உள்ளத்தின் காதல் நீங்காதடி -11

உள்ளத்தின் காதல் நீங்காதடி -11

காதல்-11

“ஆண்-உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது,ஏன்னா நான் போய்ட்டா உன்னை யாரும் விதவையா பாக்கக்கூடாது”

எத்தனை அழகான வரிகள் கொண்ட பாடல் இது,இந்த பாடலை கேட்கையில் மெய் சிலிர்க்கும்-இதனால் தான் காதல் புனிதமானதோ!

இன்று…

காலை எட்டு மணிக்கே எழுந்துவிட்டவள், என்றும் இல்லாத திருநாளாக தலைக்கு குளித்து, விரிந்த கூந்தலை அழகாக வாட்டர் ஃபால் பிரைய்ட்(waterfall braid hairstyle) செய்திருந்தாள். பிரவுன் நிறத்தில் ஹாஃப் ஸ்லீவ்,ரவுண்ட்  நெக் பிளவ்ஸூடன், அதே நிறத்தில் ஃப்லோரல் பிரவுன் சேட்டின் சேலையை அணிந்து, காதில் கொடை ஜிமிக்கியுடன்,இடது கையில் வாட்ச் மற்றும் வலது கையில் ஒரு சிறு பிரேஸ்லெட்டோடு ஓவியமாய் இருந்தவளின் அழகு எவரையும் ஒரு நிமிடம் கவரும் பேரழகியாகவே திகழ்ந்தாள்.

அவளின் இன்றைய தரிசனத்தை பார்த்த அவளது  தாயோ வாயை பிளந்துக்கொண்டு அவளை பார்க்க,

அவரைக் கண்டு மென்னகை புரிந்தவள் “என்னம்மா?”என்றாள்.

“நான் பெத்த பிள்ளையா இதுன்னு பாக்குறேன் டி”என்றார் ராதா.

“அந்த சந்தேகம் எனக்கு எப்போ இருந்தே இருக்கே”என்றாள் அவள்.

“என்னடி கிண்டல்லா? நான் அழகா பொறந்ததுனாலத்தான் நீயும் இப்போ அழகா இருக்கே,நியாபகம் வெச்சுக்கோ”என்று அவர் ரோஷமாய் முறுக்கிக்கொள்ள.

“நீ உன் அத்தை மாதிரினு அடிக்கடி சொல்லுவ”என்று மீரா மடக்க.

“ஆமா,அதுக்கு என்ன இப்போ?”என்றார் அவர்.

“அப்போ,அத்தை அழகா இருப்பாங்க போல,சோ நானும் அழகா இருக்கேன்”என்றாள் மீரா.

“ஆமா ஆமா”என்று சலித்தவரின்  முகம் ஏதோ ஒவ்வாமையை பிரதிபலிக்க அதை சடுதியில் மறைத்தவர், மனதில் மட்டும் ‘உருவத்தில் அவளைப் போல் இரு குணத்தில் வேண்டவே வேண்டாம்’ என்று நினைத்துக்கொண்டார். பின் “அது இருக்கட்டும்,இன்னைக்கு காலேஜ்ல எதுவும் ஃபங்ஷனா?”என்று  கேட்க.

வாட்சை பார்த்துக்கொண்டிருந்தவள் நேரமான கடுப்பில் “ஆமா ஆமா  கல்யாணம்”என்றிருந்தாள்.

அதை கேட்டவருக்கு தூக்கி வாரிப் போட “என்னடி சொல்ற?” என்று பதறினார்.

அவர் பதறிய பின்னே உளறியது புரிய நாக்கைக் கடித்துக் கொண்டவள் “ஐயோ,ஃபிரண்டு ஒருத்திக்கு கல்யாணம்,சோ பேச்சிலர்ஸ் வூமன் பார்ட்டி”என்று சமாளித்தாள்.

அதை கேட்டதும் தான் அவளது தாய் காளி அவதாரமே எடுத்தது “என்னது பார்ட்டியா? என்னடி அடி வேண்டுமா?”என்று அவர் மிரட்ட.

“மீ பார்ட்டீனா அது கிடையாது ஜஸ்ட் காலேஜ் கேண்டீன்ல அவ எல்லாருக்கும் ட்ரீட் வைக்குறா,அவ்ளோ தான்”என்றாள் மீரா.

“அதுக்கா இப்படி போற? நம்புற மாதிரி இல்லையே”என்று அவர் அவளைக் கூர்மையாய் நோக்க.

பார்க்கின்ற படம்,சில கதைகள் என எல்லாவற்றிலும் பார்ட்டி என்றாலே மது,மாது,சூது என்று பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான இடத்தில் இதுவே பார்ட்டி என மொத்தமாக நம்பப்படுகிறது. அதுவே வேதனையான விடயம். எல்லாவற்றிலும் நல்லது உள்ளது. நாம் ஒரு வார்த்தையை எந்த விதத்தில் உபயோகப்படுத்துகிறோம் என்பது மிக முக்கியமான ஒன்று .

இன்று பல வார்த்தைகள் அதன் உண்மையான பொருளையே இழந்து ,திரிந்து வேறு மாதிரி பொருளைப் பெற்று வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. அது யாருடைய தவறு? வார்த்தையும்,அதன் பொருளும் எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவரும் அறிந்த விடயமே. பார்ட்டி போல் பல வார்த்தைள் அதன் உண்மையை இழந்துதானே நிற்கிறது!

உண்மையில் பார்ட்டி என்ற சொல்லின் பொருள் ‘கொண்டாட்டம்’. அந்த கொண்டாட்டத்தில் நாம் என்ன என்ன பொருள்கள், வடிவமைப்புகள், உணவுகள், குளிர்பாணங்கள் வைக்கின்றோம் போன்றவை எல்லாம் நம்முடைய விருப்பத்தைச் சார்ந்தது. அது பார்ட்டி என்ற சொல்லைப் பாதிக்க நாம் ஏன் அனுமதிக்கவேண்டும்?

உண்மையை உளறி கொட்டிய தன் மடத்தனத்தை நினைத்து தன்னைத் தானே வைத்து கொண்டவள் வேறு வழி இல்லாமல்.

“அம்மா நான் யாரையாவது கல்யாணம் பன்ற அளவிற்கு வர்த்தா? ஏன் மா நீ வேற”என்றிருந்தாள்.

“அதுவும் சரி தான்,நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டன்னு எனக்கு தெரியும்”என்று அவரும் வார.

“போதும்,போதும் எனக்கு நேரம் ஆகிடுச்சு,நான் கிளம்புறேன்”என்று அவள் பறக்க.

“என்னடி அவசரம் ,டிபன் கூட சாப்பிடாம”என்று அவர் கண்டிக்க.

“ம்மா ,ப்ளீஸ் லேட் ஆச்சு புரிஞ்சுக்கோ”என்று அவள் இம்முறை கெஞ்ச.

அவளது அவசரம் அவருக்கு பயத்தைக் கொடுக்க “மீரா,எனக்கு எதுவும் சரியா படலை, தேவையில்லாம ஏதாவது பண்ணினேன்னு எனக்கு தெரிஞ்சது, நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்டி தெரிஞ்சுக்கோ” என்று அவர் தன் கோபத்தைக் காண்பிக்க,

ஒரு நிமிடம் பயந்தவள் பின்,அந்த பயத்தை விடுத்து அழகாய் புன்னகைத்தவள் “மம்மி அதுலாம் ஒன்னுமில்லை நோ பயம்”என்றாள்.

“ஏதோ சொல்ற,சரி போய்ட்டு வா” என்று அனுப்பி வைத்தார் மனமே இல்லாது.

அவசரமாய் மொபைல் போன் மற்றும் வேலட்டை எடுத்துக்கொண்டு நடந்தவள்,ஒரு ஆட்டோ பிடித்து ரிஜிஸ்ட்டர் ஆபிஸ் செல்லவேண்டும் என்றாள்.

(ஆம் , இவள் சுபியின் திருமணத்திற்கு செல்கிறாள், நேற்று சுபி சாட்சி கையெழுத்திட ஆள் கிடைக்காமல் ஒவ்வொருவராய் கெஞ்ச,அனைவரும் அவளின் பின்னனி அறிந்ததால் நமக்கு எதுக்கு வம்பு என்று பறந்து விட்டனர்.

மீரா,தேவையில்லாமல் மாட்டிக்கொண்டாள் என்று தான் கூற வேண்டும். மீராவின் கெட்ட நேரம் அவளுக்கு இவள் தந்தை திருமணத்திற்கு மறுக்கிறார் அதனால் தான் இந்த திடீர் ரிஜிஸ்டர் திருமணம் என்று அவள் நினைத்திருக்க.

ஆனால் காரணமோ வேறு. அவள் சிறிய உதவி என்று நினைத்து எடுத்த முடிவு எப்பேர்பட்ட பின்விளைவுகளைக் கொடுக்கும் என்பதை அவள் அப்பொழுது அறியவில்லை பாவம்.

நிலைமை கையை மீறுவது புரிகையில் காலம் கடந்திருக்கலாம்…)

சரியாக பத்து நிமிட பயணத்தில் ரெஜிஸ்டர் அலுவலகம் வந்துவிட்டவள், அவளுக்காக பயத்துடன் காத்திருந்த தோழியைக் கண்டு மென்மையாக புன்னகைத்தாள். இவளை கண்டவுடன் அவளிடம் வந்த சுபி.

“ரொம்ப நன்றி மீரா,இப்போ தான் எனக்கு உயிரே வருது”என்றாள் நிம்மதியுடன்.

“வருவேன்னு சொன்னேன்ல அதுனால கரெக்ட்டா வந்துட்டேன்”என்றாள் புன்னகையுடன்.

“நீ ஈசியா சொல்லிட்ட எனக்கு எவ்ளோ பயமா இருந்துச்சு தெரியுமா?”என்றாள்.

“சரி,எங்க உன்னோட அவுக,நீ மட்டும் நிக்குற?”என்றாள் கேள்வியுடன்.

“அவுங்க ஃபிரண்ட் ஓட வந்துட்டு இருக்காங்க”என்றாள்.

“ஓ,சரி சரி”என்று அவள் முடிக்க.

“இதோ வந்துட்டாங்க”என்றாள் சுபி,அவள் திரும்பி பார்க்க.

முதலில் காரின் இடது புறமாக இருந்த இறங்கியவன் பட்டு வேஸ்ட்டி சட்டையில் இளமையாக இருக்க அவனே கல்யாண மாப்பிள்ளை என புரிந்தது மீராவிற்கு.

சுபியைக் கண்டதும் அவளிடம் வந்த கதிரவன் “சாரி லேட் ஆகிடுச்சு”என்றான் .

“பரவாயில்லபா வா என் ஃபிரண்ட காட்டுறேன்”என்று அவனை மீராவிடம் அழைத்து வந்தாள்.

“மீரா இவர் தான் கதிர்”என்று அறிமுகப்படுத்த இருவரும் ஹாய்,ஹலோ என்று பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

பின் நினைவு வந்தவனாக காரின் ஓட்டுனர் பக்கத்துக்கு சென்று அந்த காரின் டோர் க்ளாஸை தட்டியவன்.

“உள்ள வா டா லேட் ஆச்சு” என்றிருந்தான்.

உண்மையில் அந்த அவன் உறைந்து போயிருந்தான். அவளைக் கண்டு அவனின் உள்ளத்தின் தேவதை, உண்மையில் இன்று தேவதை போலவே காட்சி அளித்தால்.

காரின் முன் கண்ணாடியில் தன்னவளைக் கண்டவனின் கண்களுக்கு அங்கிருந்து அனைத்தும் ஒவ்வொன்றாய் மறைந்து சுற்றுப்புறம் மேக கூட்டங்களாகவும்,நடுவில் ஒர் அழகான அரசவையும், உலகின் தலைசிறந்த நறுமண பூக்களினாலான அரியாசனமும் அதில் தன் உள்ளத்தில் தன் தேவதை சிம்மாசணமிட்டு அமர்ந்திருந்தது போலவே அமர்ந்திருந்தாள் அவனின் மீரா.

கண்களின் ஒவ்வொரு நுன் நரம்புகளும் இதயத்திற்கு இன்னிசையை அனுப்ப தன்னவளின் வதனத்தில் குடிக்கொண்டிருந்த அந்த அமைதி அவனது மனதை அமைதிபடுத்த அந்த ஏகாந்தத்தை அனுபவித்தான் முழுமையாக.

தன் நண்பனின் குரலில் சுயநினைவு பெற்றவன் தான் எங்கிருக்கிறோம் என்று நினைவு கூறவே சிறிது நேரம் தேவைப்பட்டது,பின் அனைத்தும் புரிந்ததும் சட்டென மீராவைப் பார்த்தவனுக்கு புரிந்தது தான் கனவு காணவில்லை அனைத்தும் உண்மை என்பது.

அவள் இன்னும் தன்னை பார்க்கவில்லை,அவள் தன் தோழியிடம் உரையாடி கொண்டிருந்தாள்.

தன்னை சுதாரித்துக்கொண்டவன் காரை விட்டு இறங்கி அவர்களை நோக்கி முன்னேற, முதலில் அவனைக் கண்ட சுபி.

“உதய்யண்ணா”என்றாள் .

அவளின் உதய் என்ற அழைப்பே அவளை அதிர வைக்க ‘தான் சரியாகத்தான் கேட்டோமா?’ என்று உறுதி செய்ய திரும்பி பார்த்தாள்.

உள்ளத்தின் தேவதை அவளின் மீரா அவனுக்கு. ஆனால் மீராவிற்கு உள்ளத்தின் எதிரியன்றோ? அழகாய் ஆலிவ்(olive)க்ரீன் கலர் ஷர்ட்ல் வைய்ட் கலர் ஃபேன்டோடு அழகாய் வசீகரனாய் இருந்தான்.அவனை இவள் அதிர்ந்து நோக்கினாலும் தலை முதல் கால் வரை அளவெடுத்தவள் ‘பரவாயில்ல சுமாரா தான் இருக்கான்’என நினைக்க மனதை திட்டியவளின் நினைவுகள் காயங்களை நினைவு கூறியது.

அவனைக் கண்டதும் அவளின் வேதனை கொண்ட மனது தனது ரணங்களைத் தன்னை தானே  குத்தி கிழித்துக்கொள்ள, வலி தாங்க முடியாது கதறி துடிக்க தோன்றியது மீராவிற்கு.

இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் அசராது பார்த்துக்கொள்ள, உதய்யின் கண்கள் மீராவைக் குற்றம் சாட்ட, சளைக்காத மீராவின் கண்கள் உதய்யைக் குற்றம் சாட்டியது.

போர் முனையில் இருநாட்டின் ராஜாக்கள் மட்டும் உயிரோடு இருக்க,இருவரும் ஒருத்தருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்னும் நிலையில் ஒரு போர் நடந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர்களின் விழிப்போர்.

அவளை முதலிலே பார்த்துவிட்ட உதய் தன்னை மீட்டுக்கொண்டு.

“எப்படி இருக்க சுபிமா?”என்றான் சுபியிடம்.

“நல்லா இருக்கேன் அண்ணா,இவ என் ஃபிரண்ட் மீரா”என்றாள் அறிமுகத்திற்காக.

அவளைப் பார்த்தவன் “ஹாய்”என்றான்.

அவள் அமைதியாய் அவனைப் பார்க்க பின், தலையை உளுக்கிக்கொண்டவள்.

“ஹலோ”என்றிருந்தாள்.

“டைம் ஆகிடுச்சு வாங்க உள்ள போகலாம்”என்று கதிர் அழைக்க அனைவரும் உள்ளே சென்றுவிட்டனர்.

இன்றைய முதல் திருமணம் இவர்களுடையது.

ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளும் முடிந்திருந்ததாள் பதிவாளர் மணமக்களிடம் சம்மதம் வாங்கி.

அவர்களைக் கையெழுத்திட செய்தார். பின், “மணமகன் சாட்சி உதய் சரண்” என்று அழைக்கப்பட முன்னால் வந்து உதய்  கையெழுத்திட.

“மணமகள் சாட்சி – மீரா” என்று அழைக்க உதய் அவளிடம் பேனாவை நீட்ட ஒரு நிமிடம் தயங்கியவள் கையெழுத்திட அதுவரை அவளின் பக்கத்திலே நின்றான் உதய்.

ஏனோ அவன் மனது இந்த தருணத்தில் தங்களது திருமணத்தை நினைத்து பார்க்க உள்ளத்தின் ஒவ்வொரு துடிப்பும் தித்திப்பை அளித்தது.

மீரா ஒருவித குழப்பத்தில் இருந்ததால் இதை கவனிக்கவில்லை.பின் நால்வரையும் வைத்து போட்டோ பிடித்துக்கொண்டனர் உதய்,கதிர்,சுபி,மீரா இவ்வாராக நால்வரும் நின்ற பின் அனைவரும் வெளியே சென்றுவிட.

காரில் அனைவரையும் ஏற சொன்னவன் டிரைவர் சீட்டில் அமர்ந்துக்கொள்ள தம்பதிகள் பின் சீட்டிற்கு சென்றுவிட வேறு வழியே இல்லாது உதயின் பக்கத்தில் அமர்ந்தாள் மீரா.

பத்து நிமிட பயணம் இருவருக்கு அவர்களின் வாழ்க்கையை மறு ஒளிபரப்பு செய்ய கலவையான உணர்வில் இருந்தனர் இருவரும்.

காலேஜ் வந்ததும் அவர்கள் இறங்க போகையில் ( இவர்களின் முடிவு தற்போது பதிவு திருமணம் செய்வது மட்டுமே,எதிர்பாராத விதமாக சுபியின் காதல் அவளது தந்தையை சென்றடைய அவருக்கு பயந்து இந்த பதிவு திருமணத்தை செய்துக்கொண்டாள்.

ஏதாவது பிரச்சணை வந்தால் இதை காட்டவே எண்ணி இப்படி செய்தால்,படிப்பு முடிந்ததும் தந்தையிடம் சொல்லி ஒப்புக்கொண்டால் பெரிய அளவில் திருமணம்,இல்லையென்றால் இதை காட்டிவிட்டு தனியே வந்துவிட அவள் எண்ணியிருந்தாள்.

கதிர் உதய்யின் பள்ளி தோழன் தற்சமயம் ஒரு மென்பொறியாளனாக பணியாற்றி வருகிறான்.அவனுக்கு தாய்,தந்தை கிடையாது தனி ஆள் தான், தற்சமயம் நன்றாக சம்பாதித்து வருகிறான்.

எப்பொழுதும் சுபியின் விருப்பங்களுக்கு மதிப்பு அளிப்பவன்,அவளுக்கு சுதந்திரம் கொடுப்பவன்,தனிமையில் தவித்த கதிருக்கு எல்லாமுமாய் இவள் மாறிவிட,தந்தையுடன் போராடி ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொண்டிருக்கும் சுபிக்கு கதிர் எல்லாமுமாக மாறினான்

நட்பாக இருந்த இவர்களுக்குள் காதல் மே ஐ கம்மின் கேட்காமலே வந்துவிட,இருவரின் வாழ்வும் அழகாய் மாறியது.சுபியின் தந்தை ஒரு எம்.எல்.ஏ வெளி உலகத்தில் அவருக்கு தன்னுடைய பெயர் மிக முக்கியம்,அதற்காக யாரை வேண்டுமானாலும் இறங்கி செய்வார்.

முழுக்க முழுக்க ஆணாதிக்கவாதி. பெண்களைப் பெயருக்கு கூட மதிக்க தெரியாது. அவர் வீட்டில் ஒரு மாதிரியும்,வெளியில் ஒரு மாதிரியும் இருப்பவர்.

வெளி உலகில் பெண்களை மதிப்பது போல் காட்டிவிட்டு நான்கு சுவற்றுக்குள் அவர்களைக் கொடுமை செய்யும் சராசரி நூறில் ஒரு ஆண்மகன்.

தனது பெண்ணை வைத்து அவர் வேறு ஒரு திட்டம் தீட்டி இருக்க,அவருக்கு அனைத்திலும் அரசியல் மகளின் திருமண விஷயத்தில் அவளை கேட்காமலே ஒரு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி வைத்திருந்தவர் அதை அவளிற்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவரே நினைத்துவிட்டு பின் திருமணத்தை நடத்த திட்டமிட்ட சமயம் அவள் எம்.பில் படிக்க வேண்டும் என்று சொல்ல முதலில் மறுத்தவர்,மறுநாள் அவரின் கட்சி ஆபிசில் அனைவரும் பரவாயில்லையே நம்ம கட்சியிலேயே உன் பொண்ணு தான் நிறைய படிச்சிருக்கு என்று அவரை பாராட்டுகள் வர அதை தக்க வைக்க எண்ணி சரி படி என்றிருந்தார்.ஒரு வருடம் அமைதியாய் காதலர்களுக்கு கழிய,அவள் எவனோடோ சுற்றுவது அவளது தந்தைக்கு எப்படியோ தெரிய, நேராய் மகளின் ஹாஸ்டலுக்கே வந்தவர் அவளை திட்டியிருந்தார். அன்றைய நாள் அவருக்கு அவசரமாய் ஒரு மீட்டிங் அதுவும் கோவையில் இருந்ததால் அதை முடித்துவிட்டு இவளை அழைத்து போக எண்ணினார்.

இரண்டு நாள் ஆகும் மீட்டிங் முடிய அதுவரை உன்னை கண்காணிப்பேன்,என்று அவர் கூறி சென்றிருக்க தந்தையின் ஆட்களின் கண்ணில் மண்ணை தூவி இருந்தவள் இன்று எப்படியோ பதிவு திருமணம் முடிந்தது.)

மீரா இறங்கையில் ஒரு நிமிடம் அவனை ஆழ்ந்து நோக்கியவள் கதவை திறந்து இறங்க போகையில் உதய் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தான் போலீஸ் மூலை சரியாக வேலை செய்ய அவளின் கையை சட்டென பற்றியவன் “வேண்டாம்  ஜிலேபி,இறங்காத என்றிருந்தான்”.

அவனின் உயிர் தீண்டல் முதல் அதிர்ச்சி,அவனின் ஜிலேபி இரண்டாம் அதிர்ச்சி .

‘எத்தனை வருடங்கள் கழித்து அழைக்கிறான் இந்த பெயரை கூறி’ என்று அவள் கண்கள் கழங்க.

“ஏதோ சரியில்லை”என்று உதய் கூறும்போதே அவனது முன்பக்க கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது.

_காதல் தொடரும்_

Leave a Reply

error: Content is protected !!