நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -23

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -23

அவனின் மியூஸிக் என்ற அலறலில் பயந்த டீஜே. வாயிலே நுழையாத பாடலைப்போட அது தாம் தூம் என்று கத்த அவளின் இடுப்பை வன்மையாய் பற்றியவனோ, தன்னை நோக்கி அவளை இழுத்து, சுழற்றி என்று ஆடுகையில் தன் கையிலிருந்த கூர்மையான மோதிரத்தால் அவளது இடுப்பில் கிழித்துவிட மெல்லிதாய் இரத்தம் எட்டிப்பார்த்தது.

அது தந்த எரிச்சலில் துவண்டவளின் நிலையோ, மயங்கும் நிலைமை. தொடர்ந்து அவளது இடது தோள், வலது கன்னம் என்று அவனது கைப்பட்ட இடம் யாவும் காயப்பட பாவையோ நிற்க முடியாது தள்ளாடினாள்.

அரைமணி நேரம் தொடர் ஆட்டத்தால் கை கால்கள் பிடித்து இழுக்க அப்பொழுதும் விடாது நடனம் ஆடியவனை கண்டவள் தன் கண்களை மெல்ல சொக்க.அவள் மயங்குவதை கண்டவன் நடனத்தை முடிக்கும் விதமாக அவளை தன் கைகளில் ஏந்திக்கொண்டான் அவள் மயங்கிய போது சரியாக பின்

“ஓகே காய்ஸ், வீ ஆர் டையர்ட், யூ காய்ஸ் கேன் என்ஜாய், ஐ எம் லீவிங்…”என்று கூறியவனோ அவளை தன் கரங்களில் ஏந்தியபடியே அங்கு அவனுக்கென்று எப்பொழுது அறைக்கு சென்றவன் அவளை பூப்போல் மெத்தையில் கிடத்தினான்.

காயம்பட்ட இடங்களை மென்மையாய் தடவியவன் அவளது மேலாடையை களைந்து காயங்களுக்கு க்ரீம் தடவினான்.அவன் க்ரீம் தடவுகையில் அவளது முகம் சுணங்க அதை கண்டு ஒரு சின்ன சிரிப்பு சிரித்தவன்.

“இந்த வலியே தாங்க முடியல இனி என் பிள்ளையை இவள் எப்படி பெற்றெடுப்பாள்?” என்று இல்லாத குழந்தைக்காக வருத்தப்பட்டவன். அவளை அணைத்தவாறு படுத்துக்கொண்டான். காமம் இல்லாத அணைப்பு அது.

சில மணி நேரங்கள் கழித்து கண் விழித்தவளோ, தான் யாருடைய அணைப்பில் இருக்கிறோம் என்று பயந்தபடியே பார்க்க அவள் எழுந்ததும் எழுந்துவிட்டவன் வேண்டும் என்றே தூங்குவது போல் நடித்து அவளை தன் மேல் இழுத்து போட்டுக்கொண்டவன்.

“ஓய், என்னை எதுக்காக இங்க கூட்டிட்டு வந்திருக்க?” என்று அவன் கேட்டிட.

பேந்த பேந்த முழித்தவள் ” நான்… அங்…க… டான்…ஸ்….”என்று திக்கி திணற.

நன்றாகவே சிரித்தவன் அவளது இடையை அழுத்தமாக பற்றி, அவளது இதழ்களை மென்மையாக பற்றிக் கொண்டான். அவனது கைகள் தன்ப்போக்கில் அவளது உடலில் தன் ஆதிக்கத்தை செலுத்த சற்றே மென்மையும் அல்லாத வன்மையும் அல்லாத கூடல் அது. காதலோடு காமம் கலந்த கூடல் ஆனால் அது ஒரு தனி மனிதனின் கூடல். அவன் காதல் கொண்டான். அவன் காமம் கொண்டான். அவன் கூடல் கொண்டான். பெண்ணவளின் நிலையை அவன் அறிந்தானில்லையே.

சில முறைகள் இந்த கூடல் நிகழ. பெண்ணவள் ஒய்ந்து போனாள். அவள் உடல் ஓய்வை வேண்ட அதை புரிந்துக்கொண்டவனும் கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டான்.சற்றே ஆசுவாசமாக மூச்சு விட்டவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.அவளது கண்களில் கண்ணீர்.

விதியோ ‘இதுவே நீ சிந்தும் கடைசி கண்ணீர் என்று ஆத்மியிடம் கூறி பின் இருடி உனக்கு இருக்கு’ என்று தேவ்வை பார்த்து சொன்னது.

***************

ஒரு மாதத்திற்கு பிறகு,

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்ட சாரதாம்மா வரவேற்பறையில் வந்தமர்ந்தவர் முன் கம கம வென்று வாசனையாலான இஞ்சி டீயை கொண்டு வந்து நீட்டினான் மில்கியின் தேவ்.

அதை பெற்றுக்கொள்ளாது தன்னுடைய நகரும் வண்டியை நகர்த்தியபடியே ஆத்மியின் அறை கதவை திறந்தவர் அவளை எழுப்பி, குளியலறைக்குள் அனுப்பி வைத்தார்.

அவனது தாய் என்றும் போல் இன்றும் டீயை வாங்காதது.அவனுக்கு துக்கத்தை கொடுத்தாலும் அவன் மனதிலிருந்த நம்பிக்கையால் அதை போக்கிக்கொண்டவன்.தன்னவளுக்கும் காப்பியை கலக்கி அதை அவளுடைய அறையின் மேசையில் வைக்க. அதை எடுத்துச்சென்று தனது செல்லப்பிரானியான கிட்டிக்கு ஊற்றினாள்.இதுவும் வழக்கமாய் நடக்கும் நிகழ்வே.அது அவனை வருத்தம் கொள்ளவைத்தது அதையும் ‘இதுவும் கடந்துப்போகும் ‘ என்று கடந்தவன் அமைதியாய் நின்றுக்கொண்டான்.

அவள் கிளம்பி வெளியே வந்தவளாக,அவசர அவசரமாக பிரட் மற்றும் ஜாமை  உண்டவள். ஆபிஸ் கிளம்பிப்போய் விட அடுத்து சாரதாவும்.

“மூஞ்சிய பாரு நல்லா, எப்போ பாரு சாப்பிடும்போது புள்ளையை பாக்குறது. இந்த முகறைய பார்த்தால் அவளுக்கு சாப்பிடவா தோணும்? இதுலாம் தெரிய வேண்டாம்.துரை தான் எல்லாம் தெரிஞ்சவராச்சே” என்று அவர் தன் மகனை வசைப்பாட.

“சாரு அவனே பாவம் .விடு டா நீ வேற அவனை திட்டணுமா?”என்றபடி வந்து சேர்ந்தார் அறிவழகன்.

“அது சரி, ஏன் சொல்ல மாட்டீங்க உங்க புள்ளையாச்சே, பாவமாம்ல பாவம் சரி தான் இவன் பண்ணுனது பெரிய பாவம் அதுக்கு அந்த புள்ள பண்றது கம்மித்தான். இதுலாம் அவனுக்கே தெரிய வேணாம் எப்போ பாரு முகறையை முன்னாடி வந்து காமிக்குறான்.அறிவழகனின் பிள்ளைக்கு அறிவேயில்லை”என்று அவர் அழுத்தமாக முடிக்க.

முகத்தில் எதையும் காமிக்காது உள்ளறைக்கு சென்றுவிட்டான் தேவ். 

அவன் சென்றதும் அவனையே பார்த்தபடி இருந்த அறிவழகனிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.எப்படி இருந்த பிள்ளை என்று.

வேலைக்கு செல்ல வேண்டி கிளம்பி வெளியே வந்த தேவ், தனது இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து சென்றுவிட்டான்.அலுவலகத்திற்கு சென்ற ஆத்மிக்கு இன்று பல மீட்டிங் இருந்ததால் அவள் அதில் கவனம் செலுத்தி வெற்றியும் கண்டாள். இப்பொழுது அவள் அந்த நிறுவனத்தில் ஊழியை அல்ல அந்த ஐடி நிறுவனத்தின் முதலாளி.ஆகையால் இந்த ஒரு சில நாட்களாகவே அவள் திறம்ப்பட இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறாள்.

தேவ் இப்பொழுது ஒரு சாதரண பழ வியாபாரி.இது ஆத்மி தேவிற்கு கொடுத்த தண்டனையில் ஒன்று. அன்றாடம் உழைத்து அதில் வரும் பணத்தில் மட்டுமே அவன் அவனோடு சேர்ந்து இவர்கள் மூவர் விதம் நால்வருக்கு உணவு வழங்க வேண்டும் என்பது. அதன் படி இத்தனை காலம் கஷ்டம் என்பதே என்ன என்று அறியாது வளர்ந்தவன்.ஏசியிலே வளர்ந்தவன் இன்று சுடும் வெயிலில் பந்தலுக்கு அடியில் பழங்கள் விற்கிறான்.சில நேரங்களில் வீதி வீதியாக விற்கும் பழக்கமும் உண்டு.

இவனுக்கு இந்த தண்டனையை நல்கிய ஆத்மியும் எந்நேரமும் சோகமாய் இருக்க அதை பார்த்த சாரதா தான் தேவின் தொழிலை இவளது கையில் வலுகட்டாயமாக திணித்திருந்தார். முதலில் ஏனோ தானோ என்று இருந்தவள் பின் இயல்பு நிலைக்கு திரும்பினாள்.

தேவ் ஹாஸ்டலில் இருந்த போதும் அவனுடைய செலவுகள் அனைத்தும் சாரதாவால் பார்க்கப்பட்டதால் அவன் கஷ்டம் என்பது அவனுக்கு என்ன என்று தெரிய வாய்ப்பில்லை தான் அதனுடன் அவன் படித்து முடித்தவுடனே நல்ல வேலையும் கிடைத்துவிடவே நன்றாகவே சம்பாதித்தான்.

அவனை பொருத்த வரை வேலை ஏசி ரூம், மாத முழுக்க கம்ப்யூட்டரில் உழைப்பு, சம்பளம் அவை மட்டும் இதை தவிர்த்து வெளி உலக வாழ்வில் ஒரு ரூபாய் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பதை ஒவ்வொரு மணி துளியும் அவனுக்கு இப்போது உணர்த்துகிறது.

அதீத வெயிலினால் பல சமயம் உடலில் நீர் சத்து குறைந்து மயங்கும் நிலைக்கு செல்வான், பல மணி நேரம் நிற்பதால் கால் துவண்டு விழுவான். ஒரு ரூபாய் சம்பாதிக்க மக்கள் படும் பாடு.

பல தொழில்கள், பஸ்கள், இரயில்களில்  சிக்னலில் நிற்கும் அந்த சிறு இடைவெளியில் தன் உயிரை பணையம் வைத்து பொருள்களை விற்கும் வியாபாரிகள் இங்கு ஏராளம். பொருளை வாங்கிவிட்டு காசு வாங்க அந்த பஸ் ஓடும் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து ஓடுவர். இவர்களை பார்கையில் முன்னால் இருந்த தேவ்வாய் இருந்தால் ‘அவர்கள் படிக்காதது அவர்கள் தப்பு’ என்று அசால்ட்டாய் சொல்லியிருப்பான்.

இவர்கள் தான் அவனுக்கு படிப்பின் முக்கியதுவத்தை உணர்த்தினர். அவர்கள் வேண்டுமென்ற படிக்காமல் விடவில்லையே, சூழ்நிலை, விதி, காலம் இவை அனைத்தும் அவர்களின் வாழ்வில் பலவாறு அதன் ஆட்டத்தை நிகழ்த்தியிருக்கும். இவை அனைத்தையும் கடந்து ஒருவன் படித்து சாதிக்கிறான் என்றால் அதற்கு பின் நிச்சயம் ஒரு சாதனை தாய் அல்லது சாதனை தகப்பன் இருப்பார். அவர்கள் தான் தன் மகன்/ மகளை உயர்த்தியிருப்பார்.அதை அவர் அவரது சாதனையாய் பார்த்திருப்பார்.

ஆத்மி இவனுக்கு இந்த தண்டனை வழங்கியது மூலமாக அவனது தான் என்னும் அகங்காரத்தை அழிக்கவே நினைத்தால். அவன் ‘தான்’ என குறிப்பிடும் ஒவ்வொரு வார்த்தையையும் உருவாக்கியவர் அவனது தாய் மட்டுமே, அதை சமீப காலமாக நன்றாகவே உணர்ந்திருந்தான் மில்கியின் தேவன்.

***********

வேலை முடிந்து அவன் வீட்டிற்கு வருகையில் ஆத்மிக்கு பிடித்த காளானை பார்சல் வாங்கி வர. வீட்டிற்குள் நுழைந்ததும் அதை ஹாலிலிருந்த மேசையில் வைத்தவன். குளித்து உடை மாற்றிவிட்டு வரவும். ஆத்மி அந்த பார்சலை திறந்து பார்க்கவும் சரியாக இருந்தது.

“உனக்கு பிடிக்கும்னு வாங்கிட்டு வந்தேன் ஆத்மி” என்றான் இவன் மென்மையாக.

அவனை இளக்காரமாக நோக்கியவள் “இதுல என்ன கலந்திருக்கு?”என்றாள் ஒரு புருவத்தை உயர்த்தி.

அவன் அவளை அடிப்பட்ட பார்வை பார்க்க அதை தூசி போல் தள்ளியவள் “ஒரு வேலை விஷமோ? இல்லை வசிய மருந்தா?”என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

அவன் அமைதியாய் நிற்க, அவனை பார்த்தவள் கோபத்தில் அந்த பார்சலை எடுத்து அவனது முகத்தில் அடித்து வீசியிருந்தாள் தேவின் மில்கி. “எனக்கு பிடித்தது, பிடிக்காதது எதுன்னு நான் தான் சொல்லணும் நீ எதுக்கு சொல்ற? அது சரி, உன் கேவலமான புத்தி எப்படி மாறும்? உனக்கு எப்பவும் உன் இஷ்டப்படிதானே எல்லாரும் ஆடனும்?” என்றாள் காட்டமாக.

“ஐயோ… அப்படியெல்லாம் இல்லை…”என்று ஆரம்பித்த தேவ்வை ஒரு கரம் நீட்டி தடுத்தவள்.

“நீ எதுவும் சொல்ல தேவையில்லை, என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல, இன்னொரு தடவை எனக்கு பிடிக்கும், அது இதுன்னு சொல்லிட்டு எதையாவது வாங்கிட்டு வந்த செருப்பு பிஞ்சிடும்”என்று காரத்தோடு கூறியவள் “ச்சை” என்று சென்றிருந்தாள்.

மனம் முழுக்க வேதனை படிந்தாலும், அதையும் சிரித்த முகமாய் கடந்தவன், தனது அறைக்கு சென்றிருந்தான்.

இரவு உணவின்போது அறிவழகன், சாரதா மற்றும் ஆத்மி மூவரும் உணவு உண்ண இவன் தனித்து நின்றிருந்தான். உண்டு முடித்ததும் தண்ணீர் குவளை எடுத்த ஆத்மியின் கை வழுக்கி அது கீழே விழுந்து சுக்கு நூறாக உடைய அதை சுத்தம் செய்யவென்று அவள் இறங்க அதை தடுத்த சாரதா.

“நீ ஏன்டா தங்கம் அதை க்ளீன் பண்ணீட்டு, நீ போ, அதுக்கெல்லாம் இங்க ஆள் இருக்கு”என்று தேவ்வை பார்த்து கூற.அதை உணர்ந்துக்கொண்டவனும் கைகளால் கண்ணாடிகளை எடுக்க அதில் அவனது கைகளில் சிறு கீறல் உண்டானது.

அதை கண்டும் காணதது போல் அவர்கள் தங்களது வேலையை பார்க்க. அறிவழகன் தான் அவனை ஒரு நிமிடம் பார்த்தார். உண்டு முடித்து அவரவர்கள் சென்றுவிட.

தனதறைக்கு வந்தவன், வலது கையில் அடிப்பட்டதால், இடது கையால் அவன் மருந்து போட முயற்சிகையில் அது முடியாது போகவே, வலியில் அப்படியே உறங்கி போனான் தனது நிலையை நினைத்தும்.

மறுநாள் காலை விடிந்த பொழுது அவன் கையில் மருந்திடப்பட்டிருந்தது. அது யார் என்று குழம்பியவன் பின் தோளை குலுக்கிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் வெளி வருகையில் ஆபீஸிற்கு  கிளம்பி ரெடியாய் இருந்தவள் அவனை கண்டு என்ன நினைத்தாளோ, ஒரு நிமிடம் அவன் முன் நின்று.

“வந்து கார் எடு என்றவள்”நில்லாது காரில் சென்று அமர்ந்துக் கொண்டாள் தேவ்வின் மில்கி.

தனது வலது கரத்தை மாறி மாறி பார்த்தவன் ‘இதோடு எப்படி கார் ஓட்ட என்று நினைத்தவன் இருந்தும் வலியை பொருட்படுத்தாது காரை எடுத்தான்.

ஸ்டியரிங்கில் கை வைத்தாலே வலி உயிர்போக இருந்தும் எப்படியோ சமாளித்து மெது மெதுவாய் அவன் ஓட்ட.

“மீட்டிங் இன்னைக்கு நாளைக்கில்ல நீ மெதுவா போக”என்று அவள் கத்த.

அவளை பார்த்துவிட்டு “சாரி, இதோ போறேன்” என்றவன் சற்றே வேகத்தை கூட்ட.அவனது வலது கரத்திலிருந்த காயம் பெருசாகி இரத்தம் கசிய துவங்கியது.

அதை கண்டு இகழ்ச்சியாய் உதட்டை சுழித்தவள், வெளியே வேடிக்கை பார்க்க துவங்கினாள். அரைமணி நேரத்தில் அலுவலகத்தை அடைந்தவள் இறங்கும்பொழுது.

“உள்ள வா” என்று அவனையும் அழைக்க ஒன்றும் புரியாது விழித்தவன் அவளோடு செல்ல.

அலுவலகத்தில் அவளுக்கு வணக்கம் வைத்தவர்கள். பழைய முதலாளி என்று  இவனுக்குமே வணக்கம் வைக்க அதை தடுத்தவள். முன்னே நின்று அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் சத்தமாய்.

“ஹலோ, மை டியர் எம்ப்லாயிஸ், இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள், அதனாலே உங்க எல்லாருக்கும் ட்ரீட் அதாவது லன்ச் நான் வழங்கப்போறேன்.சோ, அதை உங்களுக்கு இங்க நிக்குறாரே மிஸ்டர், தேவ் என்னோட ட்ரைவர் அண்ட் வேலைக்காரன் அவரே பரிமாருவாரு.எல்லார் நல்லா சாப்பிடுங்க”என்றவள் தேவ்விடம்.

“லன்ஜ் வர வரை இங்கையே இருந்து எல்லாத்தையும் பாத்துக்கோங்க”என்று சென்றுவிட்டாள்.

அங்குள்ள ஊழியர்கள் இவனை பார்த்த பார்வையில் இவனுக்கு அவமானமாய் இருந்தது.

முன்னால் முதலாளி இப்போ ட்ரைவர், அத்தோட வேலைக்காரன்னு சொல்றாங்க, என்று அவரவர்கள் தன் பாணியில் கிசுகிசுக்க.இதே இடத்திற்கு கம்பீரமாய், ஆதிக்கத்தோடு வந்து நின்று தன் ஆளுமையை செலுத்திய இடம் என்று கண் முன் தெரிந்தது தேவிற்கு.

************

 

                                                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!