Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
KNKA – 19
சித் பெற்றோர் வந்து சென்ற பின் இரண்டாம் நாள் சப்னாவிடம் போய்,”உன் கிட்ட பேசனுமே!”
“பார்றா, கிரேட் சித் வந்து என்கிட்ட பேசனும்னு சொல்றார்! என்றவள் வேணுமென்றே, இப்போ உன் கூட பேச எனக்கு ஒன்னும் இல்லை!! அவனை மாதிரி ஐ காட் டு கோ என்று நக்கலடித்தாள்!”
“இப்ப என் கூட வந்தா, டிரஸ்ட் மீ! யூ கெட் வாட் யூ டிசேர்வ்!”என்றான் மர்மமாக.
“ஒன்றும் புரியாமல், நம்பாத பார்வை பார்த்தாள் அவனை”
“பயமா இருக்கா? நான் ஏதாவது பண்ணிருவேன்னு?”
“காலேஜ்க்குள்ள எனக்கு என்ன பயம்? வா போலாம்!”என்ன தான் சொல்றான்னு பார்போமே என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு சின்ன செமினர் ஹால் ஒன்றுக்கு அழைத்து வந்தவன்,
“உன் கிட்ட மத்த கேரக்டர் பத்தி எனக்கு தெரியாது! ஆனா “உன் தைரியத்தை கண்டிப்பா பாராட்டணும்!”
“என்ன கிண்டல் பண்றியா?”
“நிஜமாதான்! ஆனா எனக்கு ஒன்னு தான் புரியலை, என்கிட்ட பரொபோஸ் பண்ணிட்டு, என் மேலயே கம்பெளயினும் பண்ணியிருக்க!”
“நீ தான் எதுக்குமே ஒத்துவரலையே!சரி லவ் வேண்டாம், உனக்கு எவ்ளோ நல்ல ஆபஃர் குடுத்தேன்… வெளிலே போலாம், என்ஜாய் பண்ணலாம்னு …….”
“ஆனா நீ, என்னை இன்சல்ட் பண்ணிட்டே! இப்ப பார்த்தியா உன் பேரண்ட்ஸ் காலேஜ் வரை வர வேண்டியதா போச்சு…ஏதோ என்னால முடிஞ்ச ப்வேர்!” என்று கண் அடித்தாள்.
“நீ உண்மையவே லவ் பண்ணி இருந்தா கொஞ்ச நாள் வெய்ட் பண்ணிருக்கலாமே!!! நானும் மே பி மனசு மாறி இருந்திருக்கலாம்!!! போட்டு வாங்கினான்.
“ஹாஹஹா நீயா வாய்ப்பேயில்லை! உனக்கு தான் என்னை தெரியாது… எனக்கு உன்னை நல்லா தெரியும்..இருந்தாலும் உன்மேல் கொஞ்சம் ஆசை அதான் ட்ரை பண்ணினேன்.”
அவளே “எனக்கும் லவ் இல்ல, ஐ வான்ட் ஒன்லி ரிச் லைப், எக்ஸ்ட்ராவா நீ கொஞ்சம் ஹண்ட்ஸம்…சோ நல்ல பேக்ஏஜ்!!!!! அதான் அவ்ளோ ட்ரை பண்ணனேன்…. ஆனா நீ! உன்னை விடமாட்டேன் உன் பேரை இந்த காலேஜ் முழுக்க கெடுப்பேன்…”
“உன் பேரும் தானே போகும்! உங்க வீட்டுக்கு தெரிஞ்சா??”
“எல்லாரும் என்னை பாதிக்கப்பட்ட பொண்ணு பாவம் தான் சொல்லுவாங்க அது பரவாயில்லை!!! எங்க வீட்டுல தெரியாது, யாரு சொல்லுவா? காலேஜ் பேர் போய்டும்னு எப்போதும் விஷயத்தை மூடி தான மறைக்க பார்ப்பாங்க !!!”
“ஆனா நான் சொல்லுவனே! அதை நீ யோசிக்கலை யா? தப்பே பண்ணாம இருக்கவனுக்கு ஒரு கான்பிடன்ஸ் இருக்கும், அதை யூஸ் பண்ணி தன்னை ப்ரூவ் பண்ண ட்ரை பண்ணுவான் அது தான் நான்….”
“எப்படி பண்ணுவ? நா கடைசி வரை இதே தான் சொல்லுவேன் நீ பண்ணினேனு!”
“இனிமே என்ன சொன்னாலும் கவலை இல்லை. கேட்க வேண்டியவங்க எல்லாம் கேட்டுட்டாங்க!! அவளின் பின் புறம் பார்த்து வாங்க ஆன்ட்டி, ரியல்லி சாரி உங்களை இந்த மாதிரி ஒரு சிட்சுவேஷன் பேஸ் பண்ண வைச்சத்துக்கு!”
“வந்தவர் நீங்க என்னை பேஸ் பண்ண வைக்கலை பா, என் பொண்ணு தான் இந்த பெருமையை தேடி கொடுத்து இருக்கா என்று அழுது விட்டார்….பண்ணத்தாசையில இந்த மாதிரி போய்டக் கூடாதுனு தான் இங்கே அனுப்பிச்சேன் ஆனா…”விரக்தியில் அதோடு நிப்பாட்டிக் கொண்டார்”
“சப்னாவை திட்டி இருந்தாலும் கொஞ்சம் கூட கவலை பட்டு இருக்க மாட்டாள். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர், அவள் பக்கம் கூட பார்க்கவில்லை!யாரோ ஒரு பெண்ணுக்கு கார்டியன் என்கிற மாதிரி கல்லூரியில் இருந்து டிசி வாங்கிக் கொள்கிறேன்!” என்றார்.
அம்மாவுக்கு தெரிந்து விட்டது இனி என்ன ஆகும்? இது எல்லாம் பண்ணாம எப்போதும் போல சேப்ஃபா இருந்து இருக்கலாம்
என்று நினைத்தாலே ஒழிய,பண்ணது தப்பு என்று உணரவில்லை… தெரிந்ததே செய்பவர்கள் இப்படி தான் நினைப்பார்கள்…
சித்தை பார்த்து கை கூப்பியவர் “இவ்ளோ மோசம்னு தெரியாது பா நிஜமா! அவ பண்ணின எல்லாத்துக்கும் நா மன்னிப்பு கேட்கிறேன்” என்று கண்ணீர் வழிய சொன்னவர், அவளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
“இப்போ எதுக்கு இப்படி பண்றீங்க, நா வேணா அப்போலோஜி கேட்டுறன்!” என்று சாதாரணமா சொன்னவளை,
“உனக்கு எல்லாமே சாதாரணம் தானா? உன்னை பத்தி நீயே திங்க் பண்ணி பாரு! நம்ம மேலயே நமக்கு ஒரு மரியாதை வரணும்!! வருமா உனக்கு?? அது கொடுக்கிற தன்னம்பிக்கையே தனி அழகு!! அந்த பையன் கிட்ட இருக்கு அது!!”
“நான் ஏன் உன்னை திட்டலை, எதுவும் கேட்கலை தெரியுமா? நீ எதையுமே தெரியாம பண்ணலை, எல்லாம் பிளான் பண்ணி செஞ்சு இருக்க…”
“நீங்க இப்படி பேசுறது எல்லாம் இப்ப இருக்க லைப் ஸ்டைல்ல, பாஸ்ட் முவிங் உலகத்திலே ஒன்னும் இல்ல! பணம் இருந்தா போதும்!! அவங்களை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க!”
“அது வேற, நம்ம அவ்ளோ பணக்காரங்க இல்ல!அவங்க உலகத்துக்கு போனா தான் அதில இருக்கறது நமக்கு புரியும்….”
“உனக்கு புரியற மாதிரி சொல்லணுனா , நீ இப்படியே கழிசடையாவே இருந்து நல்லா படிச்சு உன் திறமையால பெரிய வேலை கிடைக்க இருக்கும் போது, நீ இப்போ பண்ண வேலையெல்லாம் தெரிஞ்ச ஒருத்தன் வந்து உனக்கு திறமையே இல்ல! எல்லாத்தையும் குறுக்கு வழியில தான் வாங்கினேன்னு சொல்லுவான்……. இல்ல, பேக்கிரவுண்ட்
வெரிபை பண்ணி உன்னை ரிஜக்ட் பண்ணினா அப்போ வலிக்கும் உனக்கு! அப்போ ஒன்னும் பண்ண முடியாது…… பணத்தையும் மீறி கேரக்டர் நிற்கும் பல இடத்தில!”
“உனக்கு கிடைச்சது உன் கடின உழைப்பால தான்னு நீ கரடியா கத்தினாலும் யாரும் நம்ப மாட்டாங்க. உன் பின்னாடி சிரிப்பாங்க, உன் மேல யாருக்கும் மரியாதை இருக்காது…. இருட்டிலே இருக்கிறது எப்போதும் அப்படியே இருக்காது…..வெளிச்சத்துக்கு வரும் போது நம்ம மாதிரி ஆளுங்களால் தாங்கிக்க முடியாது…….”
“இது கூட உனக்கு இப்போ புரியுதானு எனக்கு தெரிலே! உன்னை நா படிக்க வைச்சுறேன். ஆனா எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல வேற எங்கேயாவது ஹாஸ்டல போய் படி…எங்க அம்மா கிட்ட தான அசிங்கப்படப்போறன் பரவாயில்லை,”
“ஆனா, நீ இப்போவாவது திருந்தணும்னு நினை டி, இல்லனா பின்னாடி உலகத்துக்கிட்ட அசிங்கப்பட்டா , அந்த அவமான உணர்ச்சி, இல்ல உனக்கே ஏதோ குற்ற உணர்ச்சி வந்துச்சினா அது நம்மளோட நிம்மதியை பறிச்சு, நம்மளை வாழவே விடாது என்று அவளை கட்டிக் கொண்டு அழுதார்…….”
வேலை பத்தி அவர் சொன்னது எல்லாம் பயமா தான் இருந்தது அவளுக்கு, அவளின் பெரிய நம்பிக்கையே நல்ல படிப்பும், பெரிய வேலையும் தான். இந்த பயம் அவளை திருந்த செய்யும் என்று நம்புவோமாக! காலம் தான் பதில் சொல்லணும்!
ரூமிற்கு வந்த சித், “சப்னாவோட அம்மாவை பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு டா! என்று ஆதங்கப்பட்டான். தன் பொண்ணு இவ்ளோ மோசமானு ஷாக் ஆய்ட்டாங்க!”
“ஒரு 18 வயசு பொண்ணு இப்படியெல்லாம் பேசுறா, செய்யுறானு என்னால நம்பவே முடியலை டா…”
“எவ்ளோ கரப்ட் ஆய்ட்டா இந்த வயசிலே!என்று உண்மையாகவே வருத்தப்பட்டான் பிரபாவும். சரி விடுறா மச்சான், பெரிசா எதுவும் ஆகிறதுக்கு முன்னாடி முடிஞ்சது விஷயம் எனக்கு அதுவே நிம்மதி…”
” ஆமா டா, ப்ரின்சியும் இதை அப்படியே விட்ருங்கனு சொல்லிட்டார்!”
மறுநாள் பெயர் பட்டியலில் இருந்து சப்னாவின் பெயர் நீக்கப்பட்டிருந்ததை, அனைவரும் அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யத்துடன் கூடி கூடி பேசினர். பல கற்பனை கதைகள் உலா வந்தன. சில கதைகள் சித்தை மோசமாக சித்தரித்தது!!
இவையெல்லாம் ஸ்வாதியை ரொம்ப பாதித்தது… கண்டிப்பாக பிரபவிற்க்கு தெரியும்! ஆனால் அவனிடம் கேட்டு அது சித்திற்கு தெரிந்தால் என்ன நினைப்பான்? சித்திடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவும் விருப்பம் இல்லை….குழப்பத்திலே சுத்தினாள் ஸ்வாதி.
@@@@@
அந்த வருடம் கல்லூரி விழாவிற்கு ஏற்பாடு ஆரம்பமாகியது!!! அனைவரையும் உற்சாகம் தொற்றிக் கொள்ள கல்லூரி களைக்கட்டியது.
அன்று ஆடிட்டோரியத்தில் நடன ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தது….அவர்களுக்குள் இன்று எந்த வருட மாணவர்கள் என்று முடிவு செய்து பிராக்டிஸ் செய்வார்கள். ஸ்வாதியும், பிருந்தாவும் கூட நடனம் ஆடுகிறார்கள்.
“டேய்! இன்னிக்கி எப்படியாவது நான் ஸ்வாதியோட பிராக்டிஸ் பார்த்தே ஆகணும்….”இன்னும் இருவரும் சகஜமாக பேசிக் கொள்ளவில்லை, ஆனால் இருவருக்கும் இடையில் ஓர் கண்ணாம்பூச்சி விளையாட்டு ஓடும்.
“அவ தான் நீ வந்தாலே ஆட மாட்டேங்கிறா!அப்புறம் எப்படி பார்ப்ப?”
“நீ ரொம்ப கிண்டல் பண்றதால தான் ஆடலைனு சொன்னா இல்ல, நீ வராத!”என்றான் சித்.
“கண்ணா, நா வீக்கெண்ட் பிராக்டிஸ் பார்த்தாச்சு, என்னை சொல்றது எல்லாம் மேடம்க்கு சாக்கு! ஹீரோ முன்னாடி ஆட ஹீரோயினுக்கு வெட்கமாக இருக்கும்ல்ல!!!”
அதை கேட்ட சித் அழகாக சிரிக்க, ஷப்பா!! டேய்!இன்னும் லவ்வே சொல்லலை, அதுக்குள்ள மேடமும் நீயும் ஆடுற ஆட்டம் முடியலை டா….
” நீயும் ஆடு, ஏண்டா எங்களை கண்ணு வைக்கிற!”
“யாரு என் பத்து மா கூடவா? கிழிஞ்சது!! என்ன டா பிரபா? என்னையே பார்க்கிறேனு டைரக்டா கேப்பா!! ஆனா மேடம் பார்க்காத அப்போ நீங்க பார்க்கிறதும், அவங்க உங்களை ரகசியமா பார்க்கிறதும், இந்த சின்ன மனசுக்கு எவ்ளோ காண்டு ஆகுது தெரியுமா டா……..”
“ஹா ஹா ஹா வாடா! வாடா! நீ பர்ஸ்ட் போ, நா பின்னாடியே வரேன்!”
“ஏன்டா, ஸ்வாதி உன்னை கண்ணளானேனு! தேடுறதை பார்க்கணுமா?”
“பேசாம போடா!” என்றவன், மேல போய் அங்கிருக்கும் பால்கனியில் போய் மறைவாக நின்றுக் கொண்டான். ஸ்டேஜை ஆர்வமாக பார்த்தால், அவர்கள் ஆடவில்லை ஸ்டப்ஸில் ஏதோ கரெக்க்ஷன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சே!!
பிரபாவை பார்த்துவிட்டாள் ஸ்வாதி! அவ்ளோ தான், ஆஃப் மோடுக்கு போய் விட்டாள்….கண்கள் அவசர அவசரமாக நாலா பக்கமும் சுழன்றது……
மேலிருந்து பார்த்த சித்ற்க்கு, இப்பவே அவள் முன் போய் நின்று என்னை தான தேடுறனு கேட்டு கட்டிபிடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது…
இன்னிக்கு அவன் வரலையா என்ற நிம்மதி, ஏன் வரலை என்ற ஏமாற்றம் என்று கண்கள் பல பாவம் காட்டியது….
அச்சோ! வித விதமாக எக்ஸ்பிரஷன் காட்டி கலக்குறியே செல்லம்..மொத்தமா காலி பண்ணிட்டே என்னை!! உன்னை கல்யாணம் பண்ண இன்னும் நிறைய வருஷம் இருக்கே!! அதுவரைக்கும் தாங்குவேனா??? கஷ்டம் தான் என்று சிரித்துக் கொண்டான்!
வாடி ஆடலாம் என்ற பிருந்தாவிடம், நீ ஆடு, நா ரூம்ல ஆடுறேன், ஏனோ சித் அங்கிருப்பதாகவே தோன்றியது அவளுக்கு. அவளிடம் சொல்லிவிட்டு மெதுவாக ஆடிட்டோரியத்தை சுற்றி வந்தாள். பல பேர் இருந்ததால், பிரபா இவளை கவனிக்கவில்லை……
மேலிருந்து பொறுமையா தேடலாம் இங்க தேடுனா யாராவது கண்டு பிடிச்சுடுவாங்க என்று படி ஏறினாள்…
எதுக்கு இப்ப மேல வரா, கண்டுபிடிச்சுடாளோ! சரி வரட்டும், என்னை பார்த்து என்ன ரியாக்க்ஷன் கொடுக்கிறா பார்ப்போம்!!
மேலே ஏறி வந்த ஸ்வாதி, படி முடியும் இடத்திலே சித்தை பார்த்து விட்டாள். அவனும் அவளை எதிர்நோக்கி வர, அவனை அங்கே
எதிர்பார்க்காததால் ஓரு நிமிடம் பயமா, அதிர்ச்சியா புரியவில்லை அவளுக்கு, வேகமாக திரும்பி ஓடப் பார்த்தவளை….
ஹே! என்று எட்டி பிடித்தான் சித்! அவளை இழுத்து சுவரில் சாய்த்து, அவன் இடது உள்ளங்கையை அவள் முகம் பக்கத்தில் சுவரில் அழுத்தி சாய்ந்து நின்றான் அவள் அருகில்..
முதன் முறையாக அவ்ளோ அருகில் அவன், அவளால் நிமிரவே முடியவில்லை… தொண்டை வறண்டு போனது போல் இருந்தது… போகணும் என்று சொல்ல நினைக்கிறாள், ஆனால் வார்த்தையே வரவில்லை….
“என்னை தேடித் தானே வந்த… ம்ம்..சொல்லு” குழைந்து வந்தது அவன் குரல்… அவள் அமைதியாகவே இருக்கவும், “பேசு மா…!”
இல்லை என்று தலையை மட்டும் தான் ஆட்ட முடிந்தது அவளால்.
ஹாஹஹா, ரொம்ப டென்ஷனா இருக்கு இல்ல, எனக்கும் தான். ஆனா எதிர்பார்க்காம கிடைச்ச கிப்ட் இந்த மீட்டிங்… சோ சந்தோஷமாவும் இருக்கு…… என்று அவள் முகத்தையே ஆசையாக பார்த்தான்…
“ப்ளீஸ், யாராவது வர போறாங்க என்று மெதுவாக சொல்லிவிட்டாள்!”
“ம்ம்… நானும்… ப்ளீஸ் சொல்றேன், நீ ஆடுறதை நா பார்க்க கூடாதா என்றான் ஏக்கமாக!”
அவன் பக்கத்தில் நிற்பதற்கே மயங்கி நிற்கிறாள் அவள், அவன் வேறு கெஞ்சுவதை போல் பேசவும், மயக்கம் தாங்காமல் அவன் மேல் எதுவும் சாய்ந்து விட போறேன் என்று டென்ஷன் ஆனது அவளுக்கு!
அவளிடம் சட்டென்று வந்த பதட்டத்தை உணர்ந்தவன், “ரிலாக்ஸ்! ரிலாக்ஸ்! போய்டுடலாம்….” என்றவன் அவளின் கன்னத்தில் ஒரு விரலால் கோடு இழுத்தான்!! சிலிர்த்தது ஸ்வாதிக்கு! தானாக கண்கள் மூடிக் கொண்டது……
அவனுக்கு கையை கன்னத்தில் இருந்து எடுக்கவே மனதில்லை. அப்படியே உள்ளங்கையை கன்னத்தில் வைத்து காது வரை தடவினான், தாள முடியவில்லை ஸ்வாதிக்கு,
“ஸ்வாதி, என்னை பாரு! மெதுவாக நிமிர்ந்து பார்த்தவளிடம் ..ஸாரி டா! காண்ட் ரெசிஸ்ட், கோவப்படாத என்று சொல்லி பட்டென்று அவள் முகத்தை கையில் தாங்கி நெற்றி,கன்னம் என அழுத்தமாக மாறி மாறி இரண்டு முறை முத்தமிட்டு விட்டு, ஓடிப்போயிரு…. கொஞ்சம் நேரம் இருந்தே வேற என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!!!! என்று வெட்க சிரிப்புடன் கூறவும், திகைத்து நின்றிருந்தவள் விட்டால் போதும் என்று ஓடினாள்!!
ஸ்வாதியின் மீது தனக்கு காதல் இருந்தாலும், அதற்கான நேரம் வரை காத்திருப்பேன் என்று சொல்லியவன் ஸ்வாதி அருகில் வந்தவுடன் அனைத்தையும் மறந்து விட்டான்.
அவளின் மேல் தனக்கு இவ்வளவு காதலா என்று அவனே நினைக்கும்படி பொங்கி பிரவாகமாக ஓடியது அவன் உணர்வுகள். பிரமித்து போனான்…. ஆனால் பண்ணியதை நினைத்து பயமாக இருந்தது.தப்பாக நினைப்பாளோ… லவ் பன்றேன்னு சொல்ல கூட இல்லையே என்று தவித்து போனான்.