மோகனம்!23

மோகனம்!23
மோகனம் 23
மதிய வேளையில் இருவருமே ஜோடியாக வீடு வந்து சேர்ந்தனர். தந்தையையும் தாயையும் கண்ட குழந்தை “மம்மி! அப்பா!” என்று குதுகளத்துடன் ஓடிவந்தது.
தங்களை நோக்கி வரும் குழந்தையை புன்னகையோடு கையிலேந்தி கொண்டனர் பெற்றோர்கள்.
“வாடா! வாமா! ” என இருவரையும் அழைத்தப்படி விழியுடன் வந்தார் மஞ்சுளா.
அருவி விழியை கண்டு ,” நீ இங்க என்ன பண்ற விழி..?” கேட்க,
“அது…”எனன சொல்வது தெரியாமல் இழுக்க,
“என்ன டி?”
“காலையில உன்ன பார்க்க வந்தேன் க்கா. மாமா தான் அம்முவை கூட்டிட்டு போக சொல்லவும் இங்க வந்துட்டேன்”
“சரி, அதை சொல்ல எதுக்கு இத்தனை இழுவை, வைவா எப்படி பண்ணியிருக்க? இந்த செமெஸ்டருக்கு வெறும் ரெண்டு எக்ஸாம் தானே?” அடுக்கடுக்கான கேள்விகளை அருவி தொடுக்க, பதில் சொல்ல திராணி இல்லாது தவித்தாள் விழி.
“ஹான் க்கா…” சொன்னவள் தப்பித்து கொள்ள முயன்றாள்.
“போதும் அருவி. இங்கேயே எத்தனை நேரம் நிக்க வச்சி பேசுவ ” விஷ்வா கடிய, உதட்டை சுழித்து கோணியவள் மகளுடன் உள்ளே சென்று விட்டாள்.
“நேத்து வரைக்கும் பச்ச பிள்ளை மாதிரி இருந்ததுட்டு, இன்னைக்கு லொள்ள பாரேன்” முணுமுணுப்புடன் அவளை பின் தொடர்ந்தான் .
அந்த இரவு வேளையில் அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க, “ரொம்ப நாளாச்சு இப்படி குடும்பமா உட்கார்ந்து சாப்பிட்டு” மஞ்சுளா மகிழ்வாய் கூற, அனைவருமே அதனை ஆமோதித்தனர்.
பேசியப்படியும் சிரித்தபடியும் இரவுணவை உட்கொண்டவர்கள், உறங்க செல்லலாம் என்று பார்க்க விஷ்வாவையும் அருவியையும் நிறுத்தியிருந்தான் அருண்.
“என்ன டா?” விஷ்வா கேட்க,
“இரு வரேன்” சொல்லி அறைக்கு சென்றவனை இருவருமே கேள்வியோடு நோக்கினார்கள்.
“என்னவாம்?” அருவி கணவனிடம் கிசுகிசுக்க,
“தெர்லயே… இரு அவனே வந்து சொல்லுவான்” சொன்ன நேரம் அவனோ கையில் கவருடன் அவர்களிடம் வந்தான்.
“என்ன டா?”
“நான் உங்க கல்யாணத்துக்கு எந்த கிஃப்ட்டுமே கொடுக்கலைல. அதான் ஒரு சின்ன கிஃப்ட்” சொல்லி அந்த கவரை நீட்டினான்.
“எதுக்கு இதெல்லாம்? நீ இல்லன்னா இந்த கல்யாணமே நடந்திருக்காது அருண். நாங்க தான் உனக்கு நன்றி சொல்லனும்” சொல்ல, அருவியுமே அதனை ஆமோதித்தாள்.
“பிடிங்க ரெண்டு பேரும்” என்று இருவருக்குமான தேனிலவு டிக்கேட் குல்மார்க்கிற்கு கொடுத்திருந்தான்.
“அருண்,இது ஸ்கூல் திறக்கிற சமயம் டா. இப்போ எப்படி?” விஷ்வா தயங்கி தமையனை பார்க்க,
“உங்க வேலை எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம். நீயும் டீச்சரம்மாவும் போய்ட்டு வாங்க. அத்தோடு அம்முவையும் நாங்க பார்த்துக்கிறோம்” புன்னகையோடு கூற, மறுக்க முடியாத நிலையில் இருந்தனர் தம்பதியினர்.
அருணின் வற்புறுத்தலால் இருவரும் குல்மார்க் சென்றனர் தேனிலவிற்காக.
போகும் முன்பு விஷ்வா ஜீவாவை அழைத்து பேசியவன், அவனிடம் சில வேலைகளை யாருக்கும் தெரியாமல் கொடுத்திருந்தான்.
அங்கு வரும்வரை மனம் அவர்களின் குடும்பத்தையும் மகளையும் சுற்றியே தான் வந்தது.
ஸ்ரீநகர் வந்து இறங்கியதுமே குளிர் அவர்கள் தேகத்தை தீண்டி இருவரையும் குளிரூட்டியது.
“ஸ்பா! ரொம்ப குளிருது விஷ்வா” சொன்னப்படி கைகளை தேய்க்க,
“உன் குளிரை போக்க ஒன்னு இருக்கு” விஷ்வா விஷசமமாய் சிரித்த முகமாக கூறவும், பெண் அவனை கேள்வியாய் நோக்கினாள்.
“என்னது?”
“அது… வேணும்னா…”
“வேணும்னா…?”
“அதான் மா வேணும்னா என்னை கட்டிக்கோ” வசீகரமாய் சொல்ல, கன்னத்தில் அழகாய் தெரியும் ஒற்றை கன்னக்குழியை பார்வையை பதித்தாள்.
பின், அவன் சொன்னதை நினைவு கூர்ந்து முறைத்தாள்.
“ஆசைப்படலாம் பேராசை கூடவே கூடாது” ஆட்காட்டி விரலை ஆட்டி சொல்ல, அதனை அப்படியே பிடித்தவன்,” ப்ளசும் மைனசும் தேர்ந்தா தான் பொண்டாட்டி தீ பத்திக்கும்” என்றதில் தீயை அழுத்தி கூற, சட்டென வாயில் ஒரு அடிப்போட்டாள்.
இப்படியே சிறு சிறு சீண்டல்களுடனும் தீண்டலகளுடன் குல்மார்க் சென்றவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காட்டேஜில் அடைக்கலமாகினர்.
அறைக்கு வந்ததும் வீட்டிற்கு அழைத்து வந்ததை தெரிவித்துவிட்டு, மகளுடன் சிறு நேரம் பேசிவிட்டு வைத்தனர்.
அன்றைய தினத்தை ஒய்வெடுத்தே கழித்தனர்.
அடுத்தநாள் காலை விடியலில் சீக்கிரமே எழுந்த விஷ்வா, குழந்தைப்போல் தூங்கும் மனைவியை அணுஅணுவாய் இரத்திருந்தான்.
“என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே” என்ற பாடலை முணுமுணுத்தப்படியே மனைவியின் கலைந்தாடும் கூந்தலை சரிசெய்து விட்டு நுதலில் மென்மையாய் மனைவியின் தூக்கம் கலையாதவாறு முத்தமிட்டான்.
பின்னர் எழுந்து குளித்துவிட்டு வந்தவன், இருவருக்குமான காப்பியை ஆடர் செய்துவிட்டு மனைவியை எழுப்பினான்.
“அருவி மா! எழுந்துக்கோ டா”
“கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன் விஷ்வா.ப்ளிஸ்” கெஞ்சல் குரலில் சொன்னவள் ப்ளான்க்கட்டை முகம் மறையுமளவிற்கு போர்த்தி தூங்கினாள்.
“ஒழுங்கா எழுந்திரி அருவி. சுத்தி பார்க்க வேண்டாமா உனக்கு? வெளிய வந்து பாரு எப்படி இருக்குன்னு” வழுக்கட்டாயமாக அருவியை எழுப்பி விட்டான் விஷ்வா.
“சண்டாளா…கிராதகா…”கணவனை அவளுக்கு தெரிந்த மட்டும் திட்டியப்படியே கிளம்பினாள்.
சுடுநீரில் குளித்திருந்தாலும் நடுங்கியவாறே வந்த மனைவியை பின்னிருந்து அணைத்து கொண்ட விஷ்வா எதுவும் பேசாமல் இருக்க, அருவியோ” ஃப்லீங் பெட்டர்” என்றாள் தன்னையும் அறியாமல்.
“அதான் சொன்னேனே பொண்டாட்டி ப்ளஸூம் மைனசும் சேர்ந்தா கண்டிப்பா தீ பத்திக்கும்னு” அவளின் தோளில் முகம் புதைத்து காதினில் கிசுகிசுக்க, அதில் அவன் இதழ் பட்டு அவளின் ரோமங்கள் சிலிர்த்தது.
“விடு விஷ்வா…” என அவனை விட்டு விலக முற்பட, அவனோ “தீ வேணாமா?” கேட்க, அருவியால் மன்னவனின் நெருக்கத்தில் நெஞ்சம் படபடக்க பேச நாவெழவில்லை.
“ப்ளிஸ் விடேன் விஷ்வா” மெல்லிய குரலில் அவளுக்கே கேட்காதவண்ணம் சொல்ல, காற்றில் இசையாய் அவன் காதினில் விழுந்தது.
மனைவியின் தவிப்பை உணர்ந்தவன், மெல்ல விடுவிடுத்து தன்புறம் திருப்பி நிறுத்திய விஷ்வா,” சில் டா… பயப்படாத” கூறி அவளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு விலகினான்.
“கிளம்பு காப்பி இப்போ வந்திடும் . வந்ததும் குடிச்சிட்டு கீழ போகலாம்” சொல்லி வெளியேறினான்.
அவன் சென்றதுமே இழுத்து பிடித்த மூச்சினை வெளியே விட்டவள், தன்னை நிலைப்படுத்திக்க முயன்றாள்.
சரியாக பத்து நிமிடத்தில் இருவரும் கிளம்பி கீழே வந்தவர்கள் காலை உணவை முடித்து கொண்டு சுற்றி பார்க்க சென்றனர்.
பனியில் குழந்தை போல் விஷ்வாவோடு சேர்ந்து விளையாடிய அருவியின் முகத்தில் நிறைந்த புன்னகை.
பார்த்திருந்த விஷ்வாவிற்கு அத்தனை நிம்மதி . மனைவியின் புன்னகையில் தான் மன்னவனின் வாழ்க்கையே.
இரவு உணவை முடித்து விட்டு அறைக்கு வந்த இருவரும் ப்ரெஷப்பாகி வந்து குடும்பத்தினருடன் பேசினர்.
பின் சிறிது நேரம் மனைவியுடன் வெளியில் விழும் பனிப்பொழிவை பார்த்திருந்தவன்,” சரி அருவி நீ போய் தூங்கு “என்க,
“அப்போ நீ…?” கேள்வியாய் மன்னவனை ஏறிட்டாள்.
“நான் இங்க சோஃபாவில படுத்துக்கிறேன். நீ போ” மனைவி காதலை கூறிவிட்டாலும் அடுத்த நிலைக்கு போக தயக்கம் இருக்கும்மென அருவிக்கு அவகாசம் கொடுக்க நினைத்தான். அதிலும் அவளின் பக்கத்தில் இருக்க இருக்க எல்லையை தாண்டி விடுவோமோ என்கிற பயமும் கூட.
“என் கூடவே படுக்கலாமே விஷ்வா”
“இல்ல அது சரிவராது” பட்டென்று பதில் வரவும், பெண் முகம் சுருங்கியது.
“உன்னால என்னை ஏத்துக்க முடியலையா விஷ்வா?” கண் கலங்க அருவி கேட்க,
” ஹே, என்ன பேசுற நீ?” கேட்டவன் அவளின் கன்னங்களை அழுத்தமாய் பற்றினான்.
அவளோ இப்பவோ அப்பவோ என்கிற நிலையில் விழிகளில் நீரை தேக்கி வைத்து பார்த்தாள்.
“லூசு!” என்றவன் கலங்கிய விழிகளில் மாறிமாறி முத்தமிட, அருவி அவனின் நெஞ்சத்தில் தலை சாய்த்து விட்டாள்.
அவளின் முகத்தை நிமிர்த்தி “உனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம்னு நினைச்சேன்” சொல்ல,
“நான் கேட்கலையே” கூறியவள் நாணம் தாங்காது அவனுளே புதைந்து கொண்டாள்.
முதலில் புரியாது முழித்த விஷ்வா, புரிந்த நொடி அவனின் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்திருந்தான்.
வெட்கத்தில் பெண்ணவளின் முகம் ரோஜாவாய் சிவந்து விட, அதனை இரசித்தவன் அவளின் முகமெங்கும் முத்தங்களை வழங்கினான்.
மென்மையாய் ஆரம்பித்த முத்தம் வன்மையாய் தொடர்ந்தது இதழ் ஸ்பரிசத்தில்.
ஆடவனின் ஸ்பரிசத்தில் பெண்ணவள் வெடவெடத்து போய்விட, விஷ்வா விலகி நின்றான்.
“சாரி டா…” சொன்னவன் விலகப் பார்க்க, பால்கனி பக்கம் நின்றதால் ஈர்க்காற்று குபுகுபுவென அறைக்குள் நுழைந்தது.
“வா வந்து உட்கார் அருவி” என மனைவியை அழைத்து வந்து அமர வைத்தான் விஷ்வா.
“ரிலாக்ஸ் டா” என அவளின் பக்கத்தில் அமர்ந்து மெதுவாய் முதுகை நீவி விட, அவனின் மூச்சுக்காற்றின் ஸ்பரிசம் திக்குமுக்காட செய்ய,பேச்சற்று கணவனை விழிகளால் பருகினாள்.
மோகனமாய் புன்னகைத்த விஷ்வா,”இன்னைக்கு உன்னை எல்லாமுமாம் பாக்கலாம்னு இருக்கேன்”சொன்னவனின் விரல்கள் அவள் இடையை ஊடுருவி வளைக்க, பெண் நெளிந்தாள்.
“நம்மளை நாம தெரிஞ்சிக்கலாம் அரு” மோகமாய் கூற, படபடக்கும் விழிகளுடன் அவனையே தான் பார்த்திருந்தாள்.
“தெரிஞ்சிக்கலாமா…?” அழுத்த குரலில் கேட்டவன் பிடியை இறுக்கினான்.
அருவி அவனின் செய்கையில் தவிப்போடு “விடேன் விஷ்வா” என்றாள்.
“அதுக்காகவா உன்னோட ப்ரெண்ட் இங்க நம்மளை பார்சல் கட்டினது. அவங்களோட ஆசை என்னாகிறது” உல்லாச குரலில் இழைத்தவனின் காதலில் கரைந்து தான் போனாள்.
அப்படியே மெல்ல மெல்ல அவளின் முகத்தை கையில் ஏந்தியவன், விழிகளில் முத்தமிட தானாய் அவள் விழிகள் மூடிக்கொண்டன.
இத்தனை நாள் காதலில் கரைப்புரண்ட விஷ்வா, தன் காதலில் அவளுள் நிறைத்து திக்குமுக்காட செய்தான்.
இருவருமே தெரியாத பாடத்தில் முதலடியெடுத்து வைக்க, இருவரது உடல்களும் உரசி குளிருக்கு ஏற்ப சூட்டை பரப்பியது.
புரியாத பரவசம் இருவரிலும். கிடைக்கப்பெறும் இன்பவுராய்வு மீண்டும் வேண்டுமென மனம் துடியாய் துடித்திட, மனைவியை ஆரத்தழுவி கொண்டவன் மெல்லமாய் முன்னேறினான்.
கல்வி பாடத்தில் கரைத்தேர்ந்தவள் கலவி பாடத்தில் புரியாது இதழ்கள் தந்தியடிக்க, மோகனப் புன்னகையோடு அவளின் இதழை மென்மையாய் ஒற்றினான்.
அப்படியே அவன் இதழ்கள் ஊர்ந்து கழுத்தில் தஞ்சம் கொள்ள, எல்லையை மீரலானான் விஷ்வா.
விழிகளில் மோகத்தை தேக்கி கிறக்கத்தோடு காந்தையவளை அர்த்த பார்வை பார்க்க, அவளோ நாணம் தாங்காது மன்னவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கினாள்.
உடைகள் தளர, மன்னவனின் கரங்கள் மனைவியை தழுவி ஆதி முதல் அந்தம் வரை ஊர்ந்து மனைவியை கொண்டாடியவன், அவளை தனக்குள்ளும் , தன்னை அவளுக்குள்ளும் இணைந்திருந்தான்.
இருவரும் அறியா பாடத்தில் தட்டு தடுமாறி தேறி வரவும் , இங்கு நடந்தவைக்கு வேர்வை துளிகளும் நகக்கீரல்களும் சாட்சியாய் அமைந்தது.
கூடல் முடிந்து மனைவியை தன் மேல் போட்டுக்கொண்டவன், வார்த்தையால் சொல்லாத காதலை அந்த நொடியில் சொல்லி மனைவியை மகிழ்வில் ஆழ்த்திருந்தான்.
தன் ஆசை முடியும்வரை மனைவியை நாடும் கணவன்மார்கள், கூடல் முடிந்ததும் கண்டு கொள்ள மாட்டார்கள். மனைவிமார்களுக்கு தன்னை தங்கத்தட்டில் தாங்க வேண்டுமென்றெல்லாம் ஆசைக்கொள்ள மாட்டார்கள். சிறு அணைப்பும் காதல் பார்வைகளும் போதுமே அவர்கள் வாழ்வை இன்பமாய் நடத்தி செல்ல. அதை தான் பல கணவன்மார்கள் செய்ய தவறுகின்றனர்.
அதில் விஷ்வா மாறாய் இருந்து மனைவியை கொண்டாடினான். அவனின் மோகனங்கள் பேசியது.
இப்படியே அங்கிருந்த நாட்களில் இன்பமாய் கழித்தவர்கள் , குடும்பத்திற்காக வாங்கிய பரிசுகளுடன் ஊர் திரும்பினர்.