தேன் பாண்டி தென்றல் _ 2

தேன் பாண்டி தென்றல் _ 2

 
2
 
 
ஸ்டார் காலனியில் இருந்த இரு கடைகளும் அழகிய வீர பாண்டியனுக்கு அப்பா வழிச் சொத்து. அவன் அப்பா இந்த காலனி உருவாக்கப்பட்டபோது முதலில் ஒரு பெட்டிக் கடைதான் வைத்தார். அடுத்த சில வருடங்களில் அது மளிகைக் கடையாக மாறியதுடன்  கொசுறாக ஒரு பேன்சி ஸ்டோரும் அவர் ஆரம்பிக்க  வியாபரம் அடி தூள்தான்.
 
ஆக அவனும் படிப்படியாக முன்னேறிய குடும்பத்தைச் சார்ந்தவன்தான்.
 
என்னதான் தந்தைக்குப் பின் கடையில் கல்லாவில் உட்கார்ந்தாலும் மூளை பரபரவென வேலை செய்ததில் தரகு வேலையில் மும்மூரமாக இருக்கிறான்.
 
சட்டத்துக்குப் புறம்பாகாத எதையும் தரகு  முடித்துத் தருவான்.
 
வீட்டு வாடகைக்கு ஆள் வேண்டுமா? பத்து ஏக்கர் தோப்பை விற்றுத் தர வேண்டுமா? ஆழ்குழாய் மோட்டார் போட ஆள் வேண்டுமா? ஏன்….நீர் மட்டம் பார்க்கவும் ஆட்களை அவன் கொண்டு வருவான்இ உரிய கமிஷன் கொடுத்தால்.
 
சில வருடங்கள் இந்தத் தொழிலைப் பார்ப்பதால் இது குறித்த அனைத்துப் புள்ளி விபரங்களும் அவன் லேப்டாப்பில் இருக்கும். அவ்வப்போது அவற்றை அப்டேட் செய்து கொள்வான். 
 
அப்பா வழி வந்த கடையையும்  அதன் வருமானத்தையும் அவன் பாழாக்காமல் அதையும் சிறப்பாகத்தான் கொண்டு செல்கிறான்.
 
வயது முப்பது ஆகிறது. காலா காலத்தில் கல்யாணத்தை செய்து கொண்டு இருந்தால் இந்நேரம் இரண்டு பிள்ளைகளைப் பெற்று இருப்பான்.
 
என்ன செய்வது? அப்பா இ அண்ணன் தம்பிஇ அக்கா தங்கை யாரும் இல்லாதப் பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒன்றரை  வருடங்களுக்கு முன்பு  புது வருட தீர்மானமானமாக  எடுத்து விட்டானே?  
 
அன்று லைட்டாகத்தான்  அடித்திருந்தான். வெறும் பீர்தான்(!)
 
அவன் நல்ல நல்ல நண்பர்களுடன் புது வருட பார்ட்டியைக் கொண்டாடியவன்-
 
மது அருந்திவிட்டுப் பாடும் குஜாலில்இ
 
“காதலே போ போ
 
சாதலே வா வா”
 
என்று பக்கத்தில் இருந்தவனின் இடுப்பில் இருந்த துண்டை கழற்றி தோளில் மூடிக் கொண்டு பாட ஆரம்பித்தான்.
 
அதற்கு எசப் பாட்டாக –
 
“வா வா மஞ்சள் மலரே” என்று துண்டுக்காரன் கூவ ஆரம்பித்து மேசையில் வழுக்கி விழுந்தான்.
 
போதையிலும் ஸ்டெடியான இவனோ- 
 
“மலரே மௌனமா?”  என்று அர்ஜுனைப் போலத் தலையைத் தலையை ஆட்டினான் . அர்ஜுன் பார்த்திருந்தால் இவனைத் தலை தலையாக அடித்திருப்பார்.
 
 
எப்படியோ ‘அந்தா இந்தா’ என்று பாட்டுக்குப் பாட்டு நிகழ்சி முடிவடைந்ததும் பாண்டியன் மதுரை  பாண்டியன் ரேஞ்சுக்கு சந்தேகம் கேட்பதாக நினைத்துக் கொண்டு – 
 
 
“நாமதான்டா பொண்ணுங்களை மலரு கலருங்கிறோம். எவளாச்சும் நமம்மளை பூவுஇ புஷ்பம்னு சொல்லி இருக்காளுகளா?”
 
என்று தன் குறையைக் கூறி விசும்பினான். அதில் கண்ணிலும் மூக்கிலும் ஜலம் வந்தது. 
 
அந்த நேரம் இவனுக்கு போன் வர போன் வைத்திருந்த இடமான சட்டைப் பையைத் தவிர உடையின் மற்ற அனைத்து இடங்களிலும் தடவித் துழாவினான் பாண்டியன்.
 
“அண்ணா வீட்ல வைக்க வேண்டிய ரிமோட்டை ஏண்ணா இங்க கொண்டு வந்த?” என்ற கேள்வியைக் கேட்டு இவன் பையில் இருந்து ஒரு வழியாக செல்போனை எடுத்துக் கொடுத்தான் துண்டுக்கார தினேஷ்.
 
“இதான் இதான்…” என்று இவன் போனைத் தடவியதில்; கால் அட்டென்ட் ஆகி இருந்தது. 
 
இவன் அம்மா செண்பகம்தான் பேசினார்.
 
அவ்வப்போது அவன் வீட்டில் இந்தப் பெயருக்;கு ஒரு அக்கப்போரே நடக்கும்.
 
“நல்லவேளை நம்ம வீட்ல பால்மாடு இல்ல. இருந்;திருந்;தா சீனே வேற!” என இவன் சிரிக்க- 
 
“என்ன பெரிய சீனு? அப்படி பால் மாடு நம்ம வீட்ல இருந்திருந்தா நான் ‘செண்பகமே செண்பகமே’ன்னு பாடிக்கிட்டு பால் கறந்திருப்பேன். நீங்க அம்ம மக்க ரெண்டு பேரும் எட்டி நின்னு பல்லைக் காட்டிகிட்டு இருப்பீங்க? அம்புட்டுத்தானே?” 
 
என அலுப்பார் இவன் தந்தை செல்லத்துரை.
 
அது இப்போது; நினைவில் வர பல்லை ‘ஈ’ என்று இளித்துக் கொண்டான்.
 
“அடேய் லூசுப் பய மவனே. கிறுக்கனுக்குப் பொறந்த கிறுக்கனே. எங்கடா இருக்க? பார்ட்டி கீர்ட்டினு எங்க மப்படிச்சிக்கிட்டு உழுந்து கெடக்கற? ஒழுங்கு மரியாதையா வீட்டைப் பாத்து வந்து சேரு” என்று மூச்சு விடாமல் பேசியவரின் குரலின் குறுக்கே புகுந்து இவன் –
 
“அலோம்மா.  நான் நல்லப் பிள்ளையா இருக்கேன்மா. தினேசு சொக்கத் தங்கம்மா. நம்ம வீட்டு ரிமோட்டை எடுத்துக் குடுத்திருக்கான்மா” என்று குழறலானான்.
 
அவர் கையில் இருந்த செல்போனை வாங்கி அணைத்து வைத்து விட்டு செல்லத்துரை  அவரை நாற்காலியில் உட்கார வைத்துக் குடிக்க நீர் கொடுத்தார்.
 
 
அதனைக் குடித்து முடித்த செண்பகம் இன்னும் கோபம் தீராதவாகக் கத்தினார்.
 
“அவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டா நாம நிம்மதியா இருக்கலாம்ல?; உங்களை மாதிரி அவனும் அவன் பொண்டாட்டி பின்னாடி சுத்திக்கிட்டு கெடந்திருப்பான்.” என்றவர் கணவர் கஷ்டப்பட்டு முறைத்ததைக் கண்டு கொள்ளவில்லை.
 
 
“கல்யாணத்துக்கு முன்னால உங்க ஒழுக்கமும்; ஒன்னும் ஒசந்ததில்ல. இப்ப உங்களைப் போல உசந்தவரு உண்டாங்கிற மாதிரி ஊர் மெச்ச நிமிந்து நடக்கலியா நீங்க? அது மாதிரி அவனும் நல்லா வருவான்.”  என பெற்றவளுக்கே உரியவாறு மகனின் பெருமையைப் பேசிய அதே நேரம் கணவனை வாரினார்.
 
“சரி. சரி. இவனுக்கு நம்ம தர்மாவோட பொண்ணைக் கேக்கலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?”
 
“ நான் சொல்ல என்ன இருக்;கு? மொதல்ல இன்னிக்கு அவன் உருப்படியா வீடு வந்து சேரட்டும். அப்புறம் பாப்போம். “ என்று பயத்துடன் முடித்து விட்டார்.
 
சமீப காலமாக  என்றாவது ஒரு நாள் இப்படி குடித்துவிட்டு வந்துவிடுகிறான்.
 
கல்யாணம்தான் பிரச்சனையோ? என்று அந்த வகையில் பார்த்தால்- 
 
“பொண்ணாவது? புண்ணாவது? யாருக்கு வேணும்? இதுல்லாம் இந்த வயசுல இருக்கனும். அப்பதான் நினைக்க… நினைச்சுப் பாத்து சந்தோசப்பட முடியும்” என்று புது விளக்கத்தைக் கூறியவனை எதால் அடிப்பது? என்று அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.
 
“பாத்தீங்களா? உங்களுக்கே குழம்புது. அதான் இந்த விசயத்துல தலையிடாதீங்கனு சொல்றது!” என்று  கெத்து காட்டியவாறு ப்ளுடூத்தை காதில் மாட்டிக் கொண்டு  வெளியேற பதட்டத்தில் என்ன செய்ய என்று தவித்து இரண்டு கைளையும் உதறிக் கொண்டு இருந்தால் – அவர் வேட்டையில் புள்ளிமான்  சிக்கி விடும். வேறு யார் அந்த நல்லவர்? எல்லாம் இவனைப் பெற்ற தெய்வம்தான்.
 
“புள்ளையாங்க பெத்து வச்சிருக்;கீங்க? பள்ளிக் கூடத்துல படிக்கிற வரைக்கும் தங்கம் அவன். என்னைக்கு உங்க பேச்சைக் கேட்டு உங்க தங்கச்சி வீட்டுக்கு அவனை அனுப்பி படிக்க வச்சனோ? அன்னிக்கு ஆரம்பிச்சது சனி!”
 
என்று ‘பிலு பிலு’ என செண்பகம் பிடித்துக் கொள்ள என்ன முகபாவனை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பி கடைசியில் அதற்கும் திட்டு வாங்கிக் கொண்டு அவர் இருக்கும் போது ஏதாவது ஒரு புண்ணயவான் போன் செய்து அவரைக் காப்பாற்றி விடுவான்.
 
போன் வந்திருப்பதாகச் சொல்லி தப்பித்து பெருமூச்சு விடுவார். போனில் வரும் தகவல் நல்லதாக இருந்தாலும் சரிஇ பெரும் பிரச்சனையாக இருநு;தாலும் சரிஇ அவரால் எதையும் சமாளிக்க முடியும்.
 
அல்லது அர்ஜண்டாக போன் செய் Nவுண்டும் என்ற சொல்லி ஓடி விடுவார்.
 
மனைவியின் புலம்பலைத் தாங்க முடிவதில்லை அவரால். அவளை சமாதானப் படுத்த இவர் எடுக்கும் முயற்சிகளுக்கும் அதன் பொருட்டு அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒரு ஆலாபனையை செண்பகம் ஆரம்பித்து விடுவார்.
 
அழகிய வீர பாண்டியனைப் பொறுத்தவரை இப்படிப் புலம்ப வேண்டிய அவசியம் இல்லை. அவன் வேலையை அவன் சரியாகத்தான் செய்கிறான்.
 
எப்போதாவது அவனிடம் எட்டிப் பார்க்கும் இந்த மதுப்பழக்கம் தான் செண்பகத்தைப் புலம்ப வைக்கிறது. 
 
என்ன செய்வது? அவருக்;கு இருக்;கும் ஒரே பிரச்சனை அதுதான். அதையாவது சொல்லிப் புலம்ப மாட்டாரா என்ன?
 
 
 
மற்ற நேரங்களில் மகனிடம் பேசும் போது முகம் அப்படியே ஜொலிஜொலிக்கும் செண்பகத்திற்கு. 
 
 
‘இப்படி வெட்டியா இருந்தா அதையும் இதையும் நினைச்சு புலம்பிட்டுத்தான் இருப்பா . இதே சண்டை போட ஆள் வந்தாச்சுன்னா அதுல பொழுது போயிரும் ‘என்று கிரிமினலாக யோசித்து அவர் மனைவியை அவவப்போது தூண்டிவிட இப்போது மருமகள் வேண்டும் என்ற அவரது போராட்டம் கொழுந்து விட்டு எரிகிறது.
 
ஆரம்பத்தில் இவனுடைய ஜாதகம்  எல்லாம் ஆசையாகப் போய்ப் பார்த்துவிட்டு வந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் செண்பகம்.
 
“என்னாச்சு செம்பா” என்று மகன் தாயை தாங்கவும் அவனைப் பார்த்து கண்களைக் கசக்கிவிட்டார்.
 
“அந்த ஜோசியர் சொல்றாருடா.. நீ கல்யாணம் முடிக்கிற வீட்ல ஒரே பொண்ணுதான் இருக்குமாம்” 
 
கேட்ட பாண்டியனுக்கும்  வேதனைதான். அவன்தான் வீட்டில் ஒரே பிள்ளையாகி விட்டான். மனைவியாக வரப் போகிறவளும் அப்படியா இருக்க வேண்டும்? 
 
அன்னைக்கும் இதுதான் வருத்தம் என்று புரிந்தது.
 
“அட விடுங்கம்மா. நல்ல பத்துப் புள்ளைங்க இருக்கற குடு;பத்துல பொண்ணு எடுத்துக் காட்டுவோம் அந்த ஜோசியருக்;கு” என்று வாயைக் கொடுத்து விட்டான்.
 
கண்களைத் துடைத்துக் கொண்ட அவனது செம்பா –
 
“சரிடா. அப்ப தரகர்கிட்ட சொல்லி நல்ல பெரிய குடும்பமா பாக்க சொல்லவா?” என்ற அடுத்த பிட்டைப் போட்டார்.
 
எனக்கேவா? என்று மெதுவாக அவன் சிரித்ததைப் பார்த்த செண்பகமும் சிரித்து விட்டார். 
 
“உங்க இஷ்டம்மா” என்று அனுமதி வழங்கி தாயின் மனதைப்  பூரிக்க வைத்தான் அழகிய பாண்டியன்.
 
இதெல்லாம் அன்றைய தண்ணி பார்ட்டிக்கு முன்பு நடந்தது.
 
செண்பகத்திடம் பேசிவிட்டு வண்டியில் ட்ரங்க் அண்ட் ட்ரைவ் ஆக வந்தவன் காவல்துறையிடம் போக்குக் காட்டி பல காடுமேடுகளைக் கடந்து வீடு இருக்கும் தெருவை அடைந்துவிட்டான். 
 
புது வருடமும் அதுவுமாக பிள்ளை குட்டிகளை விட்டுவிட்டு நடுராத்திரியில் நட்டநடு ரோட்டில் நின்று சட்டம் ஒழுங்கைக் காக்கும் அவர்கள் சாபம் சும்மா விடுமா?
 
 
தெருமுனையில் இருந்த சிறிய  திண்டில் மோதி கீழே விழுந்து அடிபட்டான்.
 
தெருவிலும் புது வருடக் கொண்டாட்டங்களாக பட்டாசு வெடித்தல் புது வருட வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல் என்று மக்கள் நடமாட்டம் இருக்கவேஇ இவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
 
இவன் குடித்திருந்ததால் மருத்துவம் பார்ப்பதில் சிரமங்கள் இருந்தது. எப்படியோ  அன்றே தயாராகி வெளியே வந்தவனை செண்பகம் பிடித்துக் கொண்டார்.
 
“இந்தக் கருமத்துக்குத்தானே தலைபாடா அடிச்சிக்கிட்டேன். சொன்னா எங்க கேக்கிற நீ?” என்ற படபடக்க ஆரம்பித்தார். 
 
 
“ம்ப்ச். அம்மா. ஜல்லிக்கட்டுல அடிபட்டா அதுக்காக திரும்ப  வாடிவாசல் வராமப் போயிருவாங்களா என்ன?” என்ற கேட்கவும் இந்த முறை நிஜமாகவே அவன் தலையில் கைப்பையால் இரண்டுமுறை அடித்து விட்டார் செண்பகம்.
 
“எதுக்கு எதைடா ஒப்புமை சொல்லுற? அதுவும்  இதுவும் எங்கிட்டு இருந்து ஒண்ணாவும்? என்னாங்க.. உங்க மகெய்ன் கிறுக்கனாட்டம் சலம்பிக்கிட்டு திரியுதியான். இத்த சோடு வளந்து என்னா பிரயோஜனம்……?” 
 
உணர்ச்சி வேகத்தில் வட்டார வழக்குக் கொஞ்சமாக எட்டிப் பார்த்து அவருக்கு. 
 
கோவைக்கு வந்து  கிட்டத்தட்ட இருபத்தைந்து  வருடங்கள் ஆன நிலையில் தனது பேச்சு வழக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி இருந்தார் அவர்.
 
மனைவியின் பேச்சைக் கேட்ட செல்லத்துரைப் புல்லரித்துப் போனார்.
 
ஏதோ இந்த அளவிற்காவது மதுரை பாஷை இவள் வாயில் வந்ததே? என்ற எண்ணி மகிழ்ந்தார்.
 
 
தான்தான் தாய் பாஷையை மறந்து வருகிறோம். இவளாவது வீட்டில் பேசலாம் அல்லவா? இந்த ஊர் பேச்சு பேசாவிட்டால் இங்குள்ளவர்களிடம் நேந்து கலந்து போக முடியாது என்பது அவள் மூடநம்பிக்கை.
 
செல்லத்துரை யோசித்துக் கொண்டு இருக்க இருக்க – அதற்குள் சுதாரித்த செண்பகம் நார்மல் மோடுக்கு மாறினார்.
 
“இங்க என்ன நடக்குது? நீங்க என்ன பல்லைக் காட்டிக்கிட்டு நிக்றீங்க?” என்று குமுறவும் செல்லத்துரைக்கு ஒரே குழப்பம்.
 
அவரது பல் வெளியில் தெரியவே இல்லை. உதடுகளைப் பிரிக்கவும் கூட இல்லை. எப்படி இந்தக் குட்டி கண்டு பிடித்தாள்? என்று யோசித்தார்.
 
குட்டி என்பது செண்பகத்தின் செல்லப் பெயர். அந்த அழைப்பின் உரிமையாளர் செல்லத்துரைதான்.
 
 
அதோடு நிறுத்தாமல் மகனைப் பார்த்து – “நீ இப்டி இருந்தா நான் எப்படி ஒரு கௌரவமான இடத்துல போயி பொண்ண கேக்கிறது?” என்று புலம்பவும் அவனுக்குக் கொதித்துக் கொண்டு வர தாயை முறைத்துப் பார்த்து இ
 
“இப்ப இதான் முக்கியமா?” எனறு கடுகடுத்துவிட்டு மருத்துவமனையை விட்டு கோபமாக வெளியேறினான்.
 
அந்த நாளை அவன் டைரியில் குறித்து வைத்திருக்கிறான்.
 
அன்னையிடம் பெரிய குடும்பத்தில் பெண் எடுக்க சம்மதம் தெரிவித்து விட்டான். அவன் நினைத்தால் அன்னையிடம் மாற்றிச் சொல்லலாம். 
 
ஆனால் செண்பகம் அதற்கும் புலம்புவார். 
 
அதே நேரம் அவன் புகுந்த வீட்டு மனிதர்கள் எல்லோரிடமும் அவனுடைய செயல்கள் ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லிக் கொண்டும் இருக்க முடியாது. 
 
இதற்கு ஒரே வழியாகக்  காதல் திருமணம்தான் செய்வது என்றும்  வீட்டிற்கு ஒற்றைப் பெண்ணாகப் பார்த்து காதலிப்பது என்றும்  அந்த புது வருடத் தொடக்கத்தில் தன் இலக்கை நிர்ணயித்தான்.
 
அது சரி. ஆனால் அம்மாவிடம் என்ன சமாதானம் சொல்லுவான்? 
 
அதற்குத்தான்இ  பெண்ணைப் பார்த்ததும் முதலில் அன்னைக்குப் பிடிக்க வைக்க வேண்டும். அதன் பின் திருமணம் குறித்துப் பேச வேண்டும் என்ற பலப்பலத் திட்டங்களைப் போட்டான்.
 
மனிதன் திட்டம்தான் போடலாம். நடத்தி வைப்பது இறைவன் செயல் அல்லவா?
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!