Kadhalil nan kathaadi aanen

Kadhalil nan kathaadi aanen

 

KNKA – 25

இரண்டு வருடம் முடிய இன்னும் மூன்று மாதம் இருக்கும் போதே தன் படிப்பை முடித்துவிட்டு வருகிறான் சித். அவனுக்கு அங்கேயே வேலையும் கிடைத்தது. ஆனால் போகும் போதே, இங்கே வந்து தான் வேலையோ, சொந்த கம்பெனியோ எதுவானாலும் என்று முடிவு செய்திருந்ததால், வேலையை ஒத்துக் கொள்ளவில்லை அவன்.

 

இரண்டு நாள் முன்னே ஏர்போர்ட்டில் இருந்து பேசியவனிடம் ஸ்வாதி, நான் உங்களை பார்க்க ஏர்போர்ட் வரணும் என்றதும்…

 

வழக்கம் போல் சர்ப்ரைஸ் மா! ஆனா உன் ஆன்ட்டியும் அங்கிளும் வரேன்னு சொன்னாங்க, உனக்கு ஓக்கே வா..

 

நான் உங்களை பார்த்ததும் ஹக் பண்ணுவேன், அவங்க இருந்தா உங்களுக்கு ஓக்கேனா எனக்கும் ஓக்கே!

 

ஹாஹா, சரி நான் அவங்க கிட்ட வர வேண்டாம்னு சொல்றேன் ! உன் வாலுத்தனத்தை எல்லாம் நம்ம கல்யாணத்துக்கு அப்புறமாவே தெரிஞ்சுக்கட்டும்! இப்போ மட்டும் வரேன்னு சொல்ற, போன அப்போ வரலை?

 

நீங்க போற அப்போ அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும், அதனால நீங்க கிளம்புற வரை அவங்க தான் உங்க கூட இருக்கணும்…இப்போ நீங்க வரீங்கன்னு அவங்க ஹாப்பி யா தான் இருப்பாங்க, ஒரு எக்ஸ்ட்ரா ஒன் ஹவர் ஹாப்பி மூட்ல வெய்ட் பண்றது ஓக்கே தான் என்ற அவள் விளக்கம் கேட்டு நெகிழ்ந்து போனான்.   எவ்ளோ யோசித்திருக்கிறாள் அவன் பேரெண்ட்ஸ்காக!!!  ரொம்ப ஈசி கோயிங் ஆட்டிட்யூட் மாதிரி தெரிந்தாலும் நிறைய விஷயங்கள் யோசித்து தான் செய்கிறாள்.

 

சொன்னது போலவே ட்ராலியைத் தள்ளிக் கொண்டு வந்த சித்தை ஓடிப் போய் கழுத்தைக் கட்டி கொண்டு தொங்கினாள்…..அவனும் ஸ்வாதி மா…. என்று உருகினான்…..

 

யங்கப்பா!! டேய்!! இரண்டு கன்னி பையன்களை இப்படி அடிக்கடி பொறும விடுறதையே ரெண்டும் வேலையா வைச்சு இருக்குதுங்க… என்ற ஷங்கர்… ஏய்!  ஸ்வாதி, வாத்து! போதும் அவரை தொங்கினது, எறங்கு என்று அவளை பிடித்து இழுத்தான்!!!

 

“உனக்கேன்டா இவ்ளோ பொறாமை?” என்று சொன்னாலும் இறங்கி, அவன் கையை கோர்த்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்!

 

அவளை விடாமல் அணைத்துக் கொண்டான் அவனும்.

 

அனைவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினர். அவர்கள் இருவரும் முன்னே செல்ல, அணைத்திருந்த அவளுக்கு நெற்றியில் முத்தமிட்டு, நான் வரேன் காலேஜ்க்கு இரண்டு நாள் அப்பறம் என்று விடைபெற்றான்.

 

பத்து மாதங்களுக்கு பிறகு

 

சித், ஒரு கம்பெனி தொடங்கி இருந்தான். பிரபாவும் பெங்களூருவில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருந்தான். ஷங்கரும் பிருந்தாவும் சென்னையில் ஒரு நல்ல கம்பெனியில் சேர்ந்து இருந்தார்கள். சூர்யா, பிரபா போல ஐஐஎம் சேர்ந்தான் ஆனால் அஹமதாபாத்தில். ஸ்வாதி, பத்மினியின் கம்பெனியிலே சேர்ந்து விட்டாள்…

 

அனைவரும் பிஸியாக இருப்பதால், சேர்ந்து சந்தித்துக் கொள்வதில்லை. சித்தும் ஸ்வாதியும் வாரத்தில் நான்கு நாளாவது ஒரு மணி நேரமாவது  ஒதுக்கி கொள்வார்கள். மாதத்தில் ஒரு நாள், ஏதாவது ஒரு பீச் ரெஸ்டாரெண்ட் போய் நேரம் செலவழித்து விட்டு வருவார்கள். அன்று பிரபா சென்னை வந்திருந்தால், சூர்யாவை தவிர அனைவரும் சந்தித்து கொண்டார்கள். வந்ததிலிருந்தே கொஞ்சம் டல் அடித்தாள் ஸ்வாதி! முதலிலே கவனித்தாலும் தனியாக கேட்கலாம் என்றிருந்தான்.  ஆனால் நேரம் செல்ல செல்ல அவள் இன்னும் அமைதி ஆக, அவனால் பொறுக்க முடியவில்லை

 

“ஸ்வாதி! என்ன ஆச்சு? உடம்பு எதுவும் பண்ணுதா?”என்றான் சித்!

 

“இல்ல இல்ல, அது எல்லாம் ஒன்னும் இல்லை. ஐயம் குட்!”

 

” யூ ஆர் நாட்! எனக்கு தெரியாதா!” அவுட் வித் இட்!

 

“டேய்! சித், கூட்டிட்டு போய் என்னனு கேளு?” என்றான் பிரபா

 

” ஒன்னும் சீக்ரெட் இல்ல, நீங்க இன்னிக்கு தானே வந்து இருக்கீங்க அதனால அப்புறம் இதை பத்தி பேசலாம்னு இருந்தேன்”.

 

அவன் வந்திருந்தா என்ன? இவ்ளோ நேரம் நீ அமைதியா இருக்கிற அளவு  இப்ப என்ன ஆச்சு  சொல்லு,  என்று படப்படத்தான் சித்!

 

அது என்னவோ, அவனுக்கு ஸ்வாதியின் முகம் எப்போதும் ஜாலியாக  இருக்கணும், அவள் முகத்தில் ஏதாவது மாறுதல் வந்தால், என்ன என்னனு துளைத்து எடுப்பான்…. அவள் அப்படி இருந்தால் இவனுக்கு நாளே சரியில்லாததது போல் ஆகி விடும்….

 

அவனுக்கு பயந்தே அவள் எதையும் அதிகம் வெளிகாட்டுவதில்லை !!

 

“அது அப்பா, அதான் ஆறு மாசம் ஒர்க் பண்ணிட்டியே, உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்னு சொல்றார்!”

 

” உடனே பிரபா, ஏன் பட்டு (இப்போ எல்லாம் பத்து போய் பட்டு தான்) உங்க வீட்டுல இப்படி சொல்ல மாட்டாங்களா? “

 

” அலையாத டா!  நானே ஆறு மாசம், ஆறு மாசம்னு வாய்தா வாங்கிட்டு இருக்கேன்…. இப்போவே என் சேலரியை வாங்க வைக்கிறதுக்குள்ள நா ஒரு வழி ஆகிறேன், கல்யாணத்துக்கு அப்புறம் சான்ஸே இல்ல, அதான்.”….

 

” நீயும் இதே மாதிரி வாய்தா வாங்கேன்! என்றான் ஷங்கர்.

 

“சித், அமைதியாக அவளை பார்த்தபடி இருந்தான்.”

 

“ப்ரோ, இது தான் நல்ல சான்ஸ், இந்த பொண்ணை கழட்டி விட! நீங்க என்னடானா  கொய்ட்டா இருக்கீங்க?”

 

“அவனை முறைத்து “முழுசா சொல்லு ஸ்வாதி”! என்றான்”

 

“அவனை மெச்சும் பார்வை பார்த்தவள், யாரோ மாப்பிள்ளை வீட்டில் இருந்து அப்ரோச் பண்றாங்க போல, அதான் என்னையும் போர்ஸ் பண்றாங்க. இந்த வீக்எண்ட் ஊருக்கு வரச் சொல்லி இருக்காங்க!”

 

“ஓக்கே நம்ம போலாம்!!! என்றான் சித் பட்டென்று!”

 

” ஹான்… நீங்களுமா…,இல்ல நா போய்”…

 

“இல்ல, அது சரிவராது… வெறும் கல்யாணம் பண்ணலாம்னு ஐடியா மட்டும்னா நீ போய் பேசலாம்.. ஆனா இன்னொரு பேமிலி இன்வால்வ் ஆகி இருக்காங்கனா, உன் பேரெண்ட்ஸ் கண்டிப்பா என்னை பார்க்கணும், இல்லனா அந்த பையனுக்காக தான் உன்னை கன்வீன்ஸ் பண்ணுவாங்க”…

 

“நா எங்க வீட்டுல பேசுறேன், இந்த வீக்கெண்ட் நம்ம எல்லாரும் போலாம் . நாங்கள் ஹோட்டல்ல ஸ்டே பண்ணிட்டு ஈவினிங் உங்க வீட்டுக்கு வரோம், நீ மார்னிங் போய் விஷயத்தை சொல்ல, அவங்களை மெண்டல்லா கொஞ்சம் ப்ரப்பேர் பண்ணு”…

 

“வாட் எ ப்ளானிங், வாட் எ ப்ளானிங் என்று சிலாகித்தான் ஷங்கர்!”.

 

சனிக்கிழமை மாலை,

 

சேலத்தில் இருக்கும் ஸ்வாதியின் வீட்டில் அனைவரும் கூடியிருந்தார்கள்.

 

ஸ்வாதி சொல்லிய அன்றே, சித் அவன் வீட்டில் பேசினான்.

 

“அப்பா, அம்மா நான் உங்க ரெண்டு பேருகிட்டயும் ஒன்னு சொல்லனும்.”…

 

” அச்சோ ,இப்போ எப்படி ரியாக்ட் பண்றது என்று திணறினார் நிம்மி! எக்சைட் ஆக முடியாது, அவளை பிடிக்கலை… கோபப்படவும் முடியாது, என் கண்ணா வருத்த படுவான்”!

 

” நா ஸ்வாதினு ஒரு பொண்ணை லவ் பண்றேன்! யூஜி பண்ணினப்போ   அவ என் ஜூனியர்!  இப்போ அவங்க வீட்டுல அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க! அதனால நம்ம அவங்க வீட்டுல போய் பேசனும் என்று தங்கு தடையில்லாமல் சொல்லி முடித்தான்!”

 

“ஏன் ரெண்டு பேருமே அமைதியா இருக்கீங்க?”

 

” நீ சொன்ன விஷயத்தை டைஜெஸ்ட் பண்ண ஒரு பியூ மினிட்ஸ் டைம் குடு சித்! என்று சிரித்தார் குணாளன்.”

 

ஸாரி பா, நா உங்களை டிஸ்அப்பாய்ண்ட் பண்ணி இருந்தா, பட் எனக்கு ஸ்வாதினா ரொம்ப இஷ்டம் ஆய்டிச்சு காலேஜ்லே! I could’nt stop myself from loving her…Pa…

 

இப்ப நம்ம போய் என்ன பேசணும் சித்? உனக்கு ஜஸ்ட் 25 தான் ஆகுது!  கல்யாணம் பண்ற வயசு இல்லை இது! அந்த பொண்ணு தான் அவங்க வீட்டுல கன்வீன்ஸ் பண்ணனும் உனக்காக! நாம இல்ல என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்…..

 

ஸ்வாதியும் அப்படி தான் சொன்னா, நான் தான் உங்களை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன். எனக்கும் இப்ப கல்யாணத்துக்கு ஒன்னும் அவரசம் இல்ல மா!  பட் நா எந்த சூழ்நிலையிலும் ஸ்வாதியை தனியா கஷ்டமான எதையும் பேஸ் பண்ண விடக் கூடாதுனு இருக்கேன்!!!!

 

அவன் அவ்வாறு சொல்லிய பிறகு, பேச எதுவும் இல்லாததால் நம்ம போலாம் சித்னு சொல்லிவிட்டார் குணா!

 

இப்போ, இரண்டு அப்பாக்களும் கொஞ்சம் அவர்கள் தொழில் பேச்சு ஆரம்பித்து சகஜமாக பேச முயற்சி செய்தார்கள்.. ஸ்வாதியின் அக்கா, கல்யாணம் ஆகி திருச்சியில் இருப்பதால் வரவில்லை… பேச்சு வார்த்தை எப்படி போகுது என்று நொடிக்கொரு மெசேஜ் போட்டுக் கொண்டிருந்தாள்!!

 

நிம்மிக்கு தான் அவளை பிடிக்கவே இல்லையே, அதுவும் சித் தன் வாயால் ஸ்வாதியை மிகவும் விரும்புவதாக கூறி விட்டதால் இன்னும் கோவம்..

 

உமா, தன் மகளை தங்களுக்கு எதிராக பேச வைத்து விட்டான் என்று கோபமாக தான் இருந்தார், ஆனால் அவனை பார்த்தவுடன், பெண்ணை பெற்றவர் அல்லவா, அதனால் மனம் மாறி, அவனை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டார்…. அவனின் அமரிக்கையான நடவடிக்கை அவரை வெகுவாக ஈர்த்தது……

 

குணாளன் தான் தொடங்கினார், பசங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க, நாம நம்ம கடமையை செய்வோம்!

 

ராஜசேகர், எங்களுக்கு ஸ்வாதிக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் ஆசை…. அவர் முடிக்கவில்லை

 

அதற்குள் நிம்மி ஆனா நாங்க எங்க சித்துவுக்கு 27க்கு அப்புறம் தான் பண்ணலாம்னு இருந்தோம்!! என்றதும் சற்று நேரம் பலத்த மௌனம்…….யாரு என்ன சொல்வது?

 

குணா,கொஞ்சம் சுதாரித்து கொண்டவர், சேகர், நீங்க கொஞ்ச நாள் வெய்ட் பண்ண முடியுமா எங்களுக்காக? இப்போ தான் கம்பெனி ஆரம்பிச்சு இருக்கான், அவனுக்காக நம்ம கொஞ்சம் டைம் கொடுக்க தான் வேணும் என்று கொஞ்சம் சாத்வீகமாக வலியுறுத்தினார்…..தொழில் செய்பவருக்கு புரியாதா, அவர்களுக்கு வேற வழியும் இல்லையே, மகள் தான் சித் தான் வேணும் என்று அழுகிறாளே!!!!

 

ஓக்கே ஸார், அவங்க விருப்பத்தை தான் நிறைவேற்ற போறோம்னா அப்புறம் வெய்ட் தான பண்ணனும்…. ஒரு வருடம் செல்லட்டும் என்றும் முடிவெடுத்தனர்..

Leave a Reply

error: Content is protected !!