பொன்மகள் வந்தாள்.24🌹

பொன்மகள் வந்தாள்.24🌹

PMV.24.

“மாறன், இதவந்து கட்டிவிடுங்களே.” குளியலறை விட்டு வெளியே வந்தவனை கண்ணாடி வழியாகப்பார்த்து, ஜாக்கெட்டில் இருந்த கயிற்றை முடிபோட முடியாமல் எக்கிக்கொண்டே அழைக்க,

“என்னடி இது… முந்தானை முடிச்சு மாதிரி ஜாக்கெட் முடிச்சா?” எனக் கேட்டுக்கொண்டே அருகே வந்தான்.  

“இல்ல… மூன்று முடிச்சு.” என்றாள் உதடு சுழித்து. 

“அது கல்யாணத்தப்ப போடுறதுடி.”

”அப்ப இது?” என்றவளிடம்,

“வேணா… நான் சொல்லிருவே. அப்பறம் நீதான் எனக்கு வெவஸ்தை இல்லைம்ப.” 

‘இதுல என்ன விவஸ்த்தை வேண்டிக் கெடக்கு.’ என யோசித்தவள், அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புருவம் சுருக்கி சிந்திக்க, புரிந்தும் புரியாமலும் இருந்தவளுக்கு, ஏதோ புரிய, அவனை கண்ணாடி வழியாகவே  பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டவள்,

“வேணா… தெரியுது… இதோட நிறுத்திக்கோங்க… நீங்க தான் வாய்லயே வடசுட்டு ஊருக்கே போடுறவராச்சே.” என்றாள். 

“ஆஹாங்… எம்பொண்டாட்டி அதுக்குள்ள என்னையப்பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காளே. வாயுள்ள புள்ளதான்டி பொழைக்கும்.” இப்பொழுது உடல் உரசும் தூரத்தில் அவன் நெருங்கி வர… பின்முதுகில் சூடாக அவனது மூச்சுக்காற்றும் பட, முதுகில் இருந்த பொன்னிற முடிகளெல்லாம் சிலிர்த்துக் கொண்டன. கண்ணாடியில் பார்த்து பேசிக்கொண்டே, கயிற்றில் முடி போட்டு சுருக்கிட்டவன், அவளைப்பார்த்துக் கொண்டே, குனிந்து முதுகில் இதழ் பதித்து, இடையோடு சேர்த்து அணைத்திருந்தான் கள்ளனாய். அவள் விடுபட முயற்சி செய்து சற்று நெளிய, மேலும் பிடி இறுக, அடுத்தடுத்த முயற்சியில் மலைப்பாம்பின் சுருட்டியபிடிக்குள் அகப்பட்ட மான்குட்டியின் நிலை தான்.

“நாம்பாட்டுக்கு தான குளிச்சிட்டு வந்தே. நீதானடி கூப்பிட்ட.” மீசை முடிகள் காதில் உரச ரகசியமாய்க் கேட்க, அவன் மார்பில் இருந்த ஈரம், சில்லென முதுகில் பட, குளிர்ச்சியாய் சூடு பரவியது அவளுக்குள். மெதுவாக இதழ்கள் பின்கழுத்தில் பயணிக்க, அவளுக்கும் கண்கள் சொருக, தன்னிலை மறந்து தன்னவன்மார்பில் சாய… பூனைக்கடியாய் மென்கடியொன்றை பின்கழுத்தில் பதிக்க, மயிர்க்கால்கள் அத்தனையும் சட்டென்று பூ பூத்தது பூவைக்கு.

மூச்சுக்காற்று சூடேற… மயங்கி இருந்தவளை, கீழிருந்து அழைத்த காவேரியின் குரல் கலைக்க, அவனோ இன்னும் மங்கையின் வாசத்தில் மதிமயங்கியே, இதழ்வேலைக்கு இடைவேளைவிட மனமின்றி முன்னேறிக் கொண்டிருந்தான். கண்ணாடியில் அவனைப்பார்த்தவள், முழங்கை கொண்டு வயிற்றில் இடித்துத் தள்ளியவள், சட்டென்று முன்னால் திரும்பினாள்.

“தள்ளிப்போய்யா அங்கிட்டு… சும்மா மனுஷிய உசுப்பேத்திக்கிட்டு. அப்புறமா சின்னப்புள்ள… தென்னம்பிள்ளனுட்டு போக வேண்டியது.” 

“ஏய்ய் லட்டு… என்னடி இப்படி எறங்கிட்ட. முனியம்மா மாதிரி.” என்றான் சிரித்துக்கொண்டே.

“கீழே அத்தை கூப்டறது கேக்குதா இல்லியா? இன்னும் கொஞ்ச நேரத்துல நாம கீழபோகல, கோயிலுக்குப் போகாமலே உங்கம்மா சாமியாடிருவாங்க.” என சொல்லிக் கொண்டு இருக்க,

மீண்டும் காவேரியின் குரல் அழைத்தது.

“ஏன்டீஈ… அவங்க மட்டும் போயிட்டு வரட்டுமே. நாம வீட்லயே இருக்கலாமா?” கிறக்கமாக குழைந்து வந்தது குரல். கைகள் மீண்டும் இடையைத்தேடிவர, பட்டென கையைத் தட்டிவிட்டவள்,

“எதுக்கு… அதெல்லாம் ஒன்னும் வேணாம். இந்த நெல்லு மூட்ட குடவுன்லயே இருக்கட்டும். ட்ரெஸ்ஸ மாத்திட்டு கீழ வாங்க.” என அவனை கடுப்பேற்றி விட்டு கீழே செல்ல முற்பட.

“அடியேய்!!! சிக்குறப்ப இருக்குடி உனக்கு. லட்ட பூந்தியாக்கல…”

“போய்யா… போய்யா… சும்மா காமெடி பண்ணிக்கிட்டு.” என கூறிவிட்டு, இரண்டே எட்டில் தாவி கீழே ஓடிவிட்டாள். சிரித்துக் கொண்டே கிளம்பி இறங்கி வந்தான். 

புதிதாக கார் வாங்கியதில் இருந்து காவேரியும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என கூறிக் கொண்டிருந்தார். பெண்கள் நாள்கணக்கு என்று தள்ளிக்கொண்டே போக இன்று தான் அனைவருக்கும் நாள் ஒத்துவர கோவிலுக்குக் கிளம்ப முடிவு செய்தனர்.

சாமான்யனின் சாமிக்கு உருவம் தேவையில்லை. வெறும் கல்லும், மரமுமே சாமியாகும். வீச்சரிவாளும், வேல்கம்புமே குலதெய்வமாகும். 

பிடிமண்ணைக் கொண்டு வந்து வைத்தே அவ்விடத்தை கோவிலாக்க முடியும். புரியாத பாஷை மந்திரங்கள் தேவையில்லை. வெறும் குலவை சத்தம் போதும்… அவன் சாமியை அழைக்க. 

”அய்யா சாமி!!! கைகால் சொகத்தகொடு. நாங்க எங்க போனாலும் ஓம்பிள்ளைகளுக்கு வழித்தொணைக்கி வா சாமி!” இச்சிறு வேண்டுதல் போதும் அவனது சாமி செவிசாய்க்க. ஒற்றைச் சூடத்திலும், ரெண்டு ஊதுபத்தியும் போதும் அவனது பக்தியைக் காண்பிக்க… ஓடோடி வரும் குலசாமிகள் தங்கள் குலம் காக்க.

சுற்று மதில் மட்டும் எழுப்பபெற்ற கோட்டைச்சாமி கோவில். ஆளுயர வீச்சறிவாளே சாமி அங்கு. சமையபுரத்தை அடுத்த  வயல்வெளியில், கோவில் ஆலமரத்தடியில் வீற்றிருந்தது. வருடாவருடம் ஆடிப்பெருக்கில் கும்பிடு இருக்கும். இப்பொழுது இவர்கள் மட்டுமே பொங்கல் வைக்க வந்திருக்கின்றனர். முன்பே சொல்லிவிட்டு, இடத்தை சுத்தம் செய்யச் சொல்லியிருந்தான் சக்தி. 

முன்பெல்லாம் பொங்கல் வைக்க வேண்டுமெனில், பொங்கல் பானை முதற்கொண்டு அனைத்து பாத்திரங்களும் எடுத்துவரவேண்டும். இப்பொழுது காலவளர்ச்சிக்கு ஏற்ப, கோவில் சார்பாகவே அனைத்தும் வாங்கி வைத்துள்ளனர். பொங்கல் சாமான்களோடு வந்தால் போதும். குத்தகை ஒப்பந்தத்தை மாற்றிவிடச் சென்றிருந்த பொம்மியின் அப்பாவும், அத்தையுமே திருச்சிக்கு திரும்பியிருந்தனர். அவர்களும் உடன் வந்திருந்தனர். 

ஆண்கள் கல்லெடுத்து அடுப்பு கூட்டி கொடுக்க, பெண்கள் பொங்கல் வைக்கும் வேலையில் மும்முரமாகினர். 

பொங்கல் உலை பொங்கிவர, பொம்மியிடம் அரிசி போடுமாறு கூறினார் காவேரி.

“சக்தி, பொங்கல எறக்கறதுக்குள்ள,  நீயும் மாமாவும் சேந்து சேவல அறுத்து விட்டுருங்க.” என்றார் மகனிடம்.

பொங்கல் மட்டும் போதும் என முன்பே சக்தி கூறியதற்கு, “கல்யாணமும் முடிச்சு, கார் வாங்கிட்டு மொதமொதன்னு கோயிலுக்கு போறோம். காவு கொடுக்கணும். புள்ளகிள்ள உண்டாயிட்டா ரத்தபலி கொடுக்க முடியாதுடா.” என கூறிவிட்டார். 

பொங்கலை வைத்து முடிக்க, படையல் போட்டு சாமி கும்பிட்டனர். அதோடு சமையலும் முடிந்திருந்தது. இது வழமை தான் என்பதால் அதற்குரிய மசாலா சாமான்களோடே வந்திருந்தனர். 

சொர்ணத்தின் உதவியோடு ஆண்கள் சமையலை கவனித்தனர்.

ஆலமர நிழலில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. 

பொம்மியும், பவானியும் பரிமாற அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். 

காட்டுக்கு போனா காடிக்குப் போற (மாட்டுத்தொட்டிக்கு) கஞ்சியும் கால்வயித்துக்கு கானாதுங்கறது பழமொழி. வீட்டில் சாப்பிடும் சாப்பாட்டிற்கும் அதே உணவை வெளியிடத்தில் சமைத்து சாப்பிடுவதற்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு. காட்டுக்குப் போயி கஞ்சி குடிச்சா தாங்க தெரியும். வெறும் வெங்காயத்துக்கே ஒரு குண்டா கஞ்சி உள்ள போகும். கரியும் சோறும் கேட்கவா வேண்டும். ஆண்கள் கைப்பக்குவம் வேறு. 

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, அத்தைக்கு சாமிக்கு வைத்த மீதி வெற்றிலையைக் கொண்டுவந்து கொடுத்தாள் பொம்மி. சொர்ணத்திற்கு சாப்பிட்டவுடன் வெற்றிலை போடவேண்டும்.

“உனக்கும் வேணுமா பண்டு.” என வழமையாக கேட்க,

“எனக்கு இல்லாமயா?” என்றாள்.

“ஹேய்… நீ வெத்தலயெல்லாம் போடுவியா?” என பவானி ஆச்சர்யம் காட்ட,

“எங்க அத்தகூட சேந்தா எப்பயாவது போடுவே. அத்தை வெத்தல போடுறப்ப எல்லாம் காம்ப எனக்கு கொடுக்கும்” என்றாள்.

“டேய்… சக்தி! நீ வெத்தல பொட்டி வேற தூக்கணும் போலயேடா.” என தம்பியைக் கேலி பேசி சிரிக்க,

“இதுல என்ன இருக்கு. பொம்பளைகளுக்கு தீட்டு நிக்கற வயசுல வெத்தல போட ஆரம்பிச்சரணும் பவானி. அப்ப தான் மொழங்கால் வலி வராது. அந்தக்கால கெழவிககிட்ட வெத்தலப்பை இல்லாம இருக்காது. எங்க அம்மா எல்லாம் தொண்ணூறு வயசுலயும் நட தளறலைனா வெத்தலை தான் காரணம்.” என்றார் பெருமையாக. 

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இம்மூன்றிற்கும், நமது உடம்பிலுள்ள வாதம், பித்தம், கபம் என்ற மூன்றிற்கும் சம்மந்தம் உண்டு. 

காலையில் நமது உடம்பில் பித்தம் அதிகமிருக்கும். எனவே சுண்ணாம்பு சற்று அதிகமாக போட வேண்டும். மதியம் வாதம் அதிகமிருக்கும். பாக்கு அதிகமாக போட வேண்டும். இரவு கபம் கட்டும். எனவே வெற்றிலை அதிகமாகப் போட வேண்டும். வெற்றுஇலை அல்ல அது. குழந்தைகளுக்கும் காம்பு கொடுக்கலாம் அஜீரணத்திற்கு. (வெற்றிலையொடு புகையிலை சேர்த்துப் போட்டு, கன்னத்தில் அதக்கினால்தான் பல் கறைபிடிக்கும். அதுதான் கெடுதலும் கூட. வெத்தலையோட சின்னதா  கிராம்பு சேத்துப் போட்டா பல்வலி வராதுங்க. வெறும் வெத்தலையோட ரெண்டு உப்புக்கல்ல வச்சு மென்னு முழுங்கினா தொண்டைவலி சரியாகும். எத்தன நாளைக்கு தான் தத்துவமே சொல்றது. நீங்களும் பாவம்ல ஃப்ரெண்ட்ஸ்🙈)

“அதெல்லாம் இல்ல அண்ணி. நான்வெஜ் சாப்டாத்தான் அத்தைகிட்ட வாங்கி வெத்தல போடுவே.” என்றாள், நாத்தனார் கேலி பேசியதால் சங்கோஜமாக.

“அப்படினா நீதான் வாரத்துல வெள்ளி செவ்வாய் கூட பாக்க மாட்டீயே பண்டூ.” என அத்தை நக்கலடிக்க,

“என்ன பண்றது? நாத்தியும் நாத்தியும் சேந்துகிட்டு நாக்க வளத்து விட்டுட்டீங்க.” என்றாள் நொடிப்பாக.

“நாக்கதான நாங்க வளத்துவிட்டோம். வாய் அதுவால்ல வளந்திருக்கு. எங்க அண்ணி பத்து வார்த்தைக்கி ஒத்த வார்த்த பதில் சொல்லும். ஆனா இவளுக்கு வாய் காதுவரை நீளும் காவேரி.” என்க, 

“என்ன பண்றது… அம்மா மாதிரி இல்லாம, அத்தைய மாதிரி வாய் வளந்திருச்சு. உன்னையக் கண்டா தான் சொர்ணாக்கா வந்திருச்சுனு தெருவே அலருமே.” என அத்தையும் மருமகளும் தங்கள் வாய்க்கச்சேரியை ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் பேச்சை சிரிப்போடு குடும்பத்தினர் பார்க்க,

அண்ணன் மகளுக்கும் சொர்ணம் வெற்றிலையை மடித்துத்தர, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சக்தி.

அத்தையோடு வாயாடிக்கொண்டே, இடக்கண்ணை சுருக்கிக்கொண்டு, நுனி நாக்கை மட்டும் துறுத்தி, வலக்கண்ணை தாழ்த்தி வெற்றிலை போட்ட நாக்கு சிவந்து விட்டதா என பொம்மி பார்க்க, கிளியின் மூக்காக, நாக்கும் உதடும் சிவந்திருந்தது. 

“சக்தி மேல இம்பூட்டு ஆசையாடி. ரத்தமாச்செவந்திருக்கு.” எனக் குனிந்து அவளது காதருகில் மெதுவாகக்கேட்க, அது அனைவர் காதிலும் விழுந்தது. அத்தையின் வார்த்தையைக் கேட்டவள், கண்களை திறக்க… எதிரே அமர்ந்து இருந்தவன் இதழில் சிறு புன்னகை இழையோட, கண்களில் குறும்பு கூத்தாட… இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பார்வை ஏதோ சேதி சொன்னது பாவைக்கு.

சட்டென்று உதடு குவித்து, வெட்டும் மின்னலாய், முத்தமொன்றை காற்றில் அனுப்ப வெற்றிலை நாக்கின் சிவப்பை, சட்டென முகம்  வாரி பூசிக்கொண்டது. 

யாரையும் நிமிர்ந்து நேரே பார்க்க முடியாமல் பார்வைகள் அல்லாட,

“நீங்க ரெண்டு பேரும் போயி பாத்திரங்கள கழுவிட்டு வந்து ரூம்ல வச்சுருங்க ம்மா.” என மகளையும், மருமகளையும் பணிக்க, அப்பாடா என முதல் ஆளாக இடத்தை காலி செய்தாள் பொம்மி. அருகில் இருந்த பம்ப் செட்டிற்கு பாத்திரங்களை எடுத்துக் கொண்டு இருவரும் செல்ல, பெரியவர்கள் உண்ட அலுப்பில் கையை தலைக்குத் கொடுத்து ஆலமர நிழலில் சற்று கண்ணயர்ந்தனர். 

பிரித்விக்கு போரடிக்க, தந்தையிடம் செல்லை வாங்கியவன் அதில் மூழ்கிவிட்டான்.‌ பாவப்பட்ட இன்றைய தலைமுறை. 

மச்சானும், மாமனும் பேசிக்கொண்டிருந்தனர். விஷ்ணுவின் சொந்தக்காரர் ஒருவர் அப்பக்கமாக வந்தவர், விஷ்ணுவை அடையாளங்கண்டு பேச ஆரம்பித்து விட்டார். 

பாத்திரங்களை கழுவிக்கொண்டு நாத்திகள் இருவரும் எடுத்து வந்தனர். மனைவியை அழைத்த விஷ்ணு, எடுத்து வைத்திருக்கும் உணவை அவருக்கு பரிமாறுமாரு கூற, முதலில் சற்று மறுத்தவர் விஷ்ணுவிற்காக சாப்பிட அமர்ந்தார். அவருக்கு இலையைப் போட்டு பரிமாறினாள் பவானி.

பொம்மி பாத்திரங்களை வைக்க, அதற்குரிய அறைக்குள் சென்றவளைப் பார்த்தவன் மாமனைவிட்டு நைஸாக நகர்ந்துவிட்டான்.

பாத்திரங்களை கவிழ்த்து வைத்துவிட்டு திரும்ப, திடுமென தன்முன் வந்து நின்றவனைப் பார்த்து திடுக்கிட்டவள்,

“உங்களுக்கு இதே வேலையாப்போச்சு. எப்ப பாரு ஜீபூம்பா மாதிரியே வந்து நிக்க வேண்டியது.” என அலுத்துக் கொள்ள, அவனுக்கு எங்கே அதெல்லாம் காதில் விழுந்தது. அவனது பார்வைதான், வேலை பார்க்கவென ஏற்றிச்சொருகிய இடுப்புச்சேலையில் அல்லவா சிக்கியிருந்தது. 

“இந்த வாயி இன்னைக்கி ஓவரா பண்ணுது. என்ன பண்ணலாம்?”எனக்கேட்டுக் கொண்டே அவளை நெருங்க,

“கிட்ட வந்த… கொன்றுவே சொல்லிட்ட.” என்று விரல் நீட்டி எச்சரிக்க, 

“கொஞ்சமாவது புருஷேனு மட்டுமரியாதை இருக்காடி? விரல்நீட்டி பேசுற? வாயும் நீளுது. காமெடி பண்ணாதீங்கனு வேற சொல்ற… அரிசி மூட்ட குடவுன்லயே இருக்கட்டுமா, ம்ம்ம்…” என சற்று கண்களை விரித்துக் கேட்க,

‘கொஞ்ச ஓவராத்தா போய்ட்டோமோ.’ என முகம் யோசனைகாட்ட, அவளை வெகுவாக சமீபித்திருந்தான். 

”வேணா… வெளிய பெரியவங்க எல்லாம் இருக்காங்க…” குரல் உள்வாங்கியது.

“என்னமோ சவுண்ட் விட்ட. இப்ப விடேன் பாக்கலாம்.” கேட்டுக் கொண்டே, வெற்றிடைய கைவளைக்க, அடுத்து அவளுக்கு எங்கே பேச்சு வந்தது. வெறும் காத்துதான் வந்துச்சு.

“கொஞ்ச நேரத்துல, செவச்செவனு செவந்து இந்த வாயி என்னைய என்னபாடு படுத்திருச்சு தெரியுமா? அப்படியே அந்த நாக்க…” என பல்லிடுக்கில் பேசிக்கொண்டே, சிவந்த இதழில் சுண்டுவிரல்கோண்டு கோலம் போட, இதயத்துடிப்பு முரசு கொட்டியது அவளுக்குள். இடையோடு சேர்த்து அணைத்தவனது மறுகரம், அவளது பின்னந்தலையைத் தாங்கிப்பிடிக்க, கண்கள் தானாக மூடிக்கொண்டது. கோவையிதழ் கோமகனை பித்தம் கொள்ளச் செய்ய, இதழ் கொய்தான் இதமாக. இளநீரின் பதமாக… கனியிதழில் சாறெடுத்தவன்,  வெற்றிலைச் சிவப்பை வெளுக்க வைத்தே விடுவித்தான். முதல் முத்தம்… ஒற்றைமுத்தம்… உயிரையே உருவி எடுக்க, கால்கள் தளற அவன் மீதே சாய்ந்தாள், கொலுகொம்பு இல்லா கொடியாக. 

வெளியே பவானியின் குரல் கேட்க, சட்டென விலகமுயற்சிக்க, முடியாமல் தடுமாறியவளை, தோளோடு அணைத்து அவளை ஆசுவாசப்படுத்தியவன், “சொல்லல… வாய்ச்சவடால் தான்டி நீ.” என்றான் மென்குரலில் காதோரம் கிசுகிசுப்பாக. மன்னவன் மார்பிலேயே முகம் புதைத்தாள் மென்னகை பூத்தவளாக. 

தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ

மலர் மாலை தலையணையாய் சுகமே பொதுவாய்

ஒரு வாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

காரில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இருவர் மட்டுமே இப்பொழுது காரில். கோவிலை விட்டு கிளம்பியவர்கள், அக்கா வீட்டில் அவர்களை இறக்கிவிட,

“பெரியம்மாவும், மாமாவும்…  இங்கேயே இறங்குங்க. எங்க வீட்ல ரெண்டு நாள் தங்கிட்டு போவீங்களா. ம்மா, நீயும் வாம்மா.” என அம்மாவையும் அவர்களோடு அழைக்க, மறுக்க முடியாமல், பெரியவர்கள் மூவரும் அங்கேயே இறங்கிக் கொண்டனர். 

அதுவரை அமைதியாக வந்தவளுக்கு, அவனோடு தனிமை இன்ப அவஸ்தையாய் போயிற்று. முகம் பார்க்க முடியாமல் வெளிப்புறம் பார்வையை ஓட்டினாள். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் கள்ளுண்ட கள்ளனாய்.

கீழே இறங்கி கேட்டைத் திறந்து விட்டவள், அவன் காரை உள்ளே கொண்டு வருவதற்குள் வெளிப்படியேறி மாடிக்கு சென்றுவிட்டாள். 

மேலே அவர்களது அறைக்கு வந்தவன்,‌ குளித்துவிட்டு, வெளிக்கதவை திறந்து கொண்டு மொட்டைமாடிக்கு வந்தான். ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள். அவன் வருவதைப் பார்த்தவள் வேகமாக எழுந்து, அவனைக் கடந்து அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள். வாய்விட்டு சிரிப்பது கேட்டது.

“ஐயோ பொம்மி!!! இப்படி சின்னபுள்ள மாதிரி கண்ணாமூச்சி ஆடுறியே. சும்மாவே சின்னபுள்ளனு தான் கேலி பண்ணுவாரு. ஒத்த முத்தத்துக்கே இப்படி ஆயிட்டியே?” என தனக்குத்தானே புலம்பிக் கொண்டாள்.

அவளும் குளித்துவிட்டு வந்தவள், கபோர்டைத் திறக்க, நைட்டியைத் தேடிய கைகள், தானாக சேலையை எடுத்தது.‌ சந்தனநிற புடவையில்  தங்கநிறசரிகை நூல்கொண்டு எம்பிராய்டரி செய்த மைக்ரோபூனம் புடவை. 

கண்ணாடி முன், வரும் வழியில்… காலையில் வைத்த பூ வாடிவிட்டதாக, பவானி வாங்கிக் கொடுத்த ஜாதிமல்லிச்சரம் கவரில் இருந்தது. காரில் இருந்ததை எடுத்து வந்திருக்கிறான். 

கூந்தலைத் திருத்தியவள், பூவை எடுத்து வைத்துக் கொண்டாள். புடவையும் கட்டியாச்சு. பூவும் சூடியாச்சு. இனி வெளியே போக வேண்டுமே. நாணம் நடுவில் நின்று நர்த்தனம் ஆடுகிறதே!!! எவ்வளவு நேரம்தான் கதவைத் திறக்காமல் இருக்க முடியும்? தயக்கத்தை தள்ளிவைத்தவள், தைரியத்தை கைபிடித்து கதவைத் திறந்தாள். 

மோகனப்புன்னகையோடு ஊஞ்சலில் வீற்றிருந்தான். நிலவொளியில் குளித்த ஐந்தரை அடி பாலாடைச்சிற்பமாக அசையாமல் அங்கேயே நிற்க,

அவளது சங்கடம் உணர்ந்தவனாக ஏதும் பேசவில்லை. அவளை நோக்கி வலக்கைமட்டும் நீட்ட, கால்கள் பின்ன அவனை நோக்கி சென்றாள். 

அவனது கரத்தில் கரம் கொடுத்தவளை, சுண்டிவிட்டு இழுத்து மடியில் அமர்த்தினான். 

இடையோடு கைகளை வளையவிட்டவன், இதமாக இழுத்து, சாதிமல்லியில் முகம் புதைத்தான்.

“லட்டூ…” கழுத்தில் முகம்புதைத்து போதையாக கோதையை அழைக்க,

“ம்ம்ம்…” கொட்டியது அவனது பைங்கிளி.

“உனக்கு ஓகே வா?” ரகசியம் பேசியவனிடம்,

“யோஓஓவ்.” என சினுங்கியது‌ குரல். விடையறியா வினா போல். 

“இப்ப சொல்றியா… இல்லியா…” அவனோ விடாக்கண்டனாக வினவ,

“படுத்தாதீங்க மாறன்.” பேச்சில் சுதி ஏறியது.

“அதுக்கு இது பதில் இல்லியே?” என்க,

அதற்குமேல் பொறுமை பறக்க, சட்டென‌ குதித்து இறங்கியவள், 

“கடைசிவரைக்கும் உனக்கு அரிசி மூட்ட தாய்யா.” என்றாள் இடுப்பில் கை வைத்து.

“இவ்ளோ நேரமா, மடியில நீ இருந்தப்பவும் இதே தான்டி தோணுச்சு.” என சிரிக்காமல் கூற,

“யோஓஓவ்.” என கழுத்தை நோக்கி கைகளைக் கோபமாகக் கொண்டு வந்தவளை, வளைத்துப் பிடித்து வாரிச் சுருட்டிக் கொண்டான்.

பெண்மை புத்தகத்தின் பக்கங்களை புரட்டத் தொடங்கினான் இளமைப்பித்தன். 

ஆரம்பபாடசாலை மாணவனாய் எழுத்துக் கூட்டி வாசிக்கத் தொடங்கினான்.

இருவரி இதழில் குறள் வெண்பா படித்தவன்… முதலிரண்டு பாலும் தேவையில்லை என மூன்றாம் பாலில் மூழ்கத்தொடங்கினான்.

சிறுசிறு முத்தத்தொகை கொண்டே குறுந்தொகை படிக்க, இதழை நெருங்கியதும் குறுந்தொகை நெடுந்தொகையாகிப்போனது.

கள்ளுண்டு கலித்தொகையில் கலித்தவன், முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடிக்கும் அந்தாதி படித்தான் அசறாமல்.

முத்தத்தூது விட்டு மோகச்சிலைக்கு உயிர் கொடுக்க, அதுவோ நாணம் பூட்டிக்கொண்டு கண்திறக்க மறுக்க… 

முத்தச்சாவி கொண்டே நாணப்பூட்டைத் திறக்க, நாணந்துறந்தவளோ நாயகனைப் பூட்டிக்கொண்டாள்.

ஆடைபறித்தவனே ஆடையாகிப்போக, நாணத்தை உதறிவிட்டு நாயகனை உடுத்திக் கொண்டாள் நங்கை.

கவிபடிக்கத் தொடங்கியவன்… கவிபடைக்கத் தொடங்கினான்.

வரி வரையறைகளுக்கு கட்டுப்படாத புதுக்கவிதை அவன் படைக்க,

தானொரு இலக்கணப்பிழை என எண்ணியிருந்தவளிடம், தனக்கு இலக்கணங்கள் தேவையில்லை… தானொரு புதுமைக் கவிஞன் என பதுமையிடம்  புதுக்கவி படிக்க,

பொழிப்புரை தேவையில்லாமலே பாடம்படித்தாள் பதுமையும்.

ஏடுகொண்டு எழுதா பெண்கவிதையை… விரல்கொண்டு வாசித்தான்.

சிற்பி செதுக்காத சிற்பத்தை கண்களால் உண்டான். மீசைத்தூரிகை கொண்டு மோகச்சிலைக்கு வர்ணம் பூச, இச்சிலை என்ன!! எந்த வர்ணம் பூசினாலும் நாணச்செம்மையை மட்டுமே பூசிக்கொள்கிறது. 

கொடுக்கலும் வாங்கலும் தீராத வட்டிக் கணக்காகப் போய்க்கொண்டிருந்தது முத்தக்  கணக்கு வழக்கு.

காதலோடு கூடல் கேட்டவனுக்கு, கவிதையாய் கூடல் காரிகையோடு.

தீ தித்திக்குமா!!! தித்தித்தது அவனுக்கு!!!

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே

…………

பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வரத்

தூது விடும் கண்ணோ

வீணையெனும் மேனியிலே

தந்தியினை மீட்டும்

கை விரலில் ஒரு வேகம்

கண்ணசைவில் ஒரு பாவம் 

வானுலகே பூமியிலே

வந்தது போல் காட்டும்

ஜீவ நதி நெஞ்சினிலே

ஆடும் ஓடும்

மோதும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும்

தாமரைதான் பெண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே

தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற

மாலையிலே பரிமாற 

வாழையிலை நீர் தெளித்து

போடடி என் கண்ணே…

இங்கே ஒரு விசித்திர விருந்து பரிமாறப்பட்டது.‌.. பரிமாறுபவள் பசியாறுகிறாள் என, காமன் தனது கையேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டான் இந்த நாளை. 

காலையில் கண்விழித்தவன், குழந்தையாய் தனக்குள் சுருண்டு தூங்குபவளையே பார்த்திருந்தான். இரவின் மிச்சங்கள் எழுத்துப்பிழையாய் மனையாளின்மீது. பார்த்தவனுக்குள்ளும் சிறு வெக்கம் மிடுக்காக அரும்பியது. ‘உன்னைய யாருடி இம்புட்டு கலரா பொறக்க சொன்னது. கைவைக்க முடியல. இன்னைக்கி நெறைய மேக்அப் போடவேண்டியிருக்கும்‌.’ குறைபட்டுக் கொண்டான். 

அவள் முகம் காட்டிய நிர்மல்யம் மனதிற்கு நிறைவைத் தந்தது. 

அவனுக்குள் சிறு சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது. எங்கே தனக்குள் சுருக்கிக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு தான் கையாண்டான். ஆனால் பச்சரிசி சாதமாய் குழைந்தாள் அவனது கைகளில். தனது நெருக்கம் அவளது பழைய வடுக்களை கீறிவிடுமோ என பயந்தான். காலம் காயத்தை ஆற்றியிருக்கும். ஆனால் வடுக்கள்? மீண்டும் கீறிவிடுமோ என அச்சம் இருந்தது. அதனால் தான் அவன் காலம் கடத்தியதும். ஏனெனில் இம்முறையும் அவள் உடலளவிலும், மனதளவிலும் திருமணத்திற்கு தயாராகவில்லை. சக்தியைத் தவிர்ப்பதற்காகவே அவசரப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லியது. 

அவனது இத்தனை நாட்களின் காத்திருப்பும் அவளைப் பழைய நினைவுகளிலிருந்து வெளியேற்ற. உடனே தாம்பத்யத்தைத் தொட்டிருந்தால் அவள் பழைய நினைவில் அலைக்கழிந்து, அவனையும் அலைக்கழித்திருப்பாள். நினையாதே என்பது குரங்கை நினைத்துக் கொண்டு மருந்தைப் குடிக்காதே என்பதற்கு சமம். அவன் அவளை மறக்க சொல்லவில்லை… தன்னை நோக்கி முழுமையாக இழுத்து மறக்கடித்தான் என்று தான் சொல்லவேண்டும்.

மெதுவாக அவளை நகர்த்திவிட்டு, எழுந்தவன் குளியலறை சென்றான். குளித்துவிட்டு வெளியே வர தலையோடு இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு பட்டென போர்வையை இழுத்து முடியது எதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்தது. சிரித்துக் கொண்டே இறங்கிவிட்டான். 

அவன் சென்றதை அறிந்து, அவளும் எழுந்து குளித்துவிட்டு கீழே வர,

ஃபோனைப் பார்த்துக்கொண்டு ஷோபாவில் அமர்ந்திருந்தான். அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் நேரே சமையலறை செல்ல, 

“காஃபி ஃப்ளாஸ்க்ல இருக்கு.” என பின்தொடர்ந்தது அவன் குரல். ஊற்றிக்கொண்டு வெளியேவர,

மஞ்ச குளிக்கையில மங்கை

உடல் முழுதும் காயத்த நான் பார்த்தேன்

உன் ஒடம்புலதான் நான் புகுந்துக்கிட்டேன்

உன் உசிருலதான் நான் சேர்ந்துக்கிட்டேன்

பேசி மயக்குற ஆசாமி

உன்ன பாத்து நடுங்குறேன் போ சாமி

என்ற பாடலை ஒலிக்கவிட, அவனை முறைத்துக் கொண்டே காஃபியை பருகினாள்.

“நீ போட வேண்டிய பாட்டு. அதான் தேடி சிரமப்பட வேண்டாம்னு செலக்ட் பண்ணி வச்சே.” எனக் கூறி கண்ணடிக்க, வாய்விட்டு சிரித்தாள். அவனது குறும்பில் அவளது தயக்கம் ஓடிவிட, அவன் அருகில் வந்தவளை… இழுத்து மடியில் அமர்த்தினான்.

“எதுக்குடி சிரிச்ச.”

“மாமாஆ… எனக்கு ஒரு டவுட்டு?” என்றாள் வில்லங்கமாக.

“என்ன டவுட்டு. கேளு… கேளு… மாமா ஒன்னொன்னா சொல்லிக் கொடுக்கறே.” கண்களில் கள்ளத்தனம்.

“இல்ல… எம்மேல ஹேன்டில் வித் கேர்னு ஸ்டிக்கர் ஏதும் ஒட்டிருந்துச்சா மா..ம்மா.” விஷமம் காட்டியது கண்கள்.

“தேவ தான்டி எனக்கு. ஏதோ வெவரம்புரியாதவளாச்சேனு பாவம் பாத்தேன்ல, உனக்கு இந்த அவமானம் வேணுன்டா சக்தி.” எனத் தனக்குத்தானே கூறிக்கொள்ள, 

அவனை இறுக்கி அணைத்திருந்தாள் அவனது காரிகை. கண்களில் கண்ணீர் குளம்.

“எனக்கு பழசு நெனப்பு வந்திரக்கூடாதுன்னு தானே மாறன்.” எனக் கேட்க,

“ஹேய்ய்… என்னாடி இது?” எனப் பதறியவன்,

“அடிக்கடி நீ… இந்த சக்தி மாறன் பொண்டாட்டிங்கறத மறந்துர்ற பொம்மி.” என்ற வார்த்தைகள் பவ்லிடுக்கில் வெட்டுப்பட்டு விழுந்தன. இப்பொழுது நீ என் மனைவி. அதைத்தவிர உனக்கு வேற நினைப்பு வரக்கூடாது என்ற கண்டிப்பு அதில் தொக்கி நின்றது. 

சட்டென கண்களைத் துடைத்துக் கொண்டவள், முருவல் பூத்தாள்.

இவனோ உதடு ஒட்டா உயிரெழுத்துக்களைப் போல… மெய்யெழுத்தைத் தீண்டாமல், அவளை எட்டிநின்று காதலால் கட்டியிழுக்க , அவளோ உன் மெய் நானறிவேன் என கட்டியம் கூறினாள்.  

“சொல்லணும்னா சொல்லிரு லட்டு. மனசுல வச்சு அழுத்தாத.” என்க,

“சொல்ற அளவுக்கெல்லாம் பெருசா ஒன்னும் இல்ல. அவன் அவ்ளோ பெரிய ஆளுமில்ல.” கழுத்தை கட்டிக்கொண்டு நொடிப்பாய்க் கூற,

“ம்ம்… அப்புறம்.” கதை கேட்பவனாய் தலையாட்ட,

“இங்க என்ன கதையா சொல்றாங்க. ம்ம்ம் கொட்டுறீங்க.”

“உம்ம் கொட்டினாத்தான் கதை சொல்றவங்களுக்கும் இன்ட்ரஸ்ட் வரும்.” என்க, அவளுக்கும் புரிகிறது, தன்னை இலகுவாக்க பேச்சை வளர்க்கிறான் என்று.

“பேருதான் நாகராஜன். ஆனா அவன் நாக பாம்பு இல்ல மாறன். தண்ணிப்பாம்பு.” என்றாள் முகம் சுழித்து. 

“என்னடி சொல்ற?” புரியாமல் கேட்க,

“ம்ம்ம்… சொல்றாங்க சொரக்காய்க்கு உப்பில்லைனு. அவனுக்கு பாம்பு மாத்திரை போட்டா தான் வேலை செய்யும்.” என அவள் சொன்ன தொனி அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும், அமைதியாக புருவம் சுருக்கி, “ம்ம்ம்.” என தலையாட்டி, நெசமாவா எனும் தொனியில் கேட்க,

அவளும் உதட்டைப்பிதுக்கி, கண்களைமூடி ஆமெனத்தலையை  ஆட்டினாள் மாறனின் மணாட்டியாக குறும்போடு.

(அனைவருக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துக்கள் மக்களே. இந்நாளில் தொட்டது துலங்க அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள். ஒரு சிறு தகவல். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இம்மூன்றில் வெற்றிலை சரஸ்வதி, பாக்கு சக்தி, சுண்ணாம்பு லஷ்மி. அதனால தான் சுண்ணாம்ப சும்மா தரமாட்டாங்க. எங்களுக்கு தெரியாதானு கேக்குறது தெரியுது ஃப்ரன்ட்ஸ். எனக்கு தெரியும்னு எப்படி சொல்றது.🙈)

error: Content is protected !!