மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 10

என்ன நடந்ததென்று புரியாமல் மொத்த குடும்பமும் அமைதியாக நிற்க, சூர்யா, தியா அருகில் வந்தவன். அவள் தலையை மெதுவாக வருடி, “எனக்கு ஒரு தங்கச்சி இல்லன்னு இதுவரை எனக்கு ஒரு ஃபீல் இருந்துச்சு தியா… ஆனா, இப்ப இல்லம்மா, இத நீ செஞ்ச உதவிக்காக சொல்றேன்னு நெனக்காத தியா, உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு, மனசல சொல்றேன்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்த தியா, “எதுவும் சொல்ல வேணாம்” என்பதுபோல் தலை இட வலமாக ஆட்ட, சூர்யா கண்மூடி திறந்து “சரி” என்றதும் தான் தியாவுக்கு மூச்சே வந்தது.

 

 

அனைவரும் என்ன ஏதென்று குழம்பி நிற்க, நிலவன், சூர்யா அருகில் வந்தவன், “இங்க என்ன நடக்குது சூர்யா? நீங்க என்ன பேசுறீங்க? தியா அப்டி என்ன செஞ்ச? என்று கேட்க… சூர்யா அங்கிருந்தவர்களை ஒரு முறை சுற்றி பார்த்தவன். “நானும், என் குடும்பமும் இன்னைக்கு உயிரோட இருக்க இவ தான் நிலவா காரணம். இவ மட்டும் சரியான நேரத்துல எனக்கு உதவி செய்யாம இருந்திருந்த இன்னேரம் என்னோட மொத்த குடும்பமும் அவமானம் தாங்க முடியாம தற்கொலை பண்ணிட்டு இருப்போம்” என்று சொல்ல மொத்த குடும்பமும் கொலை நடுங்கி விட்டது.

 

 

“என்ன சொல்ற சூர்யா? தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு அப்டி என்ன பிரச்சனை வந்து உனக்கு? ஏன் எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல?” என்று அகரன் பதற…

 

 

“பிரச்சனை சின்னதா இருந்திருந்த சொல்லி இருப்பேன் அகரா. ஆனா, உங்களால தீக்க முடியாத அளவு பெரிய சதியில நா மாட்டிக்கிட்டேன். என்னோட பிஸ்னஸ் பாட்னர் ஒருத்தனை நம்பி கோடி கணக்குல கடன் வாங்கி ஒரு பிஸ்னஸ் ல இன்வெஸ் பண்ணேன். பிஸ்னஸ் எல்லாம் கூட நல்லா தான் போச்சு. நா போட்ட பணம் கூட திரும்பி வந்தது… ஆனா, என்றவன் குரல் கம்மி விட நிலவன் சூர்யா தோளை ஆதரவாக தாங்கிக் கொள்ள… சூர்யா சற்று நிதானித்தவன். “பணம் திரும்பி வந்து அதை வச்சு வாங்குன கடனை திருப்பி தரலாம்னு இருந்த சமயத்துல என்னோட பாட்னர் மொத்த பணத்தையும் எடுத்துட்டு ஊர விட்டே ஓடிட்டான்” என்று சொல்ல மொத்த வீடும் அதிர்ந்தது.

 

 

தாத்தா பதட்டம் குறையாமல். “என்ன‌ தம்பி சொல்ற? அய்யோ! அப்றம் என்ன ஆச்சு? என்று துடிக்க…

 

 

“ஓடிப்போன அவனை தேடி ஒரு பக்கம் நா அலஞ்ச, அதுக்குள்ள அடுத்த பிரச்சனை எனக்கு கடன் தந்தவன் மூலம் வந்திடுச்சு தாத்தா. அவன் என்னை மாட்ட வைக்க தான் தாத்தா, எனக்கு கடன் குடுத்து, என் பிஸ்னஸ் பாட்னர் கூட சேர்ந்து எல்லா வேலையும் பாத்திருக்கான். அவனுக்கு என்னோட பிஸ்னஸ்சை அழிக்கணும். அதோட அவனுக்கும் உங்களுக்கு ஏதோ முன் பகை இருக்கும் போல, அத மனசுல வச்சு. நா உங்க வீட்டு மாப்பிள்ளை ஆகப் போறேன்னு தெரிஞ்சு ப்ளான் பண்ணி என்னை கார்னர் பண்ணி இருக்காங்க. பணத்தை சொன்ன நேரத்துக்கு நா திருப்பி தரலைன்னு என் மேல் போலீஸ் கேஸ் குடுத்து, கரெக்டா கல்யாணத்தன்னைக்கு மண்டபத்தில் வச்சு என்னை அரெஸ்ட் பண்ணி என்னோட சேர்த்து, உங்களையும் அசிங்கப்படுத்த அவன் ப்ளான் பண்ணி இருக்கான் தாத்தா. அது தெரியாம நா அவன்கிட்ட கடன் வாங்கி மாட்டிக்கிட்டேன் தாத்தா” என்றவன் கண்கலங்க நிற்க… 

 

 

“உடனே அந்த ஆளுக்கு பணத்தை திருப்பி தர வேண்டிய கட்டாயம் சம்பந்தி… எங்களால உங்களுக்கும் அசிங்கமாகிடுமேன்ற பயம் வேற‌ ஒரு பக்கம். என்ன செய்றதுன்னு புரியாம, பேசாம மொத்த குடும்பமும் செத்து போலாம்னு கூட யோசிச்சோம்” என்று சூர்யாவின் அப்பா சொல்ல..‌. தாமரை உட்பட அனைவரும் கலங்கி விட்டனர்.

 

 

“ஏன் சம்பந்தி இவ்ளோ நடந்திருக்கு, நீங்க ஏன் ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல, என்கிட்ட சொல்லி இருந்த அந்த பணத்தை நா கொடுத்து இருப்போனே. ஏன் நீங்க இத எங்கிட்ட மறச்சிங்க” என்று திரவியம் தாத்தா ஆதங்கப்பட…

 

 

“என்னத்த கேக்குறது ஐயா… ஏற்கனவே என் பையன் வாங்கின கடனை வச்சு அந்த ஆளு. உங்களையும் சேர்த்து அசிங்கப்படுத்த காத்திருந்தான். அப்டி பட்ட நெலமைல நாங்க எங்கிருந்து உங்ககிட்ட சொல்றது” என்றவர் தலை குனிந்து நிற்க…

 

 

“இப்ப என்ன தான் ஆச்சு? உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லயே? பணம் எதுவும் வேணும்னா சொல்லுங்க மொத்த சொத்தையும் வித்தவது அந்த கடனை அடைப்போம்” என்று அகரன் சொல்ல…

 

 

“அதுக்கு எந்த அவசியமும் இல்ல அகரா” என்ற சூர்யா தியாவை திரும்பி பார்த்தவன். “நா தர வேண்டிய மொத்த பணம் ஏழு கோடியையும் தியா, எனக்கு கடன் குடுத்த அந்த ஆளுக்கு ஒரே செட்டில்மென்ட் ல கொடுத்துட்டா” என்று சொல்ல, அனைவரும் வாயடைத்து போயினர். 

 

 

“ஆமா அகரா… விஷ்வா மூலமா என்னோட பிரச்சனையை தெரிஞ்சுகிட்ட தியா. உடனே என்னை தேடி என் வீட்டுக்கு வந்துட்ட… வந்த அடுத்த ஒரு மணி நேரத்துல அந்த கடன்காரனுக்கு நா தரவேண்டிய மொத்த பணத்தையும் தந்திட்ட, அது மட்டும் இல்ல. அந்த ஆள் என்னோட சேர்த்து தாத்தாவையும் பழிவாங்க திட்டம் போட்டிருக்கா ன்னு தெரிஞ்சு, அவ கண்டாக்ட் வச்சு அந்த ஆள் மேல இருந்த பழைய கேஸ் எல்லாத்தையும் ஓபன் பண்ண வச்சு அவனை உள்ள தள்ளிட்ட, கூடவே என்னை ஏமாத்திட்டு போன என்னோட பாட்னர் இருக்க இடத்தை கண்டு பிடிச்சு அவன்கிட்ட இருந்து என்னோட பணத்தையும் மீட்டு, அவனையும் போலீஸ்ல புடிச்சி கொடுத்துட்டா அகரா. என்னை பொறுத்தவரை தியா பொண்ணு இல்ல. என் மானத்தையும், உயிரை காப்பாத்துன என்னோட குலசாமி அகரா இவ” என்றவன் தியாவை நன்றியோடு பார்க்க. அகரன் தியாவை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றான்.

 

 

சூர்யாவின் குடும்பம் சென்ற பிறகு. புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த பெரிய வீடு. 

 

தாத்தா தியா அருகில் வந்தவர், “நீ வந்து இவ்ளோ நாள் ஆகிடுச்சு, நீ வந்த ஒரு வாரத்துல உங்கப்பனும், அம்மாவும் வருவாங்கன்னு சொன்ன… ஆனா, இன்னும் அவங்க இங்க வர்ல?” என்று தியாவை முறைத்தவர். தாமரை கல்யாணத்துக்கு தான் அவங்களால வரமுடியாது போல, அகரன் கல்யாணத்துக்காது அவங்க வருவாங்களான்னு நானும் பாக்குறேன்” என்று ஒரு மாதிரி சொன்னவர் அங்கிருந்து செல்ல. தியா‌ விழிபிதுங்கி நின்றாள்.

 

 

தியா அமைதியாக மாடியில் நின்று காலையில் நடந்த நிகழ்வுகளை நினைத்து மனம் கலங்கி இருக்க. அந்த நேரம் அவள் ஃபோன் அடித்தது. ஃபோன் எடுத்து பார்த்தவள் முகத்தில் ஒரு வெற்று புன்னகை பரவ, ஃபோனை அட்டன் செய்து காதில் வைத்தவள், “சொல்லு ஜெசி…” என்றாள் சுரத்தே இல்லாமல்

 

 

“ஏய் தியா என்ன இது உன்னோட வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? என்ன ஆச்சு? புதுசா காதல் பண்ண ஆரம்பிச்சு இருக்க லவ் போர்ட் நீ, ஆனா, உன்னோட வாய்ஸ் ல ஒரு பெப்பே இல்ல? என்ன விஷயம் டா?”

 

 

“ஒன்னு இல்ல ஜெசி… உனக்கு தான் தெரியுமே. நான் சூர்யாவுக்கு பணம் கொடுத்த மேட்டர். காலையில அவங்க இங்க வந்து நடந்த எல்லாத்தையும் எல்லார் கிட்டயும் சொல்லிட்டாங்க ஜெசி” என்று சொல்ல…

 

 

“வாவ்!! இது நல்லா விஷயம் தானே தியா… ஏற்கனவே அங்க எல்லாருக்கும் உன்னை புடிக்கும். இப்ப இன்னும் உன்மேல மரியாதை கூடி இருக்குமே, அப்றம் என்ன நாளைக்கு நீயும், உன்னோட அவரும் லவ் பண்ற மேட்டர் தெரிஞ்ச பெருசா ஒரு ப்ராப்ளமும் வராது. உங்க கல்யாணம் ஈஸியா முடிச்சிடும்” என்று ஜெசி சந்தோஷமாக சொல்ல…

 

 

தியா கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தவள். ” ஜெசி உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொல்ல மறந்துட்டேன். தாமரை மேரேஜ் முடிஞ்ச உடனே அகரனுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க” என்று சொல்ல…

 

 

“ஏய் சூப்பர் தியா… இவ்ளோ சீக்கிரம் உன்னோட லவ், மேரேஜ்ல முடியும்னு நா நெனைக்கவே இல்ல” என்று ஆரம்பித்தவள். தியாவின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்து, “ஏய் தியா ஒன் செகண்ட். அகரனுக்கு கல்யாணம்னா சொன்ன? அப்டின்னா அதுக்கு என்ன அர்த்தம்? என்று கேட்க…

 

 

“அப்டின்னா அப்டி தான்… அகரனுக்கு கல்யாணம்… என் தங்கச்சி அரும்பு கூட” என்றவளால் அதை முழுவதுமாக சொல்ல கூட முடியாமல், “ப்ளீஸ் ஜெசி நா அப்றம் பேசுறேன்” என்றவள் ஃபோன் கட் செய்து கீழே போட்டவள் கீழ் இமையை தாண்டி வெளியே வந்த கண்ணீரை துடைத்தபடி காலையில் சூர்யா வீட்டினர் வருவதற்கு முன் தாத்தா சொன்னதை நினைத்து பார்த்தாள்.

 

 

காலையில் மகள், மகன், மொத்த குடும்பத்தையும் அழைத்திருந்த தாத்தா, “தாமரை கல்யாணம் முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் அகரன் கல்யாணம் நடக்க வேண்டும்” என்று சொல்ல, அகரன் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சி… அகரன் அம்மா லட்சுமி, அகிலா பாட்டியை தவிப்பாக பார்த்தவர், தந்தையிடம் ஏதோ பேச வர. தாத்தா கைகாட்டி அவரை நிறுத்தியவர். “இது நா எடுத்த முடிவு. யாரும் இத எதிர்த்து பேச மாட்டீங்கன்னு நெனைக்குறேன். நம்ம ஜோசியர் கிட்ட கூட பேசிட்டேன். பொண்ணு அகரனுக்கு மாமன் மக, நம்ம வீட்டு பொண்ணுன்றனால பெருசா எதுவும் பாக்க தேவையில்லை. அதனால தாமரை கல்யாணம் முடிஞ்ச உடனே இந்த கல்யாணத்தை முடிக்கலாம்னு சொல்லிட்டாரு” என்று உறுதியாக சொல்ல, தியா அதிர்ந்த முகத்துடன் அகரனை பார்க்க, அவன் தியாவை நிமிர்ந்து பார்க்க கூட தைரியம் இல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான். தாத்தாவை எதிர்த்து பேசா யாருக்கு தைரியம் இல்லாமல் போக, அனைவரும் அமைதியாக சென்றனர்.

 

அகரன் அமைதியாக சென்றதை நினைத்து தியா உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்க. தன் பின்னால் யாரோ வரும் காலடி சத்தம் கேட்டு திரும்ப, அங்கு கண்களில் கோபம் கொப்பளிக்க, மூக்கு‌ சிவந்து உடம்பு விறைக்க, தியாவை கொலைவெறியோட பார்த்தபடி தியா முன் வந்து நின்றாள் அரும்பு.

 

“ஏன்டி… நீ எல்லாம் நல்லா இருப்பியாடி. பாவம் என்னோட மாமாவ அழுக வச்சிட்ட இல்ல. தாத்தா காலையில கல்யாணம் பத்தி பேசும் போது, நீயும் மாமாவும் லவ் பண்றிங்கன்னு சொல்ல வேண்டியது தானாடி. காலையில அவ்ளோ நடக்குது நீயும் அமைதியா இருக்க, மாமாவும் அமைதியா குத்து கல்லாட்டம் நிக்குறாரு… ரெண்டு பேரும் என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க… பாவம் மாமா உன்னை ரொம்ப விரும்புறாங்க. இப்ப நீ அவங்களுக்கு இல்லன்னு தெரிஞ்சு எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா” என்று கண்கலங்கியவள். “தாத்தாகிட்ட காதலை சொல்ல தைரியம் இல்லான்னா எதுக்கு டி காதலிச்ச” என்று அரும்பு வாய்க்கு வந்தபடி கத்திக்கொண்டிருக்க, தியா அவளையே இமைக்காமல் பார்த்தவள், ” இதுல நா செய்ய என்ன இருக்கு அரும்பு. அவரே அமைதியா இருக்கும் போது நா என்ன செய்றது, அதோட நீயும் அவர லவ்” என்று தியா ஏதோ சொல்ல வர. “போது நிறுத்து… நீ ஒன்னும் சொல்ல வேணாம். பாவம் மாமா போயும் போயும் உன்ன லவ் பண்ணாரு பாரு அவர சொல்லணும். போடி” என்றவள் அங்கிருந்து அழுதுகொண்டே ஓடிவிட… பாவம் தியா அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றாள். ஆனால், அகரன் கண்டிப்பாக எதாவது செய்வான் என்ற நம்பிக்கை எங்கோ மூலையில் அவள் மனதில் ஒட்டிக் கொண்டிருந்தது.

 

அடுத்தடுத்த விடிந்த பொழுதுகள் அனைத்தும் அனைவரையும் கல்யாண வேலையில் முழ்கடிக்க… தியா, அகரன் எதாவது செய்வான் என்ற நம்பிக்கை உள்ளுக்குள் இருந்தாலும், ஒரு பக்கம் அரும்புவை நினைத்து அவளுக்கு கஷ்டமாக இருந்தது. அரும்புக்கு அகரனை ரொம்ப பிடிக்கும் என்று தியாவுக்கு நன்றாக தெரியும். இந்த சூழ்நிலையில் அவர்கள் கல்யாணம் நின்றால் அரும்பின் நிலை என்ன?? அன்று அகரனுக்காக அரும்பு தன்னிடம் பேசியதெல்லாம் உண்மை தான் என்றாலும் அவளுக்கும் அகரன் மேல் விருப்பம் உண்டு என்று தெரிந்தும் தன் எப்டி அகரனை கல்யாணம் செய்வதென்று கலங்கி தவித்தாள். இதில் தியாவை அதிகம் குழப்பிய விஷயம் நிலவன் தான். தியாவுக்கு நன்றாக தெரியும், நிலவனுக்கு அரும்பு மேல் விருப்பம் இருக்கிறதென்று‌. அப்டி இருந்தும் நிலவன் ஏன் தாத்தா… அரும்பு, அகரன் கல்யாணம் பற்றி பேசும் போது எதுவும் பேசவில்லை என்பது வேறு அவளுக்கு உறுத்தலாக இருந்தது. நிலவனை சந்தித்து இது பற்றி பேசா தியா நேரம் பார்த்திருக்க நிலவன் கல்யாணம் வேலையில் முழுவதும் முழுகி இருந்தால், தியாவினால் அவனை பார்க்க கூட முடியாமல் போனது.

 

விதி யாரோட யாரை சேர்க்கும். யாரின் காதல் கல்யாணத்தில் முடியும் என்று காதல் மனங்கள் கலக்கிக் கொண்டிருக்க… தாமரை, சூர்யாவின் கல்யாண நாளும் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!