மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 14

அந்த நேரம் ஜெசியை அங்கு எதிர்பார்க்காத தியா அதிர்ந்து நின்றவள். சூர்யாவை பார்க்க, “நா உனக்கு கொடுத்த சத்தியத்தை மீறல தியா. நா எதையும் என் வாயால சொல்லல, அந்த நாய் விஷ்வா வாயில நாலு மிதி மிதிச்சு, சொல்ல வச்சேன்” என்றவனை தியா ஆற்றாமையுடன் பார்க்க,

 

 

 “சாரி தியா… நானும் உன் சிஸ்டர்கிட்ட‌ எதையும் சொல்லணும்னு நெனச்சு சொல்லல, அன்னைக்கு நீ மிஸ்டர் அகரனுக்கு கல்யாணம்னு சொல்லிட்டு ஃபோன் கட் பண்ணிட்ட, நானும் உன்னை டிஸ்டப் பண்ண வேணாம்னு விட்டுட்டேன். பட் நீ உன்னோட எல்லா பிஸ்னஸையும் கிளாஸ் பண்ண சொல்லி எனக்கு மெயில் பண்ணதும்‌. எனக்கு ஒன்னு புரியல, ஐ அம் டோடலி கன்பியூஸ்டு தியா, அதான் உனக்கு கால் பண்ணேன், லைன்ல யாரு இருக்கான்னு கூட யோசிக்காம எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்ற ஜெசி அரும்பை பார்க்க, “ஆமாக்கா… அன்னைக்கு அந்த ஃபோன் நா தான் அட்டென் பண்ணேன். நா பேச ஆரம்பிக்கும் முன்னையே இந்த அக்கா மளமளன்னு எல்லாத்தையும் கொட்டிட்டாங்க… அப்ப தான்க்கா எனக்கு உண்மை தெரிஞ்சுது” என்றவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்க, தியாவின் பார்வை முழுவதும் தன் தாத்தா, பாட்டி மீது தான் இருந்தது. இருவரின் பார்வையும், “ஏன்டி இப்டி செஞ்ச? எங்ககிட்ட சொல்லியிருக்கலாமில்ல?” என்று குற்றம் சாட்ட, தியா முகம் உணர்ச்சி துடைத்து நிர்மலமாக இருந்தது. பல வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இழப்பை, இப்போது நினைத்தவளுக்கு கண்களில் கண்ணீர் கூட வராது அமைதியாக நின்றாள். 

 

 

“ஏன்டி?? ஏன் இப்டி?” என்று கலங்கிய அகிலாபாட்டியை இறுக்கி அணைத்தவள், “நா வேணும்னு பண்ணல பாட்டி, ரொம்ப வருஷம் கழிச்சு, இந்த வீட்டுல நடக்கும் நல்ல காரியத்துக்கு உங்க பையனும், மருமகளும் பேத்தியோட வருவாங்கன்னு ஆச ஆசைய எதிர்பார்த்துட்டு இருக்க உங்க எல்லார்கிட்டயும் அவங்க இனி வரவே மாட்டாங்க, இனிமே நீங்க அவங்ககளை பாக்கவே முடியாத இடத்துக்கு போய்டாங்கன்னு சொல்ல எனக்கு வாய் வர்ல பாட்டி, அட்லீஸ்ட் தாமரை கல்யாணம் முடியும் வரைக்கும் நீங்க எல்லாம் சந்தோஷமா இருக்கணும்னு தான் பாட்டி நா எதுவும் சொல்லல” என்றவள் பாட்டியை மீண்டும் கட்டிக்கொள்ள… 

 

 

மகனும், மருமகளும் இந்த உலகத்தில் இல்லை என்ற துயரத்தை விட இத்தனை வருடம், தங்கள் பேத்தி இத்தனை உறவுகள் இருந்தும் அனாதை போல் தனியாக இருந்திருக்கிறாள் என்ற உண்மை திரவியம் தாத்தாவை கொல்லாமல் கொன்றது. மெல்ல பேத்தியின் தலையில் கைவைத்த தாத்தா, “சாகும்போது கூட உங்கப்பனுக்கு எங்க மேல இருந்த கோவம் போல இல்லம்மா, அதான் நீ எங்ககிட்ட வர்ல இல்லை” என்ற தாத்தாவை நிமிர்ந்து பார்த்த தியா, இல்லை என்று தலலயாட்டியவள். “இல்ல தாத்தா, நீங்க நெனைக்குறது தப்பு, அப்பாக்கு எப்பவுமே உங்க மேல கோவம் இருந்ததில்ல, அவரோட மனசு புரியாம நீங்க கல்யாண ஏற்பாடு செஞ்சீங்கன்னு சின்ன வருத்தம் தானே தவிர கோவமெல்லாம் இல்ல தாத்தா. உயிர் போற நேரத்துல அவர் கடைசியா பாக்க ஆசைப்பட்டது உங்கள, பாட்டிய அடுத்து” என்று அகரனை பார்த்தவள். அவர் தூக்கி வளத்த அகரனையும் தான் அவர் கடைசியா பாக்க ஆசைப்பட்டாரு… ஆனா,?” என்றவள் வந்த அழுகையை அடக்கி இழுத்து மூச்சு விட்டவள். “அப்பா, அம்மா சாகும்போது எனக்கு பதிமூனு வயசு தாத்தா, இப்பவும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… அப்பா விஷ்வாவோட அப்பா சிவா அங்கிள் கைய புடிச்சிட்டு, எனக்கு என்னோட அப்பாவ ரொம்ப புடிக்கும்டா, அதே மாதிரி தான் அவரும். அவருக்கு நான்னா உயிரு. நா எங்கயே பொண்டாட்டி, புள்ளையோட‌ நல்லா இருக்கேன்ற நிம்மதியில் தான் அவரு இருக்காரு… அவருக்கு மட்டும் என்னை பத்தி சேதி தெரிஞ்ச அந்த மனுஷன் உயிரையே விட்ருவாருடா. எனக்கு அவரையும், அம்மாவையும் கடைசிய ஒருதரம் பாக்கணும்னு ஆசையா இருக்குடான்னு” அங்கிள்கிட்ட கதறி அழுதுட்டு இருந்தாரு, ரூம் வெளிய நின்னுட்டு இருந்த எனக்கு அது நல்லா கேட்டுச்சு தாத்தா, அப்ப தான் எனக்கு தெரிஞ்சுது. உங்களுக்கும் அப்பாவை எவ்ளோ புடிக்கும்னு. அப்ப எனக்கு தோணுச்சு, அவருக்கு உடம்பு சரியானதும் அப்பாவ உங்க கிட்ட கூட்டி வந்து, பாருங்க தாத்தா, எங்கப்பா ரொம்ப பாவம். அவரு உங்கள ரொம்ப மிஸ் பண்றாரு, ப்ளீஸ் அவரை மன்னிச்சிடுங்கனு உங்ககிட்ட கேட்டு, உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்னு‌ நெனச்சேன்” என்றவள் பார்வை எங்கோ வெறிக்க,” ஆனா, அப்பா, அம்மா அந்த சான்ஸ் எனக்கு தரவே இல்ல தாத்தா, ரெண்டு பேரும் ஒரே டைம்ல என்னை விட்டு போய்ட்டாங்க” என்றாள் வறண்ட குரலில்…

 

 

“சிவா அங்கிள் கூட என்கிட்ட கேட்டாரு, எப்டியாது உங்களை தேடி கண்டுபுடிச்சி அப்பா, அம்மா டெத் பத்தி சொல்லலாம்னு. ஆனா, நா தான் வேணாம்னு சொல்லிட்டேன். அப்பா சொன்ன மாதிரி எங்கயோ நாங்க நல்லா இருக்கோன்ற‌ நெனப்புல இருக்க உங்க நிம்மதியா கெடுக்க, அப்பா மாதிரியே நானும் விரும்பல, சோ நானே அப்பா, அம்மாவோட எல்லா காரியங்களையும் முடிச்சேன். சிவா அங்கிள் என்னை அவர் வீட்டுல இருக்க சொன்னாரு, பட் நான் அதுக்கு ஒத்துக்கல, அப்பாவோட பிராப்பர்டி எல்லாத்தையும் அவர் கண்ட்ரோல்ல விட்டுட்டு, நான் சிவா அங்கிள்‌ ஃபிளாட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன ஃபிளாட் எடுத்து தங்கிக்கிட்டேன். அங்க தான் ஜெசிய பாத்தேன். விஷ்வா மாதிரியே ஜெசியும் எனக்கு நல்லா ஃப்ரெண்டா ஆகிட்ட, ரெண்டு பேரும் ஒன்ன படிப்ப முடிச்சோம். சிவா அங்கிள் அப்பா பிராப்பர்டி எல்லாத்தையும் என் பேர்க்கு டிரான்ஸ்வர் பண்ணிட்டாரு, அத வச்சு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணேன். அப்ப தான் ஒரு நாள் விஷ்வா என்னை விரும்புறேன்னு சொன்னான். எனக்கு அவனை புடிக்கும் தான்… ஆனா, அவன் மேல எனக்கு எப்பவும் காதல் இருந்தது இல்ல. சோ நா அவன்கிட்ட யோசிக்க கொஞ்சம் டைம் கேட்டேன். அவனும் வேல விஷயமா ஆஸ்திரேலியா போறேன். நா திரும்பி வந்ததும் உன் முடிவ சொல்லுன்னு சொன்னான். அந்த நேரம் தான் நீங்க எங்களை தேடிட்டு இருக்கீங்கன்னு அப்பாவோட பழைய ஃப்ரெண்ட் சரவணன் அங்கிள், சிவா அங்கிள்ல காண்டாக்ட் பண்ணி சொன்னாரு… அப்ப எனக்கு இருந்த சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது தாத்தா. பல வருஷம் யாரும் இல்லாம அனாதைய இருந்த எனக்கு, இப்டி ஒரு பெரிய ஃபேமிலில நானும் ஒரு ஆள்னு நினைக்கும் போது எப்டி இருந்துச்சு தெரியுமா தாத்தா??…” என்வற‌ள் கண்களில் மின்னல் வெட்டியது. “பட் அந்த சந்தோஷம் ஒரு நிமிஷம் கூட நீடிக்கல, நா இங்க வந்த அப்பா, அம்மா பத்தி உங்களுக்கு தெரிஞ்சிடுமேன்னு ரொம்ப பயமா இருந்துச்சு, பட் உங்க எல்லாரையும் பாக்கணும்னு ரொம்ப ஆசையாவும் இருந்துச்சு, என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கும் போது ஜெசி தான் எனக்கு தைரியம் சொல்லி இங்க அனுப்பி வச்ச, நானும் கல்யாணம் வரை இருந்துட்டு. அப்பா, அம்மா வேலை பிஸில வர்லன்னு சொல்லிட்டு இங்க இருந்து கெளம்பிடலாம்னு தான் முதல்ல நெனச்சேன்… பட் இங்க வந்து உங்க எல்லாரையும் பார்த்த பின்னாடி எனக்கு இங்க இருந்து போகணும்னே தோணல தாத்தா” என்றவள் அகரனை அழுத்தமாக பார்க்க, அவனுக்கு அவள் பார்வையின் அர்த்தம் தெளிவாக புரிந்தது.

 

 

“தாமரை கல்யாணம் முடிஞ்சதும் உங்க எல்லார்கிட்டயும் உண்மைய‌ சொல்ல நினைக்கும் போது தான் தாத்தா உங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சு, டாக்டர் உங்களுக்கு சின்ன டென்ஷன் கூட குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு, அந்த நேரத்துல போய், நா அகரனை விரும்புறேன்னோ, இல்ல நீங்க இத்தனை வருஷம் பார்க்க காத்திருந்த உங்க புள்ளை உயிரோட இல்லைனு சொல்ல என்னால முடியல தாத்தா… அடுத்து என்ன செய்றதுனு குழம்பிட்டு இருக்கும்போது தான் அந்த விஷ்வா என்னோட சிட்டுவேஷனை அவனுக்கு சாதகமா யூஸ் பண்ணி, அவனுக்கும் எனக்கும் கல்யாணம் அது இதுன்னு கத கட்டி வூட்டான். நீங்களும் அத நம்பிட்டீங்க. அவனுக்கு நல்லா தெரியும். நா உங்ககிட்ட உண்மைய சொல்ல மாட்டேன்னு. அதான் விஷ்வா அப்டி ஒரு பொய்ய சொன்னான். அடுத்து என்ன பண்றதுனு புரியாம இருந்த நா. அவன் சொன்ன பொய்யையே யூஸ்‌ பண்ணி இங்க இருந்து போய்டேன். எப்பவும் அப்பா, அம்மா பத்தி உங்களுக்கு தெரியாமயே இருக்காட்டும்னு தான் நா போய்டேன். அந்த நேரம் கனடால இருந்த தாமரை, சூர்யா அண்ணாக்கு கூட இங்க நடந்த எந்த மேட்டரையும் சொல்லகூடாதுனு ஜெசிகிட்டயும் சொல்லிட்டேன்.” என்றவள் கண்ணீர் வறண்ட கண்களுடன் நிற்க, குடும்பம் மொத்தமும் அவளை தாங்கி அணைத்துக் கொண்டது.

 

 

“இங்க என்ன நடந்ததுன்னு யாரும் எனக்கு சொல்லல… தியா என்னோட அப்பாகிட்டயும் நாங்க திரும்பி இந்தியா வர்ர வரைக்கும் எதுவும் சொல்ல கூடாதுனு சொல்லி வச்சிருந்திருக்கா, சோ அப்பாவும் எதுவும் சொல்லல, விஷ்வா சொல்லி ஏற்கனவே தியா அப்பா, அம்மா இறந்த விஷயம் எனக்கு தெரியும்.‌ அத உங்க யார்கிட்டேயும் சொல்ல கூடாதுனு தியா என்கிட்ட சத்தியம் வாங்கிட்ட, நாங்க இந்தியா வந்த பின்னாடி தான் இங்க நடந்த எல்லாம் எனக்கு தெரிஞ்சுது. தாத்தா தியாவ வீட்டை விட்டு அனுப்புனது, அதுக்கு காரணம் விஷ்வான்னும் தெரிஞ்சுது. நா தியா பத்தி தாத்தா கிட்ட பேச கிளம்பும்போது தான். விஷ்வா என்னை பாக்க வந்தான். தியா கனடால இருந்த பிஸ்னஸ் எல்லாத்தையும் ஜெசி பேருக்கு டிரான்ஸ்வர் பண்ணிட்டு இந்தியாக்கு வந்துட்டா, பட் அவ இப்ப எங்க இருக்கானு தெரியல, அவளை கண்டுபிடிக்க ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டு வந்தவன் செவுல்லையே நாலு அறை வூட்டு இங்க இழுத்துட்டு வந்தேன்” என்ற சூர்யா அன்று விஷ்வா அங்கு அழைத்து வந்தது பற்றி சொன்னான்.

 

 

சூர்யா கண்கள் கோவத்தில் கொதித்துக்கொண்டிருக்க, விஷ்வா தன் செய்த தவறை நினைத்து குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து நின்றான்.

 

 

“சூர்யா என்ன இது? எதுக்கு இவனை அடிக்குறீங்க? இவன் நம்ம தியாவோட” என்று செந்தில் ஆரம்பிக்கும் போதே கைகாட்டி அவர் பேச்சை நிறுத்தியவன். “இல்ல சித்தப்பா, நீங்க எல்லாரும் நெனச்சிட்டு இருக்குறது தப்பு, இவனுக்கும் தியாவுக்கும் சின்ன வயசு நட்பு தவிர்த்து எந்த உறவும் இல்ல. இவன் உங்ககிட்ட சொன்னது பூரவும் பொய்… இவனுக்கு தியாவை கல்யாணம் பண்ணனும்னு ஆசை. ஆனா, நம்ம தியா அகரனை விரும்புறான்னு தெரிஞ்சு, அவ சூழ்நிலையை இவனுக்கு சாதகமா யூஸ் பண்ணிட்டு இருக்கான் இந்த ராஸ்கல். நீங்களும் இவன் பேச்ச நம்பி தியாவை வீட்ட விட்டு அனுப்பிடீங்க” என்றவன் விஷ்வா கன்னத்தில் மறுபடியும் ஓங்கி ஒன்று வைத்து, “சொல்லுடா… தாத்தாகிட்ட உண்மையா சொல்லு” என்று அவனை பிடித்து தாத்தா அருகில் தள்ள, விஷ்வா கையெடுத்துக் கும்பிட்டவன். “என்னை மன்னிச்சுருங்க தாத்தா, நா அன்னைக்கு சொன்னது எல்லாம் பொய் தான். தியாக்கும் எனக்கும் கல்யாணம்னு சொன்னது எல்லாம் பொய் தான். எனக்கு அவளை புடிக்கும். எங்க அவ எனக்கு கிடைக்காம போய்டுவளோனு பயந்து தான். நா அப்டி பொய் சொல்லிட்டேன்” என்றவன் கன்னத்தில் அகரன் கை அழுத்தமாக பதிந்திருக்க, தாத்தா அப்டியே நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்து விட, வீட்டில் அனைவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நின்றனர்.

 

 

“இங்க என்ன நடக்குது மாப்ள, இந்த பையன் என் பேத்தியை பத்தி சொன்னது பொய்னா? அப்ப திரவி ஏன் அன்னைக்கு பேசாம இருந்தா? நா வீட்ட விட்டு அனுப்பும் போது கூட எதுவும் பேசாம ஏன் அமைதியா வீட்டை விட்டு போனா…?” என்று தலையை பிடித்துக்கொள்ள… 

 

 

அரும்பு மெதுவாக தாத்தா அருகில் வந்து அவர் கால்மாட்டில் அமர்ந்தவள். “அக்கா உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் தாத்தா ஒன்னுமே சொல்லாம போய்டுச்சு, அக்கா ரொம்ப பாவம் தாத்தா” என்று தேம்பி அழுதவளை அனைவரும் புரியாமல் பார்க்க, சூர்யா அவள் அருகில் வந்தவன். “உனக்கு தெரியுமா அரும்பு?” என்று கேட்க, அவள் தலையை மேலும் கீழும் ஆட்டி “ஆமாம் அண்ணா” என்று சொல்ல, “கடவுளே” என்று மேலே பார்த்து கையெழுத்து கும்பிட்டவன். “தியா என்கிட்ட அவ தலையில அடிச்சு சத்தியம் வாங்கி என் வாயை கட்டிட்ட அரும்பு, நீயாது உண்மையை சொல்லும்மா” என்று அவளிடம் கொஞ்ச, 

 

 

“ஏய் அரும்பு இங்க என்னடி நடக்குது? என்ன உண்மை? தியா ஏன் வீட்டை விட்டு போச்சு…? எனக்கு நல்லா தெரியும் தியா அகரன் மேல உயிரா இருந்தா, அப்டி இருக்க இந்த விஷ்வா அன்னைக்கு அவ்ளோ பேசும்போது அவ ஏன் அமைதியா இருந்த? ஏன் வீட்ட விட்டு போனா? சொல்லுடி” என்று நிலவன் அரும்பை பிடித்து உலுக்க..‌. 

 

 

“மா… மாமா…. அக்… அக்கா… அகரன் மாமாக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு நெனச்சு தான் மாமா போய்டுச்சு…” என்று தேம்பியவள் “அக்கா பாவம் மாமா, அது ரொம்ப பாவம்‌. அரவிந்தன் பெரியப்பா… பெரியப்பா… பெரியம்மா இல்ல மாமா, அ… அவங்க… இல்ல மாமா…” என்று கண்ணில் வழிந்த கண்ணீரை முழங்கையால துடைத்தபடியே சொல்ல…

 

 

நிலவன் அவள் தலைமுடியை கொத்தாக பிடித்தவன் “ஏய் என்னடி சொல்ற? லூசு மாதிரி எதையாவது ஒளறி வைக்காத? என்ன பேசறன்னு தெரிஞ்சு தான் பேசுறீய?” என்று கத்த…

 

 

“அவங்க உண்மையை தான் சொல்றாங்க மிஸ்டர். நிலவன். தியாவோட அப்பா, அம்மா இப்ப உயிரோட இல்ல. தியாக்கு பதிமூனு வயசு இருக்கும்போதே அவங்க 

 

ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க” என்ற விஷ்வாவின் வார்த்தையில் மொத்த குடும்பமும் உயிர் கொடி அறுந்து நின்றது. 

 

 

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!