மேக தூதம்

Screenshot_2022-03-17-17-04-17-11848797

மேக தூதம்

“மேக தூதம்”

 

“கல்யாணம் ஆகி முழுசா ரெண்டு வருஷம் ஆகல. அவளுக்காக நீ அம்மா கூட வாக்குவாதம் பண்ற. இதெல்லாம் நல்லா இல்லை பவித்ரா. “

 

“அச்சோ அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா? ரொம்பதான் புள்ள மேல பாசம். இத்தன நாள் எங்க போச்சு உன் பாசம்?எப்படி இந்த அம்மாங்களுக்கு பசங்க கல்யாணம் பண்ணிட்டதும் பாசம் பொங்குதோ.”

 

‘கடவுளே! நானும் என் பையனுக்கு கல்யாணம் ஆனதும் இப்டி மாமியாரா ஆகிடக்கூடாதுப்பா.’

 

“டேய் ஹரி, நீ கல்யாணம் பண்ணி மண்டபத்துல இருந்து நேரா  தனிக்குடித்தனம் போய்டு, அப்போதான் நானும் நிம்மதியா, உன் பொண்டாட்டியும் உன்கூட நிம்மதியா வாழலாம். “

 

“ம்மா யாருக்கு கல்யாணம்? “

மூன்று வயது மகன், தன் அம்மாவை பார்த்து கேட்டான்.தன் தங்கையை முறைத்த உதய்,

 

“பசங்க கூட என்ன பேசணும்னு தெரியாதா உனக்கு?”

 

“சாரிண்ணா.நீ போய் முதல்ல அண்ணிய அழைச்சிட்டு வா. அவங்களை கொண்டு போய் விட்டுட்டு வந்து சொல்ற. இதெல்லாம் நல்லாவா இருக்கு.”

 

“அவனுக்கு எது சரியோ அதைத்தான் பண்ணிருக்கான். நீ சின்னவ வாய மூடிட்டு இருக்கியா?”

 

“ஓஹ் ரொம்ப சந்தோஷம்.ரொம்ப நல்லது பண்ணி வச்சிருக்க. அவனை இப்டி தனியா பார்க்கத்தான் கல்யாணம் பண்ணி வச்சியா?”

 

“இப்போ நான் கொண்டுபோய் விட சொல்லி அவன் விட்டுட்டு வந்துட்ட போலல்ல நீ பேசுற.”

 

“அச்சோ அம்மா, கொஞ்சம் சும்மா இருக்கியா. நானாதான் போய் விட்டுட்டு வந்தேன்.எனக்கும் அவளுக்கும் தான் பிரச்சினை.”

 

“எனக்கு எப்போ தோணுதோ அழைச்சிட்டு வரேன். தோணலையா அங்கேயே இருக்கட்டும்.”

சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

“ம்மா,உனக்கு தான் அவ என்ன பண்ணுனாலுமே பிடிக்கலையே. இனி உன் இஷ்டப்படியே எல்லாம் இருக்கட்டும். இப்போ கொஞ்ச நாளாதான் சந்தோஷமா இருக்கான்.உனக்கது பொறுக்கலயா?”

 

உதய் அழைப்பெடுக்க மெதுவாக  வீட்டின்னுள்ளே சென்று பதிலளித்தாள்.

“சொல்லுண்ணா.”

“பவி,அம்மாகூட கலை பத்தி எதுவும் பேசாத. நான் பார்த்துக்கிறேன்.”

 

“அண்ணி கூட நான் பேசவாண்ணா?”

 

“அவகூட பேசுறதுக்கு என்னை எதுக்கு கேக்குற. உன் அண்ணிதானே,அப்றம் என்ன? “

 

“பவி, இப்டியே எங்க வீட்ல தினம் ஒரு சண்டை வந்துட்டேதான் இருக்கும், சோ,அதுக்கு நாந்தான் நடுவுல இருக்கணும். நான் பார்த்துக்குறேன். நீ அம்மாவை ஏதும் பேசாத.”

 

“அவங்க உன் அம்மா மட்டும் இல்ல. எனக்கும் தான். ரொம்ப தான் பொழியாத உன் பாசத்தை. புரிதில்ல இப்போ என்னாச்சுன்னு.”

 

“சரி வச்சுர்றேன். “

 

ஈஸ்வரி, தன் கணவனை பிள்ளைகளின் பள்ளிப் பருவத்திலேயே இழந்தவர். கணவன் சேர்த்துவைத்த சொத்துக்களைக் கொண்டு பிள்ளைகளை வளர்த்து படிக்கவைத்து இருவரையும் மணம் முடித்து வைத்த சாதாரண இல்லத்தரசி. மகன் உதயன் மகள் பவித்ரா. மகள் மணம் முடித்து பக்கத்து தெருவிலேயே குடியிருக்கிறாள். திருமணம் வேண்டாம் என இருந்தவனை தன்னுடைய முப்பதாவது வயதில் திருமணம் முடித்திருந்தான். இதோ இன்று மனைவியோடு கொண்ட பிணக்கில் அவளை அன்னை வீட்டிற்கும் அனுப்பிவிட்டான். இல்லையில்லை. கொண்டுபோய் அவனே விட்டுவிட்டு வந்திருந்தான்.

 

“அண்ணி…” பவித்ரா அழைக்க, அந்தப்பக்கம் மௌனம்.

 

“என்கூட பேசமாட்டீங்களா அண்ணி?”

 

“பவி…” அவளால் பேசிட முடியாது  அழுகை முந்திக்கொண்டு வந்தது.

 

“அண்ணி இருக்கீங்களா? உங்ககூட என் பிரெண்டா பேசலாமா? “

 

“பவி? “

 

“என்னடி பவி? வீட்டுக்கு போன்னா போவியா, நா இங்கதான் இருப்பேன், நீ வேணும்னா போன்னு சொல்ல வேண்டியதானே? உனக்கு நான் முன்னமே சொல்லிருக்கேன். எங்கம்மா பேசுறதெல்லாம் மைண்ட்ல ஏத்திக்காதன்னு.”

 

“அத்தை ஒன்னும் சொல்லல. அவங்க எப்போவும் போலத்தான்.”

 

“அப்றமா என்ன? “

 

“மாமா தான்… “

 

“என்ன சொன்னான்? “

 

“ஒன்னில்ல பவி விடு.மாமா வெளில ரெண்டு நாள் போறாங்கன்னு சொல்லித்தான் விட்டுட்டு போனாங்க.” கூறியவளுக்கு கேவலோடு அழுகை வர வீட்டினர் அறியா வண்ணம் அடக்கிக் கொண்டாள்.

 

” மண்ணி…எதுக்குடி இப்டி அழுற, நா வேணும்னா அங்க வீட்டுக்கு வரவா? “

 

“வேணாம். வீட்ல ஏதோன்னு சந்தேகப்பட்டுட்டாங்கன்னா, அப்பாக்கு கஷ்டமாகிரும்.”

 

இவள் மணிமேகலை. பவித்ராவின் அன்புத்தோழி.தன் அண்ணன் ஏற்கனவே காதல் கொண்டு அதை இழந்து திருமண வாழ்வை துறந்தவன் என்று அறியாதவள். காலேஜ் படிக்கும் போதே தனக்கு அண்ணியாகிவிடு என அண்ணி, மணி இரண்டையும் கோர்த்து ‘மண்ணி’ என்றே அவளை அழைப்பது வழக்கம். வீட்டில் தேவைக்கு அண்ணி என்ற அழைப்பு எப்போதாவது வரும்.

 

“மண்ணி,நா அவன் கூட பேசுறேன். நீ சும்மா அழாத.வீட்ல இருக்கவங்க கூட ஹாப்பியா இரு. அண்ணா நைட் வந்துடுவான்.”

 

சரியென்று கூறி அழைப்பை துண்டித்தாள் மணிமேகலை.கடந்த நாட்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட சிறு சிறு வார்த்தை பரிமாற்றம் மனங்களிடையே பிணக்கை ஏற்படுத்த இரண்டு நாட்களாக கொஞ்சம் மிகைப்பட்டு இன்று காலை தன்னை அடிக்க கை தூக்கிடும் அளவுக்கு வந்து விட்டதை எண்ணி மிக ரணப்பட்டாள்.

 

தேன் கலந்த வெள்ளைச்சந்தன நிறமவள். மெல்லிய உடல் வாகு கொண்டவள், இடைத்தொட்ட கூந்தல், எந்த ஒப்பனையுமே இல்லாது பார்த்துக்கொண்டே இருக்க அழகு.

தன் தோழியின் அண்ணன் என்றதும் வீட்டில் பேசி முடிக்க மறுப்பின்றி சரியென்றிருந்தாள். ஆனால் இவளை மணம் பேசிமுடித்த அன்றே அவளோடு அவன் பற்றி பகிர்ந்துக்கொண்டான்.

 

“பவிக்கு என்னைப் பற்றி தெரியுமா தெரில. நானாக சொன்னதில்லை. பட் என் லைப் லோங் ட்ராவல் பண்ற நீங்க தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். இப்போ இல்லன்னாலும் ஐந்து  வருடங்களுக்கு முன்னால்,நான் காலேஜ் போறப்ப இருந்தே ஒரு பொண்ணு லவ் பண்ணினேன். போத்.பட், அவங்க வீட்ல பிடிக்காம அவ வேற லைப் செட்டில் ஆகிட்டா. பட் ரொம்ப டீப் லவ் என்னோடது. அதுனால மனசலவுல இது என்னோட செக்கண்ட் மெரேஜ்னுதான் சொல்வேன். உங்களுக்கு ஓகேன்னா மட்டும் சொல்லுங்க. நான் வீட்ல பேசுறேன்.”

 

அவன் பேசக் கேட்டுகொண்டிருந்தவள், மனம் சற்று வேதனைக் கொண்டாலும், ஏதும் யோசிக்காமலேயே அவனை ஏறிட்டாள்.

 

“அப்போ அவங்களை லவ் பண்ணுன போல காலம் பூரா… என்னையும் பண்ணுவீங்களா? “

அவள் கேட்க, அவனோ ஆச்சர்யமாய் பார்த்தான்.

 

“உங்களால முடியும்னா சொல்லுங்க.நான் வீட்ல பேசுறேன், பவிக்காகவெல்லாம் யோசிக்க வேணாம்.”

 

கூறியவள் புன்னகைத்துக்கொண்டே உள்ளே சென்று விட்டாள். இனி என்ன,திருமணம் இனிதாய் நடந்தேற ஒருவருக்கொருவர் ஒவ்வொரு விடயத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சித்தபடியே வாழ்ந்தனர்.

 

அவனுடனான வாழ்வை முழுதாய் ரசித்து ருசித்து வாழ்ந்தாள் மணிமேகலை. மனைவி கணவனிடையான பிணைப்பைக் கண்ட ஈஸ்வரிக்கு மனம் சந்தோஷப்பட்டாலும், இத்தனை வருடங்கள் அவர்களுடன் இல்லாத மகனின் முகச் சிரிப்பு இப்போது பார்க்க அதை தனக்கும் வேண்டும் என்று எண்ணினார் போல.

 

உதயும் காலேஜ் செல்லும் போதிலிருந்தே அமைதியாகி பின்னர் ஏற்பட்ட மனக்காயம், பகிர்ந்திட முடியா நிலை என வீட்டில் பேச்சை குறைத்திருந்தான். இப்போது மனைவியின் வரவால். அது மாற்றமடைய,வீட்டினரோடு சகஜமாய் பேச நினைத்தாலும் அது முடியாமல் எப்போதும் போலவே இருந்துகொண்டான்.

 

அண்ணன் மகிழ்வாக இருப்பதைக்  கண்டுகொண்ட பவித்ரா எப்போதும் மணிமேகலையை கிண்டல் செய்து கொண்டே இருப்பாள்.அவள் திருமணவாழ்வு அவளையும் பக்குவப்படுத்தியிருந்தது.

 

நாட்கள் செல்ல இருவருக்குமிடையான உறவில் வழு அதிகரித்ததோடு, புரிதல்  நன்றாகவே இருந்தது. எப்போதும் மாலை பின்னே அவன் வேலை விட்டு வந்ததும் அவன் வியர்வையில் இவளை அழுகாக்கியா பின்னரே இருவருமாக ஒன்றாய் அமர்ந்து தேநீர் அருந்தவது வழக்கம்.

 

ஒருமுறை உதயன் வேலை விட்டு வரும் வரை எப்போதும் போல மேகலை  அலைபேசியை நோண்டிக் கொண்டு வாயிலில் அமர்ந்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போது அங்கே வந்த ஈஸ்வரி,

 

“மேகலா, மேல மாடில இருக்க துணியெல்லாம் மடிச்சு எடுத்துட்டு வந்துரு.”

 

“சரிங்கத்த.” கூறியவள் வாயிலையும் அலைபேசியையும் பார்த்துக்கொண்டே மடியியேறினாள். கீழே வர,அன்னையும் மகனும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள். இவளை கண்டவன், முறைத்துக்கொண்டே முகம் திருப்ப, இவள் முகம் வாடிப்போனது.மெல்லமாய் உள்ளே சென்று அழுமாரியில் துணிகளை  வைத்துக்கொண்டிருக்க, பின்னோடு காலடி சத்தம்.இவளோ வந்து அணைப்பான் என்றெண்ண, அவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

 

“மேகலா…”

ஈஸ்வரி மீண்டும் அழைத்தார்.

 

“இதோ வர்றேன் அத்த.”

 

அதன் பின், இரவுணவுக்கான வேலைகள் வரிசையாக வர, குளியலறையில் இருந்து வந்தவனுக்கோ மனைவி அறையில் இல்லாதது இருந்த ஊடலை கோபமாய் மாற்றியது. சமையலறை சென்று பார்க்க அவள் அந்தப்பக்கம் திரும்பியிருந்தாள். இவனைக் கண்ட ஈஸ்வரி,

 

“என்ன வேணும்டா?” என்றிட, 

 

“ஒன்னுமில்லமா”.சொல்லிவிட்டு முன்னறைக்கு சென்று விட்டான்.”

 

அந்த பேச்சுக் குரலில் திரும்பியவளுக்கு அவன் முதுகுப்பக்கமே காணக் கிடைத்தது.

 

இரவு உணவை உதயன் எப்போதும் நேரம் சென்றே உண்ணுபவன். அன்று அன்னையோடே உண்ண அமர்ந்து விட்டான்.

 

ஈஸ்வரிக்கு அத்தனை சந்தோஷம். ஆக இத்தனை நாள் மேகலைதான் அவனை இவரோடு நேரம் செலவிட  அனுமதிக்கவில்லை. அவர் மனதில் அப்படியே குறித்துக்கொண்டார். ஏதும் கூறாமல் மணிமேகலையும் அவர்களுக்கு பரிமாறினாள்.

 

இரவு படுக்கைக்கு வர இந்த ஒன்றரை வருடத்தில் இவ்வளவு நேரம் இருவரும் ஒருக்குவருக்கொருவர் பேசாது இருந்ததில்லை. அதன் கடினத்தை தாங்க முடியாத பெண்ணோ,

 

“மாமா…” என்றிட, எப்போதும்  அவர்களுக்கான தனிமையில் சொல்லப்படும் அந்த வார்த்தையில்,தன்னை இழப்பவன் இன்றோ அவள் கண்ணீர் குரலில் திரும்பி பார்க்க முன்னமே அவனை பின்னோடு அணைத்திருந்தாள்.

 

“நான் வேணும்னு பண்ணல மாமா. கொஞ்சம் வேல அதான்.”

அழுதுக்கொண்டே கூறினாள்.

 

“கலை, நா வர்றபப்பவே உன்ன தேடுவேன் தெரியும்ல.”

 

“ஹ்ம்ம்ம்…”

 

“அப்றம் என்ன? “

 

“குளிச்சிட்டு வெளில வந்தா அப்போவும் போய்ட்ட. “

 

“அது அப்போவும் வே…”

அவள் முடிக்கவில்லை அவளை தன்பக்கம் திருப்பியவன் அவள் முகம் பார்க்க,அவளை அப்படியே மீண்டும் அணைத்துக்கொண்டான்.

 

“ஹேய் எதுக்குடி இப்டி அழுற?

 

“நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்க. என்கிட்ட பேச கூட இல்ல. என்னை திட்டிட்டா கூட பரவால்ல.பேசாம இருக்க வேணாம் கஷ்டமாயிருக்கு.”

 

இப்படியே பேசிப் பேசி ஊடல் காதலாகியது அன்றிரவு.

 

இதுவே நாட்கள் செல்லச் செல்ல அவ்வப்போது நடந்தேற, வாழ்வில் இதுவெல்லாம் இயல்பென்று உதயன் பழகிக் கொண்டான்.ஆனால் மேகலையின் மனதில் அதன் தாக்கம் பெரியதாக  இருத்தது.

 

அத்தனை நேர்த்தியாக வீட்டு வேலைகளை செய்த போதிலும், அவர் தேவைக்கேட்ப எதுவும் வீட்டில் இருப்பதில்லை என எதிலும் அவளை குறைக் கூற ஆரம்பித்தார் ஈஸ்வரி. அவர் இயல்பை நன்கு புரிந்த மேகலை எதையும் காதில் வாங்கிக்கொள்வதில்லை.

 

அவ்வப்போது வந்து செல்லும் பாவித்ராவும் அன்னையிடம் மேகலை அறியாது

” இப்படி இருக்காதம்மா, அவளுக்கு பிடிச்சமாதிரி வீட்ட வச்சுக்க விடு.” என்று கூறிவிட்டே செல்வாள். இப்படியாக நாட்கள் நகர, ஒருநாள் உதயன் வரும் நேரம் கடந்திருந்தது. அவன் அலைபேசியும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

 

என்னவென்றாலும் அழைத்து கூறுபவன் என்பதால் யோசனையாகவே இருந்தாள் மணிமேகலை.

“என்ன இந்த பையனை இன்னும்  காணோம். “

“அத்தை ஆபிஸ்க்கு கால் பண்ணி பார்க்கட்டுமா?”

 

“வேணாம், அப்றம் திட்டுவான் ‘அங்கெதுக்கு பண்ணீங்கண்ணு.’ கொஞ்ச நேரம் பார்க்கலாம் வந்துருவான்.”

கூறியவர், அவளுடன் வாயிலில் சிறிது நேரம் அமர்ந்திருக்க, மேகலா அவனை தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டே இருந்தாள். ஈஸ்வரி உள்ளே சென்று திரும்பி வந்தவர்,

 

“இப்போதான் ஆபிஸ்க்கு கால் பண்ணேன். ஏதோ அவங்க பேக்டரில பிரச்சினையாம். ‘முடிச்சிட்டு இப்போதான் கிளம்புறேன், இப்போ வந்துருவேன்.’ சொன்னான். “

 

“ஓஹ்! சரிங்க அத்தை.”

கூறியவள் அப்போதும் அவ்விடம் விட்டு நகரவில்லை. அவன் வண்டிச்சத்தம் கேட்கும் மட்டும் அப்படியே அமர்ந்திருந்தாள். அவன் வண்டி விட்டிறங்கவும்,

 

“ரொம்ப வேலையா மாமா?”

கேட்டப்படியே அவனருகே செல்ல,

 

“ரொம்ப அழுக்கா இருக்கேன் கலை, பசி வேற. சாப்பாடு எடுத்துவை குளிச்சிட்டு வந்துர்றேன்.”

கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைய,

 

“மாமா பத்தே நிமிஷம் பண்ணிடறேன். “

 

“இவ்ளோ நேரம் அப்போ என்ன பண்ணிட்டு இருந்த? “

வேலைத்தளத்தில் இருந்த கோபத்தை மனைவி மீது இறக்கிவைதான்.

 

“நீ வரலன்னு இவ்ளோ நேரம் அந்த வாசலை விட்டு எந்திரிக்கல.”

 

“நீ ஆபிஸ்க்கு கால் பண்ணுனியாம்மா? “

 

“ஆமாடா.லேட் ஆனதும் என்ன ஏதுன்னு பதறுமா இல்லையா? “

 

அவனோ மனைவியை பார்க்க, மீண்டும் திட்டுவானோ என அஞ்சியவள், அவசரமாக சமையலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

இரவுனை உண்டு முடிக்கவுமே உதயனுக்கு அத்தனை களைப்பு. இவள் அறைக்கு வரும் போதே உறங்கிவிட்டிருந்தான். விடியலில் மீண்டுமாய் வேலைத் தளதிலிருந்து அழைப்பு வர, இவள் உறக்கம் களைக்காது  சொல்லாமலே கிளம்பியிருந்தான். எழுந்து தேடியவள் முன்னறைக்கு வர ஈஸ்வரியிடம்,

 

“அத்த, மாமா கிளம்பிட்டாங்களா? “

 

“நானும் இப்போதான் எந்திரிக்கிறேன். அவன் போனது கூட தெரியாம என்ன தூக்கம் உனக்கு? “

 

“அசந்து தூங்கிட்டேன் போல. “

 

“ஆமா பொல்லாத வேலை செஞ்சு உடல் களைச்சு போய்டுச்சுல்ல. “

அவனுக்கு அழைப்பெடுக்க, அவனோ எடுக்கவில்லை.ஈஸ்வரி மீண்டும் இரண்டு முறை எடுக்கவும்,

 

“ம்மா, நா பிஸியா இருக்கேன் அப்றமா பேசுறேன். “ என்று வைத்துவிட்டான்.

 

எதற்கென்றே தெரியாது மனதில் சிறு கீரலாய் ஒரு வலி. இப்படியாக சில நாட்களாய் நடதேறும் ஒரு சில நிகழ்வுகளால் அவ்வப்போதும் கொள்ளும் ஊடல் மறைந்து போகாது ஒன்றோடு ஒன்று பிணைய ஆரம்பித்தது.அன்று மாலை நேரமாகவே வீடு வந்திருந்தான் உதயன். ஈஸ்வரி வெளியில் சென்றிருந்தார்.

 

அவர்களுக்கே உண்டான மணித்துளிகளாகிப்போனது அந்த மாலைப் பொழுது. மனம் கொண்ட சஞ்சலங்கள் தூசாய் போனது. நிறைய பேசினார்கள், இடையே வந்த ஊடல் மொத்தம் உடைந்து போக பேசியே தீர்த்துக்கொண்டார்கள். ஈஸ்வரியை உணர்ந்துக்கொண்ட உதய் மனைவிக்கும் சார்பாக விரும்பவில்லை, அன்னையிடம் கேட்கவும் நினைக்கவில்லை, கண்டுக்கொள்ளாது கடந்து போக நினைத்துக்கொண்டான். உணர்ந்து நடந்துகொள்ள புரிந்துக்கொண்டான்.

இதழ் முத்தம் இளைப்பாறி, தேநீர் பரிமாறி, காதல் மழை குளிர் காய்ந்தனர் இருவரும்.

“கலை, இன்னிக்கு க்லையன்ட் மீட் பண்ண போனப்ப,லாவண்யாவை மீட் பண்ணுனேன்.”

 

“பேசினங்களா?பேமலி கூடவா வந்திரிந்தாங்க? பசங்க இருந்தாங்களா?”

 

அவளே கேள்வி கேட்டுக்கொண்டு போக,என்னையும் பேச விடேன்.

அவ ஹஸ்பண்ட் கூடத்தான் வந்திந்தா.இன்ட்ரோ பண்ணுனா சகஜமா காலேஜ் மெட்னு. “

 

“பின்ன இவருதான் என் லவர்னு  சொல்வாங்களா? “

 

“அடியே, அப்டில்லடா.எனக்கு ஒரு நிமிஷம் பேச்சே வரல. ரொம்ப நாள் அப்றம் பார்த்தது. அவ எப்படித்தான் பேசுனாலோ.”

 

“பொண்ணுங்கன்னா அப்படிதான் மாமா. காதல் எல்லாருக்கும் சாத்தியமில்லை. வீட்ட யோசிக்கிறதுன்னா எதுக்கு காதலிக்கிற கேட்பாங்க. வீட்டு நிலை யோசிச்சுதான் காதல் வருமா என்ன? அவங்க வளர்ந்த விதம் ஏதோ விதத்துல திருமணத்தை, இன்னொருத்தரை அதே மனசுல ஏத்துக்க வச்சுரும். அப்றம் அந்த  வாழ்க்கையை இயல்பா கடக்க ஆரம்பிப்பாங்க. ஆனா அவ மனசுகுள்ள இருக்க போராட்டம் அவளுக்கு மட்டுமே தெரியும். “

 

அவள் பேச கேட்டுகொண்டிருந்தவன் அவளை இழுத்து அவள் இதழில்  முத்தமிட்டான்.

 

“தேங்ஸ் டா. நீ வரலைன்னா நா என்னாகியிருப்பனோ தெரில. ஒன்னு இழந்துதான் ஒன்னு கிடைக்கும்னு இருக்கு. எந்த விஷயத்துலயும்.”

 

நாட்கள் உருண்டோட, ஒரு மாலை மணிமேகலை வீட்டின் வாயில் நின்று பார்த்திருக்க, உதயன் நடந்து வந்துக்கொண்டிருந்தான்.

 

“மாமா வண்டி எங்க? என்னாச்சு” கேட்கொண்ட அவன் தோள் தொங்கிய லேப்டாப் பையினை  எடுக்க,

 

“அம்மா எங்க? “

 

“தெரில வெளில போனாங்க.

 

“நீ இங்க நின்னு என்ன பண்ற? “

 

“நீங்க வர்ற வரைக்கும் வெய்ட் பண்றேன்.”

 

“ஏன் உள்ள இருந்தா வீட்டுக்குள்ள வரமாட்டனா? “

 

அவன் கோபமாய் இருப்பதை  உணர்ந்தவள்,

 

“இனி இருக்கல மாமா.” கூறிக்கொண்டு அவன் கைப்பற்ற,

 

“நான் போய் குளிச்சிட்டு வரேன்.” என அறையினுள் சென்று விட்டான்.அதன் பின்னும் கோபமாகவே இருக்க, இவள் பேச்சு வளர்க்கவில்லை.

 

அவன் கோபத்திற்கு, வரும் வழியில் அன்னை பேசிகொண்டிருப்பதை கேட்க நேர்ந்ததே காரணம் என அறியவில்லை இருவரும். ஆனால் ஈஸ்வரி என்னவென்று கேட்க சாதாரணமாய் எப்போதும் போலவே உரையாடினான்.

 

மேகலைக்கு தன் மீது ஏதோ பிழை என்பதாக நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். இரவும் அவளோடு பேசாது உறங்கி விட்டான். காலை எழுந்து வேலைக்கு தயாராக, அவளாகவே சென்று,

 

“மாமா தப்பா ஏதாவது பண்ணிருந்தா சாரி. பேசாம இருக்க வேணாமே “

 

“அதெல்லாம் ஒன்னில்ல.”

 

“இருக்கு, அதான் உங்கம்மா கூட மட்டும் நல்லா பேசுறீங்க என்கிட்ட பேசல.” இன்றுதான் இருவரிடையே அன்னை வந்திருந்தார்.

அப்போதும் பேசாதிருக்க,தானே ஒரு குற்றத்தை ஏற்றுக்கொண்டு,

 

“நா வெளில நின்னு யாரையும் பார்க்கல, இதோ இந்த போன்ல கூட ஏதாவது கதை படிச்சிட்டிருப்பேன். மத்தபடி என் மனசுல  ஒன்னில்ல. உங்களை முதல் கல்யாணம் தான் பண்ணிருக்கேன்.”

 

“என்ன சொல்ல வர்ற?” அவன் முக  மாற்றத்தை கண்டவள், அவன் கிண்டல் செய்வான் எனும் நோக்கிலேயே அவள் பேசியது. அத்தனை புரிதல் இருந்தது அவர்களிடம்.ஆனால்,

 

“மாமா நா சும்மா… “

 

பேசாத’ எனும் விதமாய் கை காட்டியவன் அந்த கோபத்தை தொடர எண்ணி,அறைவிட்டு வெளியேறப்பார்க்க, அவனை சீண்டி சரிகட்ட எண்ணி,

 

“ஓஹ் உங்க முன்னால் டாட் டாட் பார்த்ததுல இருந்து என்னை கண்டுக்கலல்ல. என்னை கலட்டி விட்டுட்டு அவளை சைட் அடிக்கலாம்னு பார்க்குறல்ல.”

 

“மேகலை!”அவன் கை உயர்த்தியிருந்தான்.

அவன் கோபப்பார்வையில் நடுங்கிதான் போனாள்.

 

 “என்னை இவ்வளவு மட்டமா தான் நினச்சிருக்கியா நீ? இந்த வார்த்தை பேசும்போதே ஈஸ்வரி இவர்கள் அறைவாயிலுக்கு வந்திருந்தார். இதை சந்தர்ப்பமாகக் கொண்டவன்,

 

“உனக்கு இனி இங்க சரிப்பட்டு வராது. கிளம்பு முதல்ல. உனக்கு யார்கூட எப்படி  இருக்கணும்னு தெரில.

“மாமா…” தொண்டைக்குழியில் சிக்கிவார்த்தை நின்று விட்டது.

 

“வண்டில இருக்கேன் கிளம்பு சீக்கிரம்.”

கூறியவன் சென்றுவிட்டான். அவளோ ஈஸ்வசரியை பார்க்க, அவரோ பேசாது சென்றுவிட்டார்.தன் வார்த்தை அத்தனை காயம் செய்திடும் எண்ணாதவளோ, அவன் தண்டனை ஏற்று அவள் வீட்டுக்கு சென்றாள்.

இதோ ஒரு வாரம் கடந்து விட்டது.அவனோ பத்து நாட்கள் மலேசியா சென்றிருந்தான்.துவண்டு மொத்தம் தன்னிலை இழந்து  நடமாடிகொண்டிருந்தாள் மணிமேகலை.

“பவி…”

 

“சொல்லுண்ணா?

 

“ரெடியாகிட்டியா?”

 

“ஆமாண்ணா.மண்ணிய கூட்டிட்டு அப்படியே வந்துருவோம்.”

 

“சரிடா. “

அலைபேசியை வைத்தவன் அன்னையிடம்,

 

“ம்மா இதான் கரெக்ட். பவி வாடகை  கட்டிட்டு அவங்க செலவும் பார்த்துக்க கஷ்டப்படறாங்க. சோ மாப்ள கொஞ்சம் செட்ல ஆகுற வரைக்கும் இங்க இருக்கட்டும். அவர் 

பிரியப்படலைன்னாலும் நான் ரொம்ப பேசி சம்மதிக்க வச்சிருக்கேன். எப்போவும் எங்க வீட்ல இருக்காருன்னு பேச்சோ, மரியாதை குறையவோ கூடாது. அதோட மேகலை தனியா இருந்தாத்தான் எல்லாம் சரியா வரும். நீ உன் விருப்பம் போல இங்க இருக்கலாம்.நானும் அப்பப்போ வரத்தான் போறேன்.

 

முன்ன போல இல்லம்மா.இந்த காலத்துல ஒரு பத்தடி தள்ளி தூரமா நின்னாதான் உறவு நிலைக்கும்.

 

மேகலை வீட்லயும் ஏதும் நம்மளை தப்பா எடுத்துக்க கூடாது. என்மேல அவங்கப்பா வச்ச நம்பிக்கையை நான் எப்போவும் காப்பாத்தணும்னு நினைக்குறேன்.”

 

தன் அன்னை நோகாமலும், பதில் மறுத்து பேசாத வகையிலும் பேசி முடித்தவன்,

 

“அவங்களை அழைச்சிட்டு வர சொல்லி பவிய அனுப்பிருக்கேன். நாம கிளம்பலாம்.”

‘சரியென்று.’ அவனோடு கிளம்பினார் ஈஸ்வரி. நேற்று மாலையே மேகலை வீட்டுக்கு சென்று அவர் தந்தையோடு பேசியிருந்தான் உதய்.மேகலையும்  அறிந்திருக்கவில்லை.

 

அவன் கம்பனியில் அவனுக்காக  கொடுக்கப்பட்ட வீட்டில் தனிக்குடித்தனம் செல்ல முடிவெடுத்தான். நண்பர்களின் உதவியில் வீட்டுக்கு தேவையான மொத்தம் இந்த ஒரு வாரத்தில் செய்து இதோ குடிவந்தும் விட்டார்கள்.

 

அனைவரும் மகிழ்ந்து வாழ்த்தி விடைபெற்று செல்ல இதோ இருவரும் தனித்து.

அவனையே பார்த்திருந்தாள். எத்தனை நேரம் தான் கோபம் என்று அவனும் நடிக்க.

அவன் இருந்த இடத்திலிருந்து எழுந்து நிற்க, அவளோ அவனை முகம் நிமிர்த்தி பார்த்தாள். ‘வா ‘ என்பதாய் கண் மூடியதுதான் தாமதம், திறக்க முன்னே அவன் மார் கட்டிக்கொண்டாள் அவன் மழை மேகம்.

 

“மாமா சாரி மாமா…”

 

“நாந்தான் ரொம்ப சாரி.

அவளை இருக்கிக்கொள்ள,அவனை தலை  உயர்த்தி பார்த்தாள்.

“ரொம்ப காக்க வச்சுட்டேன்ல.ரொம்ப அழவச்சுட்டேன்ல. அவள் கண்களில் அழுந்த இதழ் பதித்தான்.

 

“அன்னிக்கு பொய்யாதான்  கோவிச்சிட்டேன்.”

 

“தெரியும் மாமா, ஆனா நான் அப்டி பேசியிருக்க கூடாது.”

 

“ஆமா ரொம்ப தப்பு.அதுக்கெல்லாம் தண்டனை இனி தினமும் இருக்கு.”

 

கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு இதுவரை திறக்காத அவர்கள் அறைக்குள் நுழைந்தான். அறையில் வெளி தாள்வாரத்தில் இருந்த பின்னல் இருக்கையில் அவளை அமர வைத்தான்.

 

அவளுக்கு கீழே அமரந்தவன் அவள் கையிரண்டையும் அவன் கன்னத்தில் வைத்துக்கொண்டு,

“ஹாப்பி பர்த்டே பொண்டாட்டி.” என்றான்.

 

அவன் நேசத்தின் மழையில் மனம் குளிர,அவனை வாரி அணைத்துக்கொண்டாள் மழை மேகமாய் அவளும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!