நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11
நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11
ஆத்மியின் “இல்லை”என்ற வார்த்தையில் அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருக்க, சந்தோஷ் உடனே சூழ்நிலையைக் கையில் எடுக்க.
“அவங்களுக்கு இவரோட அம்மாவும் அவங்களோட அப்பாவும் இல்லாம மேரேஜ் பண்றதுல இஷ்டம் இல்லை அதைதான் அப்படி சொல்றாங்க”என்று சமாளிக்க.
ஆத்மி அதிர்ச்சியோடு சந்தோஷை நோக்க, அபர்ணா வந்து ஆத்மியின் பக்கத்தில் நின்று அவள் கைகளை இறுக பற்றிக்கொண்டாள்.அவள் கண்களில் “எதையும் சொல்லாதே”என்ற மன்றாடல்.
அதைக் கண்டு திடுக்கிட்டாள் ஆத்மி,’இவன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு புரியலையே’என்று நினைத்துக் குழம்பியவள்.அடுத்ததாகச் சந்தோஷையும் பார்க்க அவனின் கண்களும் அதையே உரைக்க, ஸ்தம்பித்து போனாள் ஆத்மி, இனி என்ன இவனுக்கு மனைவி ஆக வேண்டுமா?ச்செய் என்றிருந்தது, அவளுக்கு.
மறுபடியும் மீடியாவில் ஒருவர் இவளிடம்”அப்படியா மேடம்?”என்று உறுதிப்படுத்திக்கொள்ள கேட்க.
தலையை ஆட்டியிருந்தாள், அவ்வளவு தான் இனி எல்லாம் முடிந்தது.இத்தனை முயற்சி செய்து எதுவும் பலன் தரவில்லை, அனைத்தும் வீணாப்போச்சு.ஆமா, கார்த்திக் எங்க?அவனுக்கு என்னாச்சு?”என்று அவள் நினைக்கும்போதே தேவின் குரல்.
“என்ன, உன் ஆளைப் பத்தி நினைப்பா?அவன் உயிரோடிருந்தால் வருவான்”என்க.
“கார்த்திக்க என்னடா பண்ணினே?” என்று வார்த்தகளை அவள் கடித்து துப்ப.
“கல்யாணம் முடிஞ்சதும் சொல்றேன் டார்லிங்”என்று கண்ணடித்துக்கூற, உடம்பெல்லாம் பற்றி எரிந்தது ஆத்மிக்கு.
அதன் பின் மீடியா இவர்கள் உள்ளே போக அனுமதி வழங்க, அனைத்து காரியங்களும் செவ்வனே நடந்தேறியது, ஆத்மி அனைவரின் மீதும் கோபத்தின் உச்சியில் இருந்தாள்.இயலாமையோடு அவள் அங்கு நடப்பதை பார்க்க.
மணமக்களிடம் கையெழுத்து கேட்கப்பட, தேவ் சென்று முதலில் இட்டவன், ஒரு இகழ்ச்சி புன்னகையோடு, அவளிடம் பேனாவை கொடுக்க, அதைப் பிடுங்கியவள், கண்களின் கனல் கண்ணீராய் வெளியேற, ஒர் கையெழுத்து அவள் தலையெழுத்தை மாற்றியமைத்தது.இங்கே, ஒரு யுத்தம் தொடங்கவிருக்கிறது.
தொடங்கும்.
முடிந்தது, சம்பிரதாயத்திற்க்காக மாலை மாற்றி, போட்டோ பிடித்தாயிற்று.அவர்கள் வெளியே வர “சார் ஒன் பிக்!”என்று மீடியா பீப்பில் கேட்க.
ஆத்மியின் தோள்களைச் சுற்றிப்பிடித்து போஸ் கொடுத்தான். மில்கியின் தேவ்.
அவள் அவனைக் கண்களாலே சுட்டெரிக்க,”என்ன மில்கி, இதுக்கே இப்படி பாக்கற, இன்னும் பல பல பலவிதம் இருக்கே, அதுக்கு எப்படி பார்ப்ப”என்று அவளிடம் கேட்க.
“முடிஞ்சா என் மேல கை வெச்சு பாரு”என்றிருந்தாள் தேவின் மில்கி.
“பார்ரா, நீ தைரியசாலின்னு தெரியும், இவ்ளோ தைரியம்,பலே, வாக்குனு ஒண்ணு கொடுத்த நியாபகம் இருக்கா?என்றான்.
“அதை நீ நேர்மையான முறையிலே வாங்கல”என்று இவளும் வார்த்தைகளைக் கடித்து துப்ப.
“நைட்டு பர்ஸ்ட் நைட்டுல நேர்மையாய் நடந்துக்கிறேன், சரியா செல்லம்”என்க.
அவள் முகம் இரத்தமெனச் சிவக்க, வெட்கத்தில் அல்ல !கோபத்தில்.அதைக் கண்டவனும் “போஸ் கொடுங்க பொண்டாட்டி”என்று வேறு கூறிட, கடுப்பின் உச்சத்தில் மில்கி.
போட்டோ எடுத்து முடியவும் அவளை இழுத்துக்கொண்டு காருக்குச் சென்றவன்.”ஏறு, ஒரு முக்கியமான இடத்துக்குப் போகனும்”என்றான்.
“நான் உன்கிட்ட சிக்கலை டா, நீ தான் என்கிட்ட சிக்கியிருக்க, உன்னை வெச்சு செய்யுறேன்”என்றவளை கண்டவன்.
“நோப்பிராப்ளம், ஐ எம் அட்யுவர் சர்வீஸ்”என்று புன்னகைக்க.
கிளம்பும்போது சந்தோஷ் மற்றும் அபர்ணாவை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவள், அவர்களைக் கண்டுக்கொள்ளாது காரில் ஏறிப் பறந்து விட்டாள்.
சந்தோஷ் மற்றும் அபர்ணா மனதோடு அவளிடம் மன்னிப்பு வேண்டியிருத்தனர்.அது மட்டுமே அவர்களால் முடிந்தது.
“கார்த்திக் எங்க?என்று கேட்டவளுக்கு.
“ஓ, அவனை மறந்துட்டேன்.சரி, அவனைப் பார்த்திட்டு நம்ம போகலாம் சரியா பேப்ஸ்”என்றவன்.காரைச் செலுத்தினான் கார்த்திக் இருக்கும் இடம் நோக்கி.
***********
கார்த்திக் சந்தோஷின் தம்பி, ஆத்மியை ஒருதலையாகக் காதலித்து வருபவன், இவனின் காதல் ஒரு புனிதமான பந்தம்.அவனுக்கு வேண்டியது ஆத்மியின் அன்பு மட்டும்!அதை ஒன்றை தான் அவன் எதிர்ப்பார்த்தான்.
தயாளனிற்க்கு ஹார்ட் அட்டாக் என்று வந்த செய்தியில், ஆத்மிக்கு, இப்போ நம்ம சப்போர்ட்டா இருக்கனும்!என்று கிளம்பி தமையனோடு ப்ளைட்டில் வந்திரங்கியவன், நேராக ஆஸ்பத்திரிக்கு சென்று நிலைமையை விசாரிக்க,நடந்தவை அனைத்தையும் அபர்ணா விவரித்ததின் விளைவே, அவனின் ஆத்மியின் தேடல்.
ஆத்மியை கவர்ந்து சென்றவன் யார் என்பதை அறிந்து, அவனின் பின்புலத்தை அறிந்து அனைத்தையும் யோசித்து நிதானமாகவே, காய் நகர்த்தி வீட்டை அடையும் முன் ஆத்மியின் குணம் பற்றி நன்கறிந்தமையால் அவளுக்கு உணவையும் வாங்கி சென்றவன், கேட்டில் வாட்ச் மேனிடம் வந்து சிக்கிக்கொண்டது தான் விந்தை.
தன்னை அநபாயனின் நண்பன் என்று அறிமுகப்படுத்த, அநபாயன் என்னும் அவனது நாமம் அவன் தாயிற்கான அழைப்பு. அவர் தான் இவனை அநபா, என்றும் அநபாயன் என்று அழைப்பது. வேறு யாரும் அவனை அவ்வாறு அழைக்க அனுமதிக்கமாட்டான்.வாட்ச் மேனும், இவனின் வரவைத் தேவிடம் உரைத்திருந்தான்.
ஆத்மியை எப்படியோ சந்தித்தவன் அவளுக்குத் தைரியம் கூறி “நான் பார்த்துக்கிறேன், நீ தைரியமா இரு!” எனறு கூறியிருந்தான்.
அவளும் “இவனை மீறி நம்மால் ஒண்ணும் செய்ய முடியாது, நீ மீடியாக்கு இன்பார்ம் பண்ணிடு”என்றிருந்தாள்.
அதன்படி அப்பொழுதே அவர்களுக்குத் தகவல் பகிரப்பட்டது.”அவர் ஒரு முக்கியமான புள்ளி, இதில் எந்த அளவிற்கு உண்மை தன்மை இருக்கிறது என்பதை ஆராய்ந்தே அதை ஒளிபரப்புவோம்”என்றிருந்தனர்.
இவளும் “நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றிருந்தாள்.
“சரி கவனமாய் இரு, நாளைக்கு நான் வந்துரேன்” என்றிருந்தான்.இவளும் வழியனுப்பி இருந்தாள்.
அதன் பின் என்ன நடந்ததோ!
**********
அந்த ஆள் அரவம் அற்ற பகுதியை நோக்கிய ஆத்மியின் கண்களில் மிரட்சி, அதைப் புரிந்துக்கொண்ட தேவின் கண்களும் அவளை நய்யாண்டி செய்ய, முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அந்த ஒத்தையடி பாதையில் கார் சென்று ஒரு பழமையான கட்டிடத்தின் முன் நிற்க, இறங்கியவன்,”வாங்க பேபி, உங்க பேபிய பார்க்கப் போகலாம்”என்க.
அவனை முடிந்தமட்டும் முறைத்தவள் அந்தக் கட்டிடத்தைப் பார்க்க ஏதோ தனிமையில் பேய் படம் பார்க்கும் பயம் அவளுக்குள், வயிறு வேறு பிசையப் பயத்தில் உடல் நடங்கியது, அந்தக் கட்டிடத்தின் வெளிப்புற தோற்றம் அத்தகையது.இருந்தும் இயல்பாக இருக்க முயன்றாள், முடியவில்லை.
அவன் முன்னே நடக்க, இவள் பின்தொடர, தூசிக்கும், ஒட்டடைக்கும் வாடகைக்கு விட்டது போல் அங்கே அத்தனை குப்பைகள்.அவளின் கண்கள் சுற்றும் முற்றும் கார்த்திக்கை தேட.
அவளின் தேடலைக் கண்டு கடுப்பானவன்,”ஹனி, சுற்றும் முற்றும் பார்த்திங்க, கொஞ்சம் மேலே கீழே பாருங்க”என்று அவன் முடிக்கவில்லை.
அடுத்த நொடி கண்களால் மேலே பார்க்க, அங்கே கார்த்திக் சுமார் இருபது அடி உயரத்தில்”ப்ளையிங்” பொஸிஷனில் கைகள் இரண்டனையும், கால்கள் இரண்டனையும் கட்டிய நிலையில் மயங்கி இருக்க.
“கார்த்திக்”என்று கத்தியிருந்தாள், தேவின் மில்கி. அவளின் கார்த்திக் என்ற அழைப்பு அவனைக் கோபம் கொள்ள வைக்க “டேய் தடியன்களா.”என்று இவன் கத்தி அழைத்த மறுநொடி அங்கே, இருவர் வந்திருந்தனர்.
“அங்க என்னடா கிழிச்சுட்டு இருக்கீங்க?”என்று இவன் வார்த்தையைக் கடித்து துப்ப.
“சார், அவன் மயங்கிட்டான்னு…”என்று இழுக்க.
சொன்னவனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்திருந்தான் தேவ்.”யூ யூஸ்லெஸ் பூல்ஸ், அவன் மயங்கினா ஊசி குத்துங்கனு சொன்னேன்ல, அவன் மயங்ககூடாதுனு சொன்னேனா, இல்லையா?”என்று கர்ஜிக்க.
அடி வாங்கியவன் கன்னத்தைத் தாங்கியபடி நிற்க, இன்னொருத்தன் இப்போ தான் சார் போனோம், அவன் இப்போதான் ரெண்டு நிமிஷம் ஆச்சு என்று சமாளிக்க.
உண்மையில் அவர்கள் அவனுக்குப் பாவம் பார்த்துவிட்டிருந்தனர், இவர்கள் அத்தனை கொடுமை செய்தும் அவன் எதிர்வினை காட்டினான் இல்லை, ஆகையால் விட்டிருந்தனர்.
“ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்ப்ளனேஷன், உங்களுக்கு இனிமே இங்க வேலை இல்லை” என்க.
“சார் சாரி சார்…”
“ஈவு இரக்கம் பாக்குறவன் எனக்குத் தேவையில்லை நீங்கப் போய்டுங்க இல்ல சுட்டுடுவேன்”என்று மிரட்ட ஓடி விட்டனர்.ஆத்மியின் நிலைமையைக் கண்டவன் அவளை இயல்பு நிலைக்குத் திருப்ப வேண்டி அவன் கைக்கட்டின் ஒன்றில் சுட
அவனின் நிலை கண்டு சிலை ஆகியிருந்தவளுக்கு, உயிர் வந்து”ஐயோ, வேண்டாம் ப்ளீஸ் அவரை விட்டிடு, ஏன் இப்படி பண்ற, அவருக்கு இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை”என்று கெஞ்ச.
“எவ்ளோ தைரியம் இருந்தா, உன்னை வந்து பாத்திருப்பான், அதுக்கே இவனைக் கொன்னிருப்பேன்”என்று பற்களின் இடையே நறநறக்க.
“ஐயோ, இல்லை. சரி.உனக்கு என் கூடத் தானே பிரச்சனை, என்னை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ, ப்ளீஸ் அவரை விட்டிரு”என்று மன்றாட.
“ஓ, அவரு,”இப்போ காலின் ஒரு கட்டை அவன் சுட.
“ப்ளீஸ், போதும் நிறுத்து!”என்று கத்தியவள்.”எதுக்கு இப்படி பண்ற”என்று கதற.
“உனக்காகத் தான்”என்றிருந்தான்.
“எனக்காகவா?”
“ஆமா, நீ எனக்கானவள், எனக்கு மட்டுமே உரியவள்.உன்னை யாருக்கும் தரமாட்டேன்”என்றான் தீர்க்கமாக.
“சரி…, அதுக்கு இவரை ஏன் டார்ச்சர் பண்ற?”என்று அவள் கேட்க.
“முதலில் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சத்துக்கு”என்று கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து அவனைக் குறிப்பார்த்து அடிக்க, அது அவன் நெற்றியை பதம் பார்க்க.அவன் மயக்கத்திலிருந்து முழித்துக் கொண்டான், கண்களைச் சிரமப்பட்டு திறந்தான்.
“ப்ளீஸ், அவரை ஒன்னும் பண்ணாதன்னு சொல்றேன்ல”என்று இரு கைகளையும் ஒன்றிணைத்துக் கெஞ்ச.
“நீ அவனை என் முன்னாடி எப்படி பேசுறியோ, அதுக்கு தான் அவனுக்குத் தண்டனை”என்றிருந்தான்.
“சரி…நான் அவரை…சாரி அவனைப் பற்றிப் பேசலை”என்றாள்.
“இரண்டாவது உன்னை லவ் பண்ணுனதுக்காக” என்றவன் இம்முறை பிஸ்டலால் அவனின் மூன்றாவது கைகட்டை பார்த்துச் சுட அதுவும் அவிழ்ந்து, இப்பொழுது ஒரு கால் மட்டுமே கட்டப்பட்ட நிலையில் அவன் தொங்கிக்கொண்டிருக்க.
“ஹே, நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட நாங்க காதலிக்கல்லை”என்று இவள் கெஞ்ச.
“நீங்கக் காதலிக்கல ஹனி, அவன் உன்னை விரும்புறான்.அவன் மட்டும் உன்னை விரும்பியதால் தான் உயிரோடு இருக்கிறான், நீயும் விரும்பியிருந்த அவனை இந்நேரம் பொதச்சிருப்பேன்”என்று கர்ஜிக்க.
“கடவுளே, இன்னும் எத்தனை பேர் என்னால கஷ்டம் அனுபவிக்க போறாங்க”என்று தலையில் அடித்துக்கொண்டு அவள் கதறித்துடிக்க.
“மில்கி, உன் வீட்டுல நான் சொல்ற மாதிரி பேசுனா இவனை ஒப்படைக்கிறேன்னு சொன்னேன்தான்.ஆனா, முழுசா ஒப்படைக்கிறேன்னு சொல்லலை சோ, மேலே இருந்து விழுந்தால் கை இல்ல, காலு சொல்ல முடியாது இந்த நிலைமையில் தலையிலே கூட அடிப்படும் என்ன பண்ணலாம்?”என்று அவளிடம் அவன் கேட்க.
“வேண்டாம், வேண்டாம் அவனை விட்டிடு, இனிமே அவன் உன் கண்ணுலையே படமாட்டான், ப்ளீஸ், ஒன்னும் பண்ணிடாத”என்று கெஞ்ச.
“அச்சசோ”, என்று சொல்லிக்கொண்டே, கடைசி கட்டையும் அவன் சுட்டுவிட.வேகமாக வந்து கீழே விழுந்தான் கார்த்திக்.தலையில் அடியும் பட்டு இரத்தம் கசிந்தது.
இவள் ஓட நினைக்கையில் அவளின் கைகள் அவனின் கைகளுக்குள் சிறை ஆகியிருக்க.
கார்த்திக்கையும் அவளின் கையையும் மாறி மாறிப் பார்த்தவள், அவனிடம் கெஞ்ச கண்டுக்கொள்ளாதவன்.அவளை இழுத்துக்கொண்டு காரிற்குள் செல்லத் திரும்ப, அவள் அவனின் பெயரைச் சொல்லித் துடிக்க.
“இப்போ நீ வந்தா, அவனை ஏதாச்சும் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து காப்பாத்த சொல்வேன்!இல்லைனா உன் விருப்பம் என்றிட .அமைதியாய் சென்று காரில் அமர்ந்தும் கொண்டாள்.
இவனும் ஹரிக்கு லோக்கேஷன் அனுப்பிவிட்டு வந்து, காரை எடுத்திருந்தான்.வழி நெடுக அழுதுக்கொண்டே வந்தாள் ஆத்மி.கண்கள் வற்றாத நதியைப் போல் கண்ணீரை சுரக்கச் செய்ய, அழுகை வந்துக்கொண்டே இருந்தது.
கார் எங்கே செல்கிறது என்று எதையும் அவள் கவனித்தால் இல்லை.ஒரு பிரபல மருத்துவமனையின் முன் கார் நின்றதை இவள் கவனிக்காது இருக்க.அந்தப் பக்கமாய் வந்து, காரைத் திறந்தவன்.
“கொஞ்சம் இறங்குறியா?இல்லை தூக்கிட்டு போகவா?”என்று கேட்க.பேந்த பேந்த முழித்தவள் அவனைப் புரியாது பார்த்து, பின் இறங்க.
அவன் அவளின் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் செல்ல, டாக்டர்ஸிடம் கேட்டுக்கொண்டு, அவளை “இங்கையே இரு!”என்று கூறிவிட்டு உள்ளே சென்றான்.
அங்கே அவனின் தாய் முழித்தே இருந்தார் இவனைக் கண்டவர், முகத்தைத் திருப்பிக்கொள்ள.
“அம்மா, ப்ளீஸ் என்னைப் பாருங்க!”
“யாரையும் என்னால் பார்க்க முடியாது நீங்கப் போகலாம்”.
“அம்மா, இந்தத் தடவை நான் உங்களுக்குப் பிடிச்சதா தான் பண்ணியிருக்கேன்”
“நீ எது பண்ணியிருந்தாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை”.
“கல்யாணம் பண்ணியிருந்தாலுமா?”
“கல்யாணமா?ஒரு பெண்ணோட வாழ்க்கையை அழிச்சுட்டியா?யார் அந்தப் புண்ணியவதி”
“நான் அவளை உள்ளே அனுப்புறேன், பாத்திட்டு சொல்லுங்க”.
வெளியே வந்து மில்கியை உள்ளே அனுப்பியவன், வெளியே நின்றுக்கொண்டான்.ஆத்மி ஒன்றும் புரியாது உள்ளே வந்தவள்.
பெட்டில் ஒரு கையும் காலும் செயலிழந்து படுத்திருந்த பெண்மணியைப் பார்த்து அதிர்ந்து,”சாரதா மிஸ்”என்று அவள் வாய் தாமாக முணுமுணுத்தது.
***********