எப்படி கிடைச்சது?”

“ சரி சரி நீ நல்லவதான். நம்பிட்டேன். “ என்றவனை முறைத்தாள் தென்றல்.

“ ஏது என் நம்பர்?”

“ உன் நம்பரை நீயே தானே எனக்கு குடுத்த?”

“ அது பேங்க் ஆபீசர்னு நம்பி குடுத்தது. இப்டித்தான் அதை என்னை மிரட்ட யூஸ் செய்விங்களா?”

“ நீ மட்டும் ஆபீஸ் நம்பர்க்கு ஃபோன் செய்து என் பேரை கேக்கலாமா?”

“ நானும் நீங்களும் ஒண்ணா? உங்களுக்கு சமூகத்திலே பொறுப்பு இருக்கு. கடமை இருக்கு” என்று அவனை டைவர்ட் செய்யப் பார்த்த தாள்.

‘ஏஎம் போற போக்கு சரி இல்ல. தப்பிச்சிரு தென்றலு ‘. அவள் சுதாரிப்பதற்குள்

“ எதுக்கு வள வள ன்னு பேசிக்கிட்டு? டைரக்ட்டா சொல்றேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, எப்போ என்னை கட்டிக்கப் போறே?” என்று அவன் போட்டு உடைக்க இவளுக்கு உடம்பு நடுங்கி விட்டது.

அவள் ‘திரு திரு ‘ என்று விழிப்பதைப் பார்த்து அவனுக்கே பாவமாக இருந்தது. கொஞ்சம் சீக்கிரம் சொல்லிவிட்டான் தான்.

அதற்காக எத்தனை நாள் தான் சொல்லாமல் இருக்க முடியும்

அன்று அவள் தொலைபேசியில் அவன் பேரை கேட்டதுமே மனதிலே ஒரே பாட்டுதான் அவனுக்கு.

அவனுக்கும் பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவனும் மனிதன் தானே?

தாமரை போன்ற முகத்தை வைத்துக் கொண்டு ‘உன் பேர் என்ன?’ என்று ஒரு இளம் பெண் அவனை சுற்றி சுற்றி வந்தால் அவனும்தான் என்ன செய்வான்?

எப்படியும் இவன் கல்யாணத்திற்கு அம்மா எதிர்ப்பு சொல்ல மாட்டார். அது உறுதி அவனுக்கு.

“ நாங்களே லவ் மேரஜ். நீயும் லவ் மேரேஜ் செய்றதுல எனக்கு எந்த சங்கடமும் கிடையாது. எனக்கு ஒரு வேளை மிச்சம்” என்று சொல்லிவிட்டார். இவன் மாமாதான் இவனுக்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவரும் இப்படி என்று சொன்னால் ஒத்துக் கொள்ளுவார்.

“ சரி முழிச்சது போதும். கிளம்பு. “

“. சார். இது அராஜகம்” என்றால் _

“ அப்போ எனக்கு ஒ. கே. இங்கேயே நில்லு. பேசிட்டே இருக்கலாம்” என்று கூலாகச் சொன்னான்.

“நான் …நான்… நீங்க என்கிட்ட எப்டி பேசுறிங்கனு புகார் பண்ணுவேன்”

“யார்கிட்ட?”

“ வந்து… உங்க மேனஜர் கிட்ட”

“ நீ முதல்ல வா. அப்புறம் புகார் பண்ணுவியாம் “

அவள் மேலே ஒன்றும் சொல்லாமல் கிளம்பி விட்டாள்.

அதன் பிறகு அவளும் வருவாள் வருவாள் என்று இவன் வங்கியில் காத்திருக்க ஆளையே காணவில்லை.

மெசேஜ் போட்டாலும் பார்க்கிறாள். ஆனால் பதில் இல்லை.

அவளுக்கு முதலில் மெசேஜ் அனுப்பியதில் இருந்து இவன் டிபி யாக இவனது படத்தையே இன்னும் வைத்திருக்க ‘ நம்ம நம்பர்னு நல்லா தெரிஞ்சும் பாக்கிறாதான்.

அப்புறம்’ எம்’ னு ஒரு எழுத்தை தட்டறதுக்கு என்ன?’ என்று குமைந்தான்.

‘ ஆபீஸ்ல வந்து வத்தி வப்பாலாம். முதல்ல நீ வா. வச்சுக்கிரேன், மிஞ்சி மிஞ்சி போனா வார்ன் பண்ணுவாங்க. அட வேலயே போனாலும் தான் என்ன?

பாத்துக்கரேன் அவளா? நானானு?

முளைச்சு மூனு இலை விடாத சில்வன்டு! பேச்சைப் பாரு. ‘
ஆனால் அவளுக்காக கவிதை மட்டும் எழுதி குவித்தான்.

‘வடை வச்சு சாப்பிடக் கூட ஆகாது இந்த பேப்பர் ‘ என்று பின்னொரு நாள் அவள் அவற்றை அணைத்துக் கொண்டே நெகிழ்ச்சியுடன் கூறிய போது அவன் அகமெல்லாம் குளிர்ந்து விட்டிருந்தது.

ஒரு வழியாக வெகேஷனுக்கு ஊருக்கு போவதற்கு முதல் நாள் வங்கிக்கு வந்து விட்டாள்.

 

இவனுக்கு சுவாரசியமாக இருந்தது. அப்படி என்ன செய்வாள் என்று பார்ப்போம் என்று நினைக்க_

ஒரு பணியாளர் அவளை அவனது அறைக்கே அனுப்பி வைத்ததை கண்ணாடி தடுப்பு வழி பார்த்து சிரித்துக் கொண்டான்.

“என்ன விசயம்?” என்றான் நேரிடையாக அவளைப் பார்த்து.

“உங்க ஸ்டாஃப் பத்தி கம்ப்லைன்ட் குடுக்கணும்”

“இத அப்படியே வெளிய சொன்னியா?” என்று இவன் பதறி கண்ணாடி தடுப்புக்கு வெளியே சுற்றும் முற்றும் பார்த்தான்.

அவரவர் அவரவர் வேலையில் ஆழ்ந்திருந்தனர்.

“ அந்த பயம்” என்று சிரித்தாள்.

அன்று சரவணன் சார் ஒரு வெரிபிகேஷன் போயிருந்தார்.

பார்த்திருந்தால் அப்போதே கண்டு பிடித்து இருப்பார் _ இவன் லட்சணத்தை.

“ அன்னிக்கு கெத்தா பேசுன மானஸ்தன எங்க காணோம்?” என்று அவள் முகம் மாறாமல் கேட்டதும் _

“ அவன் கிடக்கான் ஆகாவழி. ஆமா உன் நிஜ பேரே தென்றல் தானா? இங்கே இருந்து இந்த பேரை நீ பிடிச்ச?”

“ இது நிஜப் பேரு இல்லையே? இந்தப் பேரு வீட்டுக்கு பக்கத்துல விளையாடிட்டு இருந்துச்சு. பைக்குள்ள பிடிச்சு போட்டுட்டேன்”

அப்புறம் மெது மெதுவே அவளை அவன்பால் திருப்பி விட்டான்.

தகப்பன் இல்லாமல் வளர்ந்த அவளுக்கும் இந்த ஆணின் கரிசனையில் பூரித்தது மனம்.

தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்த்த அன்னை தனது மனம் கவர்ந்தவனை மருக்க மாட்டார் என்று நம்பினாலும்

அவ்வப்போது’ அம்மா அம்மா’ என்று புலம்புவாள்.

“ இந்தா. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம். ஆண்டி. அது மாதிரி நான் உண்டு. என் வேலை உண்டுனு இருந்தவனை பேரைச் கேட்டது நீ. பேரை தெரிஞ்சுக்க என்ன சுத்தி சுத்தி வந்தது நீ. என்ன சீண்டும் போது நல்லா இருந்துச்சு. இப்போ மட்டும் அம்மாவ நினச்சு பயம் வருதோ?

இந்த பயம் அன்னிக்கே இருந்துருக்கனும்.

இனி பயந்த? மவளே கழுத்தை நசுக்கி கொன்னுறுவேன்”

என்று இவன் கடித்து வைக்கவும் தான் கொஞ்சம் அடங்குவாள்.

எப்போதாவது வங்கிக்கு வருவாள்.

முகம் சாதாரணமாக இருந்தாலும் அவள் கண்கள் இவனுக்கான தேடலை யாரும் அறியாமல் மேறக்கொள்ளுவதை ஆனந்தமாக ரசிப்பான்.

 

 

இப்படி இவன் காதல் பயிரை வளர்த்துக் கொண்டிருந்த போது தான்

சரவணன் சார் தனது மகளுக்கு இவனை மண மகனாக கேட்க

இவன் மறுத்த வேகத்தில் சிரித்து விட்டார்.

“ பயப்டாத. எனக்கு நீ அதுக்கு ஒத்து வர மாட்டேன்னு தெரியும்.

தவிர பாப்புக்கு இப்போ கல்யான வயசும் இல்ல தான்

உன் மனசில வேற ஏதோ _ யாரோ இருக்ககங்கனு தெரியும். உன் முகம் சொல்லுது. யாரு என்னனு நான் கேட்கலை. ஆனா உனக்கு ஒரு உதவி வெனும்னா என்னை கூப்பிடுவேன் நம்புறேன்.”

அவர் பேச பேச மாறிய அவன் முக பாவங்கள் அவர் எண்ணத்தை உறுதி செய்ய _

“ தப்பில்ல. ஆல் த் பேஸ்ட் ஃபார் யூர் பூசர்

இது உன் மேடம் அதான் என் வீட்டுக் காரி கெக்ககச் சொன்னது. அவ சொன்னா. நான் செய்திட்டென். இது சரி வரதுனு போலிஷ் சா சொல்லி வச்சிருக்கேன்.

முடியவே முடியாதுனு என்னால அவகிட்ட சொல்ல முடியாது. அட நீ வந்து சொல்லு.

வேற ஏதும் சொல்ல வேணாம். உன்னை உரிமையா சட்டுனு பொண்ணுக்கு கேட்டுட்டா.

அதால தான் உன்னை கூப்பிடுறேன்.

இந்த விசயம் வீட்ல பசங்களுக்கு தெரியாது.

சோ சும்மா நம்ம வீட்டுக்கு ஊரை சுத்தி பாக்க வந்த மாதிரி வந்து சொல்லிடு”

என்று அவர் நீளமாக பேசியதில் மனைவியின் மீதான அவர் நேசமே அவனுக்கு முதன்மையாக புரிந்தது.

அவர் அவனை ஒரு ரெஸ்டாரன்ட் டுக்கு அழைத்து வைத்து இதை சொல்லியிருக்க அதை சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டவன்

“மேடம்க்கு இருக்குற நம்பிக்கை உங்களுக்கு இல்லையே?” என்றான்
சரவணன் அதிர்ந்து விழித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!