தொலைந்தேன் 14💜

eiO2XX075533-5d7a6384

தொலைந்தேன் 14💜

கண்ணாடி கதவுகளாலான அந்த பெரிய கட்டிடத்தினுள்ளே பெரிய அரங்கமொன்றின் வெளியே போடப்பட்டுள்ள இருக்கைகளில் பல இளைஞர் யுவதிகளோடு அமர்ந்திருந்தனர் ரிஷியும் மேக்னாவும்.

உள்ளே ஆடிஷன் நடைபெற, வெளியில் அமர்ந்திருந்தவளுக்கு உள்ளங்கை பயத்தில் வியர்த்து லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.

அதை கவனித்த ரிஷியோ அவளின் உள்ளங்கையை பற்றி விழிகளை அழுந்த மூடித் திறந்து, “உனக்கு எதிர்ல இருக்குற பொண்ணு சும்மா டக்கரா இருக்கு. இஃப் யூ டோன்ட் மைன்ட், நம்பர் கேட்டு தர்றீயா?” என்று வேண்டுமென்றே சீண்டவென பேச, அடுத்தகணம் பயம் மறைந்து கோபம் புசுபுசுவென எகிற, “கொன்னுறுவேன்டா உன்னை! என்னை தவிர எந்த பொண்ணு மேலேயும் உன் கண்ணு போக கூடாது. மைன்ட் இட்!” என்றாள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க.

அவனும் வாயைப் பொத்திச் சிரிக்க, ஏதோ யோசித்தவளாக, “ரிஷ், நீயும் ஆடிஷனுக்கு ரிஜிஸ்டர் பண்ணிருக்கலாம்ல, ஐ அம் டேம்ன் ஷூவர் செலக்ட் ஆகியிருப்ப மை மேக்னட்.” என்று மேக்னா விழிகளை விரித்துச் சொல்ல, இருபக்கமும் சலிப்பாகத் தலையாட்டியவன், “நோ மேகா, நொட் இன்ட்ரஸ்டட். எனக்கு இப்படியொரு கம்பனிக்கு கீழ அவங்களோட ரூல்ஸ் என்ட் ரெக்யூலேஷன்படி இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் என் ஃபர்ஸ்ட் ஆல்பம் சோங்க ரிலீஸ் பண்றேன். தெறிக்க விடுறேன். பட், என்ன ப்ரொடியூசர்தான் கிடைக்க மாட்டேங்குறாங்க.” என்றான் சலித்தபடி.

ரிஷி முடித்ததுமே உதட்டைச் சுழித்து அவனை முறைத்துப் பார்த்தவள், “ரிஷ், அப்பாகிட்ட பணம் கேக்கலாம்ல.” என்று குறைபட, இல்லையென்ற ரீதியில் அழுத்தமாக இருபக்கமும் தலையாட்டியவாறு, “மேகா பேபி, மாமாகிட்ட நான் பணம் எடுத்தேன்னா அது என் திறமைக்கு கிடைச்சதாகாது. என் டேலன்ட்ட பார்த்து அவங்களாவே என்னை கூப்பிட்டு ப்ரொடியூஸ் பண்ண சம்மதிக்கணும். அய்யாவோட மவுசு அப்படிம்மா.” என்றான் ரிஷி கோலரை தூக்கிவிட்டுக்கொண்டு.

‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டவளுக்கு அவனின் பாவனைகளை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

ரிஷி அவளை பார்க்கும் போது உதட்டை குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு எதுவும் அறியாத பாவனையில் அவள் எங்கோ பார்க்க, அதிர்ந்து விழிகளை விரித்து சுற்றிமுற்றிப் பார்த்தவனுக்கு முகம் சிவந்து லேசாக வெட்கமும் எட்டிப் பார்த்தது.

“நீ செலக்ட் ஆகி பெரிய ஆளா வந்ததும் எனக்கு ஒரு கிட்டார் வாங்கி கொடுக்குறியா? இப்போ வாங்க முடியாம இல்லை, பட் நீ கொடுக்குறது ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கும்.” ரிஷி விழிகளில் காதலோடுக் கேட்க,

“உனக்கில்லாததா ரிஷ், நீ வேணா பாரு நான் செலக்ட் ஆகி வேற லெவல்ல சாங்க்ஸ் பண்ணி உனக்கு பிடிச்ச எல்லா இன்ட்ரூமென்ட்ஸ்ஸும் வாங்கி தரேன், ஆனா அதுக்கு முன்னாடி என்னை சீக்கிரமா கல்யாணம் பண்ணிடு.” என்றாள் அந்த இருபது வயது மேக்னா.

பல நிமிடங்கள் காத்திருந்த பின்னரே மேக்னா அழைக்கப்பட, உள்ளே தெரிவுக்காக சென்றவளை நிமிடங்கள் கடந்தும் ஆளே காணவில்லை. ரிஷியும் எட்டிப் பார்ப்பதும் அமர்வதுமாக படபடப்போடு காத்திருக்க, அவனை ஏங்க வைத்த பின்னரே சிரிப்போடு அந்த மண்டபத்திலிருந்து வெளியே வந்தாள் அவள்.

முகத்தில் பளிச்சென்ற புன்னகை. அவளைக் கண்டதுமே ஓடிச் சென்று ரிஷி அவளை நெற்றியில் முத்தமிட்டு பாதி அணைத்தவாறு, “என்னாச்சு?” என்று ஆர்வத்தோடுக் கேட்க, “ஐ திங், அவங்களுக்கு பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். செலக்ட் ஆனா இரண்டே நாள்ல ஒரு கால் வரும்னு சொன்னாங்க. என்ட், யூ நோ வாட் ரிஷ், வைவா கம்பனியோட எம்.டீ மிஸ்டர்.நரேந்திரனோட சன் சித்தார்த் கூட இருந்தாரு. அதுவும், என்னையே பார்த்துக்கிட்டு ஹவ் ஸ்வீட் ஹீ இஸ்!” என்று மேக்னாவோ விழிகளை விரித்து பொய்யான பாவனையில் சொன்னாள்.

அதில் விழிகள் இடுங்க அவளை முறைத்துப் பார்த்தவன், பின் சட்டென்று அவர்களை கடந்துச் சென்ற பெண்ணிடம், “ஹவ் ப்ரிட்டி யூ ஆர்…” என்று மயக்கும் குரலோடுச் சொல்ல, அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக்கொண்டு சென்றதம்தான் தாமதம், “யூ சீட்…” என்று பற்களைக் கடித்துக்கொண்டு ரிஷியை துரத்த ஆரம்பித்துவிட்டாள் அவள்.

அடுத்த இரண்டுநாட்கள் கழிந்த நிலையில், காலையிலேயே மேக்னாவுக்கு ஒரு அழைப்பு. அதையேற்று பேசியவளுக்கு சந்தோஷம் தாளவில்லை.

“ரிஷ்… ரிஷ்…” என்று கத்திக்கொண்டு மாடிப்படிகளில் தாவி குதித்து ஓடி வந்தவளை குழப்பமாகப் பார்த்துக்கொண்டிருந்த அமுதா, “என்னாச்சு மேகா?” என்று புரியாமல் கேட்க, “மாம், நான் ஆடிஷன்ல செலக்ட் ஆகிட்டேன்.” என்று ஆரவாரமாக சொல்லிவிட்டு ஹோலிலிருந்த ரிஷியின் அறைக்குள் நுழையப் போக, அவனே தன்னவளின் சத்தம் கேட்டு வெளியே வேகமாக வந்தான்.

அவனைக் கண்டதுமே தாவி அணைத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், “உன்னாலதான் இன்னைக்கு வைவாவோட ஆடிஷன்ல செலக்ட் ஆகியிருக்கேன்.  என்னால நம்பவே முடியல இன்னும் வன் வீக்ல என்னோட சேர்த்து நாலு பேருக்கு த்ரீ மன்த்ஸ் ட்ரெயினிங் ஸ்டார்ட் ஆகுது. நம்ம லைஃப்பே மாற போகுது பேபி.” என்று அளவுகடந்த சந்தோஷத்தில் கத்த, யார் எவரையும் கண்டுக்கொள்ளாது, “கங்கிராட்ஸ் பேபி.” என்று சிரிப்போடு அவள் நெற்றியில் முத்தமிட்டான் ரிஷி.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அமுதாவுக்கு இதை சற்றும் ஜீரணிக்க முடியவில்லை. பற்களைக் கடித்துக்கொண்டவர், இத்தனைநேரம் நடப்பதை சிரிப்போடு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மனோகரை முறைத்துப் பார்க்க, அவரின் விழிகளோ ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டிருந்த ரிஷியையும் மேக்னாவையும் விழிகள் கலங்க பார்த்துக்கொண்டிருந்தன.

அன்றிரவு, அமுதாவின் அறையில் ஒரே கலவரம்தான்.

கையிலிருந்த அலைப்பேசியை தூக்கி சுவற்றில் விட்டெறிந்தவர், “என்னால இதை ஏத்துக்க முடியலங்க. நான் மேக்னா விஷயத்துல எத்தனை கனவோட இருக்கேன். ஆனா அவ போயும் போயும் அவன காதலிச்சிக்கிட்டு இருக்கா. ச்சே! அவனதான் எதுவும் கேக்க முடியல. நீங்க எதுவும் கேக்க மாட்டீங்களாங்க?” என்று கத்திக்கொண்டிருக்க, மனோகரின் இதழ்களோ சற்று ஏளனமாக வளைந்தன .

“கேக்க முடியலல்ல, அப்போ உள்ளுக்குள்ள பயம் இருக்கு.” என்று மனோகர் ஏளனத்தொனியில் சொல்ல, அவரை சுட்டெறிக்கும் பார்வையோடு முறைத்துப் பார்த்த அமுதாவுக்கு சில மாதங்களுக்கு முன் பார்த்த ரிஷியின் கோபம்தான் ஞாபகத்திற்கு வந்தது.

மேக்னா எப்போது இசையின் பக்கம் செல்ல ஆரம்பித்தாளோ அப்போதிலிருந்தே அமுதாவுக்கு உள்ளுக்குள் அத்தனை வெறுப்பு. படிப்பு முடிந்ததுமே பணக்கார ஒரு குடும்பத்திற்கு அவளை திருமணம் செய்து கொடுக்க அமுதா ஒரு திட்டத்தைத் தீட்டி ஏற்பாடு செய்திருக்க, அதையெல்லாம் தகர்த்தெறிவது போல் இசையின் புறம் மேக்னா திரும்பிவிட, அமுதாவின் அத்தனை ஆசைகளும் காற்றில் கரைந்த கற்பூரம்தான்.

மேக்னா திருமணம் வேண்டாமென ரிஷியோடு வாய்ப்புக்காக அலைந்துக்கொண்டிருக்க, ஒருகட்டத்திற்குமேல் பொருக்க முடியாது அமுதா மேக்னாவை அடித்த மறுகணம், தன்னவளை அடித்த கோபத்தை வெளிப்படையாகக் காட்ட முடியாது உணவு மேசையின் மீதிருந்த மொத்த பொருட்களையும் தூக்கிப் போட்டு தரையில் விசிறியடித்தான் ரிஷி.

நரம்புகள் புடைத்து முகம் சிவந்திருந்த ரிஷியை கோபத்தில் அன்று பார்த்தவர்தான், அப்போதிலிருந்து அவன் முன் நிற்பதைக் கூட குறைத்துக்கொண்டார் அமுதா என்றுதான் சொல்ல வேண்டும்.

அதை ஞாபகப்படுத்தியே மனோகர் கேலியாகச் சிரிக்க, அதை உணர்ந்தவருக்கு கோபம் தாறுமாறாக எகிறியது.

“ச்சே!” என்று சலித்துக்கொண்டவர், “இங்க பாருங்க, ஏதோ அவள அவ போக்குக்கு விட்டுட்டேன். அதுக்காக அவனதான் கட்டிப்பேன்னு என் முன்னாடி வந்து நின்னான்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன்.” என்று கடுகடுக்க, “அவ வெளிப்படையா நம்மகிட்ட சொல்லலன்னாலும் அவ காதலிக்கிறான்னு நமக்கு உணர்த்ததான் செய்றா. என்ட், ரிஷிக்கு என்ன குறை. என் ஃப்ரென்ட் பையன் எனக்கு மருமகனா வாரதுல எனக்கு சந்தோஷம்தான். சுந்தரோட ஆசையும் அதான்.” என்றவருக்கு தன் நண்பனின் நினைவில் லேசாக விழிகள் கலங்கின.

ஆனால், அமுதாவுக்குதான் உள்ளுக்குள் தீ பற்றியெறிந்தது.

“உங்க ஃப்ரென்ட் ஆசைக்காக எல்லாம் என் மகளோட வாழ்க்கையில என்னால விளையாட முடியாது. என்னதான் நடக்குதுன்னு நானும் பார்க்குறேன்.” என்ற அமுதாவோ தனக்குள்ளேயே வேறு திட்டத்தைத் தீட்ட ஆரம்பித்தார்.

அடுத்தநாளே வைவா நிறுவனத்தின் கட்டிடத்திற்குள் ரிஷியோ விழிகளை சுழற்றியவாறு மேக்னாவின் வலது கரத்தைப் பற்றிக்கொண்டு உள்ளே நுழைய, வரவேற்புப் பகுதிக்குச் சென்று மேக்னா தன் பெயரைச் சொன்னதும்தான் தாமதம், “யாஹ் மிஸ்.மேக்னா, சார் உங்களுக்காகதான் வெயிட் பண்றாரு. செகன்ட் ஃப்ளோர். ரூம் நம்பர் நைன்.” என்று அந்த இளம்பெண் சொல்லி முடிக்க, மேக்னாவோ விறுவிறுவென முன்னே சென்றாள்.

ரிஷியோ பின்னாலே சென்றவன், ஒருகட்டத்தில் அவனை அனுமதிக்காது மேக்னாவை மட்டும் அனுமதித்ததும் அங்கிருந்த இருக்கையொன்றில் அமர்ந்துவிட, உள்ளே மேக்னாவோடு சேர்த்து நான்கு பேருடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தார் நரேந்திரன்.

“ஹெலோ மை டியர்ஸ், வெல்கம் டூ த பார்ட் ஆஃப் வைவா. வைவா கம்பனிக்கு கீழ ஒரு மியூசிக் பேன்ட்ல செலக்ட் ஆகுறது ஒன்னும் அவ்வளவு ஈஸி கிடையாது.  என்ட் ஆல்சோ, இதுல நீங்க கன்டியூவா இருக்குறதும் அவ்வளவு ஈஸி இல்லை. இங்க உங்க திறமையால மட்டுமில்லை. ஏதோ ஒரு லக் உங்களுக்கு இருக்க போய்தான் நீங்க செலக்ட் ஆகியிருக்கீங்க.

என்ட், இனி உங்க ஃபிட்னஸ்லயிருந்து ட்ரெஸ்ஸிங் வரைக்கும் நாங்கதான் முடிவு பண்ணுவோம். நாங்க சொல்றதைதான் நீங்க கேக்கணும். எங்க ரூல்ஸ்ஸ ஒரு விஷயத்துல நீங்க மீறினாலூம் உங்களால அதுக்கப்றம் இதுல இருக்க முடியாது.” என்று நரேந்திரன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அங்கு அமர்ந்திருந்த நால்வரின் கைகளிலும் நிறுவனத்தினதும் இவர்களின் குழுவினதும் சட்டத்திட்டங்கள் அடங்கிய ஒரு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது.

“பொறுமையா வாசிச்சு இதுல உங்க கையெழுத்த போடுங்க!” என்றுவிட்டு நரேந்திரன் இருக்கையில் அமர்ந்து ஒவ்வொருவரையும் ஊடுறுவும் பார்வை பார்க்க, ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக்கொண்ட ஐவரும் மறுகணமே விருப்பத்தைக் கேட்க தத்தமது உறவுகளைதான் நாடினர்.
மேக்னாவை தவிர.

அவளுக்கோ அவளுடைய கனவை தவிர இந்த ஒப்பந்தத்திலுள்ள சட்டங்கள் ஒரு பெரிய விடயமாகவே தோன்றவில்லை. ஆழ்ந்த பெருமூச்சுவிட்டவள், அதிலிருந்த சட்டங்களை கூட சரியாகப் பார்க்காது சிரிப்போடு கையெழுத்தை முதல் ஆளாக போட்டுவிட, சில கணங்கள் விழிகளைச் சுருக்கி அவளைப் பார்த்த நரேந்திரனின் இதழ்களோ சிரிப்பில் வளைந்தன.

அடுத்த சில நிமிடங்களில் மற்ற நால்வரில் ஒருவரைத் தவிர மூன்று பேருமே கையெழுத்து இட்டிருக்க, ஒப்பந்தத்திற்கு சம்மதிக்காத பெண்ணை வெளியில் அனுப்பியவர், “இனி வைவா கம்பனிக்காகதான் உங்க குரலும் வரிகளும் பாட்டும். இன்னும் ஒரே வாரத்துல மும்பையில உங்களுக்கான ட்ரெயினிங் ஸ்டார்ட் ஆகும். அதுக்கப்றம் உங்க வாழ்க்கையே மாற போகுது. பீ ரெடி என்ட் ஆல் த பெஸ்ட்!” என்றுவிட்டு அங்கிருந்து  வெளியேறியிருந்தார் நரேந்திரன்.

வாசலில் அமர்ந்திருந்த ரிஷிக்கோ எப்போது தன்னவளை காண்போமென்றுதான் இருந்தது. அவனும் முட்டியில் கைகளைக் கோர்த்து ஊன்றி கைகளை பிசைந்தவாறு அவளுக்காகக் காத்திருக்க, சரியாக நரேந்திரனும் வெளியில் வேகமாக வந்தார்.

அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றவன், “ஹெலோ சார்…” என்று மரியாதைக்காக புன்னகைக்க, அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தவரின் விழிகளில் வெறும் அலட்சியம் மட்டுமே. அதை அவனும் உணரத்தான் செய்தான்.

ரிஷிக்கு ஒரு மாதிரி ஆகிவிட, முகத்தைச் சுருக்கி நின்றிருந்தவனை ஓடி வந்து அணைத்துக்கொண்டாள் மேக்னா.

“ரிஷ், இனி நம்ம வேற லெவல்டா. எல்லாமே மாற போகுது. ஒரே வாரத்துல மும்பையில ட்ரெயினிங். நான் செலப்ரிட்டி ஆக போறேன். பணம் புகழ்னு எல்லாமே கிடைக்க போகுது.” என்று அங்கேயே கத்திக் கூப்பாடு போட, அவளின் சிரிப்பில் தானாக மலர்ந்த ரிஷியின் இதழ்கள் பின் எதையோ யோசித்து சட்டென சுருங்கின.

அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு அவனின் முக மாற்றம் தெரியாமலில்லை.

“என்னாச்சு ரிஷ்?” புரியாமல் மேக்னா கேட்க, “அது… அது வந்து… த்ரீ மன்த்ஸ் உன்னை பார்க்க மூடியாதா? நான் வேணா உன் கூட வரவா?” என்று ரிஷி அவளைக் காண கிடைக்காதோ என்ற ஏக்கத்தில் கேட்க, மேக்னாவோ விழிகள் இடுங்க அவனை நோக்கினாள்.

“ரிஷ், அப்படியெல்லாம் வர முடியாது. என்ட், எல்லா இடத்துக்கும் நீ என் கூடவே இருக்கணும்னா எப்படி?” என்று சற்று ஏளனத்தொனியில் அவள் கேட்க, ரிஷிக்கு முகமே ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஆனால், அதெல்லாம் அவளுடைய விழிகளுக்குத் தெரியல்லை.

“எல்லாம் ஓகே ரிஷ், அம்மாவ எப்படி சமாளிக்குறதுன்னுதான் தெரியல. நீதான் பேசி…” என்று தயக்கமாக இழுத்து அதற்கும் அவனின் உதவியையே நாட, சட்டென்று தன் முகச் சுருக்கத்தை மாற்றிக்கொண்டவன், “நான் இருக்கேன் மேகா.” என்றான் காதலோடு.

அன்றிரவு, வீடே கலவரம்தான்.

“மும்பையில தனியா மூனு மாசமா? என்னால இதை அல்லோவ் பண்ணவே முடியாது. ஒழுங்கா இங்கயிருந்து என்ன வேணா  பண்ணிக்கோ! வேற எங்கேயும் உன்னை அனுப்ப முடியாது.” என்று அமுதா காட்டுக்கத்து கத்த, “அவளோட வாழ்க்கை அவ இஷ்டப்படி இருக்கட்டும் அமுதா.” என்றார் மனோகர் மகளுக்குச் சார்பாக.

மேக்னாவோ எதுவும் பேசவில்லை. ஓரமாக கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி சுவற்றில் சாய்ந்துக்கொண்டு அமுதாவையே பார்த்தவாறு நின்றிருந்த ரிஷியைதான் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அமுதாவோ மனோகரின் வார்த்தைகளைக் கண்டுக்கொள்ளாது தான் சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்க, பக்கத்திலிருந்த பூச்சாடியை தரையில் தட்டிவிட்டான் ரிஷி.

அந்த சத்தத்தில் பேச்சை நிறுத்தி அமுதா வேகமாக ரிஷியை நோக்க, அவரை அழுத்தமாகப் பார்த்தவாறு, “மூனு மாசத்துக்கு அப்றம் மேகாவோட சம்பளம் மட்டுமே பல லட்சம். கூடவே ஃபேமஸ். என்ட், வைவா கம்பனியில ட்ரெயினிங் அப்போவும் காசு கொடுக்குறதா சொல்லுறாங்க. இதுக்குமேல நான் சொல்றதுக்கு எதுவுமில்லை.” என்று அமுதாவைப் பற்றி தெரிந்தே அவன் வலையை விரிக்க, விழிகளை விரித்து அப்படியே அமைதியாகிவிட்டார் அவர்.

மனோகரோ ரிஷியின் திட்டம் புரிந்து இதழுக்குள் சிரிக்க, மேக்னாவோ ஆர்வமாக தன் அம்மாயே பார்த்திருந்தார். ஏனோ பணப் பேராசை பிடித்த அமுதாவுக்கு ரிஷியின் வார்த்தைகள் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தேனைப் பாய்ச்சுவது போல் இருந்தன.

தரையை வெறித்தவாறு சிறிதுநேரம் புருவத்தைச் சுருக்கி யோசித்தவர், “அமுதா…” என்ற மனோகரின் அழைப்பில் மெல்ல நிமிர்ந்து, “ஹ்ர்ம் ஹ்ர்ம்… நான் சொல்றதை சொல்லிட்டேன். இனி அவ இஷ்டம்.” என்று தன் ஈகோவை விட்டுக்கொடுக்காது மறைவாக அனுமதியை வழங்கிவிட்டுச் சென்றார்.

இங்கு ரிஷியோ கோலரை தூக்கிவிட்டுக்கொண்டு ஒற்றை புருவத்தை வெற்றிச் சிரிப்போடு ஏற்றி இறக்க, மேக்னாவோ துள்ளிக் குதிக்காத குறைதான்.

அடுத்த ஒருவாரத்திலேயே, வைவா நிறுவனத்தின் கார் மனோகர் வீட்டு வாசலில் நின்றிருந்தது.

Leave a Reply

error: Content is protected !!