நாணின்றி நாம் – 2

304551628_1105250770101143_5267617996776120827_n-e4692a24

நாணின்றி நாம் – 2

அத்தியாயம்-2

பெருநகரத்தின் பிரபலமான  கட்டிடம் ஒன்றின் எட்டாவது மாடியில்,

அடுத்த ப்ராஜெக்ட்டிற்கான டேட்டாக்களை கடைபரப்பி மும்முரமான யோசனையில் ஆழ்ந்திருந்த சுதீரின் கேபின் கதவை ‘நாக்’ செய்து “மே ஐ..” என்றதிற்கு நிமிராமலேயே அனுமதி வழங்கினான்..

ஆட்டோமேட்டிக் டோரை தள்ளிக்கொண்டு விசிறியபடியே மூச்சு வாங்க வந்து நின்றவளை கண்டதும் சுதீருக்கு தாராளமாய் புன்னகை விரிந்தது..

அவள் தீஸ்தா..  நகரத்தின் தவிர்க்க முடியாத பிஸ்னஸ்மேன்களில் ஒருவரான அர்ஜுனின் தவபுதல்வி.. அனுபவித்து வாழ அப்பா கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருந்தாலும் கடையோரமாய் பூக்கும் புன்முறுவலே அவளின் அடையாளம்..

இல்லையென்றால் வளர்ந்து வரும் கம்பெனிகளில் ஒன்றான உதய் கன்ஸ்ட்ரக்ஷனிற்கு வாடி வதங்கி வந்து சேர்வளா?? இதற்கு பின்னால் தெரிந்து கொள்ள வேண்டிய காரணமும் உண்டு..

விபரம் தெரிந்த நாளிலிருந்தே ஒரே உற்ற தோழனும் உதய் கன்ஸ்ட்ரக்ஷனின் தற்போதைய எம்டியுமான சுதீர்.. அப்பா அர்ஜுனின் பிஸ்னஸ்பார்ட்னர் உதயின் ஒரே வாரிசு..  இருவரும் ஒன்றாகவே வளர்ந்ததினால் உள்ளன்பும் உரிமையும் ஜாஸ்தி   

டேபிளில் இருந்த தண்ணீரை மடக்மடக்கென குடித்து விட்டு ‘ஹப்பாடா..’ என சேரில் சாயும் வரை காத்திருந்தவன், சுவற்றில் ஒற்றை காலை மடக்கி அவளை தீர்க்கமாய் பார்த்தான்..

 பார்வை புரிந்தவளாக அன்றைய நிகழ்வுகளை “காம்ப்ளெக்ஸ்ல இருக்குற எல்லா செண்டருக்கும் ஏறி இறங்கிட்டேன்.. நோ யூஸ்.. என்னோட ப்ராப்ளம் என்னன்னே அவங்களுக்கு புரியலை.. அப்புறம் எப்படி ரெக்கவர் பண்ணுவாங்க??” மூச்சு விடாமல் பேசி கொண்டிருந்தவளின் புலம்பலையும் கடந்து நெற்றியில் துளிர்த்திருந்த வியர்வையும் ஆங்காங்கே சிவந்த தேகமுமே அவன் கவனத்தை ஈர்த்தது..

“தீஸ், உன்னை எத்தனை தடவை வார்ன் பண்றது?? ஷேர் ஆட்டோல ட்ராவல் பண்ணாதன்னு.. வீட்ல இருக்குற காரை எடுத்துட்டு போகலாம்.. இல்லைன்னா டாக்சி கூட புக் பண்ணலாம்.. ஃபார்ட்டி டிக்ரீ வெயில்ல ஆட்டோல குலுங்கி டயர்டாகி வர்றதை பார்க்கவா நாங்கெல்லாம் இருக்குறோம்..” என கண்டித்தவனிடம், “டவுன் பஸ்ஸில் தொங்கி வந்தேன்..” என்றால் அவ்வளவு தான்..

தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவான்..

“இப்ப நான் எப்படி வந்தேங்க்றது தான் முக்கியமா?? எதுக்காக வந்தேன்னு கேளேன்.. அதை விட்டுட்டு..” என சலித்து கொண்டவள், “திட்றதுன்னா இன்னொரு நாள் ரூம் போட்டு திட்டிக்கோ.. இப்ப வேணாம்.. நானே ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சா ஒன்பது ஸ்டெப் பின்னாடி போகுதேன்னு நொந்து போயிருக்குறேன்..” அங்கலாய்ப்பாய் தலையை பிடித்து கொள்ளவும் அவனின் கண்டிப்பு கரைந்தது..

கண்ணாடி வழியே அட்டெண்டரிடம் டீயென சைகை காண்பித்து விட்டு, “சரி, நான் எதுவும் கேக்கலை.. நீ சொல்றதை மட்டும் கேக்குறேன்..” என்று விட்டு தயாராய் சேரை இழுத்து கைகட்டி அமர்ந்தான்..

“பயர்ப்ளை பிளாட்பார்மோட பேஸ்..” அவள் தொடங்குவதற்குள்,

“ப்ச், எவ்ளோ நாள் தான் அதே ப்ளாக்க(blog) ரெக்கவர் பண்ணிட்டே இருப்ப?? சாண்டியை சொல்லணும்.. ப்ரீயா இருந்தா சோசியல் மீடியால போஸ்ட் போடுறதை விட்டுட்டு ப்ளாக் ஒப்பன் பண்ணி கொடுத்துருக்குறான்.. தீஸ் நான் சொல்றதை கேளு.. இந்த ப்ளாகை விட்டு தள்ளிட்டு நாம ப்ரொபெஷனல்ஸ ஹையர் பண்ணிடலாம்.. நீட்டா ப்ளாக் ஆர் சைட் ரெடி பண்ணி தந்துடுவாங்க.. அதுல உன்னோட பயர்ப்ளை ஐடியாஸை ரன் பண்ணலாம்..” என்றான் வண்டுக்கு முந்திய மலராய்..

“சுதீர் உனக்கு புரியலை.. ப்ரொபெஷனல்ஸ் நான் எக்ஸ்பெக்ட் பண்ற பீச்சர்ஸோட க்ரியேட் பண்ணி தர மாட்டாங்க.. அவங்க கிட்ட கிளாசிக் மாடல் தான் அவைலபிலா இருக்கும்.. ஒவ்வொரு பீச்ச்சருக்கும் ஆறு பேஜ் கோடிங் எழுதியிருக்குறான் சாண்டி.. இந்த மாதிரி திரும்ப கிடைக்காது..” அவள் பிடித்த பிடியில் உறுதியாய் தரித்திருந்தாள்..

“முடிவா என்ன தான் பண்ணணும்னு சொல்ற?? எனக்கு கோடிங் பத்தி எந்த ஐடியாவும் கிடையாது.. சோ நீயே சொல்லு.. ஏதாவது ப்ளானோட தானே வந்துருப்ப??”

“ஹிஹி..” அசடாய் சிரித்து விட்டு, “ப்ளான் சீரோ.. ஐ மீன் நோ ப்ளான்.. ஏதாவது வழி இருந்திருந்தா வந்ததுமே சொல்லியிருக்க மாட்டேனா??“ என்றாள்..

“எந்த பிளானும் இல்லாம எப்படி ஒரு விஷயத்துல இறங்குற?? ஹான்.. இதுக்கு எங்கள்ல யாரோட பிஸ்னஸ்லயாவது ஹெல்ப் பண்ணலாம்.. பாரிஸ் போய் படிச்சுட்டு வந்ததுக்கு அர்ஜுன் ஹோட்டலை டிசைன் பண்ணலாம்.. அப்பாவோட அக்கவுண்ட்ஸ் பார்த்துக்கலாம்..  ஐடியாஸ் கொடுக்கலாம்..  அதைவிட்டுட்டு சுத்தமா வேலைக்கே ஆகாத ஆன்லைன்ல பிஸ்னஸ் பண்ண போறேன்னு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்குற..” அவளின் பொறுப்பற்ற பதிலில் கொதித்து போனான் சுதீர்..

அர்ஜுன் தொடங்கி சுதீர் வரை பிஸ்னஸ் உலகின் வீழ்த்த முடியாத திமிங்கலமாக வலம் வர, எதற்கும் சளைத்தவளில்லை என நிருபிப்பதற்காக ஆன்லைன் பிஸ்னஸில் முதலையாக காலூன்ற நினைத்தாள் தீஸ்தா..

அதற்கு ஆரம்பமாக இன்ஸ்டாகிராம் இன்ப்லூயன்சர், யூடியூபின் பியூட்டி குயீன், பேஸ்புக்கின் மாஸ்கமெண்டர் என சோசியல் மீடியாவில் கலக்கி கொண்டிருந்தவள், கூகிள் க்ரோமையும் விட்டு வைக்கும் எண்ணமில்லை..

பலநாட்களாய் ஆளில்லாத டீக்கடையாய் காற்றாடி கொண்டிருந்த பயர்ப்ளை ப்ளாக் சடனான பாரீனரின் வியூவால் ட்ராபிக் கொடுக்க, ப்ளாக் ப்ளாக்கானது(block) தான் மிச்சம்..

ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறையென வீட்டு பக்கம் தலை காட்டும் சாண்டியின் மண்டை காயுமளவிற்கு கோடிங் எழுத விட்டு, ‘யூசர் பிரெண்ட்லி’யாக பயர்பிளையை உருவாக்கியிருந்தாள் தீஸ்தா..

இவளின் இந்த சீரிய வளர்ச்சி பெரிய தொழிலதிபர்களுக்கு சிறுகுழந்தை விளையாட்டாகவே தெரிந்தது.. குறிக்கிட நேரமின்றி அவர்களும்  அவளின் போக்கிலேயே விட்டுவிட்டனர்..

தன்னிடத்தில் எதையும் விட்டுக்கொடுக்காத ரகம் தீஸ்தா, அதிலும் தன்மானம் என்றால்??

“வெல்.. இன்னைக்கு என்னோட ஐடியாஸ் எல்லாம் சீப்பா தெரியுது.. நாளைக்கு நானே சீப்பா தெரிவேன்ல..” மூக்கு சிவக்க எழுந்து கொண்டவளை தடுத்து அதே சேரில் இருத்தினான் சுதீர்..

உள்ளே வந்த அட்டெண்டர் டீயை வைத்து விட்டு செல்லும் வரை ஏதும் பேசாதிருந்தவன், “சின்ன சின்ன விஷயத்துக்கும் டென்ஷன் ஆகுறதை கண்ட்ரோல் பண்ணிக்கோ தீஸ்.. உனக்கு ஹெல்ப் பண்ணனும்னாலும் நீ ஹெல்ப் பண்ணனும்னாலும் இப்படி தான் அடமென்ட்டா பீகேவ் பண்ற?? அடுத்தவங்க கிட்ட பொலைட்டா ஹெல்ப் கேக்குறதுக்கு கொஞ்சமாவது கத்துக்கோ தீஸ்..” என்றதும்,

தோள்களை பிடித்திருந்த கரங்களை தட்டிவிட்டு, “நான் நார்மலா இருந்தாலும் நீ தான்.. பென்ஷன் மணி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா டென்ஷன் ஆக்குற..” அவன் மேலே குற்றம் சாட்ட, “ஆமா நான் லூசு தான்.. எனக்கு தான் அறிவில்லை..” என்பதாய் சரணடைந்தான்..

“ஆல்ரைட், உனக்கு பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்.. என்ன பண்ண?? செய்யுறேன்.. வெயிட் பண்ணு..” போனை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவன், திரும்பி வரும் போது கையில் ஒரு அட்ரெஸ்..

“என்னோட பேட்ச்மேட் உமேஷ்.. சாப்ட்வேர் டெவெலப் பண்றதுல எக்ஸ்பெர்ட்.. இப்ப அதெல்லாம் விட்டுட்டேன்னு சொல்றான்.. பயர்ப்ளை பத்தி சொல்லியிருக்குறேன்.. எதுக்கும் நீ நேர்ல போய் கிளியர் பண்ணிக்கோ..” என்று அட்ரசை கொடுக்கும் முன், “பட் ஒரு கன்டிஷன்.. அவனால ரெக்கவர் பண்ண முடியலைன்னா எல்லாத்தையும் விட்டுட்டு பேமிலி பிஸ்னஸ கவனிக்கணும்..” என்கவும் ஆபத்திற்கு பாவமில்லை என்பதாய் தலையாட்டி வைத்தாள் அந்நேரத்திற்கு..

“டீ குடிச்சுட்டு போ..” அக்கறையாய் கூறியவனிடம், “ப்ளாக் ரெடியாகுற வரை பச்ச தண்ணீ கூட பல்லுல படாது.. வேலை முடிஞ்சதும் போற வழியில காபி சாப்ட்டுக்குறேன்..” என பறந்தவளை தூக்கி “ஓலா புக் பண்ணியிருக்குறேன்..” என்று டாக்சியில் போட்டு வழியனுப்பினான்..

‘நம்பர் எட்டு, துபாய் குறுக்கு சந்து..’ ரேஞ்சிற்கு சந்து பொந்தெல்லாம் வளைந்து உமேஷின் தீப்பெட்டி சைஸ் சர்வீஸ் செண்டரை அடைவதற்குள் முதுகெலும்பு உடைந்து விட்டது..

ஆயா காலத்து சிஸ்டமில் த்ரீ ஜி ஸ்பீடில் உருண்டு உருண்டு கூகிளை கூட உருப்படியாக ஒப்பன் செய்ய முடியவில்லை.. அங்கே தான் தெரிந்து கொள்ள வேண்டும் சுதீரின் சூட்சமத்தை.. எவ்வளவு நாசூக்காய் பேசி வம்பாய் காயை நகர்த்தியிருக்கிறானென தீஸ்தா புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை..

“பரவாயில்ல ப்ரோ.. நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம்.. அர்ஜென்ட் இல்லை..” என்று கூறி தப்பித்தவள், சுதீரிடம் சரியாகி விட்டதென புளுகியும் விட்டாள்.. “எனக்கே செக் வைக்குறியாடா ஒழுங்கா வேகாத சாண்ட்விட்ச் வாயா!!.. பேமிலி பிஸ்னஸ்க்கு வந்தா தானே..” என்று சூளுரைத்து கொள்ளும் பொழுது தான் காலி வயிறும் சுரண்டியது..

அசதிக்கு ஐட்ரின்கில் காபியை முடித்துக்கொண்டு டாக்ஸிக்காக காத்திருந்த தீஸ்தாவை ‘செயின் அறுக்க வந்த கொள்ளைக்காரன்’ போல ஸ்கேன் செய்து கொண்டிருந்தான் ப்ருத்வி..

தென்றல் தீண்டினாலோழிய தேகத்தை தீண்டாத லூசான கமீசும் பிளாசாவும்.. பன்ஸ்டிக்கின் கண்டிப்பை மீறி குத்திட்டு நின்ற பேபிஹேர்களும்.. வளைந்த உதட்டினை எப்பொழுதாவது எட்டிப் பார்க்கும் தெத்துப்பற்களை பளிச்சென காட்டியது..

“பேரழகுன்னு சொல்ல முடியாது.. ஏதோ என் அழகான கண்ணுக்கு கொஞ்சமா அழகா தெரியுற..” என்றவனை புருவம் முடிச்சிட பார்த்தாள் தீஸ்தா..

கரெக்டா பத்து நிமிஷத்துல டாக்சி வந்துடுமா??” அடுத்த கேள்வி..

இந்தமுறை முறைத்தாள்..

“ஏங்க இப்படியே முறைச்சிட்டு இருந்தா மீதி இருக்குற ஒன்பது நிமிஷமும் முடிஞ்சிடும்..” ஏதோவொன்று மின்னியது அவன் கண்களில்..

“முடிஞ்சிட்டு போகுது..” என்றாள் சிறிது அலட்சியமாய்..

“நானெல்லாம் பாவமில்லையா??” பாவமாய் உதடு பிதுக்க,

“உண்மை தான்.. இந்த உலகத்துக்கு நீயொரு  பாவம்..”  உடனடி பதில் தந்தாள்..

“என்ன ஈஸ்.. இப்படி டக்குன்னு சொல்லிட்ட.. கொஞ்சம் யோசிச்சிட்டாவது சொல்லுறது..”

“நீ யோசிச்சியாடா… காபி ஷாப்ல ஒன் ஹாரை வேஸ்ட் பண்ணிட்டு இப்ப பத்து நிமிஷத்துல எதையோ ப்ளக் பண்ணி தீர்க்குறவன் மாதிரி பேசுறதுக்கு முன்ன யோசிச்சியா??” இடையில் கரம் குத்தி முறைத்தவள், “சுதீர் டாக்சி புக் பண்ணியிருக்குறான்.. டைமிங் மிஸ் ஆனா அவ்ளோ தான்.. மொத்த கூட்டமும் சேர்ந்து என்னை மிசஸ் ஆக்கிடுவாங்க..” என்கவும் “அச்சச்சோ.. பாவம்..” நிலைமை புரிந்தும் உச்சுக்கொட்டினான் ப்ருத்வி..

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஐட்ரின்கில் அறிமுகமான ப்ருத்வியை பற்றி சுதீரிடம் மட்டுமல்ல யாரிடமும் கூறியதில்லை.. தண்ணீர் குடித்தால் கூட சுதீருக்கு கூறிடும் தீஸ்தாவிற்கு இதென்னவோ ரகசியம் காக்க தூண்டியது.. 

“ஹே, முறைக்காத.. ஹரி சீக்கிரம் கிளம்பிட்டான்டி.. ஓனர் நான் தானே பொறுப்பா எல்லாத்தையும் கிளீன் பண்ணிட்டு க்ளோஸ் பண்ணனும்..” நல்லபிள்ளையாய் கண்சிமிட்டியவனை பார்த்து பற்கடிக்க, மனம் எழும்பவில்லை..  

“வாயில வெரைட்டியா வருது.. ஒழுங்கா ஓடி போயிடு.. சும்மா விட்ருந்தா கூட கால்ல கையிலையாவது விழுந்து வீட்ல ஓகே வாங்கியிருப்பான்.. தேவையில்லாம ஏதேதோ பேசி குழப்பி விட்டு அவன் அங்க சொதப்பி விட்ருக்குறான்.. சந்தியா எனக்கு கால் பண்றா.. ஏன்டா இந்த வேண்டாத வேலை..” ப்ருத்வியின் லொடலொட வாயை பற்றி தெரிந்தே கேட்டாள் தீஸ்தா..

“ஹரி- சந்தியா லவ் மேட்டருக்கு லீவ் கொடுத்துட்டு வேற பேசலாமா?? பொடி  வைத்து தொடங்கிய ப்ருத்வியை புரியாமல் பார்த்த தீஸ்தா, யோசனையாயிருக்க “ட்ரீம் பாய் பத்தி..” ஹின்ட் கொடுத்தான் அவன்..

 “ஹான்..”  கேட்டும்  கேட்காதது போல நடிக்க, “ஒருநாள்  உன்னோட ட்ரீம்பாய் எப்படி இருப்பான்னு சொல்ல வந்த.. அதுக்குள்ள டைம் ஆயிடுச்சு..  சொல்லேன்…” என்று ப்ருத்வி கேட்கையில்  இதயம் தறிகட்டு துடிக்க, “ஏதோ ஒரு ஜாலிக்காக அந்த டைம்ல சொன்னது.. இப்ப எதுக்கு அதெல்லாம்..” வராத  வலிய புன்னகையை இழுத்தாள்..

“ஃபுல்லா சொன்னா தானே கண்டுபிடிக்க முடியும்.. அட்லீஸ்ட் இவனா இருக்குமா?? அவனா இருக்குமா?? கெஸ் பண்ணவாவது செய்வேன்…”  அவன் விடாமல் பேசிக்கொண்டே வாயடைக்க  வழியின்றி தவித்தாள்.. அவன் கேட்கிறானே என்று பாவம் பார்த்து வாயை திறந்தாளெனன்றால் சோலி முடிந்தது..

குறித்திருந்த பத்து நிமிடம் பிரயோஜனமில்லாத வாய்சவடாலில் பஞ்சாய் பறந்திருக்க, சொல்லி வைத்தாற் போல டாக்சியும் வந்து சேர்ந்தது..

கடகடவென  ஏறிக்கொண்டவள், “பை பை..” என்று டாட்டா வைக்க, “ சரியான நேரமும் பொறுமையும் வாய்க்காததினால் நாளை உரையாடலை இதே டாப்பிக்கில் தொடங்குவார் புத்திசாலி ப்ருத்வி..” நடுரோட்டில் செந்தமிழில் ஆற்றினான்..

“ஹையோ..” தலையில்  அடித்து கொண்டவளோ, “மெக்கானிக்  வர்ற வரைக்கும் வெயிட்பண்ணாம கிக்கரை மிதிச்சு  ஸ்டார்ட்  பண்ணு.. சீக்கிரமே வீட்டுக்கு போயிடலாம்..” என்றாள் ஐட்ரின்கின் கடைசி  ஆர்டர் தீஸ்தா.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!