தொலைந்தேன் Epilogue💜

eiR6PVJ4533

தொலைந்தேன் Epilogue💜

ஆறு மாதங்களுக்கு பிறகு,

“தென்னிந்திய பாடகி மேக்னாவுக்கும் பாடகர் ரிஷிக்கும் இடையிலான நிச்சயதார்த்தம் நின்றுவிட்ட நிலையில் ரிஷி வேதாந்துக்கும் இந்திய அளவிலான புகைப்பட போட்டியில் விருதைப் பெற்ற சாணக்கியா ராஜலிங்கத்துக்கும் திடீர் திருமணம்”

“ரிஷி மற்றும் மேனா சௌத்ரியின் காதல் முறிவுக்கு காரணம் ரிஷிக்கு ஒரு சாதாரண பெண்ணோடு இருந்த தொடர்பா?”

என்று பல செய்திகள் வலைத்தளங்ளில் பரவிக்கொண்டிருக்க, ரிஷியின் தொழில்துறை நண்பர்களுக்கு மத்தியில் இவர்களைப் பற்றி கிசுகிசுப்பு வேறு.

ஆனால், இதையெல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையிலில்லை நம் நாயகனும் நாயகியும். காரணம், திருமணமல்லவா!

ஓடி வரும் கடலலைகளுக்கு முன் பல வகைப்பட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையை நோக்கி தங்க நிற பட்டுப்புடவையில் கொண்டையிட்டு சுற்றி மல்லிகை சரம் சூடி சனா நடந்து வர, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக மணவறையில் வீற்றிருந்தவாறு தன்னவளை அப்பட்டமாக ரசித்திருந்தான் ரிஷி.

ஆனால், ஏதாவது ஒரு சொதப்பல் கூட செய்யாவிட்டால் அது சனா அல்லவே!

ரிஷியின் பார்வையில் முகம் சிவந்துப்போப் வந்துக்கொண்டிருந்தவள், இதுவரை புடவை கட்டி பழக்கமில்லாத காரணத்தால் தடுக்கி விழப் போய், சுற்றியிருந்தவர்கள் சிரிப்பதைப் பார்த்து “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு தன்னவனின் பக்கத்தில் வந்தமர, அவனோ இருபக்கமும் தலையாட்டி சிரித்துக்கொண்டான்.

சனாவின் சார்பாகவும் ரிஷியின் சார்பாகவும் நெருங்கிய குறிப்பிட்ட சில ஆட்கள் மட்டுமே. ராஜலிங்கமோ தன் மகளை அத்தனை சந்தோஷத்தோடு பார்த்திருக்க, முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ராகவனுக்கு இப்போதுதான் மனம் நிறைந்து போயிருந்தது.

ஆரம்பத்தில் தன் மகளுக்கு சார்பாக நடந்துக்கொண்டாலும் ஒருகட்டத்தில் ரிஷியின் சந்தோஷத்தை விட எதுவும் பெரிதாக அவருக்கு தோன்றவில்லை. தன் சிஷ்யன் என்பதை தாண்டி அவன் மேல் அவருக்கொரு பாசம்.

அதேநேரம் ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தவனின் பார்வை அடிக்கடி சுற்றிமுற்றி சிலரைத் தேடி அலைந்தது.

அவன் நினைத்தது போல் அந்த இருவரும் உள்ளே வர, சரியாக ஐயரும், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்று குரல் கொடுத்தார். அவர்களைப் பார்த்து பளிச்சென்ற புன்னகை புரிந்தவன், மங்கள நாணை கையில் ஏந்தி தன்னவளின் புறம் திரும்பி, விழிகளால் சம்மதம் கேட்க, “விருப்பமில்லாமதான் வந்தேனாக்கும்! சீக்கிரம் கட்டுடா வேது” என்றாள் அவனவள் போலிக் கோபத்தோடு கிசுகிசுப்பான குரலில்.

அவளின் வார்த்தைகளில் சிரிப்பு வர, மங்களநாணை அணிவித்து அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், மீண்டும் அந்த இருவரை விழிகளில் சந்தோஷத்தோடு நோக்க, மனோகர் அர்ச்சதைப் பூவை விழிகள் கலங்க துவினார் என்றால், மேக்னாவோ விழிகளுக்கு எட்டாத புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.

விரலோடு விரலைக் கோர்த்து அக்னியை வலம் வந்து மணத்தம்பதிகளுக்கான அடுத்தடுத்த சடங்குகள் நடக்க, மேக்னாவோ சட்டென்று எழுந்து மணவறையை நோக்கி வந்தாள்.

அவள் தன்னை நோக்கி வருவதைக் கண்டு செய்துக்கொண்டிருந்த சடங்கை நிறுத்திய ரிஷி, அவளை கேள்வியாக நோக்க, அவனெதிரே வந்து நின்றவள், தன் ஓட்டுனருக்கு விழிகளால் சைகை செய்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் ரிஷியின் முன் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டி வைக்கப்பட்டது.

அதைப் புரியாது பார்த்துக்கொண்டிருந்தவன், “பிரிச்சு பாரு!” என்று மேக்னா சொன்னதும், விழிகளில் கேள்வியைத் தாங்கிக்கொண்டே கவரை பிரித்துப் பார்க்க, அடுத்தநொடி அதிலிருந்ததைப் பார்த்ததும் அவனிதழ்கள் சிரிப்பில் விரிய, அவன் நினைவுகளில் இதை மேக்னாவிடம் கேட்ட சந்தர்ப்பமும் கூடவே ஞாபகத்திற்கு வந்தது.

நீ செலக்ட் ஆகி பெரிய ஆளா வந்ததும் எனக்கு ஒரு கிட்டார் வாங்கி கொடுக்குறியா? இப்போ வாங்க முடியாம இல்லை, பட் நீ கொடுக்குறது ரொம்ப சென்டிமென்ட்டா இருக்கும்

அன்று அவளை காதலிக்கும் போது அவன் கேட்டது. இன்று அவளின் திருமணப் பரிசாக ரிஷியின் கைகளில்.

சனாவோ கிட்டாரை கூர்ந்துப் பார்த்தவள், “க்கும்! பொண்ணு மாப்பிள்ளைக்கு சேர்த்துதானே பரிசு கொடுப்பாங்க. நீ என்ன என் புருஷனுக்கு மட்டும் கொடுத்திருக்க. எனக்கெல்லாம் பரிசு இல்லையா?” என்று நொடிந்துக்கொள்ள, அவளை முறைத்துப் பார்த்தவள், ரிஷியின் புறம் திரும்பி, “பிடிச்சிருக்கா ரிஷ்?” என்று கேட்டாள் ஆர்வமாக.

“தேங்க்ஸ். தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” ரிஷி விழிகள் கலங்க சொல்லிவிட்டு மேக்னாவை அணைத்துக்கொள்ள, “கங்கிராட்ஸ்!” என்று அவனின் அணைப்பிலிருந்தவாறு சொன்னவள், ரிஷியின் கன்னத்தில் அழுந்த முத்தத்தையிட்டு திரும்பியும் பார்க்காதுச் சென்றாள்.

அடுத்தகணம் ஏதோ கருகும் வாடையை உணர்ந்து ஓரக்கண்ணால் தன் மனைவியைப் பார்த்த நம் நாயகன், அப்பட்டமாக தன்னவள் தன்னை முறைப்பதை உணர்ந்து, “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தவாறு அதையும் காதல் பார்வையாக எண்ணி, ரசிக்க ஆரம்பித்தான்.

அதேநேரம், தன் காரை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தளின் விழிகள் சற்று கலங்கிப் போயிருந்தன. இப்போது அவள் மனதில் அவனில்லை. இருந்தாலும், சில நினைவுகள் ஞாபகத்திற்கு வந்து அவளை சற்று கலங்கடித்தது.

இமை சிமிட்டி விழிநீரை அடக்கியவாறு வந்துக்கொண்டிருந்தவளுக்கு சரியாக ஒரு அழைப்பு.

திரையில் தெரிந்த எண்ணை புரியாது பார்த்துவிட்டு அழைப்பையேற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்றதும்தான் தாமதம் மறுமுனையில், “ஹெலோ மிஸ்.மேக்னா” என்ற குரல்.

ஒருநிமிடம் உறைந்துவிட்டாள் அவள். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தக் குரலை கேட்கிறாள். ஆம் அவனேதான். சித்தார்த்.

அவளுடைய நடை சட்டென நிற்க, “மொதல்லயிருந்து ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டு அவன் வசீகரமாகச் சிரிக்க, இங்கு அதிர்ச்சியில் நின்றிருந்த மேக்னாவின் இதழ்களும் அவன் கேட்டதன் அர்த்தம் புரிந்து மெல்ல புன்னகைத்துக்கொண்டன.

பத்து வருடங்களுக்கு பிறகு,

இரவு பண்ணிரெண்டு மணியளவில், சமையலறை பக்கமிருந்த பின்வாசல் வழியாக இரு உருவங்கள் மெல்ல வீட்டினுள் நுழைந்தன.

எங்கு சத்தம் கேட்டுவிடுமோ என்று மெல்ல மெல்ல அடி வைத்து வந்துக்கொண்டிருந்த அந்த குட்டிச் சிறுமி, “ம்மீ, டாடி தூங்கியிருப்பாருல்ல?” என்று ஹஸ்கி குரலில் கேட்க, “ஆமா விசு, இப்படியே மெதுவா போய் நீ உன் ரூமுக்கு போயிடு, நான் என் ரூமுக்க போய் சமத்தா தூங்கிடுறேன். அத்தோட இன்னைக்கு நாம வெளியில போனதையே மறந்துடணும்” என்றாள் சனா அதே ஹஸ்கி குரலில்.

“ஹாஹாஹா… டாடி சரியான மக்கு ம்மீ, அவருக்கு ஸ்ட்ரீட் ஃபுட்டோட அருமையே தெரியல.” என்ற விசு எனப்படும் ரிஷி, சனாவின் புதல்வி விஷாகா, சட்டென கேட்ட, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமல் சத்தத்தில் அப்படியே நிற்க, “அய்யய்யோ!” என்று அந்த இருட்டில் ஓடி ஒழிய தடுமாறினாள் அவள் அம்மா.

அதற்குள் விளக்கு ஒளிரப்பட, ஓரக்கண்ணால் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட தாயும் மகளும் எச்சிலை விழுங்கிக்கொண்டு மெல்ல திரும்பிப் பார்க்க, அங்கு மூக்கு விடைக்க அவர்களை முறைத்தவாறு நின்றிருந்தான் ரிஷி.

வழக்கம் போல் மாட்டிக்கொண்டதில், இருவரும் கையை கட்டிக்கொண்டு அர்ச்சனையைக் கேட்க தயாரானது போல் தலையை குனிந்துக்கொள்ள, ரிஷியோ இடுப்பில் கைக்குற்றி ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “எத்தனை தடவை சொன்னாலும் திருந்தமாட்டீங்கல்ல! அன்னைக்கு என்னடான்னா பாடகர் ரிஷி வேதாந்தோட பொண்டாட்டி தன் பொண்ணோட ரோட்டு கடையில உக்கார்ந்து இட்லி சாப்பிட்டுகிட்டு இருந்தாங்கன்னு நீயும் இவளும் இட்லி சாப்பிடுற ஃபோட்டோவோட ஒரு வீடியோ மீடியாவுல ஸ்ப்ரெட் ஆச்சு. அதுக்கப்றம் இரண்டு பேரும் நடுராத்திரில ரோட்டோரமா உக்கார்ந்து சோளம் சாப்பிடுற ஃபோட்டோ  வைரல் ஆகிச்சு. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?” என்று ரிஷி கோபம் தெறிக்க கத்த,

ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு நிலத்தில் புதைந்துவிடுமளவு மேலும் தலையை குனித்துக்கொண்டனர் இருவரும்.

இருவரின் அமைதியில் ரிஷிக்குதான் அய்யோ என்றிருந்தது.

“ஓ கோட்!” என்று விழிகளை உருட்டி சலித்துக்கொண்டவன், அவர்களின் பாவமான முகத்தை வைத்திருக்கும் பாவனையில் கொடுப்புக்குள் சிரித்தவாறு, மெல்ல நடந்து வந்து தன் புதல்வியை தூக்கிக் கொண்டான்.

“சாரி டாடி, எல்லாத்துக்கும் ம்மீதான் காரணம்” தன் தந்தை தன்னை தூக்கி அணைத்ததுமே அவள் தன் துணையை அப்பட்டமாக போட்டுக் கொடுக்க, “துரோகி!” என்று உதட்டைச் சுழித்து தன் சீமாட்டியை முறைத்துப் பார்த்தாள் சனா.

அதில் வாய்விட்டே சிரித்து, “உங்கள போக வேண்டாம்னு சொல்லல்ல, உங்க பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம். எனக்கெதிரா இருக்குறவங்க இங்க நிறைய பேர் இருக்காங்க. இது இரண்டு பேருக்கும் நல்லாவே தெரியும்” என்று கூறிக்கொண்டே ரிஷி விஷாகாவை அவளுடைய அறையில் படுக்க வைக்க, “இனி பண்ண மாட்டேன் டாடி” என்றாள் அவள் தன் சின்னக் குரலில் கெஞ்சலாக.

இது வழக்கமாக அவள் சொல்வதுதான் என்பதை அறிந்தே வைத்திருந்தான் ரிஷி.

வாய்விட்டு சிரித்து, “லெட்ஸ் ஸ்டார்ட்!” என்றுவிட்டு ரிஷி பாட ஆரம்பிக்க, தன் தந்தையின் காந்தக் குரலில் லயித்துப் போனவள், ஏதோ ஞாபகம் வந்தவளாக, சட்டென குறுக்கிட்டு “டாடி, ஹவ் ஸ்வீட் வொய்ஸ் யூவர்ர்ஸ். அப்படி இருக்குறப்போ அம்மா மாதிரி ஒரு பொண்ண எப்படி கல்யாணம் பண்ணீங்க. அவங்க பாடுறதை கேக்க முடியல. ஓ கோட்!” என்று முகத்தைச் சுழித்தாள்.

“ரொம்ப ஓவராதான் பண்ற நீனு. என்னை பத்தி உனக்கு என்னடீ தெரியும்? அம்மா எம்புட்டு பெரிய ஆக்டர் தெரியுமா, கட்டபொம்மன் வேஷத்துல என்னை அடிச்சிக்க ஆளேயில்லை” என்று சனா தன் கோலரை தூக்கி விட்டுக்கொள்ள, “ரியலி?” என்று விஷாகா ஆச்சரியமாக புருவங்களை உயர்த்தினாள் என்றால், அந்த வேஷத்தில் அவளை நினைத்துப் பார்த்து பழைய ஞாபகத்தில் பக்கென்று சிரித்துவிட்டான் ரிஷி.

அவன் மனைவி முறைக்க, முயன்று சிரிப்பை அடக்கியவன், “எதுவும் பேசாம என் செல்லம் தூங்கு, அப்பா நாளைக்கு கீபோர்ட் வாசிக்க கத்து தரேன்” என்று தன் துறையிலேயே தன் மகளையும் வளர்க்க எண்ணி இப்போதே தன் கடமையை ஆரம்பிக்க அடித்தளம் போட, அவனுடைய இரத்தமவளளுக்கும் ஏனோ இயற்கையிலேயே தந்தையைப் போல் இசையில் ஆர்வமும் ஜாஸ்தி. திறமையும் ஜாஸ்தி.

கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு முகத்தை தூக்கி வைத்திருந்த தன் காதல் மனைவியை இழுத்துக்கொண்டு தங்களின் அறை பால்கனிக்குச் சென்றவன், “என்னடீ அரக்கி, ரொம்பதான் முறைக்குற?” என்று அவளின் கீழுதட்டை சுண்டிவிட, “ஆங்…” என்று சிணுங்கியவாறு அங்கிருந்து ஓட முற்பட்டாள் அவள்.

ஆனால், அவள் முழங்கை அவன் கரத்தினுள் சிறைப்பட்டிருக்க, சனாவின் இடையை வளைத்து தன்னோடு மேலும் இறுக்கி, “ட்ரெக்கிங் போலாமா ஸ்வீட்ஹார்ட்?” என்று அவளின் காது மடல்களில் மீசை முடி உரச காதலாக ரிஷி ஹஸ்கி குரலில் கேட்டதும், கூச்சத்தில் உடல் சிலிர்க்க சனாவின் விழிகள் மின்னின.

விரிந்த விழிகளோடு, “நெசமாவா?” என்று ஆச்சரியக் குரலில் அவள் கேட்க, “ஆமா ஆமா, பட் அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சமாச்சாரம் இருக்கு” என்றான் ரிஷி எதையோ உணர்த்தும் விதமாக பளபளக்கும் விழிகளோடு.

அவளோ அவனின் பார்வை மாற்றத்தை பாதி புரிந்தும் புரியாததுமாக, “என்ன?” என்று தயக்கமாகக் கேட்டவாறு மெல்ல விலகப் போக, அவ்வளவு இலகுவாக அவன் அவளை விட்டுவிடுவானா என்ன?

இரு உடல்கள் உரச அவளை போக விடாது தன்னோடு நெருக்கியவன், “விசு, அவளுக்கு தம்பி பாப்பா வேணும்னு கேக்குறா. சோ… ஆரம்பிக்கலாமா?” என்று தாபம் தேங்கி நிற்கும் வார்த்தைகளோடு சொல்லியவாறு அவளின் கழுத்தை இதழால் உரச, தானாக அவள் விழிகள் மூடிக்கொண்டன.

அவனும் பற்தடம் பதிய கழுத்தில் அழுந்த முத்தமிட்டு தன் தாகத்தை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்க எண்ணி அவளின் கழுத்து வளைவில் புதைத்துக்கொண்டே அவளின் மொத்த பாரத்தையும் தன் இரு கைகளில் ஏந்திக்கொள்ள, இமைகளை சுகத்தில் மூடிக்கொண்டாள் சனா.

இருவரின் இல்லற வாழ்க்கையில் காதலோடு காமம் பிணைந்திருக்க, கூடவே கணவன் உண்டாக்கும் கூச்சத்தில் சிணுங்கல்களோடு அவள் வாய்விட்டுச் சிரிக்க, அவளின் மறுப்பை தன் கொஞ்சல்களால் அடக்கி அவளின் புன்னகையில் இணைந்துக்கொண்டான் அவள் காதல் கணவன்.

                   **** சுபம் ****

error: Content is protected !!