நிரல் மொழி 11-2

நிரல் மொழி 11-2

நேரம் 10:00 (நேற்றைய காலை)

அன்று ஹோலி! 

கிழக்கு கடற்கரை சாலை, சென்னை. 

60 கி.மீ வேகத்தில், ஒரு கார் சென்று கொண்டிருந்தது. 

காருக்குள் இரண்டு பேர் இருந்தனர். 

யார் இவர்கள்?!

ஒருவர் முரளி! 

காரை ஓட்டிக் கொண்டிருப்பவர். 

காவல்துறை துணை கண்காளிப்பாராக இருந்தவர். 

ஐந்து வருடங்களுக்கு முன்பு, இணையவெளி குற்ற விசாரணைக் குழு தலைமையாகப் (Cyber Crime Unit Head) பொறுப்பேற்றவர்.

மற்றொருவன் நிகில்! 

ஆம்! நிகில்தான்!!

இவன் எப்படி இவருடன்?

எதிர்பார்த்த அளவை விட, இணையவெளி குற்றங்கள்(Cyber Crime) பெருகி வருகின்றன. 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும், கணினிக் குற்றங்களால், இந்தியாவில் 42 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது போன்ற குற்றங்கள், ஒரு நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதி வளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. 

இந்தக் குற்றங்களைத் தடுப்பதற்காக, இந்தியாவில் ‘இணையவெளி குற்றத் தடுப்பு பணிக்குழு’ உருவாக்கப்பட்டது. 

இந்தக் குழுவின் நோக்கம்… சிக்கலான, தீங்கு விளைவிக்கும் இணையவெளி குற்றங்களைக் கண்டறிவது, தடுப்பது மற்றும் குறைப்பதுவே! 

இதற்கென்று ஒவ்வொரு மாநிலத்திலும், இந்தக் குழுவின் சார்பாக ஒரு ‘சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்’ இருப்பர். 

இந்தக் குழுவிற்கான தமிழ்நாட்டின் ‘சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்’, நிகில்! 

ஆம்! நிகில்!! 

ஆனால், நிகில் எப்படி?! 

தேடித் தேடி, சைபர் செக்யூரிட்டி சம்பந்தமான படிப்புகள் படித்தவன்… படித்துக் கொண்டும் இருப்பவன். 

கணினி நிரல் மொழிகளிலெல்லாம் தனித்திறமை உண்டு. 

மேலும்… நவீன தொலைதொடர்பு தொழிற்நுட்பம் குறித்த புரிதல், தெரிதல் அளவிற்கு அதிகமாகவே உண்டு! 

இந்த நிலையை அடைய, அவனது உழைப்பு… அர்ப்பணிப்பு அதிகம்! 

முழுதாய் ஆறு ஆண்டுகள் கள அனுபவப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டான். 

அதன் பின்பு, கடினமானத் தகுதித் தேர்வுகள் எழுதினான். 

இதிலெல்லாம் இவன் திறமைகளைக் கண்டு, இந்தப் பொறுப்பை… குழு அவனிடம் தந்திருக்கிறது. 

இந்தக் குழுவின் தலைமை சொல்வதெல்லாம், ‘இட்ஸ நாட் யூவர் ஜாப். இட்ஸ் யூவர் ரெஸ்பான்சிபிலிட்டி’ என்பதுதான்! 

ஆம்! இது அவன் வேலை கிடையாது! அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு!! 

மிகப் பெரிய பொறுப்பு!! 

எந்தவித தவறுகள் இல்லாமல்… யாருக்கும் தெரியாமல்… திறம்படச் செயலாற்ற வேண்டிய பொறுப்பு! 

நிகிலின் இந்தப் பொறுப்பு பற்றி, அவன் குடும்பத்தினருக்கோ… சுற்றி உள்ளவர்களுக்கோ… தெரியாது. 

இவன் பொறுப்பு? 

பெரிய பொருட்சேத அளவில், தீங்கு விளைவிக்கும் இணையவெளி குற்றங்களைக் கண்டறிந்து, அதன் பிண்ணனியில் யார் உள்ளார்கள் எனக் கண்டுபிடிப்பது. 

தன் உண்மையான அடையாளத்தை மறைத்து, மறைமுகமாகச் செயல்பட வேண்டும். 

ஆதலால்தான், ‘காலமிஸ்ட்’ என்று தன்னைச் சாதாரண மனிதனாக அடையாளப் படுத்திக் கொள்கிறான். 

இதுவே இவன் பொறுப்பு, பணி! 

இதற்காக, இணையவெளி குற்ற விசாரணைக் குழுத் தலைமையுடன் சேர்ந்து செயல்படுவான்.  

இதோ இன்றும்… ‘மால்வேர் அட்டாக்’ பற்றிப் பேசத்தான், முரளியுடன் காரில் சென்று கொண்டிருக்கிறான்.

இவருடன் மட்டுமே நேரடித் தொடர்பு இருக்கும்!

இந்தப் பிரிவில் இவருக்கு கீழே செயல்படும், வேறு யாருடனும் தொடர்பு கிடையாது! 

வேறு யாருக்கும், அவனைப் பற்றித் தெரியாது!! 

முடிந்த அளவு, இவர்களது சந்திப்பு… இதுபோல் சாதாரணமான சூழலில், எளிமையாக, யாரும் கவனிக்காத வகையில் நடக்கும். 

இக்கணம், 70 கி. மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது. 

அதே வேகத்தில்… ‘நல் கேர்’ பற்றி, அவன் ஏற்படுத்தியிருக்கும் பிரச்சனைகள் பற்றி ஒன்றுவிடாமல் நிகில் சொல்லி முடித்திருந்தான்.

முழுவதும் கேட்டதும், “ப்ராப்பர் இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணனும்-னா, சைபர் கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணனும், நிகில்” என்றார். 

“இன்டஸ்ட்ரீ-லருந்து கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணுவாங்கன்னு எக்ஸ்பெக்ட் பண்றேன். பார்க்கலாம்” என்றான் நிகில். 

“சப்போஸ், அவங்க கம்பளைண்ட் கொடுக்கலைன்னா??”

“அனானிமஸா கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணி, இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம்” 

“ம்ம்ம் ” என்றவர், அடுத்த இரண்டு நிமிடங்கள் சாலையில் மட்டுமே கவனம் செலுத்தினார். 

“சரி, இப்போ இன்வெஸ்டிகேஷன் எங்கிருந்து ஸ்டார்ட் பண்ண? காம்ப்பெட்டிட்டர்ஸ் லிஸ்ட் எடுத்துப் பார்க்கவா??” என்று முரளி கேட்டார். 

“ஒரு இன்டஸ்ட்ரீ-க்கு நிறைய காம்ப்பெட்டிடேடர்ஸ் இருப்பாங்க. ஸோ, நீங்க சொல்ற மாதிரி பண்றது கஷ்டம்” என நிகில் மறுத்து விட்டான். 

“அப்போ…” என்று, முரளி யோசிக்கும் போதே, 

“காம்ப்பெட்டிடேடர்ஸ்-க்காக இவன் இப்படிப் பண்றான்! ஸோ, இவனைப் பிடிச்சாலே… எந்தெந்த இன்டஸ்ட்ரீ இப்படி பண்ணச் சொன்னாங்கன்னு தெரிஞ்சிடும்” என்றான் நிகில். 

“தட்ஸ் கரெக்ட்” என்று முரளி ஆமோதித்தார். 

அடுத்த இரண்டு நிமிடங்களில், காரின் வேகத்திற்கு இணையாக இருவரும் யோசித்தனர். 

பின்னர், “இந்த ஆப்ரேட்டர் லேப்டாப்ப எப்படி அட்டாக் பண்ண முடிஞ்சது?” என்று கேட்டார் முரளி. 

“முரளி! மால்வேர் அட்டாக் நடந்ததுக்கு அப்புறமும், அவன் ஆப்ரேட்டரை பாலோவ் பண்றான்” 

“ஏற்கனவே சொன்னீங்கள? அப்போதான உங்களைப் பத்தி, அவனுக்குத் தெரிய வந்திருக்கு”  

“யெஸ்! அதேமாதிரி மால்வேர் அட்டாக் நடக்கிறதுக்கு முன்னாடியும், ஆப்ரேட்டரைப் பாலோவ் பண்ணியிருப்பான்” 

“ஓ”

“ஆப்ரேட்டர் ஃபோன் நம்பர் தெரிஞ்சிக்கிட்டு… அவரோட ஃபோன் கால்ஸ் வாட்ச் பண்ணியிருப்பான். இல்லைன்னா, ஃபோன் ஹேக் பண்ணியிருப்பான். ரெண்டுல ஏதோ ஒன்னு!”

“ஓகே”

“ஸோ, அவர் எங்க போறாரு? எப்போ போறாரு? எந்தக் கேப்ல போறாரு? அதாவது, அவரோட டிராவல் ரூட் டீடெயில்ஸ் ஃபுல்லா கிடைச்சிருக்கும்” 

“ஸோ, அதே ரூட்ல… அதே கேப்… அவனும் புக் பண்ணியிருப்பான்”

“யெஸ்! பட், இதுவும் ஒரே நாள்-ல நடந்திருக்காது. ஏன்னா? சம்டைம்ஸ் கேப் கிடைச்சிருக்காது… சம்டேய்ஸ், ஆப்ரேட்டர் லேப்டாப் யூஸ் பண்ணாம இருந்திருப்பாரு… அன்ட் சம்டைம்ஸ் ஆப்ரேட்டர் செப்பரேட் கேப் கூட புக் பண்ணியிருப்பாரு… “

“ஸோ, மால்வேரை ஆப்ரேட்டர் லேப்டாப்-க்கு சென்ட் பண்ற வரைக்கும்…  திரும்பத் திரும்ப முயற்சி பண்ணயிருப்பான். சரியா?”

“யெஸ்!” 

“சிம்பிளா சொல்லணும்-னா… நல்லா யோசிச்சு, பொறுமையா தப்பு பண்றான்” என்று சொல்லி, முரளி ஒரு பெரு மூச்சி விட்டார். 

“கரெக்ட்! கிட்டத்தட்ட நாலு வருஷமா, இந்த மால்வேர் அட்டாக் பண்ணி பணம் சம்பாதிக்கிறான். பட், நாலே நாலு அட்டாக்-தான் பண்ணியிருக்கான்” என்றான் நிகில். 

“ஓ!” என்றவர், “பணத்துக்காகத்தான் பண்றானா??” என்று சந்தேகமாகக் கேட்டார். 

“அஃப்கோர்ஸ்! எல்லாம் எவ்வளவு பெரிய ப்ரொஜெக்ட்ஸ். இந்த மாதிரி ஒரு இன்டஸ்ட்ரீயை பிளாக்லிஸ்ட் பண்ண வைக்கிறதுக்கு, அவனுக்கு எவ்வளோ கோடி கிடைச்சிருக்கும்!”

அடுத்த இரண்டு நிமிடங்கள்… தவறான வழியில் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி, எவ்வளவு பணம் சம்பாதிக்கிறான் என்று மட்டுமே முரளி யோசித்துக் கொண்டிருந்தார். 

“ச்சே” என்று எரிச்சல் அடைந்த முரளி, “இப்போ அவனை எப்படிக் கண்டு பிடிக்கிறது? ஏதாவது வழி இருக்கா?” என்று கேட்டார். 

“இருக்கு முரளி”

“எப்படி?”

“அந்த ஆப்ரேட்டர்-கிட்ட இருக்கிற மெசேஜ். அதை என் ஃபிரண்ட், கஸ்டமர்கிட்ட ரெக்வஸ்ட் பண்ணியிருக்காங்க. பார்க்கலாம்”

“ஓ! ஓகே” என்றவர், “அவன் எங்க இருப்பான்னு, ஏதாவது கெஸ் இருக்கா நிகில்?” என்று கேட்டார். 

“ஆப்ரேட்டரை பாலோவ் பண்ணேன்னு சொன்னான். அன்ட் என்னையும் பாலோவ் பண்ணியிருக்கான். ஸோ, இப்போதைக்கு சென்னைதான்”

“தனியா பண்றானா? இல்லை குருப்-பா?”

“வொயிட் காலர் கிரைம் பண்றான். ஸோ, மோஸ்ட்லி தனி ஆள்தான்” என்றான் நிகில். 

அடுத்த இரண்டு நிமிடங்கள், நிகில் சொன்ன விடயங்களை எல்லாம், மீண்டும் ஒரு முறை தனக்குள் ஓட்டிப் பார்த்தார். 

“நிகில்!” என்றார் சட்டென! 

“சொல்லுங்க”

“அவன் பேசறப்போ அந்த ப்ராடைக்ட் மேனேஜரை மென்ஷன் பண்ணியிருக்கான்-ல? ஸோ, அவங்களுக்கு ஏதும் த்ரெட் (threat) இருக்கா? அவன் அந்த மாதிரி ஏதும் சொன்னானா?”  

“இல்லை! அவன் என்னைத்தான் டார்கெட் பண்ணறான். அதுவும் நான் யாருன்னு தெரியாததுனால?!”

“ஆர் யூ ஸூயர்?” என்று, அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார். 

“யெஸ்! அவ்ளோ பெரிய இண்டஸ்ட்ரியோட ப்ராடைக்ட் மேனேஜரை ஏதாவது செஞ்சா, அவனுக்குத்தான் ப்ராப்ளம் கிரியேட் ஆகும். 

ஸோ, அந்தமாதிரி ஏதும் பண்ண மாட்டான். அவன் அவ்வளவு முட்டாள் கிடையாது” என்று, நிகில் உறுதியாகச் சொன்னான். 

“ரொம்பத் தெளிவா யோசிச்சு பண்ணறான்னு சொல்றீங்களா?” என்றார் முரளி. 

“ஆமா! ரொம்பவே!!” என்றவன், சற்று இடைவெளி விட்டு…

“என் ஃபோன் நம்பர்… ஆப்ரேட்டர் ஃபோன் நம்பர்… கிடைச்ச மாதிரி, ப்ராடைக்ட் மேனேஜர் ஃபோன் நம்பர் அன்ட் பெர்சனல் டீடெயில்ஸ் கிடைக்காது. தே ஆர் டாப் லெவல் மேனேஜ்மென்ட் ப்யூப்பிள்” என்றான். 

உடனே, “அப்போ அவங்கதான் ப்ராடைக்ட் மேனேஜர்-ன்னு எப்படித் தெரிஞ்சது?” என்று முரளி கேட்டார்.

“சொன்னேன்ல முரளி! என் ஃபோன் ஹேக்டு! அதுல எங்கயாவது ஷில்பா பத்தி… ஐ மென்ட் என் ஃப்ரண்ட் பத்தி டீடெயில்ஸ் கிடைச்சிருக்கும்” 

“இப்போ ஃபோன்??”

“உங்களைப் பார்க்க வர்றேன்னு எடுத்திட்டு வரலை”

“பேசாம, ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடலாமே நிகில்?”

“சப்போஸ் அவன் திருப்பி எனக்கு ஃபோன் பண்ணா, நமக்கு ஏதாவது க்ளு கிடைக்கும்-ல. ஸோ, ஸ்விட்ச் ஆஃப் வேண்டாம்”

“அட்லீஸ்ட் ஜீபிஎஸ் சிப் எடுத்திடலாமே? லோகேஷன் ட்ராக் பண்ண முடியாதில்லையா?” என்று நிகிலின் நலனிற்காக, முரளி கேட்டார்.

“நான் ஏதாவது ஒரு சின்ன சேஞ்ச் பண்ணா கூட, அவன் அலெர்ட் ஆவான்! அதனால இப்படியே இருக்கட்டும்” என்று நிகில் சொல்லிவிட்டான். 

“அதுல இம்பார்ட்டன்ட் டீடெயில்ஸ் எதுவும் இல்லை-ல நிகில்?”

“இல்லை! வீட்ல பேசுறதுக்கு அன்ட் ஆர்டிக்கல் ரிலேட்-டட் வொர்க்குக்காக வச்சிருந்தேன். இப்போ கான்டாக்ட்ஸ் எல்லாம் டெலிட் பண்ணிட்டேன்”  

“கான்டாக்ட்ஸ் அவனுக்குத் தேவை கிடையாதா?”

“இல்லை! நான்… என்னோட ஆக்டிவிட்டிஸ் மட்டும்தான்”

“ஓ!”

“வேற நம்பர் சேஞ்ச் பண்ணிட்டு, உங்களுக்கு இன்பாஃர்ம் பண்றேன், முரளி”

“ஓகே நிகில்” 

பேச வேண்டிய விடயங்கள், பேசி முடித்ததால்… இருவரிடமும் ஓர் அமைதி நிலவியது. 

அடுத்த இரண்டு நிமிடங்கள், தான் செய்ய வேண்டியவைகள் பற்றி யோசித்துக் கொண்டே, காரை ஓட்டினார். 

“கேட்கணும்னு நினைச்சேன்…  அது என்ன பேரு நல் கேர்-ன்னு??” – முரளி. 

“இது நல் கேரக்டர்(null character) சி ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜ்-ல யூஸ் பண்றது(C programming language)”

“எதுக்கு இப்படி ஒரு பேரு?” என்று முரளி முகத்தைச் சுருக்கினார். 

“ப்ரோக்ராம்மிங் லாங்குவேஜ்-ல 

இதை யூஸ் பண்றப்போ, ப்ரோக்ராம்-ல மட்டும்தான் இது இருக்கும். 

பிரிண்ட் அவுட் எடுக்கிறப்போ, இந்தக் கேரக்டர் டிஸ்பிலே ஆகாது”

“ஓ! அப்போ அவனோட பிரஸென்ஸூம் கம்ப்யூட்டர்-ல மட்டும்தான் இருக்கும். வேறெந்த ஒரு இடத்திலயும் இருக்காது”

“ம்ம்ம், கரெக்ட். பட், அவன் இன்னொன்னும் சொன்னான்”

“என்ன?”

“லிவிங் இன் இன்வேலிட் ஐபி அட்ரஸ்!!”

“அப்படின்னா??”

“இது என்னோட கெஸ் முரளி! அவன் இன்டர்நெட்-ல டார்க் வெப்-ல(dark web) இருக்கலாம்”

“ஓ! டார்க் வெப். வாஸ்ட் ஏரியா(vast area)! அதான் நெருங்க முடியாதுன்னு சொல்றானா?”

“அதெல்லாம் நெருங்கியாச்சு முரளி. அவனை வெளியே வரவைக்கணும். அவ்வளவுதான்!!” என்றான். 

மேலும், “வர வச்சிடலாம்” என்று நம்பிக்கையாகச் சொல்லி, சன்னல் வழியே வெளியே பார்க்க ஆரம்பித்தான். 

இதுவரை மறைந்து இருந்து குற்றம் செய்தவன், இன்று தெரிய வந்ததற்குக் காரணம் இவன்! 

நிகில்!! 

அவன் அறிவை மெச்சும் பார்வைகள் கொண்டு, முரளி பார்த்தார்.

வெளியே பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவனின்… தோள் தட்டி, “பிரில்லியன்ட்” என்றார், முரளி. 

நிகில், மெல்லச் சிரித்துக் கொண்டான். 

இது நேற்று!! 

இன்று… இக்கணத்தில்

இடிந்து போய் அமர்ந்திருந்த நிகிலின்… தோளில் தட்டி, “தைரியமா இருங்க” என்றார், முரளி! 

நிகில் மௌனமாகவே இருந்தான். 

“நிகில்” என்று அழைத்தார். 

“முரளி, ஏன் இப்படி…?” என்று ஆரம்பிக்கும் போது, நிகிலின் குரல் முற்றிலும் உடைந்திருந்தது.

“தைரியமா இருங்க நிகில்” என்று மீண்டும் ஆறுதல் சொன்னார். 

“முரளி… நான்… நான் போகணும். ஷில்பாவைப் பார்க்கணும். மிலா, ஜெர்ரிக்கு… என்னாச்சு-ன்னு தெரியணும். அதுக்கு… நான்… நான் இங்கிருந்து…” என்று உணர்ச்சிவசப்பட்டு… சட்டென, நிகில் எழுந்து கொள்ள முயற்சித்தான். 

முட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து, அப்படி ஓர் வலியை உணர்ந்தான். 

வலி தாங்க முடியவில்லை! 

இருந்தும்… எழ முயற்சித்தவனை, 

“நிகில்…  நிகில்…  ப்ளீஸ்! இந்த நிலைமையில எப்படி முடியும்?” என்று, அவனைப் பிடித்து அமர வைத்தார். 

“எப்படி முரளி? அவன் ஷில்பாவை ரீச் பண்றதுக்கு சான்ஸே இல்லை” 

“நேத்தும் இதேதான் சொன்னீங்க. அப்புறம் எப்படி இப்படியாச்சு?” என்று   தெரியாமல் கேட்டார். 

நிகில் அமைதியாக இருந்தான். அவனுக்கும் தெரியவில்லை. 

“நேத்து நைட் என்ன நடந்திருக்கும்னு தெரியலை. இப்போ, அவன் என்ன யோசிக்கிறான்னு… என்னால யோசிக்கவும் முடியலை… ” என்று நிகில் வேதனையில் புலம்பினான். 

மீண்டும், அவன் தோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார். 

“முரளி! எனக்கு ஷில்பாவைப் பார்க்கணும்” என்றான். 

“அட்டாப்சி-க்காக கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல் எடுத்திட்டுப் போயிருக்காங்க”

கண்கள் கலங்க, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“நாளைக்கு…  இல்லைன்னா அதுக்கு அடுத்த நாள்… அரேஞ் பண்றேன். உங்களுக்கும் கால் கொஞ்சம் சரியாகட்டும்” என்றார் ஆறுதலாக. 

“ம்ம்ம்” என்றவன், “அவங்க மூனு பேருக்கும் எதுவும் ஆகக்கூடாதுன்னுதான், என்னோட ஃபோன கையில எடுத்திட்டு இறங்கினேன்.  ஆனா, இப்படி… ” என்று கவலையில் மீண்டும் புலம்பினான். 

முரளி, அழுத்தமாக அவன் கையைப் பிடித்துக் கொண்டார். 

“முரளி! மிலா, ஜெர்ரி… சேஃப்பா இருப்பாங்கள?” என்று, பரிதவித்துக் கேட்டான். 

முரளி அமைதியாக இருந்தார். எதுவும் சரியாகத் தெரியாமல்… அவனுக்கு நம்பிக்கை கொடுக்க, அவர் விரும்பவில்லை. 

சற்று நேரம் அமைதியாக இருந்து, நிகில், தன்னைச் சமன் படுத்திக் கொண்டான். 

பின், “நீங்க ஏன் என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” என்று கேட்டான். 

“நேத்து நடந்த இன்சிடென்ட் பத்தி… உங்க ஃப்ரண்ட் மர்டர் பத்தி… டிபார்ட்மென்ட்-ல பேசினாங்க. 

உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன். 

பட், உங்க ஃபோன் ஹேக்டு. இந்தக் கன்டிஷன்-ல நீங்களும் வர முடியாதுன்னு தெரியும். 

உங்களை கான்டாக்ட் பண்ண, வேற ஆஃப்சனே இல்லை. அதான் வந்தேன்” என்று விளக்கினார். 

நிகில், கால்வாசி திறந்திருக்கும் கதவைப் பார்த்தான். 

“கம் ஆன் நிகில்! இது ஹாஸ்பிட்டல் பீக் அவர். கூட்டம் அதிகமாக இருக்கு. அதான் இந்த டைம்ல வந்தேன்” என்றார். 

“எதுக்காக கான்டாக்ட் பண்ணனும்? என்ன விஷயம்?” என்று கரகரத்தக் குரலில் கேட்டான். 

“நிகில், உங்க ஃப்ரண்ட் வேலை பார்க்கிற இன்டஸ்ட்ரீ-லருந்து சைபர் கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணப் போறாங்க”

“ஓ” என்றவனுக்கு, ஷில்பாவிற்கு ஏற்பட்ட முடிவை நினைத்து… மீண்டும் கண்கள் கலங்கியது. 

“இப்போ அடுத்து…. ” என்று முரளி கேட்கும் போது, நிகிலின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. 

கைப்பேசியை நிகில் பார்த்தான். 

புதிய இலக்கங்கள்! 

‘யாராக இருக்கும்?’ என யோசித்துக் கொண்டே, அழைப்பை ஏற்றான். 

“ஹலோ” – நிகில். 

“ஹலோ, நான் கான்ஸ்டபிள் பேசறேன்” என்றார். 

புரிந்தது! மிலா… ஜெர்ரி பற்றி விசாரிக்கச் சென்ற காவலர் என்று! 

அடுத்த நொடியே நிகில் பதற்றமான மனநிலைக்கு மாறினான். 

அவர்கள் இருவரின் நிலை என்னவென்று தெரியாதாதால் வந்த பதற்றம்! 

“ஹலோ” – மறுமுனை. 

“சார்… என் வொய்ஃப்…  பையனைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா? எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சதா?” என்று உடல், குரல் நடுங்க… பரிதவித்துக் கேட்டான்.

 

Out of the story

  • இணையவெளி குற்றத் தடுப்பு பணிக்குழு. இது அயல்நாட்டில் உண்டு. தேடிப் பார்த்த அளவில், இந்தியாவில் இல்லை. ஆகையால், இது கதைக்கான கற்பனை. 
  • Null character. இது C programming language-ல end of the string denote பண்ண use  பண்றது. ‘o’ – இதுதான் அதோட symbol. இதோட ASCII value 0. இது program-ல இருக்கும். But, print out-ல வராது. It means, கணினியில் மட்டும்தான் இருக்கும். காகிதத்தில் (paper) வராது. Here, paper means any kind of identity card! இதுக்காகத்தான் இந்த word use பண்ணேன். 
  • இது புரியலைன்னா ஒன்னும் problem இல்லை. Just, program-ல இருக்கும். But, print out-ல வராது. That is enough. Please don’t mistaken. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!