நினைவு தூங்கிடாது 10

நினைவு தூங்கிடாது 10

நிழல் 10 

கோபம் தாபம் மோகம்

 அதை தாண்டிய காதல்

உன்னிடம் மட்டும்

தோன்றும்

என் உணர்வை

என்னவென்று நான் சொல்ல

‘அம்முவுக்கு காய்ச்சல்’ என தெரிந்ததிலிருந்து, ஈஸ்வரின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. கண்கள் அவளின் தரிசனத்திற்காக ஏங்கி கிடந்தது. ‘அன்று இங்கு தான் விளையாடிக் கொண்டிருந்தாள்’ என அவள் வீட்டு தோட்டத்தையே வெறித்திருந்தான். அவனிருந்த அறையின் ஜன்னலில், தவமிருக்காத குறை. 

அவனது தவத்தை கலைக்கவென்று, நண்பர்கள் கான்ஃபரன்ஸ் வீடியோ அழைப்பில் இணைந்தனர். “எப்படி எங்களை விட்டுவிட்டு நீ மட்டும் கிராமத்து அழகிகளை ரசிக்கலாம்? நாங்களும் வருவோம்” என.

“என்ன பேசுற நீ? இங்கு பிரச்சினை செஞ்சு மாட்டிக்கிட்டா கடுமையான தண்டனை கிடைக்கும். உங்கள் லீலைகளை சென்னையில் மட்டும் வச்சுக்கோங்க.” என எச்சரிக்கை செய்தான்.

“மாட்டிக்கிட்டா தானே பிரச்சனை? மாட்டிக்காமல் தப்பு செய்யலாம். அப்படியே மாட்டிக்கிட்டாலும், நமக்கு இருக்க பணத்துக்கு, யாராலும் நம்மை ஒன்னும் செய்ய முடியாது.” அலட்சியமும் கர்வமும் மட்டுமே நண்பனின் குரலில்.

‘இவர்களை‌ வேறு மாதிரிதான் டீல் பண்ணனும்,’ என நினைத்த ஈஸ்வர், “டேய் இது கிராமம். இங்க உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. வசதிகள் பத்தாது” என அவர்களது ஆடம்பர வாழ்வை சுட்டிக்காட்டி, அவர்களின் வரவை தடுக்க பார்த்தான்.

“நாங்கள் அட்ஜஸ்ட் செய்துகறோம்” என இலகுவாக விட்டுக்கொடுத்தனர்.

ஈஸ்வரின் சந்தேக பார்வைக்கு,”எத்தனை நாள்தான் நாங்களும், மார்டன் டிரஸ் போட்ட பெட்டர்மாஸ் லைட்டேயே பார்க்கறது. கண்ணுக்கு குளிர்ச்சியா தாவணி போட்ட கிராமத்து குத்துவிளக்கையும் பார்க்க வேண்டாமா?” என ஒருவனும்.

“கிராமத்து திருவிழாவை நாங்க பார்த்ததே இல்லை. பிசினஸ்ல இருந்து ஒரு பிரேக் எடுக்க, நாங்களும் வரோம்” என உறுதியாக முடித்தனர்.

வேற வழி இல்லாமல்,”சரி வாங்க. ஆனால் மூன்று நாள் தான். அதுக்கு அப்பறம் கிளம்பிடனும். இங்க தாத்தாவுக்கு மதிப்பு ஜாஸ்தி. உங்க வால்தனத்தை காட்டக்கூடாது. அதற்கு சம்மதம் என்றால் வாங்க” இவன் ரொம்ப நல்லவன் போல், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தான்.

‘இவன் சொல்வதை கேட்க கூடியவர்களா அவர்கள்?’ அவன் கூறிய அனைத்திற்கும் சரி சரி என மண்டையை ஆட்டிய, ஓநாய் கூட்டம் பசுஞ்சோலை கிராமத்தை வந்தடைந்தது. 

†††††

காலையில் ஈஸ்வருடன் பேசிய நண்பர்கள், நள்ளிரவு நேரத்தில் அந்த கிராமத்தில் நுழைந்தனர். அவர்களது கார் அந்த கிராமத்தில் நுழைவதற்கும், ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அம்மு, கெட்ட கனவு கண்டு அலறியடித்து எழுவதற்கும் சரியாக இருந்தது.

உடல் தூக்கிவாரி போட முகமெல்லாம் வியர்த்து பயந்துபோய் எழுந்தாள். அது கனவா? நிஜமா? பிரித்தறிய முடியா நிலை. ‘ஒரு உருவம்! வேள்வித் தீயில் எரிவதுபோல்.’

அந்த அறையிலிருந்த இரட்டை கட்டிலில் சகோதரிகள் துயில, கீழே பாய் விரித்து அவர்கள் அன்னை கஸ்தூரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பயத்திலிருந்த அம்மு கீழே இறங்கி கஸ்தூரியுடன் படுத்துக்கொண்டாள்.

தன்னருகில் மகளின் அரவம் உணர்ந்த கஸ்தூரி மகளை அனைத்து, தலைகோதி ஆறுதல் அளித்தார். ‘மகள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாளென்று.’ அவரால் உணர முடிந்தது.

அவளே சொல்லாமல் அவளிடமிருந்து விஷயத்தை வாங்க முடியாது. மஹா அழுத்தக்காரி. எந்த அளவு குறும்பும் துடிப்பும் நிறைந்தவளோ! அதே அளவு அழுத்தமும் நிறைந்தவள். நினைத்ததை சாதிக்கும் குணமுடையவள். தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் துடித்துப் போகும் பூஞ்சை மனமுடையவள். 

அன்னையின் அருகில் படுத்திருந்தாலும், ‘உடல்முழுதும் நெருப்போடு யாரோ அங்கும் இங்கும் பரிதவிக்கும் காட்சி’ அவள் மனகண் முன் தத்ரூபமாக தோன்றி உயிர் உறைய வைத்தது.  

பயத்திலிருந்த அம்மு, மனதில் கந்த சஷ்டி கவசம் சொல்ல, சற்று பயம் தெளிந்து மெல்ல உறக்கத்திற்குல் சென்றாள். ஒரு பெருமூச்சுடன் கஸ்தூரியும் உறக்கத்தில் ஆழ்ந்தார்.

‘உங்களது நிம்மதியான உறக்கமும், சந்தோஷமும் இன்னும் ஓரிரு தினங்களே’ என விதி அவர்களை பார்த்து கைகொட்டி சிரித்தது.

†††††

அம்மு உடன் காட்டுக்கு சென்று வந்து மூன்று நாட்கள் கடந்திருந்தது. இந்த மூன்று நாட்களும் அவளது பூமுகத்தை காண முடியாமல், ஈஸ்வர் தவித்துக் கொண்டிருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அவனது கேடுகெட்ட நண்பர்களுடன் ஊர் சுற்றி கொண்டிருந்தான். 

அன்று நண்பர்களுடன் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணின் குரல் அவன் செவியை தீண்டி உயிர்வரை பாய்ந்தது. அந்த குரலை துல்லியமாக அடையாளம் கண்டுகொண்டது அவனது காதல் கொண்ட மனம். 

‘நண்பர்களின் கண்ணில் அவள் பட்டு விடக்கூடாது’ என, தன்னுடன் வந்த அவர்களை, மாமா மகன் தீபனுடன் (ரேகாவின் சகோதரன்) தன் இல்லத்துக்கு அனுப்பிவைத்தான். அவனையும் உடன் அழைத்த நண்பர்களிடம் “எனக்கு சிறிய வேலை இருக்கு. முடிச்சுட்டு வரேன்.” என மழுப்பி, அவர்களை அனுப்பினான். அவர்களும் சந்தேகப் பார்வையோடு விலகி சென்றனர்.

அவர்களது பார்வையை கண்டுகொள்ளாத ஈஸ்வர், தன் மனதிற்கினியவளை சந்திக்க, குரல் வந்த திசைக்கு சென்றான். 

அங்கு கண்ட காட்சியில் மனம் ஸ்தம்பித்து, அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அங்கயே தேங்கினான்.

‘ஒரு நிலவு ஆற்றில் குளிக்க முடியுமா?’ ‘ஆம் முடியும்’ என தன் கண்முன்னே நிலவுப் பெண் ஆற்றில் ஆனந்த குளியலில். அவள் அழகில் ஸ்தம்பித்து அடுத்த அடியை வைக்க மறந்தவன், அவள் அழகை தன் கண்களால் அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான். 

தாய்க்கு தெரியாமல் பசங்களுடம் ஆற்றில் குளிக்க வந்த பெண், நீண்ட நேரம் விளையாடியும் போதாமல், பசங்கள் கிளம்பிய பின்னும் அவள் மட்டும் தனிமையில் இனிமை கண்டுகொண்டிருந்தாள்.

ஒரு பாவாடையை மார்பளவில் உடுத்தி, வெற்று தோள்களுடன் நீரில் மிதந்து கொண்டிருந்தாள். அவளின் இந்த கோலத்தை கண்ட ஆண் மகனுக்கு, மது அருந்தாமலே போதை ஏறியது.

திடீரென தன்னுணர்வு மீண்டவன் சுற்றுமுற்றும் பார்க்க, தங்களைத் தவிர வேறு ஈ காக்காய் இல்லை. நிதர்சனம் மண்டையில் உறைக்க சுள்ளென்று கோபம் தலைக்கேறியது. 

விருவிருவென அவளை நோக்கி சென்றவன்,”உனக்கு வீட்டில் அடங்கி உட்காரவே முடியாதா?” வார்த்தைகள் சீறி பாய்ந்தது.

தான் தனியாக குளிக்கும் இடத்தில், ஒரு ஆடவனின் குரல்கேட்டு திடுக்கிட்ட அம்மு, குரல் வந்த திசையை நோக்கி திரும்பினாள். அங்கு ருத்ர மூர்த்தியாக நின்ற ஈஸ்வரை கண்டு, சர்வமும் அடங்க பேய் முழி முழித்து இடுப்பளவு நீரில் நின்றாள். 

அவளது மிரண்ட மான் விழியில் தொலைய இருந்த தன் கோபத்தை இழுத்துப் பிடித்து, “இப்பதான் காய்ச்சல் சரியாகியிருக்கு. அதுக்குள்ள ஆத்துல குளிக்க வந்துட்டியா? உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல?” என திட்டி தீர்த்தான்.

அவன் கோபத்தில் கத்தினாலும், அதில் அவள் மேலிருக்கும் அக்கறையே தெரிந்தது. அதைப் புரிந்து கொள்ளாத பெண்ணவளோ, அவனது கோப முகத்தை கண்டு அவன் மேல் வெறுப்பையே அதிகரித்து கொண்டாள். 

“நான் பிறந்ததிலிருந்து குளிக்கும் ஆறு. இது என்னை ஒன்றும் செய்யாது. எனக்கு வந்த காய்ச்சல் உங்களால். முதலில் இங்கே இருந்து போங்க.” என அவனுக்கு குறையாத ஆவேசத்துடன் திருப்பியடித்தாள்.

இதுவரை யாரும் தன் பேச்சை ஆட்சேபித்து கேட்டறியாத ஈஸ்வருக்கு, அவளின் எதிர்பேச்சு எப்போதும் போல் பிடிக்காமல் போனது. அவளின் மேல் வந்த கரிசனை, அவளின் குற்றச்சாட்டில் அடிபட்டுபோய், மீண்டும் அவனை மூர்க்கனாக்கியது.

அவளது குற்றம் சாட்டும் விழிகளை பார்த்து கொண்டே, தன் டீ சர்ட்டை மெதுவாக கழட்டி எறிந்துவிட்டு, அணிந்திருந்த அரைக்கால் ஷார்ட்ஸுடன், கோபம் பாதி மோகம் பாதி கலந்து செய்த கலவையாக நீரினில் இறங்கினான். அவனது அந்த நிதானமே அவளுக்கு திகிலை கிளப்பியது.

அப்போதுதான் தான் நிற்கும் தோற்றமே புத்தியில் உரைத்தது. தானாக கரங்கள் மேலெழும்பி தன் பெண்மையின் அழகை மறைத்து, அவன் கண்களுக்கு தடை விதைத்தது. இடைப்பட்ட நேரத்தில் அவன் அவளை நெருங்கி இருந்தான்.

அவன்! இந்த கோலத்தில் அவளை நெருங்கவும், பெண்ணின் விழிகளில் மிரட்சி. அவள் பார்வை மூன்று நாட்களுக்கு முன் தான் அடைக்கலமாகி இருந்த, அவனது வெற்று மார்பை அடைந்தது. ரோமங்கள் அடர்ந்த, பரந்து விரிந்த அவன் மார்பை பார்த்து மிடறு விழுங்கினாள். ஒரு நிமிடத்திற்கு மேல் அவனது மார்பை காண முடியாமல் நாணம் தடுக்க, தன் பார்வையை தழைத்துக் கொண்டது பெண்மை.

‘அதிக நேரம் நீரில் விளையாடியதால் வெளிறிய ஒப்பனையற்ற முகம், வெற்று தோளில் நீர்த்துளி மின்ன, கரம்கொண்டு தன் பெண்மையை மறைக்க முயன்று தோற்று, நனைந்த பாவாடை அவள் உடலோடு ஓட்டி, அவள் அங்கங்களின் வரிவடிவங்களை வெளிச்சம் போட்டுகாட்ட,’ என அவள் நின்ற தோற்றம் ஈஸ்வரின் உணர்ச்சிகளை தூண்டியது.

கால்கள் அவளை நெருங்க, அவனது கண்களோ அவள் முகத்தையும் தாண்டி உடல் முழுவதும் தாபமாக பயணித்தது. ‘எப்போது அவனது கோபப்பார்வை, முற்றிலும் மோகப்பார்வையாக மாற்றம் கொண்டது?’ என்பது விடை அறியா கேள்வி. 

அவன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும், இந்த நிமிடமே ‘அவள் தனக்கு வேண்டும்’ என கூப்பாடு போட, தாப பார்வையோடு அவளை நெருங்கினான்.

அவனின் பார்வையை நேர்கொண்டு காண முடியாத பெண், தன் பார்வையை நீரில் பதித்து “ஒரு வயசு பொண்ணு குளிக்கிற இடத்தில உங்களுக்கு என்ன வேலை?” காற்றாகி போன குரல்.

“ம் உன்னை குளிக்க விடாமல் பண்ற வேலை” அவள் சுதாரிக்கும் முன், நொடியும் தாமதிக்காமல் அவளை தன் கரங்களில் சிறைசெய்திருந்தான். அவனின் உதடுகள் அவளின் வெற்று தோளில் இருந்த சொட்டு நீரை அள்ளிப்பருகியது.

அவனது முரட்டு கரங்கள் தோளிலிருந்து வழுக்கி, கைகளில் நழுவி அவள் இடையில் அழுத்தமாகப் பதிந்தது. பின் அந்த முரட்டு கரங்கள், அவள் உடல் முழுவதும் வேகத்துடன் பயணித்தது. அவன் கரங்கள் செய்த மாயாஜாலத்தில் அவள் உடலில் பல மாற்றங்கள்.

அவனிடமிருந்து விடுபட போராடிய பெண், அவன் கூட்டிச்சென்ற மாய உலகத்திற்குள், உணர்ச்சிகளுக்கு ஆட்கொள்ளப்பட்டு அவனுடன் பயணித்தாள். முதலில் எதிர்த்த பெண்ணின் தற்போதைய அமைதி, அவனின் தாபத்திற்கு தூபம் போட்டது. அவளை தன் கரங்களில் அள்ளிச்சென்று, கரையோரம் கிடத்தி தன் தேடலை தொடர்ந்தான்.

அவனது கரங்கள் தாராளமாக அவள் உடல் முழுவதும் தன் தேடலை தொடர்ந்தது மென்மையாக. கரங்கள் சென்ற இடங்களில் எல்லாம், அவனது உதடுகளும் அழுத்தமாக பதிய, அந்த தீண்டலின் இனிமையில் துவண்டு மயங்கினாள். தன்னிடம் மயங்கிய பெண்மையை முழுவதும் உணர துடித்தது ஆண்மை. அவன் அவளின் உடலில் பரவி படர்ந்தான்.

கள்ளங்கபடமற்று பசங்களுடன் சுற்றித்திரிந்த, அந்த வளர்ந்த குழந்தை, தன் பெண்மையை உணர தொடங்கிய நேரமிது. அவனது நெருக்கம் அவளை பெண்ணென்று உணர வைத்தது.

ஈஸ்வர் அவளுள் மேலும் முழுக அவனுடன் உருகி கரைந்தாள் பெண். ஆணவனின் நெருக்கத்தில் மயங்கியிருந்த, பெண்ணின் கண் முன்னால் அவள் அன்னையின் முகம் தோன்ற, சட்டென்று சுய நினைவடைந்து அவனை உந்தித் தள்ளினாள். மோகம் தடைபட்டதால் ஆண்மையில் பெரும் சீற்றம். 

அவள் தள்ளியதில், அவன் விழுந்த ஜில்லென்ற ஆற்று நீரால் கூட, அவனது உடல் உஷ்ணத்தை தணிக்க முடியவில்லை. சிறிது சிறிதாக சமநிலை பட்டது அவனது உணர்ச்சிகள். பிறகே தான் செய்த காரியம் முகத்தினில் அறைய, அதிர்ந்து போனவனின் பார்வை பெண்ணை அடைந்தது. 

அங்கு அவன் கண்டது, மடக்கிய முழங்காலில் முகம் புதைத்து, ஈர உடையில், கண்களில் கண்ணீருடன், கசங்கிய ரோஜாவை போல், கரையில் தன்னவள் அமர்ந்திருக்கும் காட்சி. ‘சிறு பெண்ணின் உணர்ச்சிகளோடு விளையாடிவிட்டோமென்று’ புரிந்ததும், தன் தலையில் அடித்துக் கொண்டு அவளை நெருங்கினான். 

அவனது நெருக்கத்தை கண்டு மிரண்டு போன பெண்ணின் பார்வை அவனை உயிரோடு கொன்று புதைத்தது. “சாரி! இனி எந்த விதத்திலும் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்” என கூறி, அவனது டீ சர்ட்டை தேடி எடுத்து அணிந்து கொண்டு, திரும்பியும் பார்க்காமல் அவளிடமிருந்து விலகி சென்றான்.

முற்றுப்பெறாத மோகம் மிருகத்துக்கு சமம். இப்போது அடங்கினாலும், எப்போது வேண்டுமானாலும் அது வீர் கொண்டு எழும்.

அவனது, அவள் மீதான மோகம் வென்று அவளை வேள்வித்தீயில் தள்ளுமா?

காதல் வென்று தீப ஒளி ஏற்றுமா?

மோகமா? காதலா?

†††‡†††

 திருவிழா தினம், 

‘இந்த நாள் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட போகிறது. விரும்பத்தகாத பல நிகழ்வுகள் இன்று முதல் அரங்கேறப் போகிறது.’ என்பதை தெரியாத சகோதரிகள், உடலில் பொன்நகை இன்றி, புன்னகையை ஏந்தி, தலைநிறைய மலர் சூடி, அழகான புது பாவடை தாவணியில் கோயிலை நோக்கி சென்றனர்.

‘வானத்து தேவதைகள் பூமியில் கால்பதித்து விட்டதா?’ என அனைவரும் வியக்கும் வண்ணம், தேவதையாக அம்மன் சன்னிதானத்தின் முன் கைகூப்பி நின்றனர். 

அவர்களுக்கு எதிரே நின்ற தேவியின் (ஈஸ்வரின் அன்னை) கண்ணை சகோதரிகள் நிறைத்தனர். ‘இந்த அழகு பெண்களில் ஒருவர் தன் வீட்டுக்கு மருமகளாக வந்தாள் எப்படியிருக்கும்?’ என்ற விதை மனதில் விழுந்தது. 

சரியாக அந்தநேரம் அம்மனுக்கு அபிஷேகம் தொடங்கவும், பூசாரி தன் கைகளிலிருந்த மணியை அடித்தார். அவர் விருப்பத்துக்கு அம்மனே உத்தரவு வழங்கி விட்டதாக தேவி மனம் மகிழ்ந்தார். 

அபிஷேகம் முடிந்ததும் அம்மனுக்கு அலங்காரம் செய்வதற்காக திரையிட்டனர். அங்கிருந்த சிலர் அமிர்தாவை கண்டு, அம்மனுக்காக பாட சொல்லி வலியுறுத்த, எந்த வித தயக்கமுமின்றி, மயக்கும் குரலில் மனமுருக அபிராமி அந்தாதியை பாடினாள்.

அவள் குரலிலிருந்த இனிமை நண்பர்களுடன் சுற்றிக்கொண்டிருந்த ஈஸ்வரனை, சன்னிதானத்திற்கு இழுத்து வந்தது. அவள் பாடியது பக்திப் பாடலாக இருந்தாலும், அவனின் மனதை மயக்கியது அந்த குரலின் இனிமை. அவன் வருவதற்கு முன்பே பாடல் முடிந்திருக்க, பாடிய பெண்ணை இப்போது தவறவிட்டான். 

அவன் கண்களில் விழுந்ததோ பாவடை தாவணியில் வசீகரிக்கும் அழகுடன் இருந்த அம்மு. அவளை ஈஸ்வரின் கண்கள் இன்ச் பை இன்ச்சாக ரசித்திருந்தாலும், அவன் மூளை சற்று முன் கேட்ட பாடலின் இனிமையில் மயங்கி கிடந்தது. 

அவன் பின்னாலிருந்து சிலர் “அமிர்தாவை பாட்டில் மிஞ்ச ஆளே இல்லை” என பேசுவதை கேட்ட, அவனின் தேடல் அமிர்தாவை நோக்கி திரும்பியது. 

அன்று பாடிய பிருந்தாவின் குரல் அவனை அமைதிபடுத்தியது என்றால், இன்று கேட்ட அமிர்தாவின் குரல் அவனை வசீகரித்து அலைபாய வைத்தது.

முதல்நாள் தன் செவியை தீண்டிய குரலை வைத்து, அம்முவை அடையாளம் கண்டு கொண்டவன், இன்று பாடிய அமிர்தாவின் குரலை அடையாளம் கண்டு கொள்ளாதது யாரின் குற்றம்? 

இந்த நிமிடத்திலிருந்து விதி அவர்களது வாழ்க்கை பயணத்தை மாற்ற போகிறது!

†††††

ஈஸ்வர் கோவிலில் நுழைந்ததிலிருந்து, அவன் அன்னை தேவியின் பார்வை அவனை வட்டமிட்டது. அவனது அலைபாயும் கண்களை கண்டுகொண்டார். ‘அவன் யாரையோ தேடுகிறான்?’ என உணர்ந்து, அவன் விழி வழியே அவரும் பயணித்தார். அவன் பார்வை முடிந்த இடம், ‘தன் மனதை கவர்ந்த பெண்கள்’ என்பதை உணர்ந்து மகிழ்ந்து போனார். அவர் மனதில் விழுந்த விதை விருட்சமானது. 

ஒரு முடிவெடுத்தவர் அன்று மாலையே கஸ்தூரி முன் நின்றார். அமிர்தாவை தன் மகன் ஈஸ்வருக்கு பெண் கேட்டு. 

கஸ்தூரியின் முடிவு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!