தேன் பாண்டி தென்றல் _ 18

தேன் பாண்டி தென்றல் _ 18

 
18
 
“ அப்போ தென்றலை சென்னையில இருந்து கூட்டிட்டு நம்ம காலனிக்கு வந்துதான் இந்த மல்லிகாம்மா அவளை கொடுமைப்படுத்தி இருக்கு. ஆனா என்ன சொல்லி கூட்டிட்டு வந்திருக்கும் தெரியலியே? ஒருவேளை ஒன்னும் சொல்லாம கூட்டிட்டு வந்திருக்குமோ?” என்று கேட்ட தேன்மொழிக்கு ‘இருக்கலாம்’ என்பதாகத் தோள்களைக் குலுக்கிக் காட்டினான் அழகிய வீர பாண்டியன்.
 
“வாயைத் தொறந்தா முத்து உதிர்ந்திடுமா என்ன?  பாண்டியன்னு பேரை வச்சதால முத்தை பத்திரமா பாதுகாக்கறீங்களோ?”  
 
“ஆத்தீ! நான் ஏன்டி முத்தை பாதுகாக்கப் போறேன்? நீ ‘உம்’முனு ஒரு வார்த்தை சொல்லு. என் சொத்தை உன் பேருக்கு எழுதுறேன்?”  என சிரிக்க – தேன்மொழி முறைத்தாள்.
 
“ம்க்கும்!  ஆ…. ஊன்னா இப்படி முறைக்க மட்டும் பழகியிக்க. இப்ப என்ன சொல்லிட்டேன்னு முறைக்கிற?”
 
“யாருக்கு வேணும் உங்க சொத்து?”
 
“வேற யார் கேட்டாலும் கிடையாது. அது என் பொண்டாட்டி உனக்கும் நமக்குப் பொறக்கப் போற நாலு புள்ளைங்களுக்கும்தான்”
 
“ ஆசைப்படலாம். ஆனா பேராசைப்படக் கூடாது. நான் உங்களுக்குப் பொண்டாட்டியா?”
 
“இப்ப இல்லை. ஆனா சீக்கிரம் ஆகிடுவ. அதை முன்கூட்டியே சொன்னேன்”
 
“உங்க கிட்ட வழக்காட என்னால ஆகாது. இப்ப எனக்குத் தெரிய வேண்டியது நம்ம தென்றலைப் பத்தி. அவ அவங்க அம்மா கூட போனதுக்கு என்ன காரணமா இருக்கும்?”
 
“லூசா நீ. அதை அவ சொன்னால்தான் தெரியும்? அது மட்டுமில்ல மல்லிகாம்மா ஏன் இப்படி மாறுனாங்க? அவ ஏன் இப்படி ஆகிட்டா ? இது எலலாமே அவதான் சொல்ல முடியும்னு நினைக்கிறேன். 
 
ஒருவேளை டாக்டர்ஸ் கண்டுபிடிக்கலாம். அது அத்தனை சீககிரம் நடக்குமான்னு தெரியலை.”
 
“ஒன்னும் தெரியாம இங்க இருக்கதுக்கு கடையில உக்காந்து பொட்டலமாச்சும் கட்ட வேண்டியதுதானே?”
 
“நம்ம கடையில பொட்டலம் மடிக்கிறது என்ன? பெருக்கி கூட்டறது கூட செய்வேன். ஆனா நான் எப்படி ஒன்னும் தெரியா சும்மா இருந்தேன்? “
 
“பின்னே நீங்க இத்தனையும் ஆய்ஞ்சு அறிஞ்சு  கண்டு பிடிச்சீங்காளக்கும்? பூதப்பாண்டியன் அண்ணா சொல்லவும்தான் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. அதை அப்படியே கேட்டு இப்படியே இங்க ஒப்பிச்சா நீங்க பெரிய ஹீரோவாக்கும்.”
 
“நான் என்ன செஞ்சாலும்தான் என்னை நீ ஹீரோ ஆக விட மாட்டேங்கிறியே? அந்த போஸ்ட்  எனக்கு வேண்டாம். “
 
“வேற எந்தப் போஸ்ட் உங்களுக்கு வேணுமாம்?”
 
“ஏன் வேற எந்த போஸ்ட் வேணும்னு தெரியாதா உனககு? ரொம்ப பண்ணாதடி. எனக்கு உன் புருஷன்ங்கிற போஸ்ட் தான்; வேணும்.”
 
“ரிஜக்ட்டட்”
“என்னது?! சரி விடு. உன் காலைக் காட்டு. பொத்தடீர்னு விழுந்துர்றேன். அப்புறமாச்சும் மனசு மாறுதா பாப்போம்” அவள் மனது மாறியது புரியாமல்தான் இவ்வளவு பேசுகிறானக்கும்? 
 
“போதும் பில்டப்பு. பொழச்சுப் போங்க” என்று தேன்மொழி சொன்னபோது அவள் உதட்டோரச் சிரிப்பைக் கண்டு கொண்டு ஆனந்தமாகச் சிரித்தான் வீர பாண்டியன்.
 
 
 “அடிக் கள்ளி. சொல்லவே இல்ல”
 
“கொலை பண்ணிருவேன். “  என்று முணுமுணுத்தாள் தேன்மொழி.
 
“இனிநீ குடுக்கற எல்லா போஸ்ட்டும் அக்சப்படட் வித் லவ் தேனும்மா”
 
 
இத்தனை பேசியதில இருவருக்;குள்ளும் தடை அகன்று போயிருந்தது. இருவருக்கும் தங்கள் சொந்தம் மனதினுள் பிரிக்க முடியாத முடிச்சானது என்பது முடிவானது.
 
 
தேன்மொழிக்கு இந்த பேச்சுக்கள்; புதிதாக இருந்தாலும் உறுத்தவில்லை. இனிமையாகவே இருந்தது. எப்படியும் அழகிய வீர பாண்டியனைத்தான் மணப்பது என்ற முடிவுக்கு ஏற்கனவே அவள் வந்திருந்தாள்தான்.
 
அதில் தென்றல் தலையிட்டாலும் கூட அவள்மனது மாறாது என்பதை நினைத்துத்தான் அவளுக்குக் கலக்கம் இருந்தது.
 
இப்போது அவன் அவளுக்கே அவளுக்கு மட்டும். அதில் நெஞ்சம் பூரித்தது. அது முகத்திலும் ஜொலித்தது தெரிந்தது.
 
 
 
 
அழகிய வீர பாண்டியனுக்கு மனம் முழுதும் மகிழச்சி நிரம்பிக் கிடந்தது. தெனறலுக்கு ஒரு நல்ல வாழக்கை அமைத்துக் கொடுத்துவிட்டால் போதும். 
 
அவன் தன் மனதுக்குப் பிடித்த தேன்மொழியை மணந்து கொண்டு விடுவான்.
 
அவளுக்கு கூட்டுக் குடும்பம் பிடிக்கவில்லை என்றால் 
தாய் தகப்பனுடன் கூட்டுக் குடும்பம் எல்லாம் இருந்து சண்டையை சல்லியத்தை போடாமல் தனியே போய்விட வேண்டும். என்ற நினைத்திருந்தான். 
குழந்தைகளை மட்டும் அம்மா வீட்டில் விட்டு வளர்க்க வேண்டும் என்று நினைத்து வைத்து இருந்தான்.
அதே நேரம் பெற்றவர்களை விட்டுப் பிரியவும் முடியாது என்று தன் தனிக் குடித்தனத்திற்காக  அவனது வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு நடுத்தர வீட்டை விலை பேசி முடித்திருந்தான். தற்போது அதற்கு பட்டி டிங்கரிங்க் – அதாவது மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
 
ஆனால் கூட்டுக் குடித்தனத்தில்தான் இருப்பேன் என்று தேன்மொழி ஒற்றைக் காலில் நிற்பாள் என்பதாக  அவன் கனவு கினவு ஒன்றும் அப்போது கண்டிருக்கவில்லை.
 
“தேனம்மா”
 
“அதென்ன ஒரு சமயம் தேனும்மாங்கிறீங்க. ஒரு சமயம் தேனம்மாங்கிறீங்க. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”
 
“ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை. தேனும்மானா உன்னை கொஞ்சறேன். சரி . சரி. முறைக்காதே தேனம்மானா .. அதை கல்யாணத்துக்கு அப்புறம் சொலறேன்”
 
“எதும் ஏடா கூடமா பதில் வந்துச்சு…. அன்னிக்கு வச்சுக்கறேன் கச்சேரிய”
 
“உன் இஷ்டம்” என்ற விட்டுக் கொடுத்தான்.
 
பாவப்பட்ட தேன்மொழி அதை நம்பி அதோடு விட்டாள். 
 
 
“வல்லவராயன் வந்தியத் தேவன் குதிரையில போன மாதிரி நாம இந்த கார்ல போய்கிட்டே இருக்கோமே? இதுக்கு ஒரு எண்டகார்ட் இல்லியா?” என்று தேன்மொழி உச்சு கொட்டினாள்.
 
“வல்லவர் ரேஞ்சுக்கு நம்மால ட்ராவல் பண்ண முடியாது தேனும்மா. ஆனா நீ கேட்ட எண்ட்கார்ட் ஏன் வராம? இப்ப வந்திடும். நாம இன்னிக்கு ஹாஸ்பிட்டல் போகும் முன்ன ஒரு ஆளை மீட் பண்ணப் போறோம். அதுக்குத்தான் இங்க வந்திருக்கோம்”
 
“ஏன் அவங்க ஹாஸ்பிட்டல் வர மாட்டாங்களாமா?”
தென்றல் இன்னும் தூங்கிக் கொண்டு இருக்க அருகில் இருந்த தேன்மொழி  அவளுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்ற முன்னுக்கு வந்திருந்து இவனுடன் வாயாடிக் கொண்டு இருந்தாள். 
 
“கண்டிப்பா வருவாரு. ஆனா தென்றல் ஹாஸ்பிட்டல் போனா கொஞ்சம் பயப்படுவா. அது நமக்கே பாக்க மனசு பொறுக்காது. இவ்வளவு நாள் கழிச்சப் பார்க்கிறவர் முதல்ல அவளை அப்படிப்  பாக்க வேண்டாம்னுதான் இங்க வர சொன்னேன். அவரும் ஷார்ட்கட்ல வந்திட்டு இருக்காரு.
 
“எவரு அந்த சுவரு?”
 
“ கிறுக்கி கிறுக்கி. அது பூதப்பாண்டி சார்டி”
 
தேன்மொழி இவனைக் கூர்ந்து பார்த்ததோடு நிறுத்திக் கொண்டாள்.
 
“ஏன் இவ்வளவு நாள் எஙக போனாராம் அவரு?”
 
“உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு. இதைத்தான் நீ சுத்தி சுத்தி பல ஆங்;கிள்ல கேட்டுட்டியே? அவருக்;கு திடீர்னு மயிலாடுதுறைல ட்ரான்ஸ்பர் வந்திருச்சு. இவர் மானேஜர் இங்க போயிருக்க வேண்டியது போல . ஆனா அவர் அந்த டைம் அவர் ஒய்ப்க்கு ரொம்ப உடம்பு சரியில்லனு கோவைக்கு மாத்தல் வாங்கிட்டுப் போயிட்டாராம். இவரால வந்த ட்ரான்ஸ்பரை மறுக்க முடியலை. 
 
தவிர தென்றலும் சரி அவரும் சரி அவங்க லவ் மேட்டர்பத்தி மல்லிகாம்மாகிட்ட அதுவரை சொல்லியிருக்கலைனு அவர் நினைச்சிக்கார்.”
 
“என்ன இருந்தாலும்…”
 
“ரொம்ப கஷ்டம். உன்னை வச்சு நான் சமாளிக்கப் போறது. அவரை ஏன் நீ நல்லவர்னு ஒத்துக்க மாட்டிக்கிற?”
 
கேட்டுக் கொண்டு இருந்த தேன்மொழி அவனை நோக்கி உறுத்து விழித்தாள்.
 
“ஏன் நம்ப மாட்டேங்கிறனா? எப்படி நம்ப முடியும்? உங்ககிட்ட நான் சொல்ல வேண்டாம்னு நினைக்கலை. சொல்ல முடியலை. அவ ….தோள்பட்டையில பாண்டினு பேரை பச்சை குத்தி இருக்கா. சட்டுனு பாத்தா அது கிடார் படம் மாதிரி தெரியும் . இவ்வளவு  ஒரு பொண்ணு மனசைக் கெடுத்தவன் அவ இருக்காளா செத்தாளான்னு கூடப் பாக்காம இத்தனை நாள் எங்க ஓடி ஒளிஞ்சானாம்?” 
 
படபடவென்று பேசியதில் ஒருமையாய் அவள் பூதப்பாண்டியைப் பற்றிப்; பேசிவிட வண்டியும் நின்றுவிட்டது.
 
 
தேன்மொழி என்னவெனப்  பார்;க்க அங்கே ஹெல்மெட்டைக் கழற்றியவாறு நின்று கொண்டு இருந்தான் பூதப்பாண்டியன்.
 
 
 
 
 
அந்த மனநல மருத்துவமனையில் விசிட்டர்ஸ் பிரிவில் அமர்ந்து இருந்தனர் தேன்மொழியும் அழகிய வீரபாண்டியனும். 
 
“விசிட்டர்ஸ் அவர்க்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. அதுக்கு முன்ன விட்டா தேய்ஞ்சிடுவாங்காளா?” என்று முணுமுணுத்தாள் தேன்மொழி.
 
“எனக்கு மட்டும் என்னம்மா தெரியும்? ஒருவேளை அவங்க ரொட்டீன் பாதிக்குமோ என்னவோ? நான் மட்டும் உன்னை மாதிரி  இங்க வந்து பழகியா இருக்கேன்?” 
 
தேன்மொழி ஓரளவு அந்த மனநல மருத்துவமனையின் விபரங்கள் அறிந்து வைத்திருப்பாள்தான.;  இதுவரை அவள்தான் தென்றலை கவனித்துக் கொண்டாள். அதனால் இந்த விபரங்களும் அவளுககுத் தெரிந்திருந்தது.
 
உண்மையில் அதுதான் விசயம். தங்கள் ரொட்டீன் மாற்றாமல் பார்வையாளர்கள் நேரத்தை வைத்திருப்பார்கள் அந்த மருத்துவமனையில் .
 
“மச்சான் சொன்னதும் தங்கச்சியப் பாக்கனும்னு துடியா துடிச்சிங்க. ஆனா நேரத்தைப்  பாருங்க. அது   சரியாத்தான் போகுது” என்ற நக்கல் அடித்தாள்.
 
இப்போது பூதப்பாண்டியன் வந்ததும் முதலில் கிடைத்த நல்ல நாளில் கோவிலில் வைத்து தென்றலை தன்மனைவியாக்கிக் கொண்டு தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான். 
 
போனவன் ஒரு குடித்தனத்தைப் பார்த்து வைத்தானா? என்றால் அதுவும் இல்லை. இங்கே அட்மிட் செய்துவிட்டான்.
அது அவன் மனதை சொல்லாமல் சொல்லிவிட்டது. அதே சமயம் இவன் கையைப் பிடித்துக் கொண்டு “உங்களுக்கு ரொம்பகடமைப் பட்டிருக்கேன். என் நன்றியை என்னால வெறும் வார்ததையால சொல்லவே முடியாது. என் உயிரை மீட்டுக் குடுத்திருக்கீங்க” என்று கண்கள் பனிக்கப் பேசியபோது தேன்மொழி அவனை குறுகுறு என்று பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
 
அவளையும் பார்த்தவன் “இவ்ளோ நாள் ஏன் வரலை? அதானே உன் கேள்வி தங்கச்சிமா? ஒன்னும் ரொம்பப் பெரிய காரணம் இல்லமா. பர்ஸ்ட் ஒர்க். அதையும் தாண்டி அவளைத் தேடுனேன். காலேஜ்ல டிஸ்கண்டினியூனு சொன்னாங்க. அவ அம்மா கூட்டிட்டுப் போனதா சொன்னாங்க.
 
எல்லாத்துக்கும் மேல அவ போகும்போது என்கிட்ட ஒன்னும் சொல்லலை. தவிர ரொம்ப சந்தோஷமா போனதா அவ ப்ரன்ட்ஸ் சொன்னாங்க. நான் பெரிசா தப்பா நினைக்க ஒன்னும் இருக்கற மாதிரி தோணலை. வேற காலேஜல் அவ ஊர்ல படிக்கப் போறதா அடிக்கடி சொல்லி என்னை டெ;ஷன் பண்ணுவா முன்னலாம். அப்படித்தான் போலன்னு நினைச்சேன்.  
 
இங்க இருக்கற வசதிக்கு அவ அங்க வந்ததே அதிசயம்தான்.  நான்  போன் பண்ணப்பலாம் ‘நாட் ரீச்சபிள்’னு வந்துச்சு” என்றவன் சோபாவில் இவள் சொல்லாமலே உட்கார்ந்து கொண்டான். 
 
அந்த ஆயாசம் சொன்னது – அவன் எத்தனை முறை அவள் எண்ணுக்கு முயன்றிருபு;பான் என்பதை.
 
அவர்கள்  அப்போது அந்த மருத்துவமனையின் ஹாலில் நின்ற பேசிக் கொண்டு இருந்தனர். தென்றலை அப்போதுதான் அட்மிட் செய்திருந்தான். 
 
அங்கே இருந்த வாட்டர் பில்டரில் தண்ணீர் பிடித்துக் கொடுத்தாள் தேன்மொழி. 
 
 
அதை வாங்கிக் குடித்துவிட்டு அவளைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான். அதில் அழகிய வீர பாண்டியன் முகம் சற்று சிவக்கவும் வாய்விட்டு சிரித்து விட்டான்.
 
அந்த சமயம் தேன்மொழியின் அம்மாவின் போன் வரவும் தனியாகப் போய்ப் பேசப் போனாள்.
இங்கானால் பூதப்பாண்டியன் அழகிய வீரபாண்டியனைப் பார்த்து- 
“எதுக்;கு பாஸ் முறைக்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டு இருந்தான். 
 
“என் தேனு தனக்கு ஒரு அண்ணன் கிடைச்சிட்டான்னு அத்தனை சந்தோசப்பட்டா. இப்பவும் உங்களை அவளுக்கு அத்தனை பிடிக்குது. ஆனா நீங்க?”
 
“ஏன் நான் என்ன பண்ணேன்?”
 
“ஒன்னும் பண்ணலை?”
 
“இல்லியே?” என்று திருதிருத்தவனைப பார்த்து மீண்டும் மீண்டும் முறைத்தான் வீர பாண்டியன்.
 
 
 “இதுலாம் உங்களுக்கே நியாய….”
 
“ம் தான் ” என்ற உறுமினான் அழகிய வீர பாண்டியன்.
 
“நீங்க சொன்னாலும் சொல்லலைனாலும் அவ என் தங்கச்சிதான்;. ஆனா சம்பந்தமில்லாம  எதுக்;கு முறைக்கிறீங்க?”
 
“என்ன சம்பந்தமில்லாம முறைச்சிட்டாங்க? அவ உங்களுக்கு ரக்ஷாபந்தன் கட்ட வந்தப்போ வேண்டாம்னு ஏன் சொன்னீங்க நேத்து?”
 
“ரக்ஷாபந்தன் அன்னிக்குத்தான் அந்தக் கயிற கட்டுவாங்கனு கேள்விப்பட்டு இருக்கேன். நேத்து ரக்ஷாபந்தன் இல்லியே?”
 
“அது போன வருஷம் காலனியில அவளுக்குத் தெரிஞ்ச பசங்களுக் கட்டிட்டு இருக்கும்போது என்னைப் பாத்துட்டு கோவத்துல கட்டாமப் போனா . அப்ப அவ என்னை எந்த கேட்டகிரிலயும் சேர்த்துக்க மாட்டா.  நல்லதாப் போச்சுனு நானும் எஸ்ஸாகிட்டேன். அப்படி மிச்சமானதை எப்படியோ கண்டுபிடிச்சு உங்க கையில கட்ட வந்தா நீங்க கட்ட மாட்டேன்னா என்ன அர்த்தம்?” என்று பொரிந்தான்.
 
“நீங்க லூசுன்னு அர்த்தம். கயிறு கட்டலைன்னா என்னய்யா? அவ என் தங்கச்சிக்கும் மேல. என் தென்றலைப் பாதுகாத்து எனக்குக் குடுத்த தெய்வம் அவ. “
 
“ஓவரா நெஞ்சை  நக்காதீங்க பாஸ். சும்மா உலுலாயிக்குத்தான் கேட்டேன். “ என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.
 
“இது என்னை ஈஸி பண்றதுகு;கு நீங்க பேசினதுனு எனக்கும் தேன்மொழிக்கும் நல்லாவேத் தெரியும்” 
அதுவரை இவர்கள் பேச்சில் தலையிடாமல் ஓரமாகப் போய் தன் தாயிடம் தொலைபேசியில் பேசிவிட்டு வந்த தேன்மொழி காரணம் புரியாவிட்டாலும் தானும் புன்னகைத்தாள்.
 
“சொல்லுங்க அண்ணா. பாதில விட்டிங்க?”
 
“நீ  செம ஷார்ப் மா. இவ்ளோ நேரம் அம்மாகிட்ட பேசியும் மறக்கலை பாரு?”
 
“எப்படி மறப்பேன்? இதை உங்க கிட்ட கேக்கனும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னதான் நீங்க சொல்றதை புத்தி கேட்டுக்கிட்டாலும் மனசு உங்களைக் குத்தம் சொல்லிட்டே இருக்கு. “ என்றவள் 
 
“ நீங்க கொஞ்;சம் வெளிய நிக்கறீங்களா?” என்று அழகிய வீர பாண்டியனைப் பாhத்துக் கேட்க ‘முடியாது’ என்று தலையசைத்துவிட்டு வெளியே போய்விட்டான்.
“அவளை நான் குளிப்பாட்டியுமிருக்கேன். ட்ரெஸ் சேஞ்ச் நான்தான் பண்ணுவேன்.. உங்களுக்குப் புரியுதா?” என்றபோது அவன் புரியாமல் பார்த்தான்.
 
“அந்தப் பச்சை குத்துனது …”
 
“அதுலாம் குத்தியிருக்காளா என்ன?” என்றதோடு அவன் கிளம்பப் பாhக்;;க –
“இன்னும் நீங்;க சொல்லி முடிக்கலை “ என்று குறுக்கிட்டாள்.
 
“அவ நல்லாத்தான் இருக்கான்னு நம்பி என் சொந்தவேலை சிலதைப் பாத்தேன்”
 
அப்படி என்ன வேலை? என்பதாக தேன்மொழி அவனைப் பார்க்க –
 
“ரோட் கிராஸ் பண்ணம்போது ஆக்ஸிடென்ட் ஆகி ஆறு மாசம் பெட்ல இருந்தேன். இப்பதான் கொஞ்சம் நல்லா நடக்கறேன். கால்ல முட்டியிலனு ஏகப்பட்ட பிளேட் வச்சி தச்சிருக்கு. அப்படியும் மனசு அடங்கலை. அவளைப் பாக்க போன மாசம் ரெண்டு தடைவ வந்தேன். இதே உங்க காலனிக்கு. யாருக்;கும் சந்தேகம் வராம விசாரிச்சதுல அவ படிக்க வெளியூர் போயிருக்கறதா தகவல் கிடைச்சுது. 
 
இப்ப இத்தனை கேக்கறமா நீ. ஆனா அப்ப அவ என்கிட்ட ஒரு வார்ததை கூட சொல்லாம போனதும் இல்லாம வேற காலேஜ்ல படிக்கப் போய்ட்டான்னு கேள்விப்படறப்போ அத்தனை கஷ்டமா இருந்துச்சு “என்றவன் கண்கள் கலங்கி இருந்தது.
 
 
 
 
அன்று காரில் வைத்து தென்றலை அவன் பார்த்த போது தூக்கத்தில் இருந்தாள்.  அதைக் கலைக்க மூவருக்கும் மனம் வரவில்லை. 
 
அதன்பின் மருத்துவமனையில் வைத்து அவள் பயந்ததைப் பார்த்து இவன் ஆடிப் போனான். 
 
அவள் பயப்படுவது பொறுக்காமல் அவளை ஓடிப் Nபுhய் அணைத்துக் கொண்டபோது அவனை நிமிர்நது பார்த்து ‘பாண்டி’ என்றவள் மயங்கி விட்டாள்.
 
 
இன்னும் இவன் பெயரை உருப்போடுகிறாள்தான். ஆனால் இவனை நோக்கிய ஒரு உரிமையான பார்வை அவளிடம் இருந்து இன்னும் வரவில்லையே?
 
ஜன்னலில் நின்று வெறித்துப் பார்க்கிறேன்
சொன்னது போல நீ வருவாயென
என் கன்னத்தில் கரைந்தோடும் கண்ணீரெல்லாம்
பின்னலிட்ட பூவை உன் விழியால் துடைப்பாயென
 

Leave a Reply

error: Content is protected !!