ரௌத்திரமாய் ரகசியமாய்-18
அவர்கள் வழக்கமாக செல்லும் காஃபி ஷாப் அது. தாமிராவுக்கு எதிரே அமர்ந்திருந்தான் ரகு. அவளது கண்கள் வெகுவாக கலங்கியிருந்தன. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் ருத்ரனை திருமணம் செய்த செய்தி அவன் தலையில் இடியை இறக்க, உடைந்து போனான் அவன். அமெரிக்க பயணத்தையும் தள்ளிப் போட்டான்.
தாமிரா ருத்ரனை காதலித்த விடயம் சிந்துவின் மூலமாக அறிந்தவன் மனம் அடைந்த வேதனையை அவன் மட்டுமே அறிவான். ஆனாலும் தாமிரா இப்படி செய்யக் கூடியவள் அல்ல என்பதும் அவன் மனம் அறிந்த உண்மை. அப்படியிருக்க அவள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறாள் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும்?
அவனுள் இந்தக் கேள்வி எழாமல் இல்லை.
தாமிராவை பற்றி நன்கு அறிந்தவன் அவன். அவன் அறிந்த தாமிரா இதுவல்ல. தாமிராவுக்காக சிந்துவிடம் கூட சண்டையிட்டான்.
“ரகு உன்னை அர்ஜென்ட்டா மீட் பண்ணனும்.”
அவளது எதிர்பாராத அழைப்பில் என்ன? ஏது? என்று கூட விசாரிக்காமல் வந்து விட்டான். இப்போது அவள் முன் அமர்ந்திருக்கிறான்.
“சொல்லு தாமிரா? என்னை வர சொல்லிட்டு பேசாம இருந்தா எப்படி?” வேறு எதையும் பற்றி கேட்டு அவளை வருத்த விரும்பாதவனாய் சாதாரணமாக கேட்டான்.
அவன் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல், நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ என்னை நம்புறியா ரகு?”
“உன்னை நம்புறேன். இப்போ மட்டும் இல்லை எப்பவுமே உன்னை நம்புவேன்” யோசிக்கவேயில்லை. பட்டென்று அவனிடமிருந்து வந்தது அந்த பதில்.
அந்த பதிலில் பெரிதாக அதிர்ந்தாள் அவள். அவளது குடும்பத்தினர், சிந்து உட்பட யாருமே அவளை நம்பவில்லை.
இத்தனைக்கும் அவனது மனதை நோகடித்தவள் அவள். அப்படியிருந்தும் அவனுக்கு அவள் மீது கோபமோ வெறுப்போ இல்லை.
எப்படி இவனால் இன்னும் தன்னை நம்ப முடிகிறது? வியப்புடன் அவனை பார்த்தாள்.
“ஐ ஆம் சாரி ரகு”
“எதுக்கு?”
“ஃபார் எவ்ரித்திங்” அவள் கூறிக் கொண்டிருந்த நேரம் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.
“தாமிரா…”
அவள் பின்னால் கேட்டது அவன் குரல். அவளது கணவன் ருத்ரனது குரல் அது. அத்தனை ஆளுமையான குரல் அது. முதல் முறையாக அவள் பெயர் கூறி அழைக்கிறான்.
சட்டென திரும்பியவள் எழுந்து நிற்க, அவளது இதயம் தாறுமாறாக துடித்தது. மூச்சு விடக் கூட பயந்தவளாக அப்படியே நின்றிருந்தாள். அவனது எச்சரிக்கையையும் மீறி நடந்து கொண்டது, இப்போது அவளுள் பயத்தை வரவழைக்க, அவளை நெருங்கி வந்தவனையே மிரட்சியுடன் பார்த்திருந்தாள்.
அவள் எழுந்ததுமே, ரகுவும் ருத்ரனை சரியாக அடையாளம் கண்டு கொண்டு எழுந்து நின்றான். அங்கிருந்த ரகுவை அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
அவளை தோளோடு அணைத்தான். இப்போது அவனது பார்வை ரகுவை துளைத்தெடுக்க, யோசனை செய்வது போல நெற்றியை ஒற்றை விரலால் தடவிய வண்ணம்,
“ரகு ரைட்?” என்றான்.
“ஆமா… நீங்க?”
தாமிராவின் தோள்மீது உரிமையோடு கை போட்டு இருந்ததை வைத்தே வந்தவன் யார் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது.
அன்று போல் இன்றும் அடித்து விடுவானோ? தாமிராவுக்குத் தான் உள்ளே உதறல் எடுத்தது.
“தாமிராவோட ஹஸ்பன்ட்” கணீரென ஒலித்தது அவன் குரல்.
“இவ என்னோட காதல் மனைவி. உங்க கிட்ட கூட சொல்ல முடியாம போயிடுச்சுனு என் வொய்ப் ரொம்ப வொர்ரி பண்ணிட்டு இருந்தா. அப்படி தானே தாமிரா?” அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை கட்டுப்படுத்த, அவளும் தலையாட்டினாள்.
அவனுக்கு வலித்தது. வலியென்றால் சாதாரண வலியல்ல. மோசமான வலி. தாங்க முடியாத வலி. கண்களை மூடித் திறந்து தன்னை சமன் செய்தவன், ஒரு சின்ன சிரிப்போடு தலையசைத்தான். அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் நெஞ்செல்லாம் அடைத்தது.
“வீ ஆர் லீவிங்” என்றவன், தாமிராவின் பக்கம் திரும்பினான்.
“போகலாம்” உணர்ச்சியற்ற குரலில் ஆணையிட்டான்.
அவ்வளவுதான். அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்பாளா என்ன? அந்த நெருக்கம் அவள் இதயத்தில் பய சிலிர்ப்பை ஏற்படுத்த, எதற்காக ரகுவை சந்திக்க வந்தாளோ அந்த விடயத்தையும் கூறாமல் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
அவளது கைச்சந்தை அழுத்திப் பிடித்த விதத்திலேயே அவனது சீற்றத்தை உணர்ந்து கொண்டாள். அவளை இழுத்து வந்து காருக்குள் தள்ளி கதவை மூடி விட்டு, ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தான்.
***
கார் அவனது வீட்டை அடைந்ததும், அவளை அறைக்கு இழுத்துச் சென்று தள்ளி விட, மெத்தையில் தொப்பென்று விழுந்தாள்.
அறையை படாரென அடித்து மூடிய விதத்தில் அவள் உடல் துணுக்குற்றது. கண்களில் கோபக் கனலுடன் ‘தடதடவென’ அவளை நோக்கி வந்தவனை பார்த்தவள், இதயத்தை பயம் எனும் அரக்கன் சூழ்ந்து கொள்ள, விழிகள் மருள அப்படியே உறைந்து போய் இருந்தாள்.
“என் கட்டளையை மீறி அவனை மீட் பண்ணியிருக்க?” அவன் பார்வை அவளை துளைத்தெடுக்க, அவள் நெஞ்சுக்குள் பிசைந்தது.
“ஃப்ராம் நவ் ஆன் என் பார்வையும் என் மூச்சுக்காற்றும் மட்டும் தான் உன் மேல இருக்கனும். டிட் யூ ஹியர் மீ?” கண்களை உருட்டி அடிக்குரலில் உறுமினான்.
அவன் ஒரு நிலையில்லாமல் படபடத்தான். கோபத்தில் வெடித்தான். அவனது கால்களும் தடுமாறியது. தலையை கோதிக் கொண்டவன், உள்ளம் எரிமலையாய் தகித்தது.
“என் அனுமதியில்லாம நீ மூச்சுக் கூட விட முடியாது. நான் பேசக் கூடாதுன்னா நீ வாயைத் திறக்கக் கூடாது. டிட் யூ ஹியர் மீ?” அவன் முகத்தில் தெரிந்த குரூரத்தில், அவள் கண்கள் மிரண்டு விழித்தாள்.
“டிட் யூ ஹியர் மீ? கம் ஆன் ஸ்பீக்… ஸ்பீக் இஃப் ஐ டேர் டூ ஸ்பீக்…” உறுமியவன் அவனது ஜாக்கெட்டை கழற்றி, அவள் அமர்ந்திருந்த கட்டிலில் விசிறி அடித்தான். அதில் அவள் உடல் தூக்கிவாரிப் போட எழுந்து நின்றாள்.
கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. இமைகளை சிமிட்டி கண்ணீரை அடக்க முயன்றாள்.
“என்னை கேட்காம இந்த மூளை கூட யோசிக்க கூடாது. தேர் இஸ் நோ திங்கிங்.. ஐ வில் திங்க் இன்ஸ்டட் ஆஃப் யூ! காட் மீ?” அவள் தலையில் தன் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெறி பிடித்தவன் போல கத்தினான்.
அவனது கண்களில் தெரிந்த சீற்றத்தில், மூச்சு விடக் கூட பயந்தவளாக அப்படியே ஸ்தம்பித்து போனாள். அவள் கால்கள் மெல்ல தானாக பின்னோக்கி நகர்ந்தன.
ஒரு மனிதனை எந்தளவு கட்டுக்குள் வைத்திருப்பதென்ற வரைமுறை தெரியாதவனாய், மனித மனம் புரியாதவனாய், ஈவிரக்கமின்றி சைக்கோ போல் நடந்து கொள்ளும் அவன் மேல் மனதில் ஓரு வெறுப்பு படர ஆரம்பித்தது.
அவன் உதிர்த்த வார்த்தைகள் அவளை மேலும் கலவரப்படுத்தியது. ஒரு மனிதனை மனதளவு வதைக்கும்படியான பேச்சுக் கூட ஒரு வித வன்முறை தான். அவனது அடக்குமுறையில் அவளுக்கு சிறிதும் விருப்பமில்லை. கொடியவனிடம் சிக்கிய பிணைக்கைதியென தன்னை உணர்ந்தாள்.
“ஆர் யூ க்ரேசி? என்னை உயிரோட கொன்னுட்டு இருக்கீங்க. நான் என்ன உங்களுக்கு அடிமையா?” உதடுகள் படபடக்க கத்தினாள்.
“நீ என் வொய்ப்” அந்த அறையே அதிரக் கத்தியவன், அசுரத்தனமாக அவளை கட்டிலில் தள்ளி விட்டு தாடை இறுகப்பற்றி அழுத்தினான்.
கொடூர கொலைகாரனின் தீவிரத்துடன் துளைத்தது அவன் பார்வை. அவனுடைய சூடான மூச்சுக்காற்றின் வெப்பமும் கோபத் தகிப்பும் அவள் முகத்தில் வந்து மோத இதயத்துடிப்பு தடைப்பட்டது.
“நீ இப்போ தாமிரா ருத்ரதேவ். என் பேரை அசிங்கப்படுத்துற மாதிரியான எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன். நீ விரும்புறியோ இல்லையோ என் கூட தான் வாழ்ந்தாகனும். டிட் யூ அன்டர்ஸ்டேன்ட் மீ?”
அவள் தாடையில் அவன் கைகள் அழுத்தத்தை மேலும் அதிகரிக்க, அவளது மூச்சுக்குழல் இறுகியது. அவனது கொடூர பார்வையில், இதயம் அச்சத்தில் தடதடத்தது.
அவளுக்கு வலித்தது. அவனிடமிருந்து விடுபட துடித்தாள். திமிறினாள். அசைக்கக் கூட முடியவில்லை. அவன் பிடி உடும்புப் பிடி. அவனது முரட்டுத் தனத்தில் தாடை எலும்புகள் உடைந்து விடும் போல வலித்தது.
“வ…வலிக்குது” தாமிராவின் கண்ணீர் நிற்கவில்லை.
“பெயின் இஸ் குட். இந்த வலி என்னை ஏமாத்தனும்னு நெனக்கிற உன் எண்ணத்தை அடியோட ஒழிச்சிடனும்” என்றான் கடுமையாக.
கடவுளே! என்ன இது? அவனிடம் சிக்கி தினம் தினம் வதைபட வேண்டுமா? இதற்கு மேல் அவளால் முடியவில்லை. ராட்சசனாய் மாறியிருந்த அவனிடமிருந்து விடுபட வேறு வழி தெரியவில்லை.
அவளது முகம் மாறியது. அழுகை, பதற்றம், தவிப்பு, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து முகம் சிவந்து விட்டது. அவளது கைகள் தலையணைக்கடியில் ஊர்ந்து சென்றது. ஆவேசமாக மாறியவளது கையில் ஓர் குட்டிக் கத்தி முளைக்க, அந்தக் குட்டிக் கத்தி அவன் நெஞ்சுப் பக்கத்தை குத்திக் கீறியது.
“ஷ்ஷ்… ஆஆ…” கத்தினான்.
ஒவ்வொரு மனிதனுள்ளும் கறுப்பு மற்றும் வெள்ளை என இருபக்கங்கள் உண்டு. ஒருவன் எந்தளவு தன்னை நல்லவனாக உணர்கிறானோ அதேயளவு அவனுள் ஓர் அரக்க குணமும் இருக்கும். இது மனித மனத்தின் தன்மை.
ஒரு எறும்பைக் கூட கொல்ல முடியாத இளகிய மனம் படைத்தவராக நீங்கள் இருக்கலாம். அதுவே உங்களை எறும்புக் கூட்டமே கடிக்க வருவதை உணர்ந்தால் ஒன்று அந்த இடத்தை விட்டு விலகி விடுவோம் அல்லது அந்த கூட்டத்தையே அழித்து விடுவோம். சந்தர்ப்பங்களும் சூல்நிலைகளும் தான் ஒரு மனிதனை இப்பேர்பட்ட நிலைக்குத் தள்ளி விடுகிறது.
அந்த மாதிரியான மனநிலையில் தான் அவளது இந்த முடிவும் கூட. அவனிடமிருந்து விலகிட துடிக்கும் அவளால் முடியாமல் போகவே தன்னை காத்துக்கொள்ள அவனை தாக்கி விட துணிந்தாள்.
அவனது கைகள் தானாக தளர்நதன. வலியில் முகம் சுருக்கி, விலகி எழுந்தவன் கை தனது நெஞ்சுப் பக்கத்தை அழுத்திப் பிடித்தான்.
அவனது சட்டை கிழிந்து காயமேற்படுத்திய பகுதியிலிருந்து கசிந்த இரத்தத்தை கண்டவள் உள்ளம் துடித்தது. அவள் துணிந்து செய்த காரியம் இப்போது அவளுள் குற்றக் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
கடவுளே! அவள் வேண்டுமென்று இதைச் செய்யவில்லை. அவளது கையில் வழிந்த அவனது இரத்தத்தை கண்டு துடித்துப் போனாள் பெண்ணவள்.
அவனது உணர்ச்சியற்ற முகபாவம் அவளை வதைக்க, சட்டென எழுந்து அவனருகில் வந்தாள். அவளுக்குத் தெரியும் அந்த காயம் அத்தனை ஆழமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அது அவளேற்படுத்திய காயம்.
அவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் அப்போது மறந்து போனவளாய், கண்களில் கண்ணீர் உகுத்தது. அவள் ஒன்றும் அத்தனை கொடூரமானவள் இல்லையே. அவளையறியாமல் நடந்த செயலில் அவள் மனம் பதறித் துடித்தது.
ஒரு மனிதனை குத்திக் காயப்படுத்திடும் அளவு ராட்சசியாய் எப்படி மாறினோம்? நொடிப்பொழுதில் நிதானமிழந்து தான் செய்து விட்ட பிழையை உணர்ந்தாள்.
இதுவரை அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோபப்படவில்லை. கத்தவில்லை. அவன் முகத்திலும் பார்வையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. அவனது ஒரு கை நெஞ்சை பிடித்திருக்க உணர்ச்சியற்ற பார்வையை அவள் மீது செலுத்திக் கொண்டிருந்தான் அவ்வளவே.
திடீரென அவளை நெருங்கி, கத்தியை பிடித்திருந்த கையை பற்றி தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். தன் நெஞ்சுக்கருகே அவளது கையை வலுக்கட்டாயமாக கொண்டு சென்று,
“கமான் கொன்னுடு. என்னைக் கொன்னுடு” பற்கள் நறநறுக்க உறுமினான்.
“ஐயோ நிறுத்துங்க. என்ன பண்றீங்க? கையை விடுங்க” பதறினாள். அழுதாள்.
“என்னை கொல்லனும்னு தானே இந்த முயற்சியெல்லாம். டோன்ட் பீ அஃப்ரைட். கமான் கில் மீ ” கண்கள் இரண்டும் இரத்தமென சிவக்க, கத்தினான்.
அவன் சொன்னதும் கொன்று விட அவள் என்ன கொலைகாரியா? உணர்ச்சி வேகத்தில் அவளால் நேர்ந்த பிழையிது. கண்களில் நீர் திரையிட்டது. பதற்றம், தவிப்பு, அழுகை என ஏகப்பட்ட மனநிலைகள் மாறி மாறி அவளை சித்ரவதை செய்ததது.
“ப்ளீஸ்… ப்ளீஸ் கையை விடுங்க. தயவு செய்து விட்டுடுங்க” அவனிடமிருந்து கையை விலக்கிக் கொள்ள போராடி வலுக்கட்டாயமாக உருவி எடுத்து, கையிலிருந்த கத்தியை தரையில் விசிறி அடித்தாள்.
இரத்தம்! இரத்தம்!
அவள் கையில் அவனது இரத்தம். உடல் வெடவெடுத்து நடுங்கியது. உள்ளுக்குள் ஓ வென்ற ஓர் உணர்வு பொங்கிப் பெருகியது.
“என்னாச்சு? என்னை கொல்ல வேண்டாமா? அதுக்கு தானே இந்த கொலை முயற்சியெல்லாம்?” அதே தீவிரத்துடன் வினவினான்.
கொலை! அவளா?
“இல்லை… இல்லை… கொலைலாம் இல்லை. ஒரு நொடி என் மைன்ட் ப்ளாங்க் ஆகிருச்சு. எனக்கு என பண்றதுன்னே தெரியலை” அழுது கொண்டே கத்தினாள் அவள்.
“எக்ஸாக்ட்லி லைக் தட். எல்லாமே இப்படி தான் ஆரம்பிக்கும். என்ன நடக்குதுன்னு உன்னாலேயே புரிஞ்சுக்க முடியாது” அவளை துளைத்த அவன் பார்வையை அவள் கண்டுகொள்ளவில்லை.
அவள் கண்ணில் விழுந்ததெல்லாம் தன்னால் ஏற்படுத்தப்பட்ட காயம் மட்டுமே.
“காயம்… ப்ளீஸ் இதை அழுத்தி பிடிச்சிக்கோங்க.” அவனது கையை எடுத்து அதை அழுத்திப் பிடிக்குமாறு செய்தாள்.
இரத்தம் தோய்ந்த கையை பார்த்துக்கொண்டே குளியலறைக்குள் ஓடினாள். அங்கிருந்த வாஷ் பேசினில் பரபரவென்று கையை தேய்த்து கழுவி விட்டு வெளியே வர, அதே உணர்ச்சியற்ற பார்வையுடன் அவன் அமர்ந்திருந்தான்.
அவசர அவசரமாக அறையிலிருந்த ஃபர்ஸ் எயிட் பாக்ஸை தேடி எடுத்து ஓடி வந்தாள். அவளுக்கு அவனது காயத்தை சரி செய்து விடும் எண்ணம் மாத்திரமே. அழுகையுடனே அவன் காயத்திற்கு மருந்திட ஆரம்பித்தாள்.
“எப்படியிருந்தது?” சம்மந்தமே இல்லாமல் திடீரென அவன் கேட்ட கேள்வியில் புரியாமல் அவனை பார்த்தாள்.
“முதல் கொலை முயற்சி எப்படி இருந்தது?”
கொலை முயற்சி! பதறிப் போனாள்.
“இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா நீயும் ஒரு கொலைகாரி”
“நோ… அப்படி இல்லை. நான் வேணும்னு பண்ணலை. தெரியாம…” பதறித் திணறினாள் அவள்.
“யூ அடாப்டட் வெரி க்விக்லி. நீயும் எங்களில் ஒருத்தியாகிட்ட. யூ வர் அபௌட் டு பிகம் அ கில்லர்” வன்மத்துடன் ஒலித்த அவன் குரலில் இதயம் தூக்கிவாரிப் போட்டது.
திரும்பத் திரும்ப அவளை கொலைகாரி என சுட்டிக்காட்டி பேசப் பேச அவளும் கொதித்துப் போனாள். இவனும் நானும் ஒன்றா? சளைக்காமல் அவனது வன்மம் நிறைந்த பார்வையை தாங்கி நின்றாள்.
“உங்களை கொல்லனும்னு நெனச்சிருந்தா ஒரே தடவையில என்னால கொல்ல முடியும். உங்களை தடுக்க வேற வழி தெரியாம தான் ஆபத்து இல்லாத பகுதியா பார்த்து லேசா கீறி விட்டேன்.
கரெக்ட். நீங்க எனக்கு பண்ணின அநியாயத்திற்கெல்லாம் சேர்த்து உங்களை கொன்னிருக்கனும். அந்தக் கத்தியை கொஞ்சம் தள்ளி உள்ளே இறக்கியிருக்கனும். பட் ஐ டின்ட்” ஆவேசமாய் வெடித்தாள்.
“யெஸ் பெயின் இஸ் குட் இந்த காயத்தோட வலி உங்களுக்கு எப்பவும் மறக்கக்கூடாது. இந்தாங்க பிடிங்க. உங்க காயத்தை நீங்களே பார்த்துக்கோங்க. இந்த காயமெல்லாம் உங்களுக்கு புதுசு இல்லையே” படபடவென பொறிந்தவள், அவன் கைகளில் திணித்து விட்டுச் செல்ல முயன்றவளை, அவளது முன்னங்கையை பற்றி இழுத்து அவனோடு அணைத்தான்.
அவள் காதோரம் குணிந்து, “மறுப்பு எந்தவொரு விஷயத்துக்கும் தீர்வாகாது. அதுவும் என்கிட்ட… சிலவேளை உன் விருப்பங்கள் கூட என்னை மீறி நடக்காது. நான் நினைச்சா உன்னை என்ன வேணும்னாலும் பண்ணலாம்” கிசுகிசுத்தான். அவன் உதடுகள் காது மடலை தீண்ட, அவளுக்குப் புரிந்து விட்டது.
உள்ளுக்குள் பரவிய ஜிவ்வென்ற பயசிலிர்ப்பில் இதயம் பரபரத்தது. தன் ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்று திரட்டி அவன் அணைப்பிலிருந்து மீண்டாள்.
தன் இயலாமையில் கண்ணீர் வெடிக்க, கலங்கிய விழித்திரைகளுடன் அவனை பார்த்தாள்.
பெண்ணவளின் கண்ணீர் அவளை சற்று உலுக்க, மென்மையாக,
“ஓகே… பயப்படாதே. ஐ வில் நெவர் ஹார்ம் யூ. நீ எனக்கு பிடிக்காததை செய்யாத வரைக்கும்” என்றவன்,
“நீ என் மனைவி. என் பார்வையும் மூச்சுக்காற்றும் மட்டும் தான் உன் மேல விழனும்” அறையை விட்டும் வெளியேறினான்.
அவளால் அவன் செய்கைகளுக்கான விளக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
அவன் அறையை விட்டும் நீங்கிய கணம் ஆரம்பித்த அழுகை தான் இப்போது வரை ஓய்ந்த பாடில்லை. அழுததில் கண்கள் சிவந்து செந்நிறமாகியிருந்தன. மனதில் ஓர் உறுதி தோன்ற தன் கன்னங்களில் வழிந்த கண்ணீர்க் கோடுகளை, உள்ளங்கையால் அழுந்த துடைத்துக் கொண்டாள்.
அடுத்த நொடியே, குளியலறையை நோக்கி நடந்தாள். முகத்தை தண்ணீரில் அடித்துக் கழுவினாள். முகத்தையும் துடைத்து, கூந்தலையும் வாரி சரி செய்த வண்ணம் மெல்ல மாடிப்படியிறங்கி கீழே வரவேற்பறையை அடைந்தாள்.
நல்ல வேளை யாரும் இருக்கவில்லை. அங்கு வேலை செய்யும் ஒரு சில வேலைக்காரர்களை தவிர யாரும் இல்லை. அந்த வீட்டுக்கு வெளியேயும் பார்வையை வீசி ஆராய்ந்து, சில விஷயங்களை குறித்துக் கொண்டாள்.
மீண்டும் அறைக்கே வந்தாள். தனக்கு தேவையான ஆவணங்களை எடுத்து கைப்பையில் போட்டுக் கொண்டாள். அவன் தந்த செல்போனை அங்கேயே வைத்து விட்டாள்.
திடீரென மின்சாரம் தடைபட்டது. அதுவும் அவளுக்கு வசதியாகி போய் விட, பெரும் நிம்மதியாக உணர்ந்தாள். யாரும் அறைக்கு வருமுன் அறையை விட்டு கீழே வந்தாள். சாமார்த்தியமாக செயற்பட்டு, அந்த வீட்டை விட்டே வெளியேற துணிந்தவள் கால்கள் ருத்ரனின் நினைப்பில் ஒரு கணம் தடைபட்டாலும், முயன்று வரவழைத்த தைரியத்துடன் யார் கண்ணிலும் படாத வண்ணம் வெளியேறினாள்.
***
கண்களில் கண்ணீர் கோர்க்க, கீழிமைகளும், மூக்குநுணியும் துடித்து சிவக்க,
“ஏன்? எதுக்குன்னு தெரியாம நான் வாழ்ந்த அந்த வாழ்க்கை எனக்கு பெரிய தண்டனை ரகு. இப்போ வரை என் மனசுல அந்த வலி இருக்கு. அப்பா, அம்மா, தருண், அக்ஷரானு சந்தோஷமா இருந்த குடும்பத்துல இப்போ நானே வேற்று ஆள் மாதிரி ஃபீல் பண்றேன்” கூறினாள்.
அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்று கைகள் இரண்டும் அனிச்சை செயலாய் பரபரத்தாலும், இரு கைமுஷ்டியையும் மடக்கி கைகளில் நரம்போட நின்றிருந்தான் ரகு.
“அப்பா, தருண் ஏன் சிந்து உட்பட யாருமே என்னை நம்பலை ரகு. அதைவிட அப்பாக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருக்காரு தெரிஞ்சதுக்கு அப்புறமும் என்னால அவரை போய் பார்க்க முடியலை. அதனால தினமும் நான் பட்ட வேதனை இருக்கே… என் நெஞ்செல்லாம் அடைச்சு… மூச்சு முட்டி…” அதற்கு மேலும் முடியாமல் உடைந்து அழ, அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சட்டென ஆறுதலாய் அணைத்துக் கொண்டான்.
அந்த அணைப்பு அவளது புண்பட்ட மனதுக்கு தேவைப்பட்டது.
ரகுவின் மனம் அடைந்த வேதனையும் அவ்வாறே. தன் தோழியை அழ வைத்த ருதரனின் மேல் பொல்லாக் கோபம் தோன்றியது. அதைவிட மீண்டும் அவனிடமே கோர்த்து விடும் தாமிராவின் தந்தை மேல் பலமடங்கு கோபம். ஆனாலும் இதில் ஏதோ ஒன்று இருப்பதாக அவன் மனம் உறுத்தியது.
அவள் யாரை மணந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவன் எண்ணம். ருத்ரனால் தன் தோழி கஷ்டப்பட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெள்ளத்தெளிவாக புரிந்தது. அவளை புரிந்து கொள்ளாத உறவுகள் மீதும் சினம் பீறிட்டது.
மெல்லிய மலரை போன்ற இதயத்தை கொண்டவள் இறுகிப் போனதன் காரணம் பிடிபட அவனும் வருந்தினான்.
அன்று அவனும் அப்படிப் போயிருக்கக் கூடாது. அவளாக விரும்பி ஏற்றுக்கொண்ட வாழ்க்கை இது எனவே அவள் சந்தோஷமாக தான் இருப்பாள் என்று நம்பியது எத்தனை பெரும் பிழை என்பதை அவன் மனம் இப்போது உணர்ந்தது.
இதற்கு மேலும் அவள் உடைந்து போக விடக் கூடாது. தளர்ந்து, சோர்ந்து, பொலிவிழந்து போன தாமிராவின் முகத்தில் மின்னிடும் குறும்பை மீட்டிட மனம் துடித்தது. அவளை எப்படியேனும் பழைய தாமிராவாக மாற்றிடும் எண்ணமே இப்போதைக்கு அதிமுக்கியமாகப்பட்டது அந்த ஆறுயிர் தோழனுக்கு.
****