மனதோடு மனதாக – 21

800px_COLOURBOX6977279

மனதோடு மனதாக – 21

21 

“வெண்ணிலா.. எல்லாமே எடுத்து வச்சிட்டியா? ஹான்ட்பேக்ல மாமா சொன்னது போல எல்லாமே ஹான்டியா எடுத்து வச்சிட்டியா?” காரில் அவளது பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டே திலீபன் கேட்க,

“எடுத்து வச்சிட்டேன்டா அண்ணா..” என்றவள், ஒரு பெருமூச்சை வெளியிட,

“ஏன் நீ ஃப்ளைட் ஓட்டறது போல இப்படி மூச்சு விடற?” சுபத்ரா கேலி செய்ய,

“இல்ல பெரியம்மா.. ஃப்ளைட்ல போறது கொஞ்சம் பயமா இருக்கு. ஃபர்ஸ்ட் டைம் இல்ல.. அது தான்.. மாமா கூட இருந்தா நல்லா இருந்திருக்கும்.” அவளது மனதினில் சிறிய பதட்டம்..

சேகர், பிருந்தா இருவருமே அவளை வழியனுப்ப வந்திருக்க, கவினின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் ப்ரியா வீட்டிலேயே தங்கிக் கொண்டாள்..  

“அது தான் கூட ஸ்ருதி இருக்காங்க இல்ல.. அவங்க பார்த்துப்பாங்க. நீ டென்ஷன் ஆகாம போ.. மாமா கூட நல்லா டைம்மை என்ஜாய் பண்ணிட்டு வா..” தைரியம் சொல்லிக் கொண்டே திலீபன் அவளது கன்னத்தைத் தட்ட, பூரணியோ, முதன்முறையாக தன்னை விட்டுத் தொலை தூரம் செல்லும் மகளைக் கண்கள் கலங்க பார்த்துக் கொண்டு நின்றார்..

“அம்மா.. கிளம்பலாம்மா.. டைம் ஆச்சு.. ஸ்ருதி வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. அப்பறம் ஃப்ளைட்டுக்கு டைம் ஆகிடும்..” கடந்த ஒரு மாதமாக அவளது முகத்தில் தொலைந்திருந்த பொலிவு, இப்பொழுது பல மடங்கு கூடிப் போக, அவளை அறியாமலேயே மகிழ்ச்சியில், அடிக்கடி இதழ்களில் வந்து ஒட்டிக் கொண்ட புன்னகையுமாக இருந்தவளைப் பார்த்த பூரணி, தனது கண்களை அவளுக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டு, வண்டியில் ஏறினார்.

ஏர்போர்ட் செல்லச் செல்ல, வெண்ணிலாவின் முகத்தில் அவளை அறியாமலே அப்படி ஒரு புன்னகை.. ஆர்யனுக்கு கால் செய்து, “மாமா.. நான் ஏர்போர்ட் கிளம்பிட்டேன்.. நீங்க சொன்னது போல எல்லாம் எடுத்துக்கிட்டேன்..” என்று சொல்ல,

“சூப்பர்டா தேனு.. ஸ்ருதியும் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு வந்துட்டு இருக்கா. நீ ரீச் ஆகறதுக்கு முன்னால அவ ரீச் ஆகிடுவா.. எனக்கு உள்ள போயிட்டு கால் பண்ணு என்ன? நான் உங்களை பிக்கப் பண்ண வந்துடறேன்..” ஆர்யன் பதில் சொல்லவும்,

“சரி மாமா.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. நான் உங்களைப் பார்த்துடுவேன்.. ஒரு மாசம் ஆச்சு உங்களைப் பார்த்து..” ரகசியமாகச் சொல்ல, அது பூரணியின் காதில் விழுந்து புன்னகையை வரவழைத்தது..

போனை கட் செய்தவள், அதைத் தனது தலையிலேயே தட்டிக் கொண்டு, யாருக்கும் தனது முகத்தைக் காட்டாமல், நாணப் புன்னகையுடன், தலையை குனிந்துக் கொள்ள, அதைப் பார்க்காமல் பார்த்த மற்றவர்கள் அனைவருமே சிரித்துக் கொண்டனர்..

ஒருவழியாக ஏர்போர்ட்டின் உள்ளே கார் நுழையவும், “ஏன் இன்னைக்குன்னு இவ்வளவு ஸ்லோவா ஓட்டிட்டு வரியோ? இல்ல ரொம்ப ட்ராபிக்கா? ஏன் இவ்வளவு நேரம் நாம இங்க வந்து சேர?” என்று சலித்துக் கொண்டவளைப் பார்த்த பிருந்தா சிரிக்க, திலீபனோ அவளது கேள்வியில்,  

“உனக்கு ரொம்ப கொழுப்பா போச்சுடி.. விட்டா பைலட் கிட்ட போய்.. ஏன் ஃப்ளைட் இப்படி மெதுவா ஓட்டறீங்க? தள்ளுங்க.. நான் எங்க மாமாகிட்ட போகணும்ன்னு சொல்லி அவரை நகர்த்திட்டு நீ ஓட்டத் துவங்கிடாதே..” என்று கேலி செய்ய,

“போடா.. நான் அவரைப் பார்த்து ஒரு மாசம் ஆகப் போகுது. உனக்கு அதெல்லாம் புரியாது.. நீ சின்னப் பையன்.” என்றவள், அவன் காரை நிறுத்தவும், காரில் இருந்து இறங்கி தனது பையை எடுத்துக் கொண்டு, அங்கு நின்றிருந்த ஸ்ருதியைப் பார்த்து கை அசைத்தாள்..

“நான் உனக்கு முன்னாலேயே வந்து வெயிட் பண்ணிட்டேன் வெண்ணிலா. உங்க மாமாக்கிட்ட இதை கண்டிப்பா ரெஜிஸ்டர் பண்ணிடு.. என்ன? இல்ல.. என்னைக் கேள்வி கேட்டே கொன்னுடுவான்..” ஸ்ருதியின் கேலியில்,

“நாங்களும் உன்னை கரக்ட் டைம்க்கு கொண்டு வந்து டிராப் பண்ணிட்டோம்ன்னு மாமாகிட்ட ரெண்டு பேருமே ரெஜிஸ்டர் செய்யவும்.. இப்படிக்கு உங்கள் திலீபன்..” என்று நியூஸ் வாசிக்க, அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்..

“சரி.. சரி.. மாமா செக்இன் பண்ணிட்டாயான்னு மெசேஜ் பண்ணிட்டார்.. நாங்க உள்ள போறோம்..” ஆர்யனின் மெசேஜ் வரவும், வெண்ணிலா சொல்ல, அதைக் கேட்ட அனைவருக்குமே சிரிப்பு பொங்கியது..

“ஒரு மாசம் இப்படி தனியா இருந்ததுக்கே நீங்க பண்ற ஆராஜகம் தாங்கலடா சாமி.. அதை விட அவன் செய்யற அலப்பறை.. பத்திரமா அவளை ப்ளைட் ஏத்தி விடு.. டைம்க்கு ஏர்போர்ட் போயிடுங்கன்னு அங்க இருந்தே அவ்வளவு படுத்தறான்.. வா.. உன்னை இப்போவே பிளைட்ல உட்கார்த்தி வச்சிட்டு வரேன்.. ரெண்டு பேரும் எங்களைக் கொஞ்சம் நிம்மதியா விடுங்க.. ஒரு மாசம் எங்களுக்கு நிம்மதிடா சாமி.. நீயாச்சு அவனாச்சு..” சேகர் கேலி செய்ய,

“அத்தை.. இந்த அண்ணாவைப் பாருங்க.. கேலி செய்யறாங்க..” பிருந்தாவிடம் அவள் கோல் மூட்ட, அவளது கன்னத்தைப் பிடித்து திருஷ்டி கழித்தவர், சேகரின் தோளில் ஒரு அடி வைத்தார்.

“ஏண்டா குழந்தையை ஏதாவது சொல்லிட்டு இருக்க? அவ ஆரியைப் பார்த்து ஒரு மாசம் ஆகுது இல்ல.. அது தான் அவளுக்கு அப்படி இருக்கு. அவன் மட்டும் என்ன விட்டா இங்க வந்து அவளைத் தூக்கிட்டு போயிடுவான் போல இல்ல இருக்கு.. ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல..” பிருந்தாவின் கேலியில்,

“அத்தை நீங்களுமா?” என்று சிணுங்கி பூரணியின் தோள் சாய, அவளது கன்னத்தில் முத்தமிட்டவர்,

“பத்திரமா போயிட்டு வா.. அங்க போய் அவரைப் பார்த்ததும், எங்களை எல்லாம் மறந்து டீல்ல விட்டுடாம, ஒரே ஒரு மெசேஜ் பண்ணிட்டு அப்பறம் உன் மாமா கூட பேசு என்ன?” பூரணியும் கேலி செய்ய,

“ட்ரை பண்றேன்..” என்று கெத்தாக கூறியவள், அனைவரிடமும் விடைப்பெற்று, தனது பெட்டியைத் தள்ளிக் கொண்டு ஸ்ருதியுடன் உள்ளே செல்ல, அவளது முதல்முறை விமானப் பயணத்திற்கு உற்றத் துணையாக ஸ்ருதி மாறிப் போனாள்..

செக்இன் செய்து, செக்யூரிட்டி முடித்த பிறகு, கேட்டின் அருகே சென்று இருவரும் அமர்ந்ததும், அனைவருக்கும் மெசேஜ் செய்து சொன்ன வெண்ணிலாவிடம், “வெண்ணிலா.. படம் பார்க்கலாமா?” ஸ்ருதி கேட்க,

“ஓ.. என்ன படம் பார்க்கலாம்?” அவளது பதில் கேள்விக்கு, தன்னிடம் இருந்த லாப்டாப்பைத் திறந்து அவளது புறம் திருப்பியவள்,

“இதுல நிறைய படம் இருக்கு. எது வேணும்ன்னு பார்த்துச் சொல்லு.. நாம பார்க்கலாம்..” என்று சொன்னவளைப் பார்த்து விட்டு, அவள் லாப்டாப்பில் வைத்திருந்த படத்தின் பெயர்களைப் பார்த்துக் கொண்டு வந்தவள், ஒவ்வொரு படமாக காட்டி, அவளிடம் கதைக் கேட்க, ஸ்ருதி அவளுக்கு கதையைச் சொல்லவும், இருவருமாக நான்கு படங்களைத் தேர்வு செய்து வைத்தனர்.

“உனக்கு ரொமாண்டிக் மூவீஸ் எல்லாம் பிடிக்குமா?” ஸ்ருதி கேட்க,

“ஹ்ம்ம்.. பிடிக்கும்.. படத்தை விட நிறைய கொரியன் சீரீஸ் பார்ப்பேன். இப்போ தான் கல்யாணத்துக்கு அப்பறம் மாமா கூட சேர்ந்து நிறைய தமிழ், இங்கிலீஷ் படம் எல்லாம் பார்க்கறேன்..” என்று சொல்லவும்,

“ஹே.. நீ கே-டிராமா பார்ப்பியா? அப்போ நாம இப்போ அதைப் பார்க்கலாமா? நான் நிறையா வச்சிருக்கேன்.. எனக்கும் அதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்..” தனக்கு உற்ற தோழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ஸ்ருதி கேட்கவும்,

“ஹை.. உங்களுக்கும் பிடிக்குமா? பார்க்கலாமே.. ரொம்ப நாளாச்சு.. மாமா கிண்டல் செய்வாங்கன்னு நான் பார்க்கறது இல்ல..” துள்ளலுடன் சொன்ன வெண்ணிலாவின் காதில் ஒரு ஹெட்போனைக் கொடுத்து விட்டு, மற்றொன்றை தனது காதில் மாட்டிக் கொண்ட ஸ்ருதி,

“அதெல்லாம் செய்ய மாட்டான்.. உன் கூட உட்கார்ந்து அவனும் பார்ப்பான். ட்ரை பண்ணிப்பாரு..” என்றவள், தான் பதிவிறக்கம் செய்ததில் இருந்து தேர்வு செய்து பார்க்கத் துவங்கினர்..

இடையிடையே வெண்ணிலாவின் இதழ்கள் புன்னகையைத் தத்தெடுத்து, கனவில் மிதப்பவளைப் போல கண்களை மூடிக் கொள்ள, “இங்க ஒருத்தருக்கு காதல் நோய் ரொம்ப முத்திப் போய் பாடாபடுத்துது போல இருக்கே.. இதுல வர ஹீரோ ஆரி போல இருக்கானா? இல்ல ஆரி இது போல டைலாக் அடிச்சிருக்கானா?” ஸ்ருதி கேலி செய்ய,

“போங்க ஸ்ருதி.. என் மாமா இதை விட ஸ்மார்ட்டு. டைலாக்…” என்று இழுக்க,

“அந்தக் கேடி இப்படி எல்லாம் பேசுதா?” ஸ்ருதி கேட்கவும்,  இருவரும் சேர்ந்து சிரிக்க, ஃப்ளைட் ஏரியும் அவர்களது கதை தொடர்ந்துக் கொண்டிருந்தது.. ஒரு கட்டத்தில் உணவை உண்ட பிறகு ஸ்ருதி உறங்கி விட, ஆர்யனைப் பார்க்கும் ஆவலில், வெண்ணிலாவின் கண்களை உறக்கம் தழுவ மறுத்தது..

அவள் படத்தைப் பார்த்துக் கொண்டே வர, உறக்கம் களைந்து கண் விழித்த ஸ்ருதி, “என்ன வெண்ணிலா.. தூங்கலையா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவள்,

“இல்ல ஸ்ருதி.. எனக்கு தூக்கம் வரல..” எனவும், அவளது கையை பிடித்து,

“ஏன்? என்னாச்சு? ப்ளைட்ல ஒரு மாதிரி இருக்கா?” அக்கறையாக அவள் கேட்கவும், இல்லை என்று மறுப்பாக தலையசைத்தவள்,

“என்னன்னே தெரியல.. ஒரு மாதிரி சந்தோஷத்துல தூக்கம் வராது இல்ல.. மனசுல அப்படி இருக்கு..” வெளிப்படையாக வெண்ணிலா தனது மனதைச் சொல்லவும், ஸ்ருதி அவளது கையைப் பிடித்துக் கொண்டாள்.   

“கண்டிப்பா இப்போ அவனும் அப்படித் தான் இருப்பான். இப்போ மட்டும் உனக்கு எக்ஸாம் இல்லைன்னா கையோட கூட்டிட்டு தான் போயிருப்பான்.. நான் போன வாரமே போக வேண்டியது. உன்னை தனியா விட அவனுக்கு மனசே இல்ல.. அது தான் என்னை ஒரு வாரம் லேட்டா கிளம்பி வரா மாதிரி பார்த்துக்கிட்டான்..” உண்மையை போட்டு உடைத்தவள், வெண்ணிலா விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, 

“உனக்குத் தெரியுமா.. ஆரி உங்க கல்யாணம் நடந்த உடனே அவ்வளவு சந்தோஷமா எங்களுக்கு மெசேஜ் போட்டான். உங்க கல்யாண போட்டோவை ஷேர் பண்ணி ‘பைனலி காட் மேரீட்’ன்னு ஒரு மெசேஜ். என்னடா கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னவன் சந்தோஷமா மெசேஜ் போட்டு இருக்கானேன்னு நாங்க எல்லாம் ஆவலா போட்டோ பார்த்தோம்.. அதுல கொட்டை எழுத்துல ‘ஆர்யன் வித் வெண்ணிலா’ன்னு வேற போட்டு இருந்தான்.     

அதுவரை கல்யாணத்துக்கு வரலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருந்த நாங்க, அப்படி ஒரே ராத்திரியில அவனோட மனசை கொல்லையடிச்ச உன்னைப் பார்க்கத் தான் அவசரமா கிளம்பி வந்தோம்.. அதுல உங்க போட்டோவுக்கு கீழ பாட்டு வேற..” ஸ்ருதி கேலியாகச் சொல்ல,

“என்ன பாட்டு?” ஆவலாக வெண்ணிலா கேட்க, தனது மொபைலை எடுத்து அவன் அப்பொழுது அனுப்பி இருந்த குறுஞ்செய்திகளைக் காட்டினாள்.

அதில் தங்களது திருமணப் புகைப்படத்தைப் போட்டிருந்தவன், அதன் அடியில், ‘ஐ ஹேவ் ஃபௌன்ட் தி ஒன் மை சோல் லவ்ஸ் (I have found the one my soul loves)’ என்று போட்டு ஒரு இதயம் துடிப்பது போல போட்டிருந்தான். அதனுடன் ஒரு பாடல் வீடியோ இருக்க, அதை ஹெட்போனின் வழியாகக் கேட்டவள் ஸ்ருதியைப் பார்த்தாள்.

முன் அந்திச் சாரல் நீ

முன் ஜென்மத் தேடல் நீ

நான் தூங்கும் நேரத்தில்

தொலைதூரத்தில் வரும் பாடல் நீ

பூ பூத்த சாலை நீ

புலராத காலை நீ

விடிந்தாலும் தூக்கத்தில்

விழி ஓரத்தில் வரும் கனவு நீ..

ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..

வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே

எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே

வந்தால் இன்பம் சொல்ல

வார்த்தைகள் கொஞ்சமே..         

அவள் ஸ்ருதியைப் பார்க்க, “உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா ஆரி சொல்லிருப்பான். ஆரிக்கு அந்த கல்யாணத்துல அவ்வளவு இஷ்டமில்ல.. அவன் இருந்த மனநிலை அப்படி.. நாங்களும் எவ்வளவோ ஜீவிதாகிட்ட பேசச் சொல்லிப் பார்த்தோம்.. அவனுக்கு ஏனோ ஒரு நெருடல் இருந்துக்கிட்டே இருந்துச்சு.. அவனுக்கு பேசவே தோணல. அப்படி இப்படின்னு கல்யாண நாளும் வந்திருச்சு..  

அவன் ஆன்ட்டிக்காக தான் மண்டபம் வரையும் வந்தான். ஆனா.. அவன் மேடை வரை போவானான்னு நாங்க எல்லாருமே ஒரு திரில்லர் படம் பார்க்கறது போல தான் பார்த்துட்டு இருந்தோம்.. அவனோட மெசேஜ்க்கு அவ்வளவு இதுவா வெயிட் பண்ணிட்டு இருந்தப்போ தான் அவன் இந்த மெசேஜ் போட்டான்.. இரண்டு பேரோட டீப் ரொமண்டிக் லவ் பத்தி சொல்ற வாக்கியம் இது..” ஸ்ருதி சொல்லவும், வெண்ணிலா திகைப்பாக அவளைப் பார்க்க, அவளோ கண்களை மூடித் திறந்தாள்.  

“அந்த லைனைப் போட்டு உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை அவன் சொல்லவும், எங்க எல்லாருக்குமே அவ்வளவு சந்தோஷம். அடிச்சு பிடிச்சு ரெடி ஆகி உங்க ரிசப்ஷன்க்கு, உன்னைப் பார்க்க ஓடி வந்தோம்..” ஸ்ருதி நிறைவாகச் சொல்ல, வெண்ணிலா பேச வார்த்தைகளின்றி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளது முகத்தைப் பார்த்தவள், “என்ன பார்க்கற வெண்ணிலா?” குழப்பமாகக் கேட்க,

“இல்ல.. மாமா ஒருதடவ வாய்த் தவறி என்னை முதல் முறை பார்த்ததுல இருந்தே லவ் பண்றேன்னு அவங்களுக்குள்ளேயே சொல்லிக்கிட்டாங்க. எனக்கு எப்போ எப்படின்னு நிறைய குழப்பம்.” என்றவள், அன்று நடந்த விஷயங்களை அவள் சொல்லத் துவங்கினாள்.

சொல்லிவிட்டு, “அவருக்கு அன்னைக்கு போட்டு இருந்த தாவணி கலர் வரை எல்லாம் தெரியுது.. அப்போ எப்படின்னு குழம்பிட்டு இருந்தேன். இப்போ நீங்க சொல்லும்போது புரியுது.. அப்போ எப்படி? அப்படி என்ன நான் ஸ்பெஷல்?” ஆர்யன் சொல்லாமல் விட்டது விளங்கிய சந்தோஷத்தில் வெண்ணிலா கேட்க,

“கண்டிப்பா அவனுக்கு உன்கிட்ட ஏதோ ஸ்பெஷல் இருக்கறதுனால தானே உன்னைப் பார்த்ததும் அப்படி சொல்ல வச்சிருக்கு.” என்று கேலி செய்ய, மெல்ல கீழே அவனைக் கேலி செய்து போடப்பட்டிருந்த மெசேஜ்களை வெண்ணிலா பார்த்துக் கொண்டே வர, ‘ஹய்யோ’ என்று ஸ்ருதி தலையில் அடித்துக் கொண்டாள்.

அந்த கேலிகளைப் பார்த்தவளுக்கு முகத்தில் செமை படற, உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களை மூடி சீட்டில் சாய, அவளது காதின் அருகே சாய்ந்தவள், “உங்க பர்ஸ்ட் நைட் அன்னைக்கு ஆரியை பசங்க ரொம்ப ஓட்டிட்டு இருந்தானுங்க.. ஒரே பாய்ஸ் டாக்.. அந்த க்ரூப்ல நான் ஒருத்தி தான் கேர்ள்.. நான் உள்ளே வரவே இல்லையே.. எனக்கு ஒரே ஷையா இருந்தது..” என்று சொல்லவும், அவளது தோளிலேயே வெண்ணிலா முகத்தைப் புதைத்துக் கொண்டு,

“ரொம்ப கிண்டல் செய்துட்டாங்களா? மாமா சும்மாவா இருந்தாரு..” என்று கேட்க, தனது போனை அவளிடம் நீட்டி,

“நீயே பாரு..” எனவும், அதைப் பார்த்துக் கொண்டே வந்தாள். ‘ஆரி ஆன்லைன்ல தானே படம் பார்த்துட்டு இருக்கே.. உண்மையைச் சொல்லு’, ‘இல்ல இல்ல.. ஆரி பிசியா ஏ, பி, சி சொல்லித் தந்துட்டு இருப்பான்..’, ‘நோ வே.. ஆரி இப்போ லவ் ப்ரபோஸ் பண்றது எப்படின்னு ரிஹர்சல் பார்த்துட்டு இருப்பான்..’, போன்ற கேலிகளைத் தொடர்ந்து, இறுதியில் மறுநாள் காலையில் ஆர்யன் போட்டிருந்த ‘சுவாமியே சரணமையப்பா’ என்ற படத்தைப் பார்த்தவள், ஸ்ருதியைப் பார்த்து கலுக்கென்று சிரித்தாள்.

“அச்சோ.. பாவம் மாமா..” அந்த நாள் நினைவுகளில் உதட்டைக் கடித்துக் கொண்டவள்,   

“நான் ஏ, பி, சி சொல்லித் தர அளவு ஒண்ணும் மோசம் இல்ல..” முகம் சிவக்க, மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே, தனது மொபைலில் இருந்த ஆர்யனின் புகைப்படத்தை வருடினாள்..

“ரொம்ப ஹாப்பியா இருக்கு வெண்ணிலா. அவனுக்கு நினைப்பு எல்லாம் உன் மேல தான். நீ முதல்முறை ஃப்ளைட்ல வரதுனால ரொம்ப பயப்படுவன்னு அவனுக்கு அவ்வளவு கவலை. உனக்கு அந்த டேக் ஆஃப் லேன்டிங் பயம் இல்லாம நான் பார்த்துக்கணுமாம்.. ஏன்னா அவனோட பொண்டாட்டி அவனுக்கு சக்கரைக் கட்டியாம்.. என்ன சக்கரை நான் கொஞ்சம் கடிச்சுக்கவா?” ஸ்ருதி கேலி செய்து, அவளை கடிப்பது போல வர, தனது கன்னத்தை மூடிக் கொண்ட வெண்ணிலா, அவளை விட்டு தள்ளி அமர்ந்து,

“அவருக்கு மட்டும் சக்கரை..” எனவும்,

“சக்கரை இனிக்கிற சக்கர.. அதில் எறும்புக்கு என்ன அக்கற?” என்று பாட்டுபாடி கேலி செய்ய, சிரிப்பும், கேலியும் கிண்டலுமாக, அவர்கள் பயணம், ஒரு ட்ரான்சிட்டு விமானம் மாறி, ஆஸ்திரேலியா மண்ணைத் தொட்டு நின்றது..         

விமானம் தரையிறங்கவுமே, வெண்ணிலாவின் உள்ளம் பரபரக்கத் துவங்கியது. அவளது முகத்தில் இருந்த ஆவலைப் பார்த்த ஸ்ருதி,

“இருங்க மேடம்.. மெல்ல நாம இறங்கலாம்.. உங்க மாமா ஏற்கனவே வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கான்.. அவன் உனக்கு மெசேஜ் பண்ணி இருக்கானாம். நீ பார்க்கலையாம். அவ போனுக்கு என்னாச்சுன்னு என்னைக் கேட்டு இருக்கான்.. யப்பா சாமி முடியல.. உன்னை அவன்கிட்ட ஒப்படைச்சிட்டு நான் எஸ்கேப் ஆகிடறேன்.. இல்ல சின்னப் பிள்ளை மனச ரெண்டு பேருமே கெடுத்திருவீங்க போல இருக்கு..” கேலியாகச் சொன்ன ஸ்ருதி, அவளை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.

தங்களது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் வர, ஆர்யன் சிறுபிள்ளைப் போல அவளது வரவைப் பார்த்துக் காத்திருந்தான்.. அவனது கண்களின் தேடலை தூரத்தில் இருந்தே பார்த்துவிட்ட ஸ்ருதி, “வெண்ணிலா அங்க உன்னைத் தேடிக்கிட்டு நிக்கறான் பாரு..” என்று காட்ட, அதற்குள் அவர்களைப் பார்த்து விட்ட ஆர்யனும் போன் பேசிக் கொண்டே கால்களில் வேகம் கூட்டி அவர்கள் அருகில் ஓடி வந்தான்.

அவனைப் பார்த்ததும், வெண்ணிலா உடன் வரும் ஸ்ருதியை மறந்து ஆர்யனிடம் ஓடிச் செல்ல, அருகில் வந்தவளை அணைத்துக் கொண்டவன், அவளது கன்னத்தில் முத்தமிட, வெண்ணிலா அவனது மார்பில் புதைந்தாள்.

அவனது மார்பை வருடியபடி ‘ஐ மிஸ்ட் யூ சோ மச் மாமா..’ என்றவள், தேம்பி அழத் துவங்கினாள்..    

அவளது முதுகை வருடிக் கொடுத்து, ஒரு கையால் அவளது கண்களைத் துடைத்தவன், “ஐ மிஸ்ட் யூ டூ மை டியர் தேனு.. அதான் என்கிட்டே வந்துட்ட இல்ல.. இனிமே அழக் கூடாது..” என்று அவளைச் சமாதானம் செய்தவன், ஸ்ருதி இடுப்பில் கை வைத்து அவனை முறைக்க,

“இங்க ஒருத்தி என்னை கொலைவெறியில முறைக்கிறா.. நாம வீட்டுக்குப் போய் கொஞ்சலாம்.. இல்ல கண்ணு படும்..” ஸ்ருதியை கேலி செய்ய, அவனது முதுகில் ரெண்டு வைத்தவள்,

“நானா கண்ணு போடப் போறேன்.. அடிங்க.. நீ என் கூட வா வெண்ணிலா.. நாம ஒரே வீட்ல இருப்போம்.. பார்த்து பத்திரமா கூட்டிட்டு வந்தா.. பேச்சைப் பாரு..” ஸ்ருதி ஆரியை கேலி செய்ய, வெண்ணிலா அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“அடிப்பாவிங்களா.. நல்லா கூட்டு சேர்ந்து தான் வந்திருக்கீங்க.. இதுல ரெண்டு பேரும் சேர்ந்து என் பிழைப்பைக் கெடுத்திருவீங்க போல இருக்கே..” என்று போலியாக சலித்துக் கொண்டவன், இருவரும் சிரிக்கவும்,

“சரி வாங்க.. வீட்டுக்குப் போகலாம்.. மணியாகுது.. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு எங்கயாவது வெளிய சுத்திப் பார்க்கப் போகலாம்..” என்றவன், ஸ்ருதியிடம் இருந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு அவன் வந்திருந்த காரில் பெட்டிகளை அடுக்க, ஸ்ருதி முன் சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்.            

அவள் முன்னே அமரவும், “ஏன்?” என்பது போல ஆர்யன் பார்க்க, அவனை ஒட்டி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவைப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையுடன் அவள் திரும்பிக் கொள்ள, தனது தோழியின் புரிதலில் சிரித்துக் கொண்ட ஆர்யன், வெண்ணிலாவை இழுத்துக் கொண்டு காரின் பின் சீட்டில் அமர்ந்தான்.

“மாமா..” அவன் இழுத்த வேகத்தில் அவள் அலற, அவளது வாயைப் பொத்தியவன், உள்ளே அமர்ந்ததும் அவளுக்கு சீட் பெல்டை மாட்டிவிட்டு, மென்மையாக அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, வெண்ணிலா அவனது தோளில் சாய்ந்தாள்.

“என்னடா தேனு?” அவன் கேட்க, ‘ஒண்ணும் இல்லை..’ என்று தலையசைத்து, அவனது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

ஒருவரின் அருகாமையை ஒருவர் ரசித்துக் கொண்டு வர, சிறிது நேரத்தில் அவனது தோள் சாய்ந்த வெண்ணிலா உறங்கியும் போனாள்.. அவளைச் சுற்றி கைப் போட்டு தனது தோளோடு பிடித்துக் கொண்டவன், தனது அருகே இருந்த அவளது நெற்றியில் இதழ் ஒற்றிக் கொண்டே வந்தான்.  

“ஃப்ளைட்ல அவ கொஞ்சம் கூட தூங்கவே இல்ல.. ரெண்டு பேரும் நிறைய படம் பார்த்து கதை பேசிட்டு வந்தோம்.. ஷி இஸ் சோ ஸ்வீட் ஆரி. நீ தலைக்குப்புற விழுந்த காரணம் எனக்கு இப்போ புரியுது..” ஸ்ருதி கேலியாகச் சொல்லவும், ஆர்யன் வெண்ணிலாவின் முகத்தை மென்மையாக வருடினான்..

நினைவு வந்தவளாக, “ஹே ஆரி.. அவங்க அம்மா அவளை ரீச் ஆன உடனே ஒரே ஒரு மெசேஜ் போடச் சொன்னாங்க. அதுக்கு அப்பறம் உன்னைப் பார்த்ததும் அவங்களை எல்லாம் மறந்து போகச் சொன்னாங்க.. அவங்க சொன்னது போலவே உன்னோட தேனு உன்னைப் பார்த்ததும் அதை எல்லாம் மறந்துட்டா..” கேலியாக அவள் சொல்ல, ஆர்யன் கட்டை விரலை காட்டினான்.

“நான் உங்களை தூரத்துல இருந்து பார்த்த போதே, அவங்க அம்மாக்கும் எங்க அம்மாவுக்கும் கூப்பிட்டு சொல்லிட்டேன்.. அவ கண்டிப்பா கூப்பிட மறந்துடுவான்னு தெரியும்..” பெருமையாகச் சொன்னவன், அவளது தலையை மென்மையாக வருட, ஸ்ருதி தனது பார்வையைத் திருப்பிக் கொண்டாள்..

ஒருவழியாக பயணம் முடிந்து, அவர்கள் தங்கும் இடத்திற்கு வரவும், “தேனு.. வீடு வந்திருச்சு..” மென்மையாக அவன் எழுப்ப, கண்களைத் திறந்தவள், கீழே இறங்கி சுற்றிப் பார்வையை ஓட்டி, 

“வாவ் மாமா.. இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு..” என்று கண்களை விரிக்க,

“வர வழியில இருந்த அத்தனை சீனரியையும் தூங்கி கோட்டை விட்டுட்டு இங்க இருக்கிற வீடுங்களைப் பார்த்து வாவ்வாம்ல.. இவளை என்ன செய்யறது?” கன்னத்தில் செல்லமாகத் தட்டியவன், அவளை கேலி செய்தபடி, காரில் இருந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு,

“வாங்க மகாராணியாரே.. தங்களது வரவு நல்வரவாகுக..” ஆர்யன் அழைக்க,

“அவங்க மகாராணின்னா நாங்க யாரு?” ஸ்ருதி கேலியுடன் தனது பெட்டியை அவனிடம் இருந்து வாங்க,

“நீங்க பக்கத்து நாட்டு இளவரசி.. நீங்களும் வாங்களேன்..” கேலியும் கிண்டலுமாக அவர்களை அபார்ட்மெண்ட்டிற்கு அழைத்துச் சென்றான்.

“ஸ்ருதி இது தான் உன் ரூம்.. ரெப்ரெஷ் ஆகிட்டு வா.. டின்னர் சாப்பிட்டு தூங்கப் போவியாம்..” என்ற ஆர்யன், அவளது கையில் சாவியைக் கொடுக்க,

“ஓகே ஆரி.. நான் ஒரு பத்து நிமிஷம் கால நீட்டி படுத்துட்டு தான் ரெப்ரெஷ் ஆகிட்டு வருவேன்..” என்றவள், அவன் கொடுத்த சாவியை வாங்கிக் கொண்டு அறைக்குள் தனது பெட்டியைக் கொண்டு வைத்துவிட்டு நிற்க,

“இது தான் நம்ம ரூம்.. இது ஷேர்ட் அபார்ட்மெண்ட்.. இந்த ஒரு அபார்ட்மெண்ட்ல ஆறு ரூம் இருக்கு.. எங்க ஆபிஸ்ல அப்படியே நாலு ரூம் புக் பண்ணிட்டாங்க.. நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே..” அவளிடம் சொல்லிக் கொண்டே தான் தங்கி இருந்த அறையைத் திறந்தவன், பெட்டிகளை எடுத்து உள்ளே வைக்க,

“ஸ்ருதி.. சீக்கிரம் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க.. நானும் ரெப்ரெஷ் ஆகிட்டு வெயிட் பண்றேன்.. நாம சேர்ந்தே சாப்பிடலாம்.. எனக்கு ரொம்ப பசிக்குது.. மாமா சமையலை சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு..” வெண்ணிலா ஸ்ருதியுடன் பேசிக் கொண்டே நிற்க, இருவரையும் பார்த்து முறைத்தவன், அறைக்குள் சென்று சோபாவில் கைக் கட்டி அமர்ந்துக் கொண்டான்..

“வெண்ணிலா.. அவன் முறைச்சிட்டு போறான்.. நீ உள்ள ஓடு..” அவனது முகத்தைப் பார்த்த ஸ்ருதி சொல்லவும்,

“ஹையோ..” என்றவள், உள்ளே ஓடிச் சென்று, ஆர்யனின் அருகில் அமர்ந்தாள்.

“பேசறது எல்லாம் பேசி முடிச்சாச்சா?” எதிரில் இருந்த சுவரை முறைத்தபடி அவன் கேட்கவும், அவனது எதிரில் எழுந்து நின்று, இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டுக் கொண்டே,   

“சாரி மாமா.. இனிமே இப்படி உங்களைக் கண்டுக்காம பேச மாட்டேன்.. எனக்கு என் மாமா தான் முக்கியம். மாமாவை மட்டுமே பார்ப்பேன்.. சராங்கே (i love you) மாமா..” என்று சொல்லிக் கொண்டே, கட்டை விரலையும் சுட்டு விரலையும் மடக்கி அவனிடம் சைகையில் காட்டி, ‘சராங்கே..’ என்று சொல்ல, அந்த அழகில் தனது கோபம் மறந்தவன், அவளது கையைப் பிடித்து அருகில் இழுத்து, அவளது முகமெங்கும் முத்தமழைப் பொழியத் துவங்கினான்..

“மாமா.. கோபமா?” அவனது முத்தத்தின் நடுவில் அவள் கேட்க,

“என் தேனு இவ்வளவு அழகா என்கிட்டே லவ் சொல்லும்போது நான் எப்படி கோபத்தை இழுத்து பிடிச்சிட்டு இருக்க முடியும்.. லவ் யூ டி பட்டு..” என்று சொல்லிக் கொண்டே அவளை இறுக அணைத்துக் கொண்டு, வேகத்துடன் அவளது இதழ்களைச் சிறை செய்ய, அவனது முடிக்குள் விரல் நுழைத்து, இறுக பற்றிக் கொண்டவள், அவனுடன் ஒன்றிப் போனாள்..  

அவளைத் தூக்கி தனது மடியில் அமர வைத்துக் கொண்டவன், மேலும் வாகாக அவளது இதழ்களில் புதைய, நொடிகள் கடந்து நிமிடங்களாக கரைந்துக் கொண்டிருந்தது.. பிரிய மனமில்லாமல் கரைந்துக் கொண்டிருந்தவர்கள், இறுதியில் மூச்சுக் திணறி பிரிய, அவளது நெற்றியில் முட்டி, அவளது சங்குக் கழுத்தில் அவன் இதழ்களை உரச, நாணத்துடன் அவனது மார்பில் சாய்ந்து கண்களை மூடிக் கிடந்தாள்.  

அவளை இறுக அணைத்துக் கொண்டு, அவளது தலை மீது தனது கன்னத்தை தாங்கி, அவளது கன்னத்தை வருடிக் கொண்டிருக்க, அவனது கையில் இதழ் பதித்தவள்,   

“மாமா.. ஸ்ருதி சாப்பிட வந்துடுவாங்க.. நான் அதுக்குள்ள ப்ரெஷ் ஆகிட்டு வரேன்.. அப்பறம் இன்னுமா நீ அப்படியே இருக்கன்னு கிண்டல் செய்யப் போறாங்க..” மெல்லிய புன்னகையுடன் சொல்ல, மீண்டும் அவளது இதழைச் சிறை செய்து விடுவித்தவன், அவளை எழுப்பி நிறுத்தி,  

“அவ அதுக்குள்ள எல்லாம் வர மாட்டா.. கொஞ்சம் லேட்டா தான் வருவா.. ஷி இஸ் வெரி டீசன்ட் யூ நோ..” என்று கேலி செய்ய, அவனது மார்பில் முட்டியவள்,

“எனக்கு தெரியுமே அவங்க டீசன்சி..” என்று கேலியாகச் சொன்னவள், ஆச்சரியமாக அவளை அவன் பார்த்த பொழுது,

“சில பல ரகசியம் எல்லாம் சொல்லிட்டாங்க..” என்று கண் சிமிட்டி, ஆர்யன் சிரிக்கத் துவங்கினான்.  

“ஹே.. என்ன? என்ன பேசினீங்க அப்படி?” அவன் கேட்டுக் கொண்டே அவளை நெருங்க, குறும்பாக தலையசைத்து மறுத்தவள், 

“அது கேர்ள்ஸ் டாக்.. உங்க கிட்ட எல்லாம் சொல்ல முடியாது.. எனக்கு கொஞ்சம் குளிச்சா நல்லா இருக்கும்.. நான் குளிக்கப் போறேன்..” என்றபடி பெட்டியைத் திறக்க, அவளைத் தனது அருகே இழுத்தவன், அவளது காதில் இதழ் பதித்து, அவளது கையில் ஒரு கவரைத் திணிக்க, வெண்ணிலா அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்..

“இந்த நைட் ட்ரெசை போட்டுட்டு வா..” அவளது காதில் சொன்னவன், அவள் அந்த உடையை பார்த்து விழித்து,

“இதை இப்போவே போடணுமா?” வெளியிலேயே வராத குரலில் கேட்க,  

“பின்ன? எப்போப் போடப் போற?” ஏமாற்றமாக அவன் கேட்க, அவனது அருகே நெருங்கி,

“நான் வேணா சாப்பிட்டு தூங்கும் போது போட்டுக்கட்டுமா? ஸ்ருதி வேற வருவாங்க இல்ல. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..” அவனது கண்களைப் பார்க்காமல் அவள் கேட்கவும், தனக்குள் சிரித்துக் கொண்டவன், வெறுமனே தலையசைக்க, பெட்டியைத் திறந்து தனது உடையை எடுத்துக் கொண்டவளை, தள்ளிக் கொண்டுச் சென்று குளியலறையில் விட்டவன்,

“போய் குளிச்சிட்டு வாங்க மேடம்.. டைம் ஆகுது..” என்றுவிட்டு, பைப்களைப் பயன்படுத்தும் விதத்தை சொல்லிவிட்டு, அவளது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு வெளியில் வர, வெண்ணிலாவின் மனது படபடக்கத் துவங்கியது..

குளித்துவிட்டு வெளியில் வந்தவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன், அவளது கழுத்து வலைவினில் தனது இதழ்களின் பயணத்தைத் தொடர, இதயம் தொண்டைக் குழியில் துடிக்க, வெண்ணிலா அவனை விட்டு விலகினாள்..  

“தேனு.” அவன் ஏக்கமாக அழைக்க, அவனை நெருங்கி இடையோடு கட்டிக் கொண்டவள்,

“பசிக்குது மாமா.. சீக்கிரம் ஸ்ருதியை வரச் சொல்லுங்க.. சாப்பிடலாம்..” இதழ்கள் நாணத்தில் படபடக்க, அவள் கூறிய வேளையில், மெல்லியதாக கதவு தட்டப்படும் ஒலி கேட்க,

“ஸ்ருதி வந்துட்டா போல.. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க.. நான் இதோ வரேன்.” என்றவன், அவளை முன்னே அனுப்பிவிட்டு, அந்த பெட்டை மறைப்பது போல அமைக்கப்பட்டிருந்த திரைச் சீலையை இழுத்து விட, வெண்ணிலா அவனைப் பார்த்துக் கொண்டே சென்று கதவைத் திறந்தாள்..

“ஆரி சாப்பிட வரலயா?” ஸ்ருதி கேட்டுக் கொண்டே, வெண்ணிலா கொடுத்த தட்டை வாங்கிக் கொண்டு அவளுடன் அமர,

“மாமா ஏதோ பண்ணிட்டு இருக்காரு.. நம்மளை முன்னால சாப்பிடச் சொன்னார்..” என்ற வெண்ணிலா ஸ்ருதியுடன் அமர்ந்து உணவை கொரிக்கத் துவங்க, அவளது பார்வை அடிக்கடி ஆர்யன் இருந்த திசையில் படிந்து மீண்டது.. 

அவன் வாங்கி வைத்திருந்த ரோஜா மலர்களை பெட்டின் மீது தூவி விட்டு, சில மலர்களை பக்க டேபிளில் வைத்தவன், ஒரு பெருமூச்சுடன், தனது படபடக்கும் இதயத்தைத் தட்டிக் கொடுத்து, ‘ஆல் இஸ் வெல் ஆரி.. நோ டென்ஷன். அவ பயந்தா மறுபடியும் சாமியே சரணம் தான்..’ என்றபடி தன்னையே சமாதானம் செய்துக் கொண்டவன், அமைதியாக இருவருடனும் அமர்ந்து உண்ணத் துவங்கினான்..    

அவன் வந்து அமரவும், வேகமாக உண்டு முடித்த ஸ்ருதி, “எனக்கு செமையா தூக்கம் வருது.. குட் நைட்.. காலையில பார்க்கலாம்.. நீங்க ரெடி ஆனதும் எனக்கு கால் பண்ணு வெண்ணிலா.. நாம வெளிய போகலாம்..” என்றபடி அவர்களிடம் விடைப்பெற்று, தனது அறைக்குச் சென்று விட, ஆர்யன் தனது மொபைலைப் பார்த்துக் கொண்டே அமைதியாக உண்டுக் கொண்டிருக்க, அவசரமாக கைகளைக் கழுவிக் கொண்டு,

“நான் தூங்கப் போறேன் மாமா.. எனக்குத் தூக்கம் வருது..”  என்று சொல்லிவிட்டு, அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, குளியறைக்குள் சென்று மறைந்தாள். அவன் கொடுத்த இரவு உடையை அணிந்துக் கொண்டு அவள் படுக்கச் செல்ல, அங்கு அவன் செய்து வைத்திருந்த வேலையைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் படபடக்கத் துவங்கியது.

நாணமும், பயமுமாக, நெஞ்சம் படபடக்க, தனது மொபைலைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் உறங்கச் சென்றதும் வேகமாக தட்டைப் போட்டுவிட்டு, கைக் கழுவி வந்தவன், ரோஜா மலர்களை வருடிக் கொண்டு அவள் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து, ‘யாஹூ.’ என்று தனக்குள் குத்தாட்டம் போட்டு, அவளைக் கைகளில் அள்ளிச் சுற்றி, பெட்டில் கிடத்தியவன்,

“ஹாப்பி ஃபர்ஸ்ட் நைட் டி என் பொண்டாட்டி.. அவர் ஹனிமூன் ஸ்டார்ட்ஸ் நவ்..” என்று குதூகளித்தபடி அவளது இதழ்களைச் சிறை செய்தவன், அவளது முகத்தில் துவங்கி, மெல்ல அவளது மேனியில் தனது இதழ்களை உறவாட விட, சிணுங்கள்களும், பிதற்றல்களும், முணுமுணுப்பும், முனகல்களுமாக அந்த இரவு இனிமையாக கழிய, பெண்ணவள் அவனது கைகளில் கரைந்து போனாள்..

error: Content is protected !!