பூவுக்குள் பூகம்பம் 0

poovukkulpogambam copy

பூவுக்குள் பூகம்பம் 0

பூவுக்குள் பூகம்பம் – 0

நிறைமாத கர்ப்பிணியான வசுமதி வலியெடுக்கத் துவங்கியதாக தனது தாயை அழைத்துக் கூறியதும் நேரத்தைப் பார்த்தார் பிரபாவதி. 

மணி இரவு பத்து ஐந்து!

கணவனிடம் முதலில் விசயத்தைப் பகிர்ந்தவர் தனது கையில் இருந்த பேத்தியை அதாவது வசுமதியின் மகளை கணவரிடம் கொடுத்துவிட்டு… தனது அறையில் ஓய்வாக இருந்த மாமியாரை நாடி வேகமாகச் சென்றார்.

அவரின் அறைக்குள் சென்றவர், “அத்தை! மதிக்கு வலியெடுத்துருச்சுங்கறா… ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிரவா?” மாமியாரின் அனுபவத்தை மதித்துத்தான் அந்தக் கேள்வி.

வேதாவும் தாமதிக்காது சுறுசுறுப்பாக எழுந்து, “இந்த நேரத்திலயா வலி வந்துச்சு…!” அலுப்பாகக் கேட்டவாறே…

“கடவுளே…” தலைக்குமேல் கைகளை உயர்த்தி மேலே நோக்கிக் கும்பிட்டவர் மனதிற்குள், ‘எப்ப கர்ப்ப வாய் திறந்தாலும் தாயும், சேயும் எந்தக் குறையுமில்லாம… நல்லபடியா இருக்க அருள் செய் இறைவா!’ என நினைத்தபடியே மருமகளோடு உரையாடியவாறே அறையை விட்டு வெளியே வந்தார் வேதா.

வசுமதியின் அறையை நோக்கி அந்த தள்ளாத வயதிலும் விரைவாக வந்த வேதா மருமகளிடம், “விட்டு விட்டு வலி வருதா? இல்லை தொடர்ச்சியா வலிக்குதானு பாத்துக்கிட்டு அப்புறம் ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போகலாம்.

நீ அவளுக்கு வேணுங்கற எல்லாத்தையும் ஏதுவா… எடுத்து வைய்யி! நாம் போயி அவளைப் பாக்கறேன்” என்றார்.

“சரி அத்தை!” ஆமோதித்த வசுமதியின் தாய் பிரபாவதி மகளின் பிரசவத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து வைப்பதற்காக அங்கிருந்து அகன்றார்.

பேத்தியின் பொறுப்பை தனதாக எடுத்துக் கொண்டவர் அவளிடம் அவளின் வலி சார்ந்த உடல் நிலைகளை கருத்தாகக் கேட்டறிவதில் மும்முரமானார்.

“சீரகத் தண்ணி ஒரு வா(வாய்) விரசாக்(விரைவாக) கொண்டு வந்து குடு பிரபா!” மாமியாரின் உரத்த குரலில் வந்த உத்தரவை ஏற்று… பிரபாவதி தனது பணிகளுக்கிடையே அதனையும் கொண்டு வந்து மகள் வசுமதியிடம் தந்தார்.

மருமகள் கொணர்ந்ததை தனது கையில் வாங்கிக்கொண்டவர் பேத்தியிடம் கொடுத்து, “இந்தா இதைக் குடி முதல்ல!  அப்புறம் பாட்டியப் புடிச்சிட்டு கொஞ்ச நேரம் நட!” கட்டளையாகவே கூறினார் வேதா.

பாட்டியின் பேச்சைத் தட்டாமல் வேறு வழியின்றி குடித்து முடித்த வசுமதி எழ சிரமப்பட… அந்த வயதிலும் பேத்தியை வாகாக அணைத்து தூக்கி அலுங்காமல் நிறுத்தியவர்… ஆதரவாக பேத்தியின் கையைப் பிடித்தபடியே மெதுவாக நடக்க வைத்தார்.

வேதாவிற்கு ஏனோ அப்போது வசுமதி குழந்தையாக இருந்தபோது நடக்க பழக்கியது நினைவில் வந்து போனது.

தற்போதுதான் வசுமதி தன் கைபிடித்து நடக்கப் பழகியது போலிருந்தது.  அதற்குள் வசு பெரியவளாகி திருமணம் நடந்து தற்போது இரண்டாவது குழந்தை! இப்படி நினைத்தவருக்கு காலம் செல்லும் வேகம் உரைத்தது.

வலி தாளாமல் பாட்டியின் சொற்படி அந்த நேரத்திலும் வயிற்றில் கைவைத்தபடியே எட்டுக்களை மெதுவாக வைத்து மூச்சிற்கே சிரமப்பட்டவாறு நடக்கத் துவங்கிய வசுமதி, “பாட்டீ! சுருக் சுருக்குனு விட்டு விட்டு வலிக்குது! என்னால முடியலை!” ஆயாச உணர்வோடு தலையை எந்தப் பகுதியிலும் நிலையாக வைக்க முடியாமல் அங்கிங்கு அசைத்தபடியே பாட்டியிடம் மெதுவாக உரைத்தாள் வசுமதி.

வசுமதியோடு மெதுவான எட்டுக்களை வைத்தபடி பேத்தியை கவனித்தவாறு தனக்குள் ‘இது புள்ளை வலி இல்லை!  பயபுள்ளைக்கு இன்னும் அது விளங்காம இருக்கு!’ நினைத்தவர், “புள்ளைப் பெத்தவளுக்கு இன்னும் எது எந்த வலின்னு கண்டு பிடிக்கத் தெரியலையேடாம்மா…” பேத்தியின் நிலையைக் கணித்து வருத்தமாகக் கூறிவிட்டு,

“சூட்டு வலின்னா அவ்ளோ தூரம் போறது வேஸ்ட்டு.  அதுக்குத்தான் இந்த கசாயத்தைக் குடிக்கச் சொன்னேன். 

இன்னும் அரைமணித் தேரத்தில(நேரத்தில) இது என்ன வலின்னு தெரிஞ்சுரும்.  அதனால கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துட்டு… ஆசுபத்திரிக்குப் போவலாமா வேணாமான்னு முடிவெடுப்போம்” பேத்திக்கு ஆறுதல் மொழி சொன்னபடியே,

“ஏலே கதிரா!” மகனை அழைத்தவர் தன் முன் வந்து நின்ற மகனை உணர்ந்தாலும் பேத்தியிடம் கவனமாக இருந்தபடியே, “ஆசுபத்திரிக்கு இவளைக் கூட்டிட்டுப் போயிட்டா மறக்காம இவ புருசன் வீட்டு ஆளுகளைக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லிரு!” என்றவர்,

“பதட்டத்துல அதுக சொல்லாம விட்டுருக்குங்கனு புரிஞ்சிக்கற புத்தியில்லாதவ உம்மாமியா! நேரங்காலம் புரியாம வந்து… சாமியாடுவா…! இருக்கற சோலியில இவளை மலையிறக்கற வேலையெல்லாம் இப்ப நம்மாள பாக்க முடியாதுப்பா…!” தனக்குத்தானே மெதுவாகப் பேசியவரை, நடையை நிறுத்திவிட்டு வசுமதி முறைத்துப் பார்த்தாள்.

பேத்தியின் நடை நின்றதும், மதிக்கு வேறு ஏதேனும் பிரச்சனையோ என்று எண்ணி அவசரமாக வசுமதியின் முகத்தைப் பதற்றத்தோடு ஏறெடுத்துப் பார்த்தவர்… அவளின் முறைப்பில் விசயம் என்னவென்று புரிபட… பதறுவதற்கு விசயம் ஒன்றுமில்லை எனும் நிம்மதியில் பேத்தியைப் பார்த்து முறுவலித்தார் வேதா.

முறுவலிப்பை முடிவுக்கு கொண்டு வராமல் நீட்டித்தபடியே பேத்தியிடம், “உங்க ஆளுகளை நான் ஒன்னும் சொல்லலை ஆத்தா. நீ ஏன் இந்த அவதாரம் எடுக்கற?” சடைத்துக் கொண்டார்.

வசு, “உங்களுக்கு எங்க வீட்டாளுங்களை குறை சொல்லலைன்னா தூக்கமே வராதா பாட்டீ!”

“அடிப்போடீ…! தொட்டதுக்கெல்லாம் நொட்டை சொல்றதுகளா அந்த சனங்க இருக்குதுங்க… சின்னவ மட்டுந்தான் கொஞ்சம் நியாயவாதியா இருப்பா! மத்தது எல்லாம் மற கழண்டதுங்க! அந்த உருப்படிகளுக்கு ஏத்துக்கிட்டு எங்கிட்ட என்னா எகிறு எகிறுர…

உனக்கு… இன்னும் நல்ல சனங்களா அமைஞ்சிருந்தா… கையிலயே புடிச்சிருக்க முடியாது!” பேத்தியிடம் தனது எண்ணத்தை வெளியிட்டபடியே வலியின் சுவடை பேத்தியின் முகத்தில் தன் கண் கொண்டு அளந்தார்.

வசுமதியின் தந்தை கதிரவன் மகளின் மூத்த குழந்தையை கையில் தூக்கியவாறு மகளின் முகமாறுதல்களைக் கவனித்தபடி, தாயின் சொல்லை மீறவும் முடியாமல் மகளின் வேதனை தாங்கிய முகத்தைக் காணவும் சகிக்காமல், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தற்போதாவது யாரேனும் கூறுவார்களா என மனைவியையும் தாயையும் மாறி மாறிப் பார்ப்பதும், அவர்கள் இருவரும் அவரைக் கண்டுகொள்ளாது அவரவர் வேலையில் கருத்தாக இருப்பதைப் பார்த்த பிறகு வெளியே சென்று சில நொடிகள் நின்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்குள் வந்து பழையபடி பார்வையைச் செலுத்திவிட்டு செல்வதுமாக இருந்தார்.

நிமிடங்கள் வருசங்களான உணர்வுதான் கதிரவனுக்கும், அவரின் மகளான வசுமதிக்கும்.

மதி கசாயம் குடித்து அரை மணித் தியாலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் அமரப் போவதாகக் கூறினாலும் விடாமல் நடக்க வைத்தார் வேதா.

“காத்தாட இப்படி நாலு எட்டு நட.  அப்பத்தான் நல்லது” பேத்திக்கு உரைத்தார்.

அந்நேரத்தில் வாசலில் வந்து நின்ற டூவீலரில் இருந்து இறங்கிவந்த செழியனைக் கண்டதும், கதிரவன் கையில் இருந்த மூன்றேகால் வயது பெண்குழந்தை கனி சௌமியா, “ப்பா… ப்பா!” அதுவரை தாயின் செயலில் பதறி தாத்தாவின் கைகளுக்குள் ஒடுங்கி அமைதியாக இருந்தவள் தந்தையைக் கண்டதும் கைகொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

பேத்தியின் மகிழ்ச்சி கதிரவனுக்குள்ளும் மனம் லேசான உணர்வைத் தந்து சற்று தளர்த்தியது.

வந்தவன் வாயிலில் தன்னை வரவேற்ற மாமனாரின் பாசிபோல லேசாக கவலை படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு, “என்ன மாமா?  ஏதோ மாதிரி இருக்கீங்க…?” வெளியில் நின்றபடியே தன்னை நோக்கித் தாவி வந்த மகளைக் கையில் வாங்கியபடியே வீட்டிற்குள் பார்வையை செலுத்தியவாறு வசுமதி கண்களுக்குத் தென்படுகிறாளா எனத் தேடியவாறே கேட்டான் செழியன்.

“மதிக்கு வலியெடுத்துருச்சுன்னு சொல்லுச்சு மாப்பிள்ளை! அதான்… இப்போ கிளம்பலாமா இல்லை நாளைக்கு கூட்டிட்டுப் போகலாமான்னு அம்மா சொல்றதுக்கு காத்திட்டு இருக்கோம்” மெல்லிய குரலில் பகிர, அவரின் வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த அவரின் பதற்றம் அவனையும் லேசாக தொற்றிக்கொண்டிருந்தது.

“டாக்டர் சொன்ன தேதிக்கு இன்னும் மூனு நாளு முழுசா இருக்கே மாமா?”

“ஆனா என்னானு தெரியலை.  வலியெடுத்திருச்சுன்னு சொல்லுது” கவலையாக உரைத்தார் கதிரவன்.

“என்னானு போயிப் பாக்கறேன் மாமா” அவசரமாக உள்ளே நுழைந்தான் செழியன்.

மருமகனின் வரவில், ‘பக்கத்துல இப்ப மாப்பிள்ளையும் வந்துட்டதால எதுன்னாலும் பாத்துக்கலாம்’ மனதோடு கதிரவனுக்கு சற்று தெம்பு மீண்டு வந்திருக்க, நடப்பதை அமைதியாக பார்த்தபடி வெளியில் கிடந்த ஈசி சேரில் சென்று நிம்மதியான உணர்வோடு அமர்ந்தார்.

அதுவரை நடந்தபடி இருந்த வசுமதிக்கு வலி சற்று மட்டுப்பட்டிருந்தது.  முகம் சற்று தெளிந்திருந்ததைக் கண்ட வேதா, “இது சூட்டு வலிதான்.  ஆனா வயிறு நல்லா கீழ இறங்கியிருக்கறதப் பாக்கும்போது அவங்க சொன்ன தேதிக்குள்ள புள்ளை பிறந்துரும்னு தோணுது” தனது அனுபவத்தை பேத்தியிடம் பகிர்ந்தபடியே உடன் நடந்தார்.

பாட்டியின் கைப்பிடிக்குள் அதுவரை தனது கையை தந்திருந்த வசுமதி கணவனின் வருகையை உணர்ந்ததும் நடையை நிறுத்திவிட்டு, வந்தது கணவன்தானா என்பதைக் கண்டு கொள்ள எண்ணி, பேச்சு வந்த திசையைக் கூர்ந்து கவனிக்கலானாள்.

வந்தது செழியன்தான் என்பது தீர்மானமாக உணர்ந்த தருணம், இருந்த வலியும் நன்கு குறைந்திருக்க… மதியின் முகம் பௌர்ணமி நிலவால் மேகங்களில்லாது காணப்படும் தெளிவான வானம்போல மாறியிருந்தது.

பாட்டி தனது கைப்பிடியின் இறுக்கத்தை தளர்த்த, அவரைப் புன்முறுவலோடு பார்த்தபடியே தன்னை நோக்கி வரும் கணவனைக் காணத் திரும்பினாள் மதி.

அனைத்தையும் பார்த்தபடியே நின்ற பாட்டி, “வலி குறைஞ்ச மாதிரி இருந்தா போயி கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு. 

இப்ப கிடைச்ச நேரத்தில ரெஸ்ட் எடுத்திக்கிட்டாதான் உனக்கு நல்லது. புள்ளை பிறக்கற வரைதான் நீ ஃப்ரீ. அதனால திரும்பவும் வலி வர்றவரை அலட்டிக்காமப் போயி நல்லாத் தூங்கி எந்திரி… உங்காத்தா அவ மருமகனுக்கு வேணுங்கறதைப் பாப்பா.. நீ போயி… படு!” என்றபடியே,

தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த பேத்தியின் கணவனை, “என்னப்பா இந்த நேரத்துல…!” என்றார்.

அதிலேயே அவனது வரவை தற்போது அவர் விரும்பவில்லை என்பது செழியனுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்குமே புரிந்தது.

பிரபாவதிக்கு அப்படிச் சொல்ல இப்போது மட்டுமல்ல, எப்போதுமே முடியாது.  கதிரவனுக்கு, ‘சும்மா அவரு பொண்டாட்டி, புள்ளையப் பாக்க வந்திருக்காரு.  எதுக்கு இந்த அம்மா இப்டிக் கேக்கறாங்க’ என்று தோன்றினாலும் தாயை எதிர்த்தோ, மறுத்தோ பேசிப் பழக்கமில்லாததால் அமைதி காத்தார்.

“வேல முடிய லேட்டாயிருச்சு அம்மாச்சி.  இனி இராமேஸ்வரம் போறது சரியாப்படலை.  அதான் இங்கனையே இன்னைக்குத் தங்கிரலாம்னு வந்தேன்” விசயத்தை உள்ளவாறே பகிர்ந்து கொண்டான் செழியன்.

இராமநாதபுரத்தில் உள்ள பெயிண்ட் கடையொன்றில் உத்தியோக பங்குதாரராக(Working Partner) பணிபுரிந்து வருகிறான்.

பேத்திக்கு வலி நன்கு குறைந்ததை உறுதி செய்து கொண்டாலும், “கவனமா இரு மதி.  எப்போனாலும் சட்டுனு சொல்லிரணும்” பேத்தியிடம் கடுமையாகவே உரைத்தார் வேதா.

தலையை ஆட்டி ஆமோதித்தவளிடம், “கருத்தா இருந்துக்கோடீ!  ஆம்பிளை ஆயிரம் ஆசை காமிப்பான்.  ஆனா வலி உனக்குத்தான். 

இப்ப இங்க எதுக்கு வந்திருக்கான்னு உனக்கும் தெரிஞ்சிருக்கும்! புத்திய இந்த நேரம் கடன் குடுத்துறாத!” மறைமுகமாக முணுமுணுப்பாய் பேத்தியிடம் பத்திரம் கூறிவிட்டு,

“தம்பி கைகால் அலசிட்டு சீக்கிரம் சாப்பிட வந்திருப்பா” செழியனைப் பார்த்துக் கூறியவர்,

அடுக்களையை நோக்கித் திரும்பி, “பிரபா! மதி வீட்டுக்காரருக்கு சாப்பாடு எடுத்து வைய்யி” கண்ணால் பேத்தியிடம் அறைக்குள் செல் என சாடை காட்டியபடியே அங்கிருந்து அகன்றார் வேதா.

பிரபாவதி மருமகனை வரவேற்றுவிட்டு, உணவை எடுத்து வைத்தபடியே, உள்ளுக்குள் மருமகனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்பது புரியாமல் மனதிற்குள் குமைச்சலோடு இருந்தார்.

அந்நேரத்தில் கேட்ட மாமியாரின் பேச்சுக்கு தலையை அசைத்து ஆமோதித்து… அங்கிருந்து அவரின் அறைக்குள் விரைந்து அனுப்பிவிட முனைந்தார். பிரபாவதியின் குமைச்சல் தாங்கிய முகம் வேதாவிற்கு சட்டெனப் புலனாக மருமகளை நோக்கி நடையை எட்டிப் போட்டார் வேதா.

பாட்டியின் பேச்சு புரிந்தாலும், கணவனை கண்டதும் அவனது மார்பில் சாய்ந்து ஆறுதல் தேடத் துடித்த மனதைக் கட்டுப்படுத்தும் வழி  தெரியாமல் திணறினாள் மதி.

மருமகளின் முகத்திலிருந்த தன்மையைக் கண்டு அருகே சென்ற வேதா கையை அழுத்திக் கொடுத்தபடியே, “வந்த புள்ளைக்கு முதல்ல சாப்பாட்டைப் போடு. நைட்டு மதிகூட நீ இரு.  பேரனை ஹால்ல படுக்கச் சொல்லு…

கதிரா! நீ இன்னைக்கு வெளிய திண்ணைல படுத்துக்கோ!” சத்தமாகக் கூறிவிட்டு அறைக்குள் சென்றார் வேதா.

“கடவுளே! தாயும் சேயும் நல்லபடியா புழைச்சு வரணும்.” வேண்டுதலோடு படுக்கையில் சாய்ந்தார் பாட்டி.

செழியன் உண்டு கைகழுவி வரும்வரை ஹாலில் அமர்ந்திருந்தவள் கணவன் வந்ததும், “நீங்க இங்க…” எனத் துவங்கியதும் முறைத்து மனைவியை அடக்கியவன்,

“சும்மா பக்கத்துல படுத்திருப்பேன்டீ.  எப்பவும் இதே நினைப்பாவா சுத்துவேன்” பற்களுக்கிடையே வார்த்தைகளைத் துப்பியவனிடம் அதற்குமேல் பேசமுடியாமல் தாயிடம் சென்று தயக்கமாக,

“ம்மா… அவரையும் உள்ள…” எனத் துவங்கியதும்,

“உங்க பாட்டியக் கூப்பிடறேன். நாளைக்கு எதாவது பிரச்சனைனா என்னை அத்தை ஆஞ்சுருவாங்க.  நீ அவுககிட்டயே பேசிக்கோ” மாமியாரின் அறையை நோக்கி பிரபாவதி நகர, கண்களில் நீர் கோர்த்திட தாயை தடுத்து நிறுத்தினாள் மகள்.

“எல்லாரும் என்னையே சொன்னா… நான் என்னதான் பண்ணுவேன்” சலிப்பாகக் கூறியவளின் கண்களிலிருந்து சரசரவென நீர் வழிந்தோடியது.

“நான் பத்திரமா இருந்துக்குவேன்மா” கெஞ்சினாள் மதி.

“உன்னோட நல்லதுக்குத்தானடீ சொல்றோம்.  இத்தனை நாளுல என்னைக்காவது எதாவது சொல்லியிருக்கோமோ? இருக்கற நிலைமையில கஷ்டம்னு எதையாவது இழுத்துட்டு வந்த… அப்புறம் நான் திட்டு வாங்க முடியாது” பிரபாவதி தர்மசங்கடமான நிலையில் மகளிடம் பேசிவிட்டு அகன்றார்.

பிரபாவதி அதற்குமேல் அவரால் எதுவும் பேசமுடியாமல் மௌனமாகிட, எல்லாரும் பேசி முடிவுக்கு வரட்டும் ஆனால் தான் நினைத்ததை சாதித்தே ஆகவேண்டும் என்கிற முடிவோடு தொலைக்காட்சியின் முன் ஐக்கியமாகியிருந்தான் செழியன்.

குழந்தையை ஹாலில் உறங்க வைக்கும் முயற்சியில் பிரபாவதி இருக்க, மதி அறைக்குள் சென்று படுத்துவிட்டாள்.

பன்னிரெண்டு மணியளவில் மகளின் அறைக்குள் செழியன் செல்வதைப் பார்த்தபடியே இறைவனிடம் வேண்டுதலை வைத்துவிட்டு, தொலைக்காட்சியை அணைத்தவர் நெருடலனான மனதோடு படுக்கச் சென்றார் பிரபாவதி.

வயிறு நன்கு கீழிறங்கியிருக்க ஒரு பக்கமாக வாயிலைப் பார்த்தபடியே படுத்திருந்தவள் கணவனைக் கண்டதும், ‘எந்தப் பிரச்சனையுமில்லாம நல்லபடியா இந்த ராத்திரியக் கடக்கணும் கடவுளே’ எனும் பிரார்த்தனையோடு,

“பாப்பா… அப்பாவோட தூங்கிட்டாளா?” என்ன பேசுவது என்று புரியாமலேயே செழியனிடம் பேச்சைத் துவங்கினாள் மதி.

இறுக்கமான முகத்தோடு இருந்தவனை மாற்ற அவளெடுக்கும் சிறுமுயற்சி.

“இல்ல… ஹால்லதான் தூங்குது” என்றபடியே சட்டையை ஹேங்கரில் மாட்டிவிட்டு அருகே வந்தவன்,

“கிழவி ரொம்ப சவுண்டு விடுது. இது எப்டி இத்தனை புள்ளை பெத்துச்சு.  தாத்தா ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பாருல்ல… பாவம் அந்த மனுசன்!” பேசிக்கொண்டே படுக்கையில் அவளின் பின்புறம் படுத்துக்கொண்டு தன்னோடு அவளை இறுக அணைத்துக் கொண்டான் செழியன்.

மதிக்கு மனம் முழுக்க உணர முடியாத பயம். அவனை விட்டு விலக அறிவு சொன்னாலும், மனம் அதனைச் செய்யவிடாமல் தடுத்திருந்தது.

நீண்ட நேரம் அணைப்போடு, சில பேச்சுக்களும்.

எதையும் ஆழ்ந்து கேட்கும் நிலையில் நிச்சயம் வசுமதி இல்லை.  ஆனால் அவளின் நிலை அவனுக்குப் புரிந்தாற்போலில்லை.

பெண்ணுக்கு இது சுகவேதனை!

கணவனது அணைப்பில் அவளது பயங்கள், வேதனைகள், எதிர்மறை எண்ணங்கள் என சொல்லப்படாத பல விசயங்கள் பஸ்பமாவது சுகம்!

அணைப்போடு நிற்காமல் அடுத்த கட்டத்திற்கு பயணிக்கும் கணவனது உணர்வுகளை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் திண்டாடித் திணறி மூச்சு முட்டி, காம லோப களியாட்டங்களில் அவன் தன்னில் மூழ்கத் துவங்கும் நிலைக்குத் தள்ளப்படும்போது உண்டாகும் அவளின் தற்போதைய நிலை பெண்ணுக்கு வேதனை!

தாங்கிக்கொள்ள முடியாத சோதனை!

‘முடியறவன் சாக்கு சொல்லாம சந்தர்ப்பத்தை உருவாக்கி, சந்தடி சாக்குல வேலையக் கச்சிதமாப் பாப்பான்.  முடியாதவன் அறிவியல் ஆயிரம்னு என்னத்தையாவது உளறுவான்!’ இது ஆணாதிக்க செயல் பற்றிய பெண்ணியச் சிந்தனை.

செழியன் சந்தர்ப்பத்தை உருவாக்கி, அதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பணியில்… பெண்ணது வேதனைகளைக் காட்டிலும் அவனது உணர்வுகளுக்கான வடிகாலைத் தேடி, நாடி…

பெண்ணது தடைகளைத் தகர்த்து முன்னேறியவனின் புணர்வு… அவளுக்குள் பூஜ்யம் அளவிற்குக்கூட எந்த உல்லாச உணர்வையும் உருவாக்கவில்லை. 

“பாத்துங்க! எனக்குப் பயமாருக்கு!” தனது பயத்தை ஒவ்வொரு நிலையிலும் தடைசெய்து பின்வாங்கும் அவளின் செயல் அவனுக்கு மேலும் இன்பத்தை வாரியிறைத்தது.

முன்னேறத் துண்டியது!

முன்னேறினான்!

“ஏய்… ரொம்பப் பயப்படாதடீ!  வயித்துக்குள்ள இருக்கறது எம்புள்ளைதான? புள்ளைக்கு எந்த அப்பனாவது கெடுதல் நினைப்பானா?” தத்துவ முத்துகளாக நினைத்து அரைவேக்காட்டுத்தனமாக அரற்றியவனை அந்நேரத்தில் நிச்சயமாக அவளுக்கு இம்மியளவும் பிடிக்கவில்லை.

உலகத்து வெறுப்பெல்லாம் அவன் மீது மூண்டாலும், அவளால் எதையும் சட்டெனக் காட்ட முடியாத தயக்கம்.

பொறுமை!

“எல்லாம் உங்களுக்கு விளையாட்டா இருக்கு.  எதாவது ஆச்சு… யாரு முகத்திலயும் என்னால முழிக்கவே முடியாது” தனது நிலையைக் கூறினாலாவாது அவன் மனம் மாறும்.

செயல் முடிவுக்கு வரும். தான் இந்த இக்கட்டான நிலையிலிருந்து வெளிவரலாம் என்கிற நப்பாசையில் கூறினாள் மதி.

வயிற்றுப் பிள்ளையை எண்ணி அவனை விட்டுப் பிரிய மனம் உந்தினாலும், மலைப்பான அயர்ச்சியில் கணவனது கிடுக்குப்பிடியில் அவள்.

அவனைத் தன்னிடமிருந்து முற்றிலுமாக முரட்டுவழியில் தடுக்க இயலும்.  ஆனால் அதனால் உண்டாகும் அவனது பாரா முகத்தை, மற்றவர்கள் காண இயலாத இருவருக்கிடையிலான இடைவெளியை, எடுத்தெறிந்து தன்னை துச்சமாக எண்ணிச் செய்யும் செயல்களைத் தாங்கிக்கொள்ள இயலாத இதயம்… சுமைகளைச் சுமக்க வேதனைகளோடு துணிந்தது.

செழியனுக்கு எதையும் பாதியில் விட்டுப் பழக்கமில்லை. அவனது குணம் தெரிந்தவளாதலால் அதற்குமேல் பேசாமல் நிறைவை எதிர்நோக்கிக் கடனே என உடலை அவனிடம் ஒப்புக் கொடுத்துவிட்டு மனம் அதில் லயிக்க முடியாமல் வேதனையோடு காத்துக் கிடக்கிறாள்.

சுமையைத் தாங்கவொண்ணா கருவைத் தாங்கிய பனிக்குடம் பிரசவிக்க தகுந்த நேரம் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளை, தீவிர புற அழுத்தத்தோடு கரு வெளிவரும் பாதையில் உண்டான தடையையும் தாங்காமல் அதன் அழுத்தத்தின் கனத்தால் நுண்ணிய சத்தம் உண்டாக்கி உடைந்தது.

கொள்ளளவிற்குமேல் சேகரித்த நீரை சேமிக்க முடியாமல் திணறி கரையுடைத்து கண்மாயிலிருந்து பாய்ந்துவரும் வெள்ளம்போல பனிநீர் படுக்கை எங்கும் சட்டென பரவி விரவியது.

அடுத்து வந்த அரைமணித் தியாலத்திற்குள் அந்த வீடே அல்லோகலப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்தது.

கதிரவனுக்கு ஆண் மனது புரிந்தாலும், மகள் என்று வந்ததும் வருத்தமும் சேர்ந்து வந்திருந்தது.  ஆனால் அதனைக் காட்ட இது தகுந்த நேரமல்லவே!

வேதா தன் வாயிக்கு வந்தபடி வீட்டில் வைத்து நேரடியாகவே மருமகள் பிரபாவதியிடம், “உங்கிட்டச் சொல்லிட்டுத்தான போனேன். எனக்கென்னானு இருந்துட்டு இப்ப நீ புலம்புறதுல என்ன பிரயோசனம்? புலம்பாம வாய மூடு” என்று அதட்டலோடு,

செழியனிடம், “வந்தப்பவே நான் கணிச்சேன்.  இன்னைக்கு ஏழரையக் கூட்டிருவன்னு.  அதே மாதிரியே நடந்துருச்சு… அப்டி என்ன அடக்க முடியாத அவசரம் உனக்கு? என்னய்யா மனுசன் நீ?” என்று வேதா தன்னை நோக்கி நேருக்கு நேராகக் கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டவன்தான்.  அதன்பின் தலைநிமிரவே இல்லை செழியன்.

வேதா பாட்டி அவனைப் பார்த்து, “இப்ப அவளுக்கோ, புள்ளைக்கோ எதாவது ஆகட்டும்.  அப்புறம் வந்து வச்சுக்கறேன் கச்சேரிய…” என்றுவிட்டு,

மதியைத் தாங்கி நடக்கவிடாமல் தூக்கி வந்து வண்டியில் ஏற்றச் சொன்னவர் தானும் அவளோடு ஏறி அமர்ந்தார்.

வசுமதி கண்ணிரோடும் ஏதோ அசௌகர்யத்தோடும் வாய்விட்டுப் புலம்ப முடியாமல் உடல்மொழியில் அதனை வெளியிட… அதைப் பார்த்த வேதா அவளிடம் மெல்லிய குரலில், “நீயெல்லாம் ஒரு பொம்பளை!  உங்கிட்டப் படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டுத்தான போனேன். 

புத்தியக் கடங் குடுத்துட்டு இப்ப பதறுறதுல எந்த பிரயோசனமும் இல்லை.  உங்க அவசரத்துக்கு அங்க எல்லாம் ஏதுவா இருந்தா பொழைச்ச… இல்லையா… அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி!” என்று வெறுப்பாக மொழிந்தவர் பேத்தி, மகன், மருமகளோடு மருத்துவமனைக்கு விரைந்தார்.

செழியன் தனது டூவீலரில் மூத்த மகளோடு வந்தான்.

மருத்துவர்களும் வசுமதியின் நிலையைக் கண்டு, “நார்மல்கு நிறைய பாசிபில் இருந்தது.  இப்ப நீங்களா சங்கடத்தை உண்டாக்கி… கடைசியில சிசேரியன்ங்கற நிலைமைக்கு கொண்டு வந்திருக்கீங்க” எனும் வசவோடு மேற்படி செய்ய வேண்டியதைப் பார்த்தனர்.

பனிநீர் குழந்தை இலகுவாக வெளிவர உதவக் கூடியது.  அதற்கான வாய்ப்பை தந்தை அடைத்துவிட, தாய் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை ஈன்றெடுக்கும்படி ஆகியிருந்தது.

சென்ற மூன்று மணித் தியாலத்தில் இரண்டாவது பெண் மகவு பிறந்தது.

செழியனை… வேதாவைத் தவிர வேறு யாரும் எதுவும் பேசவில்லை.  ஆனால் மதி கூறாமலேயே அவளின் இந்நிலைக்கு யார் காரணம் என்பது அனைவருக்கும் தெளிவு.

குற்றமுள்ள நெஞ்சில் குறுகுறுப்பு!

செழியனுக்கு அதற்குமேல் யாரின் முகத்தையும் இலகுவாக எதிர்கொள்ள முடியாத நிலை.

வீட்டினருக்கு அழைத்துக் கூறிவிட்டு மருத்துவமனையில் வசுமதி வீட்டாரின் பார்வையில் படாதவாறு ஓரமாக இருந்துகொண்டான் செழியன்.

கதிரவன் மட்டும் அவ்வப்போது அழைத்துக் கூறும் பணியை தட்டாமல் செய்துவிட்டு… வசுமதி கொண்ட அவஸ்தைகளைக் கண்ணுற்றும் கேட்டும் நொந்து போயிருந்தான் செழியன்.

காலங் கடந்த ஞானம் அது யாருக்கு லாபம்?

செவிலியர் தந்து சென்ற குழந்தையை கையில் வாங்கி, “இந்தளவுக்கு தாயும், புள்ளையும் சேதாரமில்லாம கிடைக்க உதவி செய்த இறைவா! உனக்கு நன்றி!” இறைவனுக்கு நன்றியைக் காணிக்கையாக்கிவிட்டு, பேத்தி கண் விழிக்கும் வரை குழந்தை பசியால் கத்துவதை மாற்று ஆகாரத்தைக் கொடுத்து சமாளித்தபடி வேதா அவசர சிகிச்சை பிரிவு அருகே வெளியில் இடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

அருகே பிரபாவதி உறக்கத்திலிருந்த மூத்த பேத்தியை மடியில் தாங்கியவாறு உடனிருந்தார்.

அவர்களின் அருகே கிடந்த சேரில் அமர அந்த இரவு நேரத்தில் இருவர் வந்தனர்.

இருவரில் முப்பத்து ஐந்து வயது மதிக்கத் தக்கவரோடு சுமார் ஆறு வயது நிரம்பிய சிறுவனும் இருந்தான்.

உறக்கம் துறந்து ஏதோ தந்தையிடம் கேட்டபடியே வந்தவன், வேதாவின் கையிலிருந்த குழந்தையைக் காட்டிப் பேசியபடியே வந்தவன் அருகே வந்ததும் நின்றான். 

அமரச் செல்லாமல் தந்தையோடும் சேர்ந்து நடக்காமல் வேதாவின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தபடியே நின்றிருந்தான் அச்சிறுவன்.

குழந்தையைப் பார்த்ததும் தந்தையின் கையிலிருந்த தனது கையை உருவிக்கொண்டு ஓடி வந்து பார்த்த சிறுவனின் கண்களில் உறக்கக் கலக்கத்திலும் அத்தனை பரவசம்.

திரும்பி சற்று தள்ளி நின்றிருந்த அவனது தந்தையைப் பார்த்து, “ப்பா… பூ மாதிரி இந்தப் பாப்பா ரொம்ப அழகா இருக்குப்பா!  நம்ம அம்மாக்கும் இப்டிப் பாப்பாதான் வருமாப்பா?” ஆவலோடு கேட்டான்.

“ஆமாண்டா கண்ணா!” ஆமோதித்தார் தந்தை.

கையில் பேத்தியின் மகளைத் தாங்கியபடி அமர்ந்திருந்த பாட்டி வேதா, “குட்டிப் பையனுக்கு தம்பிப் பாப்பா வேணுமா? தங்கச்சிப் பாப்பா வேணுமா?”

“ரெண்டு பாப்பாவும் வேணும்” சிரித்த சிறுவனின் சிரிப்பில் லயித்த பாட்டி,

“உம் பேரென்ன?” விசாரிக்க,

“சிபி… சிபி சக்ரவர்த்தி!” என்றவன்,

“இந்தப் பூ பாப்பா எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு!” பிறந்திருந்த குழந்தையைக் காட்டிக் கூறியவன்,

“எங்க வீட்டுக்கு தருவீங்களா?” குழந்தையை விளையாட்டுச் சாமானாக எண்ணி வேதாவிடம் கேட்டான்.

“உனக்கு விளையாடத் தோதான ஆளு…” என்றவாறு

தனதருகே அமர்ந்திருந்த மருமகளின் மடியில் உறங்கிக் கொண்டிருந்த பேத்தியின் மூத்த மகளான கனி சௌமியாவைக் காட்டி, “இதோ தூங்கறா பாரு… அந்தப் புள்ளைய வேணா கூட்டிட்டுப் போ. அவதான் இப்போ உங்கூட நல்லா விளையாடுவா. இவ நடக்க இன்னும் நாளாகும்.  நடந்தப்புறம் உங்கூட விளையாட வருவா?” பக்குவமாக எடுத்துரைத்தார் வேதா.

     மாறி மாறி இருவரையும் பார்த்துவிட்டு தந்தையை நிமிர்ந்து பார்த்த சிபி, “எனக்கு இந்த பூ பாப்பாதான் ஓகேப்பா” பாட்டி வேதாவின் கையில் பெயர் சூட்டப்படாத பிறந்த குழந்தையைக் காட்டி தந்தையிடம் கூறினான்.

     அதன்பின் அவனுக்கும் ஒரு தம்பி பிறந்திருந்தது.  ஆனாலும் அங்கிருக்கும் வரை தினசரி தேடிவந்து குழந்தையைப் பார்த்து சிறிதுநேரம் அவளோடு நேரம் செலவிட்டுச் செல்வதை வாடிக்கையாக்கியிருந்தான் சிபி.

     மறுநாள் செழியன் வீட்டார் சார்பில் அவனது தாய், தமக்கை மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து பிறந்த குழந்தையைப் பார்த்துச் சென்றனர்.

     செழியன் மட்டும் வேதாவின் முன் வரவேயில்லை. செழியனின் தாய் பவானி மூத்த பேத்தியான கனி சௌமியாவை தனது மூத்த மகளான வானதியின் இளைய மகனுக்குப் பேசி வைத்ததுபோல, பிறந்த இன்னும் பெயரிடப்படாத குழந்தையை இளைய மகளின் மகனுக்கு திருமணத்திற்குப் பேசி வைத்துவிட்டு கிளம்பியிருந்தார்.

     வேதாவோ, “இன்னும் உம் மாமியா எந்தக் காலத்துல இருக்கா… ஒரு புள்ளைய சொந்தத்துல குடுக்க ஆசைப்பட்டான்னா சரிங்கலாம்.

     இந்தப் புள்ளையவும் அது மாதிரி குடுக்கணும்னு சொல்லிட்டுப் போறாளே… என்ன பொம்பளை இவ!

     அந்த கருவண்டுப் பயலுக்கு, இந்த அழகிய குடுக்கணும்னு சொல்லுறாளே.  மனசாட்சிய வித்தவளா இருப்பாபோல!” இப்படி தனது விருப்பமின்மையை அப்போதே பேத்தி வசுமதியிடம் கூறியிருந்தார்.

     அத்தோடும் விடாமல், “அந்தக் காலத்தில பேசி வச்சாங்க… அது மாதிரி இப்பப் போயி பேசி வைக்கிறாளே… இது எல்லாம் சரியா வருமான்னுகூட யோசிக்க மாட்டா ஒரு பொம்பளை…

என்ன கழுதையோ போ! நாம் மட்டும் இவ கல்யாணம்வரை உசிரோட இருந்தா கண்டிப்பா… இவளை அந்தப் பயலுக்குக் கட்டித்தர ஒத்துக்கிற மாட்டேன்” தனது பிடித்தமின்மையையும் பேத்தியிடம் மறைக்கவில்லை வேதா பாட்டி.

     வேதா… சிறுவன் சிபி வரும்போதெல்லாம் குழந்தையை அவனிடம் காட்டி சிறிது நேரம் பேச்சுக் கொடுப்பார்.

     சிபி ஒருநாள் வந்து சென்றபின், “இந்தப் பயலைப் பாரு.  பொடியனா இருந்தாலும் பாக்கவே எப்படி லட்சணமா இருக்கான். 

இவன் வளந்தா நல்லா கம்பீரமா களையா இருப்பான்.  இவனை மாதிரி ஒருத்தனுக்குத்தான் உன்னோட சின்னக் குட்டியக் கட்டிக் குடுக்கணும்.” என பேச்சுவாக்கில் மருத்துவனையில் இருக்கும்போது கூறியிருந்தார் வேதா.

     சிபி பார்க்க வரும் வேளையில் அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்களை நோகாமல் பிடித்து முத்தம் வைப்பான்.  அவள் கன்னம் தொட்டு தனது இதழில் வைத்துக் கொள்வான்.

     பிரபாவதியிடமும், வேதாவிடமும் நல்ல இணக்கம் உண்டாகியிருந்தது சிபிக்கு. சிபியின் தாயிக்கு வேறு யாருடைய உதவியும் இல்லாமல் இருந்தது.  அதனைக் கண்டு கொண்டவர்கள் அவ்வப்போது மதிக்கு தாங்கள் எடுத்து வரும் உணவை சிபியின் வீட்டாருக்கும் சேர்த்து எடுத்து வந்து கொடுத்துதவும் அளவிற்கு பிரபாவதி, வேதா, சிபியின் தந்தை ஞானம் சிறுவன் சிபி நால்வருக்குமிடையே நல்ல பரிச்சயம் உண்டாகியிருந்தது.

     முதலில் ஞானம் மறுத்தாலும் வேதா, “பத்தியச் சாப்பாடு குடுக்க வேண்டிய நேரத்தில, அந்தப் புள்ளைக்கு கடைச் சாப்பாடைக் குடுத்து உடம்பைக் கெடுத்துறாத தம்பி.  நான் உனக்கு அம்மா மாதிரி.  அதனால வேணாம்னு சொல்லாம வாங்கிச் சாப்பிடக் குடுப்பா” என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார்.

ஒரு முறை பாட்டி வேதாவும், சிபியின் தாய் ஜெயமாலினியையும் பிறந்திருந்த அவனது குட்டித் தம்பியையும் நேரில் சென்று பார்த்து வந்திருந்தார்.

***

error: Content is protected !!