பூர்வ – ஜென்மம்
பூர்வ – ஜென்மம்
இருவரும் குளித்து தயாராகி வந்தனர். இட்லியும் ஆப்பமும் சிற்றுண்டியாக பரிமாறப்பட்டது. அதில் கிராமத்தின் மணமும் கிராம மக்களின் மனதும் உணர முடிந்தது இருவராலும். சாப்பிட்டு முடித்து நன்றி சொல்லிவிட்டு கிளம்பினர்.
இவர்கள் இங்கு வந்திருப்பது ஆர்கானிக் விவசாயத்தின் அவசியத்தையும் அதை சார்ந்து இருக்கும் சிறு குறு தொழில்களில் உள்ள வேலைவாய்ப்புகளையும் பற்றிய ஒரு documentary பிலிம் எடுப்பதற்காக.
ஊர்தலைவரின் வேண்டுகோளிற்கிணங்க Mr .ரகுராமன் இவர்களை அனுப்பியுள்ளார். அலுவலக பணியில் இடைவெளி வரும்போது இவர்களின் ஜௌர்னலிசம் படிப்பிற்கான தன்னாலான முயற்சிகளை செய்வார்.
ரித்திகா, கோபி யை அழைத்து செல்ல மாட்டு வண்டியை அனுப்பி இருந்தார்கள்.
ஆர்கானிக் பார்ம் இவர்கள் எதிர்பார்த்ததை விட அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. ஊர் தலைவர், கூட்டு விவசாயத்தின் மேன்மையையும், ஆர்கானிக் முறையில் பயிரிடவேண்டிய அவசியத்தையும் , அதற்கு தேவையான உரம் தயாரிப்பு, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தார். அடுத்ததாக விவசாயத்தை சார்ந்துள்ள தொழில்கள் பற்றியும் அதை வெற்றிகரமாக எப்படி நடத்த முடியும் என்பதை எடுத்துரைத்தார். இவர்களுக்கே இவரிடம் இவ்வளவு விடயங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. Chief சொன்னார் என்பதற்காகதான் இதில் ஈடுபட்டனர். ஊர் தலைவர் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது.
மேலும் இரண்டு நாட்கள் தங்கி குறும்படத்திற்கான போட்டோக்களையும், இன்னபிற தேவைகளையும் சேகரித்தபிறகு சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாயினர்.
விடைபெற வேண்டி ஊர் தலைவரை பார்க்க சென்றனர். கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டு கிளம்ப அவர் இன்னும் இரண்டு நாட்கள் தங்கி செல்லும்படி கேட்டார். காரணம் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் நூலக திறப்பு விழா மற்றும் சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா.
இருவருக்கும் மறுக்க இயலவில்லை. அதன்பிறகு கொஞ்ச நேரம் தனக்கும் இவர்களுடைய chief கும் இடையிலான நட்பு மற்றும் ராணுவத்தில் இருக்கும்போது ஏற்பட்ட சில சுவாரஸ்யமான சம்பவங்களை பேசி கொண்டிருந்தனர். அந்த இரண்டு நாட்களுக்குள் ஊரை சுற்றியுள்ள, பார்க்க வேண்டிய இடங்களுக்கு சென்று வந்தனர். அனைத்து ஏற்பாடும் ஊர்தலைவருடையது. மலை மேல் இருக்கும் கோவில் அதன் பக்கத்தில் இருக்கும் அருவி, பழத்தோட்டம். இவர்கள் இருவருக்குமே மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.
திறப்பு விழா நாள், ஊர் மக்கள் அனைவரையும் வந்திருந்தனர். இன்னும் சற்று நேரத்தில் முக்கிய பிரமுகர் வந்துவிடுவார் என்று பேசிக்கொண்டனர். இவர்கள் இருவரும் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இரண்டாவது வரிசையில் அமர்ந்தனர்.
சிறிது நேரத்தில் கார் வரும் ஓசை கேட்டு ஊர் மக்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அனைவருக்கும் வணக்கம் கூறிக்கொண்டே மேடை மீது ஏறிக்கொண்டிருந்தான் தனஞ்செயன்.
தனஞ்செயன் வளர்ந்து வரும் ஒரு அரசியல்வாதி. மேடையில் ஏறி நின்று ஒரு முறை மக்கள் அனைவரையும் ஒரு நோட்டம் விட்டான். இது அரசியலில் முதல் பாடம்.
Rithika வை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை.
Thodarum…2