மோகனம்- 20

eiL5KAD79398-c0e7b5e5

மோகனம்- 20

மோகனம் 20

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட, வண்டி போகும் பாதைகளை திருப்பி விட்டிருந்தனர் காவல்துறையினர்.

அதனால் மகளை காரிலே அமர்த்திவிட்டு, மனைவியை அழைத்து செல்லலாம் என்று அவளை விட்டுச்சென்ற இடத்தில் வந்து பார்க்க, அங்கே அவள் இல்லை.

‘எங்க போனா இவ’ மனதில் நினைத்தவாறே பார்வையை சுழலவிட்டான்.

அப்படியே கால்கள் மனைவியை தேடி நகர, ஓரிடத்தில் மனைவி இருப்பதை கண்டு நெருங்கியவன் மனைவி இருக்கும் நிலையை பார்த்து துடித்து விட்டான்.

“அருவி…” கத்தலோடு வாங்கி வந்த சோளத்தையும் காரபொரியையும் கீழே சிதர விட்டவன், அவளை நோக்கி ஓடினான்.

“அருவி, ஏன் டா இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்காந்திருக்க?” பரிதவிப்பாய் அவளை தன் கைவலைக்குள் வைத்து கேட்க,

“விஷ்வா..விஷ்வா…” அவன் பெயரை மட்டும் போஜனம் போல் அரற்றினாள்.

“ஒன்னும் இல்லடா. வா நாம வீட்டுக்கு போகலாம்” சொல்லி மனைவியை கைத்தாங்கலாய் அழைத்து வந்தான்.

அவனின் கரத்தை இறுக பிடித்தவள் விடவே இல்லை. இதனால் விஷ்வாவால் வண்டியை ஓட்ட முடியாதென தோன்ற, உடனே அருணை அழைத்து விட்டான்.

அன்று ஒரு முக்கியான பேக்கரிக்கு சரக்கை அனுப்பவேண்டிய நிலை இருந்ததால், அவன் சாக்லேட் பாக்டரியில் இருக்க தம்பியின் முதல் அழைப்பை ஏற்க வில்லை.

பின், அடுத்தடுத்த முறை அழைப்பு வரவும் அகல்விழி தான்,” சார், மாமா இத்தனை நேரம் கூப்பிடுறாருன்னா ஏதோ அவசரமா தான் இருக்கும் சார்”சொல்லவுமே வேலையை விட்டு அதனை ஏற்றவன் அங்கே விஷ்வா சொன்னதில் பதற்றமானான்.

“இதோ நான் வரேன் டா” சொல்லி வைக்க, அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த மணி”சார், பீஸ் எல்லாம் செக் பணியாச்சி” சொல்ல,

“அகல்விழி, இதை நீங்க பார்த்துக்கோங்க. எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு நான் போறேன்” அவசரமாய் கிளம்பிட, தன்னை விட்டுவிட்டு இப்போது சேர்ந்த பெண்ணிடம் வேலையை ஒப்படைக்கவும் அவளின் மீது மேலும் வஞ்சம் வளர்த்தான்.

இங்கே அருண் எத்தனை வேகமாய் வந்தானோ தெரியவில்லை. அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் அவர்களிடம் சேர்ந்திருந்தான்.

அருவியின் நிலையை கண்டவனுக்கு மனம் பிசைந்தது.

அருண்,”என்னாச்சி டா டீச்சர்க்கு?” கேட்டான்.

“இப்போ இதை பத்தி பேச நேரமில்லை டா. சீக்கிரமா வண்டியை எடு” என்கவும் சூழலுணர்ந்து வேகமாய் வண்டியை எடுத்தான். நல்ல வேளையாக பூவினி உறங்கி போனாள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டை அடைந்து விட்டனர்.

வீடு வரும்வரை அருவி பயத்தில் நடுநடுங்கி போனாள். விஷ்வா ஆதரவாய் அணைத்து இருக்க, அவள் பிடித்திருந்த கரம் வேர்த்துவிட்டது.

அப்படியே மனைவியை இரு கரங்களால் ஏந்தியவன், மகளை அருணிடம் ஒப்படைத்தான்.

மனைவியை தனது அறையில் அமர வைக்க,”விஷ்வா… விஷ்வா…” அவனின் பெயரை சொன்னபடி இருந்தாள். சுயத்தை இழந்திருந்தாள்.

இப்போது அருவியிடம் பேசுவது வீண் என அறிந்தவன், அவளை படுக்கையில் சரித்தான்.

மதியமும் எதுவும் சாப்பிடாததால், பால் மட்டுமாவது குடிக்கட்டும் என எழ பார்க்க, எங்கே அருவி விட்டால் தானே நகர்ந்திட முடியும். அவளோ இரும்பு போல் இறுக பிடித்திருந்தாள்.

“அருவி மா! இது நம்ம வீடு. இங்க உன்னைய யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க டா.நீ ஏதும் சாப்பிடல, நான் குடிக்க பாலாவது எடுத்துட்டு வந்தறேன்” சொல்லி நகர்ந்திட,கலங்கிய விழிகளோடு நோக்கினாள்.

அந்த அறையெங்கும் ஜின்சி பேசியது எதிரொலிப்பது போல் ப்ரமை தோன்ற காதுகளை இறுக மூடி “விஷ்வா… விஷ்வா…”சொன்ன மையமாக இருந்தாள்.

அதற்குள் விஷ்வா வந்துவிட, அவளின் நிலை கண்டு மனைவியை தாங்கிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமாக பாலை அவளுக்கு புகட்ட, அவளறியாமலே அதனை குடித்தாள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கணவன் நெஞ்சத்திலே உறங்கியும் போனாள்.

அவளின் சீரான மூச்சு அவள் உறங்கிவிட்டாள் என்று உறுதி செய்ய, மெதுவாய் தன்னிடமிருந்து விலக்கி படுக்கையில் படுக்க வைத்து அவள் பக்கத்திலே அமர்ந்து சிகையை கோதினான்.

அருவியின் நிலையை பார்க்க பார்க்க ஒரு கணவனாய் தோற்றுப் போனது போல் உணர்ந்தான்.

அவளுடன் இருந்த நாட்களில் அவள் ஒன்றும் இந்த மாதிரி இல்லை.

அமைதியானவள்.பண்பானவள். எடுத்தெறிந்து பேசாதவள், அதற்காக பலகினமானவள் என்று கிடையாது. பேசியா இவர்கள் கேட்க போகிறார்கள் என்ற ஆயாசம் தான்.

ஆனால் இப்போதெல்லாம் யார் என்ன சொன்னாலும் உடனே உடைந்து விடுகிறாள். அத்தனை பலவீனமானவளா அருவி? அப்படி என்ன தான் நடந்திருக்கும், நான் இல்லாத அந்த நான்கு வருடத்தில்? மூளை போட்டு குடைந்து தள்ளியது. பதில் உள்ளவள்ளோ தூக்க மாத்திரையின் உதவில் நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள்.

மாலையை கடந்து இரவு வந்து விட, அருவியை விட்டு ஒரு இன்ச் கூட அவன் நகர்ந்தபாடில்லை.

வெளியே இருந்த அருண் பூவினியை பார்த்து கொண்டான்.

குழந்தை,” அப்பா, அம்மா எங்க பெதிப்பா?” கேட்க, எதையோ சொல்லி சமாளித்தான்.

பின் சமத்து குட்டியாக அவளும் இருந்துவிட, இரவு உணவை நால்வருக்கும் சேர்த்து வாங்கி வந்தவன் மெதுவாய் கதவை தட்டினான்.

கதவு தட்டவும் மனைவி பற்றிருந்த இருந்த கையை எடுத்தவன் வெளியேறினான்.

“தேனருவி எப்படி இருக்காங்க?” அக்கறையுடன் அருண் வினவ,

“நல்லா இருக்கான்னு சொல்லிட முடியாது. தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வச்சிருக்கேன்”என்றான் வருத்தமான குரலில்.

“இப்படியான பிஹேவ்க்கு என்ன காரணம் விஷ்வா?”

“தெரியல டா. ஆனா கொஞ்ச நாளா இப்படி தான் இருக்கா.நீ சாப்பிட்டியா? அம்மு என்ன பண்றா?”

“அதுக்கு தான் உன்னை வர சொன்னதே. சாப்பாடு வாங்கிட்டு வந்தேன். அம்மு டீவி பார்த்திட்டு இருக்கா” என்றதும்”எனக்கு வேணாம் டா. நீயும் அம்முவும் சாப்பிட்டுங்க.இன்னைக்கு ஒருநாள் இங்கேயே அம்முக்கு துணையா இரு டா” கெஞ்சலாக கேட்டான்.

“டேய்… நீ போன்னு சொன்னாலும் போக போறதில்லை. கொஞ்சமா சாப்பிடேன் விஷ்வா “என்க,

“வேணாம் டா” சொல்லி அறைக்குள் புகுந்து கொண்டான்.

அருவியின் பக்கத்தில் அமர்ந்தவனின் எண்ணங்கள் அவளை மீண்டும் சந்தித்ததில் சென்று நிழலாடியது.

அன்று அருவியை சந்தித்த பின் அவனின் தூக்கத்தை முற்றிலுமாக துளைந்திருந்தான்.

கண்கள் மூடினாலே அவளின் அலைப்பாய்ந்த விழிகளும், பதற்றம் தேய்ந்த முகமும் அவன் விழியை விட்டு அகல மறுத்து இம்சித்தது.

எப்படி எப்படியோ நாட்களை கடத்தியவன், விடுமுறைக்காக குன்னூர் வந்திருந்தான். அவன் ஊர் திரும்பியிருந்த நேரம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்கள் வெளியிட பட்டிருந்தது. அதில் அருவியின் பள்ளியில் அவள் மூன்றாம் மாணவியாக வந்திருக்க, அடுத்த சில தினத்திலே அவளின் புகைப்படம் பேனெரில் வந்தது.

நண்பர்களோடு வெளி வந்தவனுக்கு கண்ணில் இது பட, ஆனந்தமானான்.

அடுத்த இரு மாதத்தில் அவள் சேர்ந்த கல்லூரியிலே கடைசி வருடம் சேர்ந்து விட்டான் விஷ்வா.

அவளை தினமும் ஒளிந்து நின்று பார்ப்பது தான் வழக்கம். பேச சென்றால் அன்றைய தினம் போல் பயந்து நடுங்குவாளோ என யோசித்து அவளை நெருங்க தயங்கினான். அதற்கெல்லாம் அவசியம் இல்லையென அவளே ஒரு நாள் வந்து பேசினாள்.

கல்லூரிக்கு சேர்ந்த புதிது என்பதால் கலவரத்துடனே தான் நாட்களை கடத்தினாள். அங்கே அவளுக்கு கிடைத்த தோழி தான் ஜின்சி. அமைதியான அருவிக்கு அடாவடி தோழி.

இப்படியான ஒரு நாளில் தான் ஜின்சி,” ஹே ஹனி ! நீ பசங்க கூட பேசவே மாட்டியா என்ன?” கேட்க,

“பேசக்கூடாதுன்னு இல்ல பயம் பா” என்றாள்.

“நீ எந்த காலத்துல இருக்க. அவ அவ வாரத்துக்கு ஒன்னுனு மாத்திட்டு இருக்காளுங்க. நீ என்னென்னா இப்படி இருக்க. உன்ன இப்படியே விட்டா சரிப்பட்டு வரமாட்ட, உனக்கு கண்டிப்பா ட்ரைனிங் கொடுத்தே ஆகணும் வா வா “அருவி மறுத்து பேச பேச கேண்டீன் அழைத்து வந்தாள்.

அங்கே ஒருவன் தனியாய் அமர்ந்திருப்பதை கண்டு,” இதோ இன்னைக்கான உன்னோட ப்ராக்டிக்கள் பீஸ் அவன் தான். போ போய் ஒரு ஹலோ மட்டும் சொல்லிட்டு வா ” என அவளை அவனிடம் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

தயங்கி தயங்கி மெல்ல அடியெடுத்து வைத்தவள் ஜின்சியை கெஞ்சலான பார்வை பார்த்தாள்.

‘ஒழுங்கா போ ‘சைகை செய்ய,அவனை நெருங்கவும் அவள் புறம் திரும்பினான்.

அவனை பார்த்தவளின் கண்கள் அகல விரிந்து கொள்ள,”நீங்க இங்க எங்க?” கேள்வியாய் வினவினாள்.

அருவியை இத்தனை நெருக்கத்தில் பார்த்தவன், திகைப்பில் இருந்தான்.

“அண்ணா…”என்ற அழைப்பு அவனை கனவிலிருந்து மீட்டெடுக்க,

“நோ அண்ணா…”கண்டிப்பான குரலில் கூறி,ஏதும் அறியா பிள்ளை போல்,”ஆமா, நீங்க இங்க?” கேள்வியாய் பார்க்க,

“நான் இங்க தான் ஜாயின் பண்ணிருக்கேன் அண்ணா…” மீண்டும் அண்ணா சொல்லவும் வெகுண்டு எழுந்துவிட்டான்.

“நீ என்ன பேரு சொல்லி கூட கூப்பிடு மா.ஆனா இந்த அண்ணா மட்டும் வேண்டாம்”

“ஏன்…?”

“அது அப்டி தான்”

“உங்க பேரு கூட எனக்கு தெரியாதே” சிறு பிள்ளையாய் கூறினாலும், அவனிடம் சகஜமாய் பேசினாள்.

“அப்படி கேளு நான் சொல்றேன்” என்றவன் புன்னகையோடே “விஷ்வப்ரசாத்” என்றிருந்தான்.

“நைஸ் நேம் அண்ணா” சொல்லி நாக்கை கடிக்க, அருவி காட்டும் முகபாவனையில் வீழ்ந்தான்.

“சாரி, உங்களை அப்போ எப்படி கூப்பிடுறது?”

“விஷ்வானே கூப்பிடு” சொல்ல,” வயசுல பெரியவங்கள பேரு சொல்லி எல்லாம் கூப்பிட கூடாது.அது தப்பு”

வாய் விட்டு சிரித்தவன்,” அத்தனை வயசாயிடுச்சா எனக்கு?” கேள்வியாய் கேட்டுக்கொண்டவன்,” ஒன்னு பேரு சொல்லி கூப்பிடு, இல்லனா சீனியர்னு கூப்பிடு. நான் உன்னை ஜூனியர்னு கூப்பிடுறேன்” சொல்ல புன்னகைத்தாள்.

“அப்போ ஓகே. இனி நீங்க எனக்கு சீனியர்” சொல்ல, விஷ்வா தம்ஸப் காட்டினான். அருவி நேரம் சென்றும் வராததால், அவளிடம் போனவள் விஷ்வாவின் வசீகரத்தில் வாயை பிளந்தாள்.

விஷ்வாவிடம் ஜின்சியை அறிமுகப்படுத்தி வைத்தாள் அருவி. பின், அவரவர் வகுப்பிற்கு சென்றுவிட்டனர்.

அன்றிலிருந்து விஷ்வா அவளுக்கு சீனியராகி போனான். யாரிடமும் பேசாதவள் விஷ்வாவிடம் மட்டும் எந்த வித தயக்கமுமின்றி பேசினாள்! பழகினாள்!

குறுகிய நாட்களிலே விஷ்வா அருவிக்கு ஒரு வெல்விஷராய் மாறி இருந்தான்.

அவள் போட்டு வைத்திருந்த சிறிய வட்டத்தை உடைத்து, வெளி உலகத்தை காட்டலானான்.

அன்றொரு நாள்.

“சீனியர்…” அழகாய் அழைக்க,

“சொல்லுங்க ஜூனியர்…”என்று அழகாய் மோகனமாய் புன்னகைக்க,

“உங்க ஸ்மைல் அழகா இருக்கு” வெளிப்படையாக சொன்னாள்.

“அப்படியா?”கேட்டு மீண்டும் புன்னகைக்க,” உண்மையாவே தான் சீனியர்” என்றாள்.

“சரி, இன்னைக்கு என்ன நடந்தது?” என கேட்க, அவளும் அப்படியே வகுப்பில் நடந்ததை ஒப்புவித்தாள். அதனை ரசித்தபடி கேட்டிருந்தான்.

மூர்த்திக்கு பயந்து அமைதியாய் சிறைக்கைதி போல் அவர் சொல்வதை கேட்டு வாழ்ந்தவள், இப்போது விஷ்வாவினால் சிரித்து பேச தொடங்கினாள்.

அருவிக்கும் சிரிக்க வரும் என்று காமித்திருந்தான் விஷ்வா.

அப்படியே நாட்கள் நகர்ந்திட, முதல் செமெஸ்டரும் வந்தது.

அவளுக்கு தெரியாதவற்றை இருந்து பொறுமையாய் சொல்லி கொடுப்பான் விஷ்வா.

“நீங்க வேற டிபார்ட்மென்ட் தானே, உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” அருவி சந்தேகமாய் கேட்க,

“பர்ஸ்ட் செம் எல்லாருக்கும் காமன் தானே அதான்” என்றான்.

“ஹோ” என்றவள் அவன் சொல்லிகுடுப்பதில் முழுகவனத்தையும் வைத்தாள்.

ஒவ்வொரு பரிட்சைக்கும் அவனின் ‘ஆல் தி பெஸ்ட் ஜூனியர்’ இல்லாது அறையினுள் செல்ல மாட்டாள். அவனும் இதற்காகவே அவளுக்கு முன்பு வந்து நின்றுவிடுவான்.

அவனை பார்க்கும் முன்பு வரை இருக்கும் பதட்டம் எல்லாம் அவனின் புன்னகை முகத்தில் எங்கோ பறந்து விடும்.

இப்படியே அவளுக்கு முதல் வருடம் அழகாய் செல்ல, அவன் கல்லூரி படிப்பை முடித்திருந்தான்.

இறுதி தேர்விற்கு பின் அருவி அழுகையோ அழுகை.

“சீனியர்! இனி உங்களை பார்க்க முடியாது இல்ல” குழந்தையாய் மூக்குறிஞ்ச, அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன்” எங்க போக போறேன். இங்க தான் இருக்க போறேன். வான்னு சொன்னா வந்திட போறேன் இதுக்கு போய் அழலாமா” என்க,

அப்போது அவர்களை நோக்கி வந்த ஜின்சி ,” அதே தான் நானும் சொல்றேன். எங்க இவ கேக்கவே மாட்டேங்கிறா சீனியர்” அருவியை மாட்டிவிட்டபடி அவளை வம்பிழுத்தாள்.

“சீனியர்னு நான் மட்டும் தான் கூப்பிடுவேன். நீ வேற ஏதும் சொல்லி கூப்பிட்டுக்கோ” அருவி முகத்தை தூக்க,

“சரி மா, உன்னோட சீனியரை சீனியர்னு கூப்பிடமாட்டேன் போதுமா” சொல்லி கைகளை விரிக்க, மெலிதாய் புன்னகைத்தாள் அருவி.

எப்படியோ சமாதானம் செய்து அவளை அனுப்பிவைத்தான் விஷ்வா. ஜின்சியுடன் நடந்தாலும் விஷ்வாவை திரும்பி திரும்பி பார்த்து சென்றாள்.

Leave a Reply

error: Content is protected !!